World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
ஆப்கானிஸ்தான் New revelations about Guantanamo Bay prisoners குவாண்டானமொவில் கைதிகள் பற்றிய புதிய தகவல்கள் By Richard Phillips குவான்டானமொவில் அமெரிக்க கடற்படையின் மிகப்பயங்கரமான, சிறை உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் போரில் பிடிபட்ட 625 போர்கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குறைந்த்து 10 சதவீதம் பேர் தாலிபான் அல்கெய்டாவுடன், ''குறிப்பிடத்தக்க எந்த தொடர்பும் இல்லாதவர்கள் ''என்று அண்மையில் ''லொஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ்''-நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. டிசம்பர் 22ந்தேதி, இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்த நாளிதழ் கட்டுரையொன்றை வெளியிட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ அதிகாரிகள் சென்ற ஆண்டு, பல ஆப்கானிஸ்தான் கைதிகளை குவான்டானமொ விரிகுடாவின் சிறைக்கு அனுப்ப வேண்டாமெனக் கேட்டுக்கொண்டனர். ஆப்கானிஸ்தான், குவைத் மற்றும் அமெரிக்காவிலுள்ள மூத்த அமெரிக்க தளபதிகள், ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்க அதிகாரிகளது ஆலோசனையை புறகணித்து விட்டனர். குவான்டானமொ விரிகுடா கடறபடை முகாமில் அக்டோபர் வரை தளபதியாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் Michael E. Dunleavy சென்ற ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் தனது கடற்படை முகாம் சிறைக்கு அப்பாவி கைதிகள் பலர் அனுப்ப்ப்டுவதாக கூறினார் என்று அந்தக்கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கிறது. தங்களது பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதால், வெறுப்படைந்த இராணுவ அதிகாரிகள் தாங்கள் விடுதலை செய்ய விரும்பிய 49-ஆப்கானிஸ்தான் மற்றும் 10-பாகிஸ்தான் கைதிபட்டியலை சுற்றுக்கு விட முடிவு செய்தாக அந்த பத்திரிக்கை எழுதியிருக்கிறது. இந்த 59-கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் அல்லது அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப் படவேண்டுமென்று அந்த அமெரிக்க நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தயாரித்துள்ள பட்டியலில் சாலையோர வியாபாரிகள், டாக்சி, ஓட்டுநர்கள் உழவர்கள் மற்றும் மூளைக்கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பலர் இடம் பெற்றிருந்தனர். பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் நடமாடிய பாகிஸ்தான் இராணுவ வீர்ர்கள் தங்களுக்கு ஏதாவது பரிசுப் பொருட்கள் வேண்டும் என்பதற்காக அவர்களை கடத்தி வந்து விட்டனர். எல்லை நகரம் ஒன்றில் 20-ஆண்டுகளாக வேலைபார்த்து கொண்டு வாழ்ந்துவருகின்ற ஒரு இளைஞரை பிடித்து வந்து விட்டார்கள். அவருக்கும் அல்கெய்டா அல்லது தாலிபானுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. குவாண்டானமொ சிறையிலுள்ள பல ஆப்கானிஸ்தான் கைதிகள் தாலிபான் இராணுவத்திற்கு பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்கள். இராணுவ சேவையிலிருந்து விலக்கி விடுவதற்கு தாலிபான் அமைப்பு கோரிய லஞ்சப்பணத்தை கொடுக்க முடியாத காரணதால் அவர்கள் இராணுவத்தில் சேர்ந்தனர். உதாரணமாக முப்பது வயது உழவர் ஒருவர் வடக்கு கூட்டுப்( Northern Alliance) படைகளால் கைது செய்யப்பட்டார், ஏனெனில் "அவரது காரையும் பணத்தையும் பறித்துக்கொள்வதற்கு படை வீர்ர்கள் விரும்பினார்கள்" என்ற விபரமும் அந்த கட்டுரையில் இடம் பெற்றிருக்கிறது. டைம்ஸ் வார இதழ் வழக்குகள் தொகுப்பிலிருந்து குண்டூஸ் பஸ் நிலையத்தில் விறகு விற்றுக்கொண்டிருந்த 22-வயது ஆப்கான் இளைஞர் பற்றி தகவல் தந்திருக்கிறது. "எல்லா கேள்விகளுக்கும் அவர் விரைவாகவும், முழுமையாகவும் பதிலளித்தார். அவர் கூறிய விபரங்கள் நம்பக்கூடியவை அதில் முரண்காடுகள் எதுவும் இல்லை அவர் தாலிபானுக்கு அல்லது அல்கெய்டாவிற்காக பணியாற்றினார் என்பதற்கோ, அந்த அமைப்பு பற்றிய விபரங்களை தெரிந்திருந்தார்.என்பதற்கோ எந்த விதமான ஆதாரமோ கிடைக்கவில்லை" என்பதை அவரை விசாரித்த அதிகாரிகளே குறித்து வைத்திருக்கிறனர். பாகிஸ்தானை சேர்ந்த 33-வயதான டாக்சி டிரைவரை வடக்கு ஒப்பந்தபடைகள் மஜர் ஈ ஷெரீப் அருகே பிடித்திருந்தனர். அவரை விசாரித்த்தில் அவருக்கு சிப்பாய்குறிய எத்தகைய ஆற்றலும் இல்லை எனவே அவரை அவரதுநாட்டுக்கே திருப்பி அனுப்பிவிடலாம் என்று அவரை விசாரணை செய்தவர்கள் பரிந்துரை செய்தார். குவான்டானமொ வளைகுடா சிறை முகாமிற்கு புஷ் நிர்வாகம் போர்கைதிகளை அனுப்ப துவங்கியதிலிருந்து ஜனவரி,15-அன்றுடன் ஓராண்டடு நிறைவாகின்றது. இந்த பனிரென்டு மாதங்களில் ஐந்து கைதிகள் தான் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். மூளைக்கோளாறு உள்ள ஒருவர் ஏப்ரலிலும் வேறு நான்கு பேர் அக்டோபரிலும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர் முதியவர்கள் முதியவர் ஒருவருக்கு பற்கள் இல்லை தடிஊண்டி நடந்தார். மற்றொரு முதியவர் பைஸ் முகமது தனக்கு 100-வயதிற்கு மேல் ஆகின்றது என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். தான் தனது சொந்த கிராமத்திற்கு சென்ற போது 2001-கடைசியில் ஆப்கான் மற்றும் அமெரிக்க துருப்புகள் தன்னை கைது செய்ததாகவும் தனக்கும் தாலிபானுக்கும் அல்லது அல்கெய்டாவிற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று கூறியதை தன்னை கைது செய்த சிப்பாய்கள் பொருட்படுத்தவில்லை என்றும் நிருபர்களிடம் தெரிவித்தார். அடிப்படை சட்ட உரிமை மீறல்: லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளேடு, குவான்ட நாமோ முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான போர்க் கைதிகளில் 59 பேர் தொடர்பாக கட்டுரை எழுதியுள்ளது. அந்தக் கட்ட்டுரையில் சிறை வைக்கப்பட்டுள்ள மிகப் பெருப்பாலோர் 20-முதல் 30வயது