:
கலை
விமர்சனம்
Toronto International Film Festival 2002: Why are there so many
disappointing films?
டொறண்டோ சர்வதேச திரைப்பட விழா 2002: ஏன் அதிகளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தும்
திரைப்படங்கள் உள்ளன?
Part 2
By David Walsh
23 September 2002
Use this version to print
|
Send this link by email
| Email the author
செப்டம்பர் 5 தொடக்கம் 14 வரை இடம்பெற்ற டொறண்டோ சர்வதேச திரைப்பட
விழா பற்றிய தொடர்ச்சியான கட்டுரைகளில் இது இரண்டாவதாகும்.
அண்மையில் டொறண்டோ திரைப்பட விழாவில் பெரும்பாலான திரைப்படங்கள் முற்றிலும்
ஏமாற்றத்தை தந்தன. பொதுவாக நோக்கினால் அவை, அவைகளின் தயாரிப்பாளர்களின் முன்னைய படைப்புகளினால்
ஏற்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகளை அடையத் தவறிவிட்டன. பொதுவாக ஏமாற்றந்தரும் செயல்களை எதிர்ப்பது மற்றைய
ஒவ்வொரு துறையிலும் உள்ளது போலவே சினிமாவிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஒவ்வொரு கலைஞனும்
முன்நோக்கிச் செல்ல தீர்மானிப்பதில்லை. இருந்தபோதும் சில திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒரேயொரு ஆழமான
படைப்பையே அவர்களுக்குள் கொண்டுள்ளனர். மேலும் பங்காற்றுவதற்கு தலைவிதிக்கப்பட்டவர்களுக்கு கூட கால் ஊன்ற
நேரம் தேவைப்படலாம். ஓர் உறுதியான ஆரம்பத்திற்கு பின்னர், ஒரு திரைப்பட இயக்குனரோ எழுத்தாளனோ பிழையான
திருப்பத்தை எடுக்க முடியும். அல்லது இன்னும் பாரிய நோக்குகள் மற்றும் கிராக்கியான கருத்திட்டங்களுக்கு முகம்
கொடுக்கவும் தள்ளாடவும் வேண்டி ஏற்படுகின்றது..
எப்படியாயினும் ஏமாற்றம் குறிப்பிடத்தக்களவு கவனிக்க கூடிய ஒரு காட்சியாக
அமையுமாயின், இது அதிகளவு பொதுவானதொரு பிரச்சினைக்கு இட்டுச் செல்லும். அவர்களின் தொழில் விருத்தியின்போது
தற்போது உள்ள ஒரு சில இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களே ஆழமாக, கனிந்தும், அதிகளவு முதிர்ச்சியும் பெறுவது
ஏன்? பின்னடைவு என்பது ஏன் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து, விதிவிலக்கு போல் நில்லாது விதியாகவே ஆயிற்று?
விமர்சகரோ அல்லது பார்வையாளரோ ஆரம்பத்திலிருந்து போதுமானளவு விமர்சனத்
தன்மை இல்லாது இருப்பதால், அவனோ அல்லது அவளோ திரைப்படத் தயாரிப்பாளரிடமிருந்து அல்லது திரைப்படத்திலிருந்து
மேலதிக விருப்பமான எண்ணங்களில் ஆழ்ந்திருப்பதற்கு காரணமாகலாம். கலாச்சார (பண்பாட்டுச்) சூழல் ஒப்பீட்டளவில்
இருண்டதாக உள்ளமையால் இவ்வாறானவை ஏற்படுகின்றன. நாம், மிக அளவுக்கு மிஞ்சிய "ஆவல் நிறைந்த
சிந்தனைக்கு" பதிலாக திரைப்படத் தயாரிப்பாளருக்கு "சத்தேகத்தின் அனுகூலங்களை வழங்குவது" அல்லது "உற்சாகத்தைக்
கொடுப்பதோடு" மட்டுமல்லாமல், விமர்சனத்துக்கு அல்லது வாசகருக்கு மிகவும் அரிதாக பரிசளிக்கும் கலைஞனுக்கு,
ஆக்கபூர்வமான ஆதரவின் நீடிப்புக்கான ஆரம்பத்தை சாத்தியமாக்கும் புதிய படைப்பை அல்லது ஒரு தொடர்ச்சியான
படைப்புக்களை சுட்டிக் காட்டுவோமானால், அப்போது நாம் தெளிவுபடுத்தவேண்டியுள்ள வேலைத்திட்டத்துக்கு மீண்டும்
ஒரு முறை முகம் கொடுப்போம்: ஒரு பரந்ததும் தொடர்ந்து நிகழ்வதுமான வீழ்ச்சி.
