World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
சீனா இரண்டு சீனத் தொழிலாளிகள் போராட்டத்தின்போது அழிக்க முயன்றதற்காக, விசாரிக்கப்பட்டனர் By John Chan இரண்டு சீனத் தொழிலாளர் தலைவர்களான யாவோ ஃபாக்ஸின் (52) (Yao Fuxin), க்சியாவோ யுன்லியாங் (56) (Xiao Yunliang) சென்ற மார்ச் மாதம் லயாவோயாங் (Liaoyang) நகரில் நடந்த பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக செய்த போராட்டத்தில் பங்கு பற்றியதற்கான, குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை பெறக்கூடும். கிட்டத்தட்ட 30,000 பேர் நிதியுதவி கோரியும், ஊழல்புரிந்த அதிகாரிகளை தண்டிக்கக் கோரியும் போராடினர். உள்ளூர் போலீஸ், இருவரையும் 10 மாத காவலில் வைத்துள்ளது. ஜனவரி 15 அன்று இருவரும் நாசவேலை குற்றஞ்சாட்டப்பட்ட லயாவோயாங் இடைநிலை மக்கள் நீதிமன்றத்திற்கு இழுத்து வரப்பட்டனர். சில நாட்களில் தண்டனை அறிவிக்கப்பட இருக்கிறது. தொடக்கத்திலிருந்து முடிவு வரை இருவரின் கைதும் விசாரணையும் அரசியல் காரணத்தால் விளைந்த நாடகம். நாட்டின் அரசியற் சட்டப்படி உள்ள வரையறுக்கப்பட்ட சட்ட உரிமைகளையும், சீன அதிகாரிகள் அவமதித்தனர். சட்டத்திற்குப் புறம்பாக கூடியதையும் போராடியதையும் வைத்து அவர்கள் இருவரையும் கைது செய்திருந்தால் சென்ற அக்டோபரிலேயே விசாரிக்கப்பட்டு விடுவித்திருக்கலாம். ஆயினும் நவம்பரில், மார்ச் போராட்டத்தில் கார் மீது வெடிகுண்டு வீசியதாகப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு புதிதாக `பயங்கரவாதம்` பேரில் குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டுள்ளது, முந்தைய வார விசாரணைக்கு முன் பழைய குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டன. அரசியல் ரீதியாக அழிவு வேலையிலீடுபட்டதாக இருவரையும் காட்டுவதன் மூலம், இருவரையும் மாதிரியாகக் காட்டுவதற்கு ஐயத்திற்கிடமில்லாமல், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் உயர்மட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அது மோசமான அளவிற்கு தெளிவின்றி உள்ளதுடன், மிக அதிக தண்டனைக்குள்ளாவர். கோர்ட் விசாரணை கடின பாதுகாப்புக்கிடையே நடந்தது. வழக்கமாக, விசாரணைக்கு ஒருநாள் முன்பு செய்யவேண்டிய அறிவிப்பையும் அதிகாரிகள் செய்யவில்லை. இருவரின் ஆதரவாளர் சிலரே நீதிமன்றத்தில் இருக்கச்செய்ய காலரியிலமர்வதற்கான 200 சீட்டையும் காவலர் மற்றும் அரச அலுவலர்க்கு ஏற்கனவே வழங்கி விட்டனர். குறுகியகால அறிவிப்பாயினும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நீதிமன்ற வாசலில் நின்று தங்கள் எதிர்ப்பை விசாரணைக்கெதிராய்த் தெரிவித்தனர். வழக்கு நடத்தும் இடம் அருகே தெருக்களை போலீஸ் அடைத்தனர் மற்றும் தொழிலாளரின் குடியிருப்பருகே, விசாரணையின்போது தொழிலாளர்கள் போதுமான அளவு இருந்தனர். வழக்கை சேகரிக்கச் சென்ற பிரெஞ்சு பத்திரிகையாளர் தடுக்கப்பட்டு, பலாத்காரமாக பீஜிங்கிற்கு திருப்பி அனுப்பட்டார். விசாரணைக்கு முன், போலீசார் மற்ற உள்ளூர் தலைவர்களான வாங் ழாவோமிங் (Wang Zhaoming) பாங் குய்ங்க்சியாங் (Pang Qingxiang) ஆகியோரின் தொலைபேசிகளைத் துண்டித்து, மறியல் நிகழ்ந்தால் அவர்களின் குடும்பங்கள் தாக்கப்படுமென அச்சுறுத்தினர். புத்தாண்டை முன்னிட்டு வெளியே போயிருந்த வாங், வீடு திரும்பியது முதல், விசாரணை பற்றி விவாதிக்க கூடாதென எச்சரிக்கப்பட்டார். விசாரணை 4 மணி நேரமே நடந்தது. வழக்கு தொடர்ந்தோர் எந்த சாட்சியத்தையும் அழைக்கவுமில்லை, ஆதாரம் காட்டவுமில்லை. அரசு அவர்கள் மீது "நாசவேலை" குற்றம்சாட்டியதற்குக் காரணம், யாவோவும் க்சியாவும் வெளிநாட்டுச் செய்திச் சேவையுடனும், மனித உரிமைக் கழகத்துடனும் தடை செய்யப்பட்ட சீன ஜனநாயகக் கட்சியுடனும் தொடர்பு கொண்டிருந்ததேயாகும். இது தொடர்பான பதிவு செய்யப்பட்ட தொலைபேசி பேச்சுகள் முன்வைக்கப்பட்டன. அரசுத் தரப்பு இன்னொரு போராட்டத் தலைவரான பாங் குய்ங்க்சியாங் (Pang Qingxiang) இடமிருந்து ஒரு அறிக்கையை வைத்தனர். இவர் யாவோ மற்றும் க்சியாவோவுடன் மார்ச்சில் கைதானவர். வெளிப்படையாகவே தனது சக குற்றஞ்சாட்டப்பட்டாரைச் சிக்க வைக்குமாறு இவர் அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தார். யாவோ, சீன ஜனநாயக கட்சியுடன் தொடர்புகொண்டதாகக் குற்றம் சாட்டிய பின்னரே விடுவிக்கப்பட்டார். பாங் அறிக்கையின் அடிப்படையில், யாவோ 1998ல் சீன ஜனநாயக கட்சியின் மனுவில் கையெழுத்திட்டதற்காகக் குற்றம் சாட்டப்பட்டார். மேலும், யாவோ, தியனென்மன் சதுக்கத்திலும் மற்றும் எங்கிலும் 1989 எதிர்ப்பில் முக்கிய பாத்திரம் வகித்த பெய்ஜிங் தொழிலாளர் தன்னாட்சி சங்கத்தினின்று வெளியேற்றப்பட்ட தலைவரும், ஹங்காங்கிலுள் சீன தொழிலாளர் பத்திரிக்கையின் இயக்குனருமான, "பகையாளி" ஹன் டாங்ஃபேங்குடன் (Han Dongfang) தெடர்புடையதாயும் குற்றம் சாட்டப்பட்டார். உடனடியாக, ஹன், சீன அரசினர் கதைகட்டி, விசாரணையை மற்ற தொழிலாளர் பங்கேற்காதவாறு "காட்சி வழக்காய்" மாற்றியுள்ளதாக, பத்திரிகையாளரிடம் கூறினார். வாஷிங்டன் போஸ்ட் அறிக்கைபடி: "பேச அனுமதித்தபொழுது, க்சியாவோ, குற்றச்சாட்டை மறுத்து, தன்னைப்போன்ற வேலையில்லா தொழிலாளர் எவ்வாறு ஆட்சியைக் கவிழ்க்க முடியும் எனக் கேட்டதாகப் பார்வையாளர் கூறினர். யாவோ உணர்வுபூர்வ வாக்குமூலத்தில், தான் செய்த ஒவ்வொன்றும் தனது சக தொழிலாளருக்காக என்றும், தாங்கள் எவ்வளவு ஏழ்மையானவர்கள் எனக் கூறுகையில் கண்ணீர் சிந்தியதாயும் கூறினர். சில பார்வையாளரும் அழவே, போலீஸ் அவர்களை வெளியே அனுப்பியது." இரு தொழிலாளர்களின் பிரதிவாதி வழக்குரைஞர் மோ ஷாவோபிங், விசாரணைக்குப் பின்னர், ராய்ட்டரிடம் "அவர்களைக் குற்றஞ்சாட்டியதோடு சரி", எந்த ஆதாரமும் வைக்கவில்லை என்றார். இருவரும் குற்றமற்றவர், குற்றச்சாட்டு பொய்யென நம்புவதாகக் கூறினார். சீனாவின் அரசியல் ரீதியாக அடிமைப் பண்புடைய நீதிமன்றம், தேவைப்படும் குற்றத் தீர்வையும் கடின தண்டனையையும் தவிர வேறெதுவும் செய்யாதெனலாம். யாவோவின் மகள் கூறியதாக, வாஷிங்டன் போஸ்டில் வெளியானது: "நாங்கள் எதிலும் நலமே காண்பவர்கள் அல்ல. இன்னும் நம்பிக்கை இருக்கிறது, ஆனாலும் மிகவும் வருந்துகிறோம்." முதலீட்டாளர்க்கு சமிக்கை புதிதாய் நிறுவப்பட்ட சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி தலைமையானது, யாவோ மற்றும் க்சியாவோவை