World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Brazil's Lula: From Porto Alegre to Davos

பிரேசில் ஜனாதிபதி லூலா: போர்டோ அலேகிரேயிலிருந்து டாவோசிற்கு

By Bill Vann
27 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

பிரேசில் நாட்டில் அண்மையில் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுக்கொண்ட லூயி இனாசியோ லூலா-டா-சில்வா உலகப் பொருளாதார அரங்கில் கலந்துகொள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகருக்கு வெள்ளி இரவு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். பிரேசிலின் தென் மாகாணமான போர்டோ அலேகிரேயில் உள்ள நகரமான ரியோ கிராண்ட டு சுல் (Rio Grande do Sul) நகரில் உலக சமூக அரங்கில் உரையாற்றி முடித்து சில மணி நேரங்களில் அவர் சுவிட்சர்லாந்து புறப்பட்டார். இம்மாநாடு பூகோளமயமாக்கலுக்கு எதிர்ப்பு இயக்கத்தினர் நடத்திய ஆண்டு மாநாடு. அதில் பூகோளமயமாக்கலுக்கு எதிர்ப்பு இயக்கத்தில் லூலாவின் கட்சியான தொழிலாளர் கட்சி ஆதரவாளர்களும் இடம் பெற்றிருக்கின்றனர். உலக வங்கியாளர்களும் நாட்டுத் தலைவர்கள் நடத்திய டாவோஸ் மாநாட்டிற்கு நேரடியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் உலக சமூக அரங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

"வேறு ஒரு உலகம் சாத்தியம்'' என்பதுதான் அன்று உலக சமூக அரங்கு மற்றும் தொழிலாளர் கட்சியின் (PT) முழக்கமாகத் திகழ்ந்தது. ஆனால் பதவிக்கு வந்து சில வாரங்களுக்குப் பின்னர், லூலா தலைமை வகித்து நடத்தும் நிர்வாகம் தன்னைப் பொறுத்தவரை தன் நிலையைத் தெளிவுபடுத்திவிட்டது. ''பிரேசிலின் பொருளாதாரத்தின் சாத்தியக்கூறுகள் தொடர்பான வரம்புகளை, சர்வதேச நாணய நிறுவனமும், உலக நிதி மூலதனமும் தொடர்ந்து நிர்ணயிக்கும்'' என்று லூலா அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திவிட்டது.

லூலா, டாவோஸ் மாநாட்டிற்குச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போர்டோ அலேகிரே நகரில் கண்டனம் தெரிவித்தவர்களை அடக்கும் வகையில், தொழிலாளர் கட்சி அரசின் ஆதரவாளர்கள் வறுமைக்கும் பசிப்பிணிக்கு எதிராக நடைபெறும் இயக்கத்திற்காக அல்லது "ஐக்கியத்துடன் உலகமயமாக்குதல்" கொள்கைக்கு அவர் வாதாடச் செல்வதாக சமாதானம் கூறினர்.

தொழிலாளர் கட்சியின் தலைவர்களில் ஒருவான சாஓ பாலோ நகர மேயர், மார்த்தா சூப்லிசி (Marta Suplicy) டாவோஸ் வங்கியாளர்கள் மாநாட்டில் லூலா கலந்துகொள்ளும் அணுகுமுறை புரட்சிகரமானது என வர்ணித்தார். ''உழைக்கும் வர்க்கம் தனது கருத்துக்களை பகிரங்கப்படுத்த கிடைக்கும் எந்த அரங்கையும் புறக்கணித்துவிடக் கூடாது என லெனின் கூறினார்`` என அந்தப் பெண் மேயர் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்து தலைநகரில் லூலாவும் அவரது குழுவினரும் உலக நிதி மூலதனத்தின் பிரதிநிதிகளுடன் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்களுக்கும், மார்க்சிச தத்துவங்கள் அல்லது சமூகப் புரட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. சர்வதேச நாணய நிறுவனமும் முதலீட்டு நிறுவனங்களும், வழக்கமாகத் தெரிவித்துவரும் கருத்துக்களைத்தான் அங்கு பரிமாறப்போகிறார்கள். தாங்க முடியாததாயுள்ள பிரேசிலின் கடன் சுமை 260 பில்லியன் டாலர்களாக உள்ளது. அப்படி இருந்தும், பிரேசிலில் மக்களைக் கசக்கிப்பிழியும் நடவடிக்கை மூலம் எப்படியும் இந்தக் கடன் சுமையைச் சமாளித்துவிட முடியும் என்பதுதான் லூலா அரசின் நிலைப்பாடாக இருக்கும். அந்த வகையில் முதலீட்டாளர்களை திருப்திப்படுத்தவே அவர் நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

டாவோஸ் மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னரே, லூலா நிர்வாகம் வட்டி விகிதத்தை 25% ஆக உயர்த்திவிட்டது. கடந்த 4 ஆண்டுகளில் இதுதான் மிக உயர்ந்த அளவிற்கான வட்டி விகிதமாகும். முந்திய அரசைவிட பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்தும், சமிக்கையாக இந்த வட்டி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட வட்டி உயர்வின் தாக்கம், வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும் அதிகரிக்கும் என்பதை லூலா நிர்வாகம் கவனத்திற்கு கொள்ளாது, மத்திய வரவு செலவுத்திட்டத்தில் உபரியாக அரசு வசம் உள்ள நிதியை கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு உறுதியளிக்கும் வகையில் பயன்படுத்தப்படுமென நிதியமைச்சர் அந்தோனியோ பாலோக்கி (Antonio Palocci) போர்டோ அலேகிரே நகரில் நடைபெற்ற வர்த்தகர்கள் கூட்டத்தில் தெளிவுபடுத்தினர்.

இவர், இடதுசாரி மாணவர் அணியில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர். சாஓ பாலோ மாநிலத்தில் ரிபைரோ பிரிடோ (Ribeirao Preto) நகரத்தின் மேயராக இருந்தவர். பின்னர் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் நிதி நிர்வாக விவகாரங்களில் பிற்போக்குவாதியாக மாறிவிட்டார். சர்வதேச சமூக அரங்கில் முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பு கண்டனங்களுக்கு மத்தியிலும் தனது பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை அறிவிக்க நிதியமைச்சர் பாலோக்கி தயங்கவில்லை. ''இடத்திற்கு இடம் வெவ்வேறு கருத்துக்களை நான் கூறிக்கொண்டிருக்க முடியாது'' என்று டாவோஸ் புறப்படும் முன்னர் அவர் கருத்துத்தெரிவித்தார்.

கடன்களைத் திரும்ப செலுத்துவது தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்துடன் முந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கண்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை பிரேசில் அரசு செயல்படுத்தும் என்று சர்வதேச முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்துவது தான் தமது பிரதான கவனமாக இருக்கும் என்று நிதி அமைச்சர் பாலோக்கி தெரிவித்தார். இதற்கு முந்திய காலத்தில் தொழிலாளர் கட்சி, தனது இயக்க மேடைகளில் கடன்களை ரத்து செய்யப்போவதாக அறிவித்தது. அதுவே அதன் முக்கிய கொள்கையாகவும் அமைந்திருந்தது.

டாவோசில் உரையாற்றிய சர்வதேச நிதி அமைப்பின் முதல் துணை நிர்வாக இயக்குநர் ஆன் குறூகர் (Anne Krueger) லூலா நிர்வாகத்தின் பொருளாதார கொள்கைகளை பாராட்டினார். ''இதுவரை பிரேசில் அரசு நன்றாக செயல்படுகிறது. எதிர்பார்ப்புக்களை சிறப்பாக சமாளித்து வருகிறது. மேலும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதில் பொறுப்பான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் லூலா பிரேசிலின் 5 இலட்சம் மக்கள் கலந்துகொண்ட கொண்டாட்டங்களில் பதவியேற்றுக் கொண்டார். இலத்தீன் அமெரிக்காவிலுள்ள சில குட்டிமுதலாளித்துவ இடதுசாரிகள் இந்த பதவியேற்பு விழாவை முன்னாள் உருக்கு தொழிலாளரும், தொழிற்சங்க அங்கத்துவருமான லூலாவின் பதவியேற்பு இந்த பிராந்தியத்தில் முதலாவது ''தொழிலாளர் அரசுக்கான'' ஆரம்பம் என்றும் பாராட்டினர்.

