World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Legal sophistry to justify aggression

Germany's "Red-Green" government to participate in war against Iraq

ஜேர்மனியின், ''சிவப்பு - பச்சை'' அரசு ஈராக்கிற்கு எதிரான போரில் பங்குபெறவுள்ளது

By Alexander Boulerian
3 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளத்தின், ஜேர்மன் வாசகர் ஒருவர் கீழ்கண்ட கட்டுரையை எழுதியுள்ளார்

இப்போது உண்மைகள் வெட்டவெளிச்சமாகத் தெரிகின்றன. ஜேர்மன் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (சமூக ஜனநாயகக் கட்சி - SPD), ஈராக்கிற்கு எதிரான போரில் எந்த வகையிலும் ஜேர்மனி பங்கெடுத்துக் கொள்ளாது என்ற தேர்தல் கால உறுதிமொழியை அதிகாரபூர்வமாக குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார். ஈராக்கிற்கு எதிரான போரில், ''அவாக்ஸ்'' (AWACS ) கண்காணிப்பு விமானங்கள் இயக்கப்படுவதில் ஜேர்மனி பங்குபெறும் என ஷ்ரோடர் கோடிட்டுக் காட்டியதன் மூலம் உண்மை அப்பட்டமாக, வெளியில் வந்துவிட்டது. ஜேர்மன் பிரதமர், அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார் என்பது தெளிவாகிவிட்டது. அமெரிக்கா கேட்கும் பட்சத்தில், அமெரிக்கா தலைமை வகித்து நடாத்தும் போரில் ஜேர்மனி இராணுவ உதவி தருவதற்கு இணங்கிவிட்டது.

ARD ஜேர்மன் தொலைக் காட்சியின் ''நிறத்தை தெரிந்துகொள்ளல்'' (Come clean) நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட ஷ்ரோடர், இராணுவத் தலையீட்டில் ஜேர்மனி பங்குபெறாது. ஆனால் ''நேட்டோ'' கூட்டினை ''பாதுகாப்பதற்கான'' தனது பொறுப்புகளை நிறைவேற்றும் என்று குறிப்பிட்டார். ``அதன் பொருள் என்ன? ''நேட்டோ'' ஒப்பந்த எல்லையைக் காப்பதற்கான ''அவாக்ஸ்'' உளவு விமானங்களில் ஜேர்மன் படையினர் இடம்பெறுவர்'' என்றும் ஷ்ரோடர் அறிவித்தார்.

ஷ்ரோடர் தனது நிலையை நியாயப்படுத்துவதற்காக, மிகவும் நுட்பமான சட்ட நுணக்க விவாதங்களையும் எழுப்பியுள்ளார். ''அவாக்ஸ்'' விமானங்கள் போரை நடத்துவதற்கான கருவிகள் அல்ல'' என்று கூறியுள்ளார். போர் ஆரம்பிக்குமானால், இந்தக் கருவிகள், ''நேட்டோ'' கூட்டு நாடான, துருக்கியின் எல்லைக்குள், அந்நாட்டு எல்லையைக் பாதுகாக்க பணியாற்றும் என்றும் ஜேர்மன் பிரதமர் விளக்கமளித்திருக்கிறார். ஈராக் எல்லைப் பகுதிகளையொட்டிப் பறக்கும் ''அவாக்ஸ்'' உளவு விமானங்களில் ஜேர்மனி படையினரை அனுப்புவது தொடர்பாக, முடிவு செய்வதில், பசுமைக் கட்சியைச் சேர்ந்த, வெளியுறவு அமைச்சர் ஜோஸ்கா பிஷ்ஸருடன் தான் கலந்துரையாடியதாக ஷ்ரோடர் வலியுறுத்திக் கூறினார்.

ஷ்ரோடரின் நிலைப்பாடு வெறும் வார்த்தை ஜாலம்தான். இராணுவக் கண்காணிப்பு என்பது ஒரு போரின், உள்ளடக்கமான, தவிர்க்க முடியாத நடவடிக்கை என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. நடைபெறவிருக்கும் போரில் ஜேர்மனியைச் சேர்ந்த ''அவாக்ஸ்'' படையினர் தீவிரமான பங்கை வகிப்பர்.

