World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan peace talks run into difficulties over LTTE disarmament

தமீழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்குவது சம்பந்தமாக ஸ்ரீலங்கா சமாதானப் பேச்சுவார்த்தையை நெருக்கடிகுள்ளாகியுள்ளது

By K. Ratnayake
18 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

நான்காவது கட்ட ஸ்ரீலங்கா சமாதானப் பேச்சுவார்த்தை üனவரி 6-9 இல் தாய்லாந்தில் நடைபெற்றது. தொடர்பு சாதனங்களால் "பாரிய வெற்றி" என புகழப்பட்ட சமாதான நடவடிக்கை இதற்கு முந்திய மூன்று சுற்றுவட்டங்கள் போலல்லாதது மிகவும் நெருக்கடியை சந்தித்ததுள்ளது. இராணுவத்தினுடைய உயர் பாதுகாப்பு வலயங்களினுள் (HSZ) அகதிக் குடும்பங்களை திரும்ப குடியமர்த்துவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்குவது சம்பந்தமாக இராணுவத்தின் கோரிக்கையால் கூர்மையான கருத்து வேற்றுமைகள் தோன்றியுள்ளன.

இப் பிரச்சனை குறிப்பாக சிக்கலான ஒன்றாகும். போர் நடந்த காலத்திலே நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தளங்களையும் தனது சகல முக்கிய மையங்களையும் சுற்றி ஸ்ரீலங்கா இராணுவம் பாரிய உயர் பாதுகாப்பு வலையங்களை விஸ்தரித்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தடுப்பதன் நோக்கமாக, ஆயிரக்கணக்கான தமிழ்மக்களை தங்கள் நிலங்களையும் வாழ்க்கைக்கு தேவையானவற்றையும் இழந்த நிலையில் இராணுவம் வெளியகற்றியது. யாழ் குடாநாட்டில் மட்டும் 160 கிலோ மீற்றர் பரப்பளவு அல்லது முழு நிலஅளவின் 18 வீதத்தை அடக்கிய 15 உயர் பாதுகாப்பு வலையங்களை பாதுகாப்பு படையினர் விஸ்தரித்திருந்ததுடன் கிட்டத்தட்ட 130,000 மக்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து அகற்றியுள்ளனர்.

கடந்த வருடத் தொடக்கத்திருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்திருக்குமிடையில் ஒர் சம்பிரதாய முறைப்படியான போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது, ஆனால் புலம் பெயர்ந்த குடும்பங்கள் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதிகரித்துவரும் மனக்கசப்பிற்கு பதிலளிக்கும் முகமாகவும் அகதிகளினதும், அவர்களுக்கு சார்பானவர்களினதும் சிறிய ஆர்ப்பாட்டங்களுக்காகவும் போர்நிறுத்த உடன்படிக்கைகளின் முறைகளை கடைப்பிடிக்க தவறியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பு அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளது.

டிசம்பர் கடைசியில் இராணுவம், தனது யாழ்ப்பாண கமாண்ட் மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா வின் அறிக்கையுடன் பதிலளிக்கையில் குறிப்பிட்டதாவது, எல்.ரீ.ரீ.ஈ "தனது போராளிகளையும் நீண்ட தூர பாவனைக்கான ஆயுதங்களையும் நிராயுதபாணியாக்குவதற்கு" சம்மதித்தால் மட்டுமே மக்களின் மீள் குடியேற்றம் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நடப்பதற்கு கருத்தில் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகையில் "மாற்றத்தையோ அல்லது அபாயம் ஏற்படக் கூடிய செயல்களை" எடுக்க வேண்டாம் எனவும், அப்படி செய்வதனால் "உயர் பாதுகாப்பு வலையங்களை சேதப்படுத்துவதுடன்" பாதுகாப்பையும் பலவீனமாகும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து உடனடியான எதிர்ப்பை உருவாக்கியதுடன் டிசம்பர் 28 தனது அறிக்கையில் "தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளை நிராயுதபாணியாக்குவதும், ஆயுதங்களை இல்லாதொழிப்பதும் பற்றி பேச்சு வார்த்தைக்கு இடமில்லை" என கூறியுள்ளது. சமாதான போக்கை ஸ்ரீலங்கா இராணுவம் "மூழ்கடிக்க" முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு முன்னய பேச்சு வார்த்தை கூட்டங்களில், தமிழீழ விடுதலைப் புலிகள் தனது தனி தமீழீழ அரசிற்கான கோரிக்கையை கைவிட்டதுடன் தீவின் கிழக்கு வடக்கு பகுதியில் வரையறுக்கப்பட்ட சுயாட்சிக்குப் பதிலாக சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார சீர்திருத்த கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதிமொழி கூறியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாக நிராயுதபாணியாக்கப்பட்டால் எப்படியோ, தொடர்ந்து வரும் பேச்சு வார்த்தைகளில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் பிரமுகர்களிடையே ஆட்சியை பங்கிடும் முன்னேற்பாடுகளில் எந்தவித நெம்புகோலும் இல்லாததாகப் போய்விடும். BBC இற்கு பாலசிங்கம் கருத்து தெரிவிக்கையில்: "(எங்களுடைய ஆயுதம் தரித்த) பகுதியினர் இப்பொழுது யுத்தநிறுத்தத்தை கடைப்பிடிக்கின்றனர், ஆனால் அவர்கள் ஒரு பேரம் பேசும் பலமுமாகும்...." என குறிப்பிட்டார்.

