World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா

Pyongyang reacts to US threats by withdrawing from non-proliferation treaty

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களின் விளைவாக அணு ஆயுத எதிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து யாங்யாங் விலகுகின்றது

By Peter Symonds
16 January 2003

Back to screen version

கொரிய தீபகர்ப்பத்தில் பதட்டத்தை தணிக்க இராஜாங்கரீதியான பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும், புஷ்ஷின் நிர்வாகம் வடகொரியா மீது கடுமையான போக்கை காட்டி வருவதால் அது விரைவில் ஒரு பெரிய பிரச்சனையாக வெடிக்க உள்ளது. ஆழமான பொருளாதார தனிமைப்படுத்தலையும், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை சந்திக்கும் யாங்கியாங் (Pyongyang) அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக சென்ற வெள்ளிக்கிழமையன்று அறிவித்தது. இதன் மூலம் இதுநாள்வரை கட்டுண்டு கிடந்த கைகள் மீண்டும் அணு ஆயுத உற்பத்தியை தொடங்கும்.

வாஷிங்டனால் ஓரங்கட்டப்பட்ட வடகொரியா, மீண்டும் அணு ஆயுதங்களை தயாரிக்கப் போவதாகவும், 1999இல் நிறுத்திவைக்கப்பட்ட ஏவுகணை பரிசோதனை திட்டத்தை மீண்டும் தொடக்கப்போவதாய் அச்சுறுத்தியுள்ளது. சீனாவுக்கான யாங்கியாங்கின் தூதர் சோ-ஜின்-சு, சனிக்கிழமையன்று தெரிவித்ததாவது; "எங்களுடைய எல்லா ஒப்பந்தங்களையும் அமெரிக்க தரப்பினர் செல்லுபடியாகாது செய்துவிட்டதால், எங்கள் மீது நாங்களே விதித்துக்கொண்ட ஏவுகணை சோதனையை தற்காலிகமாய் நிறுத்தி வைத்ததை இனிமேலும் தொடர இயலாது."

ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையின் போதே புஷ் நிர்வாகத்துக்கு ஒரு நடுக்கத்தை தர வேண்டியே வடகொரிய இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியது. இதில் தோல்வியடைந்தால், வாஷிங்டன் ஈராக்கை முடித்த பிறகு, அமெரிக்க இராணுவம் தன்னை இலக்காக வைத்துவிடாமல் தடுப்பதற்காகவும் இப்படி நடந்துகொண்டுள்ளது. அதே சமயம் "ஏகாதிபத்திய கோட்டையை தீக்கடலாக்குவோம்" என்ற வெற்று மிரட்டல்களை கொடுத்துக்கொண்டிருந்தாலும், இப்பிரச்சனையை ஒரு முடிவுக்குக்கொண்டு வந்து சமரசம் செய்துகொள்ள யாங்கியாங் துடிக்கிறது.

பல வாரங்களாக வெள்ளை மாளிகையால் நிராகரிக்கப்பட்டுவரும் நிலையில், சென்ற வார இறுதியில் வடகொரியா, தற்போதைய மெக்சிக்கோவின் ஆளுநரும், ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதரான, பில் ரிச்சார்ட்சன் மூலம், இரகசிய தகவல் பரிவர்த்தனை செய்ய முயற்சித்தது. நீண்ட உரையாடல்களுக்குப்பின், மூத்த இரண்டு வடகொரிய இராஜதந்திரிகளோடு பேசிய ரிச்சார்ட்சன், "இருதரப்பு தாக்குதல் எதிர்ப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா உடன்படுமானால், யாங்கியாங் அணு ஆயுத எதிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது" என்றார். மேலும் சொல்லப்போனால், ஈராக்கிற்கு ஏற்பட்ட கதி தனக்கு வாஷிங்டனால் ஏற்படாது என்று உத்தரவாதம் தந்தால், வடகொரியா அணு ஆயுதப் பிரச்சனைக்கு தீர்வுகாணும்.

நியூ மெக்சிகோவில் நடைபெற்ற உரையாடல்களை, `புதிதாக ஒன்றும் இல்லை` என்று தள்ளுபடி செய்த புஷ் நிர்வாகம், எந்த ஒரு பேச்சுவார்த்தை நடப்பதாய் இருந்தாலும் அதற்கு முன் வடகொரியா அமெரிக்காவின் அணு திட்டத்தின் நிபந்தனைகளை ஏற்கவேண்டும் என நிர்பந்திக்கிறது.

"வடகொரிய மக்கள் அவதிப்படுவதால், அவர்கள் நலன் கருதி, உணவு மற்றும் சக்தி பற்றி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளதாய்" சென்ற புதனன்று புஷ் அறிவித்தார். ஆனால் அமெரிக்க துணை செயலர் ஜேம்ஸ் கெல்லி, வடகொரியா மீது பொருளாதார தடைகளை கடுமையாக்குவதற்காக, தென்கொரியாவுக்கும், சீனாவுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இப்பிரச்சனைக்கு முன்பே பரவிவரும் பஞ்சத்தாலும், பொருளாதார வீழ்ச்சியினாலும் வடகொரியா ஏற்கனவே விளிம்பில் நின்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. குறைகூறும் தன்மை கொண்ட புஷ்ஷின், வடகொரிய மக்கள் மீதான கரிசனம், அவர் நிர்வாகத்தை, எரிபொருள் விநியோகத்தை துண்டித்ததையும், யாங்யாங்குக்கு உணவு உதவியை தற்காலிகமாய் நிறுத்தியதையோ அது தடுக்கவில்லை. முன்பு போலவே, எந்த ஒரு அமெரிக்க யோசனையான உணவு மற்றும் எரிபொருள் மீதான "தடை நீக்கமும்" கோர்வையான நிபந்தனைகளுடன் பிணையப்பட்டிருக்கும். அவை, வடகொரியாவை அணு ஆயுத மற்றும் ஏவுகணை திட்டத்தை கைவிட்டும், மற்றும் பாரம்பரிய இராணுவ படைகளை குறைத்துக்கொள்ளும்படியான நிபந்தனைகளாகும்.

அதுவுமில்லாமல், இராணுவ தாக்குதலை மேற்கொள்ளாது என்ற வாஷிங்டனின் வார்த்தைகளை, யாங்யாங் நம்பிட காரணமில்லை. ஈராக்கையும், வடகொரியாவையும், ``ஒரே கோட்டில் உள்ள தீயசக்தி`` என்று முத்திரையிட்ட புஷ், அவர்கள் மீது முன்தாக்குதல் நடத்தவும் இசைவு தெரிவித்துள்ளார். ஈராக் மீதான பிரம்மாண்டமான ஒரு படையெடுப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில், கொரிய தீபகர்பத்தில் ஒரு ``இராஜதந்திர தீர்வைத்தான்`` வாஷிங்டன் விரும்பி வருவதாய் சொல்வதை, சதாம் ஹுசேனை அப்புறப்படுத்தப்படும் வரை அது தற்காலிகமாய் சாமர்த்தியமாக பேசுகிறது என்பதை வடகொரியா முடிவு செய்துள்ளது.

உலக சோசலிச வலைத் தளம், யாங்கியாங்கில் அடக்கியாளும் ஸ்ராலினிச ஆட்சியை சற்றும் ஏற்கமுடியாத அளவுக்கு எதிர்க்கிறது. யாங்கியாங் என்ற இந்த சிறிய, சுரண்டப்பட்ட நாட்டுக்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல்களை எதிர்த்து, தன்னை காத்துக்கொள்ள எல்லா உரிமையும் உண்டு. ஈராக்கைப்போல, வடகொரியா மீதான புஷ் நிர்வாகத்தின் போக்கானது, சாதாரண மக்களின் விதியையும், அவர்களின் இன்னல்களுக்காக செய்யப்போவது ஒன்றுமில்லை. கொரிய தீபகர்ப்பத்தில் பதட்டத்தை அதிகரிப்பதால், வாஷிங்டன் அங்கே வடகிழக்கு ஆசியாவில் தொடர்ந்து தன் இராணுவப் படைகள் இருக்கவும், தன் எதிரிகளான ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் செலவில் தன்னுடைய பொருளாதார மற்றும் திட்டமிட்ட நலன்களை பார்த்துக்கொள்ளவே அமெரிக்கா முயன்றுள்ளது.

ஒப்புக்கொண்ட சட்ட வடிவமைப்பு

கிளின்டன் நிர்வாகத்தின் கொள்கைகளை முறியடிக்கவும், அதனைவிட கடுமையான போக்கை வடகொரியா மீது காட்டவேண்டிய நிலையில் புஷ் நிர்வாகம் இருப்பதால் தான் இந்த பிரச்சனைகளுக்குக் காரணம்.

1994இல் கிளின்டனின் வெள்ளை மாளிகை, கொரிய தீபகர்பத்தை போரின் விளிம்புக்கு கொண்டுவந்து வடகொரிய அணு ஆயுத தளங்கள் மீது தாக்க அச்சுறுத்தியிருந்தது. அணு ஆயுத எதிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதாய் யாங்யாங் அறிவித்துவிட்டது. ஒரு பெரிய சண்டை கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டர் யாங்யாங்கிற்கு விரைந்துவந்து, சமரசம் செய்து வைத்ததன் அடிப்படையில், வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை முடக்கியும், இருக்கின்ற அணு உலைகளை எல்லாம் கழற்றிவிடவும் அப்படிச் செய்ததால் அதற்கு மாற்றாக எரிபொருள் எண்ணெய் விநியோகிப்பதோடு அங்கே இரண்டு லேசு நீர் சக்தி உலைகளை கட்டி தருவதாய் வாக்குறுதியளித்தார்.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை செய்வதாய் யாங்யாங்கை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தி சென்ற அக்டோபரில் இந்த புஷ் நிர்வாகம் இப்பிரச்சனையை மேலும் அதிகரிக்கவைத்தது. யுரேனியம் செறிவூட்டப்படுவது குறித்து சமரசப்பேச்சில் ஏதும் இடம்பெறவில்லையென்றாலும், வாஷிங்டன், இத்திட்டமானது ஒப்புக்கொண்ட சட்ட வடிவமைப்பை மீறிவிட்டதாக கூறியது. அமெரிக்கா தன் நட்பு நாடுகளை கட்டாயப்படுத்தி, வடகொரியாவுக்கு எரிபொருள் எண்ணெய் விநியோகத்தை தடுத்தது, சென்ற நவம்பரில் யாங்யாங் 1994ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என பதிலளித்தது.

மீடியாக்களின் துணையோடு புஷ் நிர்வாகமானது, வடிவமைத்த ஒப்பந்தம் தோல்வியடைந்ததற்கு வடகொரியாமீது பழிபோட முயன்றது. விமர்சகர்கள் பலர் தெரிவித்ததுபோல் சென்ற அக்டோபரிலேயே அவ்வொப்பந்தம் செல்லாததாகிவிட்டது. கல்வியாளர் டேவிட் காங், Financial Times இல் விமர்சித்தது யாதெனில்: "கிளின்டன் மற்றும் புஷ், இருவருமே ஒப்பந்தத்தின் வார்த்தைகளையும், அதன் தன்மையையும் மீறிவிட்டனர்." உதாரணத்திற்கு, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடகொரியாவுக்கு லேசு நீர் உலைகளை கட்டித்தர உறுதியளித்திருந்தது. இந்த உலைகளை அணு குண்டு தயாரிக்க பயன்படுத்த முடியாததாகும். இவைகளில் முதலாவது இந்த ஆண்டு செயல்படுத்தப்பட இருந்தது ஆனால் திட்டமிட்ட காலத்தைவிட மூன்று ஆண்டுகள் மேலும் தாமதமாகும் என்பது 1998லேயே தெளிவாய் தெரிந்ததே. இதற்கு அமெரிக்காவின் கொள்கைகளும், விருப்பமின்மையுமாகும்.

வடகொரியா அந்த ஒப்பந்தத்தில் கண்ட ஒரு அம்சத்தின்படி, உறவுகள் முழு அளவில் இயல்புக்கு கொண்டுவந்தும், அமெரிக்கா விதித்த பத்து ஆண்டுகளுக்கு மேலான தனிமைப்படுத்தலை விலக்கிக்கொள்ளவும் வந்த சந்தர்ப்பம் என குறிப்பிட்டிருந்தது. பதிவியேற்றுக்கொண்டதுமே புஷ், கிளின்டனுடைய முதற்கட்ட நடவடிக்கைகளான பொருளாதார தடைகளை விலக்குவதையும், உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தையும், புஷ் முடிவுக்குக்கொண்டு வந்தார். தென்கொரிய ஜனாதிபதியான கிம் டே-ஜங் இன் சூரிய வெளிச்ச கொள்கை (Sunshine Policy) யின்படி, வடகொரியாவை முதலாளித்துவ முதலீட்டாளர்களுக்கு மலிவு ஊதிய உழைப்புக்கு பிரதானமாக ஏற்கும்படி கேட்டதற்கு, புஷ் நிர்வாகம் தெளிவாக தன் எதிர்ப்பை கூறியுள்ளது. கடைசியில் வாஷிங்டன் நிபந்தனையுடன் புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக்கொண்டது. வடகொரிய ஒருதரப்பு ஆயுதக் குறைப்பு பற்றிய கோரிக்கைகளும் புதிதாய் இருந்தன.

சமீப நாட்களாக, புஷ் நிர்வாகம் ஒப்பந்த வடிவமைப்பை ஒத்து நடப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெளிவாகி வருகிறது. இந்த ஒப்பந்தத்தைத்தான் குடியரசு வலதுசாரியினர், புஷ் வடகொரியாவிடம் மிகவும் மென்மையாக நடந்துகொள்கிறார் என்று நிரூபித்து அதனை கண்டித்தனர். மீண்டும் 1994ஆம் ஆண்டு ஒப்பந்தம் குறித்து பரிசீலிக்க, வெள்ளை மாளிகை அதிகாரிகள் பேசுவதற்கு முன்வரவில்லை. செவ்வாயன்று அமெரிக்க அரசு செயலர் கோலின் பவல் பேசுகையில், ``யாங்கியாங்கின் அணு ஆயுத உற்பத்தியை தடுக்க, அமெரிக்காவுக்கு `புதிய வழிமுறை` தேவைப்படலாம்`` என்றார். சென்ற வருடம் தொடங்கப்பட்ட இரண்டு லேசு நீர் உலைகளின் கட்டுமான பணிகள் முடிவுபெற அமெரிக்கா உதவுமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

இராணுவ நடவடிக்கையை நோக்கி

இருப்பினும் யாங்கியாங்குடனான எந்த ஒரு புதிய ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தையும் சர்ச்சைக்குள்ளானதாகவே இருக்கும். ஏற்கனவே அமெரிக்கா, ஈராக்குக்கு எதிரான போரின் விளிம்பில் உள்ளபோதும், வலதுசாரி ஆதரவாளர்கள் புஷ் நிர்வாகத்தை வடகொரியா மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நெருக்குகிறது.

`புஷ் நிர்வாகம் ஈராக் மீது போர் புரிந்து அதனை ஆயுதமில்லாமல் ஆக்கவும், வடகொரியாவிடம் அவ்வாறின்றி வெறும் இராஜதந்திர உபாயங்கள் மூலம் அணுகும் விதத்தைப்பார்த்தால் அது இரட்டை வேடம் போடுவதாக` ஒரு விமர்சனத்துக்கு ஜனவரி 13 அன்று Wall Street Journal இல் பதில் வெளியாகியிருந்தது. இந்த வித்தியாசமான அணுகுமுறை தற்காலிகமானதென்றும், முற்றிலும் தந்திரமானது என்றும் அப்பத்திரிக்கை கூறியுள்ளது.

``இல்லை, வேகமான வழிமுறை எதுவென்றால், `ஒரே கோட்டில் உள்ள தீயசக்தி`யான இரு நபர்களில் ஒருவரை திருப்திபடுத்த மற்றொருவரை பதிவியிறக்கி தள்ளுவதுதான் அதன்பின் மற்றவரையும் தள்ளுவதுதான் குறி.`` கண் எதிரே உள்ள அணு ஆயுத விருப்பங்கள் கொண்ட ஒரு சர்வாதிகாரியை அமெரிக்கா செயலிழக்கச் செய்வதோடு கிம்மையும் (Kim) யோசிக்கவிடுகிறது. விளையாட்டுத்தனமாக உள்ள போரில் ஈடுபடும் நாடுகளுக்கு, அமெரிக்க தலைமை எப்படி தீர்வுகண்டு, இராணுவ ரீதியிலான வழிமுறையில் வெற்றிபெறும் என்பதை அதுகாட்டும். அணு ஆயுதங்களை தேடுவதே ஒரே வழி என்றும் அதைவிட பாதுகாப்பான சிறந்த உபாயம் இல்லை என்பதை அது கிம்முக்கு உணர்த்தும்.

சதாமை கவிழ்த்த பிறகு, அமெரிக்க இராணுவமானது வளைகுடாவிலிருந்து விலகி, கொரியா பிரச்சனையை நோக்சிச்செல்லும். அமெரிக்க படைகள் ஈராக் அருகே குவிக்கப்படும் வேளையில், ஒன்றுக்கு மேற்பட்ட அமெரிக்க விமானங்களில் படைகள் வடகிழக்கு ஆசியா நோக்கிப்போனாலும், யாருக்கும் சந்தேகம் இருக்காது.

சிலருக்கு, புஷ்ஷின் கொள்கையே மன்னிக்கமுடியாத அத்துமீறலாக உள்ளது. வலதுசாரி குடும்ப ஆய்வு மன்றத்தின் முன்னாள் தலைவர் கேரி பாயர், அமெரிக்க துணை செயலர் கெல்லியை வெளிப்படையாக கண்டித்தார். அவர் பரிந்துரைகள் செய்வதோடல்லாமல், நாங்கள் எங்கள் தலைக்குமேல் துப்பாக்கி குறிபார்த்திட, பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள தயாரென்றும், சரியான சூழ்நிலையில் வடகொரியாவில் முதலீடு செய்யவும் முற்படுவோம். இத்தகைய கொள்கை குறித்து கிளின்டன் பெருமைப்படுவார், அவருடைய இந்த சாந்தப்படுத்தும் தன்மைக்காகவே நாங்கள் இந்த நிலையில் ஆரம்பிக்கிறோம்.``

புஷ் நிர்வாகம் வடகொரியாமீது இராணுவ தாக்குதல் நடத்தாமல் உள்ளதைப் பார்த்து குடியரசு கட்சி செனேடர் ஜான் மெக்கெய்ன் விமர்சித்துள்ளார். வலதுசாரிகளின் பிரச்சார பீரங்கியான வீக்லி ஸ்டான்டர்டில் எழுதுகையில், அவர் சொன்னார்: ``கிளின்டனின் இராஜதந்திர முறையையும், நேர்த்தியையும் இந்த நிர்வாகம் ஏற்றுக்கொண்டதைப்போல் தோன்றினாலும், சில அம்சங்களில் அதை மீறியும் உள்ளது. ஜனாதிபதியும், செயலரும் படைகளை உபயோகிப்பது இல்லை என்று பொதுப்படையாக பேசியுள்ளனர். இருப்பினும் வடகொரியா அணு ஆயுதங்களை பெறுவதிலிருந்து தடுக்க படை பலமே இறுதியில் தேவைபடுவதாய் இருக்கும். கிளின்டன் நிர்வாகமே இதை பொதுவாக பரிந்துரை செய்யாத ஆபத்தான குறுகிய நோக்கத்தைக் கொண்ட ஒரு முன்னோடியாக விளங்கப்போகிறது.``

1994 ஆண்டு ஒப்பந்த வடிவமைப்பின் கீழ் வடகொரியாவுக்கு உதவிகளை தடை செய்தும், யாங்கியாங்க்கு எதிராக மற்ற நடவடிக்கைகளை எடுக்கவும் மெக்கெய்ன் உள்ளிட்ட மூன்று செனட்டர்கள் சட்டம் இயற்றி முறைபடுத்திட வேண்டும் என ஆதரவு திரட்டுகிறார்கள். வடகொரியா மீது பொருளாதார தடைகளை மீண்டும் விதிக்கவேண்டும், வடகொரியா ஆயுதங்கள் போக்குவரத்தை தடை செய்யவும், பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நிலைகளை பலப்படுத்தவேண்டும் என்பவை அந்த நடவடிக்கைகளில் அடங்கும். வரவிருக்கும் சட்டத்தில், யாங்கியாங்குடன் எந்த புது ஒப்பந்தம் வைத்துக்கொள்ளவேண்டுமானால் கடுமையான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்கிறது. இதற்கு அமெரிக்க காங்கிரசின் ஒப்புதலும் தேவைப்படும்.

தன்னுடைய சொந்த தொகுதியிலேயே வலதுசாரி நெருக்குதல் அதிகமாவதால், புஷ் நிர்வாகம் தன்னுடைய இப்போதைய நடவடிக்கையின் போக்கை இன்னும் சிறிது காலத்திற்காகவாவது கடைபிடிக்க முடியுமா என்ற உத்தரவாதமும் இல்லை. அதுவுமில்லாமல் வாஷிங்டனின் பொருளாதார மற்றும் ராஜதந்திர ரீதியிலான நெருக்குதலுக்கு செய்யும் பிரச்சாரம், யாங்கியாங்கின் அதிகார மட்டத்தின் தலைக்குமேல் துப்பாக்கியை குறிவைத்து வேலை செய்கிறது. ஒன்று, சரணடைவது அல்லது பொருளாதார வீழ்ச்சியில் கிடப்பது என்ற இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை யாங்கியாங் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். வடகொரிய பொருளாதாரத்தின் எல்லா துறைகளும், அரசு துறைகளும், இராணுவம் உள்பட எல்லாமே எரிபொருள், சக்தி மற்றும் மாற்று உபகரணங்கள் இல்லாமல் தவிக்கிறார்கள். வாஷிங்டனின் இந்த போர் எண்ணப்போக்கானது, வெளிநாடுகளின் முதலீட்டு திட்டங்களை நன்கு தடுப்பதோடு தென்கொரியாவின் சூரிய வெளிச்ச கொள்கையையும் இதில் காட்டுகிறது. இழப்பதற்கு ஒன்றும் இல்லாமலும், ஒரு மூலையில் தள்ளப்பட்டுள்ள, எதற்கும் துணிந்த அந்த ஆட்சி கணித்துச்சொல்ல முடியாத வழிகளில் செயல்படலாம்.

வடகொரியாமீது இராணுவ தாக்குதல் மேற்கொள்வதை நிறுத்தமுடியாமல் போகும் என்று அது தீர்மானிக்கும்போது, புஷ் நிர்வாகத்தின் பொறுப்பற்ற கொள்கையினால் வடகிழக்கு ஆசியா முழுவதும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும். சீனாவும், தென்கொரியாவும் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகள் பற்றி கவலை கொண்டுள்ளது. இந்த சமுதாய சீரழிவால் வடகொரியாவிலிருந்து எண்ணற்ற அகதிகள் எல்லையைக் கடந்து வருவார்கள் என்று அமெரிக்க ஆளுங்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது. யாங்கியாங்கை அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்ய அனுமதித்தாலோ, ஏவுகணை சோதனையை மீண்டும் தொடங்க அனுமதித்தாலோ, அது அந்த மண்டலத்தில் அணு ஆயுத போட்டிக்கு வழி வகுக்கும். ஜப்பானும், தென்கொரியாவும், வடகொரியாவின் சக்திக்கு இணையாக தங்களை பலப்படுத்திக்கொள்ளும் பட்சத்தில், எதிர்காலத்தில் ஆபத்தான ஒரு பிரம்மாண்டமான இராணுவ மோதல்களுக்கு வழிவகுக்கும்.

 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved