:
செய்திகள் ஆய்வுகள்
:
விஞ்ஞானமும்
தொழில்நுட்பமும்
New DNA research points to origins of dogs
நாயின் பூர்வீகத்தை காட்டும் புதிய டிஎன்ஏ ஆராய்ச்சி.
By Sandy English
14 January 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
மனிதன் முதலில் தனது வீடுகளில் வளர்த்த நாய் 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு
ஆசியாவில் தோன்றியதாக புதிய டிஎன்ஏ ஆராய்ச்சி சான்றுகளை கண்டுபிடித்திருப்பதாக அண்மையில் வெளியிடப்பட்ட அமெரிக்காவின்
முன்னணி அறிவியல் இதழான சயன்ஸ் (Science)
பிரசுரித்திருக்கின்றது.
சுவீடன் நாட்டு றோயல் தொழில் நுட்ப கழகத்தைச் சார்ந்த பீட்டர் சாவானியன்
தலைமையில் ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு, நாய்களின் மைட்டோகான்ரியல் டிஎன்ஏ
(Mitochondrial DNA) பகுதியை ஆராய்ந்தனர்.
இவை ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, மற்றும் வட அமெரிக்காவிலுள்ள ஆர்டிக் மண்டலங்களிலிருந்து 654 பெண் நாய்களுக்கு
மட்டுமே உரிய உடற்கூறு பகுதிகளில் திரட்டப்பட்டவை. இந்த பரிமாணங்களை ஆராய்ந்ததில் இந்த குழுவைச் சார்ந்த
நாய்களில் 95 சதவீத்ததிற்கு மேற்பட்டவை மூன்று மூல பெண் நாய்களை முன்னோர்களாகக் கொண்டவை என்று
கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் கிழக்கு ஆசிய நாய்களிடம் மிகப் பெருமளவிற்கு மரபியல் அணு வேறுபாடுகள் காணப்படுவதாக
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிழக்கு ஆசியப் பகுதிகளில் நீண்ட காலமாக நாய்கள் வாழ்ந்து வருவது
கோடிட்டு காட்டப்படுகிறது.
சாவானியன் குழுவினர் நடத்திய ஆராய்ச்சி அண்மையில் நாய்களின் கூர்ப்பு மற்றும் பரம்பல்
தொடர்பான டிஎன்ஏ ஆய்வுகளை உறுதிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக இதற்கு முன்னர்
UCLA- வைச் சேர்ந்த ஜெனிபர் எ. லியோனார்ட் நாய்களின்
பூர்வீகம் பற்றிய மரபியல் உயிர் அணு (ஜெனிட்டிக்) ஆய்வை மேற்கொண்டிருந்தார். அவர் தனது ஆய்வில் ஆசிய நாடுகளிலிருந்து
தோன்றிய நாய்கள், மனிதர்கள் சைபீரியாவிலிருந்து அலாஸ்காவிற்கு 12,000முதல்-14,000 ஆண்டுகளுக்கு முன்னர்
நிலப்பகுதி, பாலம் வழியாக இடம் பெயர்ந்தபோது அவர்களோடு நாய்களும் சென்றதாக ஆய்வறிக்கை கொடுத்திருந்தார்.
இதற்கு முன்னர் அறிவியல் நிபுணர்கள் மத்திய கிழக்கில் 40,000-ஆண்டுகளுக்கு முன்னர்
நாய்கள் தோன்றியதாக நம்பினர். இதில் நாய்கள் பற்றிய படிமானங்கள் மிகப் பிந்தியவை, மிகப்பெரும்பாலான
வீட்டு நாய்கள் பற்றிய படிமானங்கள் (Fossils)
7,000- ஆண்டுகளுக்கு முற்பட்டவைதான் ஒரே ஒரு வீட்டு நாயின் மண்டை ஓடு மட்டுமே வடக்கு ஆசியப் பகுதியில்
12,000 ஆண்டுகளுக்கு முன்னர் படிமானம் ஆனவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஐரோப்பாவில் 14,000-ஆண்டுகளுக்கு
முந்திய வீட்டு நாயின் தாடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்னர் வடக்கு அமெரிக்காவில் 8500-ஆண்டுகளுக்கு
முந்திய படிமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இப்படி நாய்களின் வரலாற்றுக்கு முந்தைய காலத்து அத்தியாயங்கள் கிடைக்கவில்லை. எப்போது
எங்கு ஓநாய்களிலிருந்து (Canis lupus) நாய்கள்
(Canis familiaris) உருவாகின என்பதற்கு
உரிய தோற்ற பதிவேடுகள் எதுவும் இல்லை. புதிய டிஎன்ஏ ஆராய்ச்சியானது மானுடவியல் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றுக்கு
முந்திய காலத்து வரலாற்று ஆய்வாளர்கள் ஆகியோர் ஏன், எப்படி, நாய் உருவாயிற்று என்பதை அனுமானிப்பதற்கு
வழிவகைகளை உருவாகியுள்ளன. நாய்களின் கூர்ப்பு பற்றி எத்தனையோ வகையான அனுமானங்கள் உருவாகலாம். இதில்
புதிய சான்றுகள் மூலம் சில ஆர்வத்தைக்கிளறும் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
மனிதன் தோன்றுவதற்கு முந்திய வரலாற்றில் ஒரு குறுகிய கால எல்லையில் நாய்கள்
உருவாகிய கால அளவை மெஸோலித்திக் (Mesolithic)
காலம் என்றழைக்கிறார்கள். இந்தக்காலம் மனிதன் காட்டு விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த நீண்ட
பலேயோலித்திக் (Paleolithic) காலத்திற்கும்
வேளாண்மை செய்து விலங்குகளை அடக்கிய நியோலித்திக் காலத்திற்கும் இடைப்பட்ட காலமாகும். நியோலித்திக்
(Neolithic) காலத்தில் வேளாண்மையும் பிராணிகளை
வீட்டில் வளர்க்கும் நிலையும் பரவலானது. மெசோலித்திக் (Mesolithic)
காலத்தில் வேட்டையாடுவதற்கு கூர்மையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. ஈட்டி எறிதல், வில், அம்பு முதலியவை,
12,000 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தக் காலத்தில்தான் பனியுகம் முடிவிற்கு வந்தது. உலகம் பூராவிலும் பனிப்பாறைகள்
உருகி வந்ததால் விலங்குகள், செடிகொடிகளின் தன்மையில் பெரும் மாற்றங்கள் உருவாகின. இந்தக் காலத்தில் ஆசியாவிலும்
வடக்கு அமெரிக்காவிலும் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்த மிகப்பிரம்மாண்டமான மிருகங்கள் (ராட்சத மிருகங்கள்)
அழிந்து விட்டன. ஆனால் இவை நாய்களுக்கு முந்தியவை.
