World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்க

Washington Post
columnist Michael Kelly red-baits the Workers World Party

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் மைக்கேல் கெல்லி உலக தொழிலாளர் கட்சி மீது காட்டும் கம்யூனிச பூச்சாண்டி

By David Walsh
24 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

வாஷிங்டன் போஸ்ட் விமர்சகர் மைக்கேல் கெல்லி ஜனவரி 22, 2003 இதழில் உலக தொழிலாளர் கட்சியை பழிவாங்கும் நோக்கில் ''ஸ்ராலினிஸ்ட்களுடன் பயணம்'' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரை யாராவது ஒரு வலதுசாரி மோசடிக்காரர் அல்லது வேறொருவர் இந்தப் பணியை செய்ய இணைந்துள்ளார்கள்.

கெல்லி எப்போதுமே ஆத்திர உணர்வும், நிரந்தரமாக அறியாமையில் இருப்பவருமாவார். சென்ற வாரம் வாஷிங்டனிலும், சான்பிரான்ஸிஸ்கோவிலும், ஈராக்குடன் நடைபெறவிருக்கும் போரில் கண்டனம் தெரிவிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தினை, ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த பிரதான அமைப்பான ANSWER (Act Now to Stop War and End Racism) இனை, ''கம்யூனிச உலக தொழிலாளர் கட்சியின் முன்னோடி குழு'' என்று வர்ணிக்க பயன்படுத்தியுள்ளார்.

உலக தொழிலாளர் கட்சியை சீனாவோடும், வடகொரிய ஆட்சியோடும், சதாம் ஹுசெனோடும், சுலோபோடான் மிலோசிவிக்கோடும், ''ஈரானின் முல்லாக்கள் கொலம்பியா போதை பொருட்கள் கடத்தும் கும்பல்கள் மற்றும் பஸ்களில் குண்டுவீசி தாக்கும் ஹமாஸ்'' உடன் தொடர்புபடுத்துகிறார். இங்கு அவர் பயன்படுத்துகின்ற காரணம் இவ்வாறு பழிவாங்குபவர்கள் நீண்ட காலமாக பயன்படுத்துகின்ற ஒருமுறைதான். இது அதிகபட்ச அச்சத்தையும், குழப்பத்தையும் உருவாக்கும் ஒரு கூட்டாகும்.

இப்படி விஷமத்தனமாக உலகத் தொழிலாளர் கட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதல், கருத்து கருத்துக்கணிப்புக்கள் உறுதிப்படுத்திய அண்மையில் நடைபெற்ற கண்டனப் பேரணிகளில் மிகப்பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டதனால் அமெரிக்க ஊடகங்களுக்கு உள்ளேயும், அரசியல் ஆதிக்க குழுவிலும் நிலவுகின்ற பீதி உணர்வின் வெளிப்பாடுதான். புஷ் நிர்வாகத்தின் போர் வெறி பிரகடனங்கள் வெளிநாடுகளிலும், மற்றும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு பொதுமக்களிடையே அதிருப்தி வளர்ந்துவருவதையும், அரசியல் கட்டமைப்பு தனிமைப்படுத்தப்பட்டு வருவதை கெல்லி தெளிவாக உணர்ந்துதான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். அவரது வகையைச் சார்ந்தவர்களது அரசியல் மற்றும் புத்திஜீவித சீரழிவை இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகிறது. எனவேதான், நீண்ட நெடுங்காலமாக பரிசோதிக்கப்பட்ட அடைக்கலமான அமெரிக்க போக்கிரித்தனமான கம்யூனிச பூச்சாண்டியை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.

