World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Why Blair has delayed again on the euro

பிரிட்டன்: பிளேயர் அரசாங்கம் மீண்டும் யூரோ பற்றியதில் காலம் தாழ்த்துவது ஏன்?

By Julie Hyland and Chris Marsden
27 June 2003

Back to screen version

பிளேயர் அரசாங்கம் பவுண்ட் (Pound) ஐ கைவிட்டு ஐரோப்பிய ஒன்றிய நாணயமான யூரோவை ஏற்கும் முடிவை மீண்டும் ஒத்திப்போட்டுள்ளது.

ஜூன் 9-அன்று, சான்ஸ்செலர் கோர்டன் பிரெளன் (Gordon Brown), காலம் இன்னமும் அந்த முயற்சியில் ஈடுபடக் கனியவில்லை என்று பாராளுமன்றத்தில் கூறினார். இந்த ஆண்டு பிற்பகுயில் இந்தப் பிரச்சனை மீதாக மக்கள் வாக்கெடுப்பிற்கு விடுவது பற்றிய விதிகளை விவரிக்கும் சட்டவரைவு ஒன்று தயாரிக்கப்படும், ஆனால் அதன் மீதான வாக்கெடுப்பு அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன் எடுக்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதுதான்.

அரசாங்கத்தின் அறிவிப்பு விந்தைதான்; ஏனெனில் 1997-ம் ஆண்டு தேர்தலில் இது பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணம், ஆளும் வட்டத்தில், ஐரோப்பிய ஒருங்கிணைப்பு பற்றிய பிரச்சினயில் ஆழமாய் பிளவு கொண்டிருந்த கன்சர்வேடிவ் கட்சிக்கு ஒரு மாற்றை தொழிற்கட்சி வழங்கும், பிரிட்டனை ''ஐரோப்பாவின் இதயத்தில்'' வைப்பதை வெற்றிகரமாக நிரூபிக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக ஆகும். உலகத்தின் மிகப்பெரிய தனி சந்தை வளர்ந்து கொண்டுவரும் முறையில் நன்மைகளை அடையும் பொருட்டு பெரு வணிகங்களில் மேலாதிக்கம் செலுத்தும் பிரிவுகள் பண அளவிலான ஒன்றியத்திற்கு ஆதரவளித்திருந்தன.

தொழிற் கட்சியின் திறமைகள் மீது அவ்வாறு வைக்கப்பட்ட நம்பிக்கைகள் தவறான இடத்தில் வைக்கப்பட்டவை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆறாண்டு காலம் பதவியில் இருக்கும்போது பணமுறை ஒற்றுமைக்கு கணிசமான முன்னேற்றத்திற்கான நடவடிக்கை எதையும் காட்டவில்லை. மாறாக பிரதம மந்திரி டோனி பிளேயரும் அவருடைய சான்ஸ்செலர் கோர்டன் பிரெளனும், பிரிட்டன் யூரோவை ஏற்பதற்கான காலம் பற்றிய முடிவு, அரசாங்கக்கட்டுப்பாட்டுக்கு வெளியிலுள்ள ஐந்து பொருளாதார தேர்வுகளுக்குட்பட்டவை, அவை அடிப்படையில் வட்டிவிகித இணைப்பு மற்றும் வீடுகட்டும் சந்தையிலிருந்தும் வேலைகளிலும் லண்டன் மாநகரத்தையும் அது எப்படி பாதிக்கும் என்பது வரையிலானதைக் கருத்திற்கொண்டு அமையும் எனத் தெரிவித்துவிட்டனர்.

பிரெளனின் கூற்றின்படி, இவற்றில் ஒன்றே ஒன்றுதான் ஆராயப்பட்டுள்ளது. -லண்டன் மாநகர நிதியமைப்பின் மீது உறுப்பினராவதின் தாக்கம்-- அதாவது தற்பொழுது எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்பது.

யூரோவை உறுதியாக ஏற்பதற்கான அரசாங்கத்தின் அரசியல் தோல்விக்கு ஒரு தொகுதியான பொருளாதார அளவுகோலைக் குறிப்பதன் மூலம் சப்பைக் கட்டு கட்டும் அப்படிப்பட்ட முயற்சிகள் ஒரு மோசடியாகும்.

பிரெளன் கூறும் திட்டமான அளவு கோலை ஏற்றாலும் அவை பொருளாதார பரிசீலனைகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும்- அரசாங்கம் ஏன் இது காறும் பிரிட்டிஷ், ஐரோப்பிய பொருளாதாரங்களிடையே கூடுதலான இணைப்பிற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் கொள்கைகளை வகுத்து செயல்படவில்லை என்ற கேள்விக்கு விடைகிடைக்காமல் போகிறது. ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு புறநிலை அடிப்படை ஒன்று உள்ளது உண்மையே, அது இந்த அளவிற்கு சென்றுள்ளது என்றால், அரசாங்கங்கள் குறிப்பாக பிரான்சும், ஜேர்மனியும் அந்த இலக்கை அரசியல் வழிவகைகளில் கையாண்டு வெற்றிபெற முயற்சித்தன. தொழிற் கட்சி ஏன் அத்தகைய அரசியல் உறுதிப்பாடு பற்றிய அக்கறையைக்காட்டவில்லை என்பதற்கு பிளேயர், பிரெளனுடைய அறிக்கைகளில் விளக்கம் இல்லை.

