World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரித்தானியா
Chris Marsden addresses London meeting: "A turning point for class relations in Europe" லண்டன் கூட்டத்தில் கிறிஸ் மார்ஸ்டன் உரை: "ஐரோப்பாவில் வர்க்க உறவுகளைப் பொறுத்தவரை ஒரு திருப்புமுனை" By Chris Marsden லண்டனில் ஜூன் 22 அன்று உலக சோசலிச வலைத் தளமும், சோசலிச சமத்துவக் கட்சியும் நடாத்திய பொதுக்கூட்டத்தில், கிறிஸ் மார்ஸ்டன் ஆற்றிய உரையை கீழே பிரசுரிக்கிறோம். மார்ஸ்டன் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும் ஆவார். ''ஈராக் போரின் படிப்பினைகள்: ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் பணிகள்'' என்பது பொதுக்கூட்டத்தின் தலைப்பாகும். இந்த பொதுக்கூட்டம் பற்றிய செய்தியை WSWS / SEP லண்டன் கூட்டத்தில் ''தொழிலாள வர்க்கத்திற்கு தனது சொந்த சர்வதேச மூலோபாயம் தேவை" என்ற தொடர்ந்து வரும் கட்டுரையில் பார்க்க. கடந்த வாரத்தில் பிரிட்டனின் நாடாளுமன்றத்திற்குள் அசாதாரணமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. பிரதமர் டோனி பிளேயர், அவரது முன்னாள் சகாக்களில் ஒருவரால் ஒரு பொய்யர் என்று அழைக்கப்பட்டிருக்கிறார். மற்றவர்கள் சொல்வதில் உண்மை எது, பொய் எது, என்பதைத் தேர்வு செய்வதில் அவர் வல்லவர். உலக சமாதானத்தை அச்சுறுத்தும் வகையில் சதாம் ஹூசேன் மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்ற தவறான சாக்குப்போக்கின் அடிப்படையில், அமெரிக்காவின் குடியரசுக் கட்சி நிர்வாகம் தூண்டிவிட்டதன் காரணமாக, பிரிட்டனை ஈராக்கிற்கு எதிரான சட்ட விரோத போரில் ஈடுபடுத்தியிருப்பதாக டோனி பிளேயர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது. வெளி விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற தேர்வுக்குழுவில் சர்வதேச அபிவிருத்தித்துறை முன்னாள் செயலர் கிளேர் சோர்ட் (Clare Short) மற்றும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரொபின் குக் (Robin Cook) இருவரும், டோனி பிளேயர் மீது கூறிய குற்றச்சாட்டுக்களை நான் மேற்கோள் காட்ட அனுமதிக்கவும். டோனி பிளேயரை, சோர்ட் மிகவும் கடுமையாக சாடியிருக்கிறார். ஈராக் மீது, பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் படையெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி புஷ்ஷூடன் சென்ற கோடைக் காலத்தில் டோனி பிளேயர் இரகசிய உடன்பாட்டைச் செய்திருந்தார் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு. ''நாங்கள் உங்களுடன் இருப்போம்'' என்று பிளேயர் புஷ்ஷூக்கு சொன்னார். அவ்வாறு செய்யும் விதமாய் "வரிசையாய் அரைகுறை உண்மைகளையும், மிதமிஞ்சிய கற்பனைகளையும், மறு உறுதிமொழிகளையும் பயன்படுத்தினார். எம்மை வசந்தகாலத்தின் போது மோதலில் ஈடுபட வைப்பதற்கு அது விஷயமாக இருந்ததில்லை. "சென்ற ஆண்டு செப்டம்பர் 24 வாக்கில், நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள மூத்த அதிகாரிகள் என்னிடம் பேசும்போது, சிறிது காலத்திற்கு முன்னர் (போருக்கான) தேதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்கள். ஈராக்கில் நடைபெறும் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவை ஆதரிப்பது விரும்பத்தக்கது, கண்ணியமானது என்று பிரதமர் முடிவு செய்திருக்கக்கூடும் என நான் நம்புகிறேன். எனவே, அவர் நம்மை போரில் ஈடுபடுத்துவதற்கு பல்வேறு சாக்குபோக்குகளையும், வழிவகைகளையும் உருவாக்கி நாம் ஏற்றுக்கொள்ளுமாறு செய்வதற்கு முயன்றார். அது அவரைப் பொறுத்தவரையில் கண்ணிய மிக்க மோசடி என்று நான் நினைக்கிறேன்" இந்த சொற்றொடர் வரும் நாட்களில் டோனி பிளேயரை வாட்டிவதைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வகையில் முறையான ஆட்சி நிர்வாக நடைமுறை அதிர்ச்சியூட்டும் வகையில் சீர்குலைக்கப்பட்டது பற்றியும் சோர்ட் விளக்கியுள்ளார். வெளியுறவுத்துறை அலுவலகத்திலோ, அல்லது அமைச்சரவையிலோ, முறையாக எடுத்திருக்க வேண்டிய முடிவுகளை பிளேயரை சுற்றியுள்ள ஒரு சிறிய குழு செய்தது. எங்கோ செய்யப்பட்ட கொள்கை முடிவிற்கு வெளியுறவுத்துறை செயலர் ஜாக் ஸ்ட்ரோ தனது கையெழுத்தை போட்டு அங்கீகாரம் தந்திருக்கிறார். இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் பற்றிய தகவல் மிகவும் அற்புதமானது. அவர்கள் அனைவரும் பிளேயரால் நேரிடையாக தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்டவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள், எவருக்கும் பதில் கூறவேண்டிய கட்டாயம் இல்லாதவர்கள், ஆனால், அவர்கள் தான் நாட்டிற்கு வாழ்வா? சாவா? என்ற பிரச்சனைகளை முடிவு செய்கிறார்கள். இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் என்று சோர்ட் குறிப்பிட்டிருப்பவர்களில் முக்கியமானவர்கள் அரிஸ்டர் கேம்பல், ஜோனதான் பவல், லேடி மோர்கன், மற்றும் சேர்-டேவிட் மேனிங் ஆகியோராவர். இதில் அலிஸ்டர் கம்பெல் பிளேயரின் தகவல் தொடர்பு இயக்குநராவர். பிளேயர் குழு உருவாக்கும் வலதுசாரி கொள்கை முயற்சிகளுக்கு தகுந்த விளக்கம் தந்து அவற்றை பிரபலப்படுத்தியவர் மற்றும் சரக்குகளை அவிழ்த்து விடுவதனால் அவரது பெயர் ஏளனத்திற்கு ஆளாகி இருக்கிறது. ஜோனாதன் பவல் முன்னாள் ராஜீய அதிகாரி, சென்ற வளைகுடாப் போரின் ஆயத்தக் கூட்டங்களில் அன்றைய பிரதமர் மார்க்ரெட் தாட்சரின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகராக பணியாற்றியவர் ஜோனதன் பவலின் சகோதரர் சார்ல்ஸ் ஆவார். சாலி மோர்கன் கட்சியில் முக்கிய அங்கம் வகிப்பவர், பிளேயருக்கும், கட்சி அமைப்புகளுக்கும் இடையில் உறவுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, கொள்கைகளை வகுத்து வருகிறார். அவருக்கு சுதந்திரமான அரசியல் பாரம்பரியம் எதுவும் இல்லை. சேர் டேவிட் மானிங் தூதரக அதிகாரியாக பணியாற்றி வருபவர், வாஷிங்டனின் உள்வட்டாரங்களில் நெருக்கமான உறவு கொண்டிருப்பவர், குறிப்பாக புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலிசா ரைஸ்சுடன் நெருக்கமாக உள்ளவர். அவர் ஹோண்டாலிசா ரைஸையே ''கவர்ந்து வந்தவர்'' என்று வர்ணிக்கப்படுகிறார். அவர் செய்த சேவைகளுக்கு வெகுமதியாக அவர் அமெரிக்காவுக்கு புதிய பிரிட்டிஷ் தூதராக நியமிக்கப்பட்டார். சோர்ட் கோடிட்டு காட்டியுள்ள பிளேயர் குழு அவர் எப்படி ஆட்சியை தனது சொந்த நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் போல் நடத்துகிறார் என்பதன் ஒரு விளக்கிக் காட்டல் ஆகும். ஜூன் 