கொழும்பிலிருந்து எந்த அரசியல் உத்தரவாதம் இதற்கு கிடைப்பதற்கு முன்னரே குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து, இதனது இறுதியாக பேரம் பேச பாவிக்கும் பிடியையும் கூட கை விடுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக அழுக்கத்துக்குள்ளாகியுள்ளது ஸ்லோவில் இறுதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் இடம் பெற்ற சர்வதேச உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில், அமெரிக்க அரச உதவிச் செயலாளரான றிச்சாட் ஆர்மிராஜ் (Richard Armitage), தமிழீழ விடுதலைப் புலிகள் "பயங்கரவாதத்தையும், வன்முறையையும் கைவிட்டுவிட்டதாகவும், தனி அரசிற்கான பிரிவினைவாத ஆயுதப்போராட்டத்தையும் கைவிட்டுவிட்டதாக வெளிப்படையாக கூறவேண்டும்'' எனவும் வலியுறுத்தினார்.

நிச்சயமாக, ஓர் சம்பிரதாய முறைப்படி வன்முறைகளை விட்டொழித்தல் நிராயுதபாணியாக்குவதற்கான கோரிக்கையுடன் தொடரும் என தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நன்றாகவே தெரியும். அரசியல் உடன்பாட்டின் தன்மை தெளிவாக தெரியும் நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து கீழ்நோக்கிய பாதையில் அடியெடுத்து வைக்கும் என பாலசிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். எப்படியிருந்தாலும் பரந்தளவில் தொடர்பு சாதனங்களில் குறிப்பிட்டு காட்டப்பட்ட ஆர்மிராஜின் தலையீட்டுடன் சுட்டிக்காட்டுவது என்னவெனில், ஸ்ரீலங்கா இராணுவம் உயர் பாதுகாப்பு வலையப் பிரச்சனையை பாவித்து தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணி ஆக்குவதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறது.

நான்காவது கட்டப் பேச்சுவார்த்தை தொடக்கத்தில் ஓர் அடையாளத்திற்கான எதிர்ப்பாக எல்.ரீ.ரீ.ஈ யின் முக்கிய பேச்சாளரான பாலசிங்கம் "எல்.ரீ.ரீ.ஈ மோதல் தவிர்ப்பு மற்றும் ஆயுதக் களைவு உபகுழுவில் (De-escalation and Normalisation SDN) பங்கு கொள்ளமாட்டாது என அறிவித்தார். இக் குழுவானது பாதுகாப்பு செயலக செயலாளரான ஒஸ்ரின் பெர்னான்டோவும் எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்கு மாகாண இராணுவத் தலைவரான வீ.முரளீதரனின் கூட்டுத்தலைமையில் எல்.ரீ.ரீ.ஈ யின் போராளிகளுக்கிடையேயும், பாதுகாப்பு படையினரிடையேயும் உறவுகளை சாதாரணமாக்கவும், அத்துடன் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சனைகளையும் கவனிப்பதற்கு பொறுப்பாகவுள்ளது.

பாலசிங்கத்தினுடைய அறிவிப்பு பேச்சுவார்த்தையை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. எல்.ரீ.ரீ.ஈ யின் பின்வாங்கலை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பின் பிரதான பேச்சாளரான ஜி.எல். பீரிஸ் கூறினார். ஆனால் இப்பேச்சுவார்த்தைக்கு நடுநிலைமை வகிக்கும், நோர்வேஜிய பிரதிப் பிரதம மந்திரி விடார் கெல்கசன் (Vidar Helgessen) "உப கமிட்டியின் திட்டங்களை தொடர்வதற்கு கட்சியினர் எந்தவொரு உடன்பாட்டையும் அணுக முடியவில்லை" என ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. பேச்சு வார்த்தையில் முறிவினை தவிர்ப்பதற்கு எல்.ரீ.ரீ.ஈ உயர் பாதுகாப்பு வலையப் பிராந்தியங்களில் மீள்குடியேற்றப் பிரச்சனையை பின்தள்ளிப்போட அனுமதித்துள்ளது.

தமது முகத்தை பாதுகாப்பதற்கு, உயர் பாதுகாப்பு வலையப் பிராந்தியம் சம்பந்தமாக சர்வதேச தேர்ச்சி பெற்றவரின் அறிக்கை ஒன்றுற்கு இரு தரப்பினரும் பொறுத்திருப்பதற்கு சம்மதித்துடன் சச்சரவு குறைந்த பிரச்சனைகளுக்கு நகர்ந்துள்ளனர். உயர் பாதுகாப்பு வலையங்களை தவிர்ந்த ஏனைய பிராந்தியங்களுக்கு கிட்டதட்ட 250,000 இடம் பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்துவதற்கான ஓர் திட்டம் வரையப்பட்டுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் புனருத்தான வேலைகளுக்கான சர்வதேச நிதி உதவியை நிர்வகிப்பதற்கான ஒரு அமைப்பாக உலக வங்கியை எல்.ரீ.ரீ.ஈ இனரும் கொழும்பும் ஏற்றுக்கொண்டுள்ளன.

தீர்மானங்களில் ஒருமைப்பட்டு இருப்பதாக இரு முக்கிய பேச்சாளர்களும் வெளியில் காட்ட தள்ளப்பட்டனர். இங்கே எதுவித "தடங்கலோ அல்லது முறிவுகளோ சமாதானப் பேச்சு வார்த்தையில் இல்லை இரண்டு தரப்பினருமே பேசுவதற்கு உடன் பட்டுள்ளோம்" என பீரிஸ் செய்தியாளர்களுக்கு தெரிவித்தபோது, பாலசிங்கம் சரியென ஒத்துக்கொண்டார். ஆனால் எதுவித பிரச்சனையுமே தீர்க்கப்படவில்லை. மேலும் அடிபணிவதற்கு சகலதையும் எல்.ரீ.ரீ.ஈ வெளிப்படையாகவே கொடுப்பதற்கு உள்ளது. தனது ஆயுதங்களை கையளிப்பது தற்பொழுது வெளிப்படையாகவே நிகழ்ச்சி நிரலில் இடப்பட்டுள்ளது.

ஒருதரப்பான நிராயுதபாணியாக்கல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பக்கம் ஒரு தரப்பான நிராயுதபாணியாக்குதலாக கோரப்பட்டது என்னவெனின் கொழும்பு பாதுகாப்பு படையினரிடம் எல்லாபொறுப்பையும் கைவிடுவதுடன், அவர்களுடைய எல்லா ஆயுதங்களை வடக்கிலும் கிழக்கிலும் அப்படியே விட்டு விடுவதாகும். "சன்டே லீடர்" பத்திரிகைக்கு பாலசிங்கம் பலமற்ற முறையில் "இராணுவ கட்டிடங்களையோ, இராணுவ தளங்களையோ, ஆயுதபடைகளையோ இல்லாதொழிக்குமாறு நாம் கேட்கவில்லை....... நாம் இராணுவத்தினரை பின்வாங்குமாறு கேட்கவில்லை'' என முறைப்பாடு செய்தார்.

மேலும், சமாதானப்பேச்சு வார்த்தை நடக்கையிலும் கூட, அரசாங்கம் தனது இராணுவத்தை இப்பொழுதும் கட்டியெழுப்பியபடி உள்ளது. இவ்வருட இராணுவ செலவுத் திட்டம் 50 பில்லியன் ரூபாய்கள். இது கடந்த வருடத்தை விட ஓரு பில்லியன் அதிகமானதாகும். இஸ்ரேலிய கபீர் (Kafir) விமானங்கள் வாங்குவதற்கு இதில் ஒரு பகுதி தொகை பாவிக்கப்படும். கடற்படை கமாண்டோவான தயா சந்தகிரி (Daya Sandagiri) அண்மையில் இந்திய கடற்ப்படையினருடன் ஸ்ரீலங்காவின் வடக்கு ஆழ்கடல் பிராந்தியத்தை ரோந்து பார்ப்பதற்கான ஓர் ஒப்பந்தத்தை கைசாத்திட்டார். இது தமிழீழ விடுதலைப் புலிகள் உடைய தேவைகளை பூர்த்தி செய்யும் கடல்ப்பாதைகளை சக்திவாய்ந்த முறையில் அச்சுறுத்துவதற்கான ஓர் நகர்வாகும்.

ஒரு பகுதி ஸ்ரீலங்கா முதலாளிகள் முதலீட்டை ஊக்குவித்து உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் சீர்திருத்த கோரிக்கையை அமுல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி, வளங்கள் வீணாக்கும் போரை நிறுத்தி ஒர் பேச்சுவார்த்தை மூலமாக முடிவிற்கு கொண்டுவர விரும்புகிறார்கள்.

அதேவேளை, இது இந்திய உப கண்டத்தில் தொடர்ச்சியான ஸ்திரமற்ற நிலைக்கு உந்து சக்தியாக அமையலாம் என இரு தரப்பினரையும் போரை ஓர் முடிவிற்கு கொண்டு வருமாறு வல்லரசுகள் அழுத்தம் கொடுக்கின்றனர். அடுத்த மாதம் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அன்னான் இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். இது சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. எவ்வாறிருந்தாலும், றிச்சாட் ஆர்மிற்ராஜ் உடைய குறிப்புகள், அமெரிக்காவின் கட்டளைகளை ஏற்பதாக வெளிக்காட்டுவதிலேயே எந்த அரசியல் தீர்வுகளிலும் எல்.ரீ.ரீ.ஈ. ஒரு பங்கு வகிக்கமுடியும் என்பதை துலாம்பரமாக எடுத்துக்காட்டுகின்றது. வாஷிங்டனுடைய கோரிக்கைகளை பூர்த்தி செய்யும்வரை அமெரிக்காவின் பயங்கரவாதக் குழுப் பட்டியலில் எல்.ரீ.ரீ.ஈ தொடர்ந்து இருக்குமென அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு முக்கிய பகுதி ஸ்ரீலங்கா அரச அமைப்பின் தட்டுகள், இராணுவம், புத்த குரு அமைப்புகள் மற்றும் வியாபாரிகள் இப்போரை தொடருவதில் பாரிய நலன்களை கொண்டுள்ளனர். கடந்த 20 வருடங்களாக பாதுகாப்பு படையினர் 450 வீதமாக வளர்ந்து 120,000 பேராக அதிகரித்துள்ளது. இராணுவம் சம்பந்தப்பட்ட வியாபார கொடுக்கல் வாங்கலினால் சில உயர் மட்ட அதிகாரிகள் சிறிய செல்வத்தினை திரட்டியுள்ளனர். இலங்கை அரசியலில் இராணுவ உயர் அதிகாரிகள் சக்தி மிக்க செல்வாக்கை செலுத்துபவர்களாகவும், ஆளும் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணிக்கும் எதிர் கட்சியான மக்கள் முன்னணி இரு பக்கத்தினரிடையேயும் நெருங்கிய இணைப்புகளை கொண்டவர்களாகவும் உள்ளனர்.

2001 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட மக்கள் முன்னணி ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஊடகமாக சிங்கள இனவாத தட்டுககளை அவதானமாக ஊக்குவிக்கின்றார். உயர் பாதுகாப்பு வலையம் பற்றிய இராணுவத்தினுடைய அறிக்கை வெளியானபோது, இதனை எழுதியவரான யாழ்ப்பாண கமாண்டோ பொன்சோகாவுடனும் இராணுவத் தலைவரான எல்.பலகல்லவுடனும் குமாரதுங்கா உடனடியாக பேச்சு வார்த்தையை நடாத்தினார். இதைச் செய்வதில் இவர் ஊக்குவிப்பினை வழங்கினார், ஆனால் வெளிப்படையாக அறிக்கைக்கு ஆதரவு வழங்கவில்லை.

பொன்சேகாவின் அறிக்கையை பாவித்த சிங்கள இனவாத குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்குமாறு வற்புறுத்தினர். சிங்கள உறுமைய (SU) ஜனவரி 9ம் திகதி நடாத்திய பத்திரிகை மாநாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் தனது ஆயுதங்களை கீழே போடும் வரை இராணுவம் "தனது துவக்குகளுடன் நிற்க வேண்டும்" என அழைப்புவிட்டனர். குமாரதுங்காவுடன் கூட்டிற்கு சாத்தியப்பட பேச்சு வார்த்தையை நடாத்திக் கொண்டிருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (JVP), சமாதானப் பேச்சு வார்த்தைக்கு எதிராக 10,000 பேர் கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடாத்தியது. நான்காவது கட்டமான பேச்சு வார்த்தையில் தடையாகவுள்ள உயர் பாதுகாப்பு வலைய பிரச்சனையானது, அடிமட்டத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சமுக அரசியல் நெருக்கடியின் விளைபொருளாகும். இது இப் பேச்சுவார்த்தைகளானது ஒரு நிரந்தரமான முடிவல்ல என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.

See Also :

போரை முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்தில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் உடன்பாடு

இலங்கை பேச்சுவார்த்தைகளில் மேலும் சலுகைகளுக்காக வாஷிங்டன் எல்டிடிஈ-ஐ நிர்ப்பந்திக்கின்றது

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடனான சமாதானப் பேச்சுவார்த்தையில் பாரிய சலுகைகளை வழங்கியுள்ளனர்

இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தை: தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலக மூலதனத்துக்கு தலைவணங்குகின்றது

Top of page