World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

In runup to key state elections
German Green Party proposes drastic cuts in Frankfurt

பிராங்போர்ட்டில் கடுமையான வெட்டுகளை ஜேர்மன் பசுமைக் கட்சி தீர்மானித்துள்ளது

By Marianne Arens
21 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

''பராமரிக்கூடிய நகர்புற திட்டம் பற்றிய கொள்கை'' டிசம்பரில் வெளியிட்டதன் மூலம், பசுமைக் கட்சி பிராங்போர்ட்டில் நடத்த உத்தேசித்துள்ள நூற்றுக்கு மேற்பட்ட கடுமையான சமூகவெட்டுகளை கோடிட்டுக் காட்டியுள்ளது.

பசுமைக்கட்சியின் நோக்கம் என்னவெனில்; நகரசபை மானியங்களை குறைப்பது; ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சலுகைகளை வெட்டுவது, பொது நூலகங்களையும் நகராட்சி அலுவலகங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பது, நகருக்கு சொந்தமான நீச்சல் தடாகங்களை வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக மாற்றுவதும் பொது சுகாதாரத்துறையால் வழங்கப்பட்ட எய்ட்ஸ் பற்றிய ஆலோசனை நிறுத்துவன என்பவையாகும்.

பிராங்போர்ட் இப்போது ஆளும் கூட்டணியில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி (CDU), சமூக ஜனநாயக கட்சி (SPD), பசுமைக் கட்சி, மற்றும் தாராளவாத சுதந்திர ஜனநாயக கட்சி (FDP) ஆகியோரால் கூட்டாட்சி புரியப்படுகிறது. கிறிஸ்தவ ஜனநாயக கட்சி தலைவர் Uwe Becker பசுமைக் கட்சி தீர்மானங்களை வரவேற்றுள்ளார்.

பிராங்போர்ட் நகரம் கடுமையான நிதிநெருக்கடிக்கு முகம் கொடுக்கிறது. டிசம்பர் 9, 2002 முதலே இந்த நகரம் தன்னுடைய நிதித்தேவைகளுக்கு வங்கிகளின் குறுகிய கால கடன்களையே நம்பியுள்ளது. இந்தத் தேவையானது, அதே வங்கிகளிடம் வாங்கிய நீண்ட கால கடனுக்கான வட்டித்தொகையை செலுத்துவதற்காகும். பொதுச்சேவைகளுக்கும், பொதுத்துறையின் ஊதியங்கள் மற்றும் வழக்கமான பராமரிப்பு செலவுகள் தனியே இப்படியான கடனுதவி பெற்றுத்தான் நடாத்த முடியும்.

நகராட்சி நிதி மற்றும் வரி அலுவலகத்தின் இயக்குநர், பீட்டர் ஹய்ன் (Peter Heine) யின் கூற்றுப்படி, டிசம்பரில் கடந்த மூன்று வாரங்களில், இந்நகரம் 12 வங்கிகளில் குறுகிய கால கடன்களாக சுமார் 90 மில்லியன் யூரோக்களை திருப்பி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது. இன்னும் அடுத்து பத்து ஆண்டுகளுக்கு இந்த நகரம் வங்கிக் கடன்களிலேயே தங்கி இருக்கும் என பிராங்போர்ட்டின் பொருளாளரான Horst Hemzal கூறியுள்ளார். மேலும், 2006ம் ஆண்டு வரை நகரசபை வரவு செலவில் ஒட்டுமொத்த கூடுதல் நிதி பற்றாக்குறையாக 1.8 பில்லியன் யூரோக்களாக இருக்கும் எனவும், நகரசபையில் வேலை பார்க்கும் 55 வயது முதல் 65 வயது வரை உள்ளோர்கள் முன்னதாகவே பதவி ஓய்வு பெறவேண்டும் என்று அறிவித்துள்ளார்.

வர்த்தக வரியாக வரவேண்டிய வருவாயான சுமார் 200 மில்லியன் யூரோக்களில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதுதான் நகரத்தின் இந்த ஆபத்தான நிதி பிரச்சனைக்கு காரணம். பிராங்போர்ட்டில் மட்டுமே இரண்டு ட்ரில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெறும் சுமார் 329 பாரிய வங்கிகள் இருந்தும் இந்த நிலை காணப்படுகின்றது.

மத்திய அரசு இயற்றிய புதிய வரிச்சட்டம்தான் இந்த சரிவுக்குக் காரணம் என்று பசுமைக் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். 1998ல் ஆட்சிக்கு வந்தது முதல் கொண்டு, பேர்லினில் சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி கூட்டணி அரசு, பெரிய நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் மற்றும் செல்வந்தர்களுக்கும் அதிகமான வரி விலக்குகள் வழங்கியதால், உள்ளூர் அரசு அமைப்புகளுக்கு கூடுதலான நிதிப்பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அன்மைய பெரிய நிறுவனங்களுக்கான வரிவெட்டுக்களால் 2000வது ஆண்டில் மட்டுமே 20 பில்லியன் யூரோக்களுக்கு அதிகமாக வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டில், வரி அலுவலகங்கள் பாரிய முதலாளிகளுக்கு 426 மில்லியன் யூரோக்கள் திருப்பி செலுத்த வேண்டியிருந்தது.

பிராங்போர்ட் நகர சபையில் இருக்கும் பசுமைக் கட்சியினர், ஏழை மற்றும் சலுகை பெறாதவர்களிடமிருந்து திரும்பப்பெற முடிவெடுத்துள்ளபோது, பேர்லினின் மத்திய அரசாங்கத்தில் உள்ள பசுமைக் கட்சியினர் செல்வந்தர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள்.

1993-97 இடையில் பசுமைக் கட்சியினர் எப்போது நகரசபை பணப் பெட்டிகளின் பொறுப்பை ஏற்றார்களோ, அப்போது இருந்து பிராங்போர்ட்டின் பசுமைக் கட்சியினர் வங்கிகளின் மிகச் சிறப்பாக செயல்படும் பிரதிநிதிகளாக தேர்வுபெற்றுள்ளார்கள். பிராங்போர்ட்டை ஐரோப்பிய மத்திய வங்கியின் இருப்பிடமாக தயார் செய்ய, பசுமைக் கட்சி நகர காரியதரிசியான ரொம் கோனிக்ஸ் (Tom Koenigs), Wolfgang Neirhaus என்பவரை ஆலோசகராக நியமித்துள்ளார். Neirhaus வர்த்தக வங்கியாளராகவும், கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் நகர கவுன்சிலராகவும் இருந்தவர். இவர் Deutsche Bank உயர் நிர்வாகத்திலிருந்து நேரடியாக வருபவர். Koenigs நகர காசாளராக பதவி வகித்த கால கட்டத்தில்தான் தீவிர வெட்டுகளை அமுல்படுத்தினார்.

கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியை பொறுத்தவரை, பிராங்போர்ட் பசுமைக்காரரின் ''பராமரிக்ககூடிய நகர்ப்புற திட்டத்தின்'' பிரேரணைகள் என்பது பொதுத்துறைகளை எல்லாம் தனியார் மயமாக்குதல்தான். ''இக்கடமைகளை செய்யவேண்டியிருந்தபோதிலும், பிராங்போர்ட் நகர சபை இன்னும் ஏராளமான பணிகளை செய்தும், நிர்வகித்தும் வருகிறது.'' என்று திட்ட படிவம் குறைகூறுகிறது. ''எதிர்காலத்தில் அது தரத்தை நிலைநாட்டுவதோடு தானே எல்லா வேலைகளையும் நிர்வகிப்பதை குறைக்க வேண்டும்.'' என குறிப்பிட்டுள்ளது.

நகர சபையானது சமூக செலவுகள் செய்வதை தடுப்பதில் கடுமையாக இருந்ததில்லை என்று தொடர்ந்த பசுமைக் கட்சியினர், நலன்களை கோரும் மக்களை தடுத்து நிறுத்துவதற்கு ''எப்பொழுதுமே, அதற்கான அரசியல் சக்தி போதிய பலத்துடன் இருந்ததில்லை", என முறைப்பாடு செய்கிறது.

பசுமைக் கட்சியின் 17 பக்கங்கள் கொண்ட ஆவணம் முழுக்க வெட்டுகளுக்கான பிரேரணைகளை கொண்டிருந்தன. உதாரணத்துக்கு, பொதுஜன போக்குவரத்தில் ஏழைகளுக்கான கட்டண சலுகைகளை அகற்றப்பட வேண்டும்; முதியோர்களுக்கான வெளிநோயாளி, உள்நோயாளி மருத்துவ சலுகைகள் 10 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும்; அதேபோல்தான் இளஞ்சிறார்களுக்கான நலசேவைகளுக்கான மானியங்களும் குறைக்கப்படவேண்டும். நகராட்சி நடத்தும், குழந்தைகள் காப்பகத்தின் கட்டணங்களையும் உயர்த்துவதுடன், பல பொதுநூலகங்கள் மூடப்பட்டுள்ளது. பகல் நேர குழந்தை காப்பகங்களுக்கு உணவு விநியோகித்து வரும் மத்திய நகராட்சி உணவகத்தை தனியார்மயமாக்க உள்ளது.

இளைஞர் பணி அலுவலகத்திலும், நலன் புரித்துறையிலும் இருந்து வந்த 10 சதவீத நிரந்தர இடங்களை அகற்றுவதற்கு பசுமைக் கட்சியினர் தீர்மானித்துள்ளனர். அந்த துறைகள் எல்லாம் ஏற்கனவே, வளர்ந்துவரும் சமூக பிரச்சனைகளாலும், நிதி நெருக்கடியாலும் போராடுகிறது. மேலும் இக்கட்சி, குழந்தைகள் நலகாப்பகங்கள் மற்றும் மருத்துவ விடுதிகள் தவிர்ந்த ஏனைய நகராட்சி அலுவலகங்களில் வேலைக்கு புதிதாய் பணியாளர்களை அமர்த்துவதை முடக்கிவைக்கிறது.

ஹெரோயினுக்கு மாற்றான மெத்தடோன் (heroin-substitute methadone) திட்டத்திற்கு நகராட்சி நிதியுதவி தருவதை நிறுத்தவும், பொது சுகாதார எய்ட்ஸ் ஆலோசனை மையத்தை மூடிவிடவும் முடிவெடுத்துள்ளது. அந்நோயாளிகள் மருத்துவ உதவி பெற தனியார் மருத்துவ நிலையங்களுக்கோ அல்லது மருத்துவ விடுதிகளுக்கோ அனுப்பப்படுகிறார்கள்.

கலாச்சாரத் துறையில், Komödie எனப்படும் ஆங்கில நாடக தியேட்டர், Fritz Rémond தியேட்டர் மற்றும் Volkstheater ஆகியவற்றுக்கு நகர சபையால் தியேட்டர்களுக்கென வழங்கப்பட்ட மானியங்கள் 2006ம் ஆண்டுக்குள் 50 சதவிகிதமாக குறைக்கப்படும். பொருட்காட்சி நிலைங்களில், நகராட்சியின் பங்குகளை தனியார் துறைக்கு விற்றுவிடுவதென்றும், அத்தொகையில் இலாபம் ஈட்டாத ஸ்தாபனத்தை தோற்றுவித்து காட்சியகத்தை பராமரிக்கும். விஞ்ஞானத்திற்கும் கலைத்துறைக்குமான திணைக்களம் கலைக்கப்பட உள்ளது.

''அதிக சுயாட்சி'' என பிரியமில்லாததை நாசூக்காக கூறும் சொற்றொடரின் கீழ் தீர்மானங்கள் இயற்றும் பசுமைக் கட்சியானது, "கல்விக்குத் தேவையான மனிதவளம் மற்றும் கல்விப் பொருட்களுக்கு தேவையான வரவு செலவுத் திட்டத்தை இதுவரை நிர்வகித்து வந்த மாநில அரசுகளிடமிருந்து, அதை இனி அந்தந்த தனிப்பட்ட பாடசாலைகளிடமே நிர்வாகப் பொறுப்பை மாற்றி அளிக்கும். அதிக நகராட்சி பள்ளிகளில் தேவைக்கு அதிகமாக சேர்ப்பு மேற்கொண்டால், நிறைய இங்கிலாந்தின் நகரங்களில் இருக்கும் அதே சூழ்நிலை உருவாவதை தவிர்க்கமுடியாததாகிவிடும். அதாவது அங்கெல்லாம் தலைமை ஆசிரியர்கள், "அவசர தேவை ஆசிரியரா அல்லது கணணி அல்லது சுத்தப்படுத்தும் பணியா" என்பவற்றுள் எதையாவது தேர்ந்தெடுத்து பார்த்து செலவு செய்யவேண்டிய நிலையில் உள்ளார்கள்.

