World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்க அமெரிக்காவின் வரலாறு காணாத வரவுசெலவு திட்ட பற்றாக்குறை: புதிய செலவுகள் வெட்டு By Patrick Martin நடப்பு நிதியாண்டில் மத்திய வரவுசெலவு திட்டத்தில் துண்டு விழும் தொகை 200 பில்லியன் குறியளவை தாண்டிவிடும் என்று புஷ் நிர்வாகம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க வரவுசெலவுதிட்ட தலைவரான மிட்செல் டானியல்ஸ் (Mitchell Daniels) தெரிவித்தார். அடுத்த ஆண்டு 300 பில்லியன் டாலரைத் தொடும் அளவிற்கு பற்றாக்குறை பெருகும் என அவர் மதிப்பிட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே இது மிகப்பெரும் பற்றாக்குறையாகும். இந்த இரண்டு புள்ளி விவரங்களுமே, ஈராக்குடன் நடக்கும் போரினால் ஏற்படும் "தாக்கங்களை" கணக்கில் எடுத்துக்கொண்டவை அல்ல. டானியல்ஸ் இந்த மதிப்பீடுகளை, அமெரிக்க வர்த்தக சபைக் கூட்டத்தில் கேள்வி - பதில், நிகழ்ச்சியில் வெளியிட்டார். நிர்வாகம் உத்தேசித்துள்ள 674 பில்லியன் டொலர் வரிக்குறைப்பிற்கு ஆதரவு திரட்டுவதற்காக, வர்த்தக சபைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். இந்த வரிக்குறைப்பு செல்வந்தர்களுக்கே பயன் தருபவை. நிர்வாகம் மற்றும் வரவுசெலவுதிட்ட அலுவலகம், அடுத்த 10 ஆண்டுகளுக்கான பற்றாக்குறை தொடர்பான மதிப்பீடுகளைச் செய்து வருகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புஷ் வெள்ளை மாளிகைக்குள் அடி எடுத்து வைத்தபோது இருந்த நிலைக்கு நேர்மாறானது. புஷ் உத்தேசித்துள்ள வரிக்குறைப்பின் காரணமான இந்த ஆண்டு பற்றாக்குறை மேலும் ''பல பில்லியன் டாலர்களாக'' அதிகரிக்கும். அடுத்த ஆண்டு பற்றாக்குறை சுமார் 100 பில்லியன் டொலர்களாகும். ஆனால் இப்படித் துண்டு விழும் தொகை பற்றிய ஆதங்கங்களை அவர் மறுத்துள்ளார். ''நாம் அதைப் பற்றி அளவிற்கு அதிகமாக உணர்ச்சிவசப்படத் தேவை இல்லை. எந்த வரலாற்று அளவுகோல்களின்படி பார்த்தாலும் இப்பற்றாக்குறை சமாளிக்ககூடியது தான்'' என அவர் குறிப்பிட்டார். அதற்குப்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் டானியல்ஸ் பிப்ரவரி 3திகதி வெளியிடப்படவுள்ள 2004 நிதியாண்டு பற்றிய நிலவரங்களை முன்கூட்டி தெரிவித்தார். வெள்ளை மாளிகையின் வரித்திட்டங்கள், முழுமையாக நிறைவேற்றப்படும், இராணுவம் மற்றும் "உள்நாட்டு பந்தோபஸ்து" (உள்நாட்டு ஒடுக்குமுறை) ஆகியவற்றிற்கு கணிசமான அளவிற்குச் செலவினங்கள் அகிதரிக்கும் என வரவுசெலவுதிட்டம் அனுமானிக்கிறது. மற்ற எல்லா தேவைக்கான செலவினங்களும் உண்மையான டொலர் மதிப்பு விகிதத்தில் வெட்டப்படும் என்றால் உயர்வு 1.3% ஆக இருக்கும், எவ்வாறிருந்தபோதும் அது 2 % பணவீக்க விகிதத்திற்குக் கீழேயே இருக்கும். 2004ல் எல்லா வகையான உசித செலவினங்கள் 30 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும். இது சுமார் 4% ஆகும். ஆனால் 14 பில்லியன் டொலர்கள் இராணுவத்திற்குச் செல்கிறது. மற்றும் 5 பில்லியன் டொலர்கள் உள்நாட்டு பாதுகாப்பிற்கு செலவிடப்படுகிறது. இதர மத்திய வரவுசெலவு திட்டத்திற்கும் எல்லா உள்நாட்டு சமூகநல சேவைகளுக்கும் சேர்த்து மீதமிருப்பது 11 பில்லியன் டொலர்கள்தான். எதிர்காலம் பற்றிய இதர பொருளாதார மதிப்பீடுகளும், டானியல்ஸ் தந்துள்ள அப்பட்டமான புதிய புள்ளி விவரங்களும் அமெரிக்காவை எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது. நிதித்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, மத்திய அரசாங்கம் நிகழ் நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களில் 109 பில்லியன் பற்றாக்குறையில் 2000 அக்டோபர் முதல் டிசம்பர் வரை செயல்பட்டிருக்கிறது. ஓராண்டிற்கு முன்னர் அதே காலத்தில் நிலவிய பற்றாக்குறையை விட இன்றைய பற்றாக்குறை மூன்று மடங்கு அதிகமாகும். கோல்ட்மன் சாக்ஸ் (Goldman Sachs) நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் வில்லியம் டட்லி, 2003ம் ஆண்டில் 300 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று முன்னர் மதிப்பிட்டிருந்தார். அது, டானியல்ஸின் மதிப்பீட்டைவிட 100 மில்லியன் டொலர் அதிகமாகும். தனது முந்திய மதிப்பீடு ''ஓரளவிற்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை அடிப்படையிலானது என இப்போது டட்லி கூறுகிறார். கோல்ட்மன் சாக்ஸ் இன் மற்றொரு பொருளாதார நிபுணர் 2004 இல், 375 பில்லியன் டொலர் துண்டு விழும் என மதிப்பிட்டிருக்கிறார். நாடாளுமன்ற வரவுசெலவு திட்ட குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயகக் கட்சிக்காரர்கள் நடப்பு ஆண்டில் துண்டு விழும் தொகை 306 பில்லியன் டாலர்கள் என மதிப்பிட்டிருக்கின்றனர். இதில் ஈராக்குடன் நடைபெறவிருக்கும் போருக்கான செலவினம் சேர்க்கப்படவில்லை. புஷ், வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்ட நேரத்தில் வரவுசெலவுதிட்ட தயாரிப்பு மற்றும் நிர்வாக அலுவலகம் வரும் 10 ஆண்டுகளில் உபரியாக 5.6 ரில்லியன் டொலர்களுக்கு மேல் சேர்ந்துவிடும் என மதிப்பீடு செய்திருந்தது. கூடுதலான வரி செலுத்தியவர்களுக்கு அதைத் திருப்பித் வழங்குவது நியாமானது, எனவே 1.3 ரில்லியன் வரிச் சலுகை செல்வந்தர்களுக்கு வழங்கப்படும் என புஷ் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார். இப்போது நிர்வாகம் பற்றாக்குறையின் அளவை மிகப் பிரம்மாண்டமான அளவிற்கு மதிப்பீடு செய்துள்ளது. அப்படி இருந்தும் அதே தீர்வைத்தான் இப்போதும் உத்தேசித்திருக்கிறார்கள். செல்வந்தர்களுக்கு மற்றொரு அப்பட்டமான சலுகை வழங்கப்படுகிறது. பங்குகளில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கான வரியை நீக்கிவிட்டு, வரிகுறைப்பிற்கு 2001 பட்ஜெட்டில் உத்தேசித்திருந்த ஆலோசனைகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள். வரவுசெலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையினாலான அத்தியாவசிய உள்நாட்டு சமூகத் தேவைகள் மீதான எதிர்கால விளைவுகளை ஜனவரி 25ல் செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட நிதி ஒதுக்கல் மசோதாக்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இந்த நிதி ஒதுக்கல் மசோதா பல்வேறு அரசுத்துறைகளின் 11 தனித்தனி செலவின மசோதாக்களை இணைத்திருக்கிறது. இதில் பென்டகன், இராணுவ நிர்மாணம் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் இவை தொடர்பான செலவினங்களுக்கான மசோதாக்கள் சென்ற டிசம்பரிலேயே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவை செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசு செலவிட்ட பெரும் தொகைகளை உள்ளடக்கியது. செனட் சபையில் ஏறத்தாழ 400 பில்லியன் டொலர்களுக்கான செலவின மசோதா 69 இற்கு 29 என்ற வாக்குகள் பதிவில் நிறைவேற்றப்பட்டன. ஐம்பது குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் 19 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களில் ஆதரவு காட்டி இந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் செனட் சபையில் தற்போது பெரும்பான்மையில் உள்ள குடியரசுக் கட்சியினர் பல்வேறு செலவின வெட்டுக்களையும் ரத்து செய்யும் திருத்தங்களை தோற்கடித்தன. திருத்தங்களுக்கு எதிராக 51 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் பதிவாயின. இந்த திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் மாகாண அரசுகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒதுக்கப்படும் கல்வி போன்ற சேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரித்திருக்கும், மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்கள் நிதி நெருக்கடி ஓரளவிற்கு குறைந்திருக்கும். 224,000 பெண்களுக்கும் குழந்தைகளுக்குக்கான சத்தூட்ட சேவைகளுக்கு அதிக அளவில் நிதி ஒதிக்கீடு செய்திருக்க முடியும். குடியரசுக் கட்சி தலைமை ஒரு சிலவகை செலவீனங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்தது. ஏழைகள் வீடுகளில் வெப்பமூட்டுவதற்கு உதவித்தொகை 300 மில்லியன் டொலர்களும், மேற்கு மாகாண பகுதிகளில் காட்டுத்தீ பரவாது தடுப்பதற்கு 825- மில்லியன் டொலர்கள் வழங்கவும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு 1.5 பில்லியன் டொலர்களயும், விவசாயிகளின் வறட்சி நிதிக்காக 3.1 பில்லியன் டொலர்களையும் (இது சாதாரண விவசாயிகளுக்கல்லாது பெரிய வேளாண்மை பண்ணைகளுக்கே போய் சேரும்), மெடிகர் (Medicare) திட்டத்தின் கீழ் மருத்துவர்களுக்கு மீள்கொடுப்பனவாக 900 மில்லியன் டொலர்களையும் வழங்க குடியரசுக் கட்சி தலைமை வகை செய்தது. ஆம்ராக் ரயில் சேவைகள் (Amtrak rail) மீண்டும் தொடங்குவதற்கு நிதி உதவி செய்யப்படும். பென்டகன் மேற்க்கொள்ளும் ''இரகசிய வகை'' திட்டங்களுக்காக மட்டும் 3.9 பில்லியன் டொலர்கள் உயர்வு தரப்பட்டிருக்கிறது. ஒரே வகைச் செலவினத்திற்கு ஒதுக்கப்படும் மிகப்பெரும் தொகை இதுவாகும். ஏழைகளையும், முதியவர்களையும், பாடசாலைக் குழந்தைகளையும், குடியரசுக் கட்சியினர் புறக்கணிப்பதாக அப்போதைக்கப்போது ஜனநாயகக் கட்சியினரின் வாயடிப்பு வலதுசாரி பக்கம் சாய்வதில் குடியரசுக் கட்சியினரை முந்துகின்ற நடவடிக்கையாகும். எப்படியிருந்தபோதும் புஷ் நிர்வாகம் உள்நாட்டு பாதுகாப்பிற்கு மிகக்குறைந்த அளவிற்கே செலவிடுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தும் திருத்தங்களை கொண்டு வந்தனர். மேலும், மத்திய புலன் விசாரணை அமைப்பு (FBI) சுங்கச் சேவைகள், குடியேறுவோர் மற்றும் குடியுரிமை சேவைகள் மற்றும் இதர போலீஸ் ஏஜென்சிகள் ஆகிய சேவைகளுக்கு ஆகும் செலவினங்களை வெள்ளை மாளிகை குறைத்திருப்பதை கண்டித்தனர். மேற்கு வெர்ஜினியாவை சேர்ந்த செனட்டர் ரொபேர்ட் பைய்ட் (Robert Byrd) புதிய துறையை உருவாக்குவதை எதிர்த்து வாக்களித்தார். ஆனால், அவரே புதிய துறையின் வரவுசெலவுத் திட்டத்தை ஐந்து பில்லியன் டொலருக்கு உயர்த்துவதற்கு திருத்தம் கொண்டு வந்தார். செனட்டர் சார்லஸ் சுமர் (Charles Schumer- ஜனநாயகக் கட்சி நியூயோர்க்) மத்திய புலனாய்வு அமைப்பு செலவினங்கள் 300 முதல் 430 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வெட்டப்பட்டிருப்பதாக புகார் கூறினார். குடியரசுக் கட்சியின் வரவுசெலவுத் திட்ட நடவடிக்கை மூலம், 1,175 FBI ஏஜென்டுகளும், 1,600 சுங்க பரிசோதகர்களும் பதவி இழப்பார்கள் என்று இதர ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிட்டனர். உள்நாட்டு பாதுகாப்பு செலவினங்கள் வெட்டப்படுவது தொடர்பான முடிவை வெள்ளை மாளிகை எடுத்ததற்கான அடிப்படை காரணத்தை ஜனநாயகக் கட்சியினர் எவரும் விளக்கவில்லை. அமெரிக்காவிற்குள் உடனடியாக பயங்கரவாதிகள் தாக்குதல் அபாயம் இருப்பதாக நிர்வாகம் சொல்லி வருவதை அவர்களே நம்பவில்லை. பயங்கரவாதிகள் மிரட்டல் தொடர்பாக நிர்வாகமும், ஊடகங்களும் திட்டமிட்டே மிகைப்படுத்தி செய்திகளை தருகின்றன. இப்படி அவர்கள் செய்வதற்கு காரணம் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதும், மத்திய கிழக்கிலும் இதர இடங்களிலும் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்புக்களை எதிர்ப்பவர்களை பயமுறுத்துவதற்கும் தான். 2003ம் ஆண்டிற்கான இறுதி செலவின மசோதா செனட் சபைகளில் நிறைவேற்றப்பட்ட அதே நாளில், செனட் சபை ஜனநாயகக் கட்சித் தலைவர் தோமஸ் ஏ.டாச்லே (Thomas A. Daschle) புஷ் வரிக்குறைப்பு திட்டத்திற்கு மாற்றாக தனது சொந்த வரிவெட்டு ஆலோசனைகளை தாக்கல் செய்தார். டாச்லேயின் ஊக்குவிப்பு திட்டத்திற்கும் புஷ்ஷின் திட்டத்திற்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை. ஏனெனில், இந்த ஆண்டு அமெரிக்க பொருளாதாரத்தினுள் சுமார் 112 பில்லியன் டொலர்களை உள்கொண்டுவரவே இரண்டு திட்டங்ளும் வகை செய்கின்றன. இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டுபொருட்கள் உற்பத்தியில் (GDP) 1% இற்கும் குறைவாகும். ஜனநாயகக் கட்சியின் திட்டம் ஓராண்டிற்கு மட்டுமே செயல்படத்தக்கது. வயதுவந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே முறையில் 300 டொலரும், ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் வரை ஒவ்வொரு குழந்தைக்கும் 300 டொலரும் திருப்பிவழங்க வகை செய்கிறது. மேலும், மாநில அரசுகளுக்கும், உள்ளாட்சி அரசுகளுக்கும் 40பில்லியன் உதவித்தொகை வழங்கவும், வர்த்தகர்கள் புதிய சாதனங்களை வாங்க அல்லது சுகாதார காப்புறுதி பணம் வழங்க சில வரிச் சலுகைகளையும் இத்திட்டம் வழங்குகிறது. மேலும், இதுவரை கிடைத்துவந்த உதவிப்பணம் காலாவதியாகும் 10 இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத்திண்டாட்ட உதவித்தொகை வழங்கவும் வகை செய்யப்பட்டிருக்கின்றது. டாச்லேயின் திட்டத்தின் மிக சிறப்பான அம்சம் என்னவென்றால் அது மிக மிக அற்பமானது என்பதுதான். புஷ் மிக விரிவாக தீவிரமான 674 பில்லியன் டொலர் வரிகுறைப்பை அறிவித்திருக்கிறார். இது அமெரிக்காவின் உயர்மட்டத்தில் உள்ள 1% ஆனோருக்கு மட்டுமே மிகப்பெரும்பாலான சலுகைகள் சென்றடையும். இந்தத் திட்டத்தை டாச்லே குறைந்தபட்சம் சொல்லளவில் எதிர்க்கிறார். ஆனால், அமெரிக்காவில் நிலவுகின்ற சமுதாய நெருக்கடியை இல்லாதொழிக்கின்ற நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கு ஜனநாயகக் கட்சி தலைவருக்கு திறமை இல்லை. ஏனென்றால், இதற்கு நாட்டின் நிதி ஆதிக்க சக்தியினர் குவித்துவைத்துள்ள திரண்ட செல்வத்தை தொடுகின்ற அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். |