World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Union leaders call off crucial strike Lessons of the German metalworkers' struggle முக்கிய வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கத் தலைவர்கள் கைவிட்டனர் ஜேர்மன் உருக்குத் தொழிலாளர் போராட்டத்தின் படிப்பினைகள் By Ulrich Rippert சில நேரங்களில் சில சம்பவங்கள் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெறும். ஆயினும் அந்த சம்பவம் ஒரு அடிப்படை அரசியல் திருப்பு முனையைக் குறிக்கும் என்பது அப்போது தெரியாது. பின்னர்தான் அதன் முழு வரலாற்று முக்கியத்துவமும் மிகத் தெளிவாகத் தெரியவரும். கிழக்கு ஜேர்மனியில் நான்கு வாரங்களாக நடைபெற்று வந்த எஃகு மற்றும் மின்சாரத் தொழில் ஊழியர்களின் வேலை நிறுத்தம் பொறிந்துபோனதை அறிவிப்பதற்கு ஜூலை 6-ந்தேதி ஜேர்மன் தொழிற்சங்கமான IG மெட்டல் (IG Metall) செயற்குழுவால் முடிவெடுக்கப்பட்டிருப்பது அத்தகைய ஒரு சம்பவம் தான். இது கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில் தொழிற்சங்கங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாகும். 1954-ம் ஆண்டிற்குப் பின்னர் முதல் தடவையாக தொழிற்சங்கம் முதலாளிகளின் நிபந்தனைகளுக்கு முற்றிலுமாக சரணடைந்து நான்கு வாரங்களுக்குப் பின்னர் வேலை நிறுத்தத்தை விலக்கிக்கொண்ட சம்பவம் நடந்திருக்கின்றது. தொழிற்சங்கங்கள் அந்த வேலை நிறுத்தத்தால் சாதித்தது எதுவும் இல்லை. இந்த வேலை நிறுத்தத்தை கைவிட்டது, சம்பந்தப்பட்டவர்களை மட்டுமே பாதிப்பதல்ல ஆனால், உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எதிரான ஒட்டுமொத்த தாக்குதலின் முதல் அடிதான் இது. அணை உடைந்த வெள்ளம்போல் முதலாளிகள் அமைப்புக்களும் மற்றும் அரசாங்கமும், கடந்த 50-ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாள வர்க்கத்தினர் பெற்ற சமுதாய வெற்றிகள் அனைத்தையும் பறித்துக்கொள்வதற்கு மேலும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் ஆரம்பமாவார்கள். அதேநேரத்தில் தொழிற்சங்கங்கள் சீரழிந்துவிட்டதை அடையாளம் காட்டுகிற ஒரு எல்லைக் கல்லை இந்த தோல்வி பிரதிநிதித்துவம் செய்கிறது. நிர்வாகத்தின் முடிவெடுப்பதில் மிக உயர்ந்த பங்குபெறும் உரிமை மற்றும் அதன் ஒப்பீட்டளவிலான உயர் மட்ட ஒழுங்கமைப்பு இவற்றினால் ஜேர்மனியில் அமெரிக்க மாதிரியான நிலைமைகளை அறிமுகப்படுத்துவதைத் தடுக்க முடியும் மற்றும் சமூகநல அரசை சிதைப்பதைத் தடுக்க முடியும் என்ற கற்பனை இறுதியாக கல்லறைக்குச் சென்றுவிட்டது. மிகுந்த தாமதமாக இந்த போக்கு ஜேர்மனியில் ஏற்பட்டாலும், மிக வலுவாக அதன் பாதிப்பு உள்ளது. 1981-ம் ஆண்டு ஜனாதிபதி ரொனால்ட் றேகனிடம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அடைந்த தோல்வியை அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மார்க்கரெட் தாட்சரிடம் பிரிட்டனின் சுரங்கத் தொழிலாளர் பெற்ற முக்கிய தோல்வியை எதிரொலிக்கின்ற வகையில் அபிவிருத்தி தொடங்கியுள்ளது. அதற்குப்பின்னர் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தொழிலாள வர்க்கம் தோல்விக்குமேல் தோல்வியை