World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈராக்New York Times discovers the opposition to war in Iraq ஈராக்கிற்கு எதிரான போருக்கு எதிர்ப்பை கண்டுபிடித்த ''நியூயோர்க் டைம்ஸ்'' By Bill Vann ''நாட்டில் ஒரு சிலிர்ப்பு'' என்ற தலைப்பில் நியூயோர்க் டைம்ஸ் ஜனவரி 20ந் தேதி தலையங்கம் எழுதியிருக்கிறது. ஈராக்கிற்கு எதிரான புஷ் நிர்வாகத்தின் போர் முயற்சிக்கு எதிராக உருவாகியுள்ள வெகுஜன இயக்கத்திற்கு காலம் கடந்து, மிகுந்த அகந்தையோடு நியூயோர்க் டைம்ஸ் வரவேற்பு அளித்திருக்கிறது. விபரம் தெரிந்த சகிப்புத்தன்மையுள்ள ஒரு அமைப்பைப் போன்று வேடமிட்டு டைம்ஸ் வாய் ஒழுக தனது வாழ்த்துக்களை வழங்கியிருக்கிறது. ஜனவரி,18-அன்று வாஷிங்டன், சான் பிரான்ஸ்சிஸ்கோ மற்றும் நாடு முழுவதிலும் இதர நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் லட்சக்கணக்கான மக்களை அணிதிரட்டி இருந்தன. இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களை சட்டபூர்வமான "ஆரம்பகட்ட விவாதம்" என்று அந்தப் பத்திரிகை வர்ணித்தது. இந்த விவாதம் புஷ் நிர்வாகத்தையும் அமெரிக்க மக்களையும் உள்ளடக்கியது என்று கூறப்படுகிறது. உறைபனி நிலையில் அமெரிக்க தலைநகரில் அணிவகுத்து வந்த மக்கள் பட்டாளம் "தேசபக்தியின் பெயரால் ஜனாதிபதி உத்தேசித்துள்ள போரின் பின் விளைவுகள் குறித்து அதன் செலவினங்கள் அதன் அடிப்படைகள் பற்றி சில நுட்பமான கேள்விகளை எழுப்பியிருப்பதாகவும்" அந்தப் பத்திரிகையின் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றது. அமெரிக்காவில் இன்றைய அரசியல் உறவுகள் நிலையை மிக அப்பட்டமாக திரித்து அந்த பத்திரிகை விளக்கம் தந்திருக்கிறது. போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பவர்களின் உணர்வு அலைகளையும் அந்த பத்திரிகை திரித்திருக்கிறது. அந்தப் பத்திரிகையின் பங்கு பற்றிய உண்மையையும் மூடி மறைத்திருக்கிறது. வாஷிங்டன் சான் பிரான்சிஸ்கோ மற்றும் இதர இடங்களில் நடைபெற்ற கண்டனங்களில் மிகத்தெளிவாக ஒன்றை அறிவார்கள், அங்கே நிலவிய பிரதானமான உணர்வு புஷ் நிர்வாகத்துடன் ஏற்பட்டது. அது நுட்பமான கருத்து வேறுபாடுகள் அல்ல. எந்த விதமான ஆத்திரமூட்டலும் இல்லாமல் தொடக்கப்பட இருக்கும் ஒரு போரை மிக வெறி உணர்வோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்த்தனர். அதை ஒரு கிரிமினல் குற்ற நடவடிக்கையாக அவர்கள் கருதினர். பேரணியில் மிக அதிகமாக எழுப்பப்பட்ட முழக்கம் ''எண்ணெய்க்காக போர் வேண்டாம்!'' என்பது தான். அரசாங்க அதிகாரிகள், பரந்த மக்களை கொன்றுகுவிக்கும் ஆயுதங்கள் மற்றும் ஐ.நா-தீர்மானங்கள் என்று அதிகாரபூர்வமான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தாலும் அதற்கு பின்னணியாக ஈராக்கின் வளமான பெட்ரோலியத்தை பிடிப்பதுதான் என்பது பரவலாக மக்களிடையே வளர்ந்து வருகிற உணர்வு ஆகும். நடைபெறவிருக்கும் போர் ஏகாதிபத்திய தன்மை கொண்டது. ஆனால் நியூயோர்க் டைம்ஸ் ஆசிரியர்கள் எண்ணெய் பற்றி விட்டுவிட்டனர். புஷ் நிர்வாகம் செய்து வரும் போர் ஆயத்தங்களுக்கு அல்லது அதற்கு பொது மக்களிடையே எதிர்ப்பு ஆகியவற்றிற்கு அடிப்படையாக எண்ணெய்க்கு உள்ள தொடர்பு பற்றி அந்த பத்திரிகை எதுவுமே குறிப்பிடாமல் கைவிட்டு விட்டது. அந்தத் தலையங்கம் ஆர்ப்பாட்டங்களை அமெரிக்க ஜனநாயக செயல்பாட்டின் வலுவான அடிப்படையின் வெளிப்பாடு ஆக வரவேற்றனர் என்று புஷ் மற்றும் அவரது உதவியாளர்களை அந்தப் பத்திரிகை பாராட்டியிருக்கிறது. இது சற்று அதிகமான பாராட்டு டைம்ஸ் ஆசிரியர் குழுவின் அண்டிப் பிழைப்போர், புஷ் நிர்வாகத்தின் சூறையாடும் கொள்கைகளுக்கு தார்மீக மற்றும் ஜனநாயகம் முலாம் பூசியிருப்பது அந்தப் பத்திரிகையின் சிறப்புத் தன்மையாகும். வெகுஜன வாக்குகளை அலட்சியப்படுத்தி அதிகாரத்துக்கு வந்து, ஒரு சட்டவிரோத போரைத் தயாரிப்பதற்கு, அடிப்படை ஜனநாயக உரிமைகளை ரத்துச்செய்வதற்கு மற்றும் -- பெரும்பான்மையராக இருக்கும்-- உழைக்கும் மக்களின் பரந்த அளவு செல்வத்தை நிதித்தட்டிற்கு மாற்றுதற்கு அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகின்ற ஒரு நிர்வாகத்தின் கொள்கைகளை எதிர்த்து நூறாயிரக் கணக்கான மக்கள் வீதியில் திரண்டனர். "அமெரிக்க ஜனநாயகத்தின்" நலத்தின் அறிகுறியாக இருப்பதற்கு அப்பால், எதிர்ப்புக்களானது ஊழல் நிறைந்த செல்வராட்சியின் கீழ் அபிவிருத்தியடைந்து வரும் ஆழமான அரசியல் மற்றும் சமூகத் துருவமுனைப்படலின் ஒரு குறிகாட்டலாக இருக்கின்றன. தலையங்கமானது மிக அடிப்படையான கேள்வியை: இரு பிரதான அரசியல் கட்சிகளின் அரசியல்வாதிகளாலும் அதேபோல டைம்ஸ் உட்பட வெகுஜன செய்தி ஊடகங்களாலும் அபரிமிதமான ஆதரவு போருக்காகக் கொடுக்கப்பட்டு வரும் சூழ்நிலைகளின் கீழ், "வியட்நாம் சகாப்தத்திற்குப் பின் தலைநகரில் மிகப் பெரிய போர் எதிர்ப்பு பேரணி" நடப்பது எதனை உறுதிப்படுத்தப்படுகின்றது என்பதை எப்படி எடுத்துக்கொள்வது? என்பதை மழுப்ப எத்தனிக்கிறது. தொடக்கத்திலிருந்தே, தாராண்மைவாத அமைப்பின் முன்னாளைய ஊதுகுழலாக இருந்த, டைம்ஸ், புஷ் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட போருக்கான சாக்குப் போக்குகளை விமர்சனமற்று ஏற்றுக் கொண்டிருக்கிறது. வெளியுறவு விவகாரம் பற்றிய அதன் தலைமை பத்தி எழுத்தாளர் தோமஸ் பிரைட்மன், எப்படிச்சிறப்பான முறையில் ஆக்கிரமிப்பைத் தூண்டுவது என்பதற்கான முன்மொழிவுகளைப் பிரசுரிப்பதற்கும் ஈராக்கின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா கைப்பற்றுதற்கு வக்காலத்து வாங்குவதற்கும் அந்த அளவு தூரம் போயிருக்கிறார். இதுவரை அந்தப் பத்திரிகை பாரசீக வளைகுடாவில் புதிய போருக்கு பொது மக்களிடையே உருவாகிவரும் எதிர்ப்பை மூடி மறைப்பதற்கு பெரும்பாடுபட்டிருக்கிறது. சென்ற அக்டோபரில் சான் பிரான்ஸிஸ்கோவிலும். வாஷிங்டனிலும் லட்சக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள் அணிவகுத்து வந்ததை கண்டனம் தெரிவித்ததை அந்தப் பத்திரிகை ஒரு செய்தியாகக் கூட வெளியிடத்தவறிவிட்டது. அதிகாரபூர்வமான அரசியல் நிர்வாக அமைப்புகள் அரசாங்க ஆதரவு ஊடகங்கள் இவற்றிற்கு அப்பால் சுதந்திரமாக நடுநிலை வெகுஜன கருத்து உருவாகி வருகிறது. இந்த இயல்நிகழ்ச்சி ஆளும் செல்வத்தட்டிற்கும் மிகப்பெரும்பாலான உழைக்கும் மக்களுக்குமிடையே நிலவுகின்ற இடைவெளியின் வெளிப்பாட்டு அம்சம்தான். அமெரிக்காவில் நிலை பெற்றுவிட்ட இரண்டு கட்சி ஆட்சிமுறை மிகப்பெரும்பாலான அமெரிக்க மக்களை வாக்குரிமை இழந்தவர்களாக ஆக்கிவிட்டதும், மேலும் அமெரிக்க செய்தி ஊடகங்கள் மக்களது உணர்வுகள் எவ்வாறு உள்ளன என்பது பற்றிய சாயலைக்கூட வெளியிடத்தவறிவிட்டதும் மகத்தான அரசியல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கான ஆழமான நெருக்கடியின் அறிகுறிகள் ஆகும். இந்தக் கிளர்ச்சிகள், ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான அரசியல் இயக்கத்தைக் கட்டி எழுப்புதல் மூலமாகவும் சமூக சமத்துவத்திற்காகப் போராடுவதன் மூலமும் மட்டுமே முன்னேறுவதற்கான சரியான வழிகிடைக்கும். இப்படி நடந்து விடும் என்று தான் டைம்ஸ் -வெளியிட்டாளர்கள் பயப்படுகின்றனர். மேலும் போருக்கு எதிரான கண்டனங்களை மிகுந்த அகந்தை உணர்வோடு அவர்கள் ''அணைத்துக் கொள்ள" முன்வந்திருப்பதும் இதே அடிப்படையில் தான். |