Al Gore and the politics of oligarchy
அல்கோரும், செல்வர் குழு ஆட்சி அரசியலும்
By Barry Grey
21 December 2002
Back
to screen version
2004 ஜனாதிபதித் தேர்தலில் தான், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு
அனுமதி கோரப்போவதில்லை என அல்கோர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில், அமெரிக்க அரசியல் முறை மற்றும்
ஜனநாயகக் கட்சியின் செயல்பாடு தொடர்பான பல விவரங்கள் பொதிந்து கிடக்கின்றன.
முன்னாள் உப ஜனாதிபதியும், ஜனநாயக் கட்சியின் தலைவராக இருப்பவருமான அல்கோர்,
2000 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 50 மில்லியன் அமெரிக்கர்களின் ஆதரவு வாக்குகளை பெற்றவர், டிசம்பர் 15-ந்தேதியன்று
CBS
தொலைக்காட்சிக்கு ''`60 நிமிடங்கள்'' நிகழ்ச்சியில் பேட்டி அளித்தபோது தனது முடிவை அறிவித்தார். ஜனநாயகக்
கட்சியில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் ஆர்வம் கொண்டவர்களிலேயே அமெரிக்கர்களுக்கு அதிகம் அறிமுகமானவர்
அல்கோர், இவ்வளவு ஆரம்பக்கட்டத்திலேயே தான் போட்டியிடப் போவதில்லை என்று முடிவை அறிவித்துவிட்டார். அவரது
அறிவிப்பு மூலம் தெரிவது என்ன? அமெரிக்காவின் அரசியலை, செல்வாக்குள்ள ஊடகங்களும் அரசியலில் முடிவு செய்யும்
வல்லமை படைத்தவர்களும் எந்த அளவிற்குத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றதுடன்,
இவர்கள் அமெரிக்காவினுடைய சிறிய நிதிச் செல்வர் குழுவின் சார்பில் பேசுபவர்களுமாகும்.
பல மாதங்களாக அல்கோர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜோர்ஜ்-டிபிள்யூ-புஷ் உடன்
மோதிப் பார்ப்பதற்கு தீவிரமான முன்னேற்பாடுகளைச் செய்து வந்தார். வெளிநாட்டு, உள்நாட்டுக் கொள்கைகள் தொடர்பான
உரைகளை அவர் நிகழ்த்தி வந்துடன், தொலைக்காட்சிகளின் பேட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தனது மனைவியுடன்,
நாடு முழுவதும், தனது புத்தகம் தொடர்பான சுற்றுப்பயணம் செய்து வந்தார். 2004 தேர்தலில், புஷ்-சிற்கு சவால்விடும்
ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பதாக மக்களின் கருத்துக்கணிப்புகளும், அவருக்கு ஜனநாயகக்
கட்சி வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குகளை வழங்கத் தயாராக இப்பதாகக் கூறும் கருத்துக் கணிப்புகள் புலப்படுத்தின.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதியுள்ள வேட்பாளர் யார்? என்பதை முடிவு
செய்வது வாக்குச் சாவடிகள் அல்ல. கம்பெனிகளது நிர்வாகக் குழுக்களின் அறைகளிலும், ஊடகங்களின் நிர்வாகிகளது அலுவலகங்களிலும்,
உயர் வசதிபடைத்த ஜனநாயகக் கட்சியின் முன்னணி தலைவர்கள் அறைகளிலும்தான் வேட்பாளர் முடிவு செய்யப்படுகிறார்.
அமெரிக்காவின் தேர்தல் தொடர்பான அரசியலை உண்மையிலேயே முடிவு செய்யும், ''எண்ணக்கூடிய'' சில நூறு தனி
மனிதர்கள், அல்கோரை விரும்ப வில்லை.