8 ந் தேதி ஒப்சர்வர் பத்திரிகையில் ''அன்டோனி சாம்சன்'' ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பிளேயர் தங்களை புறக்கணிப்பதாக சிவில் சேவையை சேர்ந்தவர்கள் எந்த அளவிற்கு போராட முன்வந்திருக்கிறார்கள் என்பதை அந்தக் கட்டுரை விளக்குகிறது. எண் 10 ல் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தனது சொந்த ராஜ்ஜியத்துறை அலுவலர்களை நியமிப்பதில் மற்றும் தனக்கு வேண்டியவர்களை முன்னிலைப்படுத்துவதில் மார்க்கரட் தாட்சரையும் பிளேயர் மிஞ்சிவிட்டார். வெள்ளை மண்டப (White hall) தலைமை அதிகாரிகள் இந்த போக்கை கோசா நாஷ்ட்ரா (Cosa Nostra) என்று வர்ணிக்கின்றனர். இப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் லெவி பிரபு, இவர் மத்திய கிழக்கில் பிளேயரின் சிறப்புத் தூதராக பணியாற்றி வருகிறார். பாரீசில் உள்ள தூதர் சேர்-ஜோன் ஹோம்ஸ் (Sir John Holmes) பிளேயரின் முன்னாள் தலைமை தனிச் செயலாளர் ஆவார். ஈராக்கிற்கு பிளேயரின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பவர். ஜோன் சாவர்ஸ், அவர் பிளேயரின் முன்னாள் தனிச் செயலாளர் ஆவார். குக்கைப் பொறுத்தவரை பிளேயர் திட்டமிட்டு நாட்டு மக்களுக்கு தவறான தகவலைத் தரவில்லை என்று குறிப்பிட்டார். ஏற்கனவே, முடிவு செய்யப்பட்டுவிட்ட கொள்கைகளுக்கு ஏற்ற வகையில், புலனாய்வு தகவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. "இப்படிச் செய்வது மோசடியல்ல, புதிய கண்டுபிடிப்பல்ல, ஆனால், இப்படிச் செய்வது முழுமையான சித்திரத்தை தருவதாக இல்லை" என குக் குறிப்பிட்டார். ஈராக்கிடம் "ஒரு மூலோபாய இலக்கை சென்று தாக்குகின்ற நம்பகத்தன்மையுள்ள ஆயுதம்" எதுவும் இல்லை என்று தான் கூறியது, M-I6 புலனாய்வு அமைப்பிடம் இருந்து தான் பெற்ற அறிக்கையிலிருந்து, "வார்த்தை பிசகாமல்" பிரதிபலித்திருந்தது என்று குக் கூறினார். 2002 செப்டம்பரில் ஆட்சியாளர்கள் வெளியிட்ட புலனாய்வு ஆவணத்தொகுதி "மிகவும் வலுவற்றதாக" இருந்தது கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் குக் தெரிவித்தார். ''அந்த ஆவணத் தொகுதியில் இடம்பெற்றிருந்த ஏராளமான புலனாய்வு தகவல்கள் தவறானது என்று நிரூபிக்கப்பட்டன என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்'' என்று குக் குறிப்பிட்டார். இரண்டாவது, "மோசடியான ஆவணத்தொகுதி" இணையத்திலிருந்து அப்படியே பிரதி எடுக்கப்பட்ட PHD ஆய்வுக் கட்டுரையிலிருந்த விஷயங்கள உள்ளடக்கி இருந்தன. அது ஒரு "சொந்த சிறப்பு மிக்க குறிக்கோளாக" அமைந்திருந்தது. விசாரணையின்போது, இப்ராஹிம் அல்-மராஷி சாட்சியம் அளித்தார். அவர் ஈராக்கின் முன்னாள் PHD ஆய்வு மாணவர். அவரது அறிக்கையில் பெரும் பகுதி "மோசடி ஆவணத் தொகுதிக்கு'' அடிப்படையை அமைப்பதற்காய் எழுத்துத் திருட்டு செய்யப்பட்டது. (பிரதமர் அலுவலகம்) டெளனிங் தெரு தன்னுடைய சொற்றொடரை மாற்றி, தலைகீழாகப் புரட்டி, ஈராக் அதற்கு வெளியில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்பட்டுவருவதாக திரித்துவிட்டனர் என்று அவர் தனது சாட்சியத்தில் விளக்கினார். தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் ஈராக், வெளிநாட்டு எதிர்க்கட்சிக் குழுக்களை ஆதரிப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த வார்த்தைகள் பயங்கரவாத குழுக்கள் என்று மாற்றப்பட்டுவிட்டன. "வார்த்தைகளை மாற்றியதன் மூலம் அவர்கள் அந்த வார்த்தைகளின் பொருளை திரித்துவிட்டார்கள். அல் கொய்தா போன்ற குழுக்களை (ஈராக்) அவர்கள் ஆதரிக்கின்றனர் என்று தோற்றமளிக்கின்ற வகையில் சொற்களை மாற்றிவிட்டார்கள்'' என்று அந்த மாணவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். ரேடியோ 4 பாதுகாப்புத்துறை நிருபர் அண்ட்ரூ கிலிகான் ''இன்று" நிகழ்ச்சியில் செப்டம்பர் கோப்பிற்கு காரணமாகயிருந்த மூத்த புலனாய்வு அதிகாரி ஒருவர், அலிஸ்டர் கேம்பல் கூட்டு புலனாய்வுக் குழு அறிக்கையை மாற்றிவிட்டார் என்று குற்றம் சாட்டினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு செயலர் ஜாக் ஸ்ட்ரோ நாடாளுமன்றத்திற்கு பொய் தகவல் தந்தார் என்று ஆகாதா என்று கேட்டனர். ஆனால், இல்லிகன் தனது செய்தியின் மூல ஆதாரம் முக்கியமான புலனாய்வு அதிகாரி என்று தெரிவித்தார். பிரதமரைப் பொறுத்தவரை, அவரது வெளியுறவு செயலரும் மற்றும் அவரது பிரதான புனை சுருட்டு நிபுணருமான அனைவரும், பொய்த் தகவல்களை தந்ததாகவும், தவறான வழியில் நாட்டை இட்டுச் சென்றதாகவும், முன்னாள் சகாக்கள் எவ்வளவு தான் குற்றம் சாட்டினாலும், வேறு சூழ்நிலைகளில் இது மிகப்பெரிய மோசடி நடவடிக்கையாக வெடித்துச்சிதறி பிளேயர் பதவி இழந்திருப்பார். அவரது ஆட்சியே கவிழ்ந்திருக்கும். ''நாடாளுமன்ற மக்கள் சபையை பிரதமர் தவறான வழியில் இட்டுச் சென்றார் மற்றும் போர் தொடர்பாக நாட்டிற்கு தவறான வழிகாட்டினார் என்று நாடாளுமன்றக்குழு ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. அதை கண்ணியமாகச் செய்தாரா அல்லது வேறு வகையில் நடந்துகொண்டாரா என்பதைவிட, இவ்வளவிற்கும் பின்னர் ஒரு பிரதமர் பதவியில் நீடிக்க முடியும் என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது'' என்று BBC அரசியல் நிருபரான நிக் அசிந்தர் ஊகித்து விமர்சனம் செய்துள்ளார். இத்தகைய விளைவை தள்ளிவிட முடியாது என்றாலும், இந்த மோசடியை சமாளித்துவிட முடியும் என்று பிளேயர் கருதுவதற்கு காரணம் என்ன என்பதற்கு பல்வேறு அடிப்படைகள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அவசியமான அம்சம் தொழிலாள வர்க்கம் சந்திக்கின்ற அரசியல் அறைகூவல்கள் ஆகும். முதலாவதாக, தனது கட்சிக்குள் தன்னை எதிர்ப்பவர்களை பிளேயர் துச்சமாக மதிக்கிறார் என்பதாகும். ஈராக், அச்சுறுத்தல்கள் பற்றி ஆட்சியாளர்கள் மிதமிஞ்சிய வகையில் தகவல் தந்திருக்கிறார்களா என்பது குறித்து நடுநிலை விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கோரி, மக்களவையில் தாராண்மை ஜனநாயகக் கட்சிக்காரர்கள் சென்ற முறை தீர்மானம் தாக்கல் செய்தபோது, அந்த தீர்மானத்தை 11 எம்.பிக்கள் மட்டுமே உறுதியாக ஆதரித்து நின்றனர். சோர்ட் மடத் துணிச்சலான தனிவகை பெண்மணி. ஏனெனில் தனது அரசியல் அனுபவம் தனக்கு பக்கபலமாகயிருக்கும் என்று அவர் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். குக்கைப் போன்று இந்த அம்மையாரும், வாஷிங்டனுக்கு ஆதரவாக பிளேயர் அளவிற்கு அதிகமாக சென்றுவிட்டார். அதனால், ஐரோப்பாவுடனான கூட்டுக்கள் அச்சுறுத்தப்படுகிறது என்று கருதுகின்ற ஆளும் வட்டாரங்களில் உள்ள சிறுபான்மைக் கருத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்றார். ஆனால், குக் தனக்கு சரியான பதவி தரப்பட்டால், ஒரு பேரத்திற்கு தயாராக இருக்கிறார். மற்ற எம்.