World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

German TV airs documentary charging American war crimes in Afghanistan

US State Department denounces broadcast

ஜேர்மன் தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்திப்படம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது

ஒளிபரப்பிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம்

By Stefan Steinberg
21 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றம்சாட்டும் செய்திப்படத்தினை ஜேர்மன் தொலைக்காட்சி ஒளிபரப்பியதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஆத்திரத்துடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அப்கனிஸ்தானில் படுகொலைகள், அமெரிக்கர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களா? என்பது அந்த செய்தி படத்தின் தலைப்பு. அயர்லாந்து நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் ஜேமி டோரன் (Jamie Doran) இந்தப் படத்தை தயாரித்தார். டிசம்பர்-18 - அன்று ஜேர்மனியின் பிரதான அலைவரிசைகளில் ஒன்றான, ARD-யில் இது ஒளிபரப்பாயிற்று, இந்த 45-நிமிட செய்திப்படம் இதற்கு முன்னர், பிரிட்டனின் ஐந்தாவது அலைவரிசையிலும், இத்தாலிய ராய் (RAI) தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றது.

ஜேர்மனி தொலைக்காட்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி லாரி ஸுவார்ட்ஸ் இதுபற்றி கருத்து தெரிவிக்கும்போது கூறியதாவது:- "உண்மைகள் முழுமையாக தவறாக தரப்பட்டிருக்கிறது மற்றும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கையை நியாயமற்ற வகையில் சித்தரித்திருக்கிறார்கள். அத்தகைய செய்திப்படத்தை மதிப்புக்குரிய, ஜேர்மனி தொலைக்காட்சி அலைவரிசை ஏன் ஒளிபரப்பியது என்பது, எங்களுக்கு வியப்பாக உள்ளது."

உண்மையில் டோரன் செய்திப்படத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக சொல்லப்பட்டு வந்தபோதிலும், அமெரிக்க அரசு அது குறித்து எந்த அறிக்கையும் வெளியிட மறுத்துவிட்டது. அல்லது, அந்த செய்திப்படத்தில் அமெரிக்க இராணுவ வீரர்கள் போர் குற்றங்களில் சம்மந்தப்பட்டிருப்பதாக தரப்பட்டுள்ளதாக விரிவான, ஆதாரங்களுக்கு எந்தவிதமான மறுப்பும் அமெரிக்கா வெளியிடவில்லை. தான், சித்தரிக்கும் சம்பங்கள் தொடர்பாக, நேர்முக பேட்டி அல்லது அறிக்கைத் தருமாறு, தயாரிப்பாளர் டோரான் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், பென்டகன் அவற்றை ஏற்க மறுத்து வந்திருக்கின்றது.

அந்த செய்திப்படத்தின் பூர்வாங்க காட்சிகள் ஜூன் மாதம் ஐரோப்பாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. போர்க்குற்றங்கள் தொடர்பாக நடுநிலை விசாரணைக்கு ஆதரவை திரட்டுவதற்காகவும், ஆப்கான் படுகொலைகள் தொடர்பான சான்றுகள் அழித்துவிடப்படாமல் தடுப்பதற்காகவும், இவ்வாறு இந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அவற்றை ஐரோப்பாவில் ஒளிபரப்பினார். தற்போது டோரான், முழு-நீள செய்திப்படத்தில் அவர் ஆரம்பத்தில் திரையிட்டு காட்டிய மூல ஆதாரங்களையும் இணைத்திருக்கிறார். சர்வதேச சட்டங்கள் அனைத்திற்கும் முரணாகவும், போர்க் கைதிகள் நடத்தப்படுவது தொடர்பான நடைமுறைகளுக்கு விரோதமாகவும், அல் காய்தா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான கைதிகள் படுகொலை செய்யப்பட்டதற்கான சான்றுகளை அந்த செய்திப்படம் தெளிவாக காட்டுகின்றது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பின் கடைசி கோட்டை என்று கருதப்பட்ட கொன்டஸ், 2001 நவம்பரில் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களில் இந்த செய்திப்படம் சித்தரித்தது. அமெரிக்கா படைகள் மற்றும் ஜெனரல் அப்துல் ரசீத் தோஸ்துன் தலைமையிலான அதன் ஆப்கன் நட்பு படைகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில் சரணடைந்த தாலிபான் ஆதரவாளர்கள் 8,000-பேரைவிடுத்து, 3,000 அளவிலான போர் கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டது, மற்றும் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நேரில் கண்டவர்களது சாட்சியம் உட்பட எல்லா விபரங்சளையும், திரைப்படத் தயாரிப்பாளர் சித்தரித்திருக்கிறார்.

