World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்க

Drawing the lessons of WorldCom

வேல்ட் கொம் படிப்பினைகளை உள்ளீர்த்தல்

By Nick Beams
2 July 2002

Use this version to print | Send this link by email | Email the author

புஷ் நிர்வாகமும் நிதி ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் சேர்ந்து, அமெரிக்க நிதி நெருக்கடியை பேராசை பிடித்த கூட்டுத்தாபன நிர்வாகிகளதும் கணக்காளர்களதும் ஒரு தவறுதலாலான மோசடி என சாதராணமாக காட்டிவிட முயற்சிக்கும் அவநம்பிக்கையான பிரசாரமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

வேல்ட் கொம் அம்பலப்படுத்தல்களின் வெளிச்சத்திலிருந்தும் மற்றும் "உருவாக்கப்பட்ட கணக்குகள்" என நீண்டகாலமாக சந்தேகிக்கப்பட்டு வந்த, காட்டப்பட்ட 6.4 மில்லியன்களுக்கு அதிகமானதாக காட்டப்பட்ட செரொக்ஸ் கம்பனியின் வருமானம் சம்பந்தமாகவும், சம்பந்தப்பட்ட பொறுப்பான நிர்வாகிகளுக்கு தண்டனை வழங்குவதாகவும் அவர்களை சிறைத் தண்டனைக்கு உட்படுத்துவதாகவும், "பொது மக்களின் நம்பிக்கையை தகர்ப்பதை சகித்துக் கொண்டிருக்கப் போவதில்லை" எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் சபதம் செய்யவும் தள்ளப்பட்டார். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி, புஷ் ஜூலை 9 நிகழ்த்தவுள்ள உரையில் அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வெள்ளியன்று வேல்ட் கொம்மின் பிரதம நிர்வாகி ஜோன் சிட்மோர் புஷ்சுக்கு எழுதிய கடிதத்தில், தற்போதைய நிர்வாகமானது "இதற்கு சமமான அளவு அதிசயத்திலும் ஆத்திரத்திலும் ஆழ்ந்துள்ளதாக" பிரகடனம் செய்தார். இந்தக் காரணத்தினாலேயே அவர்கள் சுமார் 4 மில்லியன் செலவுகளுக்கான தவறான கணக்குகளை உடனடியாக கடன் பத்திர பாதுகாப்பு நாணயமாற்றல் சபையின் (எஸ்.ஈ.சீ) கவனத்துக்கு கொண்டுவந்தார்களெனவும் அவர் விளக்கம் தெரிவித்தார்.

இந்த நெருக்கடி, ஊழல் மிக்க ஒரு சில நபர்களால் விளைந்ததே தவிர முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஆழமாக வேரூன்றிய பிரச்சினைகளால் ஏற்பட்ட ஒன்றல்ல எனக் காட்டும் இத்தகைய அறிவித்தல்கள் உலகம் பூராவும் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றன.

லண்டன் டெலிகிராப் பத்திரிகையின் பொருளியல் பகுதி ஆசிரியர் ஜோர்ஜ் ரெப்கார்னியினால் எழுதப்பட்டு, ஜூலை 1 சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் வெளியான கட்டுரை, இந்த பிரச்சாரத்தின் நோக்கத்தை மிகத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது.

"எதிர்வரும் பல ஆண்டுகளாக ஊகிக்கப்படும் பைத்தியகாரத்தனமானதும் தற்போது அதி உக்கிரமான மட்டத்தில் காணப்படும் மிகப்பாரிய அழிவிலான வீழ்ச்சியாக" குறிப்பிட்டு இந்த வேல்ட் கொம், என்ரொன் வீழ்ச்சி மிக ஆழமான அரசியல் மாற்றத்தினை சுட்டிக்காட்டுவதாக கூறுகிறார்.

இந்த அமைப்பு சரியல்ல என தற்போதைய பீதியை தமக்கு சாதகமாக்கியவாறு, உலக பொருளாதார அமைப்பு நிலைத்துள்ளமை பற்றி, சில புத்திஜீவிகளான பண்டிதர்களும் இடதுசாரி தீவிரவாதிகளும் பலவித வினாக்களை எழுப்புவது தவறில்லைதான்" என அவர் மேலும் எழுதுகிறார்.

"வர்த்தக சந்தையில் தங்கியுள்ள எம்போன்றோர் இது குறித்து அச்சம் கொள்ளாதிருப்பதுடன், பேராசை, அச்சம் போன்ற குணநலன்களுடன் இருப்பது மனிதப் பண்பாகும். ஆகையினால், இதுவும் (வர்த்தக சந்தையும்) இதற்கு ஆட்பட்டுள்ளதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்" என ரெம்கார்னி சுட்டிக்காட்டுகிறார். வர்த்தக சந்தைகள் அசாத்தியமாக சரியவில்லை. அவை இயங்கிக் கொண்டே உள்ளன. பொறிந்து விழும் வர்த்தக சந்தை போன்றவை "உருவாக்கப்படும் அழிவு" என்று அவர் விளக்குகிறார். இதன் மூலம் தவறாக பயன்படுத்தப்படும் மூலதனம் அழிந்து போய், புதியவற்றுக்கு இடமளிக்கிறது எனக் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு மனதை தேற்றிக் கொண்ட ரெம்கார்னி, "இந்த அமைப்பு பிரச்சினைக்குரியதாகும் என்று சொன்னால், பிரச்சினை என்பது என்ன? இதற்கான பதில், அண்மையில் வர்த்தக சந்தைகள் எதிர் கொண்ட சகல பிரச்சினைகளுக்கும் மோசடி, ஊழல் மற்றும் நேர்மையற்ற நிர்வாகம் நடத்தும் தனிநபர்களே காரணமாகும், என்பதேயாகும்."

இத்தகைய நியாயப்படுத்துதல்களான மதரீதியானதும் மனித இயல்பானதும் மனப்பாங்கானதுமான கூற்றுகள், பொருளாதாரத்தை புற நிலையாக ஆய்வு செய்து, இந்த சரிவைப் பற்றி அடிப்படையான சில வினாக்கள் கேட்கப்படும்போது தோல்வியடைகின்றன. பலகாலங்களாக ஊகிக்கப்பட்டு வந்த பைத்தியக்காரத்தனமான பாரிய அழிவு, சீராகி பின்னர் ஒரு சில தீய தனி நபர்களால் மேற்கொள்ளப்பட்ட "சில தீய செய்கைகளால்" வீழ்ச்சியடைந்தது எனக் கூறும்போது அது அந்த அமைப்பினுள்ளேயே காணப்படும் பலவீனத்தை எடுத்துக் காட்டுகின்றதல்லவா? பிரச்சினைகள் ஊழல் மோசடிகளால் தோன்றுவதாயின், அது முன்னரே எழாமல் இப்போது எழுவது ஏன்?

பொருளாதாரம் பற்றி நாம் "கெட்ட ஹிட்லர்" தத்துவத்தை முன்வைக்காதிருப்பின், அண்மைக்காலத்தில் காணப்பட்ட கணக்கியல் பயிற்சி வகையின் உருவாக்கமே முழுப் பொருளாதார நிலைமையுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அது தங்களுக்குள்ளேயே கண்டுபிடித்து அறியப்பட வேண்டியதாகும். ஆனால் ரெப்கார்னியும் ஏனைய பண்டிதர்களும், நிதிச்சந்தை நெருக்கடியானது முதலாளித்துவத்துடன் ஊற்றெடுத்த ஆழமாக வேரூன்றிய பிரச்சினைகளது வெளிப்பாடு என்பது ஒரு சுருக்கமான ஆய்விலேயே தெளிவாகிவிடும் என்பதை அறிந்திருப்பதால் அவ்வழியில் சென்று ஆராய விரும்பவில்லை.

வர்த்தக சந்தை மாற்றம் தீர்கமானதாக விளங்குவதற்கு சில முக்கிய அம்சங்களை கவனத்தில் எடுக்க வேண்டும். முதலாளித்துவ பொருளாதாரத்தின் உந்து சக்தியாக விளங்குவது இலாபத்தை திரட்டுவதே தவிர வெறும் சடத்துவ வள உற்பத்தி அல்ல. இந்த இலாபத் திரட்டலுக்கான முக்கிய ஊற்றான உபரி மதிப்பு, சேவைகளிலும், உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ள தொழிலாள வர்க்கத்திடமிருந்தே (வெள்ளை, நீல ஆடை தொழிலாளரன இரு சாரார்களிடமிருந்தும்) உறிஞ்சப்படுகின்றது.

உபரி மதிப்பு உறிஞ்சி எடுக்கப்பட்டு முதலாளித்துவ பொருளாதாரத்தின் அத்திவாரம் உருவானதும், அதிலிருந்து ஒரு பலமான நிதிக் கட்டுமானம், பங்குச் சந்தை உள்ளடங்கியவை அங்கிருந்து எழுகின்றன. அது (பங்குச் சந்தை) இலாபத்திரட்டலுக்கான களமாகிறது. இப்பங்குச் சந்தை மூலதனத்துக்கான உரிமையாளரையும் உள்ளடக்கியுள்ளது. இறுதி ஆய்வில் ஒவ்வொரு பங்கு மதிப்பும் அதற்கு கிடைக்கப் போகும் இலாப சேர்க்கையுடன் சம்பந்தப்பட்டதாக விளங்குகிறது.

ஆனால் முதலாளித்துவ பொருளாதாரத்தின் உண்மையான அத்திவாரமான -உறிஞ்சப்படும் உபரிமதிப்பு- நிதிக் கட்டுமானம்- ஆகியவற்றுக்கிடையிலான உறவு நேரடியான ஒன்று என்பதை இது அர்த்தப்படுத்துகிறது என்பதல்ல. இதற்கு முரண்பாடாக இது மாறுபட்ட வடிவத்தை கொண்டு அமையும். அதாவது சராசரி இலாப வீதம் உயர்வடைந்திருக்கும் ஒரு கட்டத்தில் பங்கு சந்தை நடவடிக்கைகள் கீழ் மட்டத்தில் நிலவும் போக்கு காணப்படுவதுடன் இலாபம் குறைந்தோ, அதே மட்டத்தில் தேங்கியோ நிதி பரிமாற்றலூடாக இலாபத்தை சேர்க்கும் கவனத்தை உயர் மட்டத்தில் கொண்டதாகவோ காணப்படலாம்.

யுத்தத்தின் பின்னைய அமெரிக்க பொருளாதார வரலாறு இப்போக்கைப் பிரதிபலிக்கிறது. 1950, 1960 ஆண்டுகளில் சராசரி இலாப வீதம் உயர்ந்ததாக விளங்குகையில், பங்குச் சந்தை சார்புரீதியாக மெதுவாகவே நகர்ந்தது. 1980 ஆரம்பத்தில் அது தனது படிபடியான வளர்ச்சியை ஆரம்பித்து 1987 பங்குச் சந்தை பொறிவில் தடைப்பட்டு 1990ல் தான் தனது உயர்ந்த மட்டப் போக்கை பெற்றுக்கொண்டது. 1995ன் பின் படிப்படியாக வேகமாக வளர்ச்சி கண்டது.

எவ்வாறாயினும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி -சராசரி இலாப வீதத்தின் பிரதிபலிப்பு- ஓர் வித்தியாசமான ஒழுக்கில் தொடர்ந்தது. 1990ன் முதல் அரைப் பகுதிகளில் யுத்தத்துக்கு பின்னைய கால கட்டம் முழுவதிலும் வேறு ஐந்தாண்டுகளுக்குள்ளான வளர்ச்சி வேகத்திலும் பார்க்க குறைந்து காணப்பட்டது.

எவ்வாறாயினும் அது அப்பத்தாண்டுகளின் நடுப்பாகத்தில் சிறிதளவு புத்துயிரளிக்கப்பட்டது. எனினும் அமெரிக்கா உயர் மட்டத்தில் எழுச்சியுற்றதுடன், 1990 இல் முக்கிய முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி வேகமானது, 1950, 1960 காலத்தின் யுத்தத்தின் பின்னைய செழிப்புக்கால கட்டத்தில் நிலவிய மட்டத்திலிருப்பினும் 1970 - 1980ல் காணப்பட்ட மட்டத்தில் கூட விளங்கவில்லை.

மார்க்சும் சராசரி இலாப வீதமும்

கடந்த காலத்தில் "உருவாக்கப்பட்ட கணக்கியல்" செயல்முறைகளின் மூலங்கள் இத்தகைய புறநிலையான போக்குகளிலேயே தங்கியிருந்தன.

பொதுவான அல்லது சராசரி இலாப வீதத்தின் தோற்றம் பற்றிய தனது ஆய்வில் மார்க்ஸ், பல்வேறுபட்ட முலதனப் பிரிவுகளிடையிலான போட்டியான போராட்டமானது தொழிலாள வர்க்கத்திடமிருந்து உறிஞ்சப்பட்ட மொத்தமான உபரி மதிப்பு இலாப உருவத்தில் அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் வழியாக உள்ளெதன விளக்குகிறார்.

இவை சரியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வரை போட்டிகள் முதலாளித்துவ வர்கக்த்தின் செயல் ரீதியான தோழமையை ஏற்படுத்துவதுடன், அதனூடாக சகலராலும் தனது முதலீட்டுக்கு சமமான பொதுக் கொள்ளையடிப்பை தத்தமக்குள் பகர்ந்து கொள்ளுகின்றது. எனினும் மேலும் இலாப பகிர்வு செய்யப்படாது நஷ்டத்தை பகிர்ந்து கொள்ள வேண்டியதாக மாறும் போது; சகலரும் செய்வதென்னவெனில் தத்தமது பங்கினை ஆகக் குறைந்த பட்சத்துக்காவது குறைத்து, மிகுதியை மற்றவரிடம் தள்ளிவிடப் பார்ப்பதேயாகும். அத்தகைய கட்டத்தில் தவிர்க்க முடியாதளவு நட்டத்தை விளைவிக்கும். தனியொரு முதலாளி எவ்வளவுக்கு நட்டத்தை தாங்கிக் கொள்வார் அதனை பகிர்ந்து கொள்ளுவார் என்பது செல்வாக்கு, கபடத்தனம் என்பனவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. இவ்விடத்தில் போட்டியானது, ஒருவருக்கொருவர் எதிரியாக மாறும் சகோதரர்களுக்கிடையே நிகழும் போராட்டமாக மாறிவிடும்." (மார்க்ஸ்- மூலதனம் தொகுதி III. பக்கம் 248)

விலை என்பது போட்டியை ஏற்படுத்தும் ஒரு உருவமைப்பாக மட்டுமே உள்ளது. மற்றொரு வடிவமென்னவெனின், மூலதனத்தின் ஒரு பிரிவு மற்றொன்றைத் தொலைத்துக் கட்ட அல்லது அச்சொத்துக்களின் ஆறாமையை வசப்படுத்தி பொருளாதார அளவை பெருக்கிக் கொள்ள செலவு செய்யும் முயற்சியினூடாக மென்மேலும் கைப்பற்றிக் கொள்ள நிதியை பாய்ச்சுவதும், மேற்கொண்டு வேறொன்றை கைப்பற்றுவதும் உள்ளன.

சகலருக்கும் எதிராகவுள்ள இந்த ஒவ்வொரு யுத்தமும் பங்கு பரிமாற்றங்களால் நிதியீட்டப்படுகின்றது. அல்லது வங்கிகள், ஏனைய நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்கள் மார்க்கமாக நிதியீட்டப்படுகிறது. இந்த இரு சந்தர்ப்பங்களிலுமே ஓர் உயர்ந்த பங்கு மதிப்பை பேணிக்கொள்வது -சந்தை எதிர்பார்ப்புக்களுக்கு" ஏற்புடையதாக- மிக அவசியமாகும். இதனை செய்யத்தவறும் பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட கூட்டுத்தாபனம் ஒன்றை தன்னுடன் இணைக்கவோ வசப்படுத்துவதற்கோ முயற்சிப்பதற்கு பதிலாக ஏனைய நிறுவனங்களுக்கு தன்னையே இலக்காக்கி இரையாக்கிக் கொள்ளுவதாக அர்த்தப்படுத்தப்படுகின்றது.

ஆனால் 1990ல் இத்தகைய போட்டியில் ஈடுபட்ட அமெரிக்க கூட்டுத்தாபனங்களுக்கு ஓர் பிரதான பிரச்சினை காணப்பட்டது. பங்குச் சந்தையில் பெருக்கெடுத்தோடிய நாணயம், பெடரல் ரிசேவ் அமெரிக்க வங்கி கொள்கைகளின் பயனாக பிரதான அம்சங்களுக்கு பாய்ச்சப்பட்டதுடன் உலகின் ஏனைய பாகத்தின் மூலதன ஊடுருவல் பங்கு விலையை பேணிக்கொள்ள மேலதிக 10 சதவீத இலாபத்தை அறிவிக்க வேண்டியிருக்கும் என்பதே இதன் அர்த்தமாகும். பொருளாதாரமும் முழுமையாக வருடாந்தம் கிட்டத்தட்ட 10 சதவீதமாக வளர்ச்சியுறும்.

இத்தகைய நிலைமைகளுள் வளர்ச்சியை காட்டுவதிலும் பார்க்க துரிதமான இலாப அதிகரிப்புக்கான ஒரே ஒரு வழியாக "பக்கபலமளிப்பது" எனக் கூறப்படும் போக்கில் ஈடுபடுவது விளங்கியது. இந்த வழிமுறைப்படி, கணக்கியல் நடவடிக்கைகளின் இறுதி விளைவாக உருவெடுக்கும் இலாப எண்ணிக்கைக்கு பதிலாக, அதுவே ஒரு ஆரம்ப முறையாக மாறியது. "சந்தை எதிர்பார்ப்புகளை" சந்திக்க தேவையான இலாப மட்டத்தில் ஆரம்பித்து, பங்கு விலைகளை அதிகரிப்பது, அல்லது பேணுவது என்ற இலக்கினை அடைய கம்பெனிகள் பின்னாலிருந்து தமது இருப்பு நிலை ஏட்டை (Balance sheet) தயாரிக்க வேலை பார்த்தன.

என்ரோன் கம்பெனி விடயத்தில், இலாப மட்டத்தை குறைக்க வேண்டிய பரிமாற்றங்கள் இருப்பு நிலை ஏட்டிலிருந்தும் மாற்றப்பட்டன அல்லது வேல்ட் கொம் விடயத்தில் செலவினங்கள் முதலீடுகளாக வடிவெடுத்தன. அல்லது உண்மையில் பெறப்படுவதற்கு முன்னரே வரிகள் என்ரோன் விடயத்தில், அங்கீகரிக்கப்பட்டிருந்தன. அத்துடன் இத்தகைய செயல்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவராதிருப்பின் - அதாவது ஒழுங்கு செய்யவிருந்தவர்கள் இந்த மலையளவு விடயத்தை கணிப்பிட்டுப் பார்க்க தவறியமைக்கு அவை மிகவும் பரந்துபட்டமைந்தததே காரணமாகியது.

தனி நபர்களது மோசடி ஊழல் என்பனவே குற்றம் சாட்டப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வருவதானது இந்த இலாப அமைப்பினுள்ளேயே காணப்படும் ஒர் நெருக்கடியேயாகும். இது சாதாரண மக்களை தமது தொழில், ஓய்வூதிய நிதி சேமிப்பு, ஒய்வுக்கால நன்மைகள் ஆகியன அழிக்கப்பட்டு இந்த அனுபவங்களில் இருந்து அரசியல் படிப்பினைகளை பெற்றுவிடாதபடி தடுத்து விடும் நோக்குடன் அமைந்த ஒன்றாகும்.

கடந்த கால் நூற்றாண்டு காலமானது, வாழ்க்கைத் தரம் சமூக நிலைமைகளில் தொடர்ச்சியான தக்குதல்களை ஏற்படுத்திய, முதலாளித்துவ சந்தை இலாப அமைப்பு பற்றிய நன்மைகளையிட்டு ஓயாது புகழ்ப்பிரச்சாரம் செய்த அனுபவங்களை கொண்டு விளங்குகிறது. வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் சந்தை தளராது தனது செயலை தொடர்ந்து நடத்தியது. ஊழல்கள் தற்போது அதன் ஒவ்வொரு துளையிலிருந்தும் பெருக்கெடுத்து ஓடுவதுடன் மிக உயர் மட்டத்திலான கொள்ளை, வஞ்சகம் என்பன நடைபெறுவதனூடாக இலட்சக் கணக்கான மக்கள் மீது "கெட்ட நபர்களால்" நடத்தப்படும் கொடுமை சகிக்கமுடியாதளவு தொடர்கிறது. உண்மையில் தனிநபர்கள் தீர்மானமெடுத்து அமுல் செய்கிறார்கள். ஆனால் அவர்களது செயல்கள் அவ்வமைப்பின் புறநிலைப் போக்குகளில் இருந்து எழுந்ததாகும். மனித தேவைகளுக்கேற்ப அன்றி இலாபத்துக்கல்ல எனும் அடிப்படையிலான சமூக கட்டமைப்பினால் இந்த அமைப்பு மாற்றப்பட வேண்டியுள்ளது மிகத் தெளிவாக உணர்த்தப்படுவதுடன் வரலாறு காலந்தாழ்த்தப்படலாகாது எனவும் தெளிவாக புலப்படுத்துகிறது.

Top of page