தொழிலாளர் கட்சிக்கு மிகப்பெரும் அளவில் ஆதரவாக, மக்கள் வாக்களித்ததற்கு காரணம், உலகிலேயே சமுதாய ஏற்றத்தாழ்வுகள் பாரியளவு காணப்படும் பிரேசில் நாட்டில் தீவிர மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான். பிரேசிலில் மிகப்பெரும் செல்வந்தர்களாக இருக்கின்ற 1% மக்கள் அடித்தளத்தில் உள்ள 50% இற்கு மேற்பட்ட மக்களது தேசிய வருமானத்தைவிட அதிக பங்கை அனுபவித்து வருவதாக சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இறுதியில் லூலா பிரேசிலினதும் சர்வதேச மூலதனத்தினதும் முக்கியமான பிரிவிற்கும் மிகவும் தேவையானவராகிவிட்டார். ஏனெனில் அத்தகைய மாற்றங்களை செய்யப்போவதில்லை என்று திரும்பத்திரும்ப தொழிலாளர் கட்சி வாக்குறுதியளித்ததாலாகும்.

இந்த நம்பிக்கையை பெறுவதற்காக, தேர்தல் பிரச்சாரத்தின்போது மிகத் தீவிரமான நடவடிக்கைகளை தொழிலாளர் கட்சி மேற்கொண்டது. இதில் முக்கியமானது மிகவும் வலதுசாரி நெசவுத்தொழிலதிபரும், எவாங்கலிஸ்ட் மதத்தை சார்ந்தவரும், லூலாவின் போட்டியாளருமான வோல் ஸ்ரீட் முதலீட்டு வங்கியாளர் பிரேசில் மத்திய வங்கித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதுதான். இதில் முன்னாள் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையை அப்படியே நிறைவேற்றியதும் உள்ளடங்கும்.

பன்னாட்டு நிறுவனங்களுக்காக குரல் கொடுத்து வரும் முன்னாள் மெக்சிக்கோ ஜனாதிபதி ஏர்னஸ்டோ - ஜெடில்லோ (Ernesto Zedillo) முதலாளித்துவ பூகோளமயமாதலை பாதுகாப்பவராவார். அவர் லூலா தொடர்பாக, ஆளும் வர்க்கம் என்ன கருதுகிறது என்பதை Forbes Magazine இல் ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியுள்ள முக்கிய கருத்து வருமாறு;

''தற்போது பிரேசில் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், சந்தை மீது சந்தேகப்படும் தரப்பினரினதும், அவரை உற்சாகமாக ஆதரிக்கிற அடித்தள தொண்டர்களின் எதிர்பார்ப்புக்களையும் பொய்யாக்குவார் என்பது எனது உறுதியான உண்மையான நம்பிக்கையாகும் இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் அவரது தேர்தல் வெற்றி மூலம் உற்சாகம் அடைந்துள்ள மற்றும் தங்களது நிலைப்பாடு வெற்றிபெற்றிருப்பதாக மகிழ்ச்சியடைந்துள்ள பரந்த மக்கள் ஆதரவு கொண்ட ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை தருவார்''.

''தேர்தல் பிரச்சாரத்தின்போதும், குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் அவரது நடவடிக்கைகள் மூலமும், தான் முன்னர் கடுமையாக எதிர்த்த கொள்கைகளையே, தற்போது மீண்டும் கடைபிடிக்க வேண்டிய அளவிற்கு மிக வேகமாக மாறிக்கொள்ளும் திறமைபடைத்தவர்.'' இது கேடில்லோவால் லூலாவிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பாராட்டாகும்.

கேடில்லோ மேலும் ''மிகக் கடுமையான பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை லூலா மேற்கொள்ள தவறுவார். இதனால், பிரேசில் நாட்டு நாணயத்தின் மதிப்பு மேலும் பாதாளத்திற்கு சென்றுவிடும். ஏற்கனவே வானுயர வளர்ந்திருக்கும் வட்டி விகிதம் மேலும் உச்சத்திற்கு ஆர்ஜென்டினா சந்தித்தது போன்ற பொருளாதார சீரழிவை பிரேசில் சந்திக்கவேண்டி வரும். பரவலாக நிறுவனங்கள் திவால் ஆகும், மக்களின் வாங்கும் சக்தியை அடியோடு அழிக்கின்ற அளவிற்கு பண வீக்கம் ஏற்படும். வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும், சமுதாய, அரசியல் குழப்பங்களும் மிகப்பெரும் அளவிற்கு உருவாகும். சுருக்கமாக சொல்வதென்றால், நாடே நரகமாகிவிடும்'' என தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் சொல்கிறார், ''நேர்மையோடு சொல்வது என்றால் இதற்கு மாற்று சொர்க்கமல்ல. மக்களிடையே நம்பிக்கையை மீட்டு பிரேசில் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு பரந்த வரவேற்பில்லாத கடுமையான கொள்கைகளை டா சில்வா நிறைவேற்றியாக வேண்டும். அரசாங்க செலவினங்களை அவர் மேலும் குறைத்தாகவேண்டும். சமூக அடிப்படையிலும், அரசியல் ரீதியிலும் பிரச்சனைக்குரிய பகுதிகளில்கூட செலவினங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும். வரிவருவாயை அதிகரிக்கவேண்டும். மத்திய வங்கிக்கு முறையான, பயனுள்ள தன்னாட்சி உரிமை வழங்கப்படவேண்டும். போட்டி போட்டு முன்னேறுகின்ற அளவிற்கு பொருளாதாரத்தில் அடிப்படைகளை திருத்தி அமைக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படவேண்டும். வெளிப்படையாக சொல்வதென்றால், சர்வதேச நாணய நிதியம் (IMF) தந்துள்ள கசப்பான மருந்தைவிட கூடுதலாக, கசப்புள்ள மருந்தை தருவதற்கு டா சில்வா தயாராக இருக்கவேண்டும்'' என்று அந்தக் கட்டுரையை முடித்திருக்கிறார்.

இதற்காகத்தான் லூலா பதவிக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார். அவர் சர்வாதிகார ஆட்சியில் சிறை வைக்கப்பட்ட முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் என்ற மதிப்பை பயன்படுத்தி முந்திய வலதுசாரி அரசுகள் உழைக்கும் வர்க்கத்தினையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் நசுக்குவதற்கு எடுத்த நடவடிக்கைகளைவிட கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அழைக்கப்பட்டுள்ளார்.

பிரேசிலின் வர்த்தக நிர்வாகிகளையும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் இணைந்து உலகச் சந்தையில், பிரேசில் உற்பத்தி செய்யும் பொருட்கள் போட்டி போட்டு விற்பனையைப் பெருக்குவதற்கான திட்டங்களை உருவாக்குவதற்கு புதிய நிர்வாகம், ''சமூக உடன்பாடு'' செய்துகொள்வதற்கு அழைப்புவிடுத்திருக்கிறது. இதனுள் அடங்கியுள்ள ஒடுக்குமுறை சட்டங்களில், ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதை கட்டுப்படுத்தும் சட்டத்தை இல்லாதொழித்தல், ஊதிய விகிதங்களையும் சலுகைகளையும் வெட்டுவது, நாட்டின் ஓய்வு ஊதிய திட்டத்தை சீரமைப்பு செய்வது, பெரிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் அதிகரிப்பது போன்றவை உள்ளன.

உலக சமூக அரங்கின் உச்சிமாநாட்டு நிறுவனர்களில் ஒருவர், டாவோஸ் உச்சி மாநாட்டில் லூலா கலந்துகொள்ளக்கூடாது என்ற பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ''உலகின் துன்பத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் நடத்தும் விருந்து விழாவில் லூலா கலந்துகொள்ளக்கூடாது. ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் இங்கே பிரேஸிலில் பசியால் வாடும் மக்களை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த சில வங்கியாளர்கள் நடத்தும் விருந்தில் தனது புகழை பயன்படுத்த லூலா உதவக்கூடாது. லூலா எதிர்ப்பின் மறுபக்கத்தில் நிற்ககூடாது'' என்று பிரேசில் சமூகவியல் சிந்தனையாளரும், நிலமற்ற தொழிலாளர் இயக்கத்தின் (MST) ஒரு ஆலோசகருமான எமிர் சாதர் (Emir Sader) குறிப்பிட்டார்.

தற்போது அவர் அங்கு (சுவிட்சர்லாந்து) சென்றிருக்கிறார். ''கருணையான பூகோளமயமாக்கல்'' என்பது போன்ற எத்தனை ஜோடனைகள் வார்த்தை ஜாலங்கள் காட்டப்பட்டாலும், பிரேசிலில் சமுதாயக் கொந்தளிப்பு வெடித்துவிடாது தடுக்கவே இந்த அரசு பதவிக்குக் கொண்டு வரப்பட்டதை எவரும் மறைக்க முடியாது. தொழிலாளர் கட்சி (PT) அரசாங்கத்தின் உண்மையான வலதுசாரி கொள்கைகளுடன் பிரேசிலின் தொழிலாளர்களினதும், ஏழைகளினதும் அதிகரித்துவரும் எதிர்பார்ப்புகள் ஆத்திரத்துடன் மோதும் நிலைக்கு தவிர்க்கமுடியாதபடி இட்டுச்செல்லும்.

Top of page