World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா

Women in the Russian Revolution
The letters of Natalia Sedova to Leon Trotsky

ரஷியப் புரட்சியில் பெண்கள்

லியோன் ட்ரொட்ஸ்கிக்கு நத்தலியா செடோவாவின் கடிதங்கள்

By Vladimir Volkov
1 July 2003

Use this version to print | Send this link by email | Email the author

1917ம் ஆண்டு ரஷ்யப் புரட்சி மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மட்டும் வரலாற்றுமிக்க வாழ்க்கைக்கு உயர்த்தவில்லை. அது புரட்சிகர அரசியல் நனவு கொண்ட ஐரோப்பிய சமூக ஜனநாயகத்தின் சர்வதேசிய மரபுகளை தெளிந்து அறிந்தவர்களையும் பொதுவான ஐரோப்பிய கலாச்சாரத்தின் அரிய பாரம்பரியத்தையும் கொண்ட சோசலிச அறிவுஜீவிகளின் தலைசிறந்த பிரதிநிதிகளை கொண்ட ஒரு முழுத்தட்டினரை உலக நிகழ்வுகளின் மத்தியில் முன்கொண்டுவந்து நிறுத்திவைத்தது.

இந்த பிரிவில் பெண்களும் ஒரு முக்கிய பங்கு கொண்டு இருந்தனர். Larissa Reissner, Alexandra Kollontai, Inessa Armand போன்ற உணர்வுபூர்வமான, பல்துறைகளில் ஆற்றல் படைத்த பெண்கள் எல்லோராலும் அறியப்பட்டவர்கள் என்பது உண்மையே; ஆனால் அவர்கள் விதிவிலக்காக விளங்கவில்லை. இவர்களுக்குபின் நூற்றுக்கணக்கான ஏனைய பெண்கள் புரட்சியின் வரலாற்றில் நுழைந்து, அழிக்கமுடியாத தங்களுடைய சுவடுகளை விட்டுச் சென்றுள்ளனர்.

சமுதாயத்தின் முன்னேற்றம் அது மகளிடம் கொண்டுள்ள அணுகுமுறையை வைத்து அறியப்படலாம் என்ற சார்ல்ஸ் பூரியர் (Charles Fourier) கூறிய சொற்றொடர் நினைவுக்கு வந்தால், பல நூற்றாண்டுகளாக மிகுந்த இழப்பிற்கு உட்பட்ட மற்றும் பிறரை நம்பி இருக்கவேண்டிய நிலையிலிருந்த பெண்களுக்கு மனித சமுதாயத்தின் சமூக விடுதலையில் மாபெரும் முன்னேற்றத்தை உருவாக்கியதாக ரஷ்ய புரட்சி கருதப்படவேண்டும்.

காலத்திற்கு ஒவ்வாத முன்கூட்டிய தப்பெண்ணம் என்பதைவிட அறிவால் உணர்த்தப்பட்ட அளவில், குடும்பத்தைப் பற்றிய சுயாதீனமான புரட்சிகர அணுகுமுறை புரட்சியின் அரசியல் முன்னோக்கிலிருந்து பிரிக்கமுடியாததாகும். இந்த ஒழுக்கநெறி (morality) உண்மையான சடத்துவ அடித்தளத்தை கொண்டிருந்ததுடன், புரட்சியை செய்த ஆண்கள், பெண்களிடையே இருந்த தனிப்பட்ட உறவுகளின் மூலம் வெளிப்பட்டது.

லியோன் ட்ரொட்ஸ்கிக்கும் அவருடைய மனைவியான நத்தலியா செடோவாவிற்கும் (Natalia Sedova) இடையே இருந்து வந்த உறவு இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக காணலாம் (1882-1962). 40 ஆண்டுகள் அவர்கள் அருகருகே வாழ்ந்த காரணத்தால் எழுத்து மூலம் தொடர்பிற்கு அவசியமில்லாமற் போனதால், துரதிருஷ்டவசமாக இதைப் பற்றிய எழுத்து மூலமான சான்றுகள் எம்மிடம் குறைவாகத்தான் உள்ளன. தனிப்பட்ட உறவுகளைப் பற்றி பதிப்பிக்கவேண்டிய தேவையும் அதைவிடக் குறைவேயாகும். எனவே அவர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தபோது நத்தலியா, ட்ரொட்ஸ்கிக்கு 1930களில் எழுதிய வெகுசில கடிதங்கள்பால் மிகுந்த மதிப்புக் கொண்டுள்ளோம். இத்துடன், இவை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் (Harvard University) உள்ள Houghton வாசிக சாலையிலுள்ள ட்ரொட்ஸ்கி ஆவணக்காப்பகத்தில் இவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன (##5560-5578).

