World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : அயர்லாந்து

Ireland: Fianna Fail and SDLP float unity pact

அயர்லாந்து: பியன்னா ஃபெயிலும் சமூக ஜனநாயக தொழிற் கட்சியும் ஒன்றிணையும் ஒப்பந்தம் நோக்கி செல்கின்றன
By Steve James
1 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

அயர்லாந்து குடியரசில் பிரதான கட்சியான பியன்னா ஃபெயில், வடக்கு அயர்லாந்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களில் தனது வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. சென்ற ஆண்டு நடைபெற்ற கட்சியின் ஆண்டு மாநாட்டில், இதற்கான முதல் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பின்னர், பிரதமர் பெர்டி அஹென் (Bertie Ahern), Sunday Business Post இற்கு அளித்த பேட்டியில் அந்த யோசனைக்கு மேலும் உற்சாகமூட்டும் வகையில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அதே நேரத்தில், அயர்லாந்து ஒற்றுமைக்கு ஆதரவளிக்கும் வடக்கில் மட்டும் இயங்கும், சமுக ஜனநாயக தொழிலாளர் கட்சி (SDLP) தலைவர் மார்க் டுர்கன் தனது கட்சி பியன்னா ஃபெயில் கட்சியுடன் கொண்டிருக்கும், ''கருத்து ஒற்றுமை'' உறவு குறித்து உரையாற்றினார். அவரது கருத்து, இரண்டு கட்சிகளும் ஒரு உடன்பாட்டைக் காணும் அல்லது புதிய முழு அயர்லாந்துக்குமான முதலாளித்துவ கட்சியை உருவாக்கும் என்பதற்கான சாத்திய கூறை உருவாக்கியுள்ளது. தற்போது அயர்லாந்து முழுவதும் செயல்படும் ஒரே கட்சி, ஜெரி ஆடம்ஸ் (Gerry Adams) தலைமையில் இயங்கும் சின் பெயின் (Sinn Fein) குடியரசு இயக்கம்தான்.

சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறக்கூடும் என்ற நிலையின் காரணமாக, இந்தப் புதிய முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது. வடக்கு அயர்லாந்து நாடாளுமன்றத்தில் எல்லா பிரதான குடியரசு மற்றும் பிரிட்டிஷ் ஆதரவு யூனியன் கட்சிகளும் இடம்பெற்று அதிகாரப் பகிர்வு முறையில் ஆட்சி நடைபெற்றது. உளவு செயல்பாடு பற்றி மோசடிகள் அம்பலத்துக்கு வந்ததன் மத்தியில் 2002 அக்டோபர் 14-ந்தேதி அந்த நாடாளுமன்றம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

1998 பிரிட்டன், அயர்லாந்து மற்றும் அமெரிக்க அரசுகள் உருவாக்கிய ''பெரிய வெள்ளிக்கிழமை உடன்பாட்டிற்கு'' (Good Friday Agreement) இது ஒரு அடியாக அமைந்துவிட்டது. அயர்லாந்தில் சர்வதேச முதலீடுகள் வரும் அளவிற்கு, நாட்டில் ஸ்திரத்தன்மை நிலைநாட்டப்படவேண்டும் என்பதே இவ் உடன்பாட்டின் நோக்கமாகும்.

இதற்கிடையில், பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து அரசாங்கங்கள், குடியரசு சின் பெயின் மற்றும் IRA ஆகிய அமைப்புகள் யூனியன் கட்சிகள் கோரியபடி ஆயுதங்களை கைவிடும் நடவடிக்கை எடுக்குமாறு, கடுமையாக வலியுறுத்தி வருகின்றன.

இரகசியக் கூட்டங்களில் ஓரளவிற்கு வெற்றிகிட்டி இருப்பபதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன என்றாலும் முழு விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. சின் பெயின் ஏதாவது ஒரு வகை ஆயுதத்கைவிடலுக்கு உடன்படும் என்று தோன்றுகிறது. இது மீண்டும் நாடாளுமன்றத்தைச் செயல்படச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனையடுத்து பிரிட்டன் மே மாதம் புதிதாகத் தேர்தல் நடத்துவதற்கு உடன்பட்டிருக்கிறது.

வடக்கில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டிஷ் இராணுவம் கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட வேண்டும் எனவும், எல்லையில் இராணுவ நடமாட்டம் இருக்கக்கூடாது என்றும் சின் பெயின் கோரி வருகிறது. கடந்த சில வாரங்களில், மோதலில் ஈடுபட்டுள்ள அரசு சார்பான இராணுவக் குழுக்கள், வடக்கு அயர்லாந்தில் செயல்படும் சீரமைக்கப்பட்ட போலீஸ் சேவை பணியாளர்களின் கடுமையான அழுத்தத்திற்கு இலக்காயினர். இதற்கிடையில், கொடுமைக்கு பேர்பெற்ற ரோயல் அல்ஸ்ரர் போலீஸ் சிறப்புப் பிரிவு (Royal Ulster Constabulary Special Branch) தலைவரான பில் லோரி (Bill Lowry) பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார்.

சின் பெயினின் கருத்துக்களை அனுசரித்துச் செல்வதற்கு பிரிட்டன் முயன்று வருவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சர்வதேச நிலவரத்தைக் கருத்தில் கொண்டு பிரிட்டிஷ் இராணுவத்தின் கால் பங்கு ஈராக்குடன் நடைபெறும் போரில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றனர். தற்போது வடக்கு அயர்லாந்தில் 14,500 பிரிட்டிஷ் இராணுவத்தினர் உள்ளனர். ''தகராறுகள்'' உச்சக்கட்டத்தில் இருந்தபோது, வடக்கு அயர்லாந்தில் 25,700 பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் இருந்தனர். இன்றைக்கும் எல்லையில் காவல் புரிந்து வருகின்ற பாரசூட் படைப் பிரிவினர் ஈராக்கிற்கு அனுப்பப்படுவது குறித்து இராணுவத் தலைமை குறிப்பாக கவலையடைந்திருக்கிறது. ஏனெனில், பாக்தாத்தைக் கைப்பற்றுவதற்கு நடைபெறும் தெருச் சண்டைகளில் இந்தப் பாரசூட் படைப் பிரிவு ஈடுபடுத்தப்படலாம்.

முந்திய தேர்தல்களில் தான் பெற்ற வெற்றிகளை ஒருமுகப்படுத்துவதற்கு புதிய தேர்தல் வழிவகுக்கும் என சின் பெயின் நம்புகிறது. உடன்பாட்டின்படி நிர்வாகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட நிலையில் சின் பெயின் தென்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு தனது ஆதரவை கணிசமாகப் பெருக்கிக்கொண்டதுடன், எல்லையின் இரண்டு பக்கங்களிலும் செயல்பட்டு வரும் பாரம்பரிய குடியரசுக் கட்சிகளின் செல்வாக்கிற்கு அச்சுறுத்தலாகவும் உருவாகிவிட்டது.

பியன்னா ஃபெயில் பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கித் தவிக்கிறது. எனவே, எதிர்காலம் பற்றி மிகுந்த கவலை கொண்டிருக்கிறது. அயர்லாந்தை இரண்டாகப் பிரித்த பிரிட்டிஷ் அரசிற்கும், சின் பெயின் தலைவர் மைக்கல் கோலின்ஸ் (Michael Collins) இற்கும் இடையில் உருவாகிய 1921ம் ஆண்டு உடன்பாட்டிற்கு எதிராக உருவான குடியரசு இயக்கத்தின் ஒரு பகுதி தான் பியன்னா ஃபெயில் கட்சியின் ஆரம்பம். இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்ட ஈமொன் டு வலேரா (Eamonn de Valera) வின் குழுதான் பியன்னா ஃபெயிலை (சிப்பாய்களின் தலைவிதி) அயர்லாந்து நாடாளுமன்றத்தில் ஒரு அரசியல் கட்சியாகச் செயல்பட அமைக்கப்பட்டது. 1932-ம் ஆண்டு பியன்னா ஃபெயில் கட்சி ஆட்சிக்கு வந்தது. 20-வது நூற்றாண்டில் பெரும்பகுதி இக்கட்சி ஆட்சி நீடித்தது. டு வலேரா (De Valera) பிரதமரானார், பின்னர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த பியன்னா ஃபெயில் கட்சி, தெற்கு அயர்லாந்து முதலாளித்துவ கட்சி என்ற தனது வர்க்கத் தன்மையை மறைத்துக்கொள்வதற்காக, ''அயர்லாந்து நாடு'' முழுவதற்குமான இயக்கம் என்று தன்னைக் காட்டிக்கொண்டு செயல்படுகிறது. 1923 முதல் 1948 வரை இக்கட்சி ஆட்சியில் இருந்தபோது, நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றி ரிச்சார்ட் டுன்பி (Richard Dunphy) எழுதியுள்ள The Making of Fianna Fail Power in Ireland 1923-1948 என்ற நூலில், ஆரம்பக்கட்டம் முழுவதிலும் பியன்னா ஃபெயில், டு வலேராவின் தேசிய உணர்வூட்டல் பேச்சோடு, தெற்குப் பகுதியை விவசாய மற்றும் வர்த்தக பிரிவினரின் நலன்களை உறுதிப்படுத்தம் பொருளாதார திட்டங்களுடன் இணைந்திருந்தது.