சந்தித்துக் கொண்டு வருகின்றனர். இதே நடைமுறை இப்போது ஜேர்மனியிலும் உருவாகி வருகிறது. ஜேர்மனியில் சமூகநல அரசு மூலம் கிடைத்த பயன்களை ரத்து செய்கிற நடைமுறை விரைவுபடுத்தப்படும். IG மெட்டல் தொழிற்சங்க செயற்குழு வேலை நிறுத்தத்தை கைவிடும் அறிவிப்பை வெளியிட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஜேர்மனியின் மிகப்பெரிய சேவைத் தொழில் தொழிற்சங்கத்தின் (Ver.di) தலைவர் பிராங்க் பியர்ஸ்க (Frank Bsirske) ஊதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். பேர்லின் மாகாணத்தில் அந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் 100,000 பேரின் நிகர ஊதியத்தில் 8-முதல் 13-சதவீதம் வரை குறைப்பதை அந்த ஒப்பந்தம் பிரதிநிதித்துவம் செய்கிறது. வேலை நிறுத்தம் நடைபெற்றது ஜேர்மனியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் ஊழியர்களுக்கு சமமான பணியாற்றும் நேரம் நிர்ணயிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தோடுதான். ஆனால், அந்த வேலை நிறுத்தம் தோல்வியடைந்ததை செய்தி ஊடகங்களும் அரசியல் அரங்கு முழுதும் உள்ள அரசியல்வாதிகளும் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கின்றனர். வேலை நிறுத்தம் தொடங்கப்பட்ட நேரத்திலேயே ''தவறான நோக்கோடு, தவறான நேரத்தில் மற்றும் தவறான பிரதேசத்தில்'' வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டது என்று விமர்சனங்களின் தொனி ஒரே மாதிரி இருந்தது. இந்த மதிப்பீடு எல்லா பிரதான அரசியல் கட்சிகளாலும் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது மற்றும் பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில், அதேபோல கலந்துரையாடல் காட்சியில் வல்லுநர்களால் மந்திரம் சொல்வதுபோல் உச்சரிக்கப்பட்டு வருகின்ற உண்மை அந்த மதிப்பீடு அடிப்படையிலேயே தவறானது என்ற உண்மையை மாற்றிவிட முடியாது. கோரிக்கை தவறானது அல்லது தொழிலாளர்களிடம் இந்தப் போராட்டம் ஆதரவு பெறவில்லை என்பதன் காரணமாக இந்த வேலை நிறுத்தம் நான்கு வாரங்களுக்குப் பின்னர் பொறிந்து போகவில்லை. உண்மை நேர் எதிர்மாறானது. உண்மையில் ஜேர்மனி ஐக்கியப்பட்டதன் 13-ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டின் கிழக்குப் பகுதியில் எஃகு மற்றும் மின்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மேற்குப் பகுதியில் அதே பணியை செய்கிற தொழிலாளர்களைவிட குறைவான ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்தமுறை மிகப்பெரிய மோசடி என்று கருதப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களால் மட்டும் இப்படி கருதப்படவில்லை என்ற உண்மை ஆகும். அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களின்படி கிழக்கு ஜேர்மன் தொழிலாளர்கள் சராசரியாக அதேவகை பணிகளைச் செய்யும் மேற்கு ஜேர்மன் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 70சதவீதம் அளவே பெறுகின்றனர். இந்த வேலை நிறுத்தம் பரவலான ஆதரவைப் பெற்றிருந்தது. தொழிற்சங்க உறுப்பினர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதாக தெரிவித்தனர். தொழிற்சங்கத்திலிருந்து