ஸ்ராலினிசம் என்ற சொல்லை மார்க்சிஸ்ட் பயன்படுத்தும்போது, அதற்கு திட்டவட்டமான பொருள் உண்டு. அது 1917- அக்டோபர் புரட்சியை நடத்திய தொழிலாளர் மற்றும் விவசாயிகளிடமிருந்து அரசியல் அதிகாரத்தை பறித்துக்கொண்ட, 1920 களில் சோவியத் யூனியனில் உருவாகிய தேசிய சந்தர்ப்பவாத அதிகாரத்துவத்தின் தத்துவத்தையும், நடைமுறைகளையும்தான் மார்க்சிஸ்ட்டுகள் ஸ்ராலினிசம் என்பதற்கு விளக்கமாக தருவார்கள். இறுதி ஆய்வுகளில், பொருளாதார ரீதியில் பின்னடைந்ததும் மற்றம் தனிமைப்பட்ட தொழிலாளர்களின் அரசு மீது உலக ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்தை பிரதிபலித்ததன் மூலம் சர்வதேசரீதியில் எதிர்புரட்சி பாத்திரம் வகித்தது. உருவாகிக்கொண்டிருந்த சோவியத் ஜனநாயகத்தின் கழுத்தை ஸ்ராலினிசம் நெரித்ததனூடாக அதனுடைய இறுதிப் பரிமாணமான அக்டோபர் புரட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகள் சிதைக்கப்பட்டதுடன், முதலாளித்துவம் மீண்டும் புனரமைக்கப்பட்டது.

தங்களது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டிகொள்வதற்காக ஸ்ராலினிச தட்டு 30களில் புரட்சியை முன்நின்று நடத்திய அன்றைய தலைமுறை சோசலிஸ்ட்டுகளை இரத்தத்தில் மூழ்கடித்ததுடன், ட்ரொட்ஸ்க்கி தலைமையில் அவரது கருத்துக்களை ஏற்று செயல்பட்ட மார்க்சிஸ்ட்டுகளை ஸ்ராலினிசம் தீர்த்துக்கட்டியது.

உலக சோசலிச வலைத்தளம், தொழிற்சங்க அதிகாரத்துவம், அமெரிக்க ஜனநாயகக் கட்சி மற்றும் சர்வதேச அளவில் அதிகாரத்துவ, முதலாளித்துவ தேசியவாத அரசாங்கங்கள் தொடர்பான உலக தொழிலாளர் கட்சியின் அணுகுமுறையை கண்டிக்கிறது. எங்களது கருத்து வேறுபாடுகள் ஆழமானதுடன், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதுடன், அமெரிக்க மற்றும் சர்வதேச உழைக்கும் வர்க்கத்திற்கான ஒரு புரட்சிகர மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான முக்கிய கருத்துக்களிலும் எங்களுக்கு வேறுபாடுகள் உண்டு.

இந்த வேறுபாடுகளை விரிவாக்குவதற்கும், விளக்கம் தருவதற்கும், நேரமும், இடமும் இருக்கின்றது. ஆனால், கெல்லியும், அவரைப்போன்ற கருத்து ஒற்றுமை உள்ளவர்களும் பிற்போக்குவாதத்திற்கு பணியாற்றும் அரசியல் போக்கிரிகளாக செயல்பட்டு வருகின்றனர். உலக தொழிலாளர் கட்சி மீதான அவரின் கம்யூனிச வெறுப்பிற்கு முன்னால், நாங்கள் அக்கட்சியை எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் பாதுகாக்கின்றோம்.