இந்த வருட திரைப்பட விழாவில் குறிப்பிடும்படியாக அதிகளவு ஏமாற்றத்தை ஏற்படுத்திய
திரைப்படங்களில் மைக்கல் அல்மேராயடாவின் 'மகிழ்ச்சி, இங்கே, இப்போது' (Happy
Here and Now) லின்னே ரம்சியின் மோவேன் கோளர் (Morvern
Callar) புருட் சானின் 'பொதுக் கழிப்பிடம்' (Public
Toilet) மற்றும் மொகமட் சலே ஹறோனின் அபூணா (Abouna)
ஆகியவையும் அடங்கும். இத் திரைப்படத்
தயாரிப்பாளர்கள் அனைவரும் முன்னர் நம்பிக்கையூட்டும் படைப்புக்களை அளித்திருந்தனர்.
அல்மேராய்டாவின் ஹேம்லட் (2000) ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். அவருடைய
தொழிலில் ஒரேயொரு பிரகாசமான புள்ளியாக இது அமையக்கூடும். ஹப்பி ஹியர் அன்ட் நெள (Happy
Here and Now), நியூ ஓர்லீன்ஸ் இல் காணமற் போன பெண்ணை தேடுவது பற்றிய ஒரு சுய
விருப்பம் மற்றும் சுய சிந்தனையுடைய ஒன்றாகும். உண்மையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ரம்சியின் முதற் திரைப்படமான எலி பிடிப்பவன் (Ratcatcher)
(1999) பரந்தளவு பாராட்டப்பட்டது. "புதிய ஸ்கொட்லாந்து சினிமா" வின் அங்கமாக கருதப்பட்டது. இந்தச்
சொற்றொடர் எவரையும் வருத்தும், இயக்குனரின் இரண்டாவது படமோ நம்பும்படியுமில்லை, ஈர்ப்பதாயுமில்லை. ஒரு
கிறிஸ்துமஸ் தினக் காலையில் தன் நண்பன் தற்கொலை செய்ததைக் காண்கிறாள் ஒரு பெண். அவனுடலை அப்புறப்படுத்தி,
புதைத்துவிட்டு அவனால் எழுதப்பட்டு வெளிவராத புதினத்தைத்தான் எழுதியதாகக் கூறிக்கொள்கிறாள். முடிவில்
கிளாஸ்கோ நகரத்துத் தொழிலாளர் வாழ்வில் நிறைவுறாது, புத்தகப் பதிப்பாளர் தந்த ஒரு லட்சம் பவுண்டுடன் விலகுகிறாள்.
"நம்பிக்கை ஈட்டல்" (Good Will Hunting)
அல்லது எரின் ப்ரொகொவிச் (Erin Brockovich)
என்பவற்றில் முக்கிய இடம்பெறும் கடைசி நிமிட சுயநலத்தை விட இது எவ்வாறு சிறந்ததாகக் கருதப்பட முடியும்?