தண்டிப்பதன் மூலம், தொழிலாளர்களுக்கு எச்சரிக்கையாகவும் வெளிநாட்டு முதலீட்டாளர்க்கு, மேலும் எந்தவிதமான எதிர்ப்புக்களையும் முறியடிக்க போலீஸ் --அரசு நடவடிக்கைகளைப் பயன்படுத்த ஆட்சி தயங்காதெனவும் சமிக்கை காட்டியுள்ளது. ஸ்ராலினிச அதிகாரத்துவம், அரசுத்துறை நிறுவனங்களினின்று கடந்த பத்தாண்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் போராடுவரோ எனும் கவலையில் உள்ளது. இந்த சலுகைமிக்க, எரிந்து விழுகின்ற தட்டினர், தாங்களே அரசு உடைமை தொழில் துறைகளின் மிச்சசொச்சங்களை சின்னாபின்னமாக்கி, தொழிலாளரின் உரிமைகளையும் நிலைகளையும் அழித்து, மிகவும் இலாபகரமான நிறுவனங்களை சுரண்டுதற்கு பண்பற்ற முறையில் நெருக்கி அடித்துக் கொண்டு ஈடுபடுகையில், `சோசலிச முறையைக் கவிழ்க்கவும் அரசின் அதிகாரத்தை அழிக்கவும் முயற்சித்திருக்கிறார்கள் என்று அவ்விரு தொழிலாளர்கள் மேலும் குற்றம் சாட்டி இருக்கின்றனர். சென்ற மார்ச்சில், Ferroalloy Factory -ல் தொழிலாளர், லஞ்ச ஊழலை விசாரிக்குமாறு கோரிய போது, பல உயர் அதிகாரிகளின் நலன்களை அது நேரடியாக அச்சுறுத்தியது. லையோயாங்- கின் அரசுடைமை தொழிற்சாலைகளில் நடந்த விசாரணை, ஊழலுக்கு இழிபுகழ் பெற்ற, மாநில கவர்னர் போ ஜிலாய் ஈடுபட்டது தெரியவந்தது. முன்னாள் கட்சியின் உயர் பொறுப்பிலிருந்த போ யிபோவின் மகனான, இம் மேயர் அண்மைய 16ஆவது கட்சி பேராயத்தில் இப்போதுதான் மத்திய குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். போராட்டத்தின்பின் ஃபெரோ அல்லாய் தொழிற்சாலை திவாலானதாக அறிவிக்கப்பட்டது. பெய்ஜிங்கில் தேசிய மக்கள் பேராயத்தில், லயோயாங் நகர மேயர் பத்திரிகையாளரிடம் வேலையில்லாமையே இல்லை எனக் கூற, மார்ச் 11 அன்று நடந்த பேரணியில் பெரும்பாலான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அவரது அறிக்கை ஆலை பணி நீக்கப்பட்ட தொழிலாளர்களைச் சினமூட்டியது, பத்தாயிரக்கணக்கானோர் "வாழ விரும்பும் ஆலைத் தொழிலாளர் படை", எனும் பதாகையின் கீழ் அணி வகுத்து நின்றனர். நகர மண்டபத்தில், கூட்டத்தாரிடையே யாவோ கூறியதாவது: "நாம் எமது இளமையை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அர்ப்பணித்தோம் ஆனால் முதுமையில் நம்மை யாரும் ஆதரிக்கவில்லை." யாவோ, தொழிலாளர்களை எதிர்ப்பு போராட்டங்களுக்கு அணிதிரட்டியதால் முன்பு இருமுறை சிறை சென்றார், மார்ச் 20ல் மீண்டும் பத்தாயிரம் தொழிலாளர் நகரக் கட்டிடங்களில் குழுமிய ஆர்ப்பாட்டத்தைத் தூண்டியதற்காகக் கைதானார். கடும் போலீஸ் ஒடுக்கலிலும், சிறிய எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. பெய்ஜிங்கில் உள்ள புது முதலாளித்துவத் தட்டின் அச்சத்தை, Commercial Swiss First Bank ஆய்ந்து கூறியவை கோடிட்டுக் காட்டுகின்றன. அது சீனாவில் பரந்த அளவில் வேலையின்மை மோசமடைந்திருக்கின்றது எனக் காட்டுகிறது. 1998-ம் ஆண்டு பணிநீக்கம் பெற்ற தொழிலாளர்கள் ஒவ்வொரு இருவரிலும் ஒருவர், 6 மாதத்தில் புது வேலையில் சேர, இன்றோ 10 பேர்களுள் ஒருவரே புது வேலையில் சேர்கிறார். ஆய்வானது, சீனா, பொருளாதார நிலையிலும் சமூக உறவுகளிலும் "வெடித்துவிடக் கூடிய புள்ளிக்கு" வந்துவிட்டதாக முடிவுரைத்துள்ளது. |