இந்த இடத்தில், பொருளாதார ஆய்வாளர்களின் குழுக்கள் இது தொடர்பாக பல மாதங்கள் உழைத்து, பிரிட்டிஷ் உறுப்பு நாடானால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் விளைவுகள் பற்றி 18-புத்தகங்களாக 1738- பக்கங்களுக்கு தொகுத்துக் கொடுத்துள்ளனர். ஆயினும் பிரெளனின் பாராளுமன்ற உரைக்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்புதான் இந்த ஹெர்குலிய (பிரமாண்டமான) உழைப்பின் நற்பயன்கள் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டன; பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஐந்து அளவுக்கோல்களைக் கொண்டு தங்கள் நிலையை எடுத்துக்கொண்டுள்ளனர் என்பதை கடுமையாய் சுட்டிக் காட்டுகின்றது. அரசாங்கத்தின் முக்கிய அக்கறையே இதைப்பற்றிய விரிவான விவாதம் தடுக்கப்பட வேண்டும் என்பதாகும், அது தன்னுடைய குறையான அரசியல் செயல்பாடுகள் தமது அணியிலேயே வெளிப்படுத்திவிடுமோ என்ற அச்சமேயாகும்.

ஐந்து பொருளாதார சோதனைகளும் முற்றிலும் ஸ்டேர்லிங்கின் நுழைவு யூரோ பகுதியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றியவையாகும். யூரோவை ஏற்காததினால் ஏற்படும் செலவின இழப்புக்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு போகின்ற போதிலும், அதுபற்றி அவை கருத்தில் கொள்ளவில்லை.

ஐரோப்பிய சந்தைகளை அடைய முயற்சிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்காக பிரிட்டனை குறைந்த மலிவான கூலி உழைப்பு உள்ள பகுதியாக வைத்திருக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் இறுதியில் ஒற்றை நாணய முறையில் ஸ்டேர்லிங் சேர்ந்துவிடும் சாத்தியத்தை திறந்து வைத்திருக்கும்படி நிர்பந்திக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக அமெரிக்க, ஜப்பானிய நிறுவனங்கள் ஐரோப்பிய சந்தையை அணுகுவதற்கும், குறைந்த ஊதியத்திற்கு நிறைந்த படிப்பு கொண்ட வேலை செய்யும் திறனைக்கொண்டவர்கள் மிகுந்திருக்கும் அளவில், வெளிநாட்டு முதலீட்டிற்கு சாதகமான மேடையாக பிரிட்டன் மாறிவிட்டது. இந்த சாதக நிலையானது, மிகையாக மதிப்பிடப்பட்டுள்ள பவுண்டினாலும் புதிய இன்னும் கூடுதலான சுரண்டல் பகுதிக்கு வகைசெய்யும், பல பழைய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதால் தவிர்க்கமுடியாத அளவில் ஏற்படும் சவாலினாலும் விரைவில் விழுங்கிவிடப்பட இருக்கிறது.

Unilever ன் தலைவரான நியல் பிட்ஸ்கெரால்டு (Niall Fitzgerald), பல வணிக அமைப்புக்கள் "தாங்கள் தவறாக வழிகாட்டப்பட்டுவிட்டோமோ என்று ஏற்கனவே வியப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள். புதிதாக முதலீடு செய்ய விழைபவர்கள் இப்பொழுது தங்கள் கவனத்தை யூரோ பகுதியிலும் அதனை அடையும் பாதையுள்ள நாடுகளிலும் கவனம் செலுத்தத் தலைப்பட்டுவிட்டனர்'' என குறை கூறியுள்ளார்.

''ஒவ்வொரு நாளும் யூரோ பகுதிக்கு வெளியே என்று சொன்னால் வேலை ஒழிப்புக்கள், முதலீட்டு இழப்புக்கள், செல்வாக்கு இழப்பு என்பதுதான் உண்மை. பிரிட்டிஷ் வணிகம் அதன் பெரும்பாலான அயல்நாட்டு வர்த்தகத்தை யூரோ பிராந்தியத்தில் செய்யும் நிலையில், நாளாந்தம் முக்கிய சந்தைகளில் நாணய மதிப்புக்கு ஆபத்து நேர்வின் யதார்த்தத்தை எதிர்கொள்ளும் வகையில், பொறுமையை இழந்துள்ளது.''

