World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா

ஜிலீக்ஷீமீமீ லீuஸீபீக்ஷீமீபீ ஹ்மீணீக்ஷீs ஷீயீ றிமீtமீக்ஷீsதீuக்ஷீரீயீமீstவீஸ்ணீறீs யீணீநீணீபீமீs லீவீபீமீ பீமீstவீtutவீஷீஸீ

பீட்டர்ஸ்பேர்க்கின் 300 ஆண்டுகள் - விழாவின் முகப்பு அலங்காரங்கள் வறுமையை மறைக்கின்றன

By Julia Denenberg
21 June 2003

Use this version to print | Send this link by email | Email the author

மே 23லிருந்து ஜூன் 1 வரை செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் தன்னுடைய 300வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சிக்கான தயாரிப்பு வேலைகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி நடைபெற்றுவந்தன. ரஷ்யச் செய்தி ஊடகத்தில் பரந்த அளவில் வெளிவந்த இந்த நிகழ்ச்சியின் அளவும் தன்மையும் இந்த ஆண்டு மே மாதம் செயின்ட் பீட்டர்ஸ் பேர்க்கிற்கு, நகரமே அடையாளம் தெரியாதபடி மாறி வரும் பார்வையாளரும் நகர மக்களும் இதுகாறும் கண்டிராத அளவு கவர்ச்சிகரமானதாக அமையும் என்று தெரிவித்திருந்தன. உண்மையில் வெற்றி விழா ரஷ்ய-ஐரோப்பிய அதிகாரிகளுக்கு மட்டமான வெளிப்பூச்சாகத்தான் இருந்தது. ''வடதலைநகரின்'' சாதாரண மக்களுக்கு இந்தத் திருவிழாக் கூத்துக்கள் விருப்பமற்ற சுமையாக விளங்கிக் கடந்துபோயின.

மிகப்பெரிய அளவில் பெருஞ்சிறப்பை புலப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட இவ்விழா ரஷ்யா மேற்கை நோக்கி நம்பிக்கையுடன் நகருகின்றது என்பதை ரஷ்ய அதிகாரிகள் எடுத்துக்காட்டுவதை நோக்கமாக கொண்டிருந்தது. ஆனால் கிடைத்த விளைவோ நேர்மாறானது. சற்று கவனத்துடன் கண்ணுறுவோர் ''சந்தைச் சீர்திருத்தம்'' ஆரம்பித்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா ஒரு பழமையான பொருளாதாரத்தையும், சிதைந்த சமூக கட்டுமானத்தையும் தான் கொண்டுள்ளது என்பதைத் தெளிவாக உணர்ந்திருப்பர். வெளி வர்ணஜால ஜொலிப்பில், அன்றாட வறுமையும் மக்களின் வெறுப்புமிக்க நிலையும் மறைக்கப்படும் முயற்சிகள் அடங்கியிருந்தன.

1703ம் ஆண்டு முதலாவது பீட்டரால் (Peter I) ரஷ்யாவின் புதிய தலைநகரமாக அமைக்கப்பட்ட இந்நகரம், ''ஐரோப்பாவிற்கான சாளரம்'' என்ற பெருமையை கொண்டதுடன், செயின்ட் பீட்டர்ஸ் பேர்க், பெட்ரோகிராட் - லெனின்கிராட் என்ற பெயர்களால் 300 ஆண்டு பரந்த கால அளவில் கலாச்சார, அறிவியல், தொழில்துறை மையமாக ரஷ்யாவில் புகழ்பெற்று, மூன்று பெரிய புரட்சிகளையும் முற்றுகைக்கெதிரான வெற்றியையும் கண்ட நகரமாகும். அதனுடைய அழகு, செல்வம், பலவிதமான கட்டிடக்கலை ஆகியவை வெனிஸ், புளோரென்ஸ், பாரிஸ், போன்ற வெகுசில ஐரோப்பிய நகரங்களுடனையே ஒப்பிடப்பட முடியும். ஆனால் சோவியத் யூனியனின் உடைவிற்குப் பின்னர் லெனின்கிராட்டின் தோற்றத்தை விரைவான சமுதாயச் வீழ்ச்சி மாற்றியதுடன், இப்போக்கு செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் என்று மீண்டும் பெயரிடப்பட்டதால் புனிதப்படுத்தப்பட்டது. நெவ்ஸ்கி ப்ராஸ்பக்ட்டிலிருந்து (Nevsky Prospekt) சற்று தொலைவில் சென்று சரிந்துகொண்டிருக்கும் வறுமையின் பிடியில் வாடும் நகர மத்தியப் பகுதியைக் கண்டால், பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் எத்தகைய மோசமான நிலையில் பீட்டர்ஸ் பேர்க்கில் வாழ்ந்து வருகின்றன என்பது தெரியவரும்.

