WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
அவுஸ்திரேலியா
Papua New Guinea liquidity crisis sees new calls for Australian
intervention
பாப்புவா நியூ கினியின் பணப்புழக்க நெருக்கடி ஆஸ்திரேலியத் தலையீட்டிற்கு புதிய அழப்புக்களை
விடுக்கிறது.
By Will Marshall
16 June 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
பாப்புவா நியூ கினிப்
பொருளாதாரம் நான்காவது தொடர்ச்சியான ஆண்டில் சுருக்கத்தை நோக்கிச் சென்று கொண்டு இருப்பது, பிரதம
மந்திரி சேர் மைக்கேல் சோமரேயின் (Sir Michael Somare)
அரசாங்கத்திற்கு முழு அளவிலான பணப்புழக்க நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கருவூலம் மற்றும் நிதித்துறை அமைச்சரான
பார்ட் பிலிமொன் (Bart Philemon ) கடந்த மாதம்
PNG யின் வர்த்தக சபையிடம் கடந்த மாதம் அவர் முன்பு
கணித்திருந்த 2-சதவிகித வளர்ச்சிக்குப் பதிலாக பொருளாதரம் சுருக்கமடைந்து வருவதாகக் கூறினார்.
2003-ற்கான வரவு செலவுத்திட்டத்தில்
K-340 மில்லியன் (95 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பற்றாக்குறை உள்ள அளவில் அரசாங்கம் உள்நாட்டில்
வணிக விகிதத்தில் டாக்டர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சம்பளம் கொடுப்பதற்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) யின் கடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
அளவில் தனியார் மயமாக்கப்பட்ட துறைகளிலிருந்து எதிர்பார்த்த வருவாயும் வராத நிலையில் அரசாங்கத்தின்
சிக்கல்களை அதிகரித்துள்ளது.
அரசாங்க நிதி கிடைக்காத நிலையில் மருத்துவ மனைகளும் மற்றைய பணிநிறுவனங்களும்
தங்கள் செயல்களைக் குறைத்துக் கொள்ள நேரிடுகிறது. PNG
செய்தித்தாளான Post courier -மே
மாதக் கடைசியில் அங்காவ் மருத்துவமனையில் உணவு கொடுக்க பணம் இல்லாமல் போய்விட்டது; தேசிய அளவில்
5000- ஆசிரியர்களுக்கும் முதலாண்டு டாக்டர்களுக்கும் சம்பளப்பணம் இல்லாமற்போய்விட்டது என தெரிவித்துள்ளது.
இன்னமும் பொதுவாகக் கூறவேண்டுமென்றால், சமுதாய அடிப்படைக் கட்டமைப்பு விரைவாக
சீர்குலைந்து கொண்டிருக்கிறது. கடந்த 10-ஆண்டுகளில் கிராமப் புறங்களில் பொது சுகாதார சேவைகள் பெறுவது
கடினமாகிவிட்டது. தொடக்க கல்வி சேர்க்கை விகிதம் பிராந்தியத்தின் சராசரியைவிடப் பெரிதும் குறைவாக
இருப்பதோடு கிட்டத்தட்ட 75-சதவிகிதக் குழந்தைகள் 8-முதல் 12 வகுப்பு வரைக்குள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுகிறார்கள்.
மிக ஏழ்மை நிலையிலுள்ள கடைசி 25-சதவிகிதக் குடும்பங்களில் மூன்றில் இருபகுதிக் குழந்தைகள் தக்க ஊட்டச்சத்து
இல்லாமல் வளர்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே தலைவிரித்தாடும் பணவீக்க நிலைமையில் அரசாங்கத்தின் உள்நாட்டுக்கடன்
வாங்குதல் அதிகப்பட்டுவிட்டது. மார்ச் மாத இறுதியில் ஒரு காலாண்டில் வாழ்க்கைச்செலவு 6.9- சதவிகிதம் உயர்ந்து
ஆண்டு விகிதத்தை 20.7- சதவிகிதமாக உயர்த்தி விட்டது. உணவு, பானங்கள் மற்றும் புகையிலை இவை மோசமாகப்
பாதிக்கப்பட்டிருக்கின்றன மற்றும் இவை குடும்பங்களைப் பெரிதும் பாதிப்பனவாக உள்ளன. மார்ச் முடிந்த 12 மாதங்களில்
உணவுப்பொருட்கள் விலை 23.7 சதவிகிதமாக உயர்ந்துவிட்டிருந்தது.
