World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : பூகோள போர் எதிர்ப்பு கண்டனம்

London: a massive rebuttal of Blair's support for war

போருக்கு பிளேயர் ஆதரவு: லண்டனில் பொது மக்கள் திரண்டு கடும் கண்டனம்

By Julie Hyland
17 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கிற்கு எதிரான போரைக் கண்டிப்பதற்காக லண்டனில் 20 லட்சம் மக்கள் திரண்டு கண்டனப் பேரணி நடாத்தினர். திரண்டிருந்த மக்களை துல்லியமாக கணக்கிடுவது சிரமம் அந்த அளவிற்கு மக்கள் திரண்டிருந்தனர். ஆனால் ஆர்பாட்டம் லண்டன் தலைநகரின் -நாலாபக்கங்களிலும்- ஹைட் பூங்காவிலிருந்து (Hyde Park) பக்கிங்ஹாம் அரண்மனை கடந்து, பாராளுமன்ற அவைகளுக்கும் அதற்கு அப்பாலும் நடைபெற்றன.

ஒரு வாரத்திற்கு மேலாகவே செய்திஊடகங்களும், அரசியல் நிர்வாகமும், ஆர்ப்பாட்டங்களில் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் என்பது தொடர்பான அனுமானங்களை செய்து கொண்டிருந்தன. 5-லட்சம் பேர் கலந்து கொண்டாலே அதுவே பெரிய வெற்றி என்று கருதப்பட்டது. பிரிட்டிஷ் வரலாற்றில் மிகப் பெரிய அரசியல் கண்டனப் பேரணியாக அது இருக்கும். ஆனால் உண்மையில் அதை விடப் பெருமளவிற்கு மக்கள் திரண்டனர். இதுவரை பிரிட்டனின் வரலாறு காணாத பேரணியாக அது அமைந்து விட்டது.

மூன்றரை மைல் தொலைவிற்கு நீண்டு சென்ற கண்டனப்பேரணி பாதையில் நடந்து வருவதற்கு 5-மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்ய வேண்டி வந்தது. பேரணி மாலை 5-30-மணிக்கு முற்றுப்பெறுவதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் ஆர்பாட்டக்காரர்கள் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. ஹைட் பூங்கா நிறைந்திருந்ததை விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிழற்படங்கள் தெளிவாகக் காட்டின. அந்த படத்தில் கூட பார்க்க முடியாத அளவிற்கு தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மற்றவர்களுக்கு இடம் கொடுப்பதற்காக ஒரு தரப்பிற்குப் பின்னர்- இன்னொரு தரப்பு பேரணியினர் வந்து குவிந்து கொண்டிருந்தனர். இப்படியே ஜன சமுத்திரம் நகர்ந்து கொண்டே தலைவர்களது உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்தது.

பிரிட்டனின் ஒவ்வொரு நகரைச் சேர்ந்தவர்களும் பேரணியில் கலந்து கொண்டனர். கடைசி நாளில் பேரணிக்கு வந்த கோச்சு வண்டிகள் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது. உள்ளூர், வானொலி நிலையங்கள் கோச்சு நிறுவனங்களுக்கு அல்லது தனிநபர்களுக்கு பேரணிக்கு வாகனங்களை அனுப்பி உதவுமாறு வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தன. தனி ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.

பகல் 12-மணிக்கு ஊர்வலம் தொடங்குமென்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த அணிவகுப்பு பாதையில் சென்று கொண்டிருந்தனர். இது வரை பிரிட்டன் கண்டிராத சமுதாயத்தின் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட பேரணி இது. வெள்ளையர், கருப்பர், ஆசிய மக்கள் பல்வேறு தலைமுறைகள் பல்வேறு மொழிகளைப் பேசுவோர், பல்வேறு தேசிய இனங்களை சேர்ந்தவர்கள், மற்றும் பல தரப்பட்ட சமுதாயப் பின்னணி கொண்டவர்கள் கண்டனப்பேரணியில் பங்கு கொண்டனர். ஊதிய விகிதங்கள் தொடர்பாக தங்களது வேலைநிறுத்தத்தை அண்மையில் விலக்கிக் கொண்ட தீயணைப்பு படையினர், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஆகியோர் சீருடை மற்றும் தங்களது இயல்பான உடை அணிந்து வந்திருந்தனர். பிரிட்டிஷ் சமுதாயம் முழுவதின் மாதிரி வடிவமாக இருந்தது.

கண்டனப் பேரணியில் கலந்து கொண்டவர்களில் கணிசமான பகுதியினர் முதல் முறையாக இது போன்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களாவர். 20-வயதுக்கும் குறைந்தவர்கள், மாணவர்கள் இளம் தொழிலாளர்கள், ஆகியோர் கணிசமான அளவிற்கு இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். இப்படி முதல் தடவையாக இது போன்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பெண்களது எண்ணிக்கை மிக அதிகமாகும். சாதாரணமாக "தீவிர" உணர்வு கொண்ட இளைஞர்கள் என்று கருதப்படும் தரப்பை சேர்ந்தவர்கள் அல்ல இவர்கள், ஆனால் இப்போது நடைபெறுகின்ற சம்பவங்களால் அடிப்படையில் அந்த இளைஞர்கள் அரசியல் நோக்கில் தீவிர எண்ணம் கொண்டவர்களாக மாறிக் கொண்டு வருகிறார்கள்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவரிகள் கண்ணியம் மிக்கவர்கள் அதே நேரத்தில் வேடிக்கை பொழுதுபோக்காக இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை. கலத்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையில் அவர்கள் பங்கு எடுத்துக்கொண்டதாக, அவர்கள் மீண்டும் மீண்டும் கூறினர். வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஏற்படப்போகிறது என்ற கருத்தின் அடிப்படையில், தங்களுக்கு என்ன என்று சரியாக தெரியாத அளவிற்கு உலகம் சில அடிப்படைகளில் திருத்தியமைக்கப்பட இருக்கிறது, என்ற உணர்வோடு பெரும்பாலான மக்கள் அந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

ஈராக்கிடம் மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்கள் இருப்பது குறித்து அமெரிக்காவும், பிரிட்டனும், கவலைப்படுவதாக கூறப்படுவதை அனைவரும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இது எண்ணெய் வளத்துக்காக, அதற்கும் மேலாக உலக ஆதிக்கத்திற்காக நடைபெறுகின்ற போர் என்று அனைவரும் கருத்து தெரிவித்தனர். எனவேதான் பேரணியில் உரையாற்றிய அரசு சார்புடைய பேச்சாளர்களில் பெரும்பாலோர் ஐ.நா-சபை மூலம் போர் நடத்தப்பட்டால் தான் அதை ஆதரிக்க முடியும் என்று தெளிவு படுத்தினார்கள். இது பேரணியில் கலத்து கொண்டவர்களது உணர்வுகளை எதிரொலிப்பதாக இல்லை. ஏழ்மையான பல வீனமான ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மிகப் பெரும்பாலோர் கண்டனம் தெரிவித்தனர். தங்களது வெறுப்பு உணர்வை வெளிப்படுத்தினர். ஈராக்கை பொறுத்தவரை ஆளும் குழுவினர் மீது நம்பிக்கையில்லாத தன்மை ஊர்வலத்தில் வெளிப்பட்டது, அத்துடன் தற்போது உருவாகிக் கொண்டுள்ள வர்க்க அடிப்படையிலான எதிர்ப்பு உணர்வும் வெளிப்பட்டது. பிரிட்டனின் ஆளும் தட்டினர் உழைக்கும் மக்களது ஜனநாயக உரிமைகளை துச்சமாக மதித்து அலட்சியப் படுத்துகின்றனர் என்ற உணர்வு ஆர்ப்பாட்டத்தில் வெளிப்பட்டது.

''அவர்கள் எப்போதுமே எங்களை பொருட்படுத்துவதில்லை'' என்று ஆளும் தட்டினரை பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்த முறை அந்த அலட்சியப்போக்கு அதிகமாகிவிட்டது. ஈராக்கிற்கு எதிரான போருக்கு மக்களது கருத்தை அப்பட்டமாக மீறி அரசாங்கம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அரசின் அணுகுமுறை ஜனநாயகத்திற்கு விரோதமாக மிகப்பெரும் அளவில் வளர்ந்து கொண்டு போவதால் இனி அரசாங்கத்தின் போக்கு நீடிக்க விடக்கூடாது. "இதற்கு மேல் செல்ல வேண்டாம்'' என்று அரசாங்கத்தை தடுத்து நிறுத்த தக்க தருணம் வந்து விட்டது.

இது சாதாரண பேரணி மட்டுமல்ல ஒரு சமுக இயக்கத்தின் தொடக்கமாகும். அந்த இயக்கத்தின் வேகம் இப்போது சற்று குறைவாக இருக்கிறது. பொது மக்கள் இப்போது தங்களது ஆற்றலுக்கு மீறிய சாதனையை செய்துவிட துடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த சாதனை ஆக்கபூர்வமான வழிகளில் செல்ல வேண்டுமென்று விரும்புகின்றனர். போரை நிறுத்து கூட்டணி-யில் பல்வேறு தரப்பினர், முதலாளித்துவ அரசியல்வாதிகள், மத குருக்கள், தீவிர நடவடிக்கையாளர்கள் மற்றும் தனி மனிதர்கள் அடங்கியுள்ளனர். இந்த அமைப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த ஆர்ப்பாட்டங்கள் தன்னெழுச்சியானதாக இருந்தன என்பது தெளிவாக தெரிந்தது. இதற்கு சான்றாக வீடுகளிலேயே தயாரித்து கொண்டு வந்திருந்த முழக்கங்கள் அடங்கிய அட்டைகள் இருந்தன. ''என்னுடைய பெயரில் இதைச்செய்ய வேண்டாம்'' -''ஆட்சி மாற்றம் முதலில் வீட்டில் நடக்கவேண்டும்'' ''சதாமிற்கு ஆயுதம் கொடுத்தது யார்''- ''பின்லேடனுக்கு பயிற்சி கொடுத்தது யார்''- ''பிரிட்டிஷ் மக்களுக்கும் பிளேயருக்கும் எந்த விதமான சம்மந்தமும் இருப்பதாக சான்று எதுவும் இல்லை'' என்பது போன்ற வாசகங்களை பலர் கொண்டு வந்திருந்தனர்.

திட்டமிட்டு அரசியல் கட்சிகள் தயாரித்த பதாகைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு, தொழிற்சங்கங்கள், இதர அரசியல் குழுக்கள் சார்பில் கொண்டு வரப்பட்ட பதாகைகளின் எண்ணிக்கை மிக்க குறைவாகவே காணப்பட்டது. இதில் வியப்பிற்கு இடமில்லை. பிரிட்டிஷ் நிர்வாகம் முழுவதும் பிளேயரின் நிலைப்பாட்டை ஆதரித்து வருகிறது. தற்போது, தொழிற்கட்சி ஏகாதிபத்திய கொள்ளைக் கூட்ட அமைப்பாக மாறி வருகிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு சில சிறிய பதாகைகள் மட்டுமே அக்கட்சி சார்பில் வருந்தத்தக்க வகையில் இடம் பெற்றிருந்தன.

பிரதமர் டோனி பிளேயர்தான் விரும்பியோ, விரும்பாமலோ இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிகமாக ஆள் சேர்ப்பதற்கு அதிகமாக உதவியது. பொதுமக்களுடைய கருத்தை பொருட்படுத்தாமல் போரில் தான் ஈடுபடப்போவதாக மிகுந்த இறுமாப்புடன் அவர் அறிவித்துக்கொண்டிருப்பதால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் பல்லாயிரக் கணக்கில் அணி வகுப்பில் திரண்டு வந்தனர். உலகம் முழுவதிலும் நடக்கும் தொடர் ஆர்ப்பாட்டங்களில் லண்டன் ஒரு பகுதி என்பதை தெளிவாக அறிந்து அதனால் உந்தப்பட்டு பலர் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். போரை எதிர்ப்பவர்கள் சிறுபான்மையினரல்ல என்பதை வலியுறுத்தி உலகிற்கு வேறுவிதமாக எடுத்துக்காட்டவும் இந்த பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்ட மேடையில் பேசியவர்களில் லிபரல் ஜனநாயக கட்சி தலைவர் சார்லஸ் கென்னடி, ஜெசி ஜாக்சன் பாதிரியார் மற்றும் முன்னாள் தொழிற்கட்சி அமைச்சர் மோமெளலோம் (Mo Mowlem) மற்றும் முன்னாள் தொழிற்கட்சி எம்.பி. டோனி பென், முன்னாள் அல்ஜீரியா ஜனாதிபதி பென்பெல்லா மற்றும் பல்வேறு தொழிற் சங்கத்தலைவர்கள் உரையாற்றினர். அவர்களது உரைகளில் பெரும்பகுதி ஐ.நா-வை ஆதரிக்கின்ற வகையிலும் ஐரோப்பிய அரசுகள் குறிப்பாக ஜேர்மனியும், பிரான்சும் தான் அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் அரண்கள் என்றும் வலியுறுத்தியது. சரியான சூழ்நிலைகள் உருவாகும்போது போரில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று அவர்கள் தங்களது விருப்பை விட்டு விட்டனர்.

மேடையில் கலந்து கொண்டவர்களுக்கு ஓரளவிற்கு அரசியல் சாயம் பூசுவதற்காக பல தீவிரவாத அமைப்புக்கள் பணியாற்றின. சோசலிச தொழிலாளர் கட்சி ஆதரவாளர்களான லின்சே - ஜெர்மன் (Lyndsey Germain) மற்றும் இடது தொழிற்சங்கத் தலைவர்களான பொப் குரோ (Bob Crow) போன்றவர்கள் டோனி பிளேயருக்கும் அரசிற்கும் எதிராக ஆவேச குரல் கொடுத்தனர். ஆனால் டோனி பிளேயருக்கு அடிப்படையில் சவால் விடுகின்ற அளவிற்கு மாற்று திட்டம் எதையும் அவர்கள் முன்வைக்கவில்லை. தொழிற்சங்கங்கள் சமுக மாற்றத்திற்கான கருவிகள் என்று நிலைநாட்டும் சொல் அளவிலேயே அவர்கள் நின்று விட்டனர். போர் பற்றி விவாதித்து முடிவு செய்வதற்காக தொழிற்சங்க யூனியன் மாநாட்டை திரும்ப கூட்டப் போவதாகவும் அதில் தொழிற் கட்சிக்கு நிதி தருவதை முடித்துக்கொள்வதற்கான ஆலோசனைகள் தெரிவிக்கப் போவதாகவும் தொழிற்சங்கத் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் "டோனி பிளேயரை பதவியிலிருந்து இறக்குவோம்" என்று சொல்வது வெறும் வார்த்தைகள் தான். ஏனென்றால் தொழிற் கட்சி தலைமை பதவியிலிருந்து டோனி பிளேயரை நீக்குவதற்கு நடைபெற்ற அரசியல் முயற்சிக்கு தொழிற்சங்க தலைவர்கள் ஆதரவு தரவில்லை.

உலக சோசலிச வலை தளமும், சோசலிச சமத்துவக் கட்சியும் கண்டனப் பேரணியின் தொடக்கத்திலும், இறுதியிலும் தங்களது அரங்குகளை அமைத்திருந்தன. ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கான அறிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கினர். போர் எதிர்ப்பு இயக்கத்தை எதிர் நோக்கியுள்ள பணிகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் உட்பட பல்வேறு அறிக்கைகள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. ஆர்வத்தோடு அறிக்கை பிரதிகளை அவர்கள் பெற்றுக் கொண்டனர். அரசியல் ஆய்வில் ஆர்வம் செலுத்தினர். உலக சோசலிச வலைதளத்தை தாங்கள் அறிந்திருப்பதாகவும் அது தினசரி சம்பவங்களை விமர்சித்து வருகின்ற தகவல்கள், தங்களது பாராட்டை பெறுவதாகவும் அவர்களில் பலர் தெரிவித்தனர்.

நமது நிருபர்களிடம் பேட்டியளித்தவர்களில் ஒருவர் இல்லத்துணைவி ஆன்னெட் (Annette). அவர் கிச்சின் (Hitchin) பகுதியிலிருந்து தனது ஐந்து குழந்தைகளில் மூன்று குழந்தைகளோடு வந்து பேரணியில் கலந்து கொண்டார். ''இந்த உலகில் நான் எனது காலடியை பதிக்க விரும்புகிறேன். எனது குழந்தைகளை சுதந்திர சிந்தனையாளர்களாகவும் முழுமை பெற்ற இளைஞர்களாகவும் வளர்த்து சிறந்த உலகை படைப்பதற்கு விரும்புகிறேன். மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற வகையில் தற்போது நான் இயற்கை உணவைத்தான் உட்கொள்கிறேன். சுற்றுப்புறச் சூழல் பற்றி கவனம் செலுத்துகிறேன். இப்போது நான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். எல்லாம் சரியாகயிருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் எல்லாம் சரியாக இல்லை. இந்த அமைப்பே நோய் பிடித்து நொடிந்து விட்டது.

''மனித நேயத்தின் சிறப்புக்கள் வெளிவர முடியாத அளவிற்கு என்னைச் சுற்றி இரக்கமற்ற அரசியல் மற்றும் பொருளாதார சக்திகள் வலம் வந்து கொண்டிருப்பதாக நான் இப்போது கருதுகிறேன். இன்னும் சற்று தீவிரமாக செய்தாக வேண்டும் என்ற உணர்வு உந்துதல் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

''இந்தப் போர் வேண்டுமா? என்று நம்மிடம் கேட்கவில்லை. இது ஜனநாயகத்தையே இழிவுபடுத்துவதாக இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை புஷ் மற்றும் பிளேயர் இருவரும் ஜனநாயகத்திற்கு சாவுமணி அடித்துக்கொண்டிருக்கிறார்கள் பணம் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. மனிதனது தேவைகள் அதை முடிவு செய்வதில்லை. மனிதத் தேவைகள் அல்லாமல், பணம் ஆளுகின்ற அமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மக்களை ஏதோ ஒன்று பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. கட்டவிழ்த்து விடப்படும் பொய் மூட்டைகள் மற்றும் அகந்தை போக்குகளால் மக்கள் சலிப்படைந்து விட்டனர். முடிவு செய்யும் உரிமைகள் தங்களுக்கு இல்லை என்று மக்கள் கருதுகின்றனர். இந்த உலகை சிறப்பாக ஆக்குவதற்கு ஏதாவது ஒன்றை செய்தாக வேண்டும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருக்கின்றனர்.

''நாம் இப்போது டோனி பிளேயர் அல்லது புஷ்ஷை எதிர்த்து மட்டுமே போராடவில்லை என்று நம்புகிறேன். 40,50 ஆண்டுகளுக்கு மேலாக பூதாகாரமாக உருவாகிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய நிகழ்ச்சிப் போக்கின் மிதக்கின்ற பனிப்பாறையின் நுனியைத்தான் இருவரும் பிரதிபலிக்கின்றனர். நான் முதலாளித்துவ முறைக்கு மாற்றான கொள்கைகளுக்காக போராடவே விரும்புகிறேன். எனவே நான் சோசலிச கருத்துக்களை ஆராய்ந்து வருகிறேன். ஏனென்றால் எனது கருத்துக்களுக்கு வடிவம் கொடுக்க ஓர் அமைப்பு தேவை'' இவ்வாறு இல்லத்துணைவி ஆன்னெட் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

Top of page