ஹொங்கொங் திரைப்படத் தயாரிப்பாளர் புருட்சன் இரு புத்திசாலித்தனமான மற்றும்
உணர்ச்சிமிக்க திரைப்படங்களை லிட்டில் செயுங் (Little
Cheung) மற்றும் டூரியன் டூரியன் (Durian
Durian) (2000) ஆகியவற்றில் படைத்தார். குறிப்பிட முடியாதளவு சுவையற்ற மற்றும் கருத்தற்ற
பொதுக் கழிப்பிடம் (Public Toilet
என்ற படத்தை தருவார் என யார்தான் முன்கூட்டியே ஊகித்திருப்பார்கள்? சாட்டிலிருந்து (Chad)
மஹமெட் சலே ஹரெணனின் பாய் பாய் அப்ரிகா (Bye Bye
Africa) (1999) உணர்ச்சிகளை கொண்டிருந்ததோடு சுய விமர்சனமுடைய பிடிகளை
கொண்டிருந்தது. அபூணாவில் (Abouna)
ஒன்றுமே இல்லை.
க்யரோஸ்ராமி, கோதார் மற்றும் ஏனையவர்கள்
ஈரானிய திரைப்படத் தயாரிப்பாளர் அபாஸ் கையறோஸ்டாமியினால் இயக்கப்பட்ட
10, சற்று மாறுபட்ட வகையைச் சார்ந்தது. பெரும்பாலும் தாய்க்கும் மகனுக்கும் இடையிலான 10 உரையாடல்களை
கொண்டுள்ள இத்திரைப்படம் பலவீனமானதாக உள்ளது. ஒரு சிறிதளவு சுதந்திரத்தை வெல்லும் முயற்சியில் அந்தப் பெண்
கணவரிடமிருந்து பிரிந்துள்ளமை அப் பையனுக்கு பெருமளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் எதையுமே அவரது மகன்
பெற்றுக்கொள்ளப் போவதில்லை, இந்த நிலைமைக்கூடாக மற்றும் நடத்தை மூலமாக ஈரானிலுள்ள பெற்றோருக்குள்
தொடரும் சுமை மற்றும் அடக்குமுறையான சமூக உறவுகளை விளக்குவதற்கு க்யோரோஸ்ராமி முனைகின்றார் என வைத்துக்கொள்வோம்.
பெரும்பாலான பகுதிகளில் தாயும் மகனும் மாத்திரம் எரிச்சலை ஏற்படுத்துகின்றதுடன் உபயோகமற்றதாகவும் மற்றதில்
சுய சிக்கலுக்குள்ளும் உள்ளனர்.
இத்திரைப்படம் "ஏமாற்றத்தை ஏற்படுத்தவில்லை" ஏனெனில் ஒருவர் அவருடைய அண்மைய,
அதிகளவு படைப்புக்களின் பாதையை அடிப்படையாகக் கொண்டு இந்த மாதிரியான கஷ்டங்களை க்யரோஸ்ராமி
சந்திப்பார் என்பதை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்திருப்பார். பெரும்பான்மையான ஈரானிய இயக்குனர்கள்
தொடர்ந்து, ஈரானியப் புரட்சி, இஸ்லாமிய ஆட்சி மற்றும் வரலாற்றுச் சமூகச் சிக்கல்களைக் கையிலெடுக்காமையால்,
வேறு வழியின்றி அவர்கள் முட்டுச்சந்தில் முடிவடைவது தவிர்க்க இயலாததாகிறது. ஈரானியர்கள் குறிப்பாக சமூக
வாழ்வில் கடுமை, அந்தரங்கம், மற்றும் மனிதத்தன்மையுள்ள நாடகங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். அவர்கள் ஜனநாயக
உணர்ச்சி வேகத்தால் ஷாவுக்கெதிரான போராட்டத்தை ஊக்குவித்தாலும் அது தெஹரானிலுள்ள பிற்போக்கு ஆட்சியால்
அநியாயமாய் அடக்கி வைக்கப்பட்டது.
நாளடைவில் (குறிப்பிட்ட மனித உறவு அல்லது குழப்பம் போன்ற) ஒன்றை எவ்வளவு
ஆழமாகவும் சித்தரிக்க, ஒருவர் (நாட்டின் நிலை மற்றும் அதன் முழு வளர்ச்சி பற்றி) உலகளாவிய புரிதலைக்
கொண்டிருக்க வேண்டும் அல்லது இது சரியாக போதிக்கப்படவில்லையாயின், ஆற்றலையிழந்து பயன்பாட்டைக்
குலைக்கும். அழிவிலாக் கலைஞன் உடனடி அனுபவங்களை முழு மனித சமூகத்தின் அனுபவங்களுக்கு ஒப்பிட்டு, எது தனித்தன்மையானது
என்றும் எது பொதுவானது என்றும் உணர்ந்து கொள்கிறான். ஈரானியத் திரைப்படத்தார் பெரிய சிக்கல்களைப்
பேசுவது ஆபத்தானது. கலைத்திறனின் வீழ்ச்சியானது ஏற்கனவே தெளிவாகியுள்ளது. இதே நிலைமை தாய்வான் மற்றும்
சீன தயாரிப்பாளர்களுக்கும் குறிப்பாக உண்மையாக உள்ளது.
கவலைக்குரிய விதத்தில் சுவிஸ்-பிரெஞ்சுத் தயாரிப்பாளரும் கலையில் நீண்டகால அனுபவம்
பெற்றவருமான ஜோன் லுக் கோதார் (Jean-Luc Godard)
தொடர்ந்தும் தன்னை முட்டாளாகக் காட்டிக்கொண்டுள்ளார். அவரது பங்களிப்புகளில் ஒன்று வெளிவந்த பல படைப்புகளின்
தொகுப்பின் அடிப்படையிலான திரைப்படமான பத்து நிமிட முதியவர் (Ten
Minutes Older). î செலோ (The
Cello) என்ற படத்தில் எட்டு, பன்னாட்டுத் திரைப்படத்தார், காலத்தோற்றம் பற்றிப் பேசுகின்றனர்.
கோதாரின் இருண்மை (In the Darkness)
இல், "நான் மறைந்ததை மட்டுமே காண்கின்றேன். "சிந்தனை," "வரலாறு," "காதல்," என்பன அவற்றின் கடைசி
நிமிடங்களில் உள்ளன என ஒரு குரல் ஓசையில் ஏறி இறங்குகின்றது. கோதார் இவ்வாறு கேட்கிறார். எங்களுக்கு எப்படித்
தெரியும்? பின் சோவியத் உலகின் ஐரோப்பிய புத்திஜீவிகளின் அவநம்பிக்கை மற்றும் சீர்குலைவினை கூர்மையான வடிவத்தில்
இயக்குனர் இதில் வெளிப்படுத்துகிறார். அவர்களது சிறிய உலகு ஒரு முடிவிற்கு வந்துள்ளமையால் முழு உலகுமே ஒரு
முடிவிற்கு வந்தாக வேண்டும் என்கிறார்.
கனேடிய இயக்குனரான டேவிட் க்ரொனென்னபேர்க் -த பிளை(The
Fly), டெட் ரிங்கர்ஸ்(Dead Ringers)-
இனது பெயர் ஒருபோதும் கோதார், க்யரோஸ்ராமி ஆகியோருக்கருகே இருக்காத போதும் அவரது தொடர்ச்சியானதும்
பாரதூரமானதுமான வீழ்ச்சி அவதானிக்கப்பட வேண்டும். ராப் பியென்ஸின் ஸபைடர் (சிலந்தி),
எக்ஸிஸ்டன்ஸ் (eXistenZ) போன்று
அபாயகரமானதாக இல்லாத போதும் முக்கயமாக இது ஒரு வெறுமையான மற்றும் மனிதனை வெறுக்கின்றதான ஒரு
படைப்பாகும். இந்தக் கதையானது தனது தாயின் மேல் இனக்கவர்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சிறுவனின் உணர்வுகளை
ஒரு கொலைகார திருப்பத்திற்குள்ளாவதை உணர்த்துகிறது.
சீன இயக்குனர் சென் கைகேயின் கடைசி முயற்சி (யெல்லோ ஏர்த் -Yellow
Earth, பெயர்வெல் மை கொன்குபைன் -Farewell
My Concubine) டுகெதர் (Together)
திறமைமிக்க வயலின் வித்துவானான 13 வயதுடைய சிறுவன் தனது மாகாணத்தை விட்டு பீஜிங் சங்கீத உலகத்துக்கு
விலகிச் செல்லும் ஒரு உணர்ச்சிமிக்க படைப்பாகும். இங்கு எதுவித புதுமையானவையோ அல்லது அபூர்வமானவையோ
இல்லை. ஐந்தாவது சந்ததி என கூறப்படும் சீன இயக்குனர்கள் (சென், சாங்யிமோ மற்றும் பலர்) மேலே குறிப்பிடப்பட்ட
அதே காரணங்களுக்காக அதிகளவு தேய்ந்து போயுள்ளதாக தெரிகின்றது. முன்நோக்கு தொடர்பான கேள்விகளுக்கு
சவால் செய்ய அடிப்படையில் ஆற்றலின்மையே தவிர இது முழுமையாக அவர்களுடைய தனிப்பட்ட குறைபாடு அல்ல.
சில இயக்குனர்களுக்கு கூறுவதற்கு எதுவுமல்லாமல் பற்றாக்குறையாக ஏற்படுகையில், சிலருக்கு
ஆரம்பிப்பதற்கு கூட அவ்வளவாக ஒன்றும் இருந்ததில்லை. தகேசி கிடனோவினால் இயக்கப்பட்ட டோல்ஸ்
(பொம்மைகள்) இந்த ஜப்பானிய இயக்குனரின் திரைப்படத்தில் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்தப்படுமேயானால்
அதிகளவு செல்வதற்கு இல்லை என்ற ஒருவருடைய சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றது. இக்கதையானது தனது
குடும்பத்தாரின் விருப்புகளுக்கமைய திருமணம் செய்து, தற்போது தனது உண்மையான காதலை காப்பதற்காக மனமுடைந்து
வருந்தும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் கதை சுவாரசியமற்றதாகவும் சாதாரணமானதாகவும் உள்ளது.
ரஷ்யத் திரைப்படத் தயாரிப்பாளரான அலெக்சாண்டர் சொக்குரவ் (மதர் அன்ட்
சன் -Mother and Son, மொலொக் -Moloch)
தொடர்ந்தும் மறைந்த சோவியத் இயக்குனர் அந்ரே டாஃகோவ்ஸ்கியின் (1932-86) ஆத்மாவின் குழந்தை
என குறிப்பிடுகின்றார். தற்போதைய விமர்சனத்திலோ அல்லது சினிமாவிலோ உள்ள எவரும் இந்த கற்பனை கதை பற்றிய
சர்ச்சைக்குரிய ஏதோ அங்கு உள்ளது என குறிப்பிட தயங்குவார்கள். இருப்பினும் வெளிநாட்டில் செய்யப்பட்ட டர்கோவ்ஸ்கியின்
கடைசி இரண்டு திரைப்படங்களும் மிகவும் பரிதாபகரமாகவும் குழுப்பமானதாகவும் இருந்தது (நொஸ்டல்ஜியா -Nostalgia,
த சக்ரிபைஸ் -The Sacrifice). அவரது வெளிப்பாடுகளில்
ஸ்ராலினிச அட்டூழியங்கள் மற்றும் மிகையான அடக்குமுறைகள் அதேவேளை அவரது கிறிஸ்தவ அல்லது கடவுள் நம்பிக்கை
உடனான மனிதாபிமானமானது ஒரு வகையில் எதிர்மறையானதாகவும் ஆனால் உண்மையை கொண்டுள்ளதாகவும் இருந்ததை
இவை வெளிக்காட்டி உள்ளன. இந்த நோக்கானது நவீன உலகினைப் பற்றி அர்த்தம் தருவதற்கு மிகவும் பற்றாக்குறையான
ஒன்றென நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது கடைசி படைப்புக்களில் டார்கோவ்ஸ்கி முற்றுமுழுதாக அவரது அம்சங்களிலிருந்து
விலகியிருந்தார்.
செக்குரோவின் புதிய திரைப்படமான ரஷ்யன் ஆர்க்
(Russian Ark) 96 நிமிடங்கள் நீடிக்கின்ற ஒரு படப்பிடிப்புடன்
செய்யப்பட்ட தொடர்ச்சியான படமாக்கலால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சுக்
கல்விமானும் ஒரு கண்ணிற்படாத திரைப்படத் தயாரிப்பாளரும் சென்ட் பீட்டர்ஸ் பேர்க்கிலுள்ள ஆச்சிரம அரும்பொருள்
காட்சிசாலையில் ரஷ்ய வரலாற்றின் காட்சிகளை வழியில் சந்தித்த வண்ணம் பயணிக்கின்றனர். ஓவிய அரும்பொருட் காட்சிசாலையின்
மண்டபங்களில் பீற்றர் த கிரேட் (Peter the Great),
கதரின் த கிரேட் (Catherine the Great),
மற்றும் நிகொலஸ் I, II (Nicholas I and II)
ஆகியோர் அவர்களது பரிவாரங்கள், அரசவை அலுவலர்களுடன் காட்சிதருகின்றனர். அக்டோபர் புரட்சிக்கான பல
தவிர்க்க முடியாத விநோதமான சான்றுகள் காணப்படுகின்றன. இத்திரைப்படமானது ஒரு தொழில்நுட்ப உல்லாசப்பயணம்
ஆகும். (திரைப்படக் குழுவானது ஏறத்தாழ 900 நடிகர்களையும் துணை நடிகர்களையும் மூன்று நிஜ
இசைக்குழுக்களையும் கொண்டுள்ளது எனினும் வேறு எதுவும் இல்லை.
செக்குரோவின் கதாபாத்திரங்களின் மொழியானது, "நான் கண்களைத் திறக்கின்றேன்
எனக்கு ஒன்றும் தெரியவில்லை. எனக்கு என்ன நடந்தது என ஞாபகம் இல்லை என யாரோ கூறுகின்றார்கள், இது
கோதாரினை (Godard) நினைவூட்டுகின்றது. கண்ணுக்குத்
தென்படாத இயக்குனர் ரஷ்யாவின் சோகவரலாறு என கூறப்படுவதை விளக்கமாக குறிப்பிடுகையில் "ஆசியர்கள்
கொடுங்கோலர்களை விரும்புகிறார்கள். கொடுங்கோலர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமோ அவ்வளவுக்கு அவ்வளவு
நினைவுகளில் இருப்பார். இதன் பொது நடையானது நம்பிக்கையற்றது, ஆரோக்கியமற்றதுடன் இனிமையற்ற வேறொரு
உலகியலுக்கு உரியது.
பின்னடைவே ஏன் விதியானது?
"பின்னடைவுகள் விதிவிலக்குகளைவிட வழக்கில் இருப்பது ஏன்? திரைப்படத் தயாரிப்பாளர்களின்
அத்தியாவசியமான அறிவுபூர்வமான மற்றும் கலை மட்டத்தை அடைய அல்லது பற்றிக் கொள்ளத் தவறியுள்ளமை அவர்களை
பின் புறமாக நழுவிக்கொள்வதை மிக இலகுவாக்குகின்றது என்பதை குறிப்பிடுவது நியாயமானதாக தோன்றுகின்றது.
அந்த "உயரம்" என்னவாக இருக்கும்?
கடந்த சில தசாப்தங்களாக குறிப்பாக முதலாளித்துவம் பற்றிய பொதுவாக எதிரான
கருத்துக்களும் சோசிலச விமர்சனங்களும் கலை வட்டத்திற்குள் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 1964 போன்ற
முன்னொரு காலத்தில் ஏகென்ஸ்ட் இன்டர்பிரிட்டேஷன் (Aginst
Interpretation- அர்த்தம் கொள்ளலுக்கு எதிரான) என்ற அவருடைய பிரசித்தமான கட்டுரையில்
சுசான் சொன்டாக் விவாதித்திருப்பது போல நவீன கலைகள் திருப்தி மற்றும் அர்த்தப்படுத்தல்களால் அதிக பளுவேற்றப்பட்டுள்ளன.
அர்த்தம் கொள்ளலானது கலைப்படைப்புக்களின் உணர்வுபூர்வமான அனுபவங்களை உண்மையென கொள்கின்றது. தற்போது
முக்கியமானது என்னவெனில் தமது பலன்களை மீளப் பெறுவதாகும். உள்ளணர்வு மற்றும் அபிப்பிராயத்துடன் உணர்வுகளும்
கலையில் தற்காலிகமாகவேனும் வெற்றிபெற்றுள்ளதாக ஒருவர் தெரிவித்தாலும் அது பாரிய இழப்புக்களை ஏற்படுத்திய
ஒரு வெற்றியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான போலியான அல்லது உண்மையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் சமகாலத்து
திரைப்படத் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்ட தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் நினைவுகள் அல்லது வரலாற்று
சம்பவங்களையே ஆச்சரியமூட்டும் உணர்ச்சி சம்பந்தமாக விளக்குவதில் தமது ஆற்றலை காண்பிக்கின்றனர். முதலாவதாகவும்
முதன்மையாகவும் சீன மற்றும் தாய்வான் திரைப்பட தயாரிப்பாளர்களை, இவர்களில் ஒரு சில இளையவர்கள் உட்பட
ஒருவர் நினைப்பாராயின் இது ஒரு பூகோள ரீதியான வரலாற்று காட்சியாகும். (சொக்குரோவின் திரைப்படம் அசாதாரணமான
வரலாற்று மின்தயாரிப்புகள் சிலவற்றை கொண்டுள்ளது: மைக் லெய்யின் டொப்சி-டேர்வி (Topsy-Turvy)
அந்த அம்சத்தை அதனில் கொண்டிருந்தது.)
சில சந்தர்ப்பங்களில், விபரங்களில் மீள் தயாரிப்புகள் அதிகளவு செம்மையாக
இருப்பதால் சமூகத்திற்கு கூட பரவுகின்றது, உதாரணமாக வகுப்பு தொடர்பான விளைவுகள் மற்றும் ஒடுக்கப்படுதல்
என்பவற்றை அடையாளம் காணுதல், உதாரணமாக புரூட்சன் மற்றும் சிலரின் குறிப்பிட்ட வேலைகளை குறிப்பிடலாம்.
எவ்வாறெனினும் அதிகளவு திரைப்பட கலைஞர்களின் தொடர்ச்சியான கூர்ப்பு ஆனது இந்த சமூக விபரங்களை அவர்களுடைய
நாடகங்களின் பின்புற காட்சிகளின் ஒரு அம்சமாக கருதுவதையே நிரூபிக்கின்றதே அன்றி அதன் முக்கியமான பாத்திரத்தை
அல்ல. சுவாரசியமான மற்றும் அறிவுபூர்வமான வேலைகளைச் செய்த பின்னரும் கூட அதிகளவு தவறான வழிகாட்டல்
மற்றும் விபரீதமான திக்குகளுக்கு செல்லலாம். அவர்களுக்கு உதவும் அல்லது வழிநடத்தும் சமூக வாழ்க்கை பற்றிய ஒரு
தெட்டத் தெளிவான எண்ணத்தை அவர்கள் வரைந்துகொள்ளவில்லை.
கொடுக்கப்பட்ட சமூக சூழலை மீளத் தயாரிக்கும் ஆற்றலானது தொழிநுட்ப சாதனைகளின்
தரத்தை கொண்டுள்ளது. (உதாரணமாக மொழிபெயர்ப்பு கலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண முன்னேற்றங்கள்
இதை ஒத்த உதாரணமாகும்.) இந்த செயற்பாடுகள் செம்மையான உணர்வுபூர்வமான கலைக்குரிய கதாபாத்திரங்களிலிருந்து
தனிப்பட்ட அனுபவங்களை நோக்கிய பிரயோகங்களுக்கு பகுதியளவில் தன்னிச்சையாக மாறமுடியும். இது எமது காலத்தில்
மனித நிலைமையின் சாராம்சத்தை பெருமளவு ஒத்திருப்பதை போன்றதல்ல. அது, தவிர்க்க முடியாத, மனிதாபிமானத்திற்கெதிரான
நெருக்கடியைக் கிடுக்கிப்பிடி போடுவதுபோல் முதலாளித்துவத்தின் தொடர்ந்த அனுபவமாக, நெருக்கடியின் தாக்கங்களாய்
இருக்கும். அதற்கு, விஞ்ஞானம், சிந்தனை மற்றும் திட்டமிடப்பட்ட, புரட்சிகரமான பகுப்பாய்வும் ஒன்று சேர
வேண்டும்.
குறிப்பாக பல திரைப்படங்களின் உணர்வுள்ள "கொள்வனவுகளும்" ஆழமான சமூக
போக்குகளின் தொடர்புள்ள படத் தயாரிப்புகளும் மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளன. இந்தப் படைப்புக்கள் சில
அம்சங்கள், கிளர்ச்சியூட்டும் உணர்வுகள், ஞாபகங்கள் என்பவற்றையே எடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. மேலும்
இவை நடைமுறை உண்மைகளுக்கு மிகவும் அற்பமான கண்ணோட்டத்தையே வழங்குகின்றன. படத்தயாரிப்பாளர்கள் ஒரு
பிரச்சினைக்கோ நிலைமைக்கோ செய்யப்படும் வரலாற்று ரீதியான அணுகுமுறையை நிராகரிப்பதன் மூலம் பகுத்தறிவற்ற
ஒரு காட்டுமிராண்டித் தனமான நம்பிக்கையை உருவாக்குகின்றனர். அனைத்துமே மேலோட்டமானவையாகவும் உடனடியானவையாகவும்
உள்ளன. ஆயினும், நிகழ்காலத்தினின்று கடந்த கலத்தைப் பிரித்தல் என்பது வெறும் முகப்புத் தோற்றமே ஆழமோ,
உண்மையோ இல்லாதது என்று மார்க்சிஸ்டுகள் புரிந்துகொண்டுள்ளனர்.
அதிகளவு திரைப்படத் தயாரிப்பாளர்களின் கூர்ப்பு ஏமாற்றத்தை தருவது பணம் மற்றும்
புகழ் என்பவற்றால் உருவாக்கப்படும் அதிகளவு அழுத்தமே என சிலர் வாதாடலாம். இச்செய்முறையை அதிகரிப்பதில்
இவ் அழுத்தங்கள் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில்
நாவலாசிரியனோ கவிஞனோ இவ்வாறான ஒன்றிற்கு முகம் கொடுக்கவில்லை, அவனோ அல்லது அவளோ பலதசாப்தங்களுக்கு
அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தனியாக விடப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அழுத்தங்களுக்கான
சுட்டிக்காட்டல்கள் ஏன் தற்போதைய திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்தளவு அதிக நம்பிக்கையை காட்டிய போதும்
ஏன் மிக வேகமான வீழ்ச்சி அடைகின்றனர் என விளக்கவில்லை.
எனது கருத்துப்படி, எண்ணங்களுக்கான குறைபாடு மற்றும் குறிப்பாக வரலாற்று விளக்கங்களுள்
மற்றும் ஆழமான சமூக உணர்வுகளுக்கான குறைபாடே பதிலாகும். தற்போது பெரும்பான்மையான திரைப்பட கலைஞர்கள்
உறுதியாக இருப்பதற்கும் தமது ஆய்வினை விரிவாக்குவதற்கும் மிகவும் குறுகிய அறிவுபூர்வமான அடித்தளத்தையே பேறாகப்
பெற்றுள்ளனர். ஆகையால் அவர்களின் பின்னடைவும் மற்றும் பார்வையாளர்களின் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.
Top of page
|