:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்க
US: Contractors shredded thousands of
immigration documents
அமெரிக்கா: ஒப்பந்தக்காரர்கள் அழித்துவிட்ட ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தஸ்தாவேஜிகள்
By John Andrews
3 February 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
செப்டம்பர், 11-தாக்குதல்களைத் தொடர்ந்து, புஷ் நிர்வாகம், `விசா` விதிகள்
மீறப்பட்டதாகக் கூறி, பல்லாயிரக்கணக்கான, புலம்பெயர்ந்த மக்களைக் கைது செய்தது. பிரதானமாக, மத்திய
கிழக்கிலிருந்து குடியேறிய மக்கள் மீது திடீர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவர்களது குடும்பத்தினரோ அல்லது
வக்கீல்களோ, தொடர்புகொள்ள முடியாதபடி காவலில் வைத்தனர்.
சென்ற டிசம்பரில், கலிபோர்னியாவின் தெற்குப் பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்த,
மத்திய கிழக்கைச் சார்ந்த, நூற்றக்கணக்கான மக்கள், 9/11 க்குப் பிந்திய சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும்
என காரணம் காட்டி கைது செய்யப்பட்டனர். சென்ற மாதம், "ஆப்பரேஷன் கேம் டே"
(Operation Game Day) நடவடிக்கைகளை மேற்கொண்ட, குடியேற்றம், மற்றும் குடியுரிமை சேவை
(Immigration and Naturalization Service -INS)
அதிகாரிகள், சான்டியாகோ சூப்பர் பெளல் அரங்கில் நுழைவதற்கு புலம்பெயர்ந்த 50 தொழிலாளர்களுக்கு உரிமை
இருந்தும் அவர்களைக் கைது செய்தது.
அமெரிக்காவின் INS-
பதிவேடுகள் துல்லியமாக இல்லை; மற்றும் கைது செய்யப்பட்ட பலர்
INS- தேவைகளை பூர்த்தி செய்ய எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொண்டனர் என
புலம்பெயர்ந்த மக்களது உரிமைகளுக்காக வாதாடும் குழுக்கள் கூறியுள்ளன.
INS- அமைப்பின் அலுவலக நிர்வாகம் சரியில்லாத காரணத்தினால்
தான் விசா விதிகளை மீறியவர்கள் பட்டியல் தவறாக தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்று குற்றம் சாட்டினர்.
இத்தகைய புகார்களுக்கு அடிப்படையில் வேறு காரணங்கள் இருக்கின்றன என தெரிகிறது.
சென்ற வியாழக்கிழமையன்று லொஸ் ஏஞ்சல்சில் உள்ள அமெரிக்க அட்டர்னி அலுவலகத்தில் இருந்து ஒரு குற்றச்சாட்டு
அறிவிக்கப்பட்டது. INS ன் ஆரேஞ்ச் கவுண்டி அலுவலகத்தைச்
சேர்ந்த இரண்டு மேற்பார்வையாளர்களான டான் ரன்டால் மற்றும் லியோனல் சலாசர் இருவரும் சென்ற ஆண்டு
பல்லாயிரக்கணக்கான பதிவேடுகளை அழித்துவிட்டனர். அமெரிக்காவில் தஞ்சம் கோரி மனுச் செய்தவர்கள், தொடர்பான
நிலுவை எதுவுமில்லை என்று, காட்டுவதற்காகவும், மேலும் INS
அலுவலக பதிவேடுகளில் நிலவிய குழப்பங்களை மறைப்பதற்காகவும், இவ்வாறு அவர்கள் செய்தார்கள் என்று
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இந்த குற்றச்சாட்டின்படி சென்ற கோடை காலத்தில், சுமார் தொண்ணூராயிரம்
(90,000) தஸ்தாவேஜூகள் அழிக்கப்பட்டன. இவற்றில்
பாஸ்போட்டுகள், பிறப்பு, மற்றும் திருமண சான்றிதழ்கள் மற்றும்
INS- மனுக்கள் நடைமுறை துண்டுப்பிரசுரங்கள் அடங்கும். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தீர்க்கப்படாத
மனுக்கள் அனைத்தையும் அழித்து ரண்டால் தனது அலுவலக நடைமுறை காகித பணிகள் அனைத்தையும், முழுமையாக
நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்தார்.
ஈரானிய அமெரிக்க பிரஜைகள் கூட்டமைப்பின் தலைவரும், வக்கீலுமான பாபேக்
சோட்டோடா லொஸ் ஏஞ்சல்ஸ் டெய்லி எனும் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "மக்கள் வருகிறார்கள்,
வந்து விசாரிக்கிறார்கள், INS- அவர்களது தஸ்தாவேஜூகள்
இல்லை என்று சொல்கிறது, ஏனெனில் பிராந்திய INS-
அதிகாரிகள் அப்பத்திரங்களை பதிவு செய்யவில்லை" என குறிப்பிட்டார். பீட்டர் சாச்சி கைது செய்யப்பட்டுள்ள
புலம்பெயர்ந்தவர்களது வக்கீல், அவர் INS- அலுவலகங்களில்
காணாமல் போய்விட்ட பதிவேடுகளின் அளவு குறித்து முழுமையாக முடிவு செய்யப்படுகிற வரை
INS நாடு கடத்தும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என
கேட்டுக்கொண்டார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள எவரும் உண்மையில் அரசாங்க ஊழியர்கள் இல்லை.
INS- தனது மனுக்கள் பரிசீலனை பணி தொடர்பான
அலுவல்களை "தனியார்மயமாக்கி", "சேர்வீஸ் சென்டர் ஆப்ரேட்டிங் டீம்" என்னும் டெக்சாஸ், வெர்ஜீனியா மற்றும்
மேரிலான்டைச் சார்ந்த கம்பெனிகள் கூட்டு நிறுவனத்திற்கு 325 மில்லியன் டாலர் ஒப்பந்தத்திற்கு கொடுத்துவிட்டது.
Top of page
|