திட்ட ஆவணத்தில், நகராட்சியின் நெடுஞ்சாலைத்துறை சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி உண்மையற்ற கருத்தை கூறுகின்றது. ''வேலைக்கு ஆட்கள் இல்லாததால் கையிலிருக்கும் நிதியை செலவு செய்ய நெடுஞ்சாலை துறையால் இயலவில்லை'' என ஆவணம் குறிப்பிடுகின்றது. பணியாளர்கள் தேர்விற்கான தடையை நீக்குவதைக்காட்டிலும், சாலை பராமரிப்புக்கான நிதியில் சுமார் 3 மில்லியன் யூரோக்களை குறைத்துவிடவும், பணியாளர்களின் செலவுகளில் இருந்து இரண்டு மில்லியன் குறைக்கவும்'' பசுமைக் கட்சி கோரிக்கை வைக்கிறது.

நகரத்தின் 14 நீச்சல் தடாகங்களை, கிறிஸ்தவ ஜனநாயக கட்சி தீர்மானித்ததுபோலவே வரையறுக்கப்பட்ட நிறுவனத்திற்கு மாற்றப்படுகின்றது. பிராங்போர்ட் மிருக காட்சிசாலைக்கு தேவையான நிதியை மறுவடிவமாக்க அதாவது வரையறுத்த நிறுவனமாகவோ, லாபம் கருதாத ஸ்தாபனமாகவோ, பங்கு நிறுவனமாகவோ உருவாக்குவதன் மூலம் தனியார் மயமாக்கப்படுத்துவதற்கான ஆயத்தப்படுத்தலை செய்யலாம் என பசுமைக் கட்சியினர் இறுதியில் சம்மதித்துள்ளனர்.

''சொத்துக்களை விற்றாலும்.... நிதி பற்றாக்குறை குறையாது'' என்ற போதும், மேலும் தனியார்மயமாக்க பசுமைக் கட்சியினர் தீர்மானித்துள்ளனர். விமான நிலையம், நகராட்சி சேமிப்பு வங்கிகள், பிராங்போர்ட் உணவகம் மற்றும் இதர `பங்கு` நிறுவனங்களில் உள்ள தன் பங்குகளை விற்றுவிட நகராட்சியை கோருகிறது. பசுமைக் கட்சியினருக்கு தேவையானது அதிகரிக்கும் இலாபம் தான். நூலகங்கள், நீச்சல் குளங்கள், நூதனசாலைகள், சுகாதார சேவைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்தவமனைகள் கூட இவ்வாறு (இலாபமுள்ளதாக) நடத்திச்செல்லவேண்டும் அல்லது மூடிட வேண்டியதுதான்.

பசுமைக் கட்சியினரின் புதிய திட்டங்கள், கிறிஸ்தவ ஜனநாயக கட்சி சில மாதங்களுக்கு முன் தீர்மானித்தவைகளோடு நிறையவே ஒத்துபோகும் அம்சங்களாகவுள்ளது. இன்று பசுமைக் கட்சி செல்வம் மிக்க நடுத்தர வர்க்கத்தின் நலன்களை பிரதிபலிக்கிறது. அதனுடைய முன்னாள் சுற்றுசூழல் பாதுகாப்புவாதிகளும் மற்றும் தீவிரவாத தொண்டர்கள் இன்று நகரத்தின் பொருளாதாரத்தை வழிநடத்தும் உயர் மட்ட இடங்களில் உள்ளார்கள்.

கடந்த உள்ளுராட்சி தேர்தல்களின் பிறகு பசுமைக் கட்சியினருக்கும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்போது ''கறுப்பு-பசுமை'' கூட்டணியை நகரசபையில் அமைக்க இருந்ததாகவும், பசுமைக் கட்சியின் கீழ் மட்டத்தில் அதற்கு எதிர்ப்பு இருந்ததால், அக்கூட்டணி தோல்வியடைந்தது. அதுவுமின்றி இதற்கு இணங்காத CDU நகரமன்ற உறுப்பினர் வலதுசாரி குடியரசுக்கட்சி (Republikaner) ஆதரவு தர விருப்பம் தெரிவித்ததும் இதற்கு காரணமாகும்.

பிராங்போர்ட் நகரசபையில் பசுமைக் கட்சியினதும், மத்திய அரசிலுள்ள சமூக ஜனநாயக கட்சியினதும், தொழிலாளர் விரோத கொள்கைகளால் பிப்ரவரி 2ல் நடக்கவுள்ள Hesse மாநில தேர்தலின் கருத்துகணிப்பில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் வலதுசாரியான Roland Koch என்பவர் முன்னணியில் உள்ளார். இந்த சூழ்நிலையானது, தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியினாலும் (Partai Für Soziale Gleichheit), அதன் வேட்பாளராலும் முன்வைக்கப்படும் ஒரு சோசலிச மாற்றீட்டின் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டுகிறது.

Top of page