நத்தலியா செடோவா டிராட்ஸ்கியின் இரண்டாவது மனைவியாவார். இவருக்குத் தெற்கு ரஷ்யாவிலிருந்து வந்திருந்த சக புரட்சியாளரான முதல் மனைவி அலெக்ஸாண்ட்ரா சொகொலொவ்ஸிகாயா (Alexandra Sokolovskaia) மூலம் நீநா, ஜீனா (Nina, Zina) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. ஜார் ஆட்சியின்போது நிகழ்ந்த சைபீரியாவுக்கு முதல் நாடுகடத்தலில் தன்னுடைய குடும்பத்தைக் கைவிட்டுவிடும்படி ட்ரொட்ஸ்கிக்கு நிலைமை ஏற்பட்டது. ஆனால் அவருடைய முதல் மனைவியார், இரு குழந்தைகளோடும் நல்ல நட்பும் மனமுவந்த உறவினையும் தொடர்ந்து வைத்திருந்தார்.

1903ம் ஆண்டு பாரிசில் ஒரு கலைக் கண்காட்சியில் நத்தலியா செடோவாவை ட்ரொட்ஸ்கி சந்தித்தார். நத்தலியா புலம்பெயர்ந்த இளைஞர் குழுவில் இஸ்க்ராவின் ஆதரவாளராக இருந்ததுடன், லண்டனிலிருந்து இஸ்க்ராவின் சார்பில் ஓர் உரை நிகழ்த்துவற்காக அப்பொழுதுதான் ட்ரொட்ஸ்கி பாரிசுக்கு வந்திருந்தார். இவர்கள் இருவரும் விரைவில் ஒன்றாகப் பழகலானார்கள். 1906ல் அவர்களுடைய முதல் மகன் லியோவாவும் (Liova), 1908ல் வியன்னாவில் இரண்டாவது மகளான செர்ஜியும் (Sergey) பிறந்தனர்.

ஸ்ராலின் 1929ல் அவர்களை துருக்கிக்கு நாடு கடத்திய சில ஆண்டுகளுக்குப்பின், 1933ம் ஆண்டு பிரின்கிபோவில் தங்கள் இல்லத்தைவிட்டு பாரிசை அடைந்தனர். நத்தலியா ஒரு உடல்நல பராமரிப்பு நிலையத்திற்கு சென்றிருந்து ட்ரொட்ஸ்கிக்குச் சில கடிதங்களையனுப்பியிருந்தார். வேறொரு பகுதிக் கடிதங்கள், அவர்கள் நோர்வேயிலிருந்து நாடுகடத்தப்பட்டு மெக்ஸிகோவில் இருக்கும்பொழுது 1937லிருந்து எழுதப்பெற்றவை.

நத்தலியாவிடமிருந்து ட்ரொட்ஸ்கிக்கு எழுதப்பட்ட கடிதங்களில் முக்கியமாக சொந்த விஷயங்களைப் பற்றி இருப்பது இயற்கையே. பொதுவாக "எனது அன்புக்குரிய சிங்கம்'' (My Sweet Lion Cub- ட்ரொட்ஸ்கியின் முதல் பெயர் லெவ் என்பது ரஷியாவில் ''சிங்கம்'' என்ற பொருள்படும் - மொழிபெயர்ப்பாளர்) என்றே இவர் கடிதங்களை எழுத ஆரம்பமாகக் கொண்டிருந்தார்; பொதுவாக கடிதங்களின் உள்ளடக்கம் சமகாலத்திய அரசியலையோ, வரலாற்றுச் சமுதாயப் பிரச்சினைகளையோ தவிர்த்திருந்தன. தன்னுடைய கணவனின் உடல்நலமும் மனநலமும்தான் நத்தலியாவின் அப்போதைய அக்கறையாக இருந்தன; தன்னடைய உணர்வுகளையும் சூழ்நிலையையும் பற்றி எழுதியுள்ளார். ஆனால் அவ்வப்பொழுது சில பொதுப் பிரச்சினைகளைப் பற்றியும், தங்களுடைய பொதுப் பழைய நினைவுகளைப் பற்றியும் எழுதியுள்ளார்.

உதாரணமாகப் பாரிசில் உடல்நல பராரிப்பு நிலையத்திற்கான பயணத்திலிருந்தபோது, தங்கள் இளமை வாழ்வைப் பற்றி, எவ்வாறு அந்நகரத்தில் வாழ்ந்திருந்தனர் என்பது பற்றியும், விடுதலையுணர்வையையும் எழிலையும் கொண்ட அந்த உலகத் தலைநகரில் தாங்கள் அனுபவித்ததையும் எழுதியுள்ளார் (1933, செப்டம்பர் 3ம் தேதிக் கடிதம்).

''நான் மிகப்பெரிய அளவில் மாறிவிட்டேன், முன்பிருந்ததற்கும் இப்போதைக்கும் இடையேயுள்ள மாற்றம், இளமைக்கும் முதுமைக்கும் இடையேயான மாற்றம். சில சமயம் அது வருத்துவதாகவும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது, மீண்டும் இவற்றைப் பார்க்க முடிகிறது என்ற அமைதியான திருப்தி உள்ளபோதும் ஒவ்வொன்றும் பற்றிய வேறுபட்ட உணர்வுள்ளது. பழைய உணர்வுகளை உணரமுடியவில்லையே என்ற இயலாமையின் வலி உள்ளது. பாரிசை நாம் மீண்டும் ஒன்றாகச் சுற்றிப்பார்க்கலாம்... ஆனால், அது நடக்கக்கூடிய செயலா? இது பழைய கடிதங்களைப் படிப்பது போல் உள்ளது.... மீண்டும் கடந்த காலத்திற்குச் செல்வதோ, அல்லது பழைய கடிதங்களைப் படிப்பதோ கடிமானது'' என அவர் எழுதுகிறார்.

1933, அக்டோபர் 9ல் எழுதிய மற்றொரு கடிதத்தில் தங்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமாகப் போய்விட்டது என்பது பற்றிக் குறிப்பிடுகிறார். ''அந்த அளவு இழக்கப்பட்டுவிட்டது (திட்டங்கள், சாத்தியக்கூறுகள்- மொழிபெயர்ப்பாளர்), பல கஷ்டங்களிடையே அவர்கள் போராட வேண்டியிருந்தது. ''அத்தகைய வாழ்வை நாம் ஒன்றாக வாழ்ந்தோம், அத்தனை நெருக்கடி ஏற்பட்ட பின்னர், மீண்டும் முன்னைய எளிமையான அனுபவங்களுக்கு 'ஓர் ஒற்றையறைக்கு' திரும்ப முடியாது.

ஜூலை 21-22, 1937 எழுதிய கடிதமொன்றில் சோவியத் அருங்காட்சியக இயக்கத்தில் தான் ஒரு அதிகாரியாகப் பணிபுரிந்தபோது எவ்வாறு அத்தகைய வேலைக்குத் தான் தயாராக இல்லாமல் இருந்ததையும், பல தவறுகள் நிகழ்ந்ததையும், எல்லாமே கடினமாக இருந்ததையும் குறிப்பிடுகிறார். ஒரு முறை தான் நன்கு தயார் செய்த அறிக்கையொன்றை ட்ரொட்ஸ்கி பாராட்டியபோது, உபயோகமான ஒன்றைச் செய்ய முடிந்ததே என்று மகிழ்ச்சியடைந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