பிக்களைப் பொறுத்தவரை அவர்கள் அமைச்சர்களாகயிருந்தாலும் இல்லாவிட்டாலும் பிளேயர் ஆட்சி கவிழ்வதை அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் அவரோடு சேர்ந்து அவரது கொள்கை நிலைப்பாடுகளை ஆதரிக்கின்றனர். இரண்டாவதாக, ஈராக் போர் என்கிற கிரிமினல் நடவடிக்கையில் பிளேயரின் எதிர்ப்பாளர்கள் அனைவரும் உடந்தையாகயிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். எனவே, அவர்கள் அளவிற்கு அதிகமாக கண்டனங்களை தெரிவிக்க முடியாது. மூன்றாவதாக, ஈராக் போரில் கலந்துகொள்வதற்கு அவர் கூறுகின்ற காரணங்கள் அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு செயல்படுவதுதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களுக்கு சிறப்பானது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவானவை. இந்த நம்பிக்கை பிளேயரைவிட, அவரது டோரிக் கட்சி எதிரிகளுக்கு மிகுந்த உடன்பாடானது மற்றும் டோரிக்கள் அதிகம் விரும்புவதாகும். பிளேயரை இழிவுபடுத்துவது புஷ் மற்றும் பிறர் மீதும் எதிரொலிக்கும். அப்படி நடப்பது டோரிக் கட்சித் தலைவர் இயன் டங்கன் ஸ்மித்திற்கும் (Iain Duncan Smith) அவரது கூட்டத்திற்கும் விரும்பும் கடைசி விஷயமாக இருக்கும். பிளேயருக்கு ஆதரவாக அவரை தாங்கி நிற்கிற வகையில் புஷ் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஏனென்றால் ஈராக் தொடர்பாக தவறான அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புலனாய்வு தகவல்களை தந்ததாக புஷ் மீதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்றத்திற்கு வெளியில் ஆளும் வட்டாரங்களிடையே பிளேயர் ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும் என்ற விருப்பம் இல்லை. வலதுசாரி பத்திரிகைகளான, டெலிகிராப் மற்றும் டைம்ஸ் போன்றவை, பிளேயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன என்பதை மட்டும் எடுத்துக்காட்டுகின்றனவே தவிர டோரிக் கட்சிக்காரர்கள் பதவிக்கு வரவேண்டும் என்ற நிலையை எதிர்பார்க்கவில்லை. பொதுவாக அவர்களது நோக்கம் என்னவென்றால், பெரு வர்த்தக நிறுவனங்களின் நலன்களுக்கு பயன்படுகின்ற கொள்கைகளை -- தனியார் மயமாதலை மேலும் தீவிரமாக்கல், தொழிலாளர்களது வாழ்க்கைத் தரத்தை குறைக்கின்ற வகையில் வெட்டுக்கள்-- ஆகியவற்றை உறுதியாக பிளேயர் நிறைவேற்ற வேண்டும், அந்த வகையில், அவருக்கு நிர்பந்தம் கொடுக்கவேண்டும் என்பதுதான். முடிந்தால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிளேயரை விலகிச் செல்ல நிர்பந்தித்து, மிக உறுதியாக வாஷிங்டன் பக்கம் சாய்வதற்கு நடவடிக்கை எடுக்கச் செய்யவேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாகும். ஆளும் நிர்வாகத்திற்குள்ளேயே, பெயருக்கு இடதுசாரி வட்டாரங்கள் என்று செயல்படுபவர்களை கார்டியன் பத்திரிகை மிக அபூர்வமாக பிளேயரை கண்டிக்கிறவாறு காட்டிக் கொண்டிருக்கிறது. குக்கும், சோர்ட்டும் விசாரணைக் குழுவில் சாட்சியம் அளித்ததை அன்றே அது வெளியிட்டதில் அதன் மனநிலையை சுருங்க கூறி இருந்தது. தேசிய சுகாதாரச் சேவை (NHS) கல்வி மற்றும் இதர துறைகளில் மேலும் அதிக அளவிற்கு தனியார் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என்று பிளேயர் பேபியன் சொசைட்டியில் (Fabian Society) உரையாற்றும்போது குறிப்பிட்டார். அது பற்றி, கார்டியன் பத்திரிகை எழுதியிருந்ததாவது. ''திரு பிளேயரின் பேபியன் உரை எப்படி இருப்பினும் ஆட்சியின் முக்கிய பங்கு பணிகள் பற்றி மீண்டும் தரப்பட்டுள்ள முக்கியமான விளக்கமாகும். குறிப்பாக சுகாதாரம், கல்வி, மற்றும் குற்றங்கள்'' தொடர்பாக அவர் தந்துள்ள அறிக்கையானது, தொழிற்கட்சி அனுதாபத்துடன் உடன்பட்டிருக்கும் சீர்த்திருத்தங்களுக்கு மாற்று நடவடிக்கையாகும். பழமைவாதிகளால் அனுதாபம் காட்டப்படாத சீர்த்திருத்தங்களை தொழிற்கட்சி கொண்டு வருகிறது. பிளேயரின் தீவிர எதிர்ப்பாளர்கள் என்று காட்டிக் கொள்பவர்களும், பிளேயரின் முன் இந்த அளவிற்கு மிக இழிவாக இறங்கிவந்து விடுகின்றனர். இந்த வாரம் நடைபெற்ற 2 சம்பவங்களானது தொழிற்சங்க அதிகாரத்துவமும், குறிப்பாக இடதுசாரி அணி என்று தங்களை பறைசாற்றிக் கொள்ளும் அருவருக்கத்தக்க குழுவினரும், எந்த அளவிற்கு சரணாகதி அடைந்துவிட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. தீயணைப்புப்படை தொழிற்சங்கம் பல மாதங்களுக்கு முன்னர் ஆட்சியாளர்கள் தாக்கல் செய்த பேரத்தை ஏற்றுக்கொண்டு தீயணைப்புப் படை வீரர்களை கை கழுவிவிட்டது. அந்த தொழிற்சங்கத் தலைவர் ஆன்டி கில்கிரிஸ்ட் கண்டனம் செய்பவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார். ''அப்போதைக்கு சில வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு, ஆட்சியை அவர்களது நடவடிக்கைகளை சமாளித்துவிட முடியும் என்று எவராவது கருதுவார்களானால் அவர்கள் வேறொரு கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்வேன். காலவரையற்ற வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்கி, தொழிற்சங்க உறுப்பினர்களை சிதறாமல் கட்டிக்காத்துவிட முடியும் என்று எவராவது கருதுவார்களானால், அவர்கள் இன்னொரு பிரபிஞ்சத்திலிருந்து வருகிறார்கள் என்றுதான் கருதுவேன்'' என்றார். இது மிக பிற்போக்கான இறுமாப்பு அறிக்கையாகும். தீயணைப்புப் படை வீரர்களின் தொழிற்சங்கத் (FBU) தலைமையானது பிரதானமாக வலியுறுத்தி வருகின்ற கருத்து, வேலைநிறுத்தம் போன்ற நடவடிக்கைகளால் மட்டுமே ஆட்சியை பணியச் செய்ய முடியும் என்பதுதான் ஆகும். போர்க் காலத்தில் அத்தகைய போராட்டம் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை மேற்கோள் காட்டி அவை பிளேயருக்கு எதிரான அரசியல் போராட்டத்தை எதிர்க்கின்றனர். இந்த நிலைப்பாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நம் அனைவருக்கும் நன்றாக நினைவு இருக்கிறது. அந்த நேரத்தில் பிரிட்டன் மற்றும் உலக வரலாற்றில் அதுவரை காணாத மிகப்பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை பிளேயர் சந்திக்கவேண்டி வந்தது. தனது அரசிற்கு எதிரான மிகப்பரவலான அரசியல் இயக்கமாக அது உருவாகிவிடுமோ என்று அப்போது அச்சம் நிலவியது. முதலாவது போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆதரிப்பதாக காட்டிக்கொண்ட தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரன்டன் பார்பர், கடமை தவறாது ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். பிளேயரை ஆட்சியிலிருந்து இறக்குவதற்கு நடைபெறும் இயக்கத்தை தொழிற்சங்கம் ஆதரிக்காது என்று அவர் அறிவித்தார். இதை அடையாளமாக, சமிக்கையாக எடுத்துக்கொண்ட தொழிற்கட்சி எம்.