:
செய்திகள் ஆய்வுகள்
:
அவுஸ்திரேலியா
Australian government prepares military
for Iraq war
அவுஸ்திரேலிய அரசாங்கம் ஈராக்கிற்கு எதிரான போருக்கு தமது இராணுவத்தை தயார்
செய்கிறது.
By Richard Phillips
24 December 2002
Use this version to print
|
Send this link by email
| Email the author
இந்த ஆண்டின் முற்பகுதியில் நடக்கவிருக்கும், அமெரிக்கா வழிநடத்திச் செல்லும் ஈராக்கிற்கு
எதிரான போரில் ஈடுபட தன்னுடைய பாதுகாப்புப் படைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் தயார் செய்வதாக வந்த
ஒரு செய்தித்தாள் அறிவிப்பை இல்லையென அது மறுக்கவில்லை. டிசம்பர் 18 ஆம் தேதி டெய்லி ரெலிக்கிராப்
பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையானது அவுஸ்திரேலியாவின் இராணுவ தளபதிகள் மார்ச் மாதத்தில் நடைபெறும்
தாக்குதலுக்கு திட்டமிடுவதைப் பற்றி வெளியிட்டுள்ளது. ரெலிக்கிராப் இல் வெளிவந்த கட்டுரை சமீபத்தில்
அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்திருந்த அமெரிக்காவின் துணை செயலாளர் ரிச்சர்ட் அர்மிட்டேஜ், அமைச்சர்கள்
மற்றும் மூத்த தொழிற் கட்சி அதிகாரிகளுடன் நடத்திய விரிவான போருக்கான ஆயத்தங்களைப் பற்றியும்
விளக்கியுள்ளது.
மூத்த இராணுவ அதிகாரிகளின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி டெய்லி ரெலிக்கிராப்
மேலும் கூறுகையில் ஈராக் போரில், அவுஸ்திரேலியாவின் பொறுப்பாக சிறப்பு போர் விமானங்கள்
(SAS)
F/A-18 ஹார்னட்
ரக போர் விமானங்கள், P3C
ஒரியான் கடற்படை ரோந்து விமானங்கள், போயிங் 707 எரிபொருள் நிரப்பும் விமானங்கள், மற்றும் மூன்று
போர்க் கப்பல்கள், நீரிலும் நிலத்திலும் செயல்படக்கூடிய கட்டுபாட்டு கப்பலொன்றும் அதிலுள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட
அவுஸ்திரேலியா இராணுவ அதிகாரிகள் வளைகுடாவிலுள்ள கட்டாரில் இருக்கும் அமெரிக்க இராணுவ தலைமைத் தளத்தில்
தயாராக இருப்பதுடன், அவுஸ்திரேலியாவினுடைய இராணுவப் படைப்பிரிவின் வருகையையும் மேற்பார்வையிடுவர் என தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பிய 150 படைப்பிரிவுகளை உள்ளடக்கிய
SAS படைப்பிரிவு.
ஈராக்கில் நடக்கவிருக்கும் போருக்காக தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. செய்தித்தாளின் கூற்றுப்படி, அவர்களது
பங்கு, இடம் விட்டு இடம் பெயரக்கூடிய ஸ்கட் ஏவுகணைகளைத் தாங்கிய ஈராக்கின் ஏவு தளங்களை அழிப்பதற்காக
இருக்கலாம். ஹார்னட் போர் விமானங்கள், கட்டார் மற்றும் குவைத்திலிருந்து வருகின்ற, அமெரிக்க போர் விமானங்களுடன்
இணைந்து வெடிகுண்டு தாக்குதலை நடத்திடலாம். நீரிலும் நிலத்திலும் செயல்படக்கூடிய நவீன ரக கப்பல்கள் தற்காலிக
"சேமிப்பு களஞ்சியமாகவும்", ஆஸ்திரேலிய இராணுவப் படைப்பிரிவுகளுக்கு கட்டுபாட்டு நிலையமாகவும் செயல்படலாம்.
அச்செய்தி ஏடு கூறுகையில், பென்டகன், ஏற்கனவே அப்பிராந்தியத்தில் 60,000 படைகளை
நிறுத்தியுள்ளது. மேலும் 50,000 படைகள் ஜனவரி மாதம் இணையும். ஏறக்குறைய 300,000 தரைப்படைப் பிரிவுகள்
திட்டமிட்டப்படி இயங்கும். அமெரிக்கா வழிநடத்திச் செல்லும் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு அளித்தால்,
மற்ற நாடுகளும் அதில் பங்கேற்கும்.