இந்த ''மெசோலித்திக் புரட்சியின்'' ஒரு பகுதிதான் நாய் என்று புதிய சான்றுகள்
சுட்டிக்காட்டுகின்றன. நாய்கள் மூலம் மனித இனத்திற்கு சில அனுகூலங்கள் கிடைத்தன. ஏனெனில் நாய்கள் மாமிசம்
உண்பவை. மனிதன் சுற்றுப்புறச் சூழலை நாசப்படுத்துவதற்கு எதிரிகள் வேட்டை மூலம் கிடைப்பதன் அளவைப் பெருக்குவதற்கு
நாய்கள் உதவி இருக்கக்கூடும். வேறு பலகாரணங்களாலும் நாய்கள் வீட்டு விலங்காக ஆக்கப்பட்டிருக்கலாம். நாய்கள்
காவலுக்கு பயன்படுத்தப்பட்டன, நாய்களையே உணவாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள், நாய்களை சுமை இழுக்கும்
பிராணியாகவும் பயன்படுத்தியுள்ளார்கள். நாய்கள் மிக வேகமாக மனிதர்கள் வாழும் பெரும்பாலான இடங்களுக்கு விரைவாகப்பரவின
என்பது புதிய ஆராய்ச்சி மூலம் கிடைத்த முடிவாகும்.
நாய்கள், வீட்டு விலங்குகள் இனத்தைச் சார்ந்தது. மனித இனத்தோடு வாழ்ந்ததன்
விளைவாக, தங்களது இயல்புகளையே மாற்றிக்கொண்டுள்ளன. நடவடிக்கைகளிலும் மரபியல் அடிப்படையிலும் நாய்கள்
தங்களது இயல்புகளை மற்றிக்கொண்டே வந்தன. நாய்கள் தற்போது மனித சமுதாயத்திற்கு வெளியில் நாய்களாக
இருக்கவில்லை.
நாய்கள் மனித கலாச்சாரத்தின் மீது பரஸ்பர பாதிப்பினை ஏற்படுத்தி இருந்ததுடன்,
இன்னும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன. நாம் அறிந்ததுபோல், வீட்டு மிருகங்களாக விலங்குகளையும் தாவரங்களையும்
வளர்க்காமல் சமூகமானது அபிவிருத்தியடைந்திருக்க முடியாது. நாய்கள்தான் முதலாவதாக வீட்டு விலங்காக ஆக்கப்பட்டவை.
மனிதனுக்கும் நாய்க்குமான பொருளாயத உறவு எப்படி ஆழமாக இருக்கிறது என்பதனை
சயன்ஸ் பத்திரிகையின் அதேபதிப்பில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மற்றொரு ஆய்வு முடிவும் சுட்டிகாட்டி
பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. 9-வார நாய்குட்டிகள், ஏனைய விலங்குகள் அனைத்தையும் விட, மனிதனுக்கு மிக நெருக்கமான
மனிதக்குரங்கு போன்ற இதர விலங்குகளையும் விட, மனிதனது நடவடிக்கைகளுக்கே அதிகமாக காது கொடுக்கிறது.
பிரெடெரிக் ஏங்கெல்ஸ், விலங்கினங்கள் பற்றி கூறியதை நாம் புறக்கணித்து விட
முடியாது. அவர் தனது மிகப்பிரபலமான, ''மனிதக்குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பின் பங்கு'' என்ற தலைப்பில்
அவர் எழுதியது வருமாறு: ''நாயும், குதிரையும் மனிதனுடன் தொடர்பு கொண்டதைத்தொடர்ந்து பேச்சு மொழியைப்
புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொண்டன. எந்த மொழியையும் அவை புரிந்து கொள்ளும் வல்லமையை அவை
வளர்த்துக்கொண்டன. மனிதனுக்கு நன்றி காட்டும், அன்பு செலுத்தும், பண்பை வளர்த்துக்கொண்டன. மனிதனோடு பழகுவதற்கு
முன்னர், இதுபோன்ற இயல்புகள் நாய்களுக்கும், குதிரைகளுக்கும் இல்லை. பேசும் வல்லமை இல்லையே என்ற உணர்வு
விலங்கினங்களுக்கு உண்டு. இதைச்சரிக்கட்ட முடியாது.
Top of page
|