World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Canada: Mass protests against war on Iraq

கனடா: ஈராக் மீதான போருக்கு பெருந்திரளான மக்கள் எதிர்ப்பு

By a WSWS reporting team
20 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் மீது அமெரிக்கா படையெடுக்க விருப்பதை கண்டித்து கனடாவில் சனிக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களுக்கு வந்து தங்களது எதிர்ப்பு குரலை எழுப்பினர். அமெரிக்க - ஈராக் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வுகாணவே ஆதரிப்பதாய் பாவனை செய்து, ஈராக்கில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை ஆதரித்தும், அதற்கான படைகள், விமானங்கள், மற்றும் போர்க் கப்பல்களை திரட்டிவரும் கனடாவின் லிபரல் அரசாங்கத்தையும் இலக்காக வைத்து இந்த போர் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நிகழ்ந்தன.

மொன்ட்ரியலில்தான் மிகப்பெரிய ஆர்பாட்டம் நடைபெற்றது. 25,000 தொழிலாளர்களும், இளைஞர்களும் -20டிகிரி சென்டிகிரேட் குளிரையும் பொருட்படுத்தாமல் பிரதான சமஸ்டி அரசாங்க மாளிகையை நோக்கிப் பயணித்தனர். பேரணியின் ஒருங்கிணைப்பாளர்கள் எதிர்ப்பார்த்ததைவிட மக்கள் கூட்டம் ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது.

டொரன்டோவில் குறைந்தது 10,000 பேராவது கடுமையான குளிர் காலநிலையிலுக்கு மத்தியிலும் பேரணியில் கலந்துகொண்டனர். வான்கூவரில் மக்கள் கூட்டம் 7,000 என மதிப்பிடப்பட்டது, ஒட்டாவாவில் 3,000, ஹலிஃபாக்ஸில் 2,000க்கு மேல் மற்ற நகரங்களில் சிறிய அளவு ஆர்பாட்டங்களாக க்யூபெக், வின்னிபெக், சஸ்கடூன், எட்மன்டன் மற்றும் கல்கேரி ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

ஈராக் மீதான போரை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் பலதரப்பட்ட சமூகத்தட்டுகள் மத்தியிலும் பிரபலம் அடைந்து வருகிறது எனபதை காட்டுகிறது. தொழிற்சங்கத்தினர்கள், மாணவர்கள், குடியேறிய தொழிலாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களும் இந்த ஆர்பாட்டக்காரர்களில் அடங்குவார்கள்.

உலக சோசலிச வலைத் தளத்தை சேர்த்த ஆதரவாளர்கள், மொன்ட்ரியல் மற்றும் டொரன்டோ ஆர்பாட்டங்களில் தலையீடு செய்து WSWS அறிக்கையான, ''போருக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்'' என்பதை ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் 1,500 பிரதிகளை விநியோகம் செய்தனர்.

போரைக் கண்டித்து பிரபலமாகிவரும் எதிர்ப்பை சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு புஷ் நிர்வாகத்தையும் போர் கொள்கையை மட்டுமல்லாது, முதலாளித்துவ அமைப்பையும் எதிர்க்கும் ஒரு பரந்துபட்ட அரசியல் இயக்கமாக மாற்றிட WSWS விடுத்த அழைப்புக்கு சாதகமான ஆதரவு இருந்தது. முக்கியமாக டொரன்டோவில், குறிப்பிடத்தக்களவான மக்கள் தாம் ஏற்கனவே WSWS இனை வழமையாக வாசிப்பதாக கூறினர். ஒருவர் 50 டொலர்களை வலைத்தளத்திற்கு நன்கொடையாய் வழங்கினார்.