இந்த வியப்பூட்டும் அளவை விடக்கூடுதலாகவே பல நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பியக் குழுவிலிருந்து திரட்டப்பட்ட சமீபத்திய புள்ளி விவரங்கள், அயல்நாட்டு முதலீட்டில் இங்கிலாந்து முதலிடம் கொண்டாலும்கூட ஐரோப்பாவிற்கு வெளியிலிருந்து அதற்கு வரும் முதலீட்டு அளவு, யூரோ ஏற்படுத்தப்படும் முன், 1998-ல் இருந்த 48 சதவீதத்தைவிடவும் 2001-ல் 25 சதவிகிதமும் குறைந்துவிட்டது. Matsushita போன்ற நிறுவனங்கள் இங்கிலாந்தில் பணியாளர்களை உதறிவிட்டு அவ்வேலைகளை செக் குடியரசுக்கு மாற்றிவிட்டன. Ford UK-ன் தலைவரான ரோஜர் புட்னம், ''யூரோவை ஏற்பதில் எந்தத் தேவையற்ற தாமதத்தைக் காட்டினாலும் அது பிரிட்டனின் உற்பத்தியை பாதிக்கும் மற்றும் போட்டியுள்ள நில அமைப்பையும் உறுதித்தன்மையை விரும்பும் பல நிறுவனங்களும் இப்படிப்பட்ட பாதிப்பிற்குள்ளாகும்'' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கமோ சான்ஸ்லரின் மதிப்பீட்டை ஆரவாரத்துடன் அளித்த அளவில் இத்தகைய அக்கறைகளை திசை திருப்ப முயற்சித்தது. அப்படியே சென்று கொண்டிருக்கவில்லை என்றும் வேக மாறுபாடு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர்கள் வாதிட்டனர். அது பெருமை பீற்றிக்கொள்ளும் அரசாங்கம் "முடிவெடுக்கத் தயாராகி வருகிறது'' என்றும் உறுப்பாண்மைக்கான ''நாட்டுப்பற்று'' வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறுகிறது. பிளேயரும், பிரெளனும் இணைந்த செய்தியாளர் மாநாடுகளில் தொடர்ச்சியாக பங்கு கொண்டு இப்பிரச்சனையில் தங்கள் இருவருக்குமிடையே ஒற்றுமை உண்டு என்பதை அடிக்கோடிடுவதோடு, பிரெளன் முதன்முதலாக யூரோவிற்கு ஆதரவு தரும் குழுவின் முன்பும் தோன்றினார்.

ஆனால் அவர்களுடைய கவர்ச்சியான தாக்குதல், அவர்களுடைய தயாரிப்பில், நுழைவது பற்றிய கால அட்டவணையோ அல்லது இறுதி வாக்கெடுப்பிற்கான நாட்குறித்தல் போன்ற முக்கிய மாறுதல் கட்டங்களுக்கு இலக்கு தேதிகளையோ இன்னும் காட்டப்படவில்லை என்ற உண்மையால் கீழறுக்கப்பட்டு விட்டது. பைனான்ஷியல் டைம்ஸ் தன்னுடைய ஏமாற்றத்தை மறைக்க முடியவில்லை, சான்ஸ்செலரின் அறிக்கையின்படி, ''அதிகாரத்திற்கு வந்த பின்னர் ஆறு ஆண்டுகள் ஆகியும் புதிய தொழிற் கட்சி தன்னுடைய பெரிய தேர்வில் தோற்றுவிட்டது" என்று குறிப்பிட்டது.

அரசாங்கத்தின் இந்தத் தொடர்ந்த தாமதம் எதையொட்டி ஏற்பட்டுள்ளது?

1992-ல் செப்டம்பரில் "கறுப்புப் புதன்கிழமை" என்று கூறப்பட்ட தினத்தில், யூரோவின் முன்னோடியான (European Exchange Rate Mechanism) ஐரோப்பிய நாணயமாற்று இயங்கு முறையிலிருந்து வெளியேறும் விதம் பவுண்ட் பெரிய அளவில் பொறிந்து போனபொழுது, Bank of England ன் இருப்புக்களை வற்றியபடி செய்தும் அப்போதைய கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு நோட்டீஸ் கொடுத்தும்தான் நிறுத்தப்பட்டது, மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்பது பற்றிய அச்சத்தை பகுதி அளவில் அது எதிரொலிக்கிறது.

தனது பங்கைப் பொறுத்தவரையில் பொருளாதார நிர்வாகம் அக்கறையுடன் கவனிக்கப்படுகிறது என்பதாலும் பிரிட்டிஷ் தொழிலாளர்களின் "நெகிழ்வு" தன்மையை அவர்களுடைய அரசாங்கம் சாதித்திருப்பதாலும் இந்தத் தடவை அவ்வாறு பேரழிவு நிலைக்கு பவுண்ட் மதிப்புக் குறைவு தோன்றாது என்று பிரெளன் வலியுறுத்தி இருக்கிறார். பிரிட்டிஷ் தொழிலாளரின் நெகிழ்வுத் தன்மை என்று அவர் குறிப்பிடுவது மேலை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது பிரிட்டிஷ் தொழிலாளர் உரிமைகள் குறைப்பும், குறைந்த ஊதிய விகிதமும் ஆகும்.