கொன்டஸ் போரின்போது அமெரிக்கப் படைகள் ஆயுதம் தாங்கிய தாக்குதலில் ஈடுபட்டார்கள். காலா-இ-ஜங்கி (Qala-i-Janghi) கோட்டையில், நூற்றுக்கணக்கான தலிபான் கைதிகளை கொன்று குவித்தனர். அவர்களில் 86-தலிபான் வீரர்கள் கோட்டைக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளில் ஒழிந்து உயிர் தப்பினர். அவர்களில் ஒருவர் அமெரிக்கரான ஜோன் வோல்க்கர் லின்ட் ஆவார்.

சரணடைந்த 8,000-பேரில் மூவாயிரம் போர்க்கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, ஷிபார்க்ஹன் நகரிலுள்ள சிறை வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். காலா-இ-ஜாங்கி சம்பவங்களைத் தொடர்ந்து தனது ஆப்கான் சகாவான ஜெனரல் ரசீத் டோஸ்டும் இனது ஒத்துழைப்போடு, அமெரிக்க இராணுவ அதிகாரிகள் 3,000-போர்க்கைதிகளை கொன்று குவித்தததை அந்த செய்திப்படம் சித்தரித்துக் காட்டுகின்றது.

ஷிபார்க்ஹன் நகருக்கு கைதிகள், இறுக்கமாக மூடப்பட்ட, மூச்சுவிட முடியாத, பெட்டகங்களில் அடைத்து அனுப்பப்பட்டனர். ஆப்கானிஸ்தான் டிரக் டிரைவர்களுக்கு கட்டளையிட்டு கட்டாயப்படுத்தி, ஒவ்வொரு பெட்டகத்திலும், 200 முதல் 300 வரை கைதிகளை அடைத்து அனுப்பினர். அப்படி கைதிகளை ஏற்றிச்சென்ற டிரைவர்களில் ஒருவர் அளித்த பேட்டியில், அப்படி கைதிகள் ஏற்றிச்செல்லப்பட்ட ஒவ்வொரு பெட்டகத்திலும், அடைக்கப்பட்ட கைதிகளில் 150 முதல் 160 பேர் வரை ஒவ்வொரு தடவையிலும், மாண்டுவிட்டனர் எனக் கூறியுள்ளார்.

அந்தப் பெட்டகங்களுடன் சென்ற ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர் ஒருவருக்கு அமெரிக்க கமாண்டர், பெட்டகத்தை நோக்கிச் சுட்டு, அவர்கள் மூச்சுவிட வழி செய்யுமாறு கட்டளையிட்டார். அப்படிச் சுடுவதன் மூலம் உள்ளே இருப்பவர்கள் குண்டிற்கு இலக்காகலாம் என்பது அந்த ஆப்கான் இராணுவ வீரருக்குத் தெரிந்திருந்தது. பல பெட்டகங்களில் அடிப்பகுதியிலிருந்து, ரத்தம் வழிந்து ஓடி வருவதை தான் கண்டதாக ஓர் டாக்சி டிரைவர் தெரிவித்தார். இப்படி டிரக்குகளில் கொண்டு செல்லப்பட்டு அதிலும் தப்பி உயிரோடிருந்த போர்க்கைதிகள் மசர்-இ-ஷரீப் அருகிலுள்ள பாலைவனத்தில் கொண்டுபோய் இறக்கப்பட்டனர். அங்கு நின்றுகொண்டிருந்த 30-முதல் 40-அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரோடிருந்த போர் கைதிகளை சுட்டுக்கொன்று பாலைவனத்தில் நாய்களுக்கு இரையாக வீசியெறிந்தனர், என்று டைக்சி டிரைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

