:ஆசியா
:
கொரியா
South Korean election dominated by debate over US alliance
அமெரிக்காவுடன் கூட்டணி தொடர்பான விவாதத்திற்கு தென்கொரிய தேர்தலில் முக்கிய இடம்
By Peter Symonds
19 December 2002
Back
to screen version
தென்கொரிய மக்கள் ஜனாதிபதி தேர்தலில் இன்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
வாஷிங்டன் மீது வெறுப்பு உணர்வு வளர்ந்து வருவதை இந்தத் தேர்தல் எதிரொலித்தது. தென்கொரியாவில் 37,000 அமெரிக்கத்
துருப்புகள் நிலைகொண்டிருப்பதை தேர்தல் விவாதங்களில் குறிப்பாகச் சுட்டிக்காட்டினார்கள். புஷ் நிர்வாகத்தின் ஆதிக்க
மனப்பான்மை கொண்ட வெளிநாட்டுக் கொள்கை, குறிப்பாக, வடகொரியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும்
மோதல் போக்கு, போர் ஆபத்துக்கள் போன்ற விரிவான அடிப்படையில் புஷ் நிர்வாகம் தொடர்பான கவலைகளை
உருவாக்கியுள்ளது.
சென்ற வாரக் கடைகியில், தென்கொரியத் தலைநகரான சியோலில், 55,000த்து மேற்பட்ட
மக்கள் திரண்டு, நீதிமன்றம் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்களை விடுதலை செய்ததைக் கண்டித்தனர். இரண்டு அமெரிக்க
இராணுவ வீரர்கள் தங்களது கவனக்குறைவு காரணமாக, இரண்டு பள்ளிச் சிறுமிகளை, இராணுவ வாகனத்தை ஏற்றிக்கொன்றதாகக்
குற்றம் சாட்டப்பட்டது. ஜூன் மாதம் இந்த நிகழ்ச்சி நடந்தது. அமெரிக்க இராணுவ நீதிமன்றம் சென்ற மாதம்
அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்தது. புஷ் பகிரங்கமான மன்னிப்புக் கோரவேண்டும் என்றும், மறு விசாரணைக்கு
உத்தரவிட வேண்டும் என்றும், அமெரிக்காவுடன் தென்கொரியா நிலைநாட்டி வரும் ``படைகள் நிலைப்பாடு தொடர்பான
ஒப்பந்தத்தில்`` மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் ஆர்பாட்டக்காரர்கள் கோரினர்.
ஆர்பாட்டங்கள், தொடர்ந்து பல வாரங்கள் நடைபெற்றன. சமுதாயத்தின் பல்வேறு
தரப்பினரும் இந்த ஆர்பாட்டங்களில் கலந்த கொண்டதாக பல செய்திகள் வெளிவந்தன. கடைக்காரர்கள், டாக்சி டிரைவர்கள்,
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள், இல்லத்தரசிகள் உட்பட பல தரப்பினர் ஆர்பாட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டனர்.
அமெரிக்கப் படைகள் திரும்பப்பெறப்பட வேண்டும் என்பது நீங்கலாக, பல்வேறு கோரிக்கைகளை எடுத்து வைத்தனர்.
அமெரிக்கா தங்கள் நாட்டில் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதைக் கண்டித்தனர். ``நாங்கள் அமெரிக்காவின் காலனி அல்ல.
அப்படி நடத்தப்படுவதை நாங்கள் நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் இங்கு இருப்பதை விரும்புகிறோம். ஆனால் அவர்கள்
எங்களை சமபங்குதாரர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்`` - என்று சியோல் காபி வியாபாரியொருவர், நிரூபர்களிடம்
தெரிவித்தார்.
இச்சம்பவம் தென்கொரியாவில் எதிர்ப்புணர்வு கடுமையாகவும், பரவலாகவும் இருப்பதால்,
கன்சர்வேட்டிவ் வேட்பாளர் லீ-ஹாய்-சங், சியோலில் அமெரிக்கத் தூதரகத்துக்கு எதிரில் நடக்கும் கண்காணிப்பு
கிளர்ச்சியில் தலைகாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. படைகள் நிலைப்பாடு தொடர்பாக நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்தை
மாற்றவேண்டும் என்ற மனுவிலும் கையெழுத்துப் போட்டார். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தப்படி அமெரிக்கப்
படைப் பிரிவுகளில் பணியாற்றுபவர்களை இராணுவ நீதிமன்றம் தான் விசாரிக்கும், தென்கொரியா நீதிமன்றங்கள் விசாரிக்க
வழி இல்லை. கிரான்ட் தேசியக்கட்சிப் பிரதிநிதிதான் வேட்பாளர் லீ. இக்கட்சி எண்பதுகளின் இறுதி வரை, தென்கொரியாவில்
ஆதிக்கம் செதுக்கிய, வலதுசாரி, அமெரிக்கா ஆதரவு பெற்ற இராணுவ ஆட்சியோடு நெருக்கமான தொடர்பு
கொண்டிருந்ததாகும்.
தேர்தலில் அவரது பிரதான எதிரி, ரே-மூ-ஹையூன். அவர் நடப்பு ஜனாதிபதி கிம்-டா-ஜங்கிள்
மில்லனியம் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். அவர் இந்தச் சம்பவம் தொடர்பாக உருவாகியுள்ள ஆத்திரத்தையும்,
வடகொரியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே வளர்ந்து வரும், கொந்தளிப்பையும், தரைதட்டிய தனது பிரசாரத்தை
முடுக்கிவிடுவதற்குப் பயன்படுத்திக்கொண்டார். கிம்புதல்வர்கள் மீது நடைபெற்றுக் கொண்டுள்ள ஊழல் வழக்குகளை தனது தேர்தல்
செல்வாக்கை வலுப்படுத்துவதற்குப் பயன்படுத்திக்கொண்டார். 1997-தேர்தலில் கிம்மிற்கு வாக்களித்த தொழிலாளர் தரப்புகள்,
ஐ.எம்.எஃ. நிபந்தனைகளை, பொருளாதார சீர்திருத்ததிற்காக ஏற்றுக்கொண்டதற்காக கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
அந்தச் சீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக, பரவலாக ஆட்குறைப்புச் செய்யப்பட்டது. வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்தது.
அக்டோபர் முதல் இராணுவ மோதல்கள் குறித்து மக்கள் கவலைப்பட துவங்கி உள்ளனர்.
வடகொரியா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற ஆபத்து உருவாகியுள்ளது. சர்வதேச உடன்பாடுகளுக்கு
எதிராக தன்னிடம் யுரேனியம் செறிவூட்டத் திட்டம் இருப்பதாக வடகொரியா ஒப்புக்கொண்டது. புஷ் நிர்வாகம் இதற்கு
முன்னர் வடகொரியா அரசாங்கத்தை தீங்குகளின் கூட்டணி என்று வர்ணித்தது. எண்ணெய் வழங்குவதையும் பொருளாதார
உதவியையும் நிறுத்திவிட்டது. வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்தை கைவிட வலியுறுத்தியது. புஷ் நிர்வாகம் ராஜீயத்துறை
வழிமுறைகளை பின்பற்றி தனது நோக்கங்களை அடைந்து விடுவதாகக் கூறி வந்தாலும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது.
ஈராக்கிற்கு எதிரான போர் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் இராணுவ வழிமுறைகளை அமெரிக்கா
பயன்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. வடகொரியாவும் அணு உற்பத்தி அமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்
நடத்துமானால் கொரியா தீபகற்பம் முழுவதிலும் போர் மூண்டுவிடும்.
சென்ற வாரம் இந்த நெருக்கடிகள் மேலும் ஒரு படி உயர்ந்தன. 1994-ல் வாஷிங்டனுடன்
கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி முடக்கி வைக்கப்பட்டிருந்த அணு உலை திட்டத்தை மீண்டும் துவக்கப்போவதாக வடகொரியா
அறிவித்தது. அந்த அணு உலையை மூடி பயன்படுத்தப்பட்ட எரிபொருள் குச்சிகளை சர்வதேச அணு சக்தி கமிஷன்
ஏஜென்சியின் கட்டுப்பாட்டில் விடுவதற்கு சம்மதித்து இருந்தது. அதற்கு பதிலாக எரிபொருள் எண்ணெயைப் பெற்றுக்கொண்டு
லைட் வாட்டர் ரீஆக்டர்களையும் கட்டுவதற்கு உடன்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் லைட் வாட்டர்
ரீஆக்டர் கட்டுமானப் பணி துவங்கி இருக்கிறது. எரிபொருள் உருளைகள் மீது சர்வதேச அணு சக்தி ஏஜென்சி பதித்துள்ள முத்திரைகளையும்
தனது அணு சக்தி வசதிகளுக்குள்ளே பொருத்தியுள்ள காமிராக்களையும் நீக்கிவிட வேண்டுமென்று தற்போது வடகொரிய
அதிகாரிகள் கோரி வருகின்றன.
லீ புஷ் நிர்வாகத்தில் வலுவாக ஆதரித்தார். கிம்-டே-ஜங் நாட்டின் பாதுகாப்பை தாரைவார்ப்பதாக
குற்றம் சாட்டினார். கிம் நிர்வாகம் கடைப்பிடித்த ``ஒளி வீசட்டும்`` கொள்கையின் காரணமாக வடகொரியா மீது
கடைப்பிடிக்கப்பட்ட மோதல் கொள்கை மாறியது. பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டன. அதன் மூலம் வடகொரியாவில்
முதலீடுகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. இராணுவ கொந்தளிப்புகள் குறைந்தன. இந்த உத்தியை லீ தோல்வி என்று வர்ணித்தார்.
``கடந்த ஐந்து ஆண்டுகளாக வடகொரியாவுக்கு அதன் தேவைகளை நிறைவேற்றி தருவதின் மூலம் வடகொரியா நம்மை
மூக்கணாங்கயிறு போட்டு இழுத்துக்கொண்டிருக்கிறது.
அவரது எதிரியான ரோ இதுவரை மேற்க்கொண்டுவரும் கொள்கையை தானும் கடைப்பிடிக்கப்
போவதாகவும், வடகொரியாவிற்கு தொடர்ந்து, உதவிகள் வழங்கப் போவதாகவும் குறிப்பிட்டார். இந்த வகையில் வாஷிங்டனின்
நிர்பந்தத்திற்கு தான் பணியப் போவதில்லை என்று குறிப்பிட்டார். ``ஒளி வீசட்டும்`` கொள்கையை ஆதரித்தார்.
1994-உடன்பாடு கையெழுத்து ஆவதற்கு முன்னர் வடகொரியாவுடன் போரின் விழிப்பிற்கே சென்றுவிட்ட கிளிண்டன் நிர்வாகம்
அதை பற்றி தென்கொரியாவிற்கு தகவலே தெரிவிக்கவில்லை என்று ரோ குறிப்பிட்டா. ``நாங்கள் மீண்டும் பார்வையாளர்களாக
மாற விரும்பவில்லை. பழைய நாட்களில் எங்களது பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக்கொள்ள இயலவில்லை. இப்போது
தென்கொரியா மாறிவிட்டது`` - என்று ரோ - கருத்து தெரிவித்தார்.
புஷ் நிர்வாகத்தின் அணுகுமுறை
எந்த வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென்று வாஷிங்டன் விரும்புவது, அனைவருக்கும் தெரியும்.
அதில் சந்தேகத்திற்கு இடமில்லை. புஷ் பதவியேற்றவுடன், வடகொரியாவுடன் முந்திய கிளிண்டன் நிர்வாகமும் நடத்தி வந்த
உயர்மட்ட உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளை கைவிட்டார். சென்ற ஆண்டு கிம் அமெரிக்கா சென்றிருந்தபோது அவரை
புஷ் இழிவுபடுத்தினார். வடகொரியாவுடன் எந்த உடன்பாடு செய்துகொண்டாலும் அது பலனளிக்காது என்று, புஷ்
சந்தேகம் கிளப்பினார். வடகொரியாவுடன் அமெரிக்கா தனது நிர்பந்தத்தை அதிகரிப்பதன் மூலம், ``ஒளி வீசட்டும்``
கொள்கையை சிதைத்துவிட்டார். கிம்மின் அரசியல் எதிரிகளின் கரத்தை வலுப்படுத்துகின்ற வகையில் அமெரிக்கா செயல்படுகின்றது.
தேர்தல் பிரசாரத்தின்போது, புஷ் நிர்வாகம், வடகொரியாவிற்கு எதிராக, இராணுவ
நடவடிக்கை மிரட்டல் இருப்பதை ``அழுக்கி வாசித்தது.`` வடகொரியாவுடன் ஏதாவது தகராறு உருவாகாமல் தடுக்கவேண்டும்.
ஏனென்றால் ஈராக்குடன் போர் புரிவதற்கு அமெரிக்கா மேற்கொண்டு வரும் ஆயத்தங்கள் பாதிக்கப்படும் என்று வாஷிங்டன்
கருதுகிறது. வாஷிங்டன் மீத வளர்ந்துவரும் வெறுப்பு உணர்வு, காரணமாக லீ தோல்வியடையும் நிலை ஏற்படலாம். இது
முக்கியமான இரண்டாம் நிலை அம்சம். லீ-புஷ் விருப்பத்திற்கு ஏற்ற வேட்பாளர், சென்ற வெள்ளிக்கிழமையன்று புஷ்,
கிம்-டே-ஜங்கிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் இராணுவ நீதிமன்றத்தால்
விடுதலை செய்யப்பட்டது, குறித்து தனது மன்னிப்பை தெரிவித்துக்கொண்டார். வாரக் கடைசியில், அமெரிக்க வெளியுறவுத்துறை
அமைச்சர் கொலின் பவல் - வடகொரியாவை தாக்குகின்ற நோக்கம் அமெரிக்காவிற்கு இல்லை என்று குறிப்பாக
அறிவித்தார்.
இப்படி சமாதானப்படுத்தும் போக்கில் புஷ் நிர்வாகமும், அவரது தென்கொரியா சகாக்களும்
நடந்துகொள்வது பொதுமக்களது வலிமையான உணர்வு வெளிப்பாட்டைக் காட்டுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் ரோவை
நாசவேலைக்காரர் என்றும், அல்லது உளறல் பேர்வழி என்றும், கண்டித்திருப்பார்கள். ஆனால், கொரியா தீபகற்பத்தில்
இன்னொரு போர் ஏற்படக்கூடும் என்ற அச்ச உணர்வு வாஷிங்டனது செயல்பாடுகள் குறித்து ஆழ்ந்த சந்தேகத்தை
தூண்டிவிட்டிருக்கின்றது. சென்ற வாரம் அமெரிக்க மற்றும் ஸ்பெயின் நாட்டு போர்க்கப்பல்கள் வடகொரிய சரக்குக்கப்பல்
ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அந்த கப்பலில் யெமனுக்கு ஸ்கட் ரக ராக்கெட்டுகள் ஏற்றப்பட்டிருந்தது
என்ற செய்தி லீ - தேர்தல் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கின்ற வகையில் வாஷிங்டன் இப்படியொரு நாடகத்தை
நடத்தியதாக கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
நடப்பு அரசியல் தட்ப-வெட்ப நிலை குறித்து கன்சர்வேட்டிவ் பத்திரிகையான,
சோசன்லபோ தற்போது நாட்டில் விசத்தன்மை கொண்ட ஓர் சூழ்நிலை சமுதாயத்தின் அடித்தளம் முழுவதிலும் பனிமூட்டம்போல்
பரவிக்கொண்டிருக்கின்றது என்று விமர்சனம் செய்திருக்கிறது. இந்த கருத்துக்கள் தென்கொரியா ஆளும் வட்டாரங்களின் கவலையை
எதிரொலிக்கிறது. புஷ் நிர்வாகத்தின்மீது பகைமை கொண்டிருப்பது, தென்கொரியாவின் பொருளாதார மந்தம் கேந்திர
அமெரிக்க உறவுகளை பாதிக்கும் என்று அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமையன்று பெரு வர்த்தக குழுக்கள், அமெரிக்காவிற்கு எதிரான இயக்கங்களால்,
அமெரிக்காவில் தென்கொரியாவின் பண்டங்கள் மக்களால் புறக்கணிக்கப்படலாம். அதன்மூலம், தென்கொரியாவின்
8.9-பில்லியன் டாலர் உபரிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்திருக்கின்றன. கொரியாவின் வர்த்தக
சபையின், மற்றும் தென்கொரியாவின் வர்த்தக சம்மேளனமும், இத்தகைய அச்சத்தை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி கிம்-
இந்த வர்த்தக குழுக்களோடு இணைந்துகொண்டார். அமெரிக்க படைகள் தென்கொரியாவில் இருக்கவேண்டுமென்று வலியுறுத்தினார்.
``அமெரிக்க படைகள் தென்கொரியாவிலிருந்து வெளியேறுமானால், வெளிநாட்டு முதலீடுகளும் அவ்வாறு வெளியேறிவிடும்
என்று அஞ்சப்படுகிறது`` - என்பதாக கிம் கூறியுள்ளார்.
உலக நிதி நிறுவனத்தின் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதால், அதனுடைய தாக்கங்கள்
உழைக்கும் மக்களிடையே ஆத்திரத்தை உருவாக்கியுள்ளன. அத்துடன் அமெரிக்க இராணுவத்திற்கு எதிரான வெறுப்பு உணர்வும்
வளர்ந்திருக்கிறது. I.M.F.-
கொள்கைகளை வாஷிங்டன் திணித்து வருவதாக பரவலாகக் கருதப்படுகிறது. இந்த உணர்வுகளை தென்கொரிய தொழிற்சங்க
ஆதிக்க வர்க்கத்தின் ஓர் பிரிவு, தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வருகிறது. அவர்கள் அமெரிக்காவிற்கு எதிரான,
பிற்போக்குத்தனமான எண்ணங்களை வளர்ந்து வருகிறார்கள். அமெரிக்காவின் உழைக்கும் வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின்
கொள்கைகளோடு, இணைத்துப் பார்க்கிறார்கள். கிம்மின் கொள்கைகளை செயல்படுத்துவதில், தங்களது பங்கு தொடர்பான
மக்கள் கவனத்தை தசைத்திருப்புவதற்காக, இவ்வாறு செயல்படுகிறார்கள்.
வாழ்நாள் முழுவதும் வேலை என்ற முந்திய கொள்கைக்கு கிம் முற்றுப்புள்ளி வைத்ததும், பெரிய
நிறுவனங்கள் தங்களது தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டன. அதற்குப் பின்னர் வேலையில்லாத்
திண்டாட்டம் மிக வேகமாக வளர்ந்தது. தனியார்மயக்கொள்கையின் காரணமாகவும், அரசாங்க நிர்வாகச் சீரமைப்புகள்
காரணமாகவும், அரசு நிறுவனத் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை இழந்தனர். அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி
15க்கும் 29க்கும் இடைப்பட்ட வயதுள்ள இளைஞர்கள் நால்வரில் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை. மொத்தம்,
1,329,000 இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இவர்களில் 21% பேர் பல்கலைக்கழகப்
பட்டதாரிகள்.
நாட்டின் சமுதாய நெருக்கடிக்கு இரண்டு வேட்பாளர்களும் தீர்பு எதையும் கூறவில்லை.
சந்தை சீர்திருத்தக் கொள்கைகளை இருவருமே ஆதரித்து நிற்பதால், ஏழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும் இடையில்
இடைவெளி அதிகரிக்கும், கடுமையாகும். சட்ட விரோத வேலை நிறுத்தங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டுமென லீ - வலியுறுத்துகிறார். கிம், வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர் மீது எடுத்த, கருணையற்ற அடக்குமுறைகளை
- ரோ - எதிர்க்கவில்லை. தொழிற்சங்க வக்கீல் என்ற முறையில் தனது பங்கை எடுத்துரைத்தார். அதிருப்திகொண்ட
உழைக்கும் வர்க்க வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் சேமநலத்திட்டம் ஒன்றிற்கு உறுதியளித்துள்ளார்.
தேர்தல் முடிவு மதில்மேல் பூனையாக இருக்கும் என்று தோன்றுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது,
மக்கள் வாக்கு கணிப்பு அனுமதிக்கப்படுவதில்லை. மிக அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கின்படி லீ-யைவிட ரோ-மிகக்குறைந்த
அளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார். ஜனநாயக எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடும் கவான்எங்ஜில்,
முன்னாள் தொழிற்சங்க ஆதிக்கவாதி, கொரியா தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தில் பணியாற்றியவர், ரோவிற்கு
கிடைக்கும் வாக்குகளில் ஒரு பகுதியை பெறக்கூடும்.
ஹூண்டாய் தொழில் நிறுவன நிறுவனரின் புதல்வர் சூங்மாங்சூன் கடைசி நேரத்தில் ரோவிற்கு
ஆதரவு இல்லை என்று அறிவித்துவிடுவார், என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரோ-வின் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படலாம்.
சுங் தனது செல்வாக்கு அடிப்படையில் ஜனாதிபதியாக முயன்று வருகிறார். அண்மையில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளுக்கு
அமைப்பாளராகவும், தென்கொரிய அணியின் வெற்றிக்கு மூலகாரணமாகயிருந்தவர் என்ற செல்வாக்கு உண்டு. அவர்
ரோ-வை ஆதரித்து வந்தார். திடீரென புதன்கிழமையன்று தனது ஆதரவை விலக்கிக்கொண்டார். வடகொரியா தொடர்பாக,
ரோவின் கொள்கைகளை அவர் கண்டித்தார்.
இதில் முக்கியமாக, கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் வாக்காளர்களின் நிச்சயமற்ற
தன்மை. அரசியல், நிர்வாகம் முழுவதன்மீதும் வாக்காளர்கள் விரிவான தரப்பினர் அதிருப்தி கொண்டிருக்கின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 24-மணி நேரத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட செய்தியில் 24-சதவிகித வாக்காளர்கள்
எந்த முடிவிற்கும் வராத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
|