World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Gujarat election opens door for more communal violence in India

குஜராத் தேர்தல் இந்தியாவில் மேலும் வகுப்புவாத வன்முறைக்கு கதவைத் திறக்கிறது

By K. Nesan
28 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

ஒரு கூர்மையான தேர்தல் திருப்பமான மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் டிசம்பர் 12-ல் நடந்த தேர்தலில் இந்து பேரினவாத பாரதிய ஜனதாக் கட்சி (பிஜேபி) வெற்றி பெற்றது, அது நாடு முழுவதும் வகுப்பு வாத வன்முறைக்கான அரங்கை உருவாக்கி உள்ளது. வருடத்தின் தொடக்கத்தில் குஜராத்தில் ஏற்பட்ட முஸ்லிம் விரோத கலவரங்களை அடுத்து பிஜேபி-ன் மாநில தலைவரான நரேந்திர மோடி முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அவரது நிர்வாகத்தின் சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளின் தோல்வியிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக வேண்டுமென்றே பிரச்சாரத்தின்போது வகுப்புவாதப் பதட்டங்களை கொளுந்து விட்டு எரியச் செய்தார்.

கடந்த இரு வருடங்களில் நடைபெற்ற இதரமாநிலங்களில் ஏற்பட்ட ஒரு தொடரான தோல்விகளை அடுத்து பி.ஜே.பி குஜராத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொண்டது மட்டுமல்ல ஆனால் அதன் வாக்குகளை அதிகரித்துக் கொண்டது. மாநில சட்டசபையில் 182 இடங்களில் 126-ல் அந்தக் கட்சி வெற்றி பெற்றது. இது 1998- தேர்தல்களில் கிடைத்ததைவிட 9 அதிகமாகும். எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சி 51 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இது 1998-ஐ விட 2 குறைவானதாகும் மற்றும் ஜூலையில் சட்டசபை கலைக்கப்படுவதற்கு முன்னதாக இருந்த அதன் எண்ணிக்கைகளை விட 12 குறைவானதாகும். பிராந்திய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு கிடைத்த இடங்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சி கண்டது - 1998ல் 12 ஆக இருந்து வெறும் 4 ஆகக் குறைந்தது.

செய்தி ஊடகத்தின் சில பிரிவினர் கூறுவது போல் முடிவானது "அறுதிப் பெரும்பான்மை வெற்றி" அல்ல -66 தொகுதிகளில் பிஜேபி-ன் மேலதிக வெற்றியானது மூன்று சதவீதத்தை விட குறைவனது. எவ்வாறாயினும் இந்து பேரினவாதத்திற்கு மோடியின் விண்ணப்பம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. பிஜேபி வகுப்புவாத வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதன் மிகப் பெரும் வெற்றிகளைப் பெற்றது. மத்திய குஜராத்தில் 66 இடங்களில் 58-ஐயும் வடக்கு குஜராத்தில் 29 இடங்களில் 16 லும் வெற்றி பெற்றது. ஏனைய பகுதிகளில் குச் மற்றும் சோராஸ்டிரா பகுதிகளில் கட்சிக்கான வாக்கில் வீழ்ச்சி கண்டது. குச் 2001ல் அழிவுகரமான பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டது. சோராஷ்டிரா வறட்சியினால் வாடுகிறது- இது உத்தியோகபூர்வமான ஊழல் மற்றும் மாநில நிர்வாகத்தினால் நிவாரணம் வழங்கப்படாமை இவற்றின் மீதான கோபத்தின் பிரதிபலிப்பாகும்.

பெப்ரவரி 27ல் கோத்ரா நகரில் இந்து தீவிரவாத செயல்வீரர்களை கொண்டு சென்ற இரயில் தாக்கப்பட்டதற்குப் பின்னர் வெடித்த வகுப்புவாத வன்முறைதான தேர்தல் பிரச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்திய மையமான விஷயமாக இருந்தது. இரயில் பெட்டிகள் கொளுத்தப்பட்டதனால் 58 பேர் இறந்தனர். பிஜேபி யும் அதனுடன் இணைந்த இந்து பேரினவாத குழுக்களும் உடனடியாக முஸ்லீம் வியாபாரிகளை குற்றம்சாட்டி வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர், அதில் 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், பத்தாயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

பல சுதந்திரமான கமிஷன்கள் பிஜேபியும் அதன் சகாக்களும் வன்முறையைக் கட்விழ்த்துவிட்ட குண்டர்களின் திட்டத்தை ஏற்பாடு செய்வதில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாகக் கண்டு பிடித்தனர். பல சம்பவங்களில் போலீசார் பார்த்துக் கொண்டிருந்தனர், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்திய மருத்துவம் சார்பான தடய அறிவியல் பரிசோதனைக் கூடத்தின் (FSL) விஞ்ஞானிகள் அச்சம்பவங்கள் தொடர்பான பிஜேபி-ன் கூற்றினை அடியோடு நிராகரித்தனர், இரயிலுக்கு வெளியே இருந்து தீ வைத்திருக்க முடியாது என்று கூறினார்கள். ஒரு விசாரணையின் போது அவர்கள் கூறியதாவது: "தரைமட்டத்திலிருந்து ஏழு அடி மேலே இரயில் பெட்டி இருப்பதனால் வெளியிலிருந்து திரவத்தை ஊற்றுது சாத்தியமல்ல."

பிஜேபி-ன் பலம் வாய்ந்த கோட்டையாக முன்னர் கருதப்பட்ட மற்றும் இந்தியாவின் மிகவும் மக்கள் தொகை அதிகமான மாநிலமான உத்திரப் பிரதேசம் உட்பட மாநில தேர்தல்களில் மிக மோசமாக பிஜேபி தோல்வி அடைந்ததை அடுத்து கோத்ரா சம்பவம் நிகழ்ந்தது. இந்தத் தோல்வியின் தருவாயில் பிஜபி கடுங்கோட்பாட்டளர்களின் தலைவராக மோடி வந்தார். அவர் கட்சிக்கான நல்ல வாய்ப்புகளுக்கு திரும்ப வேண்டுமாயின், இந்து பேரினவாத அல்லது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை கடுமையாகப் புதுப்பிப்பதுதான் ஒரேவழி என்று வலியுறுத்தினார். அவர் சட்டசபையை அதன் பதவிக்காலம் முடிவடைவதற்கு பத்துமாதங்களுக்கு முன்னதாகவே ஜூலையில கலைத்தார். தேர்தல் கமிஷன் எதிர்ப்புகள் இருந்த பொழுதிலும் வகுப்புவாத பதட்டங்களை பயன்படுத்துவதற்காக முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குஜராத்தின் "தீங்கின்மையையும் பாதுகாப்பையும்" அச்சுறுத்திய "எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்கு" பாகிஸ்தான் தான் பொறுப்பு என்று பிஜேபி-ன் தேர்தல் அறிக்கை குற்றம் சாட்டியது. பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளரான ஜெனரல் பர்வேஷ் முஷாரப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்குபவராக மோடியை பிரச்சார சுவரொட்டிகளும் பிரசுரங்களும் காண்பித்தன. குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடிக்கு இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயி செயலூக்கத்துடன் ஆதரவளித்தார். அவர் நான்கு கூட்டங்களில் பேசினார். உள்துறை அமைச்சர் லால் கிருஷ்ண அத்வானி ஒரு கூட்டத்தில், பாகிஸ்தான் அதன் "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை" நிறுத்தவில்லை என்றால் ஒரு நான்காவது போரை சந்திக்க வேண்டி இருக்கும் எனக் கூறினார்.

பயங்கரவாதத்திற்கு பயன்படுவனவாக இஸ்லாமிய மதப்பள்ளிகளும் அல்லது மதரஸாக்களும் இருக்கின்றன என்று கூறுவதன் மூலமாக பிஜேபி பிரச்சாரம் நேரடியாகவே முஸ்லிம்களை குறிவைத்தது மற்றும் அவற்றின் நடவடிக்கைகளை விசாரணை செய்யப் போவதாகவும் வாக்குறுதி அளித்தது. மத சுதந்திரத்தின் மீது படுமோசமான தாக்குதலை தொடுக்கின்றதாக மதமாற்றங்களைத் தடை செய்யும் ஒரு சட்டத்தை இயற்றப்போவதாகவும் கட்சி வாக்குறுதி அளித்தது. அத்துடன் அது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் பேரில்-- கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயமாக தேசிய மாணவர் படை (என்சிசி) பயிற்சி மற்றும் அதேபோல் பல்வேறு ஆயுதம் தரித்த தற்காப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது.

தொழிலாள வர்க்கத்தின் அழிவில் ஒரு பத்தாண்டாக சுதந்திர சந்தை மறுசீரமைப்பின் மூலம் நன்மை அடைந்த மத்தியதர வர்க்க தட்டுகளுக்கு மோடி நேரடியாக விண்ணப்பம் செய்தார். அவர் தேர்தல் கூட்டங்களின்போது வாய்ச் சவடால் பிரகடனம் செய்தார்: "உங்களுக்கு ஒரு மணைவி கார் இருக்கலாம் உங்களது சொந்த நிலம் கூட இருக்கலாம். உங்களது மகன் பாதுகாப்பாக வீடு திரும்பவில்லை என்றால் என்னாகும்?" அதிகப் படியான வேலையின்மைக்கு வழிவகுத்த மாநிலத்தின் அடிப்படையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க பிஜேபி எந்த முயற்சியும் செய்யவில்லை. பொருளாதார வளர்ச்சியானது 1994-95-ன் 20 சதவீதத்துடன் ஒப்பிட்டால் 2000-2001-ல் வெறும் 1.1 சதவீதமாகும்.

பிஜேபி-ன் வெற்றிக்கான ஒரு காரணி முஸ்லிம் வாக்காளர்களை அச்சுறுத்தியதுதான், அவர்களில் பலர் வாக்களிப்பதற்காக அவர்கள் தப்பிச்சென்ற கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு திரும்ப வர வேண்டி இருந்தது. தேர்தல் கமிஷன் அறிக்கைப்படி 170,000 க்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் இடம் பெயர்ந்து புதிய முகவரிகளில் வாழ்கின்றனர், 224,000 பேர் எங்கே இருக்கின்றார்கள் என்பது தெரியாது. தேர்தல் நாளின்போது தேர்தல் வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர்கள் இல்லாததனால் பலர் வாக்களிக்க முடியவில்லை.

பேரினவாதத்திற்கு எதிர்க்கட்சியின் விண்ணப்பம்

எவ்வாறாயினும் தேர்தல் முடிவுக்கான பிரதான காரணம் காங்கிரசும் ஏனைய எதிர்க்கட்சிகளும் பிஜேபி-ன் வகுப்புவாத பிரச்சாரத்திற்கு முழுமையாக சரணாகதி அடைந்ததுதான். அடிப்படையான சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் எதற்குமே முகம்கொடுக்க திராணியற்ற காங்கிரஸ் கட்சியானது, இந்திய செய்தி ஊடகங்கள் விவரித்தவாறு "பிஜேபி-ன் இரண்டாவது அணியாக" அல்லது "மெதுவான இந்து பேரினவாதத்திற்கு" விண்ணப்பம் செய்தது. அந்தக் கட்சி அதன் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்க முன்னைய பிஜேபி-ன் தலைவரான சங்கர்சிங் வகேலாவைத் தேர்ந்தெடுத்தது. அது ஒரு இந்துக் கோவிலில் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி பேசிய ஒரு கூட்டத்துடன் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியானது வகுப்புவாத உணர்வுக்கு அது விண்ணப்பித்ததை மூடிமறைப்பதற்கு அதன் தேர்தல் அறிக்கையின் குஜராத்தி மொழி பதிப்பை மாற்றி அமைத்தது. அது ஆங்கில மொழி பதிப்பில் இருந்த சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு கட்சி ஆதரவு கொடுப்பது பற்றிய குறிப்புக்களை அகற்றியது. அது தேர்தலை "இந்தியாவின் ஆத்மாவுக்கான ஒரு போராட்டம்" என்ற பந்தியையும் அதில் "மதச்சார்பற்ற சக்திகள்" "குறுகிய மனப்பான்மையுடைய வகுப்புவாத சக்திகளுக்கு" எதிராக அணிதிரள்வது என்று குறிப்பிடும் வரிகளையும் விட்டுவிட்டது.

கிராமப் பகுதிகளில் காங்கிரஸ் பிஜேபி-ன் வகுப்புவாதப் பிரச்சாரத்துடன் நேரடியகவே போட்டி போடுவதற்காக கலவரங்களில் பலியாட்களாக இந்துக்களைக் காண்பிக்கும் சுவரொட்டிகளைப் பயன்படுத்தியது. ஒரு சுவரொட்டி பின்வருமாறு கூறியது: இந்துக்கள்தான் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டனர். அக்ஷார்தமில் (ஜம்மு ஆஷ்மீரில் ஆயுதம் தரித்த இஸ்லாமிய பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்ட ஒரு கோவில்) உயிர்களை இழந்த அனைவருமே இந்துக்களாவர். ஏன் இந்து வர்த்தகர்கள் அவர்களின் குடும்பங்களுடன் தற்கொலை செய்கின்றனர்?"

ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (சிபிஐ-எம்) எந்த மாற்றீட்டையும் வழங்கவில்லை. சிபிஐ(எம்) தலைமையானது, காங்கிரசின் வகுப்பவாத நோக்குநிலை கொண்ட பிரச்சாரத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததுடன், பிஜேபிக்கு எதிராக ஒரு தேர்தல் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. அது சரிவராதபோதிலும் ஸ்ராலினிஸ்டுகள் தொடர்ந்து காங்கிரசின் அரசியலுக்கு வக்காலத்து வாங்குபவர்களாக செயல்பட்டனர். சிபிஐ(எம்) செயலாளர் ஹரிகிஷன் சுர்ஜித்சிங் எழுதியதாவது: "காங்கிரஸ் அவ்வப்போது வகுப்புவாத சக்திகளுடன் சமரசம் செய்தது அல்லது அற்றின் முன்னால் சரணாகதி அடைந்தது என்பது உண்மைதான். ஆனால் அது அதற்கான விலையையும் கொடுக்கவேண்டி இருந்தது. இவை எல்லாம் கூறிய பிறகும் நடந்த பிறகும் - காங்கிரஸ்-- ஒரு மதச்சார்பற்ற கட்சியாகத்தான் இருக்கின்றது."

2004-ன் இறுதிக்கு முன்னதாக தேசிய தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், பிஜேபியும் அதன் தீவிரவாத சகாக்களும் "குஜராத் சூத்திரம்" தான் புதுதில்லியில் அதிகாரத்தை தக்கவைப்பதற்கான சிறந்தவழி என ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். உலக இந்து சபை (VHP) செயலாளர்களான ப்ரவீன் தொகாடியா, அதாவது "குஜராத்தில் பிஜேபிக்கு சரியான திசையைக் காட்டி இருக்கிறது" மற்றும் "வரவிருக்கும் புயல் குஜராத்துடன் மட்டுப்படுத்தப்படப்போவதில்லை" என்று பிரகடனம் செய்தார்.

செய்தி ஊடகங்களினால் ஒரு மிதவாதியாகக் காட்டப்படும் பிரதமர் வாஜ்பாயி அதேபோன்ற செய்தியை சுட்டிக்காட்டினார். "குஜராத் சூத்திரம்" மீதான செய்தி ஊடகங்களின் குறிப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறியதாவது: "கோத்ரா வேறிடத்திலும் திரும்ப நடத்தப்படுமா? குஜராத் சூத்திரம் மீதான கேள்வி கேட்பவரிடம் அதைத்தான் நான் கூறுவேன்." அவரது குறிப்புக்கள் பிஜேபி-க்கு பரந்த அளவில் கதவைத் திறந்து விடுகின்றது. VHP யும் ஏனைய குழுக்களும் எந்த ஒரு சாக்கையும் பயன்படுத்தி நாடு முழுவதும் வகுப்புவாதப் பதட்டங்களை மேலும் தூண்டி விடுவதற்குத்தான்.

குஜராத் தேர்தல் முடிவு பிரகடனம் செய்யப்பட்டு சிறிது நேரத்திற்குள், கிழக்கு குஜராத் நகரமான வதோதராவில் வகுப்புவாத வன்முறை வெடித்தது. போலீஸ் காலவரையற்ற ஊரடங்கு சட்டத்தைத் திணித்து கூட்டத்தினர் மீது சுட்டதில் ஒருர் கொல்லப்பட்டார், 17 பேர்கள் காயமடைந்துள்ளனர்.

See Also :

இந்தியாவில் வகுப்புவாத வன்முறையில் இறந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

மத வகுப்புவாத பிரச்சாரம் மீதாக இந்திய ஆளும் கூட்டணியில் குழப்பம்

Top of page