இதைப் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு எழுதுகிறார்: ''நான் உங்களிடம் அருங்காட்சியகத்தில் நான் செய்யும் வேலை முக்கியமானது, எனக்குப் பழக்கமில்லாதது, வித்தியாசமானது என 22 ஜூலை காலை உங்களிடம் பல தடவை கூறினேன். என்னுடைய பதவி எனக்கு ஒரு சில கடமைகளுக்கு உட்படுத்தியுள்ளது. என்னால் போதுமான அளவு அதைச் செய்ய முடியுமா என்ற நினைப்பும், அதை நான் சரிவரச் செய்யவில்லை என்ற உணர்வும், அதிகமான அளவு செய்யவேண்டுமோ என்ற கருத்தும், வீட்டில் குறைந்த நேரத்தைச் செலவழிக்கவேண்டும் என்ற சிந்தனையும், என்றுடைய மாலை நேரங்களைப் பணிக்குச் செலவிடுதல் தேவை என்ற எண்ணமும் தோன்றும். சில பகுதிகளுக்குப் பயணம் செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது. சில சமயம் மாநிலங்களிலிருந்து என் சக அதிகாரிகள் அவ்வாறே கூறினர். நீங்களோ என்னுடைய கஷ்டங்களைப் புரிந்துகொள்ளவில்லை; என்னுடைய தயாரிப்புக் குறைவு பற்றியும் என்னுடைய பொறுப்பு பற்றியும் இந்த வேலையை எடுத்துக்கொள்வதா, வேண்டாமா என்று நான் நீண்ட யோசனை செய்ய வேண்டியதாயிற்று. உங்களைக் கலந்து ஆலோசனை செய்தபொழுது நீங்கள் சற்று சாதாரணமான பதவியை வகித்தால் போதும் என்று கூறினீர்கள். ஆனால் கல்வித் தலைமை ஆணையரோ நான் இப்பதவியை ஏற்றே ஆகவேண்டும் எனக் கூறிவிட்டார். என்னுடைய வேலை பல ஆண்டுகள் தயாரிக்கப்படவேண்டிய தேர்வுக்குத் தயார் செய்வதைப்போல் இருந்தது. நான் பலமுறை என்னுடைய வேலையைப் பற்றி உங்களிடம் பேச முற்படுகையில், அங்குள்ள தனிப்பட்ட உறவுகள் பற்றி விவாதிக்க விரும்பினால், நீங்கள் அப்பேச்சைத் தவிர்க்க விரும்பினீர்கள், அல்லது சில சமயம் பண்போடும் பல நேரம் கடுமையோடும் அப்பேச்சைத் தவிர்க்கச் சொல்லிவிட்டீர்கள். சிறப்பு வல்லுனர்களைப் பற்றி மத்தியக் குழுவிற்கு நான் எழுதிய கடிதத்தை நீங்கள் படித்துவிட்டு, ''இது நல்ல முறையில் எழுதப்பட்டுள்ளது'' எனக் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. அது என்னுடைய வெற்றியின் காலம். இந்தக் கடிதத்தைச் சில காலமாகவே உங்களுக்குக் காட்ட நினைத்தேன், ஆனால் நீங்கள் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் காட்ட முடியவில்லை பகலிலும் இரவிலும் உணவு நேரத்தில் நாமிருவரும் பேசிக்கொள்ள சில சமயம் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உங்களைப் பார்க்க முடியும் என்று மாலை நேரங்களில் வீட்டில் நான் இருக்கும்போது, என்னுடைய சக ஊழியர்கள் மாலைக் கூட்டத்தில் பங்குபெறாததற்காக என்னைக் குறைகூறுவர். நான் உறங்கச் சென்ற பிறகுதான் நீங்கள் வீட்டிற்கு வருவீர்கள். உங்களுடைய காலை நேரங்களில் படுக்கையிலிருந்து எத்தனை துடிப்புடன் எழுந்து, விரைவில் உடையணிந்து, வாகனத்தைக் கூப்பிட்டுப் புறப்பட்டுவிடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்; என்னையும் Seriozha வையும் ஒரு பார்வையோ அல்லது அடையாளச் சைகையோதான் ஊக்குவிக்கும்; Seriozha வோ காலையில் உற்சாகமின்றியே எழுந்து தயார் செய்து கொண்டு உடையுடுத்து நிற்பாள். ஆனால் நீங்கள் எவ்வளவு இனிமையாகவும், கருணை கொண்டும் விளங்கியுள்ளீர் என்பதை நான் அறிந்ததால், உங்களைத் தழுவிக்கொள்ள விரும்புவேன். ஆனால் அவசரம் அவசரமாகப் புறப்பட்டு உங்களோடு சேர்ந்துகொண்டு, இருவரும் வேலைக்கு ஒன்றாகப் புறப்படுவோம்."

1933, செப்டம்பர் 12 அன்று எழுதிய கடிதம் ஒன்றில் அதிக அளவு உழைத்து, தன் உடலை வருத்திக்கொள்ளும் நிலையிலிருந்த ட்ரொட்ஸ்கியைக் கடிந்துகொள்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் தான் அந்த ஆண்டின் முதல் பகுதியில் ஜேர்மன் தொழிலாள வர்க்கம் தோல்வியுற்றதின் படிப்பினைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என ட்ரொட்ஸ்கி போராடத்திற்கு தலைமை வகித்துக் கொண்டிருந்துடன், சர்வதேச இடது எதிர்ப்பாளர்களுடன் ஒரு புதிய சர்வதேச புரட்சிக் கட்சியான நான்காம் அகிலத்தை கட்டும் முன்னோக்கு தொடர்பாக கவனத்தை செலுத்திய நேரம்.

நத்தலியா எழுதினார்: ''... மிகப் பலமுடைய மனதினால்கூட நீண்ட அளவு உங்களைப் போல் போதிய ஓய்வு இல்லாமல், தடையின்றி வேலை செய்வது என்பது நினைத்துப்பார்க்க முடியாது. அன்பரே, உங்களிடமிருந்து நீங்களே மனிதசக்தியை மீறிய உழைப்பை எதிர்பார்க்கிறீர்கள்; தோல்விகளுக்கு வயதானதுதான் காரணம் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் இவை தோல்விகளே அல்ல. உங்களுடைய தோள்களில் இத்தனை சுமைகளைச் சுமப்பது விந்தையே! வேறு யாராலும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட உள்ளாற்றலைக் கொண்டு இப்படியாக நாள் முழுவதும் இவ்வளவு வேலையைச் செய்ய முடியாது.''

இஸ்தான்புல்லிற்கு வெளியே பிரின்கிபோ தீவில் தாங்கள் வாழ்ந்ததை நத்தலியா மெக்ஸிகோவில் ஆவலுடன் நினைவுபடுத்திக்கொள்கிறார். மீன் பிடிப்பது, கடற்கரையோரத்தில் நடப்பது போன்ற இரண்டையும் ஈடுசெய்யும் வகையில் தோட்டக்கலையில் ஈடுபடலாம் என்ற கருத்தைத் தெரிவிக்கிறார்.

1933, செப்டம்பர் 29ம் தேதியிட்ட வேறொரு கடிதத்தில், லியோன் செடோவின் மனைவி ஜென்னி மோலினரின் சிக்கலான குணநலனைப் பற்றி விவாதித்தபின் மகனைப் பற்றிக் கூறுகிறார்: ''பொதுவாகக் கூறவேண்டுமென்றால், லியோவா ஞாபக மறதி கொண்டவன் அல்ல. அல்மா ஆட்டாவிலோ, கொன்ஸ்டான்டிநோபிளிலோ அவன் எப்படியிருந்தான் என்பதை நினைவுபடுத்து. மிகத் தெளிவாகவும், நல்ல ஞாபக சக்தியுடனும்தான் அவன் விளங்கினான். இப்பொழுதோ கவனம் சிதறியும், நரம்புத்தளர்ச்சி உடையவன் போலும் உள்ளான். மன அழுத்தத்தால் உற்சாக நிலை விரைவாக வெற்றிகொள்ளப்படுகின்றது. இப்பொழுது எதிர்ப்பின் (ஸ்ராலினிசத்திற்கு எதிர்ப்பின்) விரைவான வெற்றிக்கு அவன் அதிக நம்பிக்கை காட்டுகிறான்.''

இந்த நத்தலியாவின் சில கடிதங்கள் அவையே தம் கதைகளைக் கூறுகின்றன. ஓர் தாயும், மனைவியுமாய் சுற்றுசூழலுக்கு உணர்வுமயமாக பிரதிபலிக்கும் மற்றும், தானும் தனதருகிலிருக்கும் உற்றாரும் படும் துன்பங்களால் அடிக்கடி தாக்கப்பட்டவரின் ஓர் உயிர்ப்புடன் கூடிய மனித ஆவணமாக அவை விளங்குகின்றன. அதே நேரத்தில் சாதாரணமாகக் காணமுடியாத வாழ்க்கையின் தன்னுடைய கண்ணோட்டத்தைப் பாதுகாப்பவரையும் வசதியற்ற புறச்சூழ்நிலைக்கு எதிராக தேவையானால் போராட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக உள்ள வீரமுடைய தன்மையையும் நாம் சந்திக்கிறோம்.

சோவியத் யூனியனில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் வெளியிடப்பட்ட பல பாகங்களாலான மிகவும் சுவாரஸ்யமற்ற ''ஒழுக்கவியல் தன்மைகள்'' பற்றிய இலக்கியத்தைவிட, ரஷ்யப் புரட்சி மீது ஒழுக்கவியல் மற்றும் அறிவுத் திறமையையும் கொண்டுவந்த ஆற்றல்மிகு சோசலிச புத்திஜீவிகள் தட்டின் உணர்வுகளையும் மனநிலையையும் விளங்கிக்கொள்ள இந்தக் கடிதங்கள் உண்மையாகவே எமக்கு உதவுகின்றன.

நத்தலியாவை ட்ரொட்ஸ்கி ஆழ்ந்து காதலித்தார். பல ஆண்டுகள் ஒன்றாக இருந்ததினால் மட்டும் அவர் நடாலியாவிடம் கட்டுண்டிருக்கவில்லை. தங்களுடைய பொதுப் போராட்டத்தினாலும் அவர்கள் இணைந்திருந்தனர் - கடுமையான மனித சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அளவிலும் அவர்கள் இணைந்திருந்தனர் (அவர்களுடைய இரு மகன்களையும் ஸ்ராலின் கொலை செய்தாரென்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்). 1940, பெப்பிரவரி 27ல் தான் கொலை செய்யப்படுவதற்கு ஆறு மாதங்கள் முன்பு எழுதிய 'மரண சாசனத்தில்' நத்தலியவைப் பற்றி, ட்ரொட்ஸ்கி எழுதுகிறார்: 'சோசலிசத்திற்காகப் போராடிய ஒரு வீரனாக இருந்தேன் என்ற மகிழ்ச்சியைத் தவிர, அவளுடைய கணவனாக இருந்தேன் என்ற மகிழ்ச்சியையும் விதி எனக்கு அளித்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஒன்றாக இருந்தகாலத்தில் காதல், பெருந்தன்மை, இளகிய மனம் இவற்றின் வற்றாத ஊற்றாக அவள் எனக்கு இருந்தாள்.`` (Writings of Leon Trotsky, 1939-40, p.158).

1920களிலும் 1930களிலும் USSRக்குள் ஸ்ராலினிசத்திற்கெதிரான போராட்டங்களின் வரலாற்றை ஏழு நூல்கள் கொண்ட தொகுதியாக எழுதிய ஆசிரியரான வாடிம் ரொகோவின், ''உலக இலக்கியத்திலும் வரலாற்றின் பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றிலும், மரணத்தை எதிர்பார்த்திருந்த ஒரு மனிதன் தன்னுடன் 40 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கைத் துணை பற்றி இத்தகைய காதல், இளகிய மனச் சொற்களை ஊக்கத்துடன் கூறுவது அரிதாகும்'' என்று சரியாக எழுதியுள்ளார். (Beginning Means the End, Moscow, p.341).

ட்ரொட்ஸ்கி பெண்களிடம் கடுமையான போக்கை காட்டுபவர் என்று உண்மையை அசட்டை செய்து எழுதுகின்ற ஆசிரியர்களும் உள்ளனர். அவரை ஒரு ஆணாதிக்கப் போக்குடைய கொடுங்கோலன் போல சித்தரிப்பவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் லண்டனில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள Lan. D.Thatcher ஆவார்.

ரஷ்ய புரட்சித் தலைவர்களில் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளின் தொகுப்பு என்பதற்கான ஒரு உதாரணம் என கூறவேண்டிய அளவிற்கு புத்தகத்தின் தரம் மட்டமாக உள்ளது. தனிப்பட்ட முறையிலும் சிந்தனாவாத அளவிலும் தாட்சர், ட்ரொட்ஸ்கியை இகழ்வதை ஆராய்வதுடன் எம்மை நிறுத்திக்கொள்வோம்.

போல்ஷிவிசம் ஒரு பால் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்ற அவரது பொது அணுகுமுறையில் இருந்து தாட்சர் எழுத ஆரம்பிக்கின்றார்.

''போல்ஷிவிக் சுவரொட்டிப் பிரச்சாரங்களின் பால் பகுப்பு பற்றிய ஆய்வுகள், முக்கியமாக பெண்களை 'பின்தங்கிய`, 'அடிபணிந்த' பங்குபுரிபவராகவே சித்தரிக்கப்படுகின்றன. சிலவேளை இது ஆண்கள் உயர்நிலையிலிருந்த அரசாங்கத்திடம் எதிர்பார்க்கப்பட வேண்டியதுதான். பெண்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி எவ்வளவு கவர்ச்சியற்றுத் தோன்றியிருக்கவேண்டும் என்பதற்கும் அதனுடைய இளைஞர் பிரிவிலிருந்து மத்தியக்குழு வரையிலும் இருந்த சிறிய அங்கீகாரமே போதுமானது. ஏனைய தன்முனைப்புடைய ஆண்களைப் போலவே ட்ரொட்ஸ்கியும் எவ்வாறு பெண் போராட்டவாதிகளைப் பொருட்படுத்தாமல் இருந்தார் எனக் கூறமுடியும்.'' (Ian D.Thatcher, Trotsky, 2003, p.137).

இந்த அறுதியிடப்பட்ட அறிக்கைக்குச் சான்றாக தாட்சர் 1918 வசந்த காலத்தில் ரஷ்ய வரலாற்றாசிரியர் யூரி.வி. கெளதியர் (Yu. V. Gauthier), எழுதிய நாட்குறிப்பைக் காட்டுகிறார். கெளதியர் அந்த நேரத்தில் போல்ஷிவிக்களுக்கு கடுமையான எதிரியாக இருந்ததுடன், வெள்ளை இராணுவத்தை ஆதரித்ததுடன் முடியாட்சி மீளக் கொண்டுவரப்படவேண்டும் என்ற கருத்தையும் கொண்டிருந்தவராவர்.