கெல்லி தனது கட்டுரையில் 2001 செப்டம்பர் 11 திகதி நிகழ்ச்சி மனித சமுதாயத்தின் வரலாறில் திருப்புமுனை என்று பின்வருமாறு கூறுகிறார். ''அல்கொய்தா, மற்றும் தலிபான் மேலும் சதாம் ஹுசெனின் ஈராக்கினால் நமது சுதந்திர உரிமைகள் கொண்ட மனித சமுதாயம் ஒரு எதிரியை சந்திக்கிறது. சுதந்திர தாகத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் எதிரான, தீங்குகளை இந்த எதிரி முன்னிலைப்படுத்துகின்றது. இதில் இடதுசாரிகள் செய்யப்போவது என்ன? இது நேரடியான அழைப்பு என்று நீங்கள் கூறலாம். அமெரிக்காவிடமும் சில தவறுகள் உண்டு. போர் என்று வரும்போது ஏதாவது ஒரு தரப்பை தேர்ந்தெடுத்துத் தான் ஆகவேண்டும், அமெரிக்கத் தரப்பு என்பது, தனி மனித சுதந்திர உரிமைகள், முற்போக்கு, ஜனநாயகம், சுதந்திரம் போன்றவற்றை பாதுகாப்பதும், ஒரு பால்சேர்க்கையினரை தண்டிப்பதல்ல, பாலியல் குற்றம் புரிந்தவர்களை கல்லால் அடித்துக் கொல்வதல்ல, பேச்சுரிமைக்காக குரல் கொடுப்போரை சித்தரவதை செய்வதல்ல, நகரின் சதுக்கத்தில் பெண்களுக்கு சவுக்கடி கொடுப்பதல்ல, சிறுபான்மை மக்களை விஷ வாயு செலுத்திக்கொல்வதல்ல. இவை முன்னாள் இடதுசாரியான Christopher Hitchens இன் வார்த்தைகளின் படி இஸ்லாமிய பாசிஸ்ட்டுகளுக்கு உரித்தானதாகும் ''.

இவ்வாறு ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் சேர்த்து குழப்பி, பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார். அல்கொய்தா மற்றும் தலிபானை ஈராக்கின் பாத் கட்சி ஆட்சியோடு மோசடியாக தொடர்புபடுத்துகிறார். உலக சோசலிச வலைத்தளம் அந்த முதலாளித்து தேசியவாத ஆட்சிக்கு எந்தவிதமான அரசியல் ஆதரவும் தரவில்லை. ஆனால், அந்தக் முதலாளித்து தேசியவாத கட்சியையும், செப்டம்பர் 11 தாக்குதல்களையும் சம்பந்தப்படுத்தும் எந்த ஆதாரத்தையும் எவரும் தாக்கல் செய்யவில்லை. எனவேதான், இந்தக் கட்டுரையை மோசடியானது என்று எடுத்துக்காட்டப்படுகின்றது.

இஸ்லாமிய தீவிரவாதம் ''தாராளவாதம் எதிர்த்த ஒவ்வொரு தீங்கையும்'' முன்னிலைப்படுத்துவதாக பிரதிநிதித்துவபடுத்துவதாக கெல்லி கருதுவாரானால், கடந்த நூற்றாண்டில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே கடைபிடித்துக் கொள்கை, குறிப்பாக எழுபதுகளின் கடைசியிலிருந்து கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை மத்திய கிழக்கில் மதச்சார்பற்ற தேசிய சக்திகளை எதிர்க்கும் நோக்கத்தோடு ஒசாமா பின்லேடன் மற்றும் அவரது கூட்டாளிகள் போன்ற பிற்போக்கு சக்திகளுக்கு தூண்டுதலாகவும், பணம் கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் உதவும் வகையில் செயல்பட்டது ஏன் என்பதையும், சோவியத் யூனியன் நிலைகுலைய செய்யும் குறிக்கோளுடன் இரண்டு கட்சிகளுமே கொள்ளைகளை வகுத்து செயல்பட்டது ஏன் என்று கெல்லி விளக்கவேண்டும்.

சதாம் ஹுசெனை பொறுத்தவரை இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் இடதுசாரி இன்றைய தீவிர வலதுசாரியான கிச்சன்ஸ் ஒப்புக்கொண்டுள்ள தகவலையே தருகிறோம். ''சதாம் ஹுசெனை பதவியில் அமர்த்திய ஆட்சிக் கவிழ்ப்பு புரட்சியில் அமெரிக்காவிற்கு பங்கு உண்டு. ஈரான் மீது தாக்குதல் நடத்த அவரை அமெரிக்கா ஊக்குவித்தது. குர்திஸ்தான் பகுதியில் அவர் படுமோசமாக நடவடிக்கைகள் எடுத்த நேரத்தில் வாஷிங்டன் அவரது சிறந்த நண்பராக விளங்கியது. குவைத் எல்லையை பிடித்துக்கொண்டு தனது ஆதிக்கத்தை விரிவாக்க முயன்றபோது சதாம் ஹுசெனுக்கு அமெரிக்கா பச்சைக் கொடி காட்டியது.''

இரசாயன, உயிரியல் அடிப்படையிலான ஆயுதங்கள், ஈராக் ஆட்சி தயாரிப்பதற்கு அமெரிக்கா எல்லா அடிப்படை உபகரணங்களையும் வழங்கியதுடன், 1980 களில் ஈரானிய படைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை குர்திஸ்தான் மக்களுக்கு எதிராகவும் அதே ஆயுதங்களை பயன்படுத்திய நேரத்தில் அமெரிக்கா பார்த்துக்கொண்டிருந்தது.

கெல்லி நடத்தி இருக்கும் அர்ச்சனையில் அமெரிக்க போர் முயற்சியின் உயிர் நாடியான ஈராக் ஆட்சியை கைப்பற்றி 'எண்ணெய்' வளத்தை பிடிப்பதுதான் நோக்கம் என்ற ஒரு வார்த்தை காணாமல் போய்விட்டது. அந்தச் சொல்லை அவர் பயன்படுத்தியிருந்தால், வரலாற்று காலம் தொட்டு ஒடுக்கப்பட்டு வந்த முன்னாள் காலனிக்கு எதிராக, கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய போரை நடத்துவதற்கு அமெரிக்கா தயாராகிறது, என்ற உண்மை அம்பலமாகிவிடும் என்பதற்காகவே அந்தச் சொல்லை விட்டுவிட்டார்.

''சுதந்திர உரிமைகள்'', ''முற்போக்கு'', ''சுதந்திரம்'' ஆகிய உன்னதமான கொள்கைகளின் அடிப்படையில் தானே ஆப்கானிஸ்தான் படை எடுப்பு நடந்தது? யார், யாரை கேலி செய்வது, தலிபான் ஆட்சிக்குள் இருந்துபோல்தானே இன்றைய ஆப்கானிஸ்தான் மிக மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு யுத்த குழுவின் தலைவர் போய், இன்னொரு யுத்தக்குழுவின் தலைவர் வந்திருக்கிறார்கள். மற்றம் சவூதி அரேபியா ஆட்சி தலிபான் போன்ற ஒரு வகையான இஸ்லாமிய தீவிரவாதத்தை பின்பற்றுகின்ற பிற்போக்கு ஆட்சி தானே? அந்த ஆட்சியை அமெரிக்கா தலைமுறை, தலைமுறையாக பாதுகாத்துவருவது ஏன்? இப்படியான நடவடிக்கைகளைஅமெரிக்க ஏகாதிபத்தியம் உலகெங்கும் மேற்கொண்டு வருகிறது.

போலீஸ் அரசு ஆட்சிகள், அவர்கள் கூலிக்கு அமர்த்திய கொலைக்காரர்கள், மற்றும் சித்ரவதைக்காரர்களுக்கும், தென்கொரியாவிலும், தைவானிலும், ஈரானின் ஷாவிற்கு பத்தாண்டுகளாக மத்திய புலனாய்வுத்துறை (CIA) மூலம் வாஷிங்டன் இரும்புத்தூணாக ஆதரவு தந்து வந்தது. மத்திய அமெரிக்காவின் ''கொலைப்படைகளுக்கும்'' மற்றும் சிலி, ஆர்ஜன்டினாவில் இராணுவக் கொலைக்காரர்கள் ஆகியோருக்கு அமெரிக்க முக்கிய ஆதரவாளராக இருந்தது.

அமெரிக்க அரசும் அந்நாட்டு இராணுவமும்தான் நேபாம் மற்றும் ஏஜென்ட் ஒரஞ்ச் (Agent Orange) என்கிற விஷ குண்டுகளை அறிமுகப்படுத்தின. ''ஒரு கிராமத்தை காப்பாற்றுவதற்காக அதை அழிக்கிறோம்'' என்கிற புதிய விளக்கத்தையே நவீன அகராதியில் சேர்த்ததே அமெரிக்கா தான். அந்த வார்த்தை சேர்க்கப்பட்ட காலம், 30 இலட்சம் மக்கள் பலியான தென்கிழக்கு ஆசியாவில் போர் நடந்த தருணமாகும்.

1991-ல் நடைபெற்ற வலைகுடாப் போரில் திருப்தி அடையாமல், மேலும், பொருளாதார தடை நடவடிக்கைகளால், 5 இலட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மடிவதற்கு காரணமாகயிருந்ததில் திருப்திப்படாமல் வாஷிங்டன் தற்போது பாதுகாப்பற்ற நிலையிலிருக்கும், ஈராக் மீது மற்றொரு போரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது இதனால் மேலும் பலமடங்கு துயரம்தான் ஏற்படும். கெல்லியின் ''ஜனநாயகம்'' ''முற்போக்கு'' என்பதற்கு பின்னால் இருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் கொள்கைகளாகும்.

அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பவர்களுக்கும் மக்களது புதிய பரந்த எதிர்ப்பு உணர்வு வெடிக்கலாம் என்ற அச்சுறுத்தலுக்கும் பதிலளிக்கும் வகையில் அந்தக் கட்டுரையாளர் இடதுசாரிகள் மீது சேற்றை வாரி வீசுகிறார். எதிர்ப்பை அடக்குவதற்கும், அச்சுறுத்துவதற்கும் தான் அவ்வாறு செய்திருக்கிறார். தற்போது கெல்லி கடைபிடித்துள்ள முறை அமெரிக்காவின் தென்பகுதிகளின் சிவில் உரிமைகளுக்காக கிளர்ச்சிகள் நடந்தபோது அதற்கு எதிராக இனவெறியர்கள் பயன்படுத்திய அதே முறைகள்தான் எதிர்ப்பாளர்கள் அனைவரையும், ''வெளியிலிருந்து வரும் கிளர்ச்சியாளர்கள்'' என்று குற்றம்சாட்டுவதுதான்.

அமெரிக்க ஆதிக்க சக்திகளின் சேவையில் அமர்த்தப்பட்டுள்ள பல பத்திரிகை குண்டர்களில் கெல்லியும் ஒருவர். இவரைப்போன்று கிராத்தமர்ஸ், கவுன்டர்ஸ், சோவல்ஸ், வில்ஸ் (Krauthammers, Coulters, Sowells, Wills) போன்ற பலர் உள்ளனர். இவர்கள் பரந்த பொதுமக்களுக்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் எதிரானவர்கள் வரிசையிலிருந்து வடிகட்டி ஆதிக்க சக்திகள் பயன்படுத்திக்கொள்ளும் பத்திரிக்கையாளர்களாவர். அவர்கள் அவர்களது சேவைக்காக நல்ல ஊதியம் பெறுகின்றனர். தினசரி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகின்றனர். சேற்றை வாரி வீசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கொள்கை அடிப்படையிலோ, அல்லது அறிவுபூர்வமாகவோ விவாதம் நடத்துவதற்கு திறமை எதுவும் அற்றவர்கள். அவர்களுடன் உரையாடுவதற்கே எதுவுமில்லை. இவர்கள் அரசியல் எதிர்ப்பின் எதிர்ப்பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

Top of page