பிக்களும், பெயருக்காக போரை எதிர்த்தவர்களும் பின்வாங்கி ஓடி ஒட்டுமொத்தமாக ஆட்சிக்கு பின்னால் அணிதிரண்டு நின்றனர். தற்போது கில்கிரிஸ்ட், தீயணைப்புப் படை வீரர்கள் வேலைநிறுத்தத்திற்கு அவர் போராடி வந்த முன்னோக்கு ஆரம்பத்திலிருந்தே பயனற்றது என்று எனக்குத் தெரியும் என்று கூற துணிவு கொண்டிருக்கிறார். இதில் உண்மை என்னவென்றால், எந்த தொழிற்சங்கப் பிரிவும் பிளேயருக்கு எதிரான போராட்டம் குறித்து சிந்தனை செலுத்தவில்லை. ஏனென்றால், எந்தப் போராட்டம் நடந்தாலும் அது தாங்கள் சார்ந்துள்ள பகுதியான முழு தொழிற்கட்சி அமைப்புக்கும் எதிரானதாக அமைந்துவிடும். சென்ற வாரம் (பொதுச் சேவைகள் தொழிற்சங்கம்) UNISON மாநாட்டில் இந்த நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டது. தொழிற்சங்கங்கள், தொழிற்கட்சி எம்பிக்களுக்கு ரொக்கமாக படிகள் தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற முன்மொழிவுக்கு எதிராக தொழிற்சங்க நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்தார். தொழிற்சங்கக் கொள்கைகளை எதிர்க்கின்ற தேசிய சுகாதார சேவையையும் ஏனைய பொதுத்துறைகளையும் தனியார் மயமாக்க ஆதரிக்கும் எம்.பிக்களுக்கும், மானியங்கள் வழங்கப்படவேண்டும் என்று நிர்வாகி வலியுறுத்திக் கூறி மாநாடு ஏற்குமாறு செய்தார். UNISON தொழிற்சங்க அமைப்பானது ஆண்டிற்கு அங்கீகாரக் கட்டணமாக தொழிற்கட்சிக்கு 1.5 மில்லியன் பவுன்களை வழங்குகிறது. சென்ற பொதுத் தேர்தலில் தொழிற்கட்சிக்கு தொழிற்சங்கங்கள் 6,15,000 பவுன்களை வழங்கின. பிரைட்டன் பகுதியில், நடைபெற்ற தொழிற்சங்க ஆண்டு மாநாட்டில் பொதுச் செயலாளர் டேவ் பிரிண்டிஸ் (Dave Prentice) உரையாற்றும்போது, தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழிற்கட்சியை தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள பாடுபடவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். ''அது நம்முடைய கட்சி. நம்முடைய நண்பர்களோடு இணைந்து பணியாற்றி அந்தக் கட்சியை திரும்ப நமது கைக்குள் கொண்டு வரவேண்டும். அந்தக் கட்சியை சீர்திருத்த வேண்டும். அதைத்தான் நமது உறுப்பினர்கள் நம்மிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்" என்று அவர் குறிப்பிட்டார். தொழிற்சங்க இயக்கத்தின் புதிய இடதுசாரிகள் என்று அழைத்துக்கொள்ளும் அருவருக்கத்தக்க குழுவைச் சார்ந்த அமிக்கசின் டெரெக் சிம்சன் (Derek Simpson) மற்றும் TGWU வைச் சேர்ந்த டோனி உட்லி (Tony Woodley) போன்றவர்களைச் சந்தித்து அவர்கள் திரும்ப தொழிற் கட்சியை எப்படி "தங்கள் வசமாக்கிக்கொள்வது" என்பது குறித்து பேசப்போவதாக தெரிவித்தார். பிரிட்டனில் தொழிற்கட்சியை தங்கள் வசம் கொண்டுவந்து, அக்கட்சி சோசலிசத்திற்கும், தொழிலாள வர்க்கத்திற்கும் பாடுபடச் செய்வதைவிட, பிரிட்டனில் சோசலிச புரட்சியை உருவாக்குவது எளிதானது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். அது எப்படியிருந்தாலும், அடிப்படை அங்கீகாரக் கட்டணத்தை மட்டுமே கட்சிக்கு செலுத்தவேண்டும் என்ற கோரிக்கையை பெரும்பாலான பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. நடைமுறை தந்திரங்கள் அடிப்படையில் பிளேயர் கொள்கையில் சில அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மேலிருந்து கீழ் வரை, டோனி பிளேயர் அரசை கவிழ்க்கும் எந்தவிதமான அரசியல் போராட்டத்தையும் சகித்துக் கொள்ளமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலவரம் ஏற்பட்டுவிடுமானால், தொழிலாள வர்க்கம் தொழிற்கட்சியிலிருந்து பிரிந்து சென்று நியாயமான, நேர்மையான, சோசலிச கட்சியை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடும். மிகப்பொதுவான அடிப்படையில் பார்த்தால்கூட, தொழிலாள வர்க்கம் நேரடியாக முதலாளித்துவத்திற்கு சவால் விடுகின்ற நிலைமை ஏற்பட்டுவிடும். யார் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்? எவரது நலனுக்காக ஆண்டு கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வியும் எழும். எனது இந்தக் கருத்தில் நான் மிகைப்பட எதுவும் கூறிவிடவில்லை. ஈராக் போரைப் பொறுத்தவரை, அனைத்துக் கேள்விகளுக்கும் அப்பால், வெறும் எதிர்ப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தை சுதந்திரமாக அணிதிரட்டும் அடிப்படையிலான அரசியல் மூலோபாயத்திலிருந்து முறித்துக் கொள்ளல் என்ற அடிப்படையிலான முன்னோக்கின் திராணியற்ற தன்மையை நிரூபித்தது. நடப்பு நெருக்கடியில் புரட்சிகர இடதுசாரிக் குழுக்கள் என்று அழைக்கப்படுகின்ற குழுக்களின் பதில் இதனை மிகச் சிறப்பாக விளக்குகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் லண்டனிலும், இதர சர்வதேச நகரங்களிலும், பிரிட்டனிலும் மற்றும் உலக வரலாற்றிலும், அதுவரை காணாத அளவிற்கு மிகப்பெரும் வெகுஜன அரசியல் இயக்கத்திற்கு அவர்கள் தலைமை தாங்கினார்கள். போரை நியாயப்படுத்துவதற்கு கூறப்பட்ட நூலிழை போன்ற பொய்களை மிகப்பெரும் அளவிற்கு மக்கள் எதிர்த்தனர். அது இப்போது அடங்கிவிட்டது. அவர்களிடமிருந்து ஒரு வார்த்தைகூட, தற்போது கண்டனமாக வெளிவரவில்லை. செப்டம்பர் வரை, எத்தகைய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் திட்டமிடப்படவில்லை. போரை நிறுத்துவதற்கான போராட்டக்குழு, பிளேயரும், புஷ்ஷூம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரும் நடுநிலை விசாரணை கோரிக்கை விடுவதோடு நிறுத்திக் கொண்டது. எவரும் நடுநிலையான விசாரணையை எதிர்க்கவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், பல பொய்கள் ஏற்கெனவே அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன. அப்படியிருந்தும், பிளேயரை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று இன்னமும் அவர்கள் இயக்கத்தை தொடங்கவில்லை. அந்த இயக்கத்தை அவர்கள் தொடங்காததற்கு காரணம் பிளேயரை பதவியிலிருந்து நீக்க முடியும் என்று அவர்களுக்கு நம்பிக்கையில்லை. அத்தகைய முன்னோக்கும் அவர்களிடம் இல்லை. உண்மை என்னவென்றால், போர் எதிர்ப்பு இயக்கத்தை தீவிரவாதக் குழுக்கள் தலைமை தாங்கி நடத்தவில்லை. "உண்மையான