உலக சோசலிச வலைத் தளத்திற்கு கடந்த ஜூனில் பேட்டியளித்த ஜோரான், தனது செய்திப்படத்தில் இடம் பெறுபவர்கள் மற்றும் அதனைத் தயாரிக்க உதவியவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தினை வெளிப்படுத்தினார். உண்மையில் மசர்-இ-ஷரீப் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகளில் இருவர் வன்முறை மரணத்திற்கு பலியாகியுள்ளனர்.

நடுநிலை விசாரணைக்கு அவசரம் ஏற்பட்டிருப்பதாக, சென்ற டிசம்பர்-18-ந் தேதி அந்த செய்திப்படம் காட்டப்பட்டபோது, அதில் பிரதான ஆப்கான் ஆராய்சியாளரும், செய்திப்படத்தை தயாரிப்பதில் சம்மந்தப்பட்டவருமான நஜிபுல்லா குரைஷி இன் பேட்டியும், ஒளிபரப்பாயிற்று.

குரைஷி நோயாளியாக படுக்கையில் படுத்திருக்கிறார், அவரது தலையில் கடுமையான (கனமான) கட்டுப்போடப்பட்டிருக்கிறது. எலும்பு முறிவு இடது கரத்தில் ஏற்பட்டிருப்பதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்க படைகள் நடமாட்டம், கைதிகள் டிரக்குகளில் ஏற்றப்பட்டது, மூவாயிரம் கைதிகள் படுகொலை ஆகியவை தொடர்பாக, கூடுதல் திரைப்பட சுருள்களை வாங்குவதற்கு முயற்சித்தபோது, அவர் திடீர்த்தாக்குதலுக்கு உள்ளானார். அப் படத்தினை தனக்கு என்று பிரதி எடுத்துக்கொள்ளும் வேலையில் இருந்தபோது குரைசி, அமெரிக்கப் படைகள் மீது குற்றங்களை சுட்டிக்காட்டும் திரைப்படச் சுருள்களை வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு கிடைத்துவிடாது தடுப்பதில் குறியாக செயல்பட்டடும், குண்டர்களினால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் படுகொலைகள் என்ற தலைப்பில் 90-நிமிடம் வீடியோ-படம் குரைஷிக்கு வழங்கப்பட்டது. இந்த பிரதிகளை ஜெனரல் டோஸ்டும் கட்டளைப்படி திருடிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்தப் பிரதி தற்போது, ஜெனரல் டோஸ்டும் வசம் உள்ளது. தன் மீது ஏதாவது வழக்கு தொடரப்பட்டால் அதனை தடுப்பதற்கு அந்தப் பிரதியை அவர் வைத்திருக்கிறார். டோஸ்டும் மீது குற்றம்சாட்டுவதற்கு ஏதாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அந்த வீடியோ படம் கொலைகளில் அமெரிக்க இராணுவப் படைகளின் நெருக்கமான ஒத்துழைப்பை எடுத்துக்காட்டும்.

தனது சொந்த பாதுகாப்பினை கருத்தில்கொண்டு, இதன் பின்னர் குரைஷி அவரது குடும்பத்தாருடன், நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தனது செய்திப்படத்தில் சாட்சிகளாக, கலந்துகொண்டவர்களது பாதுகாப்பிற்கு, சர்வதேச ஏஜென்சிகள் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று டிசம்பர்16-ம் தேதி பேர்லினில் டோரான் பேட்டியளித்தார்.

அமெரிக்க அரசு டோரான் செய்திப்படம் குறித்து, தெளிவில்லாத நிலையினதும் மிரட்டலினதும் கலவையான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்கின்றது. அமெரிக்க மீடியாக்களில் டோரானின் செய்திப்படம் மற்றும் அமெரிக்க இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் ஈடுபட்ட குற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்துவிட்டனர். இது, அமெரிக்க ஊடகங்கள் தங்களுக்கு தாங்களே விதித்துக்கொண்ட தணிக்கை முறையாகும்.

போர்க்கைதிகள் சித்ரவதை படுகொலைகள், போன்ற நிகழ்ச்சிகளில் அமெரிக்கா உடந்தையாக இருந்தது என்ற குற்றச்சாட்டுகளை ஜூன்-13-ந்தேதி மறுத்து பென்டகன் அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் 14-ல் அமெரிக்க அரசுத்துறை (US State Department) சம்பிரதாயத்திற்கு ஒரு மறுப்பினை விடுத்தது.

ஆப்கன் படுகொலை செய்திப்படத்தில் அமெரிக்க அரசுத்துறை அதிகாரி பிலிப் ரீக்கர் அமெரிக்க அரசுத்துறையின் (US State Department) சார்பாக அளித்த நிரூபர்கள் பேட்டி இடம் பெற்றிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பான, குற்றச்சாட்டுகளை தனது துறை ஆராய்ந்து வருவதாக, ரீக்கர் அதில் குறிப்பிட்டார். ஆனால், அந்த விவகாரங்களில் முழுவதுமாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் மட்டுமே சம்மந்தப்பட்டிருந்திருக்கிறார்கள். அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதாக ரீக்கர் சமாதானமும் கூறியுள்ளார்.

பென்டகனுக்கும், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கும், திரைப்படத் தயாரிப்பாளர் விடுத்த வேண்டுகோள்கள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்திருக்கின்றது. எனவே, டோரான் தனது செய்திப்படத்தில் அவரது முடிவையும் தெரிவித்திருக்கிறார்; "எந்தவிதமான விசாரணையும், நடைபெறவிடாமல், தடுப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் முயன்று வருகிறது என்ற எண்ணமே ஏற்படுகிறது" என அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு கோடை காலத்தில், மனித உரிமைகள் அமைப்பு ஒன்று "மஷர்-இ-ஷெரீப்" பாலைவனத்தில், புதைக்கப்பட்டிருந்தவற்றில் 3 உடல்களைத் தோண்டி எடுத்தது. இதில் இறந்த மூவரும் மூச்சுத்திணறிச் செத்துவிட்டார்கள் என்றும், முழு விசாரணையை நடத்துவதை நியாயப்படுத்த போதுமான சான்றுகள் உண்டு என்றும் அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டது. இறுதியாக கொலைகள் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐ.நா. இணங்கியது. 2003 இளவேனிற் காலத்தில் அதிகாரபூர்வமான ஐ.நா. விசாரணைக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

அத்தகைய நடுநிலை விசாரணை நடத்தப்படுவதற்கு உருவாக்கப்படும், பிரதான தடைக்கற்களை அந்தச் செய்திப்படமே சுட்டிக்காட்டுகிறது. மஷர்-இ-ஷரீப் பகுதியைச் சுற்றிலுமுள்ள இடங்கள், இப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான ஜெனரல் டோஸ்டும் இன் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் ஒரு பேட்டியில், சாட்சிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் செய்து தரமுடியாத நிலையிலிருப்பதாக "வருத்தம்" தெரிவித்துள்ளார்.

டோரான், தனது செய்திப்படத்தை முழுமையாக விநியோகிக்க உறுதி கொண்டிருக்கிறார். மேலும் 11 நாடுகள் இந்தச் செய்திப்படத்தை வாங்கி இருக்கின்றன. டோரான் அமெரிக்காவில் தனது திரைப்படத்தை சாட்சிக்கு விடுவதில் உறுதிபூண்டுள்ளார்.

See Also :

மஜார்-இ-ஷெரிப் சிறைக் கிளர்ச்சி பற்றிய சி.என்.என் ஆவணப்படம்: அமெரிக்க போர்க்குற்றங்களின் படச்சுருள் ஆவணங்கள்

மெஸார்- இ- ஷாரீப் சிறையில் அமெரிக்க யுத்தக்குற்றம்: புதிய வீடியோ நாடா சாட்சி

Top of page