அல்கோரை, அவரது சகபாடிகள் விரும்பாததற்கான அடிப்படைக் காரணம், அவர்
கட்சிக்கு நிதி திரட்டுவதில் மந்தப்போக்குடன் செயல்பட்டது மற்றும் அவரது புத்தகம் தொடர்பான சுற்றுப் பயணங்களின்போது
செய்தி ஊடகங்களின் ''சந்தேகத்துடனான செய்திகள்'' ஆகும். இந்த அம்சங்களின் அடிப்படையில்தான் கட்சித்தலைமை
அவரை விரும்பவில்லை என்று அல்கோரின் சகாக்கள் தெரிவித்ததுடன், முன்னாள் உப ஜனாதிபதியான அல்கோருக்கு புதிதாகக்
கிடைத்த செல்வத்தின் ஒரு பகுதி, வெஸ்ட் கோஸ்ட் முதலீட்டு நிறுவனத்தின் தலைமை மூலம் கிடைத்தது போன்ற தகவல்கள்தான்
அல்கோரின் அரசியல் ஆர்வத்தை மட்டுப்படுத்தியதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.
தனது முடிவிற்கு விளக்கம் தந்த அல்கோர், ஒரே ஒரு அரசியல் நோக்கைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்
- அது அதிக முக்கியத்துவம் நிறைந்த கருத்தாகும். புளோரிடாவில் பதிவான வாக்குகள் தொடர்பாக, 36 -நாட்கள்
நடந்த தகராறுகளின் பின், இறுதியாக, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம், தனது குடியரசுக் கட்சி எதிரிக்கு ஜனாதிபதி
பதவி தரப்பட்டது பற்றி மறைமுக அல்கோர் தனது ''60 நிமிடங்கள்'' பேட்டியில் குறிப்பிட்டார். ''எனக்கும், ஜனாதிபதி
புஷ்சிற்கும் இடையில் மறு விளையாட்டுப் போலவே தேர்தல் பிரச்சாரம் அமையும். பழைய நிகழ்ச்சிகளில் கவனம் அதிகம்
செலுத்தப்படும் நிலை உருவாகும். அது ஓரளவிற்கு, எதிர்காலத்தில் கவனம் பதிப்பதை திசை தடுமாறச் செய்யும்.
எல்லா தேர்தல் இயக்கங்களும் எதிர்காலத்தை முன்நிலைப்படுத்தியே நடத்தப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன்''
என்று மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதை வேறு விதமாகச் சொல்வதென்றால், 2000 - தேர்தல் நெருக்கடி ஜனநாயகத்திற்கு
எதிரான வழிமுறையில், எவ்வாறு தீர்த்து வைக்கப்பட்டது என்பது இரண்டாவது புஷ் - அல்கோர் போட்டியில்
அம்பலத்துக்கு வரும். புஷ் நிர்வாகம் சட்டப்பூர்வமானதா? என்ற கேள்வியும் எழும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதன்
மூலம், ஆளும் வர்க்கமும், இரண்டு அரசியல் கட்சிகளும், எதில் கவனம் செலுத்துகின்றன? என்பதை அல்கோர் எதிரொலிக்கிறார்.
புஷ் ஜனாதிபதியாகப் பதவியில் அமர்த்தப்பட்டது, வாக்குகளை நசுக்கித்தான் என்பது அடுத்த
தேர்தலிலும் விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்படுமானால், இன்றைக்கு அமெரிக்க மக்களை எதிர்நோக்கியுள்ள,
அரசியல் பிரச்சனைகளை ஆராய்வதில் கவனம் திசை திரும்பிவிடும் என்பது வெறும் வார்த்தை அலங்காரமே. அது ஒரு புதிய
விவாதப் பொருளே அல்ல. டிசம்பர் 2000-த்தில் புளோரிடா, வாக்குகளின் மறு எண்ணிக்கைக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி
வைத்தது முதல் அரசியல், ஊடக, அமைப்புகள் முழுவதும், அதையே பேசி வருகின்றதுடன் அல்கோர், விட்டுக்கொடுத்து
ஆற்றிய உரையைத் தொடர்ந்து இந்த விவாதங்கள் நீடிக்கவே செய்கின்றன.
அமெரிக்காவின் எல்லா அடிப்படை உரிமைகளிலும், மிக முக்கியமான அடிப்படை உரிமை
வாக்களிக்கும் உரிமையாகும். இந்த உரிமையை பாதுகாத்து நிற்பதற்கு அரசியல் நிர்வாகத்தின் எந்தக் குழுவும் சக்தியற்றதாக,
விருப்பம் இல்லாததாக நடந்துகொண்டது, அந்த தேர்தல் நேரத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாயிற்று. இரண்டாண்டுகளுக்குப்
பின்னர் இப்படி கடத்திச் செல்லப்பட்ட தேர்தலின் அரசியல் சிறப்பு தற்போது மிகத் தெளிவாக தெரிகிறது. மோசடி
மூலமும் நிதித்துறை கட்டளை மூலமும் பதவியில் அமர்த்தப்பட்ட அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களின் தொடர்
நடவடிக்கைகள் அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு அரசியல் சட்ட பாதுகாப்புகளும், ஜனநாயக
நடைமுறைகளும் நசுக்கப்பட்டு வருகின்றன.
சென்ற செப்டம்பர் மாதம் சான்பிரான்ஸிஸ்கோவில் அல்கோர் ஆற்றிய உரை, சிறப்பாக
எல்லா ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டன. ''அரசியல்சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகள் மீது புஷ் நிர்வாகம்
தாக்குதல்'' தொடுத்து வருவதை அவர் கண்டித்தார். ''ஓர் அமெரிக்க குடிமகன் நீதி நிர்வாக நடைமுறையிலோ,
அல்லது நிவாரணங்களோ இல்லாமல் சிறையில் அடைக்கலாம் என்ற கருத்து அதுவும் ஜனாதிபதி அல்லது அவரது பெயரில் செயல்படுபவர்
சொல்கிறார் என்பதற்காக சிறையில் அடைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த அடிப்படை உரிமையை மங்கச்
செய்ய முடியாது'' என்று மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் அறிவித்தார்.
புஷ் நிர்வாகம் மக்கள் செல்வாக்கை பரவலாக பெற்றிருக்கிறது என்றும், அரசியல் ரீதியில்
அசைக்க முடியாதது என்றும் கூறப்படுவதை பொய்யாக்குகின்ற வகையில் உயர்மட்டங்களில் 2000-ம் தேர்தல் சம்பவங்கள்
மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்திற்கு காரணம் என்ன? அல்கோரின் அறிவிப்பை ஊடகங்கள் மிகுந்த
நிம்மதியோடு வரவேற்றுள்ளன. நியூயார்க் டைம்ஸ் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளதுடன், மிகுந்த துணிச்சலோடு கோர்
தனது முடிவை அறிவித்திருக்கிறார் என்று எழுதியுமுள்ளது. டிசம்பர்-17-ந்தேதியிட்ட தனது தலையங்கத்தில் தகராறுக்குரிய
தேர்தல்கள் பற்றி சர்ச்சை கிளப்புவதை தவிர்க்கும் வகையில் அறிவோடும் சுயநலம் இல்லாமலும் அல்கோர் முடிவு செய்திருப்பதாக
எழுதியிருக்கின்றது.
''புஷ்ஸைவிட பொதுமக்களது வாக்குகளை 5 இலட்சத்திற்கு அதிகமாக பெற்றிருந்தாலும்,
இறுதிச் சுற்று வாக்குகளில், 267- வாக்குகளுக்கு 271 என்ற மிக மெல்லிய நூல் இழைபோன்ற வேறுபாட்டில்
நடைபெற்ற சண்டையை உச்ச நீதிமன்றம் முடிவிற்கு கொண்டு வந்தது''. ''கோர் எப்போதுமே மிகப்பெரிய
பெருமையை பெறத்தான் செய்வார்''. அந்த வாக்கெடுப்பிற்குப் பின்னர், நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் தனது பதவி ஆசையை புறம் தள்ளிவிட்டு, நாட்டின் பாதுகாப்பையே முன்நிறுத்தி முடிவு செய்தார்''
என்று டைம்ஸ் வார இதழ் எழுதியுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டில் தாராளவாத சிந்தனையுள்ள ஜனநாயக கட்சி
விமர்சகர் இ.ஜே.டியோன் (E.J. Dionne)
2000-ம் தேர்தல், களவாடப்பட்டு விட்டதாக பரவலாகவும், ஆழமாகவும் ஆத்திரம் நிலவியதாக எழுதிவிட்டு
அதுபோன்ற ஜனநாயக உணர்வுகளை பொருட்படுத்தாத அல்கோரையும் பாராட்டியிருந்தார். டிசம்பர்-17 அன்று ''மில்லியன்கணக்கான
அமெரிக்கர்கள்'' தாம் விரும்பிய வாக்காளருக்கு வாக்களிக்கும் ஜனநாயக உரிமை அடிப்படையில் புளோரிடாவிலுள்ள
வாக்குச் சாவடிக்கு அல்கோருக்கு வாக்களிக்கச் சென்றனர். அதில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட
முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லையென்று குறிப்பிட்டார். கோர் அடுத்த
தேர்தலில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருப்பது அவரது பொறுப்புணர்வையும், சுயஅறிவையும், தெளிவான
சிந்தனையையும் காட்டுவதாக தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
மக்களில் மிகப் பரவலான பிரிவினர் 2000-ம் தேர்தல் முடிந்த புத்தகம் என்று கருதுவதாக
அல்கோர் கருத்து தெரிவித்து, டிசம்பர்-16 அன்று அவர் பத்திரிக்கையாளர் மாநாட்டில் குறிப்பிட்டதுடன், புஷ் ஜனநாயக
விரோதமான முறையில் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பதாக, தனது புத்தகத்துக்கான பயனத்தின்போது, நாட்டில் தான்
சந்தித்த மக்கள் பெரும் கவலை கொண்டிருப்பதாக விளக்கினார். அதே காரணத்தினால்தான், இப்போது 2004-தேர்தலில்
புஷ்ஷுக்கு எதிராகப் போட்டியிட போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
இவைபோன்ற விமர்சனங்கள் எடுத்துக்காட்டுவது, என்ன? சென்ற தேர்தலில் தீர்க்கப்படாமல்
உள்ள பிரச்சனைகள் மிக கடுமையான அரசியல் மற்றும் சமூகக் கொந்தளிப்புக்களை உருவாக்கும் தன்மை கொண்டவை.
2004-தேர்தல் எப்படி நடக்கும், எது முக்கியமாக இடம்பெறும் என்பது, இப்போதே கோடிட்டு காட்டப்படுவதுடன்
ஆளும் வர்க்கம் தனது நிலை உறுதியாகயிருக்காது என்று இப்போதே பயப்படத் துவங்கிவிட்டது. உள்நாட்டில் அரசியல்
பொதுக் கருத்து என்பதும், வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறப்படுவது வெறும் பேச்சாகும். அல்கோர் தேர்தல்
போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை என்பது, அமெரிக்க அரசியல் அமைப்பில் உருவாகியுள்ள நெருக்கடியை
காட்டுகின்றதுடன், தற்போதுள்ள அரசியல் நிர்வாகம், சாதாரண மக்களுக்கு கவலை தருகின்ற எந்த சமுதாய மற்றும்
அரசியல் பிரச்சனைகளை வெளியிடுவதை சகித்துக்கொள்ளாது என்பது இப்போது தெளிவாகிவிட்டது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் கலந்துகொள்ள போவதில்லை என்ற அறிவிப்பு தொடர்பாக,
மிகக் கடுமையான கருத்துக்கள், அவர் தேர்தல் ஆயத்தங்களை துவக்கும்போதே வெளிப்பட்டன. புஷ் நிர்வாகத்தின் இராணுவ
அடிப்படையான வெளிநாட்டுக் கொள்கை மற்றும், சமுதாயத்தை பாதிக்கின்ற பொருளாதாரக் கொள்கை ஜனநாயக உரிமையின்
மீது பரவலான தாக்குதல் ஆகியவற்றால் பரவலாக அதிருப்தி ஏற்பட்டிருப்பதை தான் சரியாக பயன்படுத்திக்கொள்ள
முடியும் என்று, அல்கோர் திட்டமிட்டார். செப்டம்பர்-23-அன்று சான்பிரான்ஸிஸ்கோவில் கோர் புஷ் நிர்வாகம் ஈராக்குடன்
ஒருதலைபட்சமாக, மிக வேகமாக போர் தொடுக்க முயற்சி செய்வதை அல்கோர் கண்டித்ததுடன், இத்தகைய நடவடிக்கை
கவனக்குறைவானது, அரசியல் ரீதியில் உரிய நடவடிக்கையல்ல என்றும் விமர்சித்தார். அத்துடன் அரசாங்கமே நேரடியாக
அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இத்தகைய அரசியல் முயற்சிகளுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே ஊடகங்கள். கடுமையான எதிர்ப்பும்
குரோதமும் காட்டி நின்றன. பெரும்பாலும் ஊடகங்கள், புஷ் நிர்வாகம் தொடர்பாக அல்கோர் வெளியிட்ட கண்டனங்களை
புறக்கணித்தன, அல்லது பரிகசித்தன.
நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சி தலைமையும் ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவும்,
அல்கோரின் கருத்துக்கள் குறித்து அலட்டிக் கொள்ளாமல் மவுனமாகிவிட்டன. புஷ் நிர்வாகத்தின் மீது நேரடியாக
தாக்குதல் நடத்துவதையோ, அல்லது உழைக்கும் மக்களது பொருளதார மற்றும் சமுதாய ஆதங்கங்களுக்கு ஆறுதல் கூறுவதையோ,
குறிப்பாக வரவிருக்கின்ற போர்ச் சூழ்நிலையில் அவை கொண்டிருக்கவில்லை. ஜனநாயகக் கட்சித் தலைமை அல்கோரினுடைய
அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாமல், ஈராக் மீது போர் தொடுப்பதற்கு புஷ் நிர்வாகத்திற்கு வாக்களித்தது.
இதில் தெளிவாக ஓர் நிலை எடுக்கப்பட்டது, எனவேதான் அல்கோர் டிசம்பர்-15 அன்று
அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தனது முடிவை அறிவித்தார். ஜனநாயகக் கட்சி தேசியக்குழு பிரதிநிதிகளில்
கணிசமான அளவிற்கு இடம்பெற்றுள்ள பெரும்பான்மையினர், கட்சியின் சார்பில் அல்-கோர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில்
போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில், எந்த சமூக சக்திகள் தனது முயற்சியை திசை தடுமாறச் செய்தனவோ
அதே சமுதாய சக்திகளுக்கு கட்டுப்பட்டு தனது முடிவை அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளிலிருந்து இரண்டு அடிப்படை முடிவுகளுக்கு வரமுடியும். குடியரசுக்கட்சியின்
ஆழமான பிற்போக்குத்தனமான வலதுசாரி கொள்கைகளை அரசியல் சாசன அடிப்படையில் எதிர்ப்பதற்கு ஜனநாயகக்
கட்சி வல்லமையில்லாதது. ஜனநாயகக் கட்சியும் இதே வலதுசாரி வழியில்தான் நடைபோடுவதுடன், ஏகாதிபத்திய போர்
தொடர்பாக கம்பெனிகள் நிர்வாகக் குழுக்கள் தெரிவிக்கும் பொது கருத்து அடிப்படையில் தனது கருத்தையும் ஜனநாயகக்
கட்சி மாற்றிக்கொண்டு வருவதுடன் ஆட்சி முறையில் சர்வாதிகார நடைமுறைகளையும், இது ஆதரிக்கின்றது. எனவே, தனியார்
எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சொத்துக்களை குவிக்க அனுமதிக்க வேண்டுமென்று ஜனநாயகக் கட்சியும்
விரும்புகிறது.
அரசியல் அடிப்படையில் ஜனநாயகக் கட்சி திவாலாகிப் போனதற்கு அடிப்படைக் காரணம்
அமெரிக்க நிதி ஆதிக்கக் குழுவினரின் தேவைகளையும், கோரிக்கைகளையும், முன்னிலைப்படுத்தி அதனது அரசியல் வாழ்வு
அதற்குக் கீழே அமுக்கப்படுவதாலாகும். அமெரிக்காவில் மிகப்பெரும்பாலான உழைக்கும் வர்க்கத்திற்கும், சமுதாய செல்வத்தை
ஏகபோகமாக குவித்திருக்கும் மிகக் குறுகிய தட்டினருக்கும் இடையேயான வர்க்கத் துருவப்படுத்தல் விரிந்து செல்கையில்,
சமூகத்தின் செல்வங்களை குவித்து அரசியல் மேல் கட்டுமானத்தை ஏகபோகமாக கொண்டுள்ள இத்தட்டு, பெருமாலான
மக்களது பிரச்சனைகளையும், கவலைகளையும், நியாயமாக எடுத்துரைப்பதை சகித்துக் கொள்ளவில்லை. பாரம்பரிய
ஜனநாயக உருவங்கள், இரண்டு பூர்ஷ்சுவாக் கட்சிகள் செயல்பாட்டிலும் சிதைந்து, செல்லரித்து எந்தவிதமான ஜனநாயக
சத்தும் இல்லாமல் வெறும் கூடாக ஆகிவிட்டன. ஆளும் வர்க்கத்தில் பழைய சம்பிரதாய தேர்தல்கள், அரசியல் சாசன
நடைமுறைகள் ஆகியவற்றிற்கான ஆதரவு படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது.
அமெரிக்கா மிகப் பரந்த சிக்கலான சமுதாய அமைப்புள்ள நாடாக இருப்பதுடன், பிரமாண்டமான
உழைக்கும் வர்க்கம் மற்றும் கலப்பின மக்களையும், உலக பண்பாடுகள் மற்றும் பலதரப்பு மக்களது அறிவியலும்
நிறைந்துள்ள சமுதாய அமைப்பை கொண்டது. செய்தி ஊடகங்களும், அரசியல் நிர்வாகமும் இந்த மக்களை பொதுவாக
மன நிறைவோடு ஒரே சீராக இயங்கி வருவதாக சித்தரித்துக் காட்டுகின்றன. இது மிகவும் தவறான ஓர் சித்திரம்
ஆகும். எனவேதான், தவறாக படம் பிடித்து காட்டுவது அம்பலமாகிவிடும் என்பதால் அரசியலில் சமுதாயத்தின் பல்வேறு
தரப்புக்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். அங்கு தீவிரமான கருத்து வேறுபாடுகள் எதையும் வெளியிட முடியாது.
இந்த அரசியல் கபட நாடகத்திற்கும், உண்மையில் நிலவும் சமூக பாகுபாடுகள் மற்றும் வர்க்க
கொந்தளிப்புக்கள் ஆகியவற்றிற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உருவாகி வருகின்றது. இந்த இடைவெளி மிக விரைவில்
மிகப்பெரிய அரசியல் கொந்தளிப்புக்களாக உருவாகும். ஜனநாயகக் கட்சி ''மக்களின் கட்சி'' என்ற கற்பனை பரவலாக
கைவிடப்பட்டு வருகின்றதுடன், அது மதிக்கப்படவில்லை. மிகப் பெரும்பாலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது
சமூக நிலைமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசியல் மாற்றீட்டை எதிர்ப்பார்க்கும் நிலைதான்
உருவாகி வருகிறது.
|