அலெக்சாந்தர் பகுதி உள்ள அரண்மனைச் சதுக்கத்திலும், மிக்கைலோவ்ஸிகி அரண்மனையிலும் செய்யப்பட்டுள்ள திருத்தவேலைகளைத் தொடர்ந்து, விழாநிகழ்ச்சிகள் ஓர் கெளரவம் நிரம்பிய திறப்பு விழா, ஓர் உற்சாக அணிவகுப்பு, ஓர் அதிகாரபூர்வமான சமயப்பிரார்த்தனை, நகரின் மையச் சதுக்கத்தில் மாணவரணியின் பார்வை, ''நெவ்ஸ்கியீரியா'' (Nevsky Feeria) என்ற தண்ணீர் விழா, ஹிரோயமகாடோவின் (Hiro Yamagato) லேசர் காட்சி, அரண்மனைச் சதுக்கத்தில் வாலரி ஜெர்ஜியவ் (Valery Gergiev) இயக்கத்தில் மேலைத்தேய இசை நிகழ்ச்சி, வெண்கல வாத்தியக் குழுவின் அணிவகுப்பு, நாடகங்கள் முதலியவை அடங்கியிருந்தன. Tsarko Solo என்ற பீட்டர்ஸ்பேர்க் புறநகரத்திலுள்ள இரண்டாம் உலகப்போருக்குப் பின் சுவடு இன்றி மறைந்த அரண்மனைகள் ஒன்றில் உலகப்புகழ் பெற்ற Amber-Room ஜேர்மனிய நிறுவனமான Ruhr-Gas இன் உதவியால் புதுப்பிக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது.

Common Wealth of Independent States (CIS)ன் தலைவர்களுடைய மாநாடு "Silver Whisper" என்ற 10 அடுக்குடைய கப்பலின் மேல்தளத்தில் நடைபெற்றது; இதற்காக கப்பல் நகரின் மத்திய பகுதியில் நங்கூரம் பாய்ச்சப்பட்டு நின்றிருந்தது -1917 அக்டோபர் புரட்சியின்போது ஆரம்பத்தை அறிவிக்க புகழ்பெற்ற Aurora என்ற போர்க் கப்பல் குளிர்கால அரண்மனையை நோக்கி குண்டு முழக்கமிட்ட இடத்தில் நடந்த CIS உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய அரசாங்கங்களின் தலைவர்களைச் சந்தித்தார். இதில் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷும் கலந்துகொண்டார். நெவா, பெடராப் என்ற புகழ்பெற்ற நீரூற்றுகளிடையே விழாவின் சர்வதேச கோலாகலங்கள் முடிவடைந்தன.

இந்நிகழ்ச்சிகளின் விழாநாயகர்களாக இருந்திருக்கவேண்டிய நகர மக்கள் இந்த வரட்டுடம்பக் கொண்டாட்டங்களில் பங்குகொள்வது அதிகளவு மறுக்கப்பட்டிருந்தனர். சாதாரண செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் மக்கள் முக்கியமான நிகழ்ச்சிகளில் தலைகாட்டக்கூடாது எனத் திட்டவட்டமாகக் கூறப்பட்டதுடன் அவற்றைத் தொலைகாட்சியில் பார்க்குமாறும் அறிவுரை வழங்கப்பட்டனர். கூட்டமைப்பின் அரசாங்கம் நகரத் தலைமையின் வேண்டுகோளின்படி, ''கொண்டாட்ட வாரம்'' என்ற பெயரில் நகரத்தைவிட்டு விலகியிருக்க விரும்பியவர்கட்கு ஒரு வார காலம் விடுமுறை அளித்தது. பாடசாலைகள் 10 நாட்கள் வழக்கத்திற்கு முன்பே மூடப்பட்டன; பல பல்கலைக்கழகங்களில் ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்னரே நடத்துவதற்குத் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டன.

''உச்சிமாநாட்டன்று, நீங்கள் மூட்டை முடிச்சுக்களுடன் நகரத்திலிருந்து வெளியேறி டாஷாவிற்கோ அல்லது கிராமத்திற்கோ போய்விடுங்கள். இந்தத் திருவிழாக் கூட்டங்களில் நீங்கள் தென்பட்டால், அடிக்கடி தடுத்துநிறுத்தப்பட்டு உங்களுடைய ஆவணங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். உலகம் முழுவதும் நம்முடைய நகரத்தைப் பார்க்க உள்ளது'' என ஓர் அதிகாரி தெரிவித்தார்.

உண்மையிலேயே விழாகொண்டாட்டங்களின் போது நகரைச் சுற்றித் சனநடமாட்டம் குறிப்பிடத்தக்க அளவு குறைவாகவே இருந்தது. ஒரு சிறப்பு அனுமதிச் சீட்டுடன்தான் நகரத்தின் மத்திய பகுதிகளுக்கு ஒருவர் செல்ல முடியும். வாசிலேவ்ஸ்வ்கித் (Vassilevskiy) தீவில் வாழும் மக்கள் விழாக்காலம் முழுவதும் கிட்டத்தட்ட வீட்டுக் கைதிகள்போல வெளியே வராமல் இருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டனர். ரஷ்ய, அயல்நாட்டு விமானப் பணிகளுக்குக்கூட மூன்று நாட்கள் புல்கவோ விமான நிலையம் மூடப்பட்டு சர்வதேச பிரிவு மட்டும் முக்கிய G8 நாடுகளின் தலைவர்கள், மற்றைய நாடுகளிலிருந்து வரும் சிறப்புப் பிரதிநிதிக் குழுக்களைக் கொண்டுவரும் சிறப்பு விமானங்களை வரவேற்கும் செயலில் மட்டும் ஈடுபடுத்தப்பட்டது.

விழா வாரத்திற்கு முன்பு, சில மதிப்பீடுகளின்படி 1,00,000 பிச்சைக்காரர்களும் வீடில்லாத மக்களும், புனித பீட்டர்ஸ் பேர்க்கிலிருந்து அகற்றப்பட்டனர். ரஷிய செய்தித்தாளான Izevestia, லெனின் கிராட்டில் முகாம்கள் அமைக்கப்பட்டு, போலீஸ் கண்ணோட்டத்தில் சீரில்லாத் தோற்றத்துடனும் வீடில்லாமலும் இருந்தவர்கள் அங்கு அழைத்து இருத்தப்பட்டனர். நகரத்தின் வெளியிலிருந்த இடிபாடுகள் நிறைந்த சிறுவர்கள் முகாமில் சிலர் தங்கவைக்கப்பட்டனர். ஊடக அறிவிப்புக்களின்படி செயின்ட் பீட்டர்ஸ் பேர்க்கின் வீடற்ற மக்கட்தொகையினர் யூரல், சைபீரியப் பகுதிகளிலிருந்த நகரங்களுக்கு அனுப்பப்பட்டனர். இவற்றையும்விட மோசமான வெளியேற்ற நடவடிக்கைகள், பழைய சோவியத் யூனியனின் குடியரசுகளை குறிக்கும் மாற்றுப் பெயரான ''அருகிலுள்ள வெளிநாட்டினரான'' சட்ட விரோதத் தொழிலாளருக்கு எதிராக கொள்ளப்பட்டன.

இதுகாறும் இல்லாத அளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மாநாட்டிற்கு விருந்தாளிகளான 48 அயல்நாட்டுத் தலைவர்களின் பாதுகாப்பையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. 20,000 உள்ளூர் போலிசைத் தவிர ரஷியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து 5,000 போலிசார் விழாவின்போது சட்டம், ஒழுங்கைக் காக்க அழைக்கப்பட்டிருந்தனர். அதிகாரிகள் ரஷியாவில் ''அவர்களுக்கும் அரசாங்க அதிகாரத்திற்கு மிக அண்மையில் உள்ள குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நிழலுகக் குண்டர்களின் தலைவர்களுக்கும் ஒத்துழைப்பை நாடி வேண்டுகோள் விடுத்தனர்.'' ஜேர்மன் சஞ்சிகையான Der Spiegel செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கின் குற்ற நபர்களின் ஒருவரான விளாடிமீர் குமாரினிடம் கிரெம்ளின் மட்டத்திலான பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறது. விழாக் காலத்தில் அவர்கள் பொதுவாக ஈடுபடும் 'கணக்கைத் தீர்த்துக்கொள்ளும்' விவகாரங்கள் நிறுத்திவைக்கப்பட வேண்டுமென்றும் தெருக்களில் தோட்டாக்களால் துளையுண்ட சடலங்கள் தோன்றக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Der Spiegel ஜேர்மன் குற்றவியல்துறை அமைச்சரகத்தின்படி ஜேர்மன் நிறுவனமான SPAG குமாரின் உடன் பணமாற்றுத் திட்டத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கிறது. இந்த நிறுவனத்துடன் விளாடிமீர் புட்டின் ஓர் ஆலோசகராக 7 ஆண்டு காலம் இருந்திருக்கின்றார். ''ஆம், எனக்கு பீட்டர்ஸ் பேர்க்கில் வேலை செய்துகொண்டிருந்தபோதே புட்டினைத் தெரியும்'' என்று குமாரின் ஒரு பத்திரிகையாளரிடம் கூறினார்.

Izvestia, நகர நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மொஸ்கோவில் இறந்த பீட்டர்ஸ் பேர்க்கின் ''முக்கியஸ்தர்'' (குற்றவாளி) இறந்த Konstantin Yakovlev இன் குழுவுடன் அவருடைய மரண இறுதி ஊர்வலம் ஒரு பிந்தைய தேதிக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கிறது. அப்படி ஒத்திவைத்தால் அது விழாக் காலத்தில் ''மக்கள் வெளிப்புற விருந்துடன்'' ஒரே நேரத்தில் அது அமைந்துவிடாமல் இருக்கும்.

சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலைமையில் ஊழல்கள்

நகரத்தின் தோற்றப்பொலிவிற்கு விழாவையொட்டிச் செய்யப்படும் முன்னேற்றங்கள் நகர மக்கள் அனுபவிக்கும் பலவகை இடைஞ்சல்களையும் குறைக்கும் என்ற நினைப்பு தோன்றலாம். ஆனால் அந்த எண்ணம் உண்மைக்கு முற்றிலும் எதிரானது. தெரிந்தெடுக்கப்பட்ட அளவிலேயே வரலாற்று மையத்திற்கு பழுதுகள் பார்க்கப்பட்டன; முக்கிய பிரமுகர்களின் கண் வரிசைகள் செல்லும் சாலைகள் மட்டுமே திட்டமிட்டு அழகுபடுத்தப்பட்டு, பழுது பார்க்கப்பட்டன. Konstantin Palace இல் முக்கியமான சர்வதேச நிகழ்ச்சிகள் நடைபெற்றதால், அந்தக் கட்டிடம் சிறப்பான முறையில் பழுது பார்க்கப்பட்டு சிறந்த பொலிவுடன் விளங்கியது.

வோல்கோன்ஸ்கி நெடுஞ்சாலை வழியாக அரண்மனை செல்லும் வழியில் இடிந்த வீடுகள், குப்பைக்கூளத்தடங்கள், ஒரு கல்லறைத் தோட்டம் முதலியவை உள்ளன. இந்த விருப்பமற்றவற்றை மறைக்கும் வகையில் சாலையெங்கும் பெரும் விளம்பரப் பலகைகள் அவலக் காட்சியை மறைத்து எழுப்பப்பெற்றன. இரண்டு நாட்களுக்குக் கல்லறை மூடப்பட்டது; பீட்டர்ஸ் பேர்க்கினர் மரணவிழாக்களால் கெடுத்துவிடப்படக் கூடாது என்ற எண்ணம் போலும்.

பழைய கடைகள் வளாகத்தையொட்டி நடக்கும் பழுது பார்க்கும் பணிகளுக்கிடையே, Gostiny Dover கட்டிடத்தின் பின்பக்கத் தேவைக்குப் போதுமான வண்ணப்பூச்சு கிடைக்கவில்லை. எனவே இப்பொழுது புதிய Potemkin கிராமத்தினை மிகப்பெரிய விளம்பரப் பலகைகள் அங்கு உடைந்த ஜன்னல்களையும் சுண்ணாம்புப்பூச்சு சிதறி மறைத்துள்ளன.

Izvestia இன் நிருபர் ஒருவர், வெளிநாட்டிலிருந்து உச்சிமாநாட்டிற்காக வந்த வெளிநாட்டுத் தலைவர் நகரத்தின் முக்கிய வீதியான Nevsky Prospekt ஐ பார்வையிட திடீரென்று விருப்பப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என எழுதுகிறார். ''ஒரு முக்கிய பிரமுகர்களுக்கான சந்தை வசதி ஏற்படுத்தப்பட்டது. பொது ஒலிப்பெருக்கிகள் நாட்டு இசை ஒலித்திருக்கும். நல்ல உடையுடுத்த வியாபாரிகள் வீதிகளில் தோன்றியிருப்பர். சில சுத்தமான ரஷ்யாவின் வாகனங்கள் வீதியில் அங்கும் இங்குமாக சென்றிருக்கும். அவர் இது தான் ரஷ்யாவின் காலாச்சார தலைநகரின் அன்றாட நிகழ்வு போலும் என உணர்ந்திருக்கக்கூடும். சில மணி நேரத்திற்கு நெவ்ஸ்கிம்ராஸ்பக்ட் வரும் சாலைகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பயணிகள் பெருநகரத்தை நடந்து அல்லது மெட்ரோக்களில் வீடு திரும்ப நேரிட்டது, ஓட்டுனர்கள் தங்கள் வண்டிகளை பல தெருக்களில் அப்படியே நிறுத்திவிட்டுச் சென்றனர்.''

பெரும்பாலான விழா மறுசீரமைப்பு, வளர்ச்சித் திட்டங்கள் காகித அளவோடு நின்றுவிட்டன. நகரத்தைச் சுற்றி அமைக்கப்படவிருந்த முக்கியமான சாலை, நகரம் வெள்ளத்தில் அவதியுறாமல் கட்டப்பட்டதிலிருந்து நீர்த்தேக்கங்கள் 1996ல் ஆரம்பிக்கப்பெற்று அப்படியே உறைந்துவிட்ட சுரங்கப்பாதைகள் அமைப்பு போன்றவை செயல்படுத்தப்படவே இல்லை. கட்டுமானம், பழுதுபார்த்தல், காஜான் பேராலயம் (Kazan Cathedral), பீட்டர் போல் கோட்டைகள் (Peter and Paul Fortress) மற்றும் அட்மிலால்டி (Admiralty), ஸ்மோல்னி தேவாலயப் (Smolny Cathedral) பணிகள் போன்ற வரலாற்றுப் புகழ் சின்னங்களில் புதுப்பித்தல் அனைத்தும் முடிக்கப்படவில்லை.

900,000 பீட்டர்ஸ் பேர்க் மக்கள் அரசாங்க வீடுகளில் (Communal Apartments) நகரின் சாபக்கேட்டினுள் உறைகின்றனர். குறைந்த வருமானமுடையவர்கள், தனியார் வீடுகளுக்கு வாடகை செலுத்தமுடியாத வயதானவர்கள் போன்றோர் அவற்றில் வாழ்கின்றனர். இருமருங்கிலும் உயர்ந்த மரங்களுள்ள செல்வந்தர் குடியிருப்புக்களுக்குப் பக்கத்தில் உள்ள இந்த உறைவிடங்கள் இருண்ட வாயிற்படிகளையும், சரிந்துகொண்டிருக்கும் வீடுகளையும், 1917 புரட்சிக்குமுன் இடப்பட்ட துருப்பிடித்த கழிவுநீர் கால்வாய்களையும் கொண்டுள்ளன. இப்பகுதியிலுள்ள மக்களின் நிலைமைகளில் எந்த மாற்றமும் இல்லை.

விழாக்காலத்திற்கு முன்பிருந்தது போலவே, விழாக்காலத்திற்குப் பின்பும் செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் சிதைந்து சரிந்துவருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 5 கட்டிடங்கள் இடிந்து விழுந்து நான்கு பேரின் உயிரைக் குடித்ததுடன் 10 குடும்பங்கள் வீடிழந்தன.

அரசாங்கப் புள்ளி விவரங்களின்படி, 150 வீடுகளும் 300 அடுக்கு வீடுகளும் பழுதடைந்த நிலையில் உள்ளன. ஆனால் சரியான எண்ணிக்கை என்ன என்பது பற்றி எவருக்கும் சரியாகத் தெரியாது. ஏட்டளவில் இவையனைத்துமே புரட்சிக்குமுன்பிருந்த வீடுகளின் தொகுப்பு என்பதும் 20ம் நூற்றாண்டு முழுவதும் இவற்றில் திருத்தும்பணி நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பீட்டர்ஸ்பேர்க் நகரமன்ற அதிகாரிகள் இவை உடைந்துகொட்டும் நிலையில் உள்ளன என்பதை ஒப்புக்கொண்டால் அதில் வசிப்பவர்களுக்காக வேறு இல்லங்களுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். எனவே வேறு மாற்றுவழி எதுவும் இல்லை என்றால்தான் பழைய வீடுகள் என ஒப்புக்கொள்கிறார்கள்.

செயின்ட் பீட்டர்ஸ் பேர்க்கின் சட்டமன்ற அவைத்தலைவர் வாடிம் துல்பனாவ் (Vadim Tulpanov) நகரமன்றத்தின் கவனக்குறைவினால்தான் வீடுகளின் நிலை கண்டிக்கத்தக்க அளவிற்கு மோசமாக உள்ளது என்றும் பெரிய அளவுச் செலவுகள் தேவைக்கு 7 சதவிகிதம் மட்டுமே செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தார். ''அப்படிப்பட்ட நிலையில் 5லிருந்து 10 ஆண்டுகளுக்குள் எல்லா தெருக்களும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டு பழுதுபார்க்கப்பட வேண்டியிருக்கும்'' என்றார் அவர்.

விழாத் தயாரிப்பு கோலாகலங்களுக்கு கூட்டமைப்பு வரவு செரவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்து பாரியளவில் களவெடுக்கப்பட்டது. இது அரசாங்க ரஷ்யாவின் கூட்டமைப்பின் வடமேற்கு கூட்டமைப்பு மாவட்ட பிரதிநிதியின் கணக்கின்படி 60 பில்லியன் ரூபிள்கள் ($2 பில்லியன்). இதைப் பற்றிய விசாரணையை அதிகாரிகள் எப்படியோ ஒருவாறாக அமுக்கிவிட்டபோதும், அவை பற்றிய விவரங்கள் வெளிவருவதை தடுக்க முடியவில்லை.

உதாரணமாக நகரத்தின் வரலாற்று வளாகத்தைச் செப்பனிடுவதற்கும், சீரமைத்துக் கட்டுவதற்கும் ஓதுக்கப்பட்ட 9 மில்லியன் ரூபிள்கள் கையாடல் செய்யப்பட்டது. பீட்டர்ஸ் பேர்க்கின் செய்தித்தாளான Vash Tayni Sovetnik முன்னாள் துணை ஆளுனரும் தற்பொழு அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு நபர் இதில் முக்கிய பங்கு கொண்டுள்ளதைத் தெரிவித்தது. பல மில்லியன் டொலர்கள் பெறுமான செயற்பாடுகள் கைமன் தீவுகளில் (Cayman Islands) பணச் சலவைக்கு உட்பட்டன.

ரஷ்ய கூட்டரசின் வடமேற்கு மாவட்ட பொது அரசாங்க வக்கீலின் உதவியாளர் விளாடிமிர் ஜிர்பின் (Vladimir Zurbin) மற்றொரு $10 மில்லியன் அளவு கையாடல் பற்றி தகவல் வெளியிட்டுள்ளார். Lentaru என்ற வலைத் தளத்தின் நிருபருக்கு நீதித்துறையைச் சார்ந்த அதிகாரி ஒருவர் விழாவின் ஒவ்வொரு கூறுபாட்டையும் பற்றி குற்ற வழக்குப் பதியக்கூடிய அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளன என்று கூறியிருக்கிறார்.

ஷெட்நயா பலாடா (Schetnaia Palata) என்னும் பொதுக்கணக்காளர் நிறுவனம் ஒன்று விழாவிற்காக ஒதுக்கப்பட்ட செலவினங்களை ஆய்ந்தது. இவ்வமைப்பின் தலைவரான செர்ஜி ஸ்டீபஷின் (Sergei Stepashin) இந்த ஆண்டு ஜனவரி மாதம் சாலை செப்பனிடுவதற்காக ஒதுக்கப்பட்ட 30 மில்லியன் டொலர்கள் காற்றில் கரைந்துவிட்டதாக அறிவிக்கிறார். கூடுதலான ஒரு மில்லியன் ரூபிள் தவறாகப் பயன்படுத்தப்பட்டாதாகவும் தெரியவந்துள்ளது.

விளாடிமீர் புட்டினின் அரசாங்கம் பீட்டர்ஸ் பேர்க் 300வது ஆண்டுவிழாவினை புட்டினின் புகழை விளம்பரப்படுத்தும் வகையில் பலஅயல்நாட்டு விருந்தினர் ''கண்ணில் முடிந்த அளவு மண்ணைத் தூவ'' முயற்சி செய்தது. ஆனால் மேலைச் செய்தி ஊடகங்கள் கூட பீட்டர்ஸ் பேர்க் நிகழ்ச்சிகள் துயரந்தோய்ந்தவையாகவும் இருவிதப் பொருள் தருபவையாகவும் அமைந்துவிட்டன என்று ஒருமித்துக் குரலெழுப்பியுள்ளன. பெரும்பாலான நகரவாசிகளுக்கு விழாக்களிப்புக்கள் ஏமாற்றத்தையும், ஏன் அவமரியாதையையும்கூட அளித்தன.

இப்படிப்பட்ட கேலிச் சிரிப்பிற்குட்பட்ட நகரத்தின் மற்றொரு வரலாற்று நிகழ்வான செயின்ட் பீட்டர்ஸ் பேர்க்கின் 250வது ஆண்டு விழாவையும் நினைவு கூறலாம். அப்பொழுது ஸ்ராலின் இறந்ததனால் 1957ல் நான்கு ஆண்டுகள் தாமதமாக விழா கொண்டாடப்பட்டது. அதுவும் மேயிலும் பின்னர் நிகிரா குருஷேவ் (Nikita Krushchev) முதல் தடவை வரமுடியாததால் ஜூனிலும் இரண்டாவது முறையாக கொண்டாடப்பட்டது. 300வது ஆண்டுவிழா 1980 ஒலிம்பிக் பந்தயங்களையும் நினைவுபடுத்துகிறது. அப்போது மொஸ்கோ அரசியல் குழுவின் (Politburo) கட்டளையின்படி பார்வையாளர்களே இல்லாமல் பந்தயங்கள் நடாத்தப்பட்டன.

Top of page