வரையிலான இளைஞர்கள் என்பதையும், அவர்கள் குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லாமல், அவர்களது ஜனநாயக மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை மிறுகின்ற வகையில் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அந்தப்பத்திரிகை சுட்டிக்காட்ட தவறிவிட்டது. அந்தக் கைதிகள் ''சட்டவிரோதமாக போர்புரிந்தவர்கள்'' என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு போர்கைதி அந்தஸ்தும் மற்றும் மிக சர்வ சாதாரணமான மனித உரிமைகளும் மறுக்கப் பட வேண்டுமென்பதற்காக அவ்வாறு அமெரிக்க அதிகாரிகள் எழுதிவைத்திருக்கின்றனர். அந்த கைதிகள் தங்களது குடும்பத்தாரோடு அல்லது வக்கீல்களோடு தொடர்பு கொள்ள வழியேதுமின்றி உள்ளனர். அமெரிக்க அரசாங்கம் எப்போது இவர்கள் மீது குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்றோ விசாரணை துவங்கும் என்றோ அறிகுறி எதனையும் காட்டவில்லை, இந்தக் கைதிகளில் சிலர் 16-வயது இளைஞர்கள். தற்போது அவர்களுக்குள்ள கைதிகள் அந்தஸ்தின் படி அமெரிக்க அரசாங்கம் கட்டளையிடும்வரை எவ்வளவு காலத்திற்கு வேண்டுமென்றாலும் சிறையில் வைத்திருக்கமுடியும். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமும் மற்றும் சர்வதேச மனிதுரிமைகள் அமைப்பிடமுதம் இருந்து எழும்் கண்டனங்களில், அமெரிக்க நீதித்துறையின் முன்னெடுப்பில் புஷ் நிர்வாகம் ''தனது மூக்கினை நுழைத்துள்ளது,'' இந்த இரண்டு அமைப்புகளும் இதர மனித உரிமை அமைப்புகளும் ஜெனிவா உடன்படிக்கை, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை மற்றும் அமெரிக்க அரசியல் சாசனத்தின் விதிமுறைகளுக்கும் விரோதமாக கைதிகள் சிறைவைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளன. சென்ற ஆண்டு ஏப்ரல் மிதம் குவான்டனமொ வளைகுடா கைதிகள் எக்ஸ்-ரே முகாமிலிருந்து டெல்டா முகாமிற்கு மாற்றப்பட்டனர். இந்த முகாமும் அமெரிக்க கடற்படை தளத்திற்கும் உள்ளேயே அமைந்திருக்கின்றது. பழைய முகாமிலிருந்து பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இது உள்ளது. பழைய முகாம் பெருப்பாலும் கூண்டுகள் போன்ற தனிமை சிறைகள் கேம்ப்டெல்டா முகாமை 9.7-மில்லியன் டாலர் மதிப்பீட்டில் Brown and Root Services என்ற Halliburton நிறுவன பிரிவு அமைத்தது. இது இன்றைய உப ஜனாதிபதி டிக்சினியின் பழைய நிறுவனமாகும். பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவிலிருந்து குறைந்த கூலி ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு இந்த முகாம் அமைக்கப்பட்டது. சர்வதேச கப்பற் கலங்களில் கட்டப்பட்ட சிறைக்கூடங்களாக இருக்கின்றன. ஒவ்வொ பெட்டகத்திலும் ஐந்து கைதிகளை தனித்தனியாக 6.8 அடி அகலம் 8 அடி நீளம் கொண்ட அறைகளில் அடைக்கிறார்கள் ஒரு சிறைப்பிரிவு எட்டு பெட்டகங்களைக் கொண்டது, பெட்டகத்தின் மூன்று பக்கங்களிலும் எஃகு வலைகள் பின்ப்பட்டிருக்கின்றன, அவை குளிரூட்டப்பட்ட