ஷ்ரோடரின் நிலைப்பாட்டிற்கு ஜேர்மனியின் எதிர்க்கட்சிகள் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் - CDU -கிறிஸ்தவ சமூக யூனியன் -CSU) கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் பாதுகாப்புத்துறை பேச்சாளர்களும், பசுமைக் கட்சியின் பாதுகாப்புதுறை பேச்சாளர்களான கிரிஸ்டியன் ஸ்மித் (Christian Schmidt), வின்பிரெட் நாக்ட்வை (Winfried Nachtwei) எதிர்த்துள்ளனர். " SPIEGEL-online'', டிசம்பர் 12, 2002 அன்று ஸ்மித் இன் கருத்தைப் பிரசுரித்திருந்தது. ''அவாக்ஸ்'' உளவு விமானங்கள் வெகுதொலை தூரத்திலிருந்தே, எதிரி விமானங்கள் அல்லது கப்பல்களைக் கண்டுபிடித்துவிட முடியும். மேலும் அவற்றிற்கு எதிரான எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர் குறிப்பட்டிருந்தார். . இந்த விமானப் பணியாளர்களில் பலர் மூத்த விமானப்படை விமானிகள் உள்னர். இவர்கள் எதிர்த்தாக்குதல் தொடர்பாக யுத்தவிமானங்களுக்கு கட்டளைகள் பிறப்பிக்க முடியும். இப்படிச் செய்வது, ஜேர்மன் படையினர் போரில் தீவிர பங்கெடுத்துக் கொண்டதாக ஆகும். இந்த உண்மை ஷ்ரோடருக்கு நன்றாகவே தெரியும் குறிப்பாக, 1994ம் ஆண்டு, ஜேர்மன் அரசியல் சட்ட நீதிமன்றம் ''அவாக்ஸ்'' விமானங்கள் தொடர்பாக அளித்த தீர்ப்பை அவர் அறிவார்.

சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி அரசின் நிலைப்பாடு மாற்றப்படும் என்பது பல வாரங்களுக்கு முன்னரே, கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசு, பேர்லின் மீது நிர்ப்பந்தங்களை அதிகரிப்பதைத் தொடர்ந்து நிலைப்பாட்டில் மாற்றம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ''அவாக்ஸ்'' விமானங்கள் தொடர்பான முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர், இஸ்ரேல் அரசு - வாஷிங்டன் நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, ஜேர்மனிக்கு கோரிக்கையொன்றை வைத்தது. பேட்ரியாட் ராக்கெட்டுகளையும், (Patriot rocket) ''Fuchs" ரக போக்குவரத்து டாங்கிகளையும் வழங்குமாறு இஸ்ரேல் கோரியது. இந்தக் கோரிக்கை, ஜேர்மன் அரசிற்குத் தர்மசங்கடமான நிலையைத் தோற்றுவித்தது. ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஸ்ருக் (Peter Struck) போக்குவரத்து டாங்கியை, மற்றொருவகை ஜேர்மனி டாங்கிகளுடன் சேர்த்து பகிரங்கமாக குழப்பிவிட்டார். இஸ்ரேல் அரசாங்கம் கேட்டது, ஜேர்மன் வடிவமைத்துள்ள இரசாயனப் பொருள்களைக் கண்டுபிடிக்கும் என பின்னர் தெரிய வந்தது. இது ஒரு பாதுகப்பிற்கான வாகனமாகும்.

இஸ்ரேலுக்கு, பேட்ரியட் ராக்கெட்டுகளை வழங்குவதில் ஜேர்மன் அரசாங்கத்திடம் ஒரு பொதுவான உடன்பாடு உண்டு. வரலாற்று அடித்தளத்தில் ஜேர்மன் இஸ்ரேல் அரசை ஆதரித்து வரும் நிலைமையில், தனது பாதுகாப்பிற்குதான் இந்த ராக்கட்டுகள் என இஸ்ரேல் விவாதிக்கின்றது. எவ்வாறிருந்தபோதிலும், ''Fuchs" ரக போக்குவரத்து டாங்கிகள் தொடர்பாக ஜேர்மன் அரசிற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஏனென்றால், இஸ்ரேல் அந்த டாங்கிகளை தான் பாலஸ்தீனத்தில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் பயன்படுத்தப் போவதாக கூறி வருகிறது.

ஈராக்கிற்கு எதிரான போரில் அமெரிக்கா ஐ.நா.வின் ஆதரவை பெற தவறிவிட்டாலும், முன்னணி சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் அமெரிக்க விமானங்களுக்கு ஜேர்மனி வானத்தில் பறப்பதற்கு ஜேர்மனி அரசு உத்திரவாதம் தரவேண்டும் என்று தெளிவாக அறிவித்தை தொடர்ந்து, நவம்பர் இறுதியில் பேர்லினது போக்கில் திட்டவட்டமான மாற்றம் ஏற்பட்டது. நவம்பர்-27- அன்று ''அமெரிக்காவிற்கு நடமாட்ட மற்றும் தங்கும் பயண உரிமைகள்''- என்ற தலைப்பில் ARD- தொலைக்காட்சி ஓர் செய்தி அறிக்கை தந்தது. அதில் ''அமெரிக்கா ஈராக்குடன் போர் தொடுக்கும் நேரத்தில் விமானங்கள் நடமாட்டத்திற்கும் தங்கிச் செல்வதற்கும் முழு உரிமைகளை பிரதமர் ஷ்ரோடர் உறுதி செய்து தந்திருக்கிறார். அமெரிக்காவும், இதர நேட்டோ நாடுகளும் ஜேர்மனியில் தங்களது விமானங்களை செலுத்துவதற்கு உத்தரவாதம் செய்து தரப்படும். ஜேர்மனியில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஜேர்மனியில் உள்ள அமெரிக்க தளங்களின் பாதுகாப்பிற்கு ஜேர்மனி உத்தரவாதம் செய்து தரும் என்று அவர் அறிவித்திருக்கிறார்'' என குறிப்பட்டது..

பசுமை கட்சியின் ஒரு பிரிவினர் இதில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா ஈராக்கில் தலையிடுவதற்கு ஐக்கிய நடுகள் பாதுகாப்பு சபை திட்டவட்டமாக சம்மதம் தெரிவித்தால் மட்டுமே, இத்தகைய உரிமைகளை அமெரிக்காவிற்கு தரவேண்டுமென்று பசுமை கட்சியின் ஒரு பிரிவினர் வலியுறுத்துகின்றனர். வெளியுறவு அமைச்சர் பிஷ்ஷர் இதே பாணியில் இதற்கு மேலே சென்று புருஸ்ஸல்ஸில் (Brussels) அவர் இராணுவ தலையீட்டிற்கு இரண்டாவது ஐ.நா. தீர்மானம் தேவையா? ஒரு கேள்விக்கணையை தொடுத்தார். இந்த அம்சத்தை கருத்தில் கொண்டு ஆராயும்போது, ஐ.நா. பாதுகாப்புசபையில் நிறைவேற்றிய 1441- வது தீர்மானம் ''திட்டவட்டமான முடிவில்லாதது'' என்று இவர் கருத்து தெரிவித்தார். ஈராக்கில் தலையிடுவதற்கு அவசியம் என்ற கட்டளை குறித்து எந்த விவாதம் நடத்துவதாகயிருந்தாலும், அது ''நேற்றைய விவாதம்'' என்றே ஆகும் என பிஷ்ஷர் கருத்து தெரிவித்துள்ளார்.

டிசம்பர் நடுப்பகுதியில் பசுமை கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் புதிய தலைமை தன்னுடைய நிலைப்பாட்டை ஆதரிக்கும் நிலையை பிஷ்ஷர் உருவாக்கினார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவர் Angelika Beer வேறு திசை வழியில் தனது கருத்தை தெரிவித்தார். ஆனால், பிஷ்ஷர் 1441- வது தீர்மானத்தையே அமெரிக்கா தலையிடுவதற்கான கட்டளையாக எடுத்துக்கொள்ளலாம் என்று கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாக டிசம்பர்-17, 2002 - தேதியிட்ட Süddeutsche Zeitung பத்திரிகை கருத்து தெரிவித்தது.

சமூக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுக் கொள்கை நிபுணர் கெர்னொட் எலர் (Gernot Erler) இதேபோன்ற ஓர் கருத்தை தெரிவித்தார். ஜேர்மனியின் வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வதற்கு ''உத்தரவாதம் நிச்சயம்'' அளிக்கப்படும் என்றார். ஏற்கனவே இது சம்மந்தமாக உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது ஐ.நா. கட்டளையை பெறாமல் அமெரிக்கா ஈராக்கில் தலையிடுமானால் ஜேர்மன் வான்வெளியை பயன்படுத்துவதற்கு அனுமதிமறுக்கலாம் என்பது, அண்மையில் நடைபெற்ற பசுமைகட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் இல்லாதுபோயுள்ளது. இதற்கு பசுமைகட்சியின் முன்னணி உறுப்பினர்கள் ஆதரவு தந்தனர் என்று எலர் அறிவித்தார்.

சமூக ஜனநாயகக் கட்சியின் உள்நாட்டு விவகாரங்களுக்கான டீட்டர் விபல்புட்ஸ் (Dieter Wiefelspütz) பசுமைகட்சி மாநாட்டில் அமெரிக்காவிற்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே, சர்வதேச அடிப்படையில் தெளிவான சட்டவரையறைகள் உள்ளன, இவை நம்மை கட்டுப்படுத்துபவை. இதன்படி, அமெரிக்கா ஜேர்மனியில் உள்ள தனது இராணுவ தளங்கள் மற்றும் ஜேர்மனியின் வான்வெளியை பயன்படுத்திக்கொள்ள முடியும். சட்டம் ''இவ்வளவு தெளிவாக இருக்கும்போது, அனுமதிப்பதற்கு எதுவுமில்லை'' என்று அவர் கூறியுள்ளார்.

சமூக ஜனநாயகக் கட்சியின் உள் விவகார நிபுணர், தொடர்புடைய சர்வதேச ஒப்பந்தங்களையோ அல்லது ஜேர்மனியின் அரசியல் சாசனத்தையோ ஆராயவில்லை என்று தெளிவாக தெரிகின்றது. உண்மையில் சட்ட நிலை மிகத் தெளிவாக உள்ளது. அதாவது, அது சமூக ஜனநாயகக் கட்சியின் நிபுணர் கருத்துக்கு நேர் முரணானது. ஆக்கிரமிப்பு போர் தலையீடு என்பதில் அடங்கியுள்ள எல்லா நிபந்தனைகளும், அமெரிக்கா திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளுக்கு முற்றிலும் பொருந்துவதாக அமைந்திருப்பதால் அமெரிக்கா சர்வதேச சட்டத்தையும், அது தொடர்புடைய சர்வதேச ஒப்பந்தங்களையும் மீறியுள்ளது. மேலும், ஐ.நா. சாசனத்தின் இரண்டாவது பிரிவு, 1949ம் ஆண்டு ஜெனிவா ஒப்பந்தத்தின் (Geneva Convention) நான்காம் பகுதியில் சிவிலியன்களுக்கு பாதுகாப்பு தருவது தொடர்பான 51வது பிரிவையும், 1975-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் (Helsinki) நேட்டோ நாடுகள் ஒப்பந்த 51-வது விதியையும் அமெரிக்கா மீறி உள்ளது.

ஜேர்மனியின் அரசியல் சட்டம் ஆக்கிரமிப்பு போர் எதிலும் கலந்துகொள்வதற்கு கண்டிப்பாக தடைவிதிக்கிறது. (26-வது பிரிவு முதல் பிரிவு) இது தவிர ஜேர்மனியின் குற்றவியல் நடைமுறைச் சட்ட 80-வது பிரிவு கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது. ''ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு போர் ஆபத்தை உண்டாக்குகின்ற வகையில் யார் ஆக்கிரமிப்பு போருக்கு ஆயத்தம் செய்தாலும், மேலும் ஜேர்மனி கூட்டாட்சி குடியரசு அத்தகைய போரில் கலந்துகொள்ள விரும்பினாலும், அத்தகையவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்தாண்டுகளுக்கு குறைவில்லாத சிறைத் தண்டனை விதிக்கப்படும்.''

டாஸ் (taz) பத்திரிக்கை அந்த சமூக ஜனநாயகக் கட்சியின் நிபுணரை பேட்டி கண்டது. அதில், ''அவரது தெளிவான சட்டநிலை'' குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. அவர்தான் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல்வாதிகளிலேயே மிகப்பெருமளவிற்கு சட்டத்தகுதி பெற்றவர், அவர் டாஸ் நிருபர் கேள்விக்கு தெளிவாக பதில் சொல்ல முடியாமல் சுற்றி வளைத்து விளக்கம் கொடுத்தார். ''சர்வதேச சட்டத்திற்கு கட்டுப்படும்போது மட்டுமே, அமெரிக்கா, வான்வெளியை பயன்படுத்தும் உரிமை பெறுகிறதா?`` என்பது டாஸ் நிருபரின் கேள்வி, அதற்கு சமூக ஜனநாயகக்கட்சியின் நிபுணர் ''ஆம், ஆனால், நான் கூறுவதுபோல், இது தான் நிலைமை என கருதுகின்றேன்" என்று பதிலளித்தார். ''ஐ.நா. கட்டளையை பெறாமல் அங்கீகரிக்க முடியாத தற்காப்பு போரில் அமெரிக்கா ஈடுபடும்போது வான்வெளியை பயன்படுத்தும் உரிமை அமெரிக்காவிற்கு இல்லை என்பதுதானே அந்த நிலை?" என்பது டாஸ் நிருபரின் கேள்விக்கு ''அறிவு ஜீவிகள் நடத்துகின்ற அனுமான விவாதங்களில் ஈடுபட நான் விரும்பவில்லை" என்று அந்த நிபுணர் பதிலளித்தார் (டாஸ், (taz) டிசம்பர் 13, 2002)

ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டளையை பெற்றால்கூட சர்வதேச சட்டங்களுக்கு விரோதமாக ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் சட்ட விரோத நடவடிக்கைகளின் எந்த அம்சத்தையும் அந்த கட்டளை மாற்றிவிட முடியாது.

போரில் ஜேர்மனி பங்கு பெறுவது தொடர்பான சட்ட நிலையை மதிப்பீடு செய்வதாகயிருந்தால், ஜேர்மனியின் அரசியல் சாசனமும், சர்வதேச சட்டமும் தான் அதற்கான மிக உயர்ந்த அதிகாரம் வழங்கும் நீதிமன்றங்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும், 1949 ஏப்ரல் 4ந் திகதி கையெழுத்தான நேட்டோ ஒப்பந்தம் உட்பட பிற எல்லா உடன்பாடுகளும் அரசியல் சட்டத்திற்கும், சர்வதேச சட்டத்திற்கும் கீழான நிலையில் உள்ளவைதான்.

நேட்டோ ஒப்பந்தம் ஐந்தாவது பிரிவில் உள்ள ''பரஸ்பர உதவி'' என்ற பிரிவு நேட்டோ உறுப்பினர்களில் ஐரோப்பிய அல்லது வடக்கு அமெரிக்க நாடு ஏதாவது ஆயுத தாக்குதலுக்கு உள்ளான பின்னர் செயல்படும் என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது சம்மந்தமாக நிர்வாக நீதிமன்றத்தின் உச்ச அமைப்பு நீதிபதி டீற்றர் டைசறொத் Frankfurter Rundschau எனும் பத்திரிகையில் (2002 செப்டம்பர்14, ந் திகதி) ஒரு தீர்ப்பளித்திருக்கிறார் அதில் ``இது சம்மந்தமாக, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள், சுதந்திரமாக முடிவு செய்ய முடியாது, 5 ஆவது பிரிவு முழு நாட்டோ ஒப்பந்த அடிப்படையில் தெளிவாக நிபந்தனைதான் விதித்திருக்கிறது. அந்த நிபந்தனை ஐ.நா ஒப்பந்தம் மற்றும் செல்லுபடியாகும் சர்சதேச சட்டங்களக்கு உட்பட்டுத்தான் பரஸ்பர உதவி பிரிவு செயல்பட ஆரம்பிக்கும்'' என்று நீதிபதி தெளிவுப்படுத்தியுள்ளார்.

புஷ் அரசாங்கம் கூட ஈராக் அமெரிக்காவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்ததாக கூறவில்லை. புஷ் நிர்வாகம் ஈராக்கிற்கு எதிராக போர் புரியுமானால் மேலும் அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக நேட்டோ ஒப்பந்த நாடுகளை அதிகாரபூர்வமாக போரில் ஈடுபடுத்துமானால், சட்ட அம்சம் ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, நேட்டோ ஒப்பந்த ''பரஸ்பர உதவி'' பிரிவு செயலுக்கு வரும் என்று கூறிவிட முடியாது. தற்போது இந்த நிலைக்கு நேர் எதிரான போக்கு நிலவுவதாக ஜேர்மன் செய்திகள் தெரிவிக்கின்றன.

See Also :

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் யுத்த முன்னெடுப்பு பற்றி பேர்லின் கூட்டத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவர் டேவிட் நோர்த்தின் உரை

ஜேர்மன் பிரதமரின் ஈராக் மீதான யுத்தத்திற்கு எதிர்ப்பின் பின்னணி

ஜேர்மன் பிரதமர் ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தத்தை எதிர்த்துள்ளார்

Top of page