1990-91 ஆம் ஆண்டின் வளைகுடா போருக்கு ஹவாக்கின் தொழிற் கட்சி அரசாங்கம்,
மூன்று கடற்படைக் கப்பல்கள், கடற்படையின் நீரடிப் படைவீரர்கள் குழு, 16 வது வான்வெளி பாதுகாப்பு படைப்பிரிவின்
குழு மற்றும் பிரிட்டிஷ், அமெரிக்கத் தரைப்படை நடவடிக்கைகளை கண்காணிக்க சில இராணுவ அதிகாரிகள், வான்வெளி
புகைப்படங்களை ஆய்வு செய்வோர், மற்றும் நான்கு மருத்துவக் குழுக்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்தது. ஐ.நா.வின்
தடை நடவடிக்கைகளை கட்டாயமாக செயலாக்கிட ஆரம்பத்தில் ஏற்பட்ட முரண்பாட்டிற்கு பிறகு, கூடுதல் சிறு கடற்படை
போர்க் கப்பல்கள் ஆயத்தப்படுத்தப்பட்டன. தற்போது மாறுபட்ட விதமாக 2003ம் ஆண்டு தாக்குதலுக்கு
எந்தவொரு அவுஸ்திரேலிய விமானப்படை விமானங்கள் எதுவும் ஆயத்தமாக்கப்படவில்லை. மேலும் எந்தவொரு நேரத்திலும்,
மிகச் சொற்பமான தரைப்படைப்பிரிவுகள் தவிர, அதிகமானவை ஈடுபடுத்தப்படவில்லை.
மேலும் ஹாவர்ட் எந்தவொரு தீர்மானமும் இராணுவம் பொறுப்பேற்பதைப் பற்றி முடிவு
எடுக்கப்படவில்லை என்றும் ''அத்தகைய போக்கிற்கு அவசியமுமிருக்காது'' என்று கூறினாலும், அவரோ அல்லது
எந்தவொரு பிற அமைச்சர்களோ பத்திரிகை அறிக்கையின் எந்தவொரு அம்சத்தினையும் நிராகரிக்கவில்லை.
செப்டம்பர் 11 2001 நிகழ்விலிருந்து, ஹவார்ட் அரசாங்கம் உறுதியாக ''பயங்கரவாதத்தின்
மீதான போர்'' எனக்கூறும் புஷ் நிர்வாகத்திற்கு தன்னுடைய ஆதரவினைத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்
நடந்த சில நாட்களுக்குப் பின்பு ஹாவர்ட், இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட
ANZUS ஒப்பந்தத்தினை
முதன் முறையாக செயல்படுத்த வேண்டிக் கொண்டதுடன், அவுஸ்திரேலியாவை அதனுடைய இராணுவத்தினால் அமெரிக்காவை
பாதுகாக்கவும் வேண்டியது. சென்ற அக்டோபரில், கடற்படை கப்பல்களையும்
SAS படைப்பிரிவுகளையும் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பிய அரசாங்கம்,
கடந்த மாதங்களில் அமெரிக்கக் கப்பற்படைக்கு மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள கடற்படை மற்றும் செயல்படும் நிலையிலுள்ள
துப்பாக்கி சுடும் நிலைகளையும் தந்து உதவியுள்ளது.
அமெரிக்காவிற்கு இராணுவ உதவி வழங்குவதற்கு ஏற்றுக் கொண்ட பொறுப்பினை வெளிப்படையாக
ஒத்துக்கொள்ள ஹாவர்ட் தயக்கம் காட்டுவது, உள்நாட்டில் பொது மக்களிடையே ஈராக் போருக்கு எதிராகக் காணப்படும்
எதிர்ப்பாகும். அண்மையில் நடத்தப்பட்ட மோர்கன் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில், 52 சதவிகிதமான அவுஸ்திரேலியர்கள்,
ஈராக் தலைமைப் பொறுப்பிலுள்ள சதாம் ஹூசேனை பதவி இறங்கச் செய்ய அமெரிக்கா வழிநடத்திச் செல்லும்
போருக்கு உதவுவதை ஆதரிக்கவில்லை. 45 சதவிகித மக்கள் மட்டுமே ஈராக்கிற்கு எதிரான அவுஸ்திரேலியாவின் இராணுவ
நடவடிக்கைகளை ஆதரித்தனர். இது டிசம்பர் 1990ஆம் ஆண்டு முதல் வளைக்குடாப் போரில் 57 சதவிகிதமாகவும்,
இரண்டு மாதங்களுக்குப்பின் பெப்ரவரி 1991ம் ஆண்டு 75 சதவிகிதமாகவும் இருந்தது.
அமெரிக்கா வழிநடத்திவரும் போரில் பங்குபெற்றால், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு
அவுஸ்திரேலியாவும் ஒரு இலக்காகக்கூடும் என பொது மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் பதற்ற உணர்வினைப் பற்றியும்
அரசாங்கம் அக்கறைக் கொண்டுள்ளது. அக்டோபர் 12ம் தேதி நடந்த பாலி (Bali)
குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 180 பேர்களில் 88 அவுஸ்திரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதால், இந்த பயம்
தீவிரமடைந்துள்ளது.
இத்தகைய மக்களின் மனநிலையினை சரி செய்திட, ஹாவர்ட் தன்னை ஒரு பொறுப்புள்ள,
தன்னுடைய நாட்டு மக்களை காப்பாற்றும் பணியிலே இருக்கின்ற தலைவராகக் காட்ட முயன்று வருகிறார். ஆர்மிட்டேஜ்
வருகையை ஒட்டி, அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவரது அரசாங்கம், ''என்றுமே அத்தகைய
செயல்களுக்கு பொறுப்பேற்றிடாது. மேலும் அவை நம்முடைய சவால்களை சந்திக்கும் வலிமையை பலவீனப்படுத்தவோ
அல்லது நமது தாய் நாட்டிற்கு அருகில் நிகழும் தீய நேர்வுகளை சந்திக்கவோ நேரிட்டால், அதற்கு என்றும் பொறுப்பேற்றிடாது."
அதே வேளையில், அவுஸ்திரேலியா அரசாங்கம், உள்ளூர் பத்திரிகை மற்றும் தொழிற் கட்சியின் ஆதரவோடு,
கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தினையும் பயன்படுத்தி, பயம் மற்றும் பாதுகாப்பின்மையினை மக்கள் மனதிலிருந்து நீக்கிட
முயலுகின்றனர். இத்தகைய முயற்சி ''பயங்கரவாதத்தின் மீதான போருக்கு'' ஆதரவினை தேடுவதாகவும், ஈராக்கிற்கு
எதிரான போரில் அவுஸ்திரேலியாவின் பங்கேற்பினை நியாயப்படுத்த முயல்வதாகவும் தெரிகிறது.
இதன் தொடர் நடவடிக்கையாக, டிசம்பர் 19ஆம் தேதி, ஹாவர்ட் மிகப் பெரிய
மாற்றத்தினை செயல்பாடுகளிலும், பயங்கரவாதத்திற்கு எதிரான அவுஸ்திரேலியாவின் செயல்பாடுகளை விரிவாக்கிடவும்,
310 பேர் கொண்ட பலமான இராணுவ கமோண்டாக்களைக் கொண்ட ஒரு புதிய பிரிவினை சிட்னி நகரில் தொடங்கவும்,
சிறப்பு வசதிகள் கொண்ட ஹெலிகொப்டர்களை 450 மில்லியன் டொலருக்கு வாங்கிடவும், கன்பராவில் தேசிய
கட்டுப்பாட்டு நிலையமொன்றை உருவாக்கிடவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நிர்வாக அமைப்பில் செய்யப்படும்
மாற்றம் உள்ளூரில் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இராணுவ படை வீரர்களுடன்
பொலீசும் இணைந்து செயல்பட வழிவகுத்திடும்.
இப்புதிய பிரிவு அவுஸ்திரேலியாவின் சிறப்பு பிரிவுகளை 25% சதவிகிதம் அதிகமாக்கியுள்ளது.
1500 படைப்பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ள படைப்பிரிவு கூடுதலான தளவாடங்களையும் தகவல் தொடர் சாதனங்களையும்
கொண்டுள்ளது. கன்பராவிலுள்ள தேசிய கட்டுப்பாட்டு நிலையம் அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில்
பெர்த் நகரிலுள்ள SAS
படைப்பிரிவையும், மற்றும் நான்காவது RAR
படைப்பிரிவாக கமோண்டா படைப்பிரிவையும், சிட்னியில் நிலை கொண்டுள்ள ஹோல்ட்ஸ்வார்தி படைத்தளத்தையும்
வழிநடத்தும்.
டிசம்பர் 20 தேதியன்று, பிரிட்டனில் பிளேயர் அரசாங்கம் 30,000 படைப்பிரிவுகளை
ஈராக்கிற்கு அருகில் தயாராக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்தவுடன், அவுஸ்திரேலிய அரசாங்கம் இராணுவத்தின் 5
வது விமானப்படைப் பிரிவிற்கு கிறிஸ்மஸ் விடுமுறையை ரத்து செய்தது. பிளாக் ஹாக் மற்றும் சினூக்
ஹெலிக்கொப்டர்களை தன் செயல்பாட்டில் வைத்திருக்கும் இப்படைப்பிரிவானது, கிழக்குத் திமோரில் அவுஸ்திரேலியாவின்
இராணுவத் தலையீட்டுக்கும் மற்றும் SAS
உடன் இணைந்து பல காத்திரமான இராணுவ நடவடிக்கைகளையும் செய்திருந்தது.
கட்டாருக்கு வருகை தந்துள்ள 20 அவுஸ்திரேலிய இராணுவ
அதிகாரிகளையும் உள்ளிட்ட தற்போதைய முடிவானது ஹவாட் அரசாங்கத்தின் இராணுவத் தலையீட்டுக்கான
முன்னேற்பாட்டு நடவடிக்கையை காட்டுகின்றது.
See Also :
ஈராக்கிற்கு
எதிரான போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்
Top of page
|