1918 ஏப்ரல் 20 அன்று தன்னுடைய வேலை செய்யுமிடத்திற்கு நத்தலியா செடோவா வந்து (அவர் ருமியான்ஸ்செவ் அருங்காட்சியகத்தில் நூலகராக வேலை பார்த்தார்), 1915-16 Kievskaia Mysl செய்தித்தாள் பற்றிய கோப்புக்களுக்காக தன் கணவருக்காகக் கடன் கேட்க வந்திருந்தார் என்பது பற்றி யூரி.வி.கெளதியர் எழுதியுள்ளார். அதிகாரபூர்வமான கடன் அனுமதிப்பு கொண்டுவர வேண்டும் எனக்கூறி தான் அனுப்பிவிட்டதாகக் கூறுகிறார். மறுநாள் உரிய அரசாங்கப் படிவங்களுடன் நத்தலியா வந்திருந்தார். தேவையானவற்றை அவருக்குக் கொடுத்தனுப்பிய பின்னர், இந்த முடியாட்சிச் சார்புடைய வரலாற்று ஆசிரியர் தன்னடைய ஏமாற்றங்களை நாட்குறிப்பில் வெளியிடுகிறார். அவரை ஒரு ''குட்டையான உருவம், தெற்குப்புறப் பேச்சுவழக்கு, சற்றே மேல் திரும்பிய மூக்கு,'' என்று வர்ணித்த பிறகு, ''மிகுந்த வசதியான அளவில் உடையணிந்திருந்தாலும் எழிலில்லா முறையில் அது அமைந்திருந்தது. காரிலிருந்து அவர் இறங்கியபோது இராணுவ வீரர் ஒருவர் அவர் முன் நிமிர்ந்து நின்று மரியாதை செலுத்தினார்.'' (Ibid).

இது உண்மையைக் கூறுகிறது. ரஷ்யப் புரட்சியின் மீது குருட்டுத்தனமான வெறுப்பைக் காண்பிக்கும் மனிதரொருவர் தன்னுடைய விரோதத்தை ட்ரொட்ஸ்கியின் மனைவி மீது வெளிப்படுத்துகிறார். இது உலக நடப்புக்களைப் பற்றி வரலாற்று குப்பைகூழங்கள் பற்றிய பொதுவான உதாரணமாகும். எவ்வாறிருப்பினும், தாட்சருக்கோ இந்நிகழ்ச்சி ட்ரொட்ஸ்கி ''தன்னுடைய மனைவியை தனது உதவியாளர் போல் மதிப்பற்று நடத்திய முறைக்கு'' உதாரணமாக அமைந்துவிடுகிறது.

''இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, பெண்கள் கண்கள் மூலம் உண்மையைக் காணுங்கள் என்ற தன்னுடைய சொந்த ஆலோசனையையே அதிக தீவிரத்துடன் ட்ரொட்ஸ்கி ஏற்றுக்கொள்ளவில்லை. லெனின் இறந்தபிறகு அவருக்குப் பதிலாக ஒரு பெண் வேட்பாளர் பெயரை அவர் முன்மொழியவில்லை. உலகத்தில் பெண்ணின் முன்னோக்கு எப்படியிருக்கும் என்பது பற்றி விரிவாக எழுதுவேன் என்று கூறிய உறுதிமொழியையும் அவர் முழுமையாக கடைபிடிக்கவில்லை.'' என கெளதியர் எழுதுகின்றார். (ibid., p. 138).

தாட்சரின் ''வாழ்க்கை வரலாற்றில்'' இப்படிப்பட்ட முட்டாள்தனமான தாக்குதல்கள் அவருக்கு பொதுவானதாகும். சொல்லப்போனால் இந்தப் புத்தகத்திற்கு ''நான் ஏன் ட்ரொட்ஸ்கியை வெறுக்கிறேன்'' என்ற தலைப்பைக் கொடுத்திருக்கலாம். ட்ரொட்ஸ்கியை எதிர்மறை வெளிச்சத்தில் காட்டும் முயற்சியில் மிகவும் பாடுபட்டு பிரிட்டிஷ் எழுத்தாளர் எப்படிப்பட்ட பொருத்தமற்ற நிகழ்வுகளையும் கொண்டு சேர்த்துவிடுகிறார், அவற்றை இணைத்து கருத்துக்குப் பொருந்தாவிட்டாலும் ஒரு கலவையாகக் கொடுத்து ட்ரொட்ஸ்கிக்கு மாசு கற்பிக்கும் வகையில் - ஒரு பகுதி உண்மையை எடுத்துக்கொண்டு கண்டுபிடிப்புக்களையும் கற்பனைகளையும் கலந்து உண்மை நிகழ்ச்சிகளோடு தொடர்பு இல்லாத வகையில் சித்தரித்து இழிவுபடுத்த முயன்றிருக்கிறார்.

உண்மையில், போல்ஷிவிக் தலைவர்கள் ''பாலியல்வாதிகளைப்போல்'' பெண்களை சாதகமல்லாத முறையில் அணுகினார்கள் என்று பேசுவதின் மதிப்பு என்ன? எந்தப் புரட்சியிலும் பெண்கள் விடுதலைக்கு அவை வழிகாட்டினாலும் கூட நடைமுறையில் பழையகால தடைகளை உடனடியாக அகற்றுவது முடியாது என்பதையும், மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கு மிகவும் முற்போக்கான இயக்கத்திற்கு கூட குறிப்பிட்ட காலம் தேவை என்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார்.

ட்ரொட்ஸ்கி தன்னுடைய மனைவியின் நிலையை ''சுரண்டினார்'' என்ற வாதமும் பொய்யும் முட்டாள்த்தனமானதுமாகும். நத்தலியா பல நேரம் தன்னுடைய கணவருக்கு உதவியாளர் போல் இருந்தது உண்மையே. ஆனால் அவ்வாறு அவர் செயல்பட்டது முழு நனவோடு எந்த ஆதிக்கத்துக்கும் பயந்து அல்ல. ரஷ்யப் புரட்சியின் தயாரிப்பில் தன் கணவர் மத்திய பங்கு கொண்டுள்ளார் என்பதை அவர் நன்கு அறிந்திருந்துடன், மேலும் 1920களின் இறுதியிலிருந்து சோசலிசத்துக்கான சர்வதேசப் போராட்டத்தைத் தலைமைதாங்கி நடத்துவதிலும், உள்நாட்டில் ஸ்ராலினிச குழுவுக்கு எதிராக போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றார் என்பதும் அவருக்குத் தெரியும். ட்ரொட்ஸ்கியின் உதவியாளர் என்பது தொழிலாள வர்க்கத்தையும் மில்லியன் கணக்கிலான பெண்களையும் சமூக ஒடுக்குமுறையின் கட்டுக்களில் இருந்து விடுவிக்கும் அவருடைய தனிப்பட்ட பங்காகும்.

நுகர்பொருளை பற்றிவழிபடுவது தொடர்பான தப்பெண்ணத்தால் மதியற்றுப்போன ஒரு குட்டி முதலாளித்துவ வாதியின் சிந்தனைதான், கணவன் மனைவியருக்கிடையே நிலவிய உறவுகளின் தன்மையை, உழைப்பிற்கான ஒரு நியாயமாக வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து விளங்கிக்கொள்ளும்.

ஆனால் தாட்சரின் மிகப்பெரிய பொய் என்னவென்றால் ரஷ்யப் புரட்சியின் உண்மையான வரலாற்று முன்னோக்கை, பின்னால் நிகழ்ந்த அதன் சோக முடிவுடன் வேண்டுமென்றே குழப்புதலாகும். எதை அழிக்க முயன்றதோ அப்பிரச்சனைகள் அனைதிற்கும் புரட்சியை அவர் காரணமாக கூறுவதுடன், அது பின்னர் அதன் எதிர்மாறான எதிர்ப்புரட்சியாக மீண்டும் உருவாகியது என அவர் விபரிக்கின்றார்.

1917ம் ஆண்டு சோசலிசப் புரட்சி பெண்களுக்கான சமத்துவத்தை அடிப்படைச் சட்டமாகக் கொண்டுவந்ததுடன், பெண்களுக்கு கல்வி, வேலை, சமுதாயத்தை நடத்துவதில் ஆண்களுடன் சமபங்கு ஆகியவற்றை வழங்கியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சமையலறையிலிருந்தும் குடும்பத்தின் அடிமைத்தன்மையிலிருந்தும் இருந்து ஒரு உண்மையான மனித இருப்பின் ஒளியை நோக்கி பெண்களுக்கான பாதையை உருவாக்கியது. பல ஆண்டுகள் தொடர்ந்த ஸ்ராலினிச சீரழிவும் மற்றும் ஒரு பெரிய அளவிலான மிருகத்தனமான குருதிக்கறை மிக்க பாரிய பயங்கரங்களும் இந்த கலாச்சார பாரம்பரியத்தை அழித்து மீண்டும் 'பழைய ஏற்பாட்டின்' ஒழுக்க நெறியையும் USSR ல் வழமை எனப்படும் அரசாங்க ஒப்புதல் பெற்ற மனைவி கணவனுக்கு கீழ்ப்படிந்தவள் என்ற நிலையைப் பழையபடி கொண்டுவர தேவையாக இருந்தது.

Top of page