தலைவர்கள்" என அவர்கள் பார்த்த தொழிற்கட்சியின் இடதுசாரிகள், தொழிற்சங்க இயக்க அதிகாரத்துவத்தினர், முஸ்லீம்கள் அமைப்பு மற்றும் தாராண்மை ஜனநாயகவாதிகளுக்குக்கூட, அடிபணிந்து தீவிரவாதக் குழுக்கள் செயல்பட்டன. இந்த பெரிய மனிதர்களுக்கு பின்னால், அமர்ந்திருந்த இவர்கள் திடீரென்று முன்வரிசைக்கு உயர்த்தப்பட்டது கண்டு பரபரப்படைந்தனர். தற்போது அந்த பெரிய மனிதர்கள் சமாதானம் செய்துகொண்டு அடங்கிவிட்டனர். தீவிரவாதிகள் மீண்டும் விரக்தியில் மூழ்கிவிட்டனர். அந்த தீவிரவாதிகள் பரபரப்பு அடைந்ததற்குக் காரணம், போர் எதிர்ப்பு இயக்கத்தில் காணப்படுகின்ற புரட்சி வலிமையல்ல. மாறாக, அறுபதுகளின் மற்றும் எழுபதுகளின் கடைசியில் நடைபெற்ற கண்டன அரசியல் பாணியில் தொழிற்கட்சியையும், தொழிற்சங்கங்களையும், இடதுசாரிகள் பக்கம் திருப்பிவிட முடியும் என்பதைப் புதுப்பித்துவிட முடியும் என்ற சாத்தியத்தினால் ஆகும். பெரிய வர்த்தக நிறுவனங்களால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தலிலிருந்து தங்களது சொந்த சமூக அந்தஸ்தை தற்காத்துக்கொள்வதற்கு தீவிரவாதிகள் இப்படிப்பட்ட நிலையைத்தான் நம்பிக்கொண்டிருக்கின்றனர். தற்போது, இந்த முன்னோக்கானது தோல்வி கண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இடதுசாரி குழுக்கள் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனால், அவர்கள் அப்படியே ஏதாவது கருத்துச் சொன்னாலும், அது அவர்களை பழிகேட்டிற்கு ஆளாக்குவதாக இருக்கிறது. அது மிகப்பெரிய அமைப்பாக இல்லாவிட்டாலும், மிக வியப்பூட்டும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ள தொழிலாளர் சுதந்திரத்திற்கான கூட்டு விடுத்திருக்கிற விமர்சனம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. (அந்த கூட்டு, அவர்களாகவே, அவர்களுக்குள் செய்துகொண்ட கூட்டு போலும்) அது, பழைய சோசலிஸ்ட் அமைப்பாளர் குழு ஆகும். பொது மற்றும் நகரசபை கொதிகலன்கள் தயாரிப்பாளர்கள் சங்கம், பிளேயர் பொய் சொல்லியிருப்பதாக நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் நம்முடைய ஞானப் பண்டிதர்கள் அது நடக்காது என்று விளக்கம் கூறினர். ஏனென்றால், அத்தகைய கோரிக்கையை ஒரு சிலர் தான் நாடாளுமன்றத்தில் ஆதரிப்பார்களாம். அவர்கள் கூறுகிறார்கள் ''மகாராணி பிரதமராக டோனி பிளேயரை நியமித்தார். அவர்களுக்கு அமைச்சர் பதவிகளை தந்திருப்பதன் மூலம் அவர் 100 க்கு மேற்பட்ட எம்.பி.க்களை தனது 'ஊதியம் பெறுவோர் வாக்கில்' வைத்திருக்கிறார். (இன்றைய கணக்குப்படி, 113 அமைச்சர்கள் இருக்கின்றனர்). அவரை பதவியிலிருந்து விரட்டவேண்டும் என்றால் மிச்சம் இருக்கும் எம்.பி.க்களின் மிகப் பெரும்பான்மை வீதத்தினர் டோனி பிளேயருக்கு எதிராக கிளர்ச்சி செய்வதுடன் நின்றுவிடாமல், டோரி கட்சியுடன் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும்''. "இப்படி பிரதமர் தலைமைக்கு போட்டியை உருவாக்க நிர்பந்திக்க வேண்டுமானால், எல்லா தொழிற்கட்சி எம்.பிக்களிலும் 20 வீதம் பேர் அல்லது 410 பேரில் 82 பேர் அல்லது அமைச்சர்கள் அல்லாத 297 பேரில் 28 வீதம் பேர் முதலில் மாற்று வேட்பாளரை ஆதரிப்பதற்கு உடன்பட வேண்டும்''. ''இதுதான் நன்றாகத் தெரிகிற நமது நாடாளுமன்ற நடைமுறை! தொழிற்கட்சி எம்.பிக்களில் நம்ப முடியாத அளவிற்கு மிகப்பெரும்பான்மையரான 3 ல் 1 பங்கிற்கு குறைந்தவர்களுக்கு எந்தவிதமான அரசியல் கொள்கையும் ஒரு துளிகூட இல்லையென்றால் அப்போது என்ன செய்யவேண்டும்? இதற்கு அவர்களிடம் பதில் இல்லை. ஏனென்றால் தொழிற்கட்சியிலிருந்தும், அக்கட்சியின் தொழிற்சங்க நிர்வாக குழுவிலிருந்தும், விலகிச் சென்று புதிய பாதையை வகுத்தாக வேண்டும். அந்த பாதையை அவர்கள் அடியோடு வெறுப்பவர்கள், தீவிரவாதிகள் தொழிற்கட்சியோடும், தொழிசங்கங்களோடும், தொழிற்சங்க அதிகாரத்துவம்போல் இணைந்துள்ளவர்கள் உண்மையில் அவர்களில் பலர் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஏறுவரிசைத் தட்டில் கீழ்நிலை நிர்வாகப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் மற்றும் அருவருக்கத்தக்க இடதுசாரி மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவு தந்துகொண்டிருப்பவர்கள் ஆவர். பிளேயர் ஆட்சியுடன் மோதிப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் தொழிலாள வர்க்கத்திடம் இல்லாமல் இல்லை. அவரது செல்வாக்கு என்று கூறப்படுபவை பெரும்பாலும், ஊடகங்களால் உருவாக்கப்பட்டவை. அவர் தனது சொந்த நாட்டிலேயே கவுரவம் இழந்தவர் என்று சித்தரிக்கப்படுகிறார். ஆனால் இன்றைய தினம் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் அடிப்படையில் முன்னேறிச் செல்வதற்கு வழி எதுவும் தெரியவில்லை. எனவேதான், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தையும், ஜனநாயக உரிமைகளையும் பறிக்கின்ற வகையில் கொடூரமான தாக்குதல்களை அரசாங்கம் தொடுக்கும்போது, அதை எதிர்த்து போரிடும் வல்லமை இல்லாத நிலையில் உள்ளனர். இதனை வெல்வதற்கு அதன் அரசியல் அடிப்படை என்ன என்பதை கவனமாக ஆராய்வது அவசியமாகும். இதில் மூன்று அத்தியவசிய அம்சங்களை நான் அடையாளம் காட்ட விரும்புகிறேன். முதலாவதாக, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கமானது, ஏகாதிபத்திய இராணுவவாதத்தைப் புதுப்பித்தலுக்கான பரந்த எதிர்ப்பின் மீது ஈராக் மீதான போருக்கு எதிரான பரந்த வெகுஜன இயக்கம் தன்னை கட்டாயம் தளப்படுத்தி இருக்க வேண்டும். இரண்டாவதாக, உள்நாட்டில் பெருவர்த்தகர்களின் கட்டற்ற ஆட்சிக்கு முன்முயற்சி செய்வதற்கான முயற்சிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும், தற்காத்து நிற்பதற்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை கட்டாயம் செய்யவேண்டும். அது வாஷிங்டனிலும், லண்டனிலும் ஈராக்கை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் அதன் சொந்த வழியில் சரிசமமான கொடூரமான தன்மையுடன் பின்பற்றப்பட்டன. மூன்றாவதாக, ஐரேப்பிய நாடுகள் முழுவதிலும் உருவாக்கவேண்டும். போர்வெறி கொண்ட புஷ் மற்றும் பிளேயர் ஆகியோருக்கு மாற்றாக ஒரு மாற்றுத் திட்டத்தை ஒப்புக்காக செய்த பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற அத்தகைய அரசாங்கங்கள் உட்பட, ஐரோப்பிய குட்டி முதலாளித்துவத்திற்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக இயங்குகின்ற தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுதற்கு அது கட்டாயம் முயற்சிக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனது உறவு தொடர்பாக தீர்வுகாண முடியாத சிக்கலில் பிளேயர் ஆட்சி சிக்கிக்கொண்டிருக்கிறது. இதில் பிளேயர் ஆட்சியின் தோல்வி குறித்து நீண்ட விளக்கம் தருவதற்கு இது தக்க தருணம் அல்ல. ஆனால் சிலவற்றை சொல்லித்தான் ஆகவேண்டும். புதிய ஐரோப்பிய அரசியற் சட்டத்தில் சேர்க்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள தொழிலாளர் உரிமை சாசனத்தை பிளேயர் அரசாங்கம் தடுக்கும். ஏனென்றால் பிரிட்டனில் சமூகக் கொள்கைக்கு அச்சுறுத்தல் என்று டோரிக்கள், செய்தி ஊடகங்கள், ஆட்சியாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை போன்றவற்றை அது பாதுகாக்கிறது என்ற அதன் வலியுறுத்தலால் பிளேயர் அரசாங்கத்தின் அரசியல் குணாம்சம் மிகவும் அப்பட்டமாக அம்பலப்பட்டது. இப்படி ஐரோப்பாவில் சமூகக் கேள்விகளில் மிகத்தீவிரமான வலதுசாரி நிலைப்பாட்டை அரசாங்கம் மேற்கொண்டிருப்பது தற்செயலாக நடந்துவிட்ட சம்பவம் அல்ல. ஏனென்றால், புஷ் நிர்வாகத்தால் ஈராக் மீது மேற்கொள்ளப்பட்ட சூறையாடும் போருக்கு மிகத்தீவிரமாக முழு ஆதரவு காட்டியது பிரிட்டன். பிரிட்டனில் வரலாற்று அடிப்படையில் சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி நடத்திவந்தாலும், அது வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அரசியல் அடிப்படையில் கட்டுப்படுவதை மிகத் தீவிரமாக ஆதரித்துவரும் அஸ்னாரின் முன்னாள் பாசிச மக்கள் கட்சியுடன் இணைந்துகொண்டு நிற்கிறது. குடியரசுக்கட்சி பாணியில் பொருளாதார மற்றும் சமூக செயல் திட்டங்களை பிரிட்டன் உருவாக்கியுள்ளது. போருக்கு முந்தைய எந்த கன்சர்வேடிவ் ஆட்சியும் வெட்கித் தலை குனியும் அளவில் இது நடந்து கொண்டிருக்கிறது. வளைகுடாப் பகுதியில் இராணுவ வெற்றி கிடைத்ததால் துணிச்சலோடு ஊக்கமூட்டப்பட்டு மற்றொரு போரை துவக்குவதற்கு தயாராகிவிட்டார்கள்-- இந்த முறை ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவாகும். மத்திய கிழக்கில் தற்போது நடைபெற்று வருகின்ற சம்பவங்கள், ஐரோப்பாவிலேயே பெரிய வல்லரசுகள் மற்றும் வர்க்கங்களுக்கிடையே நிலவுகின்ற உறவுகளில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கின்றது. மீண்டும் புத்தெழுச்சி கொண்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றிய யதார்த்தத்திற்கு ஐரோப்பிய அரசுகள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆயுத வலிமை மூலம் உலகம் முழுவதையும் அவர்களின் இடத்திலேயே உறுதியாக தனது மேலாதிக்கத்தில் கொண்டுவர உத்தேசித்திருக்கின்றது. பொதுவாக பாக்தாத்தில் அதன் குண்டு மழைபொழிவின் அடிப்படை நோக்கம் தூண்டிவிட்டவாறு, வாஷிங்டனைக் கண்டு அதிர்ச்சியுற்று நிலைகுலைந்து நின்றதன் மூலம் அவர்களது பதில் வினை பண்பிடப்பட்டிருக்கின்றது. ஐரோப்பிய நாடுகள் ஓரளவிற்கு அமெரிக்காவிற்கு பதிலளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்தன. இராணுவ அதிரடிப்படையை உருவாக்கி அதில் 60,000 இராணுவத்தினரை இடம் பெறச் செய்தன. பிரான்ஸ் தலைமையில் ஏப்ரல் மாதம் நேட்டோவிற்கு அப்பால் சுதந்திரமாக ஐரோப்பிய இராணுவ தலைமையகத்தை உருவாக்க பிரகடனம் செய்தன. இதற்கிடையில் பொதுவான அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள உத்தேச அரசியல் நிர்ணய சட்டத்தில் பொதுவான வெளியுறவுக் கொள்கை மற்றும் ஆழமான அரசியல் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால், அவர்களின் உண்மையான சங்கடங்கள் என்பன பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் அனைத்தும் போருக்கு பிந்தைய ஈராக் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டதால் உருவானவை. இப்படி மிகவும் தலைதாழ்த்தும் முறையில் ஐரோப்பிய நாடுகள் அடிபணிந்தது எந்த அளவிற்கு அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவானது பலம்பெற்றிருக்கிறது மற்றும் ஐரோப்பாவுக்கான நிகழ்ச்சி நிரலை கட்டளையிடக் கூடியதாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. புஷ் நிர்வாகம் பதவிக்கு வந்தபின்னர் ஏற்பட்டுள்ள ஆழமான அரசியல் மாற்றங்களை தெளிவாக எடுத்துக்காட்டுகின்ற வகையில் ஈராக்கின் இன்றைய நிலவரம் அமைந்திருக்கின்றது. அமெரிக்க தன்னிச்சைவாதத்திற்கு ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் இடப்பெயர்ச்சியின் விளைவாக, நீண்டகாலமாக உருவாக்கப்பட்டுவரும் ஐரோப்பிய அரசியல் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு மிக ஆழமான சிக்கல் நிறைந்ததாக ஆகி இருக்கிறது. இதற்கு முந்தைய கிளிண்டன் உட்பட அமெரிக்க ஆட்சியாளர்கள் கருத்துக்கு எதிராக தற்போது புஷ் நிர்வாகம் செயல்திட்டத்தை ஆதரிக்கவில்லை. அதற்கு மாறாக அமெரிக்கா, ஒரு ஐரோப்பிய அரசாகவே தன்னை கருதிக்கொண்டு ஒற்றுமையை நோக்கி நகர்வதை செயலூக்கத்துடன் எதிர்ப்பதன் மூலம் இக் கண்டத்தின் மீது கட்டுப்பாட்டை உத்திரவாதப்படுத்துவதற்கு போராடுகிறது. இது எப்படி செய்யப்பட்டு வருகிறது? முதலாவதாக, நாம் சிறப்பாக கவனிக்கவேண்டியது பிரிட்டனும் பிளேயர் அராசங்கமும், அமெரிக்காவின் பதிலாளாக ஐரோப்பாவில் செயல்பட்டு வருவதைத்தான். பிரிட்டன் பகிரங்கமாக ஒருங்கிணைப்பை எதிர்க்கவில்லை. ஆனால், அமெரிக்காவிற்கு ஆதரவாகவும் சந்தை பொருளாதார செயல்திட்டங்களுக்கு ஆதரவாகவும், செயல்பட்டு வருவதுதான் தனது பண்பு என வலியுறுத்துகின்றது. தேசிய இறையாண்மை பற்றி பிரிட்டன் பேசிக் கொண்டிருக்கிறது. தீயவற்றை நல்லதாகக் காட்டும் அந்த வார்த்தை ஜாலத்திற்குள் மிகவும் திட்டவட்டமான ஓர் அடிப்படை அமைந்திருக்கின்றது. ஐரோப்பிய இராணுவம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் ஆதரிக்கிறது. ஆனால், அந்த இராணுவம் ''நேட்டோ'' கட்டுக்கோப்பிற்குள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது. மே 19 அன்று பிரிட்டனின் வெளியுறவு செயலர் ஜாக் ஸ்ட்ரோ ஐரோப்பிய சீர்திருத்தத்திற்கான மையத்தில் உரையாற்றும்போது ஒரு கருத்தை தெரிவித்தார். ''அசாதாரணமான அமெரிக்காவின் இராணுவ வலிமைக்கு இணையாக இராணுவத்தை உருவாக்கவேண்டும் என்ற நோக்கம் நமக்கு இருக்கக்கூடாது'' என்று அவர் குறிப்பிட்டார். பிரிட்டன் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆதரிக்கிறது. ஆனால் பொதுவான சமூகக் கொள்கையை ஆதரிக்கவில்லை. மாறாக நிதி அமைச்சர் கார்டன் பிரெளன் ஐரோப்பிய நாடுகளில் உரையாற்றும்போது பொருளாதார நீக்குப்போக்குகள் அவசியம் என்று கூறினார். அமெரிக்க பொருளாதாரத்தின் மேம்பட்ட தன்மையை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ''ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் எந்த அளவிற்கு நெருக்கமாக இணைந்து பணியாற்றுகின்றனவோ, அந்த அளவிற்கு பிரிட்டன், ஐரோப்பா மற்றும் உலகிற்கு நன்மை கிடைக்கும்'' என்று நிதியமைச்சர் மே 20 ந்தேதி பிரிட்டன் தொழில் துறை சம்மேளனத்தின் கூட்டத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டார். பிளேயர் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொதுவான வெளியுறவு தலைமை நிர்வாகியை நியமிக்க உடன்பட்டிருக்கின்றது. நியமன ஜனாதிபதி முறையை விரும்புகிறது. பிரான்ஸ் வெளிப்படையாக வலியுறுத்திக் கூறிவருகின்ற கொள்கைகளுக்கு விரோதமாக பொதுவான வெளியுறவுக் கொள்கையை திணிக்க பிரிட்டன் விரும்புகிறது. பேர்லினில் இங்கிலாந்து ஜேர்மனி உறவுகள் தொடர்பான Königswinter conference ல் மே 16 ந் தேதி பீட்டர் மென்டல்சன் எம்.