எப்பொழுது பிரிட்டன் ஐரோப்பாவுடன் சேரத்தயாராகும் என்பது கேள்வியல்ல, எப்பொழுது ஐரோப்பா பிரிட்டனுக்காகத் தயார் நிலையில் இருக்கும் என்பதுதான் கேள்வி என்று கூட அவர் மார்தட்டிக்கொண்டார்! சில ஐரோப்பிய நாடுகள் ''அடிப்படைப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை'' செயல்படுத்த மேற்கொண்டுள்ள தற்போதைய முயற்சிகளை --பிரான்சில் ஓய்வூதிய உரிமைகளைத் தகர்த்தது ஒரு பெரிய மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை தூண்டிவிட்டுள்ளது-- பாராட்டிய அளவில், யூரோ பகுதி UK- யின் வருகைக்கு இறுதியில் தகுதியுடையதென்று தீர்மானிக்கப்படுவதற்கு இன்னமும் அவை கூடுதலான அளவு செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இரண்டாவதாக டோரிக்களாலும், தொழிற் கட்சியில் இடதுசாரி எனக் கூறப்படும் பகுதியினராலும், தொழிற்சங்கங்களாலும், பரபரப்புச்செய்தி ஊடகத்தால் தீய நோக்குடன் வளர்த்துவிடப்படும் ஐரோப்பிய எதிர்ப்பு வெறியை சவால் செய்ய முடியாத நிலையில் ஒரு பொது வாக்கெடுப்பில் இப்பொழுது வெற்றிபெற முடியாது என்ற அப்பட்டமான அரசியல் கணக்கையும் அரசாங்கம் உணர்ந்திருக்கும். அப்படிப்பட்ட நினைப்பு தன்னுடைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு இருப்பதுபோல் தோற்றம் அளிக்க உதவும் நண்பர்களுக்கு எதிராக பிளேயரைக் காட்டும், அதிலும் குறிப்பாக ஷிuஸீ- வெளியீட்டாளரும், ழிமீஷ்s ஷீயீ tலீமீ கீஷீக்ஷீறீபீ- வெளியீட்டாளருமான மிகுந்த ஐரோப்பியப் பற்றைக்காட்டிய ரூபர்ட் முர்டோக்கிற்கு எதிராக நிறுத்தும், இவருடைய தொழிற் கட்சிக்கான ஆதரவே 1997- தேர்தல்களில் பிளேயர் வெற்றிக்கு முக்கிய காரணமாயிற்று.

மூன்றாவதாக, ஐரோப்பாவிற்கு எதிரான அணிநிற்றல் ஆளும் வட்டத்திற்குள் ஸ்டேர்லிங்கின் யூரோ பகுதி உறுப்பினராவதில் உள்ள தொடர்ந்த அரசியல் பிளவுகளை வெளிப்படுத்துகிறது என்பதையும் அரசாங்கம் அறியும்.

பிரிட்டிஷ் உற்பத்தித்துறையின் வணிகம் முக்கியமாக ஐரோப்பாவில் உள்ளது. ஆனால் பிரிட்டன் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலக அளவில் முதலீட்டாளராக இருப்பதுடன் அமெரிக்க உள்நாட்டுச் சந்தையில் மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது. முக்கியமான பொருளாதார நலன்களும் சந்தைகளும் ஐரோப்பாவைச் சாந்திராமல் உள்ளவர்களைப் பொறுத்தவரை, யூரோ உறுப்பினராதல் அக்கறையின்மை அல்லது ஒரேயடியான குரோதம் என்ற கண்ணோட்டமாகத்தான் கருதப்படும்.

ஆளும் வர்க்கத்தின் இந்த அரசியல் பிளவுகளுக்குள்தான் பிளேயர் அரசாங்கத்தின் அடிப்படைக் கஷ்டங்களை அறியமுடியும். பிளேயர் அரசியல் ஞானத்தின் தொகுப்பில் யூரோவைப் பொறுத்தவரையில் நாளடைவில் யூரோ ஏற்கப்படுவதற்கான கூடுதலான சாதகமான சூழ்நிலை இறுதியில் உருவாகிவிடும், அதில் அதன் தகுதிகள் எதிர்ப்பிற்குட்படாமற்போய்விடும் மற்றும் அதன் எதிர்ப்பாளர்கள் டோரி வலதுசாரிகள் ஒதுக்கப்பட்டுவிடுவர் என்ற கணிப்பாகக் காண்ப்பட்டு வருகிறது.