இந்த விளைவுகள் இன்னமும் மோசமாகத்தான் போகக்கூடும், ஏனெனில்
PNG-யின் அதிக அளவு வருவாய் ஈட்டும் பெட்ரோலியம்
மற்றும் சுரங்கத்தொழில் சரியத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு பத்து ஆண்டுகளில் மிகக்குறைந்த ஏற்றுமதி
வருமானமே கிடைத்தது, 2001- ஐவிட 200K மில்லியன்
குறைந்துவிட்டது.
அரசாங்கத்தின் மீது பன்னாட்டு நிதி அழுத்தம் மலைபோல் பெருகிவிட்டது. தேசிய மீன்
கழகத்தின் தலைவர் டாக்டர். அன்டனி லெவிஸ் என்ற புலம்பெயர்ந்த ஆஸ்திரேலியருக்குப் பதிலாக மொலன் சப்போ
(Molan Chappau)-வை நியமனம் செய்தது, தகுதி
அடிப்படையில் இல்லாமல் அரசியல் அடிப்படையில் என்று குற்றம் சாட்டி,
ADB தான் தருவதாகக் கூறிய K-140- மில்லியன்
தொகையை நிறுத்தி வைத்தது. ADB யும் உலக வங்கியும்
PNG பழைய அரசியல் தொடர்புகள் மற்றும் புரந்து வரும்
நிலைமையைக் கீழறுக்க நோக்கங்கொண்டுள்ளன மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை திணித்து வருகின்றன.
National âன்ற
இதழில் ஒரு மூத்த அரசாங்க அதிகாரியை மேற்கோளிட்டு ஜூன் 5ந் தேதி வந்துள்ள கட்டுரையில், நிதிவருவாய்
நெருக்கடியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ''தவிர்க்கப்படமுடியாத வீழ்ச்சியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கு
இன்னமும் ஒரு தேவையான திட்டத்தை அரசாங்கம் போடவில்லை; இப்பொழுது நாங்கள் அடிப்படைத் தேவைகளுக்குக்
கூட பணமில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். செலவழிக்கப்பட வேண்டியவற்றிற்குப் பணமில்லை. பொதுத்துறை
ஊழியர்கள் சரியாக வேலை செய்ய முடியவில்லை, பணிகளை நடத்தவில்லை ஏனெனில் அவர்கள் செய்ய வேண்டிய
வேலைக்குத் தேவையான பணம் இல்லை.''
பல வணிகர்களும் சோமரேயின் அரசாங்கத்தின்பால் மனக்குறையை வெளியிட்டுக்
கொண்டிருக்கின்றனர். PNG
-ன் வர்த்தக மற்றும் தொழிற்துறை அவையின் (Chamber
of Commerce and Industny) தலைவர் மைக்கல் மேபெர்னி
(Michael Mayberny)
அண்மையிலுள்ள சாலோமன் தீவுகளில் பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பு அடியோடு தகர்ந்து விட்ட நிலையைத்தான்
நாட்டு நிலையோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளார். ''வணிகங்கள் தத்தளிக்கின்றன; சொலோமன் தீவுகள் கடந்த
பாதையையே நாமும் இரங்கத்தக்க அளவில் கடந்து கொண்டிருக்கிறோம்" என்றார்.
மே 6-ந்தேதி,
Anstralian Finacial Review கட்டுரை
ஒன்றில் சில வட்டிவிகிதங்கள் 33-சதவிகிதமாகப் போய்விட்டன என்றும்
PNG வணிகச்சமுதாயம்,
புதிய அரசாங்கத்திற்கு 8-மாத காலம் கருணை அவகாசம் கொடுத்த பின்னர், இப்பொழுது ''நாட்டின் வருங்காலத்தைப்
பற்றி நம்பிக்கையிழந்து புலம்பத்தலைப்பட்டுவிட்டது'' என்று குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரேலியத் தலையீட்டிற்கு அழைப்புக்கள்
ஆஸ்திரேலிய அறிக்கைகள் பலவற்றில் PNG
யின் சரிந்துவரும் பொருளாதார நிலை ஆராயப்பட்டு கான்பெர்ரா தன்னுடைய பழைய குடியேற்ற நாட்டின்
மீது திறனுடைய பார்வையைச் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளன.
Centre for Independent Studies என்ற
பழைமைவாத அமைப்பு மார்ச் மாதம் பாப்புவா நியூ கினி சரிவின் விளிம்பில் உள்ளது என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளதோடு
இதில் ''கூடுதலான செயல்முறையுடன் அணுகவேண்டும்'' என்று வற்புறுத்தி உள்ளது.
தேலைப்பட்டால், ஆஸ்திரேலிய அரசாங்கம் ''புதிய காலனி முறையில் ஈடுபட முயற்சிக்கிறது,''
என்ற குற்றச்சாட்டை ஒதுக்கி வைத்து நாடு 'இறுதிக்கட்டச் சரிவினால்' நசிந்து போகாமல் இருக்கும் பொருட்டு இராணுவத்
தலையீடு கூடச் செய்யலாம் என்று கூறியுள்ளது. இது PNG-
ல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டுரையை இணைந்து எழுதிய ஆசிரியர்களில் ஒருவராகிய
Mike Manning ஒரு பெரிய வணிகத்துறை புள்ளியாக
PNG- யில் இருப்பவர். அவர்
PNG- யின் பாராளுமன்ற உரிமைக்குழுவின் முன் விளக்கமளிக்க
கூப்பிடப்பட்டார். அவர் சிலவேளை பாராளுமன்றத்தை இழிவு செய்த குற்றத்திற்காக குற்றச்சாட்டுக்களைச் சந்திக்க
நேரிடலாம்.
ஒரு மாதம் கடந்த பின்பு, CIS
உயர்நிலை வல்லுநரும் உலக வங்கியில் முன்பு பொருளாதார ஆய்வு இயக்குனராக இருந்தவருமான பேராசிரியர்
ஹெலன் ஹ்யூக்ஸ், பசிபிக்கில் உதவிகள் தோல்வியுற்றன- என்ற தலைப்பில் மற்றொரு ஆவணத்தை வெளியிட்டார்.
அந்த அரசாங்கம் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள அடிபணியவைக்கும் அளவிற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம்
அனைத்து உதவிகளையும் PNG- க்கு கொடுப்பதை நிறுத்த
வேண்டும் என்று இந்த அம்மையார் வாதிட்டுள்ளார். ''பசிபிக் அரசாங்கங்கள் தங்கள் பொருளாதாரங்களைச் சீரமைத்து
வரவுசெலவுத் திட்டங்களை சமன்படுத்துவதற்காக, வரவு செலவு திட்டங்களில் இருந்து உதவித்தொகை அளிப்புக்கள் பாய்வது
உடனே நிறுத்தப்பட வேண்டும்'' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
PNG -யில் சுகாதார அமைப்பு அயலுதவியை
நம்பியிருக்கும் நிலையில் இந்தத் கொள்கை ஆயிரக்கணக்கான மக்களின் விரைவான இறப்பு ஏற்படக் காரணமாகிவிடும்.
அப்படிப்பட்ட கொள்கை மாற்றம் வராது என்றும் ''தீவிரமான கொள்கை மாறுதல்களை ஏற்படுத்துவது கடினம்''
என்றும் ஹக்ஸ் (Hughes)
கூறியுள்ளார்.
அவருடைய அடுத்த சிறந்த மாற்று முறை "பரஸ்பரக்கடமை என்ற கோட்பாட்டின் கீழ்"
மற்றும் ''இலக்குகள் எய்தப்பட்டதற்கான சான்றுகள் மற்றும் அதற்கான கணக்குகள் தணிக்கை செய்யப்பட்ட அளவில்
மட்டுமே" உதவித்தொகைகள் வழங்கப்படவேண்டும் என்பதாகும். வேறுவிதமாகக் கூறுவதானால்,
PNG- கூடுதலான
ஆற்றலுடன் தனியார்மயமாக்குதல், அரசாங்கச் செலவீனங்களைக் குறைத்தல், முதலீட்டிற்குப் பொருளாதாரத்தைத் தயார்
செய்தல் ஆகியவை கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே பொருளாதார உதவி வழங்கப்படும்.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மூலோபாயக் கொள்கை நிலையத்தினால் ஜூன் 10-ந்தேதி
வெளியிடப்பட்ட, வேறு ஒரு அறிக்கையான "Our
Failing Neighbour" ஒரு சொலோமன் தீவுகளில்
சட்டம் ஒழுங்கை மீட்பதற்கு ஆஸ்திரேலியா தலைமையில் 150-பேர் கொண்ட பன்னாட்டு போலீஸ் படை ஒன்று அனுப்பப்பட
வேண்டும் என்பதாகும். இந்த அறிக்கை, தேசிய இறையாண்மையை சம்பிரதாய அளவில் கடைப்பிடிப்பதைக்கூட ஆஸ்திரேலியா
தட்டிக் கழித்து இருக்கிறது என்ற மட்டத்திற்கு கோடிட்டுக் காட்டுகிறது. ஆஸ்திரேலியர் குறிப்பிடுவது போல், இந்தக்
கொள்கை ''தேவையானால் ஆஸ்திரேலியா இப்பகுதியில் தலையிடத் தயாராக உள்ளது என்ற செய்தியை தெற்கு
பசிபிக்கிலுள்ள மற்ற நாடுகளுக்கு உணர்த்திவிடும்" என்று குறிப்பிட்டுள்ளது.
முர்டோக்கின் சொந்தப் பத்திரிகையான ஆஸ்திரேலியன்' மே 29-அன்று தலையீட்டுக்கான
தேவையை மிகவும் வெளிப்படையாக அறிவித்ததாவது: "பாப்புவா நியூ கினி அதிலும் சொலோமோன் தீவுகளில் கூடுதலான
அளவில், ஏராளமான இளைஞர்கள் சரியான கல்வி இன்றி, முன்னேற்றம் எதுவுமில்லாமல் முற்றிலும் அந்நியப்பட்ட நிலையில்,
வன்முறைச் சமுதாயமாய் மற்றும் துப்பாக்கிகளைப் பெறும் நிலையில் உள்ளனர். இந்தச் சமுதாயத்திற்கு உதவி செய்ய
வேண்டுமானால், நிச்சயமாய் இராணுவத்தை ஈடுபடுத்துவதுடன் உதவியை நாடாமல் முடியாது.''
அரசியலில் உறுதியற்ற தன்மை
எட்டுமாத காலமாக மட்டுமே ஆட்சிசெலுத்திவரும் சோமரேயின் 13- கட்சிக் கூட்டணி
தீர்க்க முடியாத சங்கடத்தை எதிர்நோக்கியுள்ளது. எயிட்ஸ் நோய் தொற்றுதலை முன் கண்டறிவது உட்பட, மிகப்பெரிய
அளவிலான சமுதாயப் பிரச்சனைகளைச் சமாளிக்க அதனிடம் மிகவும் குறைந்த அளவு வளங்களே உள்ளன. அதே நேரத்தில்
மிக அவசரமாகத் தேவைப்படும் பணத்திற்கு முடிச்சுக்களின் கயிறுகளைத் தளர்த்தித் தருவது ஆஸ்திரேலியாவிடம் உள்ளது
மற்றும் அது IMF - ஆதரவு அடிப்படைக் கட்டமைப்பை சரிசெய்தல்
திட்டத்தைக் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருகிறது. இந்தக் கொள்கைகள்
PNG- யின் தீர்க்கமுடியாத உறுதியற்ற நிலையைத் தாங்கி
நிற்கும் சமூக மனக்கிலிகளைத் தோற்றுவித்துள்ளன.
ஆளும் கூட்டணிக்குள் ஏற்கனவே அதிக அளவுள்ள பிளவுகளை இந்தப் பொருளாதார
அழுத்தம் மேலும் கூடுதலாக ஆக்கியுள்ளது. Post Courier-
ன் படி, சோமரேயின் கட்சியான தேசிய கூட்டணி சமீபகாலமாக மூன்று பிளவுபட்ட குழுக்களாக செயல்பட்டுவருகிறது.
மே மாதம் தேசியக் கூட்டணிக்குள்ளே சோமரேக்கும் பிலிமோனுக்கும் இடையே பெரிய பிளவு தோன்றியது.
ஒரு பாராளுமன்றக் கூட்டத்தின்பொழுது, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட அரசாங்க
நிறுவனங்களை விற்பதிலிருந்து பெறும் K -200 மில்லியனை ஈடுசெய்ய
அரசாங்கம் தவறிவிட்டதைப் பற்றி கேள்விகேட்கப்பட்டபொழுது, சோமரேயைத் தாக்கும் வகையில், ''அரசாங்கத்தின்
நிலைப்பாடு என்ன என்பது பற்றி எனக்கு உண்மையிலேயே தெரியாது'' என பிலிமோன் பதில் கூறினார். சோமரே
அரசாங்க உடைமைகளை விற்பதில் சாக்குப்போக்கு கூறுவதாலும் தனியார் மயமாக்கும் துறையை தடுப்பதாலும் இப்படி
அறிவித்தார்.
பாப்புவா நியூ கினி செய்தி ஊடகத்தில் வந்த சில கட்டுரைகள் பிலிமோனை நீக்கும் வகையில்,
சோமரே தன்னுடைய அமைசரவையை மாற்றியமைக்க இருந்தார் என்று ஊகித்தன.
post Couner ன் கருத்துப்படி அரசியல்
தலைமைக்கு எதிர்கால சவாலை வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக அது இருந்தது.
Southern Highlands- ல் சமீபத்தில்
முடிந்த தேர்தலில் ஆறு இடங்களில் ஒன்றைக்கூட தேசிய கூட்டணியால் கைப்பற்ற முடியாமற்போய் தோல்வியடைந்து,
பூசல்களை அதிகரித்துள்ளது. கடைசி வாரங்களில் அங்கேயே தங்கியிருந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட
சோமரேக்கு முடிவு கன்னத்தில் பட்ட அடி மட்டுமல்லாமல், கூட்டணிக்குள் இருந்த சக்திகளின் சமநிலையை மாற்றி
உறுதியின்மையை அதிகப்படுத்திவிட்டது. மக்கள் தொழிற்கட்சி (Peoples
Labour Party), மக்கள் நடவடிக்கைக் கட்சி (Peoples
Action Party) மற்றும் மக்கள் முன்னேற்றக் கட்சி (Peoples
Progress Party) ஆகியவை தலா ஓர் இடத்தைப்பெற்ற
அளவில் பெரிய காபினட் அந்தஸ்து உடைய பதவிகள் தத்தம் கட்சிக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தக் கூடும்.
மே மாத இறுதியில் நிகழ்த்திய ஒரு எதிர்பாராத நடவடிக்கை மூலம், சோமரே
பிலிமோனை அகற்றுவதாக இல்லையென்றும் தனக்குப்பின் அவரே கூட்டணியின் தலைவராக வருவார் என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வணிக வட்டத்தில் களிப்புடன் வரவேற்கப்பட்டது; பிலிமோன் அவர்களால் வணிகச்சார்புடையவர் என்று
கருதப்படுகிறார்; ஏனெனில் முந்தைய வலதுசாரி மொராட்டா
(Morauta) அரசாங்கத்தில் அவர் கருவூலத் தலைவராகச் செயல்பட்டவர்.
அரசாங்கத்திற்குள் முணுமுணுப்புக்கள் தொடர்கின்ற வண்ணம் இருக்கின்றன. மார்ச் மாதம்
அதனுடைய பாராளுமன்ற பின் கதிரைக்காரர்கள் அரசாங்கத்திற்கு அதன் பெரிய சட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பதை
நிறுத்திவைப்போம் என்று கூறிவிட்டனர். ஏனெனில் அவர்கள் தங்கள் தொகுதி வளர்ச்சிக்கான 500,000K
நிதியத்தை இன்னமும் பெறாமலிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் இத்தகைய சகதிப்பணங்கள்
கொடுக்கப்பட்டால்தான் மறுதேர்தல் வெற்றிவாய்ப்பிற்கு அவை முக்கியமாக இருக்கும் என்ற நிலை உள்ளது. அரசாங்கம்
சட்டப்படி இதைக்கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், கஜானாவில் போதுமான பணமில்லாததால் இவை
கொடுக்கப்படவில்லை என்று அது கூறுகின்றது.
சோமரேயின் கூட்டணி இவ்வாறு பன்னாட்டு நிதி அழுத்தத்தால் ஆட்டம் கண்டுள்ளதுடன்,
இந்நிலைமை ஒரு பொருளாதார அரசியல் நிலைமுறிவை ஏற்படுத்தும், அது நேரடி ஆஸ்திரேலியத் தலையீட்டை ஏற்படுத்துதற்கான
உந்துதலாய் சேவை செய்யும்.
|