World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

What is bin Ladenism?
Al Qaeda leader's letter to Americans

பின்லேடனிசம் என்பது என்ன?
அமெரிக்கர்களுக்கு அல்கொய்தா தலைவரின் கடிதம்
By Bill Vann
29 November 2002

Back to screen version

ஒசாமா பின் லேடனால் எழுதப்பட்டதாக கருத்துத் தெரிவிக்கும் அண்மையில் மொழிபெயர்க்கப்பட்ட 4000-வார்த்தைகள் கொண்ட கடிதம், அவரது இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் முத்திரையின் கீழ் இருக்கும் அப்பட்டமான படுபிற்போக்கு அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்கள் இருப்பினும், தெளிவான முன்வைப்பாக இருப்பதை வழங்குகிறது.

அமெரிக்க இலக்குகள் மீதான புதிய தாக்குதல்கள் அலை பற்றிய அதன் அச்சுறுத்தல் இருப்பினும், கடிதமானது புஷ் நிர்வாகத்திடமிருந்தும் சரி அல்லது வெகுஜன ஊடகத்திலிருந்தும் சரி மிகக் குறைவான கவனத்தைப் பெற்றிருக்கிறது. ஈராக்கிற்கெதிரான போருக்காக புஷ் நிர்வாகம் தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் மத்தியில் மற்றும் செப்டம்பர் 11 கடத்தல்காரர்களுடன் செளதி மற்றும் அமெரிக்க உளவுத்துறை இரண்டையும் தொடர்புபடுத்தி வெளிப்படுத்தல்கள் அதிகரித்து வருகின்றதன் மத்தியில் அது வருவதால், அதன் காலப் பொருத்தம் மிகவும் வசதியற்றதாக இருக்க முடியாது.

ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை ஊக்கப்படுத்தும் முயற்சியாக, ஒரு ஆண்டுக்கு முன்னர், உலக வர்த்தகமையக் கட்டிடத்தின் மீதான தாக்குதல்கள் பற்றிய பின்லேடனின் இழிவான கொண்டாடல், பரந்த அளவில் பரப்பப்பட்டது. ஆயினும், இப்பொழுது, உத்தியோக ரீதியாக வாஷிங்டன், ஈராக்கை அதன் பூதாகாரப்படுத்தலில் இருந்தும் பாக்தாதின் "பேரழிவுகரமான ஆயுதங்கள்" என்று கூறப்படுவதை மிதித்துத் தள்ளும் அச்சுறுத்தலாகப் படம் பிடித்துக் காட்டும் அதன் முயற்சியிலிருந்தும் எந்த விதமான திசைதிருப்பலையும் விரும்பவில்லை. இதன் விளைவாக, ஒருசமயம் புஷ்ஷால் "உயிரோடு அல்லது கொல்லப்பட" வேண்டும் என்று விரும்பப்பட்ட, செப்டம்பர் 11-ன் ஆசானாகக் கூறப்பட்டவர், உத்தியோக ரீதியிலான வாஷிங்டன் கண்களில் அடையாளம் காணாதவராக ஆகியிருக்கிறார்.

இருப்பினும் கடிதமானது, முதலாவது எடுத்துக்காட்டில், புதிய பயங்கரவாத அட்டூழியங்கள் பற்றிய அதன் அச்சுறுத்தல் காரணமாக கவனமான ஆய்வுக்குரியதாக இருக்கிறது. இவை ஈராக்கியர்கள் மீதாக எதிர்பார்க்கப்படும் இராணுவத் தாக்குதலுக்கான பழிவாங்கும் நடவடிக்கை என இடப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, கடிதம் கூறுகிறது: "எவராவது எமது கிராமங்களையும் நகரங்களையும் அழிக்க முயற்சித்தால், பின்னர் அவர்களது கிராமங்களையும் நகரங்களையும் நாம் அழிப்போம். எமது நல்வாய்ப்புக்களை எவராவது திருடினால், பின்னர் நாம் அவர்களது பொருளாதாரத்தை கட்டாயம் அழிப்போம். எவராவது எமது குடிமக்களைக் கொன்றால், பின்னர் அவர்களது குடிமக்களை நாம் கொல்வோம்."

இந்த வரிகள் பின்லேடன் மற்றும் அவரது அதே வகைப்பட்டவர்களின் காட்டுமிராண்டித்தனத்தையும் பின்தங்கிய நிலையையும் கோடிட்டுக் காட்டுகின்றன. புரட்சிகர இயக்கங்களைத் தாக்குவதற்கும் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் மேலும் ஏகாதிபத்திய குறிக்கோள்களுக்கும் கெடுவான் கேடு நினைப்பான் என அமெரிக்க அரசாங்கமும் அதன் உளவுத்துறை முகவாண்மைகளும் திரும்பவும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

பின்லேடனின் கடிதத்தின் பெரும்பகுதி குடிமக்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஒரு கீழ்த்தரமான பாதுகாப்பிற்கு அர்ப்பணிக்கிறது. அல்லாவின் (கடவுளின்) தெய்வீக இசைவு என்று கூறிக்கொள்வதுடன் கூட, அவர் அத்தகைய தாக்குதல்களை, மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் கொல்லப்படுதற்கு, அமெரிக்கக் குண்டு வீச்சுக்களால் ஆப்கானியர்கள் பலியானதற்கு மற்றும் அமெரிக்காவால் நிர்ப்பந்திக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் விளைவாக பட்டினியாலும் நோயாலும் அழிந்துபோன ஈராக்கியருக்கு பழிக்குப் பழிவாங்கல் என நியாயப்படுத்துகிறார்.

பின்லேடனின் அரசியல் பரிணாமத்தைப் பின்பற்றி வருபவர்கள் ஆக்கிரமிப்பின் கீழ் புண்படுத்தப்படும் பாலஸ்தீனியர்கள் மற்றும் அமெரிக்க ஆதரவு பொருளாதாரத் தடைகளின் விளைவாக இறந்து போனதாக மதிப்பிடப்படும் 15 லட்சம் ஈராக்கியரின் துயரத்திற்காக அக்கறை கொள்ளும் அவரது பணியானது ஒப்பீட்டளவில், கடும் கம்யூனிச எதிர்ப்பு மற்றும் மத வெறிவாதம் இவற்றால் ஓட்டப்படும் கருத்தியல் நிகழ்ச்சி நிரலில் அண்மைய சேர்க்கைகள் ஆகும் என்பதைக் கவனிப்பர்.

"யூதேயாவும் சமேரியாவும்" யூதர்களுக்கு கடவுளால் அருளப்பட்டவை என்ற வலதுசாரி சியோனிச கூற்றுக்களுக்கு எதிராக, இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பைபிளில் கூறப்படும் தீர்க்கதரிசிகளின் உண்மையான வாரிசுகள் முஸ்லிம்கள் மட்டுமே என்று அதே மலைவாழ் இன-மதவாதவாத அடிப்படையில் வாதிக்கின்றனர்.

செப்டம்பர் 11-ல் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க குடிமக்கள், 3000 அலுவலகத் தொழிலாளர்கள், விமானப் பயனிகள், தீ அணைப்பு வீரர்கள் மற்றும் ஏனையோர் பாலஸ்தீனிய மக்களை ஒடுக்குதற்கு, ஆப்கான் மீது குண்டு வீசுதற்கு அல்லது ஈராக்கிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதித்ததற்கு பொறுப்பல்ல என்ற எந்த எதிர்ப்பினையும் அவர் கைகழுவி விடுகின்றார்.

"தங்களின் அரசாங்கத்தை தங்களின் விருப்பம்போல் தேர்ந்தெடுப்பவர்களுள் தேர்ந்தெடுப்பவர்கள் அமெரிக்க மக்கள்தான்; அந்தத் தேர்வு அதன் கொள்கைகளுக்கு அவர்களின் உடன்பாட்டிலிருந்து கிளைவிடுகிறது," என எழுதுகிறார். "ஆப்கானிஸ்தானில் எம்மீது குண்டுவீசுதற்கு விமானங்களுக்கு நிதி அளித்தது, பாலஸ்தீனத்தில் எமது வீடுகளை இடித்துத் தள்ளுதற்கு டாங்கிகளுக்கு நிதி அளித்தது, அரேபிய வளைகுடாவில் எமது நிலங்களை ஆக்கிரமித்த இராணுவத்திற்கு மற்றும் ஈராக்கை முற்றுகையிடுவதை உறுதிப்படுத்தும் கடற்படைக் கப்பல்களுக்கு நிதி அளித்த, வரிகளை செலுத்தியவர்கள் அமெரிக்க மக்கள்தான்..... ஆகையால் எமக்கு எதிரான தாக்குதல்களுக்கு நிதி அளித்தவர்களில் அமெரிக்க மக்களும் ஒருவர், அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மூலம், அவர்கள் விரும்பும் வழியில் இந்தப் பணங்களை செலவு செய்தலை மேற்பார்வை செய்பவர்கள், அவர்கள்தான்."