சமஸ்டி லிபரல் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுவதே பேரணி ஒருங்கிணைப் பாளர்களின் முன்னோக்காக இருந்தது. மேலும், புஷ் நிர்வாகத்தின் போர் நோக்கங்களுக்கு எதிராக, கனேடிய மற்றும் க்யூபெக் நலன்களை பாதுகாக்கும் ஒரு தேசியவாத முன்னோக்கை முன்வைத்தனர். உண்மையில் இந்த அமெரிக்க போரின் நோக்கமானது, உழைக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கைத்தரத்தை குறைத்து, பொது சேவைகளை ஒழித்து, வருவாய் வரும் நிலைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, குறைந்த ஊதிய தொழிலுக்கு வழியமைப்பதை நோக்கமாக கொண்ட கனேடிய முதலாளித்துவம் உள்ளடங்கலான பெரிய முதலாளிகளின் நலன்களின் பெயரால் செய்யப்படுகின்றது.

மொன்ட்ரியல் ஆர்பாட்டத்தில் பிரபல கலைஞர்களும், நடிகர்களும் பிரதான பேச்சாளர்களாக இருந்தார்கள். டொரன்டோவில் கனடாவின் சமூக ஜனநாயக கட்சியும், புதிய ஜனநாயக கட்சியின் அரசியல்வாதிக்கு மேடையில் மீண்டும் மீண்டும் பேச இடமளிக்கப்பட்டது. அவர்களில் சமஸ்டி NDP தலைமைக்கு போட்டியிடும் ஜோ கொமார்ட்டினும் (Joe Comartin), ஜாக் லேட்டனும் (Jack Layton) பதவியிலிருந்து விலகவிருக்கும் சமஸ்டி NDP தலைவர் அலெக்சா மெக்டொனாவும் (Alexa McDonough) அடங்குவர்.

ஐக்கிய நாடுகள் சபையை புஷ் நிர்வாகத்தின் போர் தாகத்தை தடுத்து நிறுத்தும் ஒன்றாக மெக்டொனா கூறியபோதும், கடந்த 10 ஆண்டுகளாக ஈராக் மீது தண்டனையாக விதித்த பொருளாதார தடைகள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலோடே நிறைவேறியவை ஆகும். ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் அங்கம் வகிக்கும் பெரிய நாடுகள், யுத்தத்தின் பின்னர் தங்கள் பொருளாதார மற்றும் பூகோள அரசியல் நலன்களுக்கு வாஷிங்டன் உத்தரவாதம் வழங்கும் என்று உத்தரவாதம் தருமானால் அமெரிக்காவின் படையெடுப்புக்கு நிபந்தனையோடு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளன.

''போரை எதிர்ப்பதற்காக சர்வதேச கட்டமைப்புக்களை உருவாக்க கடந்த 50 ஆண்டுகளாக பாடுபட்டு உழைத்ததுதான் ஆபத்தில் உள்ளது'' என மெக்டொனா கூறுகின்றார். ''நாம் சர்வதேச சட்டத்தின் பக்கம் உள்ளோம். ஐ.நா. ஆயுத பரிசோதகர்கள் தங்கள் கடமையை செய்து முடிக்க அமைதி தேவை என்று உலகம் முழுவதும் கூறும் மக்களின் பின்னே நாம் நிற்கிறோம்'' எனவும் தெரிவித்தார்.

ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பில், ஐ.நா. அனுமதித்தாலும் இல்லாவிட்டாலும் கனடா அதில் கலந்துகொள்ளும் என்று அறிக்கை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர் ஜான் மெக்கல்லமிடமிருந்து (John McCallum) தாங்கள் உறவை துண்டித்துக் கொள்வதாக விமர்சித்த லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை பெரும்பாலான பேச்சாளர்கள் பாராட்டினர். உண்மையில் இவர்களின் கவலை என்னவென்றால், Chretien இன் லிபரல் அரசின் கொள்கை எவ்வாறு தொடருவது என்பதுதான்.

ஈராக் மீதான போரை ஐ.நாடுகள் தடுத்துவிடும் எனவும், இது அதற்கு சர்வதேச அளவில் சட்டபூர்வமான தன்மையையும் வழங்கும் எனவும் Chretien நம்புகிறார். இதுவரையில் தம் மீதான அமெரிக்க நிர்பந்தத்தை தளர்த்தவும், பாரம்பரியமான தங்களின் சொந்த நலன்களை பாதுகாக்கவும் உதவும் பலமுனை கூட்டணி மற்றும் நிறுவனங்கள் உடைந்துவிடாமல் இருக்கவும் உதவும் என்று Chretien நம்புகின்றார்.

பேரணியில் டொரன்டோவின் யோர்க் பல்கலைகழகத்தின் ஈராக்கிய மாணவனான மினா சாகிப், 1980களில் சதாம் ஹூசேனின் ஆட்சிக்கு வாஷிங்டன் கொடுத்த ஆதரவை சுட்டிக்காட்டியபோது அவருக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. ஈராக் மக்களின் நலன்களில் அக்கறையுள்ளதாக பாசாங்கு செய்யும் அமெரிக்கா, ஈராக்கின் எண்ணை வளங்களை பிடியில் தக்கவைத்துக்கொள்ளவே முயல்கிறது என்று சாடினார். ''நான் இங்கே நின்று பார்க்கும்போது, நீங்கள் குளிரில் நின்றுகொண்டிருக்கின்றீர்கள். நாம் இங்கிருந்து அகன்று சென்று, வசதியை தேடி நம் வீடுகளுக்கு செல்லவேண்டாம் என நான் கூறிகின்றேன். இன்னும் குளிரில் இருப்போம், எண்ணைக்காக படுகொலைகளை நியாயப்படுத்தும் இவ்வுலகில் நாம் வாழமாட்டோம் என்பதனை உரத்த குரல் கொடுத்து நம் அரசுகளுக்கு சொல்வோம்'' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முதலாளித்துவத்தால் உந்தப்படும் எண்ணெய்க்கான ஒரு போர்

டொரான்டோ பேரணியில் கலந்துகொண்ட பலரையும் WSWS பேட்டி கண்டது. 26 வயதான வேலையில்லா கம்பியூட்டர் புரோக்கிராமர், நெய்ல், ஒரு ஓவிய கலைஞன். இதுதான் தான் முதல்முறையாக கலந்துகொள்ளும் ஒரு ஆர்பாட்டம் என்றார். அவர் ''அமெரிக்காவின் குறிக்கோளை அடிப்படையில் திருப்தி செய்யும் வகையில்தான் கனடா உள்ளதும், அவர்கள் அமெரிக்காவோடு சேர்ந்துகொண்டு அடுத்த போரை ஆரம்பிக்கும் வரை ஐ.நா ஒரு மூடுதிரையாக தொழிற்படும். அமெரிக்கர்கள், சென்றமுறை ஐ.நா. பாதுகாப்பு சபையின் அங்கத்தவர்களுக்கு கைலஞ்சம் வழங்கியும், அச்சுறுத்தியும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தை வாங்கிக்கொண்டனர் என்பது எனக்குத் தெரியும்'' என்றார். அதனால், மீண்டும் அதுவே நிகழப்போகிறது என்று தான் நான் நினைக்கிறேன். ஐ.நாடுகள் சபை போருக்கு எதிரான ஒரு பாதுகாவலான இருக்காது என்று நினைக்கிறேன். ஏனென்றால் கடந்த காலத்தில் அது அவ்வாறு இருந்ததில்லை'' என கூறினார்.

அவர் தொடர்ந்து ''ஆப்கானிஸ்தானில் பணியாற்றிக்கொண்டிருந்த கனேடிய படை வீரர்கள் மீது அமெரிக்க விமானிகள் குண்டு போட்டதற்கான விசாரனை பற்றிய சர்ச்சை இன்னும் தொலைத்தொடர்பு சாதனங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதை சுற்றி எழுந்த தேசிய கனல் என்னை பாதிப்புக்குள்ளாக்கியது. இந்த நான்கு கனேடியன்கள் இறந்ததில் எனக்கு வருத்தம் தான். ஆனால் உண்மையில் நான்கு கனேடியன்கள் அகப்பட்டதால் தான் இந்த சர்ச்சைக்குரிய பெரும் இரைச்சல். ஆப்கான் மலைஜாதி மக்கள் கூட்டத்திற்கு குறிபார்த்துதான் அக்குண்டு போடப்பட்டது என்ற இச்சம்பவம் தான் என்னை உண்மையாகவே மனதை பாதித்தது'' என்று கூறினார்.

WSWS இன் தவறாது படிக்கும் வாசகரான ஷெளகத், "அமெரிக்க, ஈராக் மக்களுக்கு எதிராகத்தான் புஷ் நிர்வாகத்தின் போர் திட்டம் இயக்கப்படுகிறது. இப்போர் சட்டவிரோதமானதும், நெறிக்கு புறம்பானதுமாகும். இந்த காலத்தில் போர் என்பது தேவையற்ற ஒன்றாகும்.'' என வலியுறுத்தினார்.

''உண்மையில் இந்தப் போர் எதற்காக? இது பேரழிவு தரக்கூடிய ஆயுதங்களைப் பற்றி அல்ல. அவைகளின் கையிருப்பு யாரிடம் மிக அதிகமாக உள்ளது, அதை எவரேனும் பயன்படுத்தியுள்ளார்களா? விடைகள் எல்லாம் நன்கு தெரிந்ததே: அது அமெரிக்க அரசுதான்'' எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் ''இந்த போர் எண்ணெயையும் உலக ஆளுமையையும் பற்றியது. அது அமெரிக்க மக்களுக்கு எதிரானதும் கூடத்தான். அது தொன்றுதொட்டு வரும் அமெரிக்க கொள்கையாகும்'' என்றார்.

WSWS இற்கு ஷெளகத் பாராட்டுதல்களை தெரிவித்தார். ''இந்த இணைய பக்கம் சக்தி உடையதும், தகவல் மிக்கதுமாக உள்ளது'' என்றார்.

ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவனான மைக், ''தான் அரசியலுக்கு புதிதென்றும், அநேக கேள்விகளுக்கு விடை தெரியவில்லை'' என்றும் கூறினார். எவ்வாறிருந்தபோதிலும், எதிர்வரும் போரைப்பற்றி கவலை கொண்டுள்ளதாக கூறினார். ''இந்தப் போர் ஒரு கேலிக்கூத்து, அது எதையும் தீர்க்கப்போவதில்லை. ஏராளமான மக்கள் கொல்லப்படுவர் மற்றும் காயமடைவர், எதற்காக? ஒரு சிறப்பான தீர்வு இருக்கவேண்டும். ஜோர்ஜ் புஷ் புத்தி சுவாதீனம் இல்லாதவர். சதாம் ஹூசேனை காட்டிலும் அவர் மேன்மையானவர் இல்லை. மற்ற நாடுகளைவிட அமெரிக்கா தான் அதிக அணு ஆயுதங்களை தயாரிக்கிறது'' என்றார்.

''புஷ் நிர்வாகம் எதற்காக போருக்கு செல்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் புஷ் ஒரு இனவெறியர். ஈராக் ஒரு மத்திய கிழக்கு நாடாக இல்லாமல் இருந்தால், அவர் அதை தாக்க மாட்டார். இது எண்ணைக்காகவும் மற்ற பொருளாதார அம்சங்களுக்காகத்தான் என்று தெளிவாகத் தெரிகிறது'' என அவர் கூறினார்.

ஒரு ஈராக் மாணவன் திட்டமிட்ட இப்போரை முதலாளித்துவம் என்றதோடு ''இது முதலாளித்துவ உந்துதலில், எண்ணெய்க்காக நடக்கும் போர்'' என்றார்.

See Also :

போருக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

ஈராக் மீது அமெரிக்கா தொடுக்கும் யுத்தத்திற்கு கனடா ஆதரவை தீவிரப்படுத்துகின்றது

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

Top of page