பி. உரையாற்றினார். அப்போது அவர் கோலிசவாதிகள் (Gaullist) கூறிய "வல்லரசுகளுக்கு இடையே சமச்சீர் நிலை" என்பதைவிடவும் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதை வலியுறுத்தினார். "மனத் திருப்தியில்லாத இரட்டைப் போக்குடன் நாடுகள் நடந்துகொள்ளுமானால் அமெரிக்காவை ஆதரிக்கிறார்களா? அல்லது அமெரிக்காவிற்கு எதிரான முகாமில் இருக்கிறார்களா என்ற ஆபத்து உருவாகக்கூடும்'' என்றும் அவர் குறிப்பிட்டார். ''ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால பாத்திரம் பற்றியது, பன்முக நோக்கம் கொண்டதாகயிருக்க வேண்டுமா? அல்லது பல நாடுகள் இணைந்த அமைப்பாக செயல்பட வேண்டுமா என்பது பற்றிய ஆங்கிலோ-பிரெஞ்சு விவாதத்தின் பின்னே பெரும்பாலும் நிற்கும். உண்மையான பிரச்சனை வலிமை அதிகரித்துள்ள அந்த வல்லரசுடன் இயல்புணர்வாய் என்ன எதிர்பார்க்கிறோம். அமெரிக்காவை கட்டுப்படுத்துவதா? ஆதரிப்பதா?" என்றார் அவர். அது முறையே, அடிப்படையிலேயே அமெரிக்கா நலன் பயக்கும் நாடா? அல்லது ஆபத்தான வல்லரசா என்று ஒருவர் நம்புகிறாரா என்பதைப் பொறுத்தது. "இதில் பிரிட்டனின் கருத்து தெளிவாக உள்ளது. அதிக அளவில் ஒன்றுபட்ட இணைந்த ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச கண்ணோட்டம் அதிகம் உள்ள அமெரிக்காவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான். எதிர்காலத்தில், அமெரிக்கா விரும்புவதை செயல்படுத்தியாக வேண்டும் என்ற உறுதிப்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கு, முன்கூட்டி அறியக்கூடிய எதிர்காலத்தில், ஐரோப்பா போதுமான வல்லமையை உருவாக்குவதற்கான முன்னேற்றத்தைக் கூட நாம் பார்க்கவில்லை`` என்று பீட்டர் மென்டல்சன் குறிப்பிட்டார். அதே மாநாட்டில், ஐரோப்பிய அமைச்சர் டேனிஸ் மக்ஷான் (Dennis MacShane) உரையாற்றும்போது ''நாம் எப்போதுமே அமெரிக்காவிற்கு எதிராக இருக்க முடியாது. நாம் பன்முக உலகை உருவாக்க முயலக்கூடாது'' என்று குறிப்பிட்டார். இதில் இருக்கின்ற செய்தி தெளிவானது எந்தவிதமான கேள்வியும் இல்லாமல் ஐரோப்பா, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். வாஷிங்டனால் வகுத்தளிக்கப்படும் எல்லைக்குள்ளேயே அது தனது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். பிரிட்டனுடன் கூட, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வலதுசாரிகளது தீவிர ஒத்துழைப்பை நம்பியிருக்கிறது. ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் இத்தகைய வலதுசாரிகள் ஆதரவை இரு நாடுகளும் நம்பியுள்ளன. ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி ஆகிய நாடுகள் பிளேயரின் கருத்திற்கு ஏற்ற கொள்கைகளை வலியுறுத்தி வருகின்ற நாடுகளாக இருக்கின்றன. ஏனென்றால், அமெரிக்க பொருளாதார முன்மாதிரி ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும்போது காலனி ஆதிக்க பாணியில் பொருளாதார சுரண்டல்கள் நடக்கும் காலங்களில், வாஷிங்டன் நன்றி அறிதலோடு கொள்ளைப் பொருளில் ஏதாவது பங்கு கொடுக்கும் என்று நம்புவதை உத்திரவாதப்படுத்த இதுதான் ஒரே வழி என அவர்கள் பார்க்கின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு முயன்று வருகின்றன. அந்த நாடுகள் அமெரிக்காவின் அரசியலை செயற்படுத்தும் நிலப்பிரபுத்துவ அரசுகள் போல் செயல்பட்டு வருகின்றன. இதில், போலந்திற்கு அமெரிக்கா மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. ஏனெனில் போலந்து மிகப்பெரிய நாடு. எற்கனவே 2000 ம் துருப்புக்களைத்தான் தந்திருக்கின்ற போதிலும், அதற்கு வெகுமதியாக வடக்கு ஈராக் பகுதியில் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு தலைமையேற்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. புதிய ஐரோப்பாவிற்கு எதிராக பழைய ஐரோப்பா என்று டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறியிருப்பதன் முழுப் பொருள் இதுதான். புதிய ஐரோப்பா என்று அழைக்கப்படும் பகுதிகளில் அமெரிக்காவிற்கு வலுவான ஆதிக்க ஸ்தலம் அமைந்திருக்கின்றது. அதிலிருந்து தனது ஐரோப்பிய போட்டி நாடுகளை அமெரிக்கா அச்சுறுத்தக்கூடும். அது மட்டுமல்லாமல் சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் எல்லைப் பகுதிகளில், அத்தியாவசிய எண்ணெய், எரிவாயு மற்றும் கனிம வளங்கள் உள்பட அவற்றின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா நிர்பந்தம் கொடுக்கும் என்று அவர் நம்புகிறார். இதுவரை ஐரோப்பிய ஒருங்கிணைப்பு அச்சு நாடாக பிரான்சும், ஜேர்மனியும் விளங்கி வந்தன. அமெரிக்க செல்வாக்குடைய இந்த தளங்கள் அனைத்தும் அதைக் கீழறுப்பதற்காக திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஈராக் தொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னர், அமெரிக்க அரசு செலயலர் கொலின் பவல் ஜேர்மனி உட்பட பல உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது ஜேர்மனியில் உரையாற்றிய பவல் பிரான்சின் நேரம் முடிந்துவிட்டது என்றும் ஜேர்மனி இப்போது கடன் வாங்கப்பட்டுள்ள காலக்கெடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற பாணியில் எச்சரிக்கை விடுத்தார். ஜேர்மனியின் CDU தலைவர் ஆஞ்சலா மெர்க்கல் (Angela Merkel) உடன் பவல், சுரோடருக்கு இணையான கால அளவிற்கு பேச்சுவார்த்தை நடத்தினார். அதேவேளை வெள்ளை மாளிகையில் ஹெசி பகுதி கிறிஸ்தவ ஜனநாயக மாகாண கவர்னர் ரோலன் கோச்சை (Roland Koch) ஜனாதிபதி புஷ் சந்தித்து பேசினார். வேண்டுமென்றே செய்த இந்த மதிப்புக்குலைவு வாஷிங்டனை திருப்திப்படுத்த மூடிய முயற்சிகளுக்கு வலியுறுத்துவோருக்கும் வாஷிங்டனுக்கு சில எரிப்புக்களுக்காக அழைப்பு விடுப்போருக்கும் இடையில் பத்திரிகை விவாதத்தைத் தூண்டியது. Suddeutsche Zeitung பத்திரிகை அமெரிக்காவின் பலத்தை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்காவின் ஒத்த மனப்பான்மையுள்ள ஏனைய சக்திகளுடன் இணைவது பற்றிய "கோலிச தீர்வுக்கு" எதிராக எச்சரித்தது. அதேவேளை Handelsblatt எனும் வர்த்தகப் பத்திரிகை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நலன்கள் இப்பொழுது இரண்டு பகுதியாக மிகவும் விலகி நிற்கிறது என்று விவாதித்து, ஈராக் போருக்கு முந்தைய நிலவரத்திற்கு "கடிகாரத்தை பின்னோக்கித் திருப்புதல்" பற்றிய கனவுகளை நிராகரிக்கிறது. "ஒருங்கிசைவாய் இருப்பதற்கான ஆவலில் இல்லாதவர்கள், ஜேர்மன் வெளியுறவு அரசியல் அமெரிக்க இலக்குகளுக்கு வெறுமனே ஒத்திருக்கிறது என்று கோருபவர்கள் தவறானவர்கள்" என அது கூறியது.Die Tageszeitung என்னும் பத்திரிகை இன்னும் தெளிவாக எச்சரிக்கின்றது. "ஈராக் போருக்கு முந்தைய காலத்தில் வாஷிங்டன் ஐரோப்பாவை 'பழைய' மற்றும் 'புதிய' பகுதிகள் என்று வெற்றிகரமாக பிளவுபடுத்துவதற்கு முயற்சித்ததன் பின்னர், இப்போது பிரெஞ்சு-ஜேர்மன் உறவுகளைத் தாக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது" பாரிஸ் மீதான அண்மைய தாக்குதலை ஜேர்மனி மற்றும் ஐரோப்பா ஒட்டுமொத்தத்தின் மீதான தாக்குதல்களாக வரையறை செய்த, "ஜேர்மன் அரசாங்கம் அவற்றைப் பலமான முறையில் நிராகரிக்க நன்கு செய்யும்" என இப்பத்திரிகை வலியுறுத்தி கேட்டுக் கொண்டது.சுரோடர் யாருடைய ஆலோசனையை எடுத்துக் கொண்டார். சிராக் மற்றும் புட்டின் ஆகியோர் அவருடன் சேர்ந்து புஷ் நிர்வாகத்தின் முன் தங்களைத் தாழ்த்திக் கொள்கின்றனர் என்பதை மதிப்பிடுவதற்கு முயன்று பெறவேண்டியது இல்லை. ஒன்றும்கூட வெள்ளை மாளிகையை திருப்திப்படுத்தாது. அது ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தால் செய்யப்படும் ஒவ்வொரு பின்வாங்கலும் மேலதிகத் தாக்குதலுக்கான ஒரு சம்பவம் என்று பார்க்கிறது. இது மிக அசாதாரணமான கருத்து. புஷ்சின் முன்னணி ஆலோசகர் மிகச் சர்வ சாதாரணமாக ஈராக்கைப் போன்று ஜேர்மனியிலும் ஆட்சி மாற்றம் தேவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய கருத்திற்கு மிகவும் மந்த கதியில்கூட கண்டனம் தெரிவிக்கப்படவில்லை. இந்த சுருக்கமான கண்ணோட்டம் ஐரோப்பிய நாடுகள் தனித் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அமெரிக்காவின் இராணுவமயத்திற்கு இணையான எதிரிடையானதாக பார்க்கப்பட முடியாது எனும் எங்களது வலியுறுத்தலை உறுதி செய்கிறது. முதலாவதாக, ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே இரண்டாம் நிலை ஏகாதிபத்திய அரசுகள். அவை தங்களின் சக்திமிக்க போட்டியாளரை சவால் விடுகின்ற வலிமை பெற்றவையல்ல. உலக மக்களையும், பொருளாதார வளங்களையும் சுரண்டுவதிலிருந்து கிடைக்கும் கொள்ளைப் பொருளில் ஒரு பங்கை உத்திரவாதம் செய்வதே அவர்களது சொந்த நிகழ்ச்சி நிரலில் உள்ளது. இரண்டாவதாக, குடியரசுக் கட்சிக்காரர்களின் வலதுசாரி சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை ஐரோப்பிய நாடுகள் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் மற்றும் அவற்றை இணைத்து செயல்படுத்தவேண்டும் என அவை பார்க்கின்றன. ஐரோப்பிய நாடுகள் எதுவும் புஷ் நிர்வாகத்தின் போர் வெறிக்கு எதிராக பொதுமக்களைத் திரட்ட முடியாது. ஏனென்றால் அது தங்களது சொந்த இராணுவ குறிக்கோள்களுக்கும் அவர்களின் சொந்த பிளவுபடுத்தும் சமூகக் கொள்கைகளுக்கும் எதிர்ப்புக்களைத் தூண்டி விடும். ஐரோப்பிய தொழிலாள வர்க்கம்தான் போருக்கும், ஏகாதிபத்திய பிற்போக்குத் தனத்திற்கும் எதிராக எல்லா முனைகளிலும் அணிதிரளவேண்டும். வாஷிங்டன், லண்டன், பாரிஸ் மற்றும் பேர்லின் ஆகிய அனைத்துக்கும் எதிராக உறுதியான அரசியல் போராட்டத்தை ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் மேற்கொள்ளவேண்டும். ஈராக்கில் காட்டிய கொடூரத்தினை அடிப்படையாகக் கொண்ட புதிய அமெரிக்க நூற்றாண்டு என்ற பயங்கரக் கனவுக்கு எதிராக, ஒன்றிணைந்த முதலாளித்துவ ஐரோப்பா பற்றிய தோல்வியுற்ற முன்னோக்கிற்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற முன்னோக்கை கட்டாயம் முன்னெடுக்க வேண்டும். சமூக முன்னேற்றம், சமத்துவம், ஜனநாயகம், மற்றும் பண்பாடு என்ற உயர்ந்த அரசியல் குறிக்கோள்களை தற்காத்து நிற்கும் வகையில் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டாக வேண்டும். அது ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை, உலகம் முழுவதிலும் இராணுவவாதத்தைப் புதுப்பித்தலை மட்டுமல்லாமல் காலனித்துவ பாணியில் வென்று கைப்பற்றலை எதிர்கொள்கின்ற, உலக வளங்களை கொள்ளையடிக்கும் விதமாக பெரும் கார்ப்பொரேஷன்களால் அவர்கள் மீது திணிக்கப்படுகின்ற அட்டூழியத்தையும் கூட எதிர்கொள்கின்ற, மில்லியன்கணக்கான தொழிலாளர்களுக்கு அரசியல் தலைமையேற்கின்ற வலிமையைக் கொடுக்கும். இப்படிப்பட்ட ஒரு இயக்கம்தான் ஐரோப்பிய தொழிலாளர்களை புஷ் நிர்வாகத்திற்கும் அது செய்கின்ற அனைத்திற்கும் எதிரான பொதுவான நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு நட்புக் கரத்தை நீட்டச்செய்ய முடியும். இந்த வழியில் முதலில் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சோசலிச பாரம்பரியங்கள், அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் மறுமலர்ச்சி பெறுவதற்கு ஊக்குவிப்பாக அமையும். இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தின் மூலம் உலக அளவில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே தீவிரமாய் மாற்றப்பட்ட அதிகார சமநிலை உருவாகும். பிரிட்டனிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனைக்கு வந்திருக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தால் வென்று கைப்பற்றப்படும், சூறையாடும் போர்களின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்க வெளிப்பாடுதான் ஈராக் ஆகும். ஐரோப்பாவில் ஏகாதிபத்திய நடைமுறையின் முழுமையான முடை நாற்றத்தை அமெரிக்க மேலாதிக்கம் வெளிப்படுத்துகிறது. ஆனால், வர்க்கப் போராட்டம் உக்கிரமடையும் போது, பிரிட்டன், ஐரோப்பா மற்றும் சர்வதேச தொழிலாளர் இயக்கம் சோசலிச சர்வதேசியம் என்ற புதிய அச்சில், மனிதகுலத்தின் மேம்பாட்டிற்கான வரலாற்று அபிவிருத்தியின் மிகவும் மாறுபட்ட பாதையின் சாத்தியத்தைத் திறந்து வைக்கும். |