WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரித்தானியா
Questions Blair government must answer over death of whistleblower Dr
Kelly
பிளேயர் அரசாங்கத்தை அம்பலப்படுத்திய டாக்டர் கெல்லி மரணம் பற்றி பிளேயர் அரசாங்கம்
பதில் சொல்லி ஆகவேண்டிய கேள்விகள்
By Chris Marsden
25 July 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
டாக்டர் கெல்லியை அம்பலப்படுத்தி அவரை தற்கொலை செய்யவேண்டிய நிலைக்கு
தள்ளியது என கூறப்படும் பி.பி.சி யின் பங்கின் மீது கவனத்தை ஈர்ப்பதன் மூலம், டேவிட் கெல்லி மரணம் தொடர்பான
முக்கியமான கேள்விகளை மூடிமறைத்துவிட பிளேயர் அரசாங்கமும் மற்றும் செய்தி ஊடகங்களின் ஒரு சில பிரிவினரும்
முயன்றுவருகின்றன.
பாதுகாப்பு அமைச்சகத்தில் நுண் உயிரியல் ஆய்வாளராக பணியாற்றிய டாக்டர் கெல்லி
பிபிசி-பத்திரிகையாளர் ஆன்ட்ரூ கில்லிகன் மற்றும் இதர நிருபர்களிடம், ஈராக்கிற்கு எதிராக போருக்குச் செல்வது
என்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நோக்கங்களை நியாயப்படுத்துவதற்காக டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம்
புலனாய்வு தகவல்களை தவறாகப் பயன்படுத்தி வருகின்றது என்று அவர் தனது வருத்தத்தைக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு
முந்திய நாளில் அவரது மணிக்கட்டில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தினால், அவர் இறந்து கிடந்தது ஜூலை 18 அன்று
கண்டுபிடிக்கப்பட்டது.
கெல்லியின் மரணத்திற்கு பி.பி.சி மீது பழிபோடும் முயற்சிகள் எள்ளிநகையாடத் தக்கவை.
அவரது தலைவிதிக்கு பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம்தான் பொறுப்பு. பி.பி.சியின் இன்று
(Today) எனும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு
ஜில்லிகன் (Gilligan) உடன் அரசியல் ரீதியாக
பேசவேண்டிய அளவிற்கு அவர் தள்ளப்பட்டார். ஏனென்றால், அரசாங்கம் தனது போர் நோக்கங்களை நியாயப்படுத்துவதற்காக
ஈராக்கின் ஆயுதத் திறன் தொடர்பாக பொய்களையும், மிதமிஞ்சிய கற்பனைகளையும் கூறிவந்ததை அவர் எதிர்த்தார்.
பிளேயரின் தகவல்தொடர்பு இயக்குனர் அலாஸ்டர் காம்பல்
(Alastair Campbell), ஈராக் தனது இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை
45-நிமிடங்களுக்குள் பிரயோகித்துவிட முடியும் என்று இடைச்செருகல் செய்ததன் மூலம், 2002- செப்டம்பரில் தனிப்பட்ட
முறையில் புலனாய்வு ஆவணத் தொகுப்பை "குழப்பி" இருந்தார் என்ற ஜில்லிகனின் தகவல் ஆதாரமாக (கெல்லி)
இருந்தாரா என்பது பற்றிய முக்கியமற்ற நிகழ்வினை நோக்கி கவனத்தை திருப்புவதற்காக டாக்டர் கெல்லியை
பொதுமக்களின் கண்களின் முன்கொண்டுவர நிர்ப்பந்தித்தது அரசாங்கமே தவிர பிபிசி அல்ல.
அத்தகைய கூற்று எதுவும் ஜில்லிகனால் ஒருபோதும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. சரிபார்க்கப்படாத
ஒரு தனிப்பட்ட செய்தி மூலத்திலிருந்து கிடைத்த தகவலை பாதுாகப்பு சேவைகள் நம்பத்தகாதவை என்று கருதிய
பின்னரும் கேம்பல் அந்தத் தகவலை தனது அறிக்கையில் சேர்த்துகொள்ள வலியுறுத்தி இருந்தார் என்று, தனது செய்தி
மூலங்களை மட்டுமே ஆதாரம் காட்டி ஜில்லிகன் தகவல் தந்தார். ஆனால், பிபிசி-க்கு தொந்தரவு கொடுக்கவும்
மற்றும் ஜில்லிகனை இழிவுபடுத்தவும், பி.பி.சி தங்களின் விஷயத்திற்காக தனிப்பட்ட ஒரே செய்தி மூலத்தை மட்டுமே
பயன்படுத்தியதற்காகவும் கேம்பல் மீது அவதூறு செய்துவிட்டதாகவும் அந்நிறுவனத்தைத் தாக்கியதன் மூலமும் அரசாங்கமானது
விடயங்களை தலைகீழாக்கியது. ஜில்லிகனின் தகவல் ஆதாரம் நம்பகத்தன்மை கொண்டதா என்ற சந்தேகத்தை ஆட்சியாளர்கள்
எழுப்பினர். ஜில்லிகன் தந்திருக்கும் தகவலுக்கு அவரது தகவலின் ஆதாரமானவர் தனது கருத்தை தெரிவித்திருந்தரா?
மற்றும் அந்த தகவலின் ஆதாரம் ஒரு மூத்த "புலனாய்வு" அதிகாரியா என்ற கேள்வியை அரசாங்கம் எழுப்பியது.
மே 29 ந்தேதி தனது இன்றைய செய்தி அறிக்கையிலும், அதற்குப் பின்னர்
ஜூன் முதலாம் தேதி சண்டே மெயில் பத்திரிகையில் எழுதிய கட்டுரையிலும், இப்பொழுது கெல்லி என்று தெரிய
வந்துள்ள மனிதர், புலனாய்வு ஆவணத்தை தயாரிப்பதில் சம்மந்தப்பட்ட "மூத்த அதிகாரி" என்று மட்டும் குறிப்பிடப்படவில்லை.
அதற்குப்பின்னர் பி.பி.சி வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் மூத்த "புலனாய்வு அதிகாரி" என்று வர்ணிக்கப்பட்டார்.
புலனாய்வு அதிகாரி என்பதற்கும், ஒரு மூத்த அதிகாரி என்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் மேலெழுந்தவாரியாக
பார்க்கும்போது முக்கியத்துவம் இல்லாதது. கெல்லி எம்16 புலனாய்வு அமைப்போடு பழக்கம் உள்ள உயர் அதிகாரம்
படைத்த அதிகாரி மற்றும் அதன் சிந்தனைப் போக்குகளை அறிந்தவர். அவர் உளவு பார்ப்பவர் என்ற அடிப்படையில்
ஊதியம் பெறாவிட்டாலும், தனது சேவைக் காலம் முழுவதிலும் அந்த அமைப்புக்களுடன் நெருக்கமாக பணியாற்றியவர்.
முதலில் போர்ட்டோன் டவுன் (Porton Down) உயிரியல்
ஆயுத தயாரிப்பு நிலையத்திலும் அதற்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்திலிருந்து தப்பி வந்து பிரிட்டனில் தஞ்சம்புகுந்த
அதிகாரிகளை விசாரித்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குவதிலும், அதற்குப் பின்னர் ஈராக்கில் முன்னணி
ஆயுத ஆய்வாளராகவும், அதற்கு அப்பால் செப்டம்பர் மாதம் பிரிட்டன் வெளியிட்ட புலனாய்வு ஆவணங்களை தயாரித்த
அதிகாரிகளில் ஒருவராகவும் பணியாற்றியவர் கெல்லி. ஆனால், அரசாங்கம் இதில் குழப்பம் செய்யவேண்டிய அவசியம்
ஏற்பட்டது. அரசாங்கத்திற்கு முடிந்தவரை குழப்பவேண்டியிருந்ததால், அது இந்தப் பதவி அந்தஸ்து வேறுபாட்டை
அவ்வாறு பயன்படுத்திக்கொண்டது.
அரசாங்கத்தின் திசை திருப்பும் நடவடிக்கை கெல்லி அம்பலப்படலைத் தவிர்க்கமுடியாதவாறு
ஆக்கியது மற்றும் கெல்லியும் கூட மிகுந்த நம்பிக்கையோடு வெளியிட்ட அறிக்கைகள் பிபிசி-ஐ மதிப்பிழக்க உதவியது.
கீழ்கண்ட வகையில் சம்பவங்கள் நடைபெற்றன:
ஜூன்-30-ந்தேதி டாக்டர் கெல்லி பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள தனது தலைமை
அதிகாரிகளுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட ஆவணங்கள்
தொடர்பாக விவாதிப்பதற்கு தான் ஜில்லிகனை சந்தித்தாக ஒப்புக்கொள்கிறார். ஆனால், வெளிவிவகார குழு
(Foreign Affairs Committee -FAC) தனது
அறிக்கையில் காம்பல் செப்டம்பர் மாத ஆவணங்களில் எந்தக் "குழறுபடி" யும் செய்யவில்லை எனக் கூறி
குற்றச்சாட்டிலிருந்து விடுவித்த பின்னர் தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் வரை இந்தத் தகவல் மீது பகிரங்கமாக
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஜூலை-8 அன்று பாதுகாப்பு அமைச்சகம் தனக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள்
கூட்டம் ஒன்றில், "பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றுகின்ற ஒரு தனிநபர்" தானே முன்வந்து "ஜில்லிகனை தான்
சந்தித்ததாக" கூறுகிறார் என ஒரு அறிக்கையை வெளியிட்டது.
பிபிசி அப்போதும் தனது தகவல் ஆதாரத்தை காப்பாற்றவே முயன்றது. பாதுகாப்பு
அமைச்சகம் தந்திருக்கும் அறிக்கையில் விளக்கியுள்ள அதிகரிக்கும் ஜில்லிகனின் செய்தி ஆதாரத்திற்கும் "சம்மந்தம்"
இல்லை என்று பி.பி.சி தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
ஜூலை-9-ந்தேதி பாதுகாப்புத்துறை செயலாளர் ஜியோப் ஹுன்
(Geoff Hoon) பத்திரிக்கை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
பிபிசி தலைவர் காவின் டேவிசிற்கு (Gavyn Davies)
தனிப்பட்ட முறையில் தான் ஒரு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் ஜில்லிகனின் செய்தி
மூலம் தானா என்று பி.பி.சி-யை கேட்டிருந்தார். ஹுன் வெளியிட்ட பத்திரிகைக் குறிப்பில் கெல்லியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஆவணத்தைத் தயாரிக்கும் பணியில் அந்த நபர் ஈடுபட்டிருந்ததாகவும்
மற்றும் அவர் புலனாய்வு சேவையில் இல்லையென்றும் அந்த செய்திக் குறிப்பு தெரிவித்தது. பிரதமர் அலுவலக (டவுனிங்
தெரு) பத்திரிகைத் தகவல் அதிகாரியான ரொம் கெல்லி அன்றைய தினம் மேலும் அது பற்றிய மேலதிக குறிப்பு விபரங்களை
வெளியிட்டார்.
கார்டியன், பைனான்சியல் டைம்ஸ், டைம்ஸ் மற்றும் இதர பத்திரிகைகளைச் சேர்ந்த
பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அரசாங்க வட்டாரம் தான் கெல்லியின் பெயரை குறிப்பிடவில்லை என்றும், பத்திரிகையாளர்கள்
சுட்டிக்காட்டினால் அவரது அடையாளம் பற்றி உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தது. அப்போது கார்டியன்
பத்திரிகையைச் சேர்ந்த ரிச்சார்ட் நோர்டன் டெய்லர் (Richard
Norton-Taylor) மூன்று பெயர்களைக் குறிப்பிட்டார். மற்றும், அந்த மூன்று பெயர்களில் ஒன்றான
கெல்லிதான் பிரச்சனையில் சம்மந்தப்பட்ட மனிதர் என்று பாதுகாப்பு அமைச்கம் உறுதி செய்தது. அவரது பெயர் இப்பொழுது
அம்பலத்திற்கு வந்துவிட்டது.
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் கெல்லி பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளால் மூன்று நாட்கள்
விசாரணை செய்யப்பட்டார் மற்றும் அரசு இரகசியங்கள் காப்பு சட்டத்தைக் கொண்டு அவர் அச்சுறுத்தப்பட்டதாகக்
கூறப்பட்டது. அவர் ஓய்வூதியத்தை இழக்கவேண்டிவரும் என்றும் கூட அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜூலை 15-ந்தேதியன்று டாக்டர் கெல்லி வெளிவிவகாரங்கள் குழு முன்னர் ஆஜராகி,
தயங்கித் தயங்கி கேள்விகளுக்கு பதிலளித்தார். ஜில்லிகனது தகவல்களுக்கு, தான் பிரதான செய்தி மூலம் அல்ல என்று
நம்புவதாக குறிப்பிட்டார். செப்டம்பர் மாத ஆவணங்களை காம்பல் மாற்றிவிட்டார் என்று ஜில்லிகனிடம் கூறினீர்களா
என்று கெல்லியை கேட்டபோது அவர் மழுப்பலாக பிடிகொடுக்காமல் பதிலளித்தார். "அந்த சந்தர்ப்பத்தில் நான்
காம்பலின் பெயரை பயன்படுத்தினேனா என்பதை நினைவுபடுத்த என்னால் இயலவில்லை, நான் சொல்லக்கூடிய வார்த்தையாகவும்
அது எனக்கு தொனிக்கவில்லை" என்று டாக்டர் கெல்லி சாட்சியம் அளித்தார்.
பிபிசி தனது செய்தி ஆதாரம் டாக்டர் கெல்லி என்பதை உறுதிப்படுத்த மீண்டும் மறுக்கிறது.
ஜூலை 16 அன்று புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழுவின்
(Intelligence and Security Committee -ISC)
தனிப்பட்ட கூட்டத்தில் கெல்லி ஆஜாராகியிருந்தார். அங்கு அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. அதே நாளில்
பிரதமர் டோனி பிளேயர் பி.பி.சி தனது செய்தி அறிக்கைக்கு டாக்டர் கெல்லிதான் செய்தி ஆதாரமா? இல்லையா?
என்பதை சொல்லியாகவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
ஜூலை 17 அன்று பிற்பகல் 3 மணிக்கு கெல்லி ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள அபிங்டனில்
இருக்கும் தனது வீட்டிலிருந்து வெளியே செல்கிறார். அப்போது தனது மனைவியிடம் தான் கால் ஆற நடக்கப்போவதாக
கூறிவிட்டுச் செல்கிறார். அன்றைய தினமே அவர் இறந்துவிடுகிறார்.
டாக்டர் கெல்லியின் மரணத்தில் முடிந்த சம்பவங்கள் தொடர்பாக கீழ்கண்ட வினாக்களுக்கு
விடையளிக்கப்பட்டாக வேண்டும்:-
* தான் ஒப்புக்கொண்ட பின்னர் டாக்டர்
கெல்லிக்கு எத்தகைய நிர்பந்தம் கொடுக்கப்பட்டது?
* பத்திரிகைகளில் வந்திருப்பதைப்போல்
அரசு இரகசியங்கள் காப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அச்சுறுத்தப்பட்டாரா?
* ஜில்லிகனையும் மற்றும் பிபிசி-யையும்
சங்கடப்படுத்தும் வகையில் தனது கதையை மாற்றிச் சொல்லுமாறு டாக்டர் கெல்லியைக் கேட்டுக்கொண்டார்களா?
* அல்லது அரசாங்கம் பழிவாங்கும்
நடவடிக்கையிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக பொய் சொல்லுமாறு நிர்பந்திக்கப்பட்டாரா? மற்றும்
FAC
மற்றும் ISC
விசாரணைகள், அல்லது பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் அல்லது அவரது சொந்த
விசுவாசம் தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்கள் ஆகியவற்றால் அச்சுறுத்தப்பட்டாரா?
* வெளியுறவுத்துறை அமைச்சர்
ஜியோப் ஹுன், வெளியுறவுத்துறை அலுவலகம் மற்றும் 10ம் இலக்க பத்திரிகை அலுவலகம் ஆகிய அனைவரும் கெல்லியின்
பெயரை பகிரங்கமாக்க சதி செய்தார்களா? ஹுனை மட்டும் தனியாக பழி ஏற்க செய்வதற்கு முயலும் பிரதமர்
டோனி பிளேயரால் இதற்கு அனுமதி வழங்கப்பட்டதா?
ஜூலை 24 பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி, டாக்டர் கெல்லியின் பெயர்
பகிரங்கமாக வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பிரதமர் டோனி பிளேயருக்கு அந்த விபரம் தெரியும் என்கிறது.
"டாக்டர் கெல்லியின் மரணத்தில் முடிந்த சங்கிலித்தொடர் போன்ற சம்பவங்களில் உறுதியாக" அவர் பெயரை
வைக்கின்றது.
* ISC
ஆல் கெல்லி புலன் விசாரணை செய்யப்பட்டது பூட்டிய அறைக்குள் ஆகும். இந்தத் தனிப்பட்ட விசாரணையில் என்ன கூறப்பட்டது
மற்றும் அந்த எழுத்துப்படிகள் வெளியிடப்படுமா?
&ஸீதீsஜீ;* டாக்டர் கெல்லி மிக உயர்ந்த பதவியிலிருந்தவர், அவர் எந்தவிதமான முன் அனுமதியும்
பெறாமல் ஜில்லிகனுடனும் மற்ற பத்திரிகையாளர்களிடமும் அவர் விருப்பப்படி பேசினாரா? அல்லது
FAC மற்றும்
ISC விசாரணைகளில் யாரை அவர் தனது சாட்சியத்தில் பாதுகாக்க
முனைந்தாரோ அந்த பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளால் தடுக்கப்படவில்லையா?
Top of page
|