World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

The changing face of Canada

கனடாவின் மாறுகின்ற முகம்
By Henry Michaels
29 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

சென்ற வாரம் வெளியிடப்பட்ட கனடாவின் 2001ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் கனடாவின் மக்கள் தொகை விரைவாக மாறுபடுவதையும், அதிக அளவில் நகர்ப்புற மயப்படுத்தப்படுவதையும் மற்றும் சமூகத் துருவப்படுத்தப்பட்டுவதாகவும் தெரிவிக்கிறது. இந்த போக்கு அதிக பின்விளைவுகள் கொண்டது.

கடந்த பத்து ஆண்டுகளில், உலகிலேயே அதிக மொழிகள் பேசப்பட்டுவரும் நாடுகளில் ஒன்றாக கனடா திகழ்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு 18.4 சதவிகித மக்கள் தொகையினர், அதாவது 5.4 மில்லியன் மக்கள் வேறுநாடுகளில் பிறந்தவர்கள் என்றும் இது 1996ம் ஆண்டின் கணக்கெடுப்பைவிட முழு சதவிகிதம் அதிகம் என்பது எடுத்துக்காட்டுகின்றது. ஆஸ்திரேலியாவில் மட்டும்தான் வேறுநாடுகளில் பிறந்தவர்களின் எண்ணிக்கை கூடிய விகிதாசரமாய் உள்ளது. அதாவது 22 சதவிகிதமாகவும், அமெரிக்காவில் 11 சதவிகிதமாகவும் உள்ளது.

1931ம் ஆண்டிற்கு பிறகு 22 சதவிகிதமாக வெளிநாட்டோர் எண்ணிக்கை பதிவாகியிருப்பது கனடாவில் இதுவே மிக அதிகம். ஆனால் குடியேறியவர்களின் தாயகங்களில் மட்டும் நிறைய மாறுதல்கள் நிகழ்ந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டின் முதல் 60 ஆண்டுகளில், குடியேறிய பெரும்பாலானவர்களுக்கு ஐரோப்பிய பின்னணி உண்டு. கனடாவின் 'வெள்ளையர்களை' பாதுகாப்பதற்கான அதிகாரபூர்வமாக வடிவமைக்கப்பட்ட இனவெறிக் கொள்கையே இதற்கு காரணமாகும்.

1990களில் வந்திறங்கியவர்களில், 58 சதவிகிதம் ஆசியாவினர், 20 சதவிகிதம் மட்டுமே ஐரோப்பியர்கள், அடுத்தபடியாக 11 சதவிகிதம் கரீபியன் மட்டும் இலத்தின் அமெரிக்கர்கள், 8 சதவிகிதம் ஆபிரிக்காவினர் மற்றும் 3 சதவிகிதம் அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள். இதன் விளைவாக 30 மில்லியனாக உள்ள கனடாவின் மக்கள்தொகையில், 4 மில்லியன் மக்கள் கனடிய புள்ளி விவரத்தின்படி (Statscan) அவர்கள் 'தெரியக்கூடிய சிறுபான்மையினர்' (visible minorities) எனப்படுகிறார்கள். இவர்கள்தான் ஜனத்தொகையில் 13.4 சதவிகிதமாக உள்ளனர், இது 1981களில் ஒப்பிடுகையில் 1.1 மில்லியன், அதாவது 4.7 சதவிகிதம்தான் இருந்தனர்.

இந்த ''சிறுபான்மையினர்களில்'' ஒரு மில்லியனுக்கும் அதிகமான அதாவது 3.5 சதவிகித ஜனத்தொகையில் சீனர்களும் அடங்குவர். தெற்கு ஆசியாவிலிருந்து வந்தவர்கள் 3 சதவீதம்; கறுப்பினத்தவர் 2.2 சதவீதம்; பிலிப்பைன்ஸ் ஒரு சதவிகிதம் மற்றம் ஒரு சதவிகிதத்தினர் ''அரபு-மேற்கு ஆசிய கனடியர்கள்''. 1990ல் 73 சதவிகித குடியேறியவர்கள் தெரியக்கூடிய சிறுபான்மையினர்கள் என வரையறுக்கப்பட்டனர், இது 1970 களில் வந்தவர்களின் 52 சதவிகிதத்தைவிட அதிகம் தாண்டியுள்ளது.

இவர்கள் ஒரு சிக்கலானதும் மற்றும் பரந்த கலப்பினத்தின் ஒரு பகுதியாகும். தங்களது இன மூலத்தை கூறும்படி கேட்டபோது கனடாவில் வசிப்பவர்கள் 200 இற்கும் அதிகமானதை பட்டியலிட்டனர்.

சமீபத்திய குடியேறியவர்களில் மிக பெரும்பான்மையான 94% இனர் பெரிய நகரங்களுக்கு சென்றுவிட்டனர். அநேகமாக அவர்களில் முக்கால்வாசி மக்கள் கனடாவின் மூன்று பெரிய நகரங்களில் வாழ்கின்றார்கள்: டொரான்டோ (43 சதவிகிதம்), வான்கூவர் (18 சதவிகிதம்) மற்றும் மொன்ட்ரியால் (12 சதவிகிதம்). இது இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு மாறாக உள்ளது. அதாவது அப்போது 41 சதவிகித குடியேறியவர்கள் இந்த மூன்று பெரிய நகரங்களுக்கு வெளியேதான் குடியேறினார்கள்.

Statscan இன்படி, 4.6 மில்லியன் மக்களுக்கு வீடாக விளங்கும் பாரிய டொரான்டோ பகுதிதான் (Greater Toronto Area) உலகிலேயே அதிக மொழியினர்களைக் கொண்ட மாநகரம் என்கிறது. ஏறத்தாழ 37 சதவிகிதம் பேர் 'தெரியக்கூடிய சிறுபான்மையினர்கள்', 1991ம் வருட ஒரு காலாண்டுக்குமேல் கிட்டத்தட்ட 44 சதவிகிதத்தினர் வெளிநாட்டு மரபினர், இது தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். மேற்குகரை நகர்புறங்களில் மிகப்பெரியதான வான்கூவர், இதற்கு அடுத்ததாக 37.5 சதவிகித வெளிநாட்டவர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் பாதிபேர் சீனா அல்லது ஹாங்காங்கிலிருந்து வந்தவர்கள் ஆவர்.

வட அமெரிக்க நகரங்களோடு ஒப்பிடுகையில், மியாமியில் 40.2 சதவிகித வெளிநாட்டவர்களும், லொஸ் ஏஞ்சல்சின் 30.9 சதவிகிதமும், நியுயோர்க்கில் 24.4 சதவிகிதமுமாக உள்ளது. தெற்கு அரைகோளத்தில், சிட்னியில் 30.9 சதவிகிதம் உள்ளது.

கனடாவுக்கு அதிகப்படியாக குடியேறுபவர்களில் ஆசியர்களே அதிகம் என்றாலும், அவர்களின் வரவு அசாதாணமான மாறுபடுகின்றது. 1991ம் ஆண்டு முதல், டொரன்டோவுக்கு வந்த குழுக்களில் சீனக் குடியரசை சேர்ந்தவர்களே அதிகம் அடுத்ததாக இந்தியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங்கு, இலங்கை, பாகிஸ்தான், ஜமைக்கா, ஈரான். இதற்கு அடுத்து பின்னே வருவது போலந்து, முன்னாள் யூகோஸ்லேவியா, கயானா, ரஷ்யா, தென்கொரியா, ட்ரினிடாட் மற்றும் டோபாகோ, வியட்நாம், உக்ரைன், ரோமேனியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகும்.

சமீபத்தில் வந்தவர்களில் பெரும்பாலானோர் உயர் தொழில்நோக்கத்தை கொண்ட தராதரமிக்கவர்கள் (Professional) என்று பல்வேறு செய்தித்துறை குறிப்புகள் தெரிவித்துள்ளது. ஆனால், டொரான்டோவில், அண்டை இடங்களிலிருந்து குடியேற வரும் மக்கள்தொகையில் குறிப்பிடும்படியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது இருபது ஆண்டுகளாக பல வேற்றுமைகள் கொண்ட புறநகர் பகுதியாகவும், அதிக உழைக்கும் மக்களைக் கொண்டதும், மிக ஏழ்மையான சமூக வசதிகளை கொண்டதுமாகும். பெரிய நகராட்சிகளில், 1990களில் வந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையினரில் 40% ஆவார்கள். அவற்றுள் Martham, Missisaugna, Richmond Hill, Brampton, Vaughan மற்றும் டொரான்டோ அடங்கும்.

உழைக்கும் தட்டு மறைந்து வருகிறது என்ற கற்பனைகூற்றுக்கு மாறாக, ஜனத்தொகை ஒரு தெளிவான சர்வதேச தன்மையை கொண்ட மற்றும் அதிகமாகவே தொழிலாளர்களை கொண்டதாகின்றது.

கனடாவின் நகர்ப்புறமயமாக்கத்தில் குடியேறியவர்கள் அதிக பங்கு ஆற்றியுள்ளார்கள். 2001ல் 79.4 சதவிகித கனேடியர்கள் 10,000க்கும் மேலான மக்கள் நகரங்களில் வாழ்ந்தார்கள் இது ஒப்பிடும்போது 1996இல் 78.5 சதவிகிதம்தான். கனடாவின் ஜனத்தொகை மேலும் நான்கு நகர்புறங்களில் மையப்பட்டுள்ளது: Greater டொரான்டோ; மொன்ட்ரியல், மற்றும் அதன் சுற்றுப்பகுதியான; வான்கூவர் மற்றும் அண்டை பகுதிகள்; அல்பர்ட்டா மாகாணத்தின் வளம் மிக்க பகுதியிலுள்ள Calgary - Edmonton Corridor ஆகும். 1996-2001க்குமிடையே இந்த நான்கு பிராந்தியங்களும் ஒட்டுமொத்தமாக 7.6 சதவிகித மக்கள்தொகை வளர்ச்சியை பெற்றிருந்தது. இதோடு ஒப்பிடுகையில் நாட்டின் மற்ற பகுதிகளில் வளர்ச்சியே இல்லை எனலாம் (+0.5 சதவிகிதம்).

சிறிய கிராமப்புற உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததால், நகர்ப்புறமாக்கல் அதிகமாகியுள்ளது. Prairies க்கு குறுக்கே, கனடாவின் எல்லைப்பகுதிகளில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக விவசாயத் தொழில்தான் பிரதானமாக இருந்தது, ஆனால் இப்போது பிரம்மாண்டமான வேளாண்மை வர்த்தகமானது இதை அதிகமாக ஆக்கிரமித்துள்ளது. 1996-2001க்கு இடையில் விவசாய நிலங்கள் 246,923 ஆக அதாவது 10 சதவிகிதம் குறைந்துபோயும், பெரிய பண்ணைகளின் விகிதம் 250,000 டொலர்கள் ஆண்டு வருமானம் பெற்று, 12% இருந்து 16% ஆக உயர்ந்துள்ளது.

பண்ணையாளர்களின் எண்ணிக்கையில் 10 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. அதிலும் 35 வயதுக்குட்பட்டவர்களின் இத்தொகையினர் 35 சதவிகிதமாக வீழ்ந்துள்ளது. 12% இற்கு குறைவாகவே 35 வயதுக்குட்பட்ட விவசாயிகள் உள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இத்தொகை 50% ஆக இருந்தது. மக்கள்தொகை வயது ஏற்றம் அடைவதால் சிறிய பண்ணைகள் மறைந்து வருகின்றன .

சமூகப்பிரிவு

இவ்வகை மக்களின் எண்ணிக்கையானது பெரிய நகரங்களில் ''இரண்டு வெவ்வேறு கனடாக்களை'' உருவாக்கியுள்ளது என்று Toronto Star பத்திரிகை விமர்சகர் கூறுகிறார். இன்னொரு பக்கம் Saskatchewan போன்ற மத்திய மேற்கு மாகாணங்களில் ''குடியிருப்போர்கள் பலரும் முதல் தலைமுறை குடியமர்ந்தவர்களின் வம்சாவழியை சேர்ந்தவர்களாகவும் அதற்கு முந்தைய பழங்குடியினராகவும் உள்ளனர். மற்றொரு பக்கம், வான்கூவரின் புறநகர் பகுதிகளாக ரிச்மன்டில், தென்படக்கூடிய சிறுபான்மையினர்கள் பெரும்பாலும் சீனர்களும், தெற்காசியர்களுமாக இருக்கும் இவர்கள் ஜனத்தொகையில் 60 சதவிகிதம் உள்ளனர்.``

பொதுவாகவே தொலைத்தொடர்பு சாதனங்களில், நகர்புற/கிராமப்புற மற்றும் கலாச்சார இடைவெளியானது, ஆங்கிலேய/பிரெஞ்சுக்கு இடையிலான பிரிவினையை பிரதியீடு செய்வதால் ஏற்படுத்தும் சமுதாய பதட்டத்தை பற்றி பேசப்படுகின்றது. எது பேசப்படாததென்றால், கனடாவின் உள்ளேயும், சர்வதேசரீதியிலும் பல்வேறு வேற்றுமைகளைக் கொண்ட நகர்ப்புற மக்கள்தொகையின் அதிகரித்துவரும் வளர்ச்சி எப்படி அதிகரித்துவரும் வர்க்க மற்றும் சமூக துருவப்படுத்தலை ஆளுமை செய்கின்றது என்பதுதான்.

கனடாவுக்கு வந்து குடியேறுபவர்கள் வேலை தேடியும், பொருளாதார பாதுகாப்பு தேடியும் வருகிறார்கள். தங்கள் சொந்த நாட்டில் நிலவும் கடுமையான வறுமையும், அரசியல் மற்றும் பொருளாதார ஒடுக்குமுறையாலும், உள்நாட்டு போர்களால் சீரழிந்துவரும் சமூகநிலைகளிலிருந்து தப்புவதற்காகத்தான் பெரும்பாலும் வருகிறார்கள். முக்கியமாக, சீனாவில் பெய்ஜிங் அரசு சர்வாதிகார முறைகளால் அறிமுகப்படுத்தும் குறைந்த ஊதியம் தரும் முதலாளித்துவ நிலைமையால் கனடாவுக்கு வந்து குடியேறும் மக்களை அனுப்பி வைக்கும் தலையாய நாடாக விளங்குகிறது. மான்டரின் மொழிபேசிடும் 136,135 மக்கள் வாழும் பாரிய டொரான்டோ பகுதியை தங்கள் பிறந்த இடமாக கூறுகின்றனர்.

எவ்வாறிருந்தபோதிலும், பெரு முதலாளிகளும் தொழில்வழங்குனரும் குடியேறுபவர்களை வரவேற்கவே செய்கின்றார்கள். ஏனென்றால் அவர்கள் குறைந்த ஊதியத்திற்காக உழைப்பதுடன், சுலபமாக சுரண்டகூடிய திறமை கொண்டிருப்பதுடன், நுகர்வோர் சந்தையை விரிவுபடுத்தவும் அவர்கள் பயன்படுகிறார்கள். குடியேறுபவர்களில் அதிகம் படித்த தொழிலாளர்கள் இருப்பினும், அவர்களுடைய உயர் கல்வியை அதிகாரிகள் அங்கீகரிக்க மறுப்பதால் அவர்கள் குறைவான ஊதியம் தரும் வேலைகளில் உள்ளார்கள்.

ஒன்டாரியோவின் தலைநகரமான டொரான்டோவில், மாநில டோரி அரசானது சட்ட ரீதியான குறைந்தபட்ச ஊதியமான ஒரு மணி நேரத்திற்கு 6.85 டொலர் என்பதை 1995ம் ஆண்டு பதவிக்கு வந்ததுமே இல்லாதொழித்தது. ஒரு கணக்கீட்டின்படி 300,000 தொழிலாளர்கள், தெரியக்கூடிய சிறுபான்மை இனத்திலிருப்பவர்கள் இந்த ஊதியத்தில்தான் வாழவேண்டியுள்ளது. ஒரு ஆண்டிற்கு வழங்கப்படும் 15,600 டொலர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே 3,000 டொலர்கள் குறைவாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில், மத்திய மற்றும் மாநில அரசுகள் எல்லா உழைக்கும் மக்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்களுக்கும், சமூக சலுகைகளை வெட்டியுள்ளது. ஒன்டாரியோவில், கல்விக்கூடங்கள், மருத்துவ விடுதிகள் மற்றும் சமூகநல திட்டங்களுக்கான நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளது. பழைமைவாத அரசு உள்நாட்டில் வந்து குடி அமர்ந்தோருக்கான சேவைகளுக்கான வரவுசெலவுத்திட்ட உதவியை 1995 இல் 50% ஆக குறைத்துவிட்டது. பின் அது உயர்த்தப்படவே இல்லை.

மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கடந்த 10 ஆண்டுகளில் பாரிய டொரான்டோ பகுதியில் ஐந்தில் ஒரு குழந்தை குடியேறியவராக உள்ளது. அதில் பாதிபேர் தங்கள் வீட்டில் ஆங்கிலமோ, பிரெஞ்சோ அல்லாத ஒரு மொழியை பேசுவதாக அது தெரிவிக்கன்றது. உள்ளூர் கல்வி தேர்வு நிலைகளின் வரவு செலவுகளை குறைத்துக்கொள்ளுமாறு கோரியதால், ஆங்கிலம் அல்லது பிரெஞ்சை இரண்டாவது மொழியாக உள்ள வகுப்புகளை நிறுத்திவிட்டது.

தன் பங்கிற்கு, மத்திய அரசு நல்ல உடல் நலம் மிக்க மற்றும் வேலைக்கு தயாராக உள்ள விண்ணப்பதாரர்களுக்கே உரிமையளிக்கப்படும் என்று கடுமையான மிக அதிகமான தடைகளை குடியேறுபவர்களின் மேல் திணிக்கிறது. கடந்த வருடம், Chretian இன் அரசாங்கம் தேர்வு விதிமுறைகளை மாற்றி, உயர்மொழி தகைமைக்கும், அதிக தொழில் அனுபவத்தையும், கல்வி தகுதிகளுக்கும் முன்னுரிமை வழங்கியுள்ளது.

குடியுரிமை மற்றும் குடியேற்றத்திற்கான அமைச்சர் Denis Coderre, தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் கனடாவுக்கு வந்து மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரை வேலை பார்க்கலாம் என்றும் அதோடு டொரான்டோ, வான்கூவர், மொன்ட்ரியலுக்கு வெளியே வாழ்வதற்கு இணக்கம் தெரிவித்தால்தான் அனுமதிப்பதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இடம் விட்டு இடம் மாறக்கூடாது என்ற நிபந்தனை உரிமையை ஏற்றுக்கொண்டால், தொழில்ஒப்பந்த முடிவில் அவர்களுக்கு கனடா நாட்டு நிரந்தர குடியுரிமை வழங்கப்படும்.

Coderre ஏற்கனவே மக்கள்தொகை கணக்கு விவரங்களைக் கைப்பற்றி, மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி அரசுகள், ''குடியேற்றத்தால் நாடு முழுவதும் அதிக நலன்கள் பெறுவதற்காக, வரும் வெளிநாட்டவர்களை கனடாவில் மற்றைய பல இடங்களிலும் குடி அமர்வதற்கு ஊக்குவிக்கவேண்டும்'' என்றார். இவருடைய திட்டம் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும், வேலை வாய்ப்பையும், இடம் மாறும் சுதந்திரத்தையும், மிதித்து நசுக்குவதாய் உள்ளது.

''பலவகை கலாச்சாரத்துவம்''

சீரழிந்துவரும் சமூக நிலைமைகளும், ஜனநாயக உரிமைகள் தாக்கப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், தொலைத்தொடர்பு சாதனங்கள் இந்த மக்கள்தொகை விவரங்களை 1970களில் அறிமுகம் செய்யப்பட்ட கனடாவின் அதிகாரபூர்வமான கொள்கையான ''பலவகை கலாச்சாரத்துவத்தின்'' வெற்றி என எடுத்துக்காட்டுகின்றது. பல்வேறு மொழி அடையாளங்களையும், கலாச்சாரங்களையும் வலியுறுத்தியபடி விவாதம் தொடர்ந்தாலும், அரசுகள் உள்நாட்டில் சமூக பதட்டங்களை தணித்து, கனடாவை பொருளாதாரத்திற்கு தேவையான மதிப்புமிக்க குடியேற்ற நாடாக மாற்றியுள்ளன.

இந்த விவாதங்களுக்கு மத்தியில், வித்தியாசமான அமெரிக்க விரோத கலப்பும் தென்படுகிறது. அமெரிக்காவின் ''உருகும் பானை'' எனப்படும் கொள்கையோடு தேவையற்ற ஒப்பீடுகள் நடந்துள்ளது. கனடாவின் தொலைத்தொடர்பு சாதனங்களின்படி அங்கு வரும் வெளிநாட்டவர்கள் அனைவரும் ஒரேவிதமான கலாச்சாரத்தினுள் உள்ளீர்த்துக்கொள்ளும்படி அதிக அழுத்தம் கொடுக்கப்படுகின்றார்கள்.

எப்படிப்பட்ட வேறுபாடுகள் இருப்பினும், இரு கொள்கைகளும் தேசியத்துவத்தை நிலைநாட்டும் இலட்சியத்தோடும், உழைக்கும் மக்களை தேசம், இனம், மொழி வாரியாக கோடிட்டு பிரிக்கும் அரசியலை நோக்கமாக கொண்டுள்ளன. கனடாவில், பிரிட்டிஷ் அரசாட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் நீண்டகாலத்திற்கு நீடிக்கமுடியாத பாரம்பரிய கனடிய ''வெள்ளையர்களை'' மாற்றி அதற்குப் பதிலாக அங்கே ஒரு புதிய தேசிய அடையாளத்தை உருவாக்குவதற்கே ''பல வகை கலாச்சாரத்துவம்'' கொள்கையை புகுத்தப்பட்டது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் மூலம் வெளிப்படும் உண்மை என்னவெனில், கூடியளவு இடம் மாறக்கூடியதும், ஒரு நாட்டினுள் கட்டுப்படாத ஜனத்தொகையும், முக்கியமாக உழைக்கும் மக்கள் மேலான வாழ்க்கையைத் தேடி தேசிய எல்லைகளை தாண்டி போவதற்கான ஒரு புறநிலையான தோற்றமாகும். அமெரிக்க கனடா எல்லையில் இரு தரப்பு அரசுகளும் தத்தம் தேசிய நலன்களை பலப்படுத்தும் விதமான எதிர்ப்புகளையும் வளர்க்கிறார்கள்.

மக்கள்தொகையின் ஒரு அம்சமாக, இந்த கூற்றின் வெளிப்பாடானது, ''கனேடியன்'' என்ற புதிய இனப்பிரிவு வரவேண்டும் என்று ஆதரிக்கிறது. ஜனத்தொகையின் கால்பகுதியான 6.7 மில்லியன் மக்கள் ''கனடாவை'' தங்கள் ஒரேயொரு இன மூலமாக கூறியுள்ளதாக, Stanscan என்று கூறுகிறது, ஆக மொத்தம் 11.7 மில்லியனில், மேலும் 5 மில்லியன் மக்கள் ஏதாவது இன்னுமொரு இன மூலத்துடன் தாம் ''கனேடியன்'' இனத்தையும் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளனர்.

மொத்தத்தில், 39.4 சதவிகித மக்கள் தங்களை இப்போது ``கனேடியன் இனத்தவராகவே`` ஏற்றுக்கொண்டுள்ளார்கள். 1996களில் இது 31 சதவிகிதமாகவும், 1991ல் வெறும் 4 சதவிகிதமும், 1986ல் 0.5 சதவிகிதமாகவும் இது இருந்தது. இந்த நிலைகளை அமெரிக்காவோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, 20 முதல் 30 சதவிகிதம் வரை மக்கள் தங்களை பிறப்பால் அமெரிக்கன் என்று கூறியுள்ளார்கள்.

கனேடிய மக்கள்தொகை விவரங்களிலிருந்து எழும் கேள்வி, அரசு மற்றும் தொழிற்துறையினரின் தேசியவாத கொள்கையை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதாகவே உள்ளது. இதன் ஆரம்ப கால கட்டத்தை நேரடியாக, கனேடியர்களின் பிரதிபலிப்பு வழமைக்குமாறாக புள்ளி விவரம் 4% அதிகமாக கூடியிருந்தபோது, 1991க்கு முன்பாக நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, வலதுசாரி Sun தொலைத்தொடர்பு சாதனங்களின் "Count Me Canadian" பிரச்சாரத்தின் மூலத்தில் இருந்து கண்டுகொள்ளலாம். சந்தை மற்றும் பொதுமக்கள் கருத்துக்கணிப்புக்கள் ''கனேடியனாய் இருப்பதில் உள்ள பெருமையும், நாட்டுப்பற்றும்'' நோக்கி அணிதிரளுகையில், Bensimon Byrna இன் தலைவரான Jack Bensimon இன் கருத்துப்படி டொரான்டோ ஏஜன்சி ஒன்று 2000ல் 'Joe Canadian' என்ற பியர் விளம்பரத் தொடரை உருவாக்கியதாக குறிப்பிட்டார்.

கனேடிய வம்சாவளி என்ற இக்கூற்றே அறிவியல் பூர்வமாக பொருள்படவில்லை என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். Statscan அதிகாரிகள் இதனை 'கடினமானது' மற்றும் 'நிலையற்ற' கூற்று என்று விவரித்துள்ளனர். இந்த வம்சாவளி தொடர்பான கேள்வி விளக்கமளிப்பதற்கும், திரிபுபடுத்துவதற்கும் இலகுவானதாக (திறந்ததாக) இருப்பதால், 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இதை கைவிடுவது என்று Statscan தீர்மானித்தது.

விவரங்களை சேகரிக்கும் மத்திய தலைமையான 'பாரம்பரிய கனடா', இந்த கேள்வி கணக்கெடுப்புக்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறது. Trudeau அரசின் அப்போதைய அமைச்சர் Jean Chretien, பாரம்பரிய கனடா (Heritage Canada) உருவாக்குவதை 1973ல் ஆதரித்து, கற்பனையான கனேடியன் அடையாளத்தை எடுத்து விளக்கி பரப்பிடும் நோக்கத்துடன் செயல்பட்டார்.

இப்படிப்பட்ட தேசியவாதம் சமூக துருவப்படுத்தலில் இருந்தும் இருபது ஆண்டுகளாக உழைக்கும் மக்கள் வாழ்க்கை தரம் மீது நடத்திய தாக்குதல்களினால் உருவாகிய அதிருப்தியில் இருந்தும் திசை திருப்புவதற்கு கனேடியன் ஆளும் வட்டத்திற்கு மிகவும் தேவைப்படுகிறது. இதில் புதிதாய் குடியேறுபவர்களே முதல் இலக்காகும். மற்றொரு கனேடியன் கற்பனைக்கதை என்பது, ஒப்பீட்டளவில் எல்லோரும் சமம் என்ற சமுதாய அமைப்பைப் பற்றியது.

செல்வச் சமத்துவமின்மை குறித்து சென்ற மாதம் வெளியாகிய செய்தியில், மிகப் பணக்கார 10% குடும்பத்தினரிடம் 53% செல்வம் உள்ளதென்றும், சமுதாயத்தின் ஏழ்மையான மக்களின் காற்பகுதியினரிடம் 5.6 சதவிகிதம்தான் உள்ளது. இந்த இடைவெளி 1970 முதல் அதிகரித்து வருகிறது.

உழைக்கும் மக்களின் இந்த சமூக வீழ்ச்சி நிலையை மாற்றியமைத்திட நிறபேதமின்றி, உண்மையான எல்லா மக்களுக்கும் சமத்துவமான ஒரு சோசலிச சமூகம் அமையவதற்கான சர்வதேச உழைக்கும் மக்களின் ஒருங்கிணைப்பை அடித்தளமாக கொண்ட ஒரு பொதுப்போராட்டம் வேண்டும்.

Top of page