எந்தவிதமான ஆதரவையும் பெறாமலேயே பல தொழிற்சங்கம் சாராத தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திலும், கண்டன நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டனர். சக்ஸ்சோனி பிரான்டன்பர்க் (Saxony, Brandenburg) மற்றும் பேர்லின் மாகாணங்களில் தொழிலாள வர்க்க பகுதிகளில் பரந்த அளவில் உணர்வு இருந்தது: ''தொழிற்சங்கங்கள் விழித்துக்கொண்டு செயல்படுவதற்கு தக்கதருணம் இதுவாகும். நாட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதத்தில் வருந்தத்தக்க ஏற்றத்தாழ்வுகள் நிகழ்வதை ஏதாவது ஒரு வகையில் தடுத்து நிறுத்தியாக வேண்டும்`` என்ற உணர்வு வெளிப்பட்டது. பணியாற்றும் நேரம் ஒரே அளவிற்கு இருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச கோரிக்கையாக இருந்தாலும், பொதுமக்களில் பரவலான பிரிவினர் அதிக சமத்துவம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு கணிசமான ஆதரவைத் தந்தனர். ஆயினும், இந்த விரிவான ஐக்கிய உணர்வு அலையைப் பயன்படுத்திக்கொள்ள தொழிற்சங்க தலைமை தயாராக இல்லை. உலகிலேயே மிக அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்துறை தொழிற்சங்கம் தனது வலிமைமிக்க பிரச்சார அமைப்பு மிகக்குறைந்த அளவிற்கே இயக்கப்பட்டது. வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டவர்கள் திட்டமிட்டு தனிமைப் படுத்தப்பட்டனர். ஊடகங்களிலிருந்து வந்த மிகப்பெருமளவிலான குரோதமான அழுத்தங்கள் முன்னே தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு விடப்பட்டனர். கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மன் தொழிலாளர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீது, வர்த்தக அமைப்புக்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகள் உண்மையில் வெறிகொண்ட பதிலைக் கட்டவிழ்த்துவிட்டது. வேலை நிறுத்தம் "வேலைகள் படுகொலை" க்கு வழிவகுக்கும் மற்றும் தொழிற்சங்கங்கள் அவைகளின் பின்னே ஒரு "இரத்தக் களரி" உடைய வேலையின்மையை விட்டுச்செல்லும் என்பது போன்ற பாணியில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டன. சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அதிபர் ஹெல்முட் ஸ்மித்தால் (Helmut Schmidt) கூட்டாக வெளிவிடப்படும் பிரபல வாரப் பத்திரிகையான Die Zeit "வேலை நிறுத்தம் செய்யும் உரிமை குறைக்கப்படவேண்டும்" என்று எழுதியிருக்கிறது. இப்படி சம ஊதியம் மற்றம் சமமான வேலை நிலை குறித்து தொழிலாளர்கள் விடுக்கும் கோரிக்கைக்கு வெறி கொண்டதைப்போல் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஒர் அடிப்படைக் காரணம் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைகளை கிழக்கு ஜேர்மனிக்கு விரிவுப்படுத்தப்படவேண்டும் என்ற முயற்சிக்கு ஜேர்மன் வர்த்தகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. கிழக்கு ஐரோப்பிய உறுப்பினர் பதவி தரப்படுவதற்கு மிக அவசியமான ஒரு நிபந்தனை என்னவென்றால் குறைந்த ஊதிய தொழிலாளர்கள் பட்டாளம் அப்படியே இருக்கவேண்டும். கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையில் ஊதிய விகிதங்கள் வேறுபாடு நீண்ட காலத்திற்கு அப்படியே நீடிக்கவேண்டும். போலந்து, ருமேனியா, செக் குடியரசு மற்றும் கங்கேரி ஆகிய நாடுகள் விரைவில் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களாக சேர உள்ளனர். அந்த நாடுகளிலும் சம ஊதிய மற்றும் சமமான பணிக்கால கோரிக்கைகள் எழுந்துவிடாது தடுப்பதற்காக ஒரு முன்மாதிரியை உருவாக்கவேண்டியது அவசியமாகும். வேலை நிறுத்தத்தை உடைத்த IG மெட்டல் தொழிற்சங்க செயற்குழு உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததில் ஒரு முக்கியமான காரணி என்னவென்றால், இந்த வேலை நிறுத்தத்தை முறியடிப்பதில் முதலாளிகள் அமைப்புக்களின் மற்றும் செய்தி ஊடகங்களின் மூர்க்கமான எதிர்ப்போ அல்ல. "முதலாளிகள் எதிர்க்கிறார்கள்" என்று புகார் கூறுகின்ற தொழிற்சங்கவாதிகள், அதைத்தவிர வேறு எதை எதிர்பார்த்தனர்? என்பதை தங்களுக்கு தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டும். எந்த தொழிற்சங்க நடவடிக்கையையும் முதலாளிகள் எதிர்க்கத்தான் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையிலேயே முதலாளிகள் எதிர்ப்பை உடைப்பதுதான் வேலை நிறுத்தத்தின் நோக்கம். வேலை நிறுத்தத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க எதிர்ப்பு தொழிற்சங்கத்தின் உள்ளிருந்து கிளம்பி வந்திருக்கிறார். இது IG மெட்டல் தலைவர் கிளவுஸ் ஸ்விக்கல் (Klaus Zwickel) தலைமையில் செயல்பட்டுவரும் வலதுசாரி பிரிவாகும். இந்த பிரிவு (கன்னை) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் முதுகில் குத்திவிட்டது. வேலை நிறுத்தம் நடந்த இடங்களில் எல்லாம் அதை எல்லா வழிகளிலும் நிர்மூலமாக்க நடவடிக்கை எடுத்தது. ஏற்கனவே, இந்த ஆண்டு வசந்தத்திலேயே ஸ்விக்கல், கிழக்கு ஜேர்மனியில் வாரத்திற்கு 35-மணி நேர பணித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான கோரிக்கைக்கு அவரது பகிரங்கமான எதிர்ப்பை அறிவித்தார் மற்றும் ஆரம்பத்திலிருந்தே வேலை நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்த தொழிற்சங்கத்தின் இரண்டாவது தலைவர் ஜூர்கன் பீட்டர்ஸ் (Jürgen Peters), இந்த ஆண்டு இறுதியில் ஓய்வுபெற இருக்கும் ஸ்விக்கலுக்கு அடுத்து செயற்குழுவிற்கு மிகவும் வியப்பளிக்கும் வகையில் வெற்றிபெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். பீட்டர்ஸ் ஊதிய விகிதங்கள் தொடர்பான பிரச்சனைகளை கவனிப்பதற்கு பொறுப்பானவராக இருக்கிறார். பாடன்வூடன்பேர்க் மாகாணத்தைச் சேர்ந்த ஸ்விக்கல் ஆதரிக்கும் வேட்பாளர் பெர்த்டோல்ட் ஹீபர் (Bertold Huber) திக்கற்ற நிலையில் விடப்பட்டார். அதற்குப் பின்னர் கிழக்கு ஜேர்மனியில் 35-மணி நேர வாரம் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை மீதான வேலை நிறுத்தம் IG மெட்டல் தொழிற்சங்கத்தில் ஸ்விக்கலுக்கு அடுத்து யார் பதவிக்கு வருவது என்ற போராட்டத்தோடு இணைக்கப்பட்டு விட்டது. இதில் கிளவுஸ் ஸ்விக்கலின் பாத்திரத்தை நிர்மூலமாக்குவது மற்றும் வேலை நிறுத்தத்தை உடைப்பது என்ற சொற்களால் வர்ணிப்பதை தவிர வேறு வார்த்தைகள் இல்லை. வேலை நிறுத்தம் செய்துவந்த தலைமையின் முதுகுக்குப் பின்னால் ஸ்விக்கல் முதலாளிகள் சம்மேளனங்களுக்கு வேலை நிறுத்தத்திற்கு எதிரான தனது எதிர்ப்பை கோடிட்டுக் காட்டினார். தொழிற்சங்கத்திற்குள் நிலவுகின்ற உள்மோதலில் தனது சொந்த நோக்கங்களுக்கு, வேலை நிறுத்தத்தின் தோல்வி பயன்படும் என்பதை சமிக்கை செய்தார். தொழில்துறை முதலாளிகள் சம்மேளனத் தலைவர் மார்டீன் கேனன்கீஸர் (Martin Kannengießer) இன் ஆத்திரம் ஊட்டும் நடத்தை மற்றும் இறுமாப்பிற்குக் காரணம் தொழிற்சங்கத் தலைவரின் ஆதரவு தனக்கு உண்டு என்பதை அவர் அறிந்திருந்ததுதான். அதேநேரத்தில், மேற்கு ஜேர்மனியில் உள்ள பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் மேற்பார்வையாளர்கள் குழுக்களின் தலைவர்களோடு ஸ்விக்கல் தொடர்பு கொண்டார். கிழக்கு ஜேர்மன் வேலை நிறுத்தம் ஆரம்பமாகியதும் மேற்கு ஜேர்மனியில் உடனடியாக உற்பத்தி பாதிக்கப்பட்டது. எனவே ஸ்விக்கல் வேலை நிறுத்தத்திற்கு எதிரான திட்டமிட்ட பிரசார இயக்கத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த வேலை நிறுத்தத்தின் விளைவாக மேற்கு ஜேர்மனியில் ஏற்பட்ட பாதிப்புக்களை கிழக்கு ஜேர்மன் முதலாளிகளுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதற்கு பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஸ்விக்கல் மேற்கொண்ட தந்திரம், வேலை நிறுத்தம் செய்தவர்கள் கூடுதலாக இன்னொரு எதிர்ப்பு அணியை சந்திக்கவேண்டியதை அர்த்தப்படுத்தியது. வேலை நிறுத்தம் முடிவிற்கு கொண்டுவருவதற்கு முன்னர் கிழக்கு ஜேர்மன் வேலை நிறுத்தப் போராட்ட தலைவர்கள் முதலாளிகளுக்கு எல்லாவிதமான சலுகைகளையும் காட்ட தயாராகயிருப்பதாக தெளிவாகத் தெரிந்தாலும், முதலாளிகள் பிடிவாதமாக நின்றனர். ஸ்விக்கலும், முதலாளிகள் சங்கத்தலைவரும் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தியது உட்பட விரிவான பேச்சுவார்த்தைகள் நீண்ட சுற்று நடைபெற்றதை அடுத்து, பேச்சுவார்த்தைகளால் ஒன்றும் பலன் இல்லை என்று கூறி வேலை நிறுத்தத்தை ஸ்விக்கல் கைவிட்டார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் மிகப்பெரும் அளவில் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் வேலை நிறுத்தம் மேலும் விரிவான அடிப்படையில் நடைபெறவேண்டும் என்று ஆதரவு தெரிவித்தவர்கள் உட்பட அனைவரும் மிக எளிதாக புறக்கணிக்கப்பட்டனர். தொழிற்சங்கங்களின் சொந்த ஊதிய கமிஷன் மற்றும் அனைத்து அரசியல் சட்ட அடிப்படையிலான அமைப்புக்களிலும் ஸ்விக்கல் தனது சொந்தக் கருத்தை திணித்தார். தொழிற்சங்க ஜனநாயகம் தொடர்பாக தனக்குள்ள சொந்த அலட்சிய மனப்பான்மையை தெளிவாக உணர்த்தினார். வேலை நிறுத்தம் முடிந்ததும் வேலை நிறுத்தத்தை முன்நின்று நடத்திய தலைவர்களுக்கு எதிரான பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பீட்டர்ஸ் மற்றும் கிழக்கு ஜேர்மனியில் உள்ள பிரதான தொழிற்சங்க பிரதிநிதியான ஹன்னோ டுவலுக்கு (Hanno Düvel) எதிராக இந்த பிரச்சாரம் ஆரம்பமாகியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் செயல்பட்டுவரும் பெரிய கார் தயாரிப்பு தொழிற்சாலையின் செல்வாக்குமிக்க கண்காணிப்பாளர்கள் மற்றும் வேலைநிறுத்தம் செய்த தலைமையிலுள்ள ஏனையோர் உதவியோடு வேலை நிறுத்தம் செய்த தலைவர்கள் அடிப்படையில், தொழிற்சங்கத்திற்கு உள்ளேயே மிகுந்த பிற்போக்குவாதிகளான வலதுசாரி சக்திகளை திரட்டுவதற்கு ஸ்விக்கல் முயன்றுவந்தார். தனக்குப் பின்னர் தனது ஆதரவுபெற்ற பெர்டோல்ட் ஹுபரை I.G. மெட்டல் தொழிற்சங்கத் தலைவராக திணிப்பதற்கு ஸ்விக்கல் முயன்று வருகிறார். அரசாங்கத்தின் கவலைகள் ஹூபர் மற்றும் ஸ்விக்கல் ஆகியோர் முதலாளித்துவ நிர்வாகங்களோடு ஒத்துழைத்து தங்களை அந்த தொழிற்சாலைகளின் இணை மேலாளர்கள் என்று கருதுகின்ற மனப்பான்மையோடு வளர்ந்துவிட்ட தொழிற்சங்கவாதிகளின் வரிசையில் வந்திருப்பவர்கள் இத்தகைய தொழிற்சங்கத் தலைவர்கள் எதிர்ப்பு எதுவும் தோன்றாமல் அடக்கும் அதேவேளை முதலாளிகளின் ஆட்குறைப்பு மற்றும் சமூகநல குறைப்பு திட்டங்களை திணிப்பதில் அந்த நிர்வாகத்துடன் சேர்ந்து நெருக்கமாக வேலை செய்வதை தங்களின் வேலையாகக் கருதுபவர்கள். ஹீபர் தன்னை ஒரு சீர்த்திருத்தக்காரர் என்று வர்ணித்துக்கொள்கிறார். "வாழ்க்கைத் தரத்தை நிலைநாட்டுவதை" எதிர்ப்பதாக தொழிற்சங்கத்தில் கூறிக்கொண்டிருப்பவர். ஷ்ரோடரின் 2010-ம் ஆண்டு செயல் திட்டத்தை வலதுசாரிக் கண்ணோட்டத்தில் இருந்து கண்டித்து வருகிறார். "தனியார் ஓய்வூதிய திட்டங்களை மிகப்பெரும் அளவிற்கு மறு ஒழுங்கு செய்யவேண்டும்" என்று அழைப்பு விடுத்திருக்கிறார். ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பை உயர்த்தவேண்டும் என்று கூறுகிறார். தற்போது சராசரி ஜேர்மன் தொழிலாளி தனது 61வது வயதில் ஓய்வுபெறுகிறார். இதை 65 வயதாக உயர்த்த வேண்டும் என்று ஹூபர் விரும்புகிறார். வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகளை வெட்டப்படவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட ஆலோசனைகள் சிலவற்றை ஹூபர் ஆட்சேபிக்கிறார். "12-மாதங்களுக்கு குறைந்த காலம்" வேலையில்லாது இருக்கும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை குறைக்க வேண்டுமென்று கூறுகிறார். "தனிப்பட்ட மனிதர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை வெட்டப்படுவதால் சேமநல அரசின் அடிப்படைக்கு எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடாது" என்று ஜேர்மனியின் வர்த்தக செய்திப் பத்திரிகை Handelsblatt-க்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதே பேட்டியில் தொழிலாளர்கள் பணியில் இல்லாத நேரத்தில் ஏனைய ஆபத்துக்களால் ஏற்படும் விபத்துகளுக்கு காப்பீடு வழங்கப்படுவதை ஒரு முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். அவரது அரசியல் நோக்கத்தின் சாராம்சம் என்னவென்றால் ஜேர்மனியின் பெரிய வர்த்தக நிறுவனங்களின் நலன்களை காப்பாற்றுவதற்காக சமூகநல அமைப்பை சின்னாபின்னமாக்க வேண்டும் என்பதுதான். பீட்டர்ஸ், டூவல் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களிடம் வழங்குவதற்கு உண்மையான மாற்று எதுவும் இல்லை. தொழிற்சங்கங்களுக்குள்ளேயே செயல்பட்டுவரும் வலதுசாரிகள் தொடுக்கின்ற தாக்குதல்களால் அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். 1970-களில் நடைபெற்ற போர்க்குணம் கொண்ட தொழிற்சங்க இயக்க நாட்களை நினைவு கூர்ந்து, உறுதிப்பாடு அதிகம் இருக்கவேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தி வருகிறார்கள். இத்தகைய தொழிற்சங்கத் தலைவர்களில் எவரும் ஸ்விக்கலை சுற்றியிருக்கும் வலதுசாரி ஊழல் குழுவை அம்பலப்படுத்தவோ அவர்களை பகிரங்கமாக சவால்விடவோ துணிவில்லாதவர்களாக இருக்கின்றனர். தொழிற்சங்கத்தின் உயர்மட்டங்களில் ஸ்விக்கலைச் சுற்றியுள்ள ஊழல் குழுவினர் வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர். அதற்கு ஈடாக, "சரியான நேரத்தில்" தான் ராஜிநாமா செய்ய தயாராகயிருப்பதாக டுவல் அறிவித்தார், வேலை நிறுத்தத்தை முன்நின்று நடத்துவதில் பீட்டர்ஸ் தனது "சொந்த தவறுகளை" ஒப்புக்கொண்டிருக்கின்றனர். பீட்டர்சும் கூட்டாளிகளும் 2000-ம் ஆண்டில் அம்பலத்திற்கு வந்த ஸ்விக்கல் ஊழல் தொடர்பான செய்திகளைப் பொருட்படுத்தாமல் வாய்மூடி மவுனிகளாக இருந்ததற்குரிய தண்டனையை இப்போது அனுபவித்து வருகிறார்கள். ஸ்விக்கல் அப்போது மானஸ்மான் கம்பெனிகள் (Mannesmann company) நிர்வாகிகளுடன் ஊழல் பேரம் சம்பந்தப்பட்டிருந்ததாக செய்தி வந்தது. அதன்விளைவாக தற்போது டுஸ்ஸில்டோர்வ் (Düsseldorf) மாகாண அரச வழக்கு தொடுனர் அலுவலகம் ஸ்விக்கல் குறித்து புலன் விசாரணை செய்துவருகின்றது. அப்படியிருந்தும் தொழிற்சங்கத்திற்குள் ஒருவரும் உண்மையான ஆட்சேபனை எதையும் தெரிவிக்கவில்லை. ஸ்விக்கல் தொடர்ந்து தனது சூழ்ச்சி முயற்சிகளை இடைவிடாது தொழிற்சங்கத்தில் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார். இந்த அரசியல் கோழைத்தனத்திற்கான அடிப்படை மிகத்தெளிவாக தெரிகிறது. தொழிற்சங்க இயக்கத்திற்குள் போட்டிபோட்டுக்கொண்டு பணியாற்றி வருகின்ற குழு எதுவும் ஏதாவது ஒரு புள்ளியில் ஜேர்மன் அரசாங்கத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக அமைகின்ற மோதல் எதிலும் ஈடுபடத் தயாராக இல்லை. மொத்தத்தில், தொழிற்சங்க இயக்கத்தில் இடம்பெற்றுள்ள முன்னணித் தலைவர்கள் அனைவருமே ஜேர்மனியை ஆண்டு கொண்டிருக்கின்ற இரண்டு கட்சிகளிலுமே உறுப்பினர்களாகயிருப்பவர்கள் மற்றும் அவர்களின் கொள்கைகளை ஆதரிப்பவர்கள். எஃகுத் தொழிலாளர் வேலை நிறுத்தத் ஆரம்பத்தில் ஜேர்மன் தொழிற்சங்க சம்மேளனம் (DGB) அரசாங்கத்தின் 2010 திட்டத்தை எதிர்த்து ஏற்பாடு செய்திருந்த தொடர்ச்சியான ஆர்பாட்டங்கள் கண்டனப் பேரணிகளை ரத்து செய்தன. இதுதான், எஃகு தொழிலாளர் வேலை நிறுத்தத்தை சீர்குலைக்கும் முதல் நடவடிக்கையாகும். அவர்களின் கோரிக்கை 2010 நிகழ்ச்சிநிரலுடன் சமரசம் செய்ய முடியாதது. அது சமூகநல அரசின் அடிப்படைகளை பெருமளவில் சிதைப்பதை எதிர்நோக்கும் நடவடிக்கையாகும். வேலை நிறுத்தம் கைவிடப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் எட்டு பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் DGB-தலைவர்கள், அதிபர் ஷ்ரோடரைச் சந்தித்து 2010-நிகழ்ச்சிப் பட்டியலை நடைமுறைப்படுத்துவதில் அவருக்கு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தனர். இந்த முயற்சியை ஊடகங்கள் அரசாங்கத்தின் தொங்கு சதையாக செயல்படும் போக்கு என்று வர்ணித்தன. "IG-BAU (கட்டிடத் தொழிலாளர்கள் தொழிற்சங்க) தலைவரான கிளவுஸ் வைஸ்ஹூகல் (Klaus Wiesehügel). போல ஒருவரும் இதனைச் செய்யவில்லை" என்று Der Spiegel பத்திரிக்கை குறிப்பிட்டது. மே மாத ஆரம்பத்தில் கிளாஸ் வைஸ் ஹூகல் சான்செலர் ராஜிநாமா செய்துவிடக்கூடும் என்று ஊகங்களை வெளியிட்டார். அவரது வெட்டுத் திட்டங்கள் "மனித கண்ணியத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் மற்றும் மிகவும் மோசமான நடவடிக்கை" என்று வர்ணித்தார். இப்போது அவரே கட்சிகள் மீது தொழிற்சங்கங்களுக்கு இருக்கும் செல்வாக்கு "நாம் நினைத்ததைவிட குறைவாக" இருக்கின்றது என்பதை நாம் அங்கீகரிப்பது அவசியம் என்று கூறுகிறார். "எதிர்காலத்தில் அரசாங்கத்தின் முடிவுகள் தொடர்பாக நாம் சொந்த ஆலோசனைகளை தெரிவிப்போம்" என்றும் கூறியுள்ளார். வெர்-டி (Ver.di) தொழிற்சங்கத் தலைவர் பிராங்க் பியர்ஸ்க பசுமைக் கட்சியின் ஓர் உறுப்பினர். இவர் மார்ச் மாதம் அதிபர் "காட்டிக் கொடுத்ததாகவும், "சமூகநல ஆட்சியை அப்பட்டமாக சிதைத்து வருவதாகவும்" குற்றம் சாட்டினார். அவரே இப்போது பிரதமரோடு ஒத்துழைக்க முன்வந்திருக்கிறார். அதற்கு சமாதானமும் கூறுகிறார். இத்தகைய முயற்சி எதுவும் செய்யாமல் தொழிற்சங்கம் அதனுடைய சூழ்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இழந்துவிடும் என்றும் கூறியுள்ளார். இப்படி தொழிற்சங்கங்கள் வலதுசாரி போக்கில் மிகக்கடுமையாக திரும்பிக் கொண்டிருப்பதுடன் ஈராக் போரின் விளைவுகளுக்கு பதில்வினை ஆற்றுகின்றனர். போருக்கு முன்னரும் போரின் பொழுதும் வெளிப்படையாக இருந்த அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான மோதல், சலுகைகளுக்கான மற்றும் சமூக சமரசத்திற்கான வழிவகைகளை மேலும் குறைத்துவிட்டது. ஜேர்மன் அரசாங்கம் அமெரிக்காவின் சவால்களை சந்தித்து சமாளிப்பதற்கு பதிலாக ஐரோப்பாவில் அமெரிக்க மாதிரியிலான நிலவரங்களை உருவாக்குவதற்கு ஆயுத்தங்களை கொடுத்துவருகின்றது மற்றும் ஊதியங்களையும், சமூகநல உதவிகளையும் வெட்டுவதற்கு முயன்று வருகின்றது. மாற்று வழி என்று எதையும் காட்டுவதற்கு தொழிற்சங்கங்களிலும் திட்டம் எதுவும் இல்லை. 20-ஆண்டுகளுக்கு முன்னர் வலதுசாரி அரசாங்கங்கள் நிர்வாக பொறுப்பை ஏற்று தொழிற்சங்கங்களை வீழ்த்தின. இதற்கு முந்தைய ஆட்சியின் சமூக விரோத கொள்கைகளை முற்றிலுமாக திரும்ப பெறவேண்டும் என்பதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே கட்சிகளின் அரசாங்கம் இப்போது சமூக விரோதக் கொள்கைகளை நிறைவேற்ற மிகப்பெரும் அளவில் நிர்பந்தம் கொடுத்துவருகின்றது. இந்த அபிவிருத்தியானது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய அரசியல் நோக்குநிலை தேவைப்படுகிறது என்பதை மிகத் தெளிவுபடுத்துகிறது. சமூக உரிமைகளையும் அடைந்திருக்கின்ற பயன்களையும் கொள்கை அடிப்படையில் தற்காத்து நிற்கும் வேலைத் திட்டத்தை தனது மத்தியில் கொண்டிருக்கும் மற்றும் சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தில் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு கட்சி அதற்குத் தேவை. |