ஆனால் இதற்கு எதிரிடையான அபிவிருத்தியே நிகழ்ந்துவிட்டது. முதலாளித்துவ வர்க்கத்தினுள் உள்ள பிளவுகள் பெரிதும் ஆழமாகவும் மற்றும் மிகக் குரோதமானதாகவும் போய்விட்டது மட்டுமல்லாமல், ஐரோப்பிய எதிர்ப்பு வலதுசாரிகள் பலமடைந்து பிளேயரைப் பாதுகாப்புத்தேடும் நிலைக்கு கொண்டுசென்றுள்ளது.

ஈராக் மீதான போருக்குப்பின்னர் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே வளர்ந்துவிட்ட நெருக்கடியில்தான் மேலே கூறப்பட்ட வளர்ச்சியின் ஆதாரம் அடங்கியுள்ளது.

ஐரோப்பியப் போட்டியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தன்னுடைய கடும் அதிருப்தியைத் தெரிவிக்கும் போர் நிலைமைகளில்தான் யூரோவை ஏற்பதா, கூடாதா என்ற விவாதம் நடைபெற்றுவருகிறது. 1930-களின் ''உன்னுடைய அண்டை வீட்டுக்காரர்களை இரவலராக்கிவிடு'' என்ற கொள்கையை நினைவுபடுத்தும் வகையில் ஐரோப்பிய ஏற்றுமதிகளை விலை மூலம் தாக்கும் அணுகுமுறைக்கு புஷ் நிர்வாகம் ஆதரவு கொடுக்கும் அளவில், டொலரின் மதிப்பு யூரோவுக்கு எதிராக 2000- அக்டோபரில் அது கொண்டிருந்த உச்ச அளவைவிட தற்பொழுது 40 சதவீதம் குறைந்துள்ளது.

ஓரளவு நியாயப்படுத்தலுடன் யூரோ உறுப்பினர் அந்தஸ்தையும் அமெரிக்காவின் உற்ற நட்பு நாடு என்ற நிலையையும் இணைத்துச் செல்லமுடியும் என்று பல வருஷங்களாக அரசாங்கம் வலியுறுத்தி வந்துள்ளது. ஐரோப்பிய ஒருங்கிணைப்புத் திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு கொடுத்துவந்துள்ளதோடு மட்டுமல்லாமல், பிரிட்டன் ஐரோப்பாவில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி அச்சிற்கு ஈடுகொடுக்கும் தன்மையையும் அதன் உள்ளேயே இருக்கும் தனது மதிப்புள்ள கூட்டாளி என்பதையும் கருத்தில் கொண்டு அது யூரோவில் பங்கு கொள்வதையும் விருப்பத்துடன் கண்ணுற்றது.

ஆனால் சமீப காலத்தில், வணிகம், புதிய நாணய முறையான யூரோ தொடக்கம், இறுதியாக ஈராக் போருக்கு முன்பாக அரசியல் உலகில் தோன்றிய கசப்புக்கள் இவற்றையொட்டி அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் எல்லா முனைகளிலும் பூசல்கள் விளைந்துள்ளன.

புஷ் நிர்வாகம் ஆட்சிக்கு வந்தமை ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவுகளில் கடலளவு மாற்றத்தின் தொடக்கத்தைத் தொடக்கி வைத்துள்ளது என்பதை நிரூபித்து இருக்கிறது. அடிப்படையில் குற்றமிழைக்கும் தன்மையைக் கொண்டுள்ள, வலியத்தாக்கும் மற்றும் ஒருதலைப்பட்சமாய் முடிவெடுக்கும் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவு (கன்னை) இப்பொழுது அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கையை நிர்ணயிக்கிறது. உலக மேலாதிக்கத்தை நிறுவவேண்டும் மற்றும் அனைத்து இயற்கை வள ஆதாரங்களையும் சந்தைகளையும் ஐயத்திற்கிடமின்றித் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். அமெரிக்கா அதன் ஐரோப்பிய மற்றும் ஜப்பானியப் போட்டியாளர்களைவிட இராணுவ வலிமை பெற்றிருப்பதே அதனுடைய அடிப்படை ஆயுதமாகும்.

ஆனால் இந்த இராணுவ தாக்கும் திறன் மட்டும் போதாது. ஆயுதங்களிலும் இராணுவ மனித ஆற்றலிலும் சற்று தாழ்ந்தே ஐரோப்பா உள்ள போதிலும் அது கூட்டாக செயல்பட முடியும் என நிரூபிக்குமானால் அது அமெரிக்காவிற்குப் பிரதான பொருளாதார போட்டியாளராக விளங்கும். எனவே ஜேர்மனி பிரான்ஸ், ரஷ்யா, ஆகியவை வாஷிங்டனின் ஈராக் மீதான போரை தொடக்க தடைகளற்ற ஆதரவு கொடுக்காத்தை அடுத்து, புஷ் நிர்வாகம் ஐரோப்பிய ஒற்றுமைத்திட்டத்தை முறியடிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளின் உறுதித்தன்மையை வேண்டுமென்றே தகர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளது.

ஐரோப்பாவில் வளர்ந்துவரும் அமெரிக்க எதிர்ப்பு உணர்வுக்கு எதிராக காக்கவும் அமெரிக்காவிற்குள்ளேயே ஆபத்தான அதிக ஒருதலைப்பட்ச போக்கை கட்டுப்படுத்தவும் -- பிரிட்டன் அத்லாந்திக்கின் குறுக்காக ஒரு "பாலம்" போல விளங்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கும் பிளேயருக்கும் இது ஒரு பெரிய நெருக்கடி நிலையை உருவாக்கி இருக்கிறது.

இதைத்தான் உண்மையென பிளேயர் இன்னமும் கருதுகிறார். பிளேயரின் வலதுகரம் போன்றவரும் பழைய அரசாங்க அமைச்சருமான பீட்டர் மண்டெல்சன், பாக்தாத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தச் சமநிலைப்படுத்தும் முயற்சி ஏன் கூடுதலான முக்கியத்துவம் கொண்டது என்று Finacial Times, ஜூன் 8-இதழில் எழுதியுள்ளார்.

யூரோ பகுதிக்கு வெளியிலிருந்து செயல்படுவதன் மூலம், ஐரோப்பாவுக்குள் அதன் செல்வாக்கு ''கூடுதலான குறைவு'' க்கு ஆளாகும் நிலையை பிரிட்டன் காணும். இது ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலுள்ள உறவுகளின் நீண்டநாள் வளர்ச்சியைக் கவனிக்க மிக முக்கியமானதாகும் என்று தொடர்ந்து கூறும் அவர், பிரிட்டன் அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐரோப்பா கண்டத்தை வளர்ப்பது அமெரிக்காவிற்கு "ஒரு பங்காளியாக, போட்டியாளராக அல்ல" என்று அதன் விடயத்தை வலியுறுத்தி தெரிவிக்க முடியாமல் போய்விடும் என்பது மட்டுமல்லாமல், ஐரோப்பிய இராணுவ நடவடிக்கைகள் நேட்டோ அமைப்புக்கு உள்ளே உள்ளது என்ற ஐரோப்பிய பாசாங்குகளை உறுதிப்படுத்தும் முயற்சிகளை இடையூறூக்குள்ளாக்கி விடும்.

இத்தகைய கூற்றுக்கள் நடப்பிலுள்ள பன்னாட்டு உறவுகளின் உண்மையிலிருந்து எவ்வளவு தொலைவில் அரசாங்கம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. வாஷிங்டனைப் பொறுத்தவரையில் எந்த அணியில் ஒருநாடு வரத்தயாராக உள்ளது என்பதுதான் கேள்வியே ஒழிய, சமரசம் என்பதற்கே இடமில்லை. ஐரோப்பாவில் தனக்கெதிராக ஒப்பந்தங்கள் கொண்டுவரும் நாடுகளையும், தன் விருப்பத்தை மீறிச் செயலாற்றும் நாடுகளைத் தண்டிக்க வேண்டும் என்ற அமெரிக்க நிர்வாகத்தின் முக்கிய ஆலோசகர்களின் திட்டத்தை தெளிவாக்க ஏராளமான நிகழ்ச்சிகளை உதாரணம் காட்ட முடியும். அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்ட்டால் முக்கிய கூற்று கூறப்பட்டது, ஐரோப்பாவின் "பழைய" மற்று "புதிய" பிளவுகளை அவர் குறித்தார், அந்த வகையில் பிரான்சும், ஜேர்மனியும் முந்தைய பிரிவைச் சார்ந்தவை, அமெரிக்க ஆதரவு தரும் பிரிட்டன், ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவை பிந்தைய அணியைச் சார்ந்தவை என்று அறிவித்தார்.

அமெரிக்கா ஒரு ஐரோப்பிய சக்தியைப்போல் செயல்படுகிறது; தற்பொழுது ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு விரோதம் தீவிரமாகக் காட்டும் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த அபிவிருத்தியின் மீது பிளேயர் எப்படிப்பட்ட சுழல்களை வீசினாலும் இது உருவாக்கும் ஏகாதிபத்தியத்திற்கிடையிலான குரோதங்களை அவர் மறைத்துவிட முடியாது.

இன்னமும் அதிகாரபூர்வமான கொள்கையாக வரவில்லை என்றாலும், பிரிட்டிஷ் அரசாங்கம் யூரோ பகுதியில் நுழைவதை எதிர்ப்பதாகவும் அத்தகைய நடவடிக்கை நம்பிக்கை துரோகத்திற்கு ஒப்பானது ஆகும் என்று புஷ் நிர்வாகத்தின் சில பிரிவுகள் தெளிவாகக்கூறியுள்ளன. BBC online- க்கு எழுதுகையில் ''ஈராக்கிய போர் என்ற முப்படைக்கண்ணாடி மூலம்தான் அனைத்துச் செயல்களையும் அமெரிக்கா தற்பொழுது காண்கிறது'' என்று Steven Schifferes விளக்கியுள்ளார்.

''போருக்குப் பலமான ஆதரவு கொடுத்த நவீன கன்சர்வேடிவ்களையும் டோனி பிளேயரையும் பொறுத்தவரையில், ஒரு உயர்ந்த தேசிய நாட்டை தோற்றுவிக்கும் மற்றொரு திட்டத்திலிருந்து UK-விலகி நிற்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை''

''அமெரிக்காவிற்கும் பழைய ஐரோப்பாவிற்கும் இடையிலான பூசலின் ஒரு பகுதியே யூரோ விஷயம் என்ற கருத்து இவர்களிடம் உள்ளது என்று அவர் தொடர்ந்து கூறினார்.

இதேபோல், ''பரந்த அர்த்தத்தில், தங்களுடைய நாணயங்களை ஒங்கிணைப்பது, அமெரிக்காவிற்கு மாற்றாக அதிகார மையம் தோற்றுவிக்க முயலும் பிரான்ஸ்- ஜேர்மனி செயல்திட்டத்தோடும் நெருக்கத்தை ஏற்படுத்திவிடுமாதலால் தன்னுடைய மரபின் அடிப்படையில் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் பாலமாக விளங்கும் பணியைச் செய்வது பிரிட்டனுக்கு கடினமாகிவிடும்'' என்ற எச்சரிக்கையை, அமெரிக்கன் என்டர் பிரைஸ் இன்ஸ்டிட்யூட்டின் தலைமைப் பொருளாதார வல்லுநரான Kevin Hasset -கொடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புஷ் நிர்வாகத்தின் வெளிப்படையான விரோதப்போக்கு பிரிட்டனுக்குள்ளேயே யூரோ மீது- நம்பிக்கையற்றவர்களை மிகக்கடுமையான, தேசியவெறிபிடித்த அளவில் தங்களின் பிரச்சாரத்தை செய்ய முடுக்கி விட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் நாஜி ஜேர்மனிக்கு இங்கிலாந்து சரணடைந்ததிற்கு ஒப்பான செய்கைபோல் ஸ்டேர்லிங்க்கை யூரோவுடன் இணைத்துவிடும் செயல் ஆகிவிடும் என்று முர்டோக்கின் New International group- ன் தலைமையில் வலதுசாரி அணி கூறியுள்ளது. நெப்போலியனையும், ஹிட்லரையுமே பிரிட்டன் துரத்திவென்றது, இன்று பிளேயர் பிரான்ஸ், ஜேர்மனி முன் மண்டியிடுவதா? என்ற கேள்வியை Sun எழுப்பியுள்ளது.

இந்தப் பெரும்பாலான தேசியம் சார்ந்த கடுஞ்சொற்கள் "இறையாண்மை" என்றுள்ள கருத்துப்படிவ மொழியில் கூறப்பட்டாலும், ''தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சியாளருக்கு'' எதிரானவை என்றாலும் கூட அதன் உண்மை நிகழ்ச்சிநிரல் அமெரிக்காவுடன் தனித்த கூட்டிற்காக ஐரோப்பாவுடனான தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

புஷ் நிர்வாகத்தின் தாக்குதல், பாலமாக இருத்தல் போன்ற பேச்சுக்களையெல்லாம் வெற்றுச் சொற்களாக்கிவிட்டதாக இவர்கள் வாதிடுகிறார்கள் UK- யின் உண்மையான பணி அட்லாண்டிக் கடந்த தன் பங்காளிக்கு செய்யும் உண்மையான சேவை, ஐரோப்பாவை நல்லதிசையில் செலுத்தப்பாடுபடுவது என்ற பயனற்ற முயற்சிகளில் இல்லையென்றும், அதைத் தகர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதேயெனவும் கூறுகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகள், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிரிட்டனை அழைத்துச் செல்வதில் பிளேயரின் தோல்விக்கு சான்றாக இருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஒருங்கிணைப்பின் செயல்திட்டம் அமெரிக்காவுடனான அதன் வளர்ந்துவரும் பூசலால் பொறிவதை மிகவும் முக்கியமாய் உணர்த்துகின்றன.

இந்த அட்லாண்டிக் கடந்த போட்டிக்கு தொழிலாள வர்க்கத்தின் உழைப்பிலிருந்து செலவினங்கள் செய்யப்படும். ஐரோப்பிய ஒன்றியம் எப்படிப்பட்ட வடிவத்தை இறுதியில் கொண்டாலும், அமெரிக்கப் போட்டியை சவால் செய்வதற்காக அதனுடைய பொருளாதார சமுக, கொள்கைகளையே ஐரோப்பிய கண்டத்தில் இறக்குமதி செய்யும். ஐரோப்பா தற்பொழுதுள்ள சம்பள மட்டங்கள் மற்றும் நலன்களின் அளவைக் குறைக்க வேண்டும் என்பது பிரிட்டனில் விவாதத்தின் பொழுது பிரெளன், பிளேயர் இருவரது அறிக்கைகளிலும் வலியுறுத்தியது, இப்பொழுது பிளேயரின் ஒப்புதலுக்காக காத்திராமல் பின்பற்றப்படும் ஐரோப்பியத் திட்டங்களில் பின்பற்றப்படுவது தற்செயலானதல்ல.

தொழிலாள வர்க்கத்திற்கெதிரான தாக்குதல் தேசிய பிரத்தியேகவாதத்திற்குள் பின்வாங்குவதற்கான அரசியல் ஆதரவின் அடிப்படையில் எதிர்க்கப்பட முடியாது. இது பிரிட்டிஷ் மக்களை மதிமயக்க டோரி வலதுசாரியினர் கூறிவரும் கட்டுக்கதை ஆகும். இக்கொள்கைகளை செயற்படுத்த மறுக்கும் அரசாங்கம் யூரோவுக்குள்ளேயோ, வெளியேயோ இருந்தாலும், பன்னாட்டு நிதிச்சந்தைகள் அதற்கு தண்டனை கொடுத்துவிடும். யூரோ பற்றி என்னதான் வேறுபாடுகள் இருந்தாலும், பிளேயர் அரசாங்கமும் அதன் மீது குறை கூறுவோரும், தொழிலாள வர்க்கத்தின் வாழ்கைத் தரத்தைக் குறைப்பதில் ஒன்றாக இருக்கின்றனர்.

முதலாளித்துவ ஐரோப்பாவுக்கும் சிறு இங்கிலாந்து தேசியத்தினர் மற்றும் அமெரிக்க சார்புடைய போர் வெறியர் கூட்டிற்கும் வக்காலத்து வாங்குபவர்களை பிரிட்டிஷ் தொழிலாளர்கள் கட்டாயம் நிராகரிக்க வேண்டும். ஆனால் இத்தோடு அவர்கள் தங்களை நிறுத்திக்கொண்டுவிடக் கூடாது. ஏகாதிபத்திய இராணுவ வாதத்திற்கும் கஷ்டப்பட்டு போராடிப்பெற்ற நலன்களை அழிப்பதற்கும் எதிரான போராட்டத்தில் ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்களோடு ஒற்றுமையை ஏற்படுத்தும் நீடித்த முயற்சியின் ஒரு பாகமாக தங்கள் சொந்த ஐரோப்பிய ஒருங்கிணைப்பின் செயல்திட்டத்தைச் செய்தாக வேண்டும்.

முதலாளித்துவ ஐரோப்பாவிற்கு மாற்று தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக செயல்படும் ஒன்றாகும். கண்டத்தை ஒன்றிணைத்தல், நாணய முறையை ஒன்றாகக்கொள்ளுதல், போன்றவை புறநிலை ரீதியாக முற்போக்கானவையாகும். மிகவும் திறமான முறையில் உற்பத்தியின் பகுத்தறிவுபூர்வமான வளர்ச்சிக்கு பொருளாதார ரீதியாக அது அனுமதிக்கிறது. அடிக்கடி போருக்குள் மூழ்கடிக்கப்படும் மக்களிடையே உள்ள செயற்கையான தடைகளை அகற்ற அது சமூக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் உதவுகிறது. இப்போதுள்ள வரலாற்று சூழ்நிலையில், அமெரிக்கப் பொருளாதார சூறையாடலுக்கும், ஆக்ரோஷமான இராணுவ வெறிக்கும் அது ஒரு அரசியல் மாற்றை ஏற்படுத்த அது சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

ஐக்கியப்பட்ட ஐரோப்பா, வாஷிங்டனுக்கு அறைகூவல் விடக்கூடிய அளவிற்குப் பொருளாதார இராணுவ வலிமையைக் கொண்டிருக்கும் மற்றும் மேலும் ஈராக் கொடுமைகள் போன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் தடுக்க விழையும் சக்திகள் உள்பட உலகெங்கிலும் அமெரிக்காவிற்குள்ளும் இருக்கும் சக்திகளுக்கு ஈர்ப்பு முனையாக இருக்கும்.

புஷ் நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஐரோப்பாவைப் பிளவுபடுத்தும் அதன் முயற்சிகளில் வெற்றி, அதன்காரணமாக மனித குலத்திற்கே பேரழிவைத்தரும். இதைத் தடுக்க, வாஷிங்டனை எதிர்ப்பதற்கு தன் இயலாமையைக் காட்டி விட்ட மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு தனது முழு குரோதத்தையும் காட்டி விட்ட ஐரோப்பாவின் ஆளும் மேல் தட்டின் கைகளில் இருந்து, ஐரோப்பிய ஒன்றிணைப்பு செயல் திட்டம் எடுக்கப்பட்டாக வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved