World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

Turkey prepares to line up behind US war vs. Iraq

ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவின் பின் அணிவகுத்து நிற்க துருக்கி தயாராகின்றது

By Justus Leicht and Peter Schwarz
9 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

90 ஆண்டுகளுக்கு முன்னர் லியோன் ட்ரொட்ஸ்கி, பின்தங்கிய நாடுகளின் அரசியல் வழி குறித்து ஒப்பு நோக்கி விளக்கம் தரும்போது, பின் தங்கிய நாடுகள் பாய்மரப் படகு போன்றவை, அவை நீராவிப்படகில் பிணைக்கப்பட்டுள்ளன என்றார். ''நீராவிப் படகின் கப்டன் தான் செல்லும் வழியை தேர்ந்தெடுத்து படகை செலுத்தும்போது, அதன் வழியில் தான் கைகளும் கால்களும் கட்டப்பட்ட பாய்மரப் படகோட்டியும் செல்ல வேண்டும்''. என்று அன்றைய சேர்பிய மக்களின் நிலை குறித்து அவர் எழுதினார்.

இந்தக் கருத்தானது, அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கும் ஈராக்கிற்கு எதிரான போருக்கான இன்றைய துருக்கியின் ஆதரவிற்கு பொருந்தும். ஈராக்குடன் போர்புரிவதை துருக்கி மக்கள் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளவில்லை. தங்கள் நாட்டிலுள்ள இராணுவத் தளங்களை ஈராக்போரில் அமெரிக்கா பயன்படுத்திக்கொள்வதை துருக்கி மக்களில் 80-சதவீதம் பேர், எதிர்த்துவருவதாக அமெரிக்கா நடத்திய மக்கள் கருத்துக் கணிப்பிலிருந்து தெரியவருகிறது. போர் நடந்தால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் மற்றும் சமுதாயக் கொந்தளிப்பு நிலைகுறித்து, துருக்கியில் செல்வாக்கு மிக்க அரசியல் வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. அப்படி இருந்தும் அமெரிக்கா, ஈராக்குடன் நடத்தும் போருக்கு துருக்கியின் ஆதரவான நிகழ்ச்சிகளின் போக்கை நிச்சயம் வாஷிங்டனில் உள்ள நீராவிப் படகு நிர்ணயிக்கிறதே தவிர, அங்காராவிலுள்ள பாய்மரப் படகு அல்ல.

சந்தேகங்கள் இருந்தாலும், அமெரிக்கா எடுக்கும் நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டியதின் அவசியம் குறித்து துருக்கி பத்திரிக்கைகள் தற்போது அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ள சில தகவல்களுக்கு மாறாக துருக்கி நாட்டு பத்திரிகைகளில், ஈராக் போரின் உண்மையான நோக்கங்களை மறைக்கவோ அல்லது ஐனநாயகப் புணுகுப்பூச்சு நடத்தவோ இல்லை. ஈராக்குடன் நடத்தப்படும் போரின் ஏகாதிபத்திய நோக்கங்கள் குறித்து அங்கு பகிரங்கமாக விவாதிக்கப்படுகின்றன. அந்தப் போரினால் துருக்கிக்கு வரும் சாதக பாதகங்கள் அலசி ஆராயப்படுகின்றன. எந்தவிதமான குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் இந்தகைய விமர்சனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை மறைக்க துருக்கி செய்தி ஊடகங்கள் எந்த வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

முன்னணி துருக்கி நாளேடான மில்லியத் FTM (Milliyet) ஒரு விமர்சகரான சமிகோஹன் எழுதியுள்ள கட்டுரையில் அமெரிக்கா, ஈராக்குடன் போருக்குப் போவதற்கான காரணங்களில் ஒன்று தான் ஈராக் வசமிருக்கும் மக்களைக்கொன்று குவிக்கும் ஆயுதங்கள் என்றுள்ளார். ''இது ஒரு காரணம் மற்றொரு காரணம் எண்ணெய் வளத்தை தன் கட்டுபாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வம். அப்படி இருந்தும் உண்மையான அமெரிக்காவின் நோக்கம் விரிவானது, இறுமாப்பு நிறைந்தது. புஷ் நிர்வாகம் இந்தப் பிராந்தியத்தில் ''புதிய கட்டளையை'' உருவாக்க விரும்புகிறது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிராந்தியங்களில் அமெரிக்காவின் நோக்கங்களுக்கு ஏற்ப சில நாடுகளில் ஆட்சி மாற்றங்களை செய்வதற்கு அதற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு சதாம் ஹூஸேன் போன்ற தடை கற்களை சமாளிக்க வேண்டும் என்ற நிலைக்கு அமெரிக்கா வந்து விட்டது. ஈராக்குடன் போர்புரிவதற்கான அமெரிக்காவின் தொலை நோக்குள்ள குறிக்கோள் இது தான்'' என்று அந்த விமர்சகர் எழுதி இருக்கின்றார்.

கோஹென் இதுபற்றி கூறுகையில், ''போரைத்தவிர மாற்று நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்காவை திசை திருப்ப முடியாததுடன், புஷ் நிர்வாகத்தை ஆதரித்து செல்வதே துருக்கிக்கு ஏற்றதாகும். துருக்கியின் முன்னணி இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ஈராக்குடன் நடக்கும் போரில் துருக்கி ஒதுங்கி நிற்க முடியாது என்ற உணர்விற்கு அதிக அளவில் ஆதரவு காட்டத் துவங்கிள்ளனர். அப்படி ஒதுங்கிக் கொல்வதால் சாதகங்களை விட, பாதகங்களே அதிகமாக இருக்கும். அமெரிக்காவுடன் போதுமான அணி அமைத்து போரில் இறங்க துருக்கி மறுக்குமானால் அமெரிக்காவின் ஆதரவை அது இழந்து விடும். நமக்கு அமெரிக்காவின் ஆதரவு பல வழிகளில் தேவைப்படுகிறது'' என்றார்.

மேலும் அவர், அமெரிக்காவின் ஆதரவு இருந்தால் மட்டும் போதும் என்று துருக்கி ஆளும் வர்க்கம் மனநிறைவு கொண்டுவிடக் கூடாது. போரில் கிடைக்கும், வெகுமதிகளைப் பகிர்ந்து கொள்ளும் போது ஒரு பகுதியை பெற்றாக வேண்டும். ''துருக்கி, அமெரிக்காவை சர்ந்திருப்பது மட்டுமே பிரச்சனை அல்ல. நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதைப் போல், அமெரிக்காவின் இராணுவத் தலையீடு என்பது இந்தப் பிராந்தியம் முழுவதிலும் விரிவான திட்டத்தை அடிப்பையாகக் கொண்டது. இந்த நிகழ்ச்சிப் போக்கில் துருக்கி ஒதுங்கியிருக்க முடியாது மற்றும் அப்படி ஒதுங்கியிருந்து விடவும் கூடாது. ஈராக்கில் புதிய ஆட்சி அமைக்கப்படும்போது, குறிப்பாக ஈராக்கின் வடக்குப் பகுதி தொடர்பாக நடைபெறும் மாற்றங்களை துருக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? அமெரிக்காவின் கேந்திர பங்குதாரர் என்ற முறையில் வாஷிங்டனுடன் இருப்பது தானே துருக்கியின் நலன்களுக்கு உகந்தது? ஈராக்குடன் நடைபெறக்கூடிய போரில் துருக்கியின் நிலை ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுவிட்ட வகையில், இந்த நடவடிக்கையில் எந்த அளவிற்கு துருக்கி ஈடுபாடுகொள்வது என்ற அளவு மட்டுமே இன்னும் முடிவு செய்யப்படவில்லை.''- என்று கோஹென் தனது கட்ரையில் எழுதியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அதே பத்திரிக்கையில் மற்றொரு விமர்சனக் கட்டுரையாளர் பிக்ரத்பிலா, அரசுத் தலைவர்களின் சிந்தனையை சுருக்கமாக தந்திருத்தார். ''தான் முடிவு செய்ததை அமெரிக்கா செயல்படுத்தியே தீரும். துருக்கி ஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும், அதை அமெரிக்கா செய்தே தீரும். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு நடுவில் அங்காரா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவது நல்ல பயன்களைத் தரும். வெளியில் இருப்பதை விட உள்ளே இருப்பது துருக்கிக்கு பயன்தரும்'' என்று எழுதியுள்ளார்.

இந்த விமர்சனங்கள் துருக்கி பூர்ஷ்சுவாக்களின் அரசியல் கோழைத்தனத்தையும், ஆழமாக வேரூன்றிவிட்ட அடிமைத்தனத்தையும் கோடிட்டு காட்டுகிறது. போரினால் ஏற்படும் பொருளாதார மற்றும் சமுதாய விளைவுகள் குறித்து துருக்கி பூர்ஷ்சுவாக்களுக்கு பீதி ஏற்பட்டாலும் கூட வாஷிங்டனை எதிர்ப்பதற்கு வல்லமை இல்லாதவர்கள். இப்போது துருக்கி பூர்ஷ்சுவா தனக்கு கிடைக்க வேண்டியது எவ்வளவு என்பதைப் பற்றி மட்டுமே மிக முக்கியமாக பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. வாஷிங்டன் தனது சாப்பாட்டு தட்டிலிருந்து எடுத்து எறியும் எலும்பாகயிருந்தால் கூட அதை ஏற்றுக் கொள்ளவதற்கு துருக்கி பூர்ஷ்சுவா தாயாராக இருக்கிறது.

இந்த நிலைக்கான அடிப்படைகளை துருக்கிக்கு உள்ளேயே நிலவுகின்ற சமுதாய உறவுகளிலிருந்து நாம் கண்டு கொள்ளமுடியும். 63 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையால் வாடிக்கொண்டிருக்கின்றனர். துருக்கியில் ஒரு தொழிலாளியின் சராசரி மாத வருமானம் -150 யூரோக்களுக்கும் குறைவுதான். கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் துருக்கியின் பெரும்பாலான சிறு தொழில்களை சீர்குலைத்து விட்டன. மக்களது வெறுப்பிற்கு ஆளாகியுள்ள துருக்கியின் ஆளும் தட்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவை அடிப்படையாகக் கொண்டே தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள முடியும். குறிப்பாக அமெரிக்க அங்கீகாரம் பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் மற்றும் அமெரிக்க ஆயுதங்கள் ஆகியவற்றை நம்பியே துருக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே நீண்டகால அடிப்படையில் பார்த்தால் தனது முக்கியமான முதலாளிக்கு கோபம் மூட்டி, வருகின்ற பணத்தை இழப்பதை விட போரில் கலந்து கொண்டு இழப்பைக் குறைத்துக் கொள்ளலாம்.

எர்டோகன் (Erdogan) வாஷிங்டன் பயணம்

இந்த நிலை மக்களின் அவ நம்பிக்கைக்குள்ளான பழைய கட்சிகளுக்கு மட்டுமல்ல, துருக்கியின் அரசியலில் ''பிரகாசமான நம்பிக்கை'' என்று கருதப்படும் ''நீதி மற்றும் மேம்பாட்டு இஸ்லாமிய'' கட்சிக்கும் (AKP ) பொருந்தும். இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பழைய கட்சிகள் நாடாளுமன்றத்தில் இடம் பெறுவதற்கு அடிப்படையான 10 சதவீத வாக்குகளைக் கூடப் பெற முடியவில்லை. புதிய (AKP) கட்சியை நடத்திச் செல்பவர் ரசீப் தாயிப் எர்டோகன் (Recep Tayip Erdogan) தேர்தலில் வெற்றி பெற்றதற்கு இரண்டு அடிப்படை காரணங்கள் உண்டு. கிராமப் பகுதிகளில் வாழும் மக்களிடையே நியாயமான அரசியல் நடக்கும் என்ற விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தினார். வறுமையிலும் சமுதாயத்தின் அடித்தளத்திலும் வாழும் மக்களிடையே எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை அவர் உருவாக்கி, ஈராக்குடன் போர் நடத்துவதற்கு ஏற்பட்டுள்ள விரிவான எதிர்ப்பு உணர்வுக்கு வடிகால் அமைத்தார். அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் நாட்களில் ''இரத்தம், கண்ணீர் சிந்துவதை; மரணத்தை நாங்கள் விரும்பவில்லை'' என்று அவர் அறிவித்தார்.

டிசம்பர் ஆரம்பத்தில் அவர் வாஷிங்டன் சென்றபோது, அந்தப் பயணம் அவரை மாற்றி விட்டது. AKP யின் தலைவராக இருக்கும் எர்டோகன் துருக்கி அரசியலில் எந்த விதமான அரசியல் பொறுப்பிலும் இல்லை. ஜனாதிபதி புஷ், அவரை வெள்ளை மாளிகையில் வரவேற்றார். பின்னர் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் கொலின் பாவல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கோண்டா லீஸா ரைஸ், இராணுவத்தின் முன்னணி அதிகாரிகள் துருக்கி தூதுக் குழுவினருடன் பேச்சுவார்க்களை நடத்தினர். அந்தச் சந்திப்பை அதிகாரப் பூர்வமான இராஜங்கத்துறை பாணியில் ''அமெரிக்க தலைமை இராணுவ அதிகாரிகள் எர்டோகன் மற்றும் அவரது குழுவினரிடம் விரிவாக விளக்கம் தந்தனர்'' என அறிவிக்கப்பட்டது.

துருக்கி பத்திரிக்கை ஸ்டார் எர்டோகன் நடத்திய பேச்சு வார்த்தைகள் தொடர்பாக எழுதும் போது ''பேச்சுவார்த்தைகள் தூதுக்குழுவினரிடம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.'' என்று மட்டுமே விமர்சனம் செய்ததுடன் எர்டோகன் கருத்தையும் வெளியிட்டது. ''பிரச்சனை பேச்சு வார்த்தை மூலம் சமாதான முறையில் தீர்க்கப்படுவதை நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் இப்போது போர் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது''. என எர்டோகன் கூறியுள்ளார்.

பின்னர் எர்டோகன் துருக்கிக்குத் தரவேண்டிய விலை குறித்து பேரம் பேசத் தொடங்கினார். ''வாஷிங்டனில் எர்டோகன் சந்தித்த அமெரிக்காவின் தலைமை அதிகாரிகள் ஒவ்வொருவரிடமும் துருக்கியின் உணர்வுகள் குறித்தும் அமெரிக்காவிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது தொடர்பாகவும் எடுத்துரைத்தார். 1991 ல் வளைகுடா போரிலிருந்து துருக்கி 100 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்புகளை சந்தித்திருப்பதாக புஷ் நிர்வாகத்திற்கு நினைவூட்டினார். அமெரிக்கா மீண்டும் ஈராக்கைத் தாக்குமானால் துருக்கிக்கு ஏற்படும் இழப்பு 48 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து அதனது பொருளாதாரம் சீர்குலையும். துருக்கியின் சுற்றுலா வர்த்தகம் பெருமளவிற்கு பாதிக்கப்படும். ஈராக் அருகிலுள்ள தென் கிழக்கு எல்லைகளில் வர்த்தகம் அடியோடு படுத்துவிடும் எனவே அமெரிக்கா துருக்கிக்கு தேவையான ''இழப்பீடுகளை தரவேண்டும்'' என அவர் கூறியதாக ஸ்டார் பத்திரிக்கை எழுதியுள்ளது.

ஆனால் எர்டோகன் ஏமாற்றமடைந்தவிட்டதாக இப்பத்திரிக்கை மேலும் எழுதுகையில், ''புஷ் தரப்பிலிருந்து இழப்பீடு தொடர்பாக எந்த யோசனையும் வரவில்லை. அமெரிக்கா தர முன்வந்த சொற்பத்தொகை குறித்து எர்டோகனே கூட அதிர்ச்சியடைந்தார். அவர் அவரது அதிர்ச்சியை மறக்கவில்லை. அவர்கள் முதலில் 2 பில்லியன் டாலர்கள் என்றார்கள். அதற்குப் பின்னர் ஒன்று அல்லது இரண்டு பில்லியன் டாலர்கள் என்று இறங்கி வந்து விட்டார்கள்'' என்றது.

இந்தக் கட்டத்தில் எர்டோகன் தமது ஆட்சேபனையை அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ''அமெரிக்க அதிகாரிகளின் இந்தப்போக்கு காரணமாக எர்டோகன், ஈராக் போரில் தீவிர பங்கெடுத்துக் கொள்வதில் புதிய வரையறை செய்வதுடன், ''துருக்கி ஒரு ஐனநாயக நாடு'' என்று அவர் குறிப்பிட்டதாக இப்பத்திரிக்கை எழுதியுள்ளது.

மீண்டும் இது தொடர்பான நிகழ்ச்சிகளை நினைவு படுத்திப் பார்ப்போம். ''அமெரிக்கா போதுமான அளவிற்கு நிதி உதவி தரத் தவறிவிட்டது'' என்ற கட்டத்தில் தான் எர்டோகன் ஜனநாயகத்தின் சிறப்புக் குறித்து எடுத்துரைத்து, பொது வாக்கெடுப்பு (referendum) நடத்தப்போவதாக மிரட்டினார். இருப்பினும் அதன் முடிவு பற்றி எர்டோகனுக்குத் திட்டவட்டமாகத் தெரியும்.

எர்டோகனுக்கும், புஷ் நிர்வாகத்திற்கும் ஒன்று தெளிவாகத் தெரியும். துருக்கி மக்களிடையே, எர்டோகன் பொது வாக்கெடுப்பு நடத்த என்றைக்கும் முயலப்போவதில்லை. எர்டோகன் பழைய துருக்கி அதிகாரத்துவத்தினரை ஏமாற்றி விட முடியுமென்றாலும் அண்மையில் தேர்தலில் பெற்ற வெற்றியை, உத்திரவாதம் செய்து கொள்ள முயன்றாலும், துருக்கியின் வர்த்தகப் பிரிவினரின் பிரதிநிதியாகவே அவர் செயல்பட்டு வருகிறார். பொதுமக்களிடம் வெறுப்பும் போருக்கு எதிரான உணர்வும் உருவாகியிருப்பது வர்த்தக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் அரசாங்கத்தின் அதிகார வர்க்கத்தின் பெரும் பகுதியும் துருக்கி ஊடகங்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும் அதையும் மீறி எர்டோகனின் கட்சி வெற்றி பெற்றது.

இதற்கிடையில், ஈராக்கிற்கு எதிரான விமானத் தாக்குதல்களை நடத்துவதற்காக தென்கிழக்கு துருக்கியில் உள்ள நான்கு விதமான விமான நிலையங்களை அமெரிக்கா அதிகாரிகள் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். டியார்பக்கி, மலாட்யா, பேட்மேன், மற்றும் மஸ் விமான நிலையங்களில் இத்தகைய முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஐம்பது டிரக்குகளில் இராணுவ தளவாடங்கள் ஏற்றப்பட்டு துருக்கி ஈராக் எல்லையிலுள்ள சி.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக துருக்கி பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. துருக்கியில் 90,000 அமெரிக்க துருப்புகளை நிறுத்தி வைக்கவும், அவற்றில் 30,000 துருப்புகளை துருக்கியில் உள்ள பல்வேறு அமெரிக்க இராணுவ தளங்களுக்கு அனுப்பவும், மீதமுள்ள 60,000 அமெரிக்க துருப்புகளை நேரிடையாக ஈராக் மீது படையெடுப்பதற்கு அனுப்பவும் அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக துருக்கி பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவின் போர் ஆயத்தங்கள் தொடர்பாக அதிகாரபூர்வமாக எந்த விதமான உடன்பாடும் துருக்கியுடன் உருவாகவில்லை. துருக்கியின் நிலை அதிகாரப்பூர்வமாக எதுவும் முடிவு செய்யப்படவில்லை. இறுதி அதிகாரம் துருக்கி பாராளுமன்றத்திற்குதான் உண்டு என்பது அதிகாரபூர்வமான நிலையாகும். உண்மையில் அமெரிக்க இராஜதந்திர அதிகாரிகளும் மற்றும் இராணுவ அதிகாரிகளும் இடைவிடாது துருக்கி தலைநகரான அங்காராவிற்கு விஜயம் செய்து பேச்சு வார்த்தைகளை தொடர்ந்தும் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு அதி உயர் அமெரிக்க அதிகாரி அல்லது ஜெனரல் துருக்கிக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றார்.

சென்ற வாரம் அமெரிக்காவின் முப்படை தளபதிகளின் கூட்டுக் குழுவின் தலைவர் ஜெனரல் ரிச்சர்ட் மேயர் மற்றும் அமெரிக்க தூதர் றொபெர்ட் பியர்சன் இருவரும் துருக்கி தொழிலதிபர்கள், வர்த்தகர்களை சந்தித்து ''இழப்பீடு'' தொடர்பாக விவாதித்தனர். இன்னும் பெருமளவில் இழப்பீடு வழங்குவது தொடர்பாக உடன்பாடு உருவாகவில்லை. எதிர்காலத்திலும் அத்தகைய உடன்பாடு உருவாகப் போவதில்லை, அதற்குப் பதிலாக துருக்கியின் ''நண்பர்கள்'' சில யோசனைகளை தெரிவிக்கும்போது, அந்த யோசனையை துருக்கி ஒருபோதும் மறுக்கமுடியாது. அதாவது, வாஷிங்டனுடன் அங்காரா இணைந்து செயல்பட்டால் தான் துருக்கியின் இராணுவம் மற்றும் பொருளாதார நலன்கள் காப்பாற்றப்படும் என்பது தான் அந்த யோசனையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

See Also :

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

Top of page