பிரிட்டனை எதிர்த்து நீண்ட காலம் போராடிய இயக்கம் என்ற முறையில் ஏற்பட்ட ஆதரவையும், கட்சிக் கட்டுப்பாடு, கட்சி விசுவாசத்தினது பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கட்சி இயங்கியது. பியன்னா ஃபெயில் விவசாயிகள், தொழிற்சங்கங்கள், சிறு, பெரு வர்த்தகர்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஒரு வலைப்பின்னலை உருவாக்கிக்கொண்டது. தொழிலாளர்களுக்கும் சிறு விவசாயிகளுக்கு மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சமுதாயச் சலுகைகளையே வழங்கி வந்தது. அங்கு நிலவிய பாரிய வர்க்க வேறுபாடுகளையும், நகர, கிராமப்புற உழைக்கும் வர்க்கத்தின் மிகுந்த துன்பமிக்க நிலைமையை எதிர்கொள்கையில் இக்கட்சி கத்தோலிக்க தேவாலயத்தோடு இணைந்து கம்யூனிசத்திற்கும், பிரிட்டிஷ் அரசிற்கும் எதிரான வாய்வீச்சினை கொண்டே ஆட்சி நடத்தி வந்தனர்.

புரட்டஸ்டான்டுகளால் ஆளுப்படும் வடக்கு அயர்லாந்து ஆட்சியாளர்களுக்கு வார்த்தையளவில் கண்டனம் தெரிவித்துக்கொண்டு, வடக்கு அயர்லாந்திலுள்ள கத்தோலிக்க மக்களது நிலை குறித்து அக்கறையற்றே நடந்துகொள்கின்றனர். இக்கட்சி கத்தோலிக்க தேவாலயத்துடன் வைத்திருக்கும், உறவுகள் காரணமாக பிரிட்டன் ஆதரவு கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடனும், புரட்டஸ்டான்ட், கத்தோலிக்க தொழிலாளர்களிடையே பிளவை அப்படியே நிலைநாட்டி வருவதற்குமான தத்துவார்த்த ஆயுதத்தை வழங்குகின்றது.

1960களில் பியன்னா ஃபெயில் தனது பொருளாதார ஆதிக்கக் கொள்கையைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அயர்லாந்தில் உள்ள குறைந்த ஊதிய தொழிலாளர்கள் மீது நாட்டம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 1960களின் கடைசியில் வடக்குப் பகுதியில் சிவில் உரிமைகள் கிளர்ச்சி வெடித்தது. வடக்குப் பகுதி மக்களின் தலைவிதி மீது பியன்னா ஃபெயில் கட்சியின் முரண்பாட்டை எடுத்துக்காட்டி அயர்லாந்து முழுவதிலும் உறுதியற்ற நிலை உருவாகும் ஆபத்து உருவாயிற்று. 1969ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஆயிரக்கணக்கான துருப்புகளை அனுப்பியது. பிரிட்டிஷ் இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தை தற்போதைய IRA ஆக உருவாகிய சிறு குழு போராளிகளால் நடாத்தப்படும் தனி இராணுவ நடவடிக்கையாக கட்டுப்படுத்திக் கொள்வதாக உறுதியளித்தது.

இந்த ''சங்கடங்கள்'' நிறைந்த காலத்தில் பியன்னா ஃபெயிலும் அயர்லாந்து அரசும் தென்பகுதி வர்த்தக ஆதிக்கத்தினரும், அவர்களது புதிய முதலீடுகளும் குழப்பத்திற்கு இடமில்லாமல் செல்வதிலேயே குறியாக நடவடிக்கை எடுத்து வந்தார்கள். அந்தக் கால கட்டத்தில், அயர்லாந்து பொருளாதாரம் மிகப் பூரிப்பாக வளர்ந்ததை ''கெல்டிக் டைகர்'' (Celtic Tiger) என்ற அடைமொழியோடு அழைத்தார்கள். 1980-90களில் அமெரிக்கா தலைமையில் பெரும்பாலும் ஊழல் மலிந்த முறைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலீடுகளால், பியன்னா ஃபெயிலை ஆதரிப்பவர்களே பயன்பெற்றனர். 1992ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக சார்ல்ஸ் ஹாகி (Charles Haughey), பிரதமர் பதவியிலிருந்து விலகும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பியன்னா ஃபெயில் தலைவர்கள் பலர் மீது பல்வேறு போலீஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன.

அதற்குப் பின்னர், கட்சியின் செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது. முற்போக்கு ஜனநாயகவாதிகள் ஆதரவைச் சார்ந்துதான் கட்சி ஆட்சியில் நீடிக்கிறது. சென்ற ஆண்டு தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றிருக்கின்றனர் என்றாலும், மோசமாகிக்கொண்டிருக்கும் பொருளாதார நிலை, சமுதாய மோதல்கள் ஆழமாகிக்கொண்டிருக்கும் நிலை, அத்துடன் முடிவின்றி அம்பலத்துக்கு வந்து கொண்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், மேலும் அரசின் பலத்தை சீர்குலைத்துவிட்டன. சென்ற மாதம் அரசாங்கம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பல்லாயிரக்கணக்கானோர் தங்கியுள்ள சமுகசேவை செலவினங்களை வெட்டப்போவதாக அறிவித்துள்ளது.

வடக்குப் பகுதியில் பியன்னா ஃபெயில் கட்சியுடன் கூட்டுச்சேர விரும்பும் SDLP கட்சியும், சிறப்பாகச் செயல்படவில்லை. 1970ல் நடைபெற்ற சிவில் உரிமைகள் இயக்கத்திற்குப் பின்னர் உருவான SDLP-கட்சியும், வடக்கில் உள்ள சிறுபான்மையினரை ஆதரிக்கும் கட்சிதான். பியன்னா ஃபெயிலைப் போல் கத்தோலிக்க தேவாலயத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கிறது. பெரிய வல்லரசுகளது ஒத்துழைப்போடு ஒன்றுபட்ட அயர்லாந்தை உருவாக்கிவிட முடியும் என்று எதிர்பார்க்கின்றது.

இக்கட்சியின் முன்னாள் தலைவரான ஜோன் ஹியூம் (John Hume), பிரிவினை உடன்பாட்டை உருவாக்கிய முக்கியமானவர்களில் ஒருவராகும். இவர் சின் பெயின், அல்ஸ்டர் யூனியன் (Ulster Unionists), பிரிட்டன், அயர்லாந்து அரசுகளுடன் இடைவிடாது நீண்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியவராவர்.

வடபகுதியில் வாழ்க்கைத்தரம் குறைந்து கொண்டே வருகிறது. இதில் கத்தோலிக்கர்கள், புரட்டஸ்டன்டுகள் என்ற வேறுபாடு எதுவும் இல்லை. இதைச் சமாளிக்க SDLP கட்சியிடம் முற்போக்கு, கொள்கை வழித் தீர்வுகள் எதுவும் இல்லை. அக்கட்சி உடன்பாட்டை ஆதரித்ததன் விளைவாக பெரு வர்த்தகர்களுக்கு பயன்கிடைத்தது, உழைக்கும் வர்க்கம் பாதிக்கப்பட்டது. வடக்கிலுள்ள கத்தோலிக்க இன தொழிலாளர்களிடையே SDLP கட்சிக்கு ஆதரவு குறைந்துகொண்டு வருகிறது. தற்போது பாராளுமன்றத்தில் SDLP இன் 24 இடங்களுடன் ஒப்பிடுகையில் சின் பெயின் 18 இடங்களை கொண்டுள்ளது. தற்போது அதன் பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து துடைத்துக்கட்டப்படுவதோடு, சின் பெயின் தன் இடத்தைப் பிடித்துக்கொண்டு, தேசிய அரசியலிலிருந்தே நீக்கப்பட்டுவிடுவோமே என்ற அச்சம் SDLP க்கு ஏற்பட்டுவிட்டது.

SDLP நிர்வாகக்குழு உறுப்பினர் ரொம் கெல்லி (Tom Kelly), பியன்னா ஃபெயில் கட்சியுடன் பேரம் நடத்துவது தொடர்பாக தன்னுடைய கருத்தை தெளிவாக அறிவித்திருக்கிறார். ''ஐரிஸ் ஆட்சியாளர்கள் மீது மக்களது நம்பிக்கை சிதைந்துவிட்டது, நேர்மையில்லா கொள்கையில்லா கட்சி பியன்னா பெயில் என்று பலர் கருதுகின்றனர்'' என அவர் குறிப்பிட்டார்.

அப்படி இருந்தும் கெல்லி, அக்கட்சி "உண்மையான ஐக்கிய அயர்லாந்தை உருவாக்கும் நடுநிலையான கட்சி, நிர்வாகம் நடத்தும் இயல்பான கட்சி" என்றெல்லாம் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இத்தகைய கூட்டணியானது பாரம்பரிய கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை வெளிப்படுத்துகின்ற ஒரு அளவீடாகும். இந்த ஏமாற்று நடவடிக்கை மூலம் தமது செல்வாக்கை மீண்டும் பலமாக்கலாம் என கருதுகின்றனர். ஆனால் இந்த நெருக்கடியானது அதிகரித்துவரும் சமூக துருவப்படுத்தலில் ஆழமாக வேர் ஊன்றி உள்ளது என்பதே தீர்மானகரமானது.

Top of page