World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Davos summit: From the "new economy" to war and recession

டாவோஸ் உச்சி மாநாடு:''புதிய பொருளாதாரத்திலிருந்து'' போரையும் மந்தநிலையையும் நோக்கி

By Nick Beams
28 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

தொண்ணூறுகளில் பங்கு மார்க்கெட் வளர்ச்சியானது மகத்தான சாதனை புரிவதாகவும் ''புதிய பொருளாதாரத்தின்'' பிறப்பு என புகழப்பட்டதுடன், உலக பொருளாதார அரங்கின் ஆண்டு மாநாடு அரசியல்வாதிகளாலும் மற்றும் வர்த்தக தலைவர்களாலும் உலக முதலாளித்துவத்தின் விந்தைகளில் ஒன்று என்று கொண்டாடப்பட்டது. சுதந்திர சந்தை வெற்றி பெற்றுவிட்டதாகவும், அதன் உயர்வை பறைசாற்றி வருவதாகவும் கூறி வந்தார்கள். ஆனால், கடந்த 3ஆண்டுகளாக பங்குச் சந்தைகளில் கடுமையான வீழ்ச்சிகள் நீடித்துக்கொண்டிருப்பதால் டாவோஸ் உச்சி மாநாட்டின் காட்சிகள் மாறிவிட்டன.

சுவிட்சர்லாந்தின் மலைப் பகுதிகள் நிறைந்த டாவோஸில் நடைபெற்ற உச்சி மாநாடு தொடர்பாக சென்ற வாரம் வெளியிடப்பட்ட செய்திகள் தொடர்பான தலைப்புக்களை பார்ப்போம். ''டாவோஸ் உச்சி மாநாட்டில் பொருளாதார மந்தநிலை உலக அரங்கில் பொருளதார நெருக்கடி உலகத் தலைவர்கள் தயக்கம், போர் பற்றி புலம்பல், ஈராக்கினால் டாவோஸில் இருண்ட நிலை'' என்பது போன்ற தலைப்புகள் பத்திரிகைகளில் வெளிவந்தன.

இப்படிப்பட்ட இருண்ட சூழ்நிலைக்கு, போர் பற்றிய அபாயமும் பொருளாதார நிலை மோசம் அடைவதும் மட்டும் காரணமல்ல. பழைய முதலாளிகள் குழுவைச் சார்ந்த கும்பலில் என்ரோன் (Enron) தலைவர் கென்னத் லே (Kenneth Lay) தற்போது மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தொடர்ந்து, அம்பலத்திற்கு வந்த மிகப் பரவலான மோசடி ஊழல் ஆகியவற்றோடு என்ரோன் தலைவரும் வீழ்ந்துவிட்டார். AOL-டைம்ஸ் வார்னர் (AOL Time Warner) குழுவைச் சேர்ந்த ஸ்டீபன் கேஸ் (Stephen Case) பதவிகளை இழந்துவிட்டார். உலக பொருளாதார அரங்கின் நிறுவனர், கிளவுஸ் சுவாப் (Klaus Schwab) நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ''ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக் காலம் மிகக் குறைந்துவிட்டதை நாங்கள் காண்கிறோம்'' என குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆண்டு உச்சி மாநாட்டின் குறிக்கோள், தற்போது நிலவுகின்ற, அசாதாரணமான நிச்சயமற்ற சிக்கலான சர்வதேச சூழ்நிலையில் நம்பிக்கையை உருவாக்குவதுதான் என்று அறிவிக்கப்பட்டது.

ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் ஈராக்கிற்கு எதிரான போரினால் ஏற்படும் பொருளாதார பின்விளைவுகள் பற்றிய எச்சரிக்கைகளும் மற்றும் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் உள்ள பொருளாதாரம் பற்றிய கவலைகள் அந்த மாநாட்டை சூழ்ந்து இருந்ததாக குறிப்பிட்டது.

உலகின் இதர பகுதிகளுக்கு உற்சாகமூட்டுகின்ற வகையில் அமெரிக்க பொருளாதாரம் குறைந்தபட்சம் 5 சதவிகித அளவிற்கு வளர்ச்சி காணவேண்டும், ஆனால், 2003ல் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, செயல்பட்டுவரும் ஒரு ஆராய்ச்சிக் குழுவின் தலைமை பொருளாதார நிபுணர் ஜெய்ல் போஸ்லர் (Gail Fosler) போரினால் அமெரிக்க பொருளாதாரம் எந்த வகையிலும் வளராது அல்லது மந்த நிலைகூட ஏற்படும் என்று எச்சரிக்கை செய்தார். ஜப்பானிய நிதிச் சேவைகளில் மிகப்பெரிய அமைப்பான நோமுதா ஹோல்டிங்ஸ் (Nomura Holdings) தலைமை நிர்வாகியான Ujiie Junichi கருத்து தெரிவிக்கும்போது, ''இது ஒரு குறுகிய கால போரோ அல்லது, நீண்ட கால போரோ என்பதைவிட, போரே கூடாது என்பது தான் சிறப்பாக இருக்கும்'' என்று கருத்து தெரிவித்தார். மோர்கன் ஸ்டான்லி நிறுவன தலைமை பொருளாதார நிபுணர் ஸ்டீபன் ரோச் சென்ற ஆண்டு அமெரிக்க பொருளாதார வளர்ச்சி மிகவும் பரிதாபமாக இருந்தது. போர் ஏற்பட்டால் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்றுவிடும் என்று கருத்து தெரிவித்தார். அவர் ''டாவோஸ் அதிர்ச்சி'' என்ற தலைப்பில் தயாரித்துள்ள குறிப்பில் ஓராண்டிற்கு முன்னர் நம்பிக்கை நிலவியது, தற்போது சங்கடமான உலகின் பயங்கர உண்மை நிலை தெளிவாகிவிட்டது. இதற்கு முன்னர் காணாத அளவிற்கு ஐரோப்பாவின் மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது என்று விளக்கியிருக்கிறார்.

உலக பொருளாதார நெருக்கடியில் பொருளாதார நிபுணர்கள் பிரகாசமான ஒரு பகுதியை பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8% உள்ள சீனாவை உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றனர். ஆனால் சீனாவினுடைய புள்ளி விபரங்களை ஆராயும்போது அது உலகின் இதர பகுதிகள் நிலவரம் மோசம் அடைந்துகொண்டு வருவதை காட்டுகின்றது. உலகின் மொத்த பொருள்கள் உற்பத்தியில் 4% மட்டுமே சீனாவில் உற்பத்தியாகிறது. அப்படியிருந்தும், 2002 இல் உலக மொத்த உற்பத்தியின் வளர்ச்சியில் 15% இற்கு சீன காரணமாக இருந்திருக்கிறது. உலக ஏற்றுமதி பெருக்கத்தில் 60% சீனா பங்கெடுக்கின்றது. இந்த புள்ளி விபரங்களை கொண்டு பார்க்கும்போது, சீனா தலைமையில் உலக பொருளாதாரம் மீள்ச்சியடைகின்றது என்று அர்த்தப்படவில்லை மாறாக சர்வதேச அளவில் தேக்க நிலை மோசமடைந்து கொண்டு வருவதைத்தான் இந்த புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

ஐரோப்பிய நாடுகளும் ஆசிய நாடுகளும் வலுவான அமெரிக்க பொருளாதார வளர்ச்சியையே சார்ந்தே இயங்குகின்றது என உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட வர்த்தகர்களும் பொருளாதார நிபுணர்களும் வலியுறுத்தினர். அமெரிக்க பொருளாதாரம் சீரடையாவிட்டால் ஐரோப்பிய, ஆசிய பொருளாதார நிலை சீர்குலைந்துவிடும் என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளனர். கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரொபேர்ட் மண்டல் (Robert Mundell), ''பொருளாதார மறுமலர்ச்சிக்கு வேறு இயக்கிகள் இல்லை, ஜப்பான் பொருளாதார மறுமலர்ச்சி காண்பதற்கு அமெரிக்காவைவிட நீண்ட காலம் ஆகும். யூரோ நாணயம் மதிப்பு அதிகரித்தால் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் வலுவாக உள்ள ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்துவிடும். ஏற்றுமதிகள் மட்டுமே அமெரிக்க பொருளாதாரத்தில் தொடர்ந்து நடைபோட்டுக்கொண்டிருக்க முடியும் என்றாலும் சர்வதேச பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக செயல்படுவதற்கு இது போதாது'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் பொருள் என்ன? உலகப் பொருளாதாரம் நச்சு சுற்றில் சிக்கிக்கொண்டுவிட்டது, ஒரு பக்கம், அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை சார்ந்தே மற்ற நாடுகள் இயங்குகின்றன. மற்றொரு பக்கம் பார்த்தால், பங்கு மார்க்கெட்டுகளில் ஏற்பட்ட அபரீதமான அமெரிக்க வளர்ச்சி உலகின் பிற நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மறுமலர்ச்சியைச் சார்ந்தே வந்திருக்கிறது. இப்படி ஒன்றுக்கொன்று முடிவில்லாத சுற்றுவட்டத்தில் சிக்கிக்கொண்டுவிட்டன.

டாவோஸ் உச்சி மாநாட்டில் நிலவிய அச்ச உணர்வுகள் உலக பங்குச் சந்தைகளில் எதிரொலித்தன. சென்ற வாரம், லண்டன் பங்குமார்க்கெட்டில் தொடர்ந்து பத்து நாட்கள் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்து கொண்டுவந்ததுடன், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டன. 1984ம் ஆண்டு FTSE-பங்கு விலை குறியீட்டு முறை கொண்டு வரப்பட்டது. மிக நீண்ட நாட்களின் பின்னர் இப்போதுதான் பங்குகள் வீழ்ச்சியடைந்தது. ஐரோப்பாவின் இதரப் பகுதிகளில் சென்ற வாரம், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பங்குகள் விலை கடுமையாக விலை வீழ்ச்சியடைந்தது.

அண்மைக் காலத்தில் அமெரிக்க பங்குமார்க்கெட்டுகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு பங்கு விலைகள் வீழ்ச்சியடையவில்லை என்றாலும், Dow புள்ளிகள் 29% வீழ்ச்சியடைந்திருக்கின்றன. ஜனவரி 2000 இல் இந்த புள்ளி விபரங்கள் அமெரிக்காவில் வரலாறு காணாத உச்ச நிலையில் இருந்தன. நாஸ்டாக் பங்குகள் விலை 73% வீழ்ச்சியடைந்துவிட்டது. 2000 மார்ச்சில் நாஸ்டாக் பங்குகள் விலை உச்ச நிலையில் இருந்தது.

பங்குகள் விலை வீழ்ச்சி வர்த்தகத்தில் நம்பிக்கை குறைவதை காட்டுகின்றன. இதனுடைய விளைவாக முதலீடுகள் குறையும். முதலீடுகள் குறையும்போது வளர்ச்சி விகிதங்களும், இலாபமும் குறையும். பினான்சியல் டைம்ஸ் ஜனவரி 24 அன்று எழுதியுள்ள கட்டுரையில் கம்பெனிகள் முதலீட்டுச் செலவுகளை குறைத்துக்கொண்டு வருகின்றன. சில நிறுவனங்களில் இலாபம் சற்று அதிகமாக உள்ளது. பல தொழிற் பிரிவுகளில் அளவிற்கு அதிகமான உற்பத்தித்திறன் நிலை நாட்டப்பட்டு வருவதுடன், கடன்களை திரும்பச் செலுத்தி தங்களது கடன் மதிப்பை உயர்த்திக்கொள்ள கம்பெனிகள் விரும்புகின்றன. இப்படிச் செய்வதால் இலாப விகிதங்கள் அதிகம் இருக்காது என்று அந்தக் கட்டுரை விளக்குகின்றது.

இப்படி பொருளாதாரம் கீழ்நோக்கி சென்று கொண்டிருப்பதன் சமூக விளைவுகள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் பிரதிபலிக்கின்றன. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labor Office -ILO) சென்ற வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் சுமார் 2கோடி மக்கள் வேலை இழந்துவிட்டதாகவும், உலகில் மொத்தம் வேலையில்லாதிருக்கும் மக்கள் தொகை 18 கோடி என்றும் குறிப்பிட்டிருந்தது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர் ஜூவான் சோமாவியா (Juan Somavia) உலக அளவில் வேலை வாய்ப்பு நிலவரம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது, ஏனெனில், உலகின் பெரும் பகுதிகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையில் கடுமையான விளைவுகள் உருவாகும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்தப் போக்குகள் மற்ற பகுதிகளைவிட உலக முதலாளித்துவத்தின் கேந்திரமையமான அமெரிக்காவில் மிக தெளிவாக விளங்குகின்றன.

பொருளாதாரக் கொள்கை கழகம் நடத்திய ஆய்வு அறிக்கையை ஜாரட் பேர்ன்ஸ்ரைன் (Jared Bernstein) வெளியிட்டிருக்கிறார். 2001 மார்ச்சில் அமெரிக்க பொருளாதாரம் உச்சக்கட்ட வளர்ச்சி பெற்றது, அதற்கு பின்னர் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 2.8 மில்லியன் அளவிற்கு அதிகரித்துள்ளது. 2000 ஆண்டு இறுதி நிலையோடு ஒப்பிடும்போது, தற்போது தனியார்துறை வேலை வாய்ப்பு 2.1 மில்லியன் அளவிற்கு குறைந்துவிட்டது. இந்த குறைபாடு 2001 இன் மந்த நிலையில் மட்டுமல்ல, 2002ன் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டதாக கூறப்பட்ட காலத்திலும் நீடித்தது. பேர்ன்ஸ்ரைனின் மதிப்பீட்டின்படி, தனியார்துறை வேலை வாய்ப்புக்கள் வீழ்ச்சி கடந்த 3 மந்த நிலை/மறுமலர்ச்சி காலத்தையும் விட அதிகமாக இப்போது உள்ளது. வேலையில்லாமல் தவிப்பவர்கள் வேலை தேடி காத்திருக்கும் காலம் 2000 இன் இறுதிக் காலாண்டு இருந்ததைவிட தற்போது ஐந்து வாரங்களாக அதிகரித்துவிட்டது.

Top of page