World Socialist Web Site www.wsws.org |
World Socialist Web Site and Socialist Equality Party Public Conference Socialism and the Struggle Against Imperialism and War : உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் பொது மாநாடுசோசலிசமும் ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டமும் :புதிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் மூலோபாயமும் வேலைத் திட்டமும்உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் மார்ச் 29-30, 2003 அன்று வார இறுதியில் மிச்சிகன், அன்ஆர்பரில் ஒரு பொது மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கின்றன. மாநாட்டின் கருப்பொருள் "சோசலிசமும் ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டமும்: புதிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் மூலோபாயமும் வேலைத் திட்டமும்" என்பதாக இருக்கும். இந்த மாநாட்டின் முக்கியத்துவமும் அவசரமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரு அபிவிருத்திகளில் இருந்து நேரடியாக எழுகின்றன: (1) ஈராக்கை ஆக்கிரமிக்க, சூறையாட மற்றும் காலனியாக்க புஷ் நிர்வாகத்தின் முடிவு மற்றும் (2) அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய போர்த் திட்டங்களுக்கு சமூக எதிர்ப்பின் பெரும் சர்வதேசிய இயக்கத்தின் வெளிப்பாடு. இரு பெரும் சக்திகள் ஒன்றுக்கொன்று எதிராக நிற்கின்றன. நியூயோர்க் டைம்ஸ் வியப்பூட்டும் உணர்வுடன் குறித்திருக்கிறவாறு: "ஈராக் மீதான மேற்கத்திய கூட்டு முறிதல் மற்றும் இந்த வார இறுதியில் உலகம் முழுவதிலும் இடம்பெற்ற போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆகியன இந்தக் கோளில் இன்னும் இரு வல்லரசுகள் இருக்கின்றன என்று நினைவூட்டுகின்றன: ஐக்கிய அமெரிக்க அரசுகள் மற்றும் உலகப் பொதுமக்களின் கருத்து." மிகவும் பச்சையாக முன்வைப்பதானால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கும் வெளிப்படுகின்ற வல்லரசு இன்னொரு அரசு அல்ல, மாறாக போரை வெறுக்கும், அதன் அனைத்து வடிவங்களிலும் ஒடுக்குமுறையை வெறுக்கும், உலகம் முழுவதிலும் உள்ள சாதாரண உழைக்கும் மக்களின் திரள் ஆகும். ஆனால் இந்த இரு சக்திகளுக்கும் இடையிலான போராட்டம் இன்னும் சமமற்ற ஒன்றாகும். அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதற்கு உடந்தையாய் இருப்பவர்களும் அவர்களின் நலன்கள் மற்றும் இலக்குகள் பற்றி நனவாக இருக்கின்றனர் மற்றும் அவற்றை அடைவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வர், தொழிலாள வர்க்கமானது, அதன் அமைதிக்கான, சமூக சமத்துவத்திற்கான, சர்வதேச ஐக்கியத்திற்கான மற்றும் ஒரு சிறந்த உலகுக்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொள்ளக் கூடிய ஒரு தெளிவான அரசியல் வேலைத் திட்டம் இல்லாமல், இன்னும் அப்படியே இருக்கிறது. இந்த பொது மாநாட்டின் நோக்கம், ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிரான சர்வதேச இயக்கத்தைக் கட்டி எழுப்ப, பலப்படுத்த மற்றும் ஐக்கியப்படுத்த தேவையான அரசியல் வேலைத் திட்டத்தின் மீதான ஒரு அக்கறை கூடிய கலந்துரையாடலுக்கு முன்முயற்சி எடுப்பதாகும். இந்த மாநாட்டை ஒழுங்கு செய்வதில், உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி இந்தக் கலந்துரையாடலுக்கு அடிப்படையாக பின்வரும் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை முன்னெடுக்கின்றன: 1. ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டத்திற்கான உண்மையான அடித்தளம் அமெரிக்க மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கம் ஆகும்.2. தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் உள்ளார்ந்த பலமானது, பெரு முதலாளிகளின் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பாயும் மற்றும் அவற்றிலிருந்து சுயாதீனமாகவும் அது அணிதிரட்டப்பட்டால் மாத்திரம் மட்டுமே மெய்யுருவாக்கிக் காட்டப்பட முடியும். ஐக்கிய அமெரிக்க அரசுகளில், இதன் அர்த்தமாவது, முதலாவதும் முக்கியமானதுமாக, ஜனநாயகக் கட்சிக்கு உழைக்கும் மக்களை அரசியல் கீழ்மைப்படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவரப் போராடுவதாகும். தொழிலாள வர்க்கமானது கட்டாயமாக அதன் சொந்த அரசியல் கட்சியைக் கட்டவேண்டும் மற்றும் ஆட்சி அதிகாரத்திற்காகப் போராடவேண்டும்.3. போருக்கு எதிரான போராட்டமானது, அது போரை உண்டுபண்ணும் சமூகப் பொருளாதார அமைப்பு முறைக்கு எதிராக --அதாவது, முதலாளித்துவத்திற்கு எதிராக மற்றும் சோசலிசத்திற்கு ஆதரவாக-- அது செலுத்தப்படும் அந்த மட்டத்துக்கு மட்டுமே ஒழுங்காகவும் சக்திமிக்க வகையிலும் அது நடத்தப்பட முடியும்4. போருக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் தேவைப்படுகிறது. இந்த அடிப்படையில், நாம் உலக சோசலிச வலைத் தள வாசகர்களை பொது மாநாட்டிற்காக பதிவு செய்து கொள்ளும்படியும் மார்ச் 29-30ல் அன் ஆர்பருக்கு வருகை தருமாறும் கேட்டுக் கொள்கின்றோம். மாநாட்டுப் பதிவு: பதிவுக் கட்டணம்: $15 பதிவு செய்வதற்கும் மின் அஞ்சல் வழி கட்டணம் செலுத்தவும், தயவு செய்து எமது பி டி எப்
பதிவு படிவத்தை
PDF registration form
அச்சில் எடுத்து, நிரப்பி குறிப்பிட்ட முகவரிக்கு உங்களது காசோலை அல்லது பணவிடையுடன் அஞ்சல் செய்க. நிகழும் இடமும் காலமும்: Saturday March 29, 10am-6pm and Sunday March 30, 10am-3pm Click here நிகழும் இடத்திற்கான வரைபடத்திற்கு இங்கு கிளிக் செய்க.தங்கும் வசதிக்கு: அன்ஆர்பரில் தங்கும் வசதி பற்றிய தகவல்களுக்காக பின்வரும் இணைப்புக்களைப் பார்க்க. http://www.ann-arbors-best-hotel.com/
http://www.expedia.com/pub/agent.dll?qscr= மேலதிக தகவல்களுக்கு: மேலதிக தகவல்களுக்காக மின்னஞ்சல் இடுக: editor@wsws.org |