அறைகள் அல்ல. அந்த அறையில் அரைப்பகுதி உலோகத்தால் ஆன படுக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள மரணதண்டனை நிறைவேற்று அறையை விட சிறிதானவை. டெக்சாஸ் சிறை கொட்ட்டிகளில் இருப்பவர்கள் தங்களது அறைக்கு வெளியில் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் குளிப்பதற்கும், உடற்பயிற்சி செய்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு நேர்மாறாக குவான்டினமொ விரிகுடாவின் கைதிகள் ஒருவாரத்திற்கு இரண்டுமுறை 15-நிமிடங்கள் வரை வெளியில் வரவும், உடற்பயிற்சி செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு வாரத்தில் 30-நிமிடங்கள் மாத்திரமே அவர்கள் வெளியில் வர அனுமதிக்கப்படுவர். Camp Delta கைதிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் தான் வெளியில் வர முடியும், இரவிலோ, அல்லது பகலிலோ அவர்கள் எந்த நேரத்திலும் விசாரணைக்கு அழைக்கப்படலாம், இல்லாவிட்டின், கொளுத்தும் வெயிலின் வெக்கையில் குறுகலான, குளிரூட்டம் செய்யப்பட்டாத அறைகளில் வாரம் முழுவதும் அடைபட்டு கிடக்க வேண்டியுள்ளது. பயிற்சிக்கென்று ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் அறைகள் 25x18 அடிகள் உள்ள கூடுகளாகும். கைதிகள் அவர்களுக்கு இடப்பட்டுள்ள கைவிலங்குகளுடன் தனியாக உடற் பயிற்சி செய்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அண்மையில் ''மியாமி ஹெரல்ட்'' பத்திரிகை வெளியிட்டிருந்த கட்டுரையில் 10சதவீத கைதிகள் மன நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அதற்காக மாத்திரைகளை உட்கொள்கின்றனர். என்று எழுதியுள்ளது. ''சில கைதிகள் நாள் முழுவதும் கூச்சலிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். தங்களை அழைத்துக்கொள்ளுமாறு ஏதோ ஒரு ஆவியைக் கூவி அழைக்கிறார்கள்'' என்று சிறைக்காவலர் ஒருவர் கூறியாதாக அந்தப் பத்திரிகை தகவல் தந்திருக்கிறது. Camp Delta வில் நிலவரம், ''குரூரமான, மனிததன்மையற்ற, இழிவுபடுத்தும் சர்வதேச சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்'' என்று சர்வதேச மனித உரிமைகள்அமைப்பு விபரித்துள்ளது. கைதிகள் வக்கீல்களைக் கலந்தாலோசிக்க வாய்ப்பு தரும் வரை அவர்களிடம் விசாரணை நடத்துவதை நிறுத்தி வைக்க வேண்டுமென சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு கோரியுள்ளது. இந்த வேண்டுகோள்களை புஷ் நிர்வாகம் புறக்கணித்து விட்டது. அதே நேரத்தில் இராணுவம் 1000-கைதிகளை அடைக்கும் அளவிற்கு சிறைச்சாலை வசதியை விரிவுபடுத்தும் திட்டத்தை அறிவித்திருக்கின்றது, இதில் 80 இற்கும் மேற்பட்ட தனிமைச் சிறைகூடங்கள் அமைப்பதும் உள்ளடங்கும். சென்ற ஜூலையில் அமெரிக்க மாவட்ட நீதிபதி Colleen Kollar-Kotelly 16-கைதிகள் சார்பில் வக்கீல்கள் தாக்கல் செய்த habeas corpus மனுக்களை தள்ளுபடி செய்தார். (habeas corpus மனு என்பது காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை குறிப்பாகஞ் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களை நீதிபதி முன் நேரில் கொண்டு வந்து ஆஜர்படுத்தி அவரை விடுதலை செய்யக்கட்டளையிடுவது தொடர்பான மூன்னுரிமை மனுவாகும்) பதினாறு கைதிகளில் 12-பேர் குவைத் நாட்டு பிரஜைகள் இரண்டுபேர் பிரிட்டிஷ் பிரஜைகள் அந்த பிரிட்டிஷ் பிரஜைகளில் ஒருவர் 24- வயதான சாபிக்ரசூல் மற்றொருவர் 21-வயதான ஆஷ்க் இக்பால் மற்றும் இரண்டு அவுஸ்திரேலியர்களில் 27-வயதான டேவிட் ஹிக்ஸ் 44-வயதான மம்தோஹ் ஹபீப் ஆகியோர் அடங்குவர். 2001-டிசம்பரில் ஆப்கானிஸ்தானில் வடக்கு அணியினர் ஹிக்ஸை கைது செய்து அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைத்த்து. பலவாரங்கள் அவர் விசாரிக்கப்பட்டார். அதற்குப் பின்னர் விமானத்தில் குவான்டானமொ விரிகுடாவில் தனிமைச்சிறைக்கு கொண்டுவரப்பட்டார். ஹபீப் சிட்னியில் முன்னாள் ஒப்பந்த கிளீனர் நான்கு குழந்தைகளின் தந்தை 2001-அக்டோபரில் பாகிஸ்தானில் அவர் கைது செய்யப்பட்டு எகிப்திற்கு அனுப்ப்பட்டார். அங்கு அவர் பிறருடன் தொடர்பு கொள்ள முடியாதபடி தனியாக வைக்கப்பட்டு ஐந்து மாதங்கள் விசாரிக்கப்பட்டார். அதற்கு பின்னர் அவர் ஏப்ரல் மாதம் ஆப்கனில் அமெரிக்க இராணுவசிறைக்கு மாற்றப்பட்டார். மே மாதத்தின் துவக்கத்தில் அவர் குவான்டானமொ விரிகுடாவின் சிறைக்கு அனுப்ப பட்டார். ரசூல், இக்பால் இருவரும் 2001-செப்டம்பர் 11-க்கு முன்னர் பாகிஸ்தானில் தங்களது உறவினர்களை சந்திப்பதற்காக சென்றனர். அவர்களை தாலிபான் படைகள் கடத்திச் சென்றன. அதற்குப் பின்னர் இருவரும் அமெரிக்க இராணுவ காவலில் வைக்கப்பட்டனர். குவைத் நாட்டை சேர்ந்த 12-கைதிகளும் குவைத் அரசாங்கம் அங்கீகரித்துள்ள தொண்டு நிறுவன பணிகளை (charity work) பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் செய்து வந்தவர்களாவர். மனுக்களை தள்ளுபடி செய்த மாவட்ட நீதிபதி கொல்லார் கோட்டர்லி தனது தீர்ப்பில் குவான்டானமொ விரிகுடாவிலுள்ள கடற்படை தளம் அமெரிக்காவின் எல்லையைச் சார்ந்த நிலப்பரப்பல்ல எனவே அமெரிக்க சட்ட ஆளுமை வரம்பிற்குள் வராது, மேலும் கைதிகளுக்கு சட்ட பூர்வமான உரிமைகள் மறுக்கப்பட வில்லை ஏனெனில் அவர்கள் மீது எந்த விதமான குற்றச்சாட்டும் தாக்கல் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார். இதனை வேறொரு வார்த்தையில் கூறுவதாயின், கைதிகளை காலவரையின்றி தடுப்புக்காவலில் வைத்திருக்கலாத் என்பதாகும். இந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு டிசம்பர் 3-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட்து. இம் மேல் முறையீட்டின் மீது அடுத்த இரண்டு மாதங்களில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கைதியின் தந்தை சட்டவிரோதமான தடுப்புகாவலைக் கண்டிக்கிறார்: டேவிட் ஹிக்ஸின் தந்தை டெரிஹிக்ஸ் அண்மையில் உலக சோசலிச வலைத் தளத்துடன் தொடர்பு கொண்டு தனது கருத்தை தெரிவித்தார். குவான்டானமொ விரிகுடா முகாமில் நிலவும் சூழ்நிலை குறித்து அவர் கவலை தெரிவித்தார். அவுஸ்திரேலியாவின் ஹவார்ட் அரசை கண்டித்தார். ''குவான்டானமொ விரிகுடா பகுதியில் நீங்கள் கற்பனை செய்யும் ஒவ்வொரு மனித உரிமையையும் காலில் போட்டு மிதிக்கிறார்கள் அப்படியிருந்த்தும் அவுஸ்திரேலியாவில் ஹாவர்ட் அரசை பொறுத்தவரை அதற்கு சரி என்று தலையாட்டிக் கொண்டிருக்கின்றது'' என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில்:''பயங்கரவாத்த்தின் மீது போர் தொடுப்பதாக புஷ் உலகிற்கு கூறுகிறார் ஆனால் அவர்கள் பிடித்துக் கொள்ளும் மக்களை போர்கைதிகள் என்று கூற முடியாது. இது ஒரு சாக்கடையாகும், எனவே ஜெனிவா உடன்படிக்கையின் விதிகள் அவர்கள் பிடித்துள்ள நபர்களுக்கு பொருந்தாது என்பது அனைவருக்கும் தெரியும். அடிப்படை மனித உரிமைகளை மீறுவதை நியாயப்படுத்துவதற்கு அவர்கள் டஜன்கணக்கில் சட்டத்தில் ஓட்டைகளை வைத்திருக்கிறார்கள். ஓட்டையில்லை என்றால் அதை அவர்கள் உருவாக்கி கொள்ளவார்கள். ''எங்களுக்கு 12-மாதங்களும் மிகவும் துன்பம் நிறைந்தது. டேவிட்டும், மற்றவர்களும் கியூபாவில் எப்படி இருந்தார்கள் என்பதை நாங்கள் அனுமானிக்கத்தான் முடிந்த்து. அவர்கள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்பட்டிருக்கின்றார்கள்- இந்த கைதிகளை விட நாய்களுக்கு அதிக உரிமைகள் உண்டு. ''கடந்த ஆண்டு டேவிட்டிடம் இருந்து மொத்தம் ஒன்பது கடிதங்கள் வந்தன. அவற்றில் இரண்டு அண்மையில் எனது புதல்விக்கு டேவிட் எழுதியது. இந்தக் கடிதங்களை தணிக்கை செய்துள்ளார்கள். ஒருவரி அல்லது சில வார்த்தைகளை நீக்கியிருக்கிறார்கள். ஆனால் கடைசி கடித்த்தில் மூன்று வரிகளை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். அவற்றை நான் படிக்க முயன்றேன் அனால் என்னால் முடியவில்லை. ''அவன் நன்றாக இருப்பதாகவே தெரிகிறது என்றாலும் கடைசி இரண்டு கடிதங்கள் அவன் தனது வீட்டை நினைத்து ஏங்குகிறான் என்பதை கோடிட்டுகாட்டுகின்றன. அவன் மீன் பிடித்த இடங்கள், அடிலைட் குன்றுகள் ஆகியவற்றின் சில பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டிருந்தான். அவற்றை தனது சிறை அறைச் சுவர்களில் ஒட்டிவைக்க விரும்பியிருந்தான். அவன் அழுத்தங்களின் சுமைகளை உணர தொடங்கியிருக்கிறான் என்பது தெளிவாக தெரிகிறது. ''உறுதியாக கால்களை ஊன்றி நின்று ஆழமாக காற்றை உள்ளே இழுத்து மூச்சுவிடும் பயிற்சியைமேற்க் கொள்ளுமாறு அவனுக்கு நான் எழுதியிருக்கிறேன். இந்த நிர்ப்பந்தங்களை சமாளித்து அவன் வருவான் என்று நான் நம்புகிறேன்.அவனை முரட்டுத்தனமாக நடத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெறிகின்றது. அவன் மன்னிப்புக் கேட்டு கெஞ்ச வேண்டியதில்லை டேவிட் கடுமையான சோதனைகளை தாங்க்க் கூடியவன் தான் நீண்ட காலம் குத்துச் சண்டை வீரனாகயிருந்தவன் உள்ளத்தால் சோதனைகள் வரும் போது அதை சமாளிப்பது சற்றுக் கடினமானது தான் அங்கு இருட்டு என்பது எதுவும் இல்லை 24-மணி நேரமும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. ஒரு வாரத்தில் இரண்டு தடவைகள் குளிக்கவும் இரண்டு முறை 15 நிமிட நேர உடற்பயிற்சி செய்யவும் முடியும். "கடைசி கடித்த்தில் டேவிட்; தான் ஒரு அறுவை சிகிச்சைக்காக ஓர் ஆஸ்பத்திரியில் இருந்த்தாக எழுதியிருக்கிறான். அது அக்டோபர் மாதமாகயிருக்கும் என்று அவன் கருதுகிறான். எதற்காக அந்த அறுவைசிகிச்சை நடை பெற்றது என்று அவன் சொல்லவில்லை ஆனால் தனது வாழ்வில் ஆஸ்பத்திரியிலிருந்த மூன்று நாட்களிலும் என்றும் இல்லாத அளவிற்கு மனித நேயத்துடன் நடத்தப்பட்டதாக அவன் கூறுகிறான். ஆஸ்பத்திரியில் இருந்த மூன்று நாட்களிலும் முறையாக குளித்திருக்கிறான். தனது சிறைக்கூடத்தில் மூன்று நாட்கள் வரை அமர்வதற்கான நாற்காலியினை அவர்கள் அவனுக்கு கொடுத்திருதார்கள்.'' அமெரிக்க இராணுவம் தனது மகனை சட்ட விரோதமாக காவலில் வைத்திருப்பது தொடர்பாக, ஹவார்ட் அரசும் மற்றும் எதிரணி தொழிற் கட்சியும் மிகவும் வெறுப்பூட்டும் அணுகுமுறையை கடைபிடிப்பதாக டெரி ஹிக்ஸ் கூறுகிறார். ''அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டவுனரை சந்திப்பதற்கு எங்களது ஆதரவுக் குழு முயன்று வருகிறது, அதற்கு பயன் இல்லை, ஒவ்வொரு முறையும் அதிகாரத்துவத்தின் பகுதிகள் எங்களை முறையாக அணுகவிடாமல் தடுக்கிறது. எனது வக்கீல் மூலம் நான் செல்ல வேண்டும் என்று எனக்கு கூறப்பட்டது. எனது வக்கீல் டவுனரைப் பார்க்க கோரிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டோ அல்லது தான் டேவிட்டை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக்கொண்டோ இருக்கின்றார், இதற்கு அவர்கள் அமெரிக்காவின் பொறுப்பில் அது இருப்பதாக கூறிவருகிறனர். வருடம் முழுவதும் இப்படியே இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். ''இதில் நான் மிகவும் எள்ளி நகையாடத்தக்க அம்சம் என்னவென்றால், வியட்நாமில் ஹேரோயின் (போதை பொருள்) வைத்திருந்ததாக குற்றம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டு அவுஸ்திரேலிய பெண்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் பதில் நடவடிக்கைகளை பத்திரிகையில் பார்க்கும்போதாகும். இந்த செய்தி வந்ததும் உடனடியாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் டவுனர் அவர்களை வெளியே கொண்டுவருவதற்கு முடிந்த எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க போவதாக கூறினார். அவர் அந்தப் பெண்களோடு கைகோர்த்து தூக்கு மேடைக்கு செல்லப்போவதில்லை. இங்கு இன்னொரு வழக்கும் வந்திருகிறது. சிங்கப்பூரில் போதைபொருள் வைத்திருந்த்தாக ஒரு அவுஸ்திரேலியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக ஹவார்ட் அரசு கூறியுள்ளது. இது இரட்டைவேடம் ஆகும். எனது மகன் ஓராண்டாக சிறை வைக்கப்பட்டிருக்கிறான். அவன் மீது எந்தக் குற்றச்சாட்டும் கூறப்படவில்லை அவன் விடுதலை செய்யப் படுவான் என்பதற்கான அறிகுறியும் இல்லை. அப்படியிருந்தும் அவுஸ்திரேலிய அரசின் அணுகு முறை என்ன அவன் நரகத்திற்கு செல்லட்டுமே, அங்கே கிடந்து அழுகிச் சாகட்டுமே என்பதுதான்." ''தொழிற் கட்சி இங்கு சில நிர்பந்தங்களை கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் (அவுஸ்திரேலிய) எதிர்கட்சியான இதன் நிலையிலும் பெருமளவில் ஒரு வித்தியாசமும் இல்லை. இதனாலேயே அவர்கள் ஒரு எதிர்ப்பிற்கும் அழைப்புவிடுக்கவில்லை.பிரச்சனை என்னவெனில் அரசாங்கத்துடன் அவர்கள் ஒத்துப் போகின்றார்கள். போர்ட் அடிலைன்(Port Adelaide) தொகுதியின் தொழிற் கட்சி உறுப்பினர் Rodney Sawford மிக முரட்டுதனமும் ஆதிக்கவெறியும் கொண்டவர். என்க்கு ஆதரவு காட்டும் குழுவைச்சார்ந்த பெண்களை அவர் இழிவு படுத்தினார். அவரை அணுகுவது கற்பாறையில் தலையை மோதிக் கொள்வதை போன்றது. ''வேறு சிலர் நாம் அவர்களை அணுகி பேசுகின்ற நேரத்திலாவது தாங்கள் உடன்பாடு கொண்டிருப்பதாக கூறுகின்றனர். அங்கு நடப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் இந்தப் பிரச்சனையை கொண்டு வருகிறோம், என்று கூறுகிறார்கள். பிரச்சனைகள் உச்ச நிலைக்கு வரும் போது அவர்கள் தலைமறைவாகிவிடுகிறார்கள். அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் மீது எந்த விதமான குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் அமெரிக்கா பிடித்து வைத்திருக்கிறது. தொழிற் கட்சியிலும் பாராளுமன்றத்திலும் மனிதபிமானிகள் என அழைக்கப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் இது பற்றி எதுவும் கூறுவதற்கு அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்''. டெரி ஹிக்ஸ் உலக சோசலிச வலைதளத்திற்கு கூறுகையில்; தனது குடும்பத்திற்கு கிடைத்த ஆதரவினால் மிகவும் உற்சாகம்அடைவதாகவும், பொதுமக்கள் தனது புதல்வனுக்கு நேர்ந்த்து குறித்து மட்டும்மல்ல, "அமெரிக்க அரசின் பொதுவான நிலவரம்" குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர். என கூறினார். ''ஈராக் நாட்டுக்குள் நடப்பதை அல்லது சதாம் ஹுசைனை எவரும் மன்னிக்கவில்லை. ஆனால்
நான் பேசிய ஒவ்வொருவரும் அமெரிக்க அரசின் அணுகு முறை குறித்து கவலை தெரிவித்தனர், இது எங்கே கொண்டு
போய்விடும் என்று வினவினர். பிரச்சனை எண்ணெய் வளம் சம்மந்தப்பட்டது என்பது மிகத் தெளிவாகத்தெரிகிறது. அப்படி
இருந்தும் எந்தவிதமான கேள்விகளும் கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு அவுஸ்திரேலியாவின் ஹவார்ட் அரசு அமெரிக்காவை
பின்பற்றுகிறது. அமெரிக்கா வேறு எவர் கருத்தையும் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாது போரில் தீவிரம் காட்டிவருகிறது.
ஆயுத ஆய்வாளர்கள் அமெரிக்காவிற்கு ஏன் செல்லவில்லை. என்று யாரோ ஒருவர் கேட்டார். அமெரிக்காவிடம் மட்டுமே
மக்களை கொன்று குவிக்கும் ஆயுதல்கள் இருக்க வேண்டுமா? மற்றவர் எவரிடமும் இருக்க்க்கூடாதா?'' |