அறியாமை மிக்க இந்த வசைமாரியானது, சமூகத்தின் புரட்சிகர உருமாற்றத்தை நாடாமல், ஒத்துழைப்பதற்காக வேண்டி ஏகாதிபத்தியத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதையே நாடும் ஒரு இயக்கத்தின் அடையாள முத்திரையாக இருக்கிறது.

"தங்களின் சொந்த விருப்பின் வழியினால் தங்களின் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் அமெரிக்க மக்கள்தான்..." இரண்டாண்டுகளுக்கு முன்னர் வெகுஜன வாக்குகளில் பகுதி அளவிலும் மங்கலாகவும் பிரதிபலித்தவாறு, இது மக்களின் சுதந்திர விருப்பினை" நசுக்கியதன் மூலம் ஜனாதிபதியை அமர்த்திய ஒரு நாட்டைப் பற்றி பேசுகிறது. இந்தமாதத் தொடக்கத்தில் காங்கிரஸ் தேர்தலில் வாக்காளர்களில் அப்பட்டமாக மூன்றில் ஒரு பகுதியினர் பங்கேற்றனர் என்றளவுக்கு முக்கியமாய் முழு அரசியல் நிகழ்ச்சிப் போக்கிலும் இருந்து வெகுஜனங்கள் அந்நியப்பட்ட நாடு இது. புஷ் நிர்வாகத்தின் போர்த்திட்டங்களை எதிர்த்து கடந்த மாதம் நாடு முழுவதும் இலட்சக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர் மற்றும் இராணுவ வாதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் பல பத்துலட்சக் கணக்கான மக்கள் குரோதமாக இருக்கின்றனர் என்பது பின்லேடனைப் பொறுத்தவரை வேண்டா வெறுப்பானதாகும்.

இறுதியாக, உலகில் மிகவும் சமூக ரீதியாக அடுக்கடுக்காக அமைந்த நாடுகள் மத்தியில் அமெரிக்கா இருக்கிறது. அரசாங்கத்தை நடத்துவதில் அல்லது பொருளாதாரத்தை இயக்குவதில் உண்மையில் சொல்வதற்கு ஒன்றுமில்லாத பரந்த அளவிலான உழைக்கும் மக்களையும், பெரும்பான்மை மக்களின் நலன்களோடு சம்பந்தப்படாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை ஆணையிடும், மற்றும் பெரும் கட்சிகள் இரண்டினதும் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்தும் கோடீசுவரர்களின் மெல்லிய அடுக்கினையும் பரந்த இடைவெளி பிரிக்கின்றது. சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்படும் அமெரிக்க சமூகத்தட்டினருக்கும் சுரண்டுகின்ற அமைப்புக்கும் மற்றும் அவர்களை ஒடுக்குவோருக்கும் இடையில் பின்லேடன் வேறுபடுத்தலைச் செய்யவில்லை. பழிக்குப்பழி வாங்கும் இலக்குகளாக அனைவரும் ஒன்றாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க சமூகத்தைப் பற்றிய அவரது மத அடிப்படையிலான விமர்சனம், பெரும்பாலானவை, சின்ன மாறுதல்களுடன், குடியரசுக் கட்சியின் முக்கிய வாக்காளர் தொகுதியான, கிறித்தவ வலதுசாரி கட்சியின் அரசியல் கோட்பாட்டுத் திட்டமாக சேவை செய்ய முடியும். ஒருபாலினச் சேர்க்கையையும் மணமாகா முன்பே உடலுறவில் ஈடுபடலையும் சகித்துக் கொள்வதற்காக மற்றும் விளம்பரத்தில் பெண்களை உருப்படுத்திக் காட்டுவதற்கு அனுமதிப்பதற்காகவும் அமெரிக்காவைத் திட்டுகிறார்.

1998-99 பதவி நீக்க பிரச்சாரத்தில் குடியரசுக் கட்சி வலதுசாரியினரால் தொடுக்கப்பட்ட வேட்டையாடலை எதிரொலிக்கும் வகையில், பின்லேடன் அறிவிக்கிறார்: "உத்தியோக ரீதியான ஓவல் அலுவலகத்தில் உங்களது ஜனாதிபதி கிளிண்டனின் ஒழுக்கங்கெட்ட நடத்தைகளை யாரால் மறக்க முடியும்? அவர் 'தவறிழைத்தார்' என்பதைத் தவிர, நீங்கள் அவரை குற்றத்திற்குப் பொறுப்பாக்கக் கூட இல்லை, தண்டனை இல்லாமல் எல்லாம் கடந்துபோய்விட்டது. வரலாற்றில் உங்களது பெயர் சீரழிந்து போனதற்கான மற்றும் நாடுகளால் நினைவில் கொள்ளப்பட்ட மோசமான வகையிலான சம்பவம் இருக்கிறதா?" சிறு ஆசிரியப் பகுதி மாற்றத்தை மட்டும் செய்து விட்டு , இந்த வார்த்தைகள் வாஷிங்டன் டைம்ஸ் அல்லது அமெரிக்கன் ஸ்பெக்டேடர் இவற்றுக்கான பத்திக்கு வேலை செய்யப்பட் முடியும்.

அமெரிக்க சமுதாயம் "மனிதகுல வரலாற்றில் மோசமானது" என்ற அவரது குற்றச்சாட்டில், பின்லேடனின் பிரதான குற்றச்சாட்டு, அமெரிக்கா "அதன் அரசியற் சட்டத்திலும் சட்டங்களிலும் அல்லாவின் ஷரியா (Shariah) -ஆல் ஆளப்படுவதைக் காட்டிலும், நீங்கள் விரும்புகிறவாறு உங்களது சொந்த சட்டங்களைக் கண்டுபிடிக்க தேர்ந்தெடுக்கின்றவர்களின் நாடு. உங்களைப் படைத்த கடவுளுக்கு முழு பொறுப்பை இசைவு அளிக்கும் தூய இயற்கையை முரண்படும் விதமாக உங்கள் கொள்கைகளில் இருந்து மதத்தைப் பிரிக்கிறீர்கள்."

மதகுரு பாசிசத்தின் சமயக் கோட்பாடு அமெரிக்க அரசியலில் அதன் இணைத் தன்மையைக் கொண்டிருக்கிறது. உண்மையில், சேர்ச்சையும் அரசையும் பிரிப்பதன் மீது குடியரசுக் கட்சி வலதுசாரிகளின் தொடர்ச்சியான தாக்குதலின் எதிரொலி வசதியாக மிகவும் நெருக்கமாக இருக்கிறது. அவர்களின் கடும் கொடிய நடவடிக்கைகளின் கீழ் இருக்கும் அரசியலை ஆய்வதற்குத் துணிவில்லாமல் புஷ்-ம் மற்றைய நிர்வாக அலுவலர்களும் பின்லேடனையும் அவரது பின்பற்றாளர்களையும் "தீயவர்கள்" என மறைமுகமாய் மட்டும் குறித்தது சிறிது வியப்பளிக்கிறது.

அமெரிக்கத் தொடர்புகள்

இஸ்லாமிய பிற்போக்கு மற்றும் அமெரிக்க வலதுசாரி இவற்றுக்கு இடையிலான இந்த ஒப்புமைகள் ஒரு மேலோட்டமான பொருத்தத்தை மட்டுமா கொண்டிருக்கின்றன? இல்லை. பின்லேடனும் அவரைப் போன்ற ஏனையோரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நீண்டகாலமாக நெருக்கமான தொடர்புகளை அனுபவித்தனர்.

இப்பொழுது நன்கு அறிந்தவாறு, பின்லேடனுக்கும் புஷ் குடும்பத்திற்கும் இடையிலான உறவுகள், பல ஆண்டுகள் பின்னோக்கிப் போனால், மூத்த ஜோர்ஜ் புஷ் அவரது கார்லைல் குழு முதலீட்டு நிறுவனத்திற்கும் அல்கொய்தா தலைவர் குடும்பத்திற்கும் இடையில் லாபகரமான பல பேரங்களைச் செய்திருக்கிறார். 1979ல் ஆரம்பித்து ஒரு தசாப்தமாகத் தொடர்ந்த சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிரான இரகசிய யுத்தத்தில் சிஐஏவுடன் இளைய பங்காளியாக பின்லேடன் அவரது ஆரம்ப வேலையைப் பெற்றார். அமெரிக்கா சுமார் 5 பில்லியன் டாலர்களை கொடிய ஆயுதங்களிலும் உதவிகளிலும் முஜாஹைதின் கருவூலப் பெட்டிகளில் கொட்டியது. இம்முஜாஹைதின்களுக்காக உள்ளூரிலும் அதேபோல அரபு தன்னார்வத் தொண்டர்களையும் ஆள்சேர்ப்பு செய்ததில், பின்லேடன் ஆளெடுப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளில் உதவி செய்தார்.

ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜின்ஸ்கி, 1988-ல் பிரெஞ்சு செய்தித்தாளான Le Nouvel Observateur-க்கு அளித்த ஒரு பேட்டியில், சோவியத் ஒன்றியத்தைப் போருக்கு இழுக்கும் முயற்சியில் வாஷிங்டனானது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எரியூட்டிப் பேணுகிறது என்று உறுதிப்படுத்தி, அமெரிக்கக் கொள்கையைப் பற்றிக் குறிப்பிட்டார். "நாம் இப்பொழுது (USSR) சோவியத் ஒன்றியத்திற்கு வியட்னாம் யுத்தத்தை வழங்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கிறோம்" என்று 1979ல் அவர் கார்ட்டரிடம், சோவியத் துருப்புக்கள் தலையிட்ட பின்னர் கூறினார்.

பயங்கரவாத நடவடிக்கைகளை உலகெங்கும் மேற்கொள்ளுகின்ற ஒரு இயக்கத்தை உருவாக்குவதற்கு உதவியதில் அவர் வருத்தப்படுகின்றாரா எனக் கேட்டதற்கு, பிரிஜேஜின்ஸ்கி அவ்வினாவை நிராகரித்து பின்வருமாறு, "உலகின் வரலாற்றுக்கு மிக முக்கியமானது என்ன? தலிபானா அல்லது சோவியத் ஒன்றியத்தின் பொறிவா? சிலர் கிளறுகிறார்கள் முஸ்லிம்களா அல்லது மத்திய ஐரோப்பாவின் விடுதலையா மற்றும் குளிர் யுத்தத்தின் முடிவா?, எனக் கூறினார்."

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின் கைகளில் ஆயிரக்கணக்கான அமெரிக்கக் குடிமக்கள் இறந்ததற்கான அரசியல் பொறுப்பை அடுத்தடுத்து வந்த அமெரிக்க அரசாங்கங்கள் ஏற்கின்றன என்பது றொனால்ட் றேகனின் வார்த்தைகளால் மேலும் கோடிட்டுக் காட்டப்படுகின்றது. 1985ல் அவர், முஜாஹைதின்கள், "எமது ஸ்தாபகர்கள் மற்றும் பிரெஞ்சு எதிர்ப்பின் துணிவு மிக்க ஆண் பெண்களுக்கு தார்மீக ரீதியில் சமமாக இருப்பர்" எனக் கூறினார்.

அமெரிக்க இலக்குகள் ஒரு முறை நிறைவேறியதும், ஆப்கானிஸ்தான் 15 லட்சம் பேர் இறப்புடன் இடிந்த கற்கூளங்களாய் குறைக்கப்பட்டது, சிஐஏ நடவடிக்கை முடிந்தது மற்றும் பின்லேடன் தான் நட்டாற்றில் விடப்பட்டதாகக் கண்டு கொண்டார். அவரது அரசியல் திசைவழி அமெரிக்க எதிர்ப்பியம் நோக்கி கடுமையாய் திரும்பியது அப்போதுதான். இருந்தும் கூட, வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும், ஆப்கானிஸ்தானில் ஈரானிய செல்வாக்கையும் ரஷ்ய செல்வாக்கையும் எதிர்கொள்ளும் ஒரு வழிமுறைகளாக, தலிபானில் உள்ள பின்லேடனின் பாதுகாவலர்களையும் மத- தத்துவார்த்த ரீதியான சக சிந்தனையாளர்களையும் ஆதரித்து வந்தன.

ஏகாதிபத்தியத்திற்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் இடையிலான உறவு ஆப்கானிஸ்தானுக்கே தனித்தன்மை வாய்ந்ததல்ல. திரும்பத் திரும்ப, வாஷிங்டனும் அதன் பதிலாள்களும் மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள மதச்சார்பற்ற தேசியவாத மற்றும் சோசலிச நோக்குடைய தொழிலாளர் இயக்கங்களை கீழறுக்கும் ஒரு முயற்சியில் இந்த சக்திகளை ஊக்குவித்து இருக்கின்றனர். இப்பொழுதும் கூட, ஈரானை "ஊதாரி நாட்டின்" ஒரு பகுதி என ஏளனம் செய்யும் அதேவேளை, வாஷிங்டனானது சதாம் ஹூசைனின் ஆட்சிக்கு எதிராக தெற்கு ஈராக்கில் ஒரு கலகத்தைத் தூண்டிவிடும் முயற்சியில், புலம் பெயர்ந்து வாழும் ஈரானிய ஆதரவு ஷைட் இமாம் (மத குரு)-ஐ ஆதரிக்க தயாரித்துக் கொண்டிருக்கிறது.

மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தின் அபிவிருத்தியானது பின்லேடனால் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதைப் போன்ற போக்குகளுக்கு எதிராக கடும் போராட்டத்தின் தேவையை எப்போதும் எதிர் கொண்டிருக்கின்றது. 1920ல் கம்யூனிச அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில், லெனின் பின் தங்கிய நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் பற்றி வரைவு ஆய்வுக் கட்டுரையை வைத்தார், அது இதனைப் பற்றிக் கூறுகிறது.

வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முனைப்புடன் ஆதரிக்க வேண்டுவது பற்றி வலியுறுத்தும் அதேவேளை, அந்த ஆய்வுக் கட்டுரை, ஒடுக்கப்பட்ட நாடுகளுக்குள்ளே மத குரு மற்றும் ஏனய பிற்போக்கினரின் செல்வாக்கை மற்றும் மத்திய காலத்து சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டியதன் தேவையை", மற்றும் குறிப்பாக "ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களுக்கு எதிரான விடுதலை இயக்கத்தை, கான்கள், நில உடைமையாளர்கள் முல்லாக்கள், முதலியோரின் நிலையைப் பலப்படுத்தும் முயற்சியுடன் சேர்க்க முயலும், அனைத்து இஸ்லாமிய வாதம் மற்றும் அதேபோன்ற போக்குகளுடன் போராட வேண்டிய தேவையை" வலியுறுத்தினார்.

பின்லேடனிசத்தின் சமூக மற்றும் அரசியல் சாராம்சத்தை இங்கு லெனின் விவரித்தார். அது ஒடுக்கப்பட்டோரின் முயற்சிகளை எப்படியோ வெளிப்படுத்தும் திசைமாறிய விடுதலைப் போராளிகளின் அரசியல் இயக்கம் அல்ல, மாறாக அரசியல் ரீதியாய் குழம்பிய மக்களினது ஆகும். அவரது அரசியற் கண்ணோட்டத்திலும் அவரது செயல்பாடுகளிலும், பின்லேடன் பொதுவாக செளதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் அதிருப்தி அடைந்த மற்றும் மனக்குறை அடைந்த பகுதியைப் பிரதிபலிக்கிறார்.

இந்த சலுகை மிக்க தட்டு ஏகாதிபத்தியத்துடனான அதன் பேரங்களில் அது நியாயமாக நடத்தப்பட்டிருக்கவில்லை என்று உணர்கின்றது மற்றும் அதன் சொந்த அபிலாஷைகளின் மீது திணிக்கப்பட்ட மட்டுப்பாடுகளால் சினங்கொண்டிருக்கின்றது. பின்லேடனும் அவர் கொண்டிருப்பதைப் போன்ற இயக்கங்களும் கணிசமான நிதிகளை செளதி அரேபிய வர்த்தக செயலதிகாரிகளிடமிருந்தும் செளதி அரசின் உள்ளே உள்ள சக்திகளிடமிருந்தும் பெற்றிருப்பது தற்செயலானது அல்ல.

அமெரிக்க மற்றும் உலக நிதி மூலதனத்தின் பூகோள மேலாதிக்கத்திற்கு ஒரு முற்போக்கான மாற்றீட்டை முன்னெடுக்க முடியாது, உலகின் ஏனைய பகுதிகளை சொல்லத் தேவையில்லை, தங்களின் சொந்த நாடுகளின் வெகுஜனங்களின் சமூக நலன்களை இழிவுபடுத்தி, இந்த சக்திகள், பிற்போக்கு கற்பனாவாத இஸ்லாமியர் அனைவருக்குமான ஒரு அரசை முன்னிலைப்படுத்துகின்றன, அது முழு உலகினை இல்லாவிட்டாலும், முக்கிய கூறாய் இருக்கும் முஸ்லிம் நாடுகளை, நூற்றாண்டுகால பின்தங்கியநிலைக்கு, ஷரியா மற்றும் கலிஃபாத்துக்களின் ஆட்சிக்கு இழுக்கின்றன.

புரட்சிகர தலைமை இல்லாதநிலையில், இஸ்லாமிய அடிப்படைவாதமானது பிற்போக்கு நோக்கங்களுக்காக, மத்திய கிழக்கில் ஆழமாய் அதிருப்தி அடைந்துள்ள மக்கள்தொகையின் பரந்த தட்டினரைச் சுரண்டிக்கொள்ளும் திறமை பெற்றிருக்கிறது. இந்த இயக்கங்கள், வெகுஜனங்களின் சமூக நிலைமைகளை சீர்படுத்துவதற்கு அல்லது ஏகாதிபத்தியத்திடமிருந்து எந்தவிதமான உண்மையான சுதந்திரத்தையும் பெறுவதற்கு --நாசரிசத்திலிருந்து பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் வரை-- மதச்சார்பற்ற தேசியவாத செயல்திட்டங்களின் தோல்வியால் விரக்தி அடைந்திருக்கின்றன.

வாஷிங்டனின் கொள்கை --இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும் வலியத் தாக்குதலுக்கும் ஆதரவிலிருந்து ஈராக்கில் போருக்கான அமெரிக்க உந்துதல் மற்றும் வளைகுடாவின் எண்ணெய் வளமிக்க நாடுகளை இராணுவ ரீதியில் மேலாதிக்கம் செய்வதற்கான அதன் முயற்சிகள்வரை-- இந்தப் பிராந்தியத்தில் மக்களின் கோபத்தை எரியூட்டி இருக்கின்றது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் இவற்றுக்கிடையிலான உறவு ஒத்திசை வாழ்வுத் திறமுடையவை. "பயங்கரம் மீதான போர்" எனப்படுவது, அமெரிக்க பூகோள மூலோபாய நோக்கங்களை அடைவதற்கு இராணுவ வன்முறையைப் பயன்படுத்துவதற்கான ஒரு மூடுதிரை ஆகும், அது இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களுக்கு இன்னும்பல ஆட்சேர்ப்புக்களை உண்டுபண்ண மட்டுமே செய்யும். இதற்கிடையில், அமெரிக்க இலக்குகளுக்கு எதிரான பயங்கரத்தின் புதிய நடவடிக்கைகள், பூகோளம் முழுவதிலும் மேலும் அமெரிக்காவின் வலியத் தாக்குதலை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும். பின்லேடனைப் பிடிப்பதில் காணப்படும் புஷ் நிர்வாகத்தின் அக்கறையின்மை, அவரது பயங்கரவாதம் சேவை செய்யும் பயனுள்ள அரசியல் காரணங்களால் போதுமான அளவு விளக்கப்படும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved