World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா

Russian elections: Putin consolidates regime of "managed democracy"

ரஷ்யத் தேர்தல்கள்: "நிர்வகிக்கப்படும் ஜனநாயக" அரசாங்கத்தை புட்டின் உறுதியாக்குகின்றார்

By Vladimir Volkov
18 December 2003

Use this version to print | Send this link by email | Email the author

ரஷ்யாவின் டூமாவிற்கு (நாட்டின் பாராளுமன்றத்திற்கு) டிசம்பர் 7ம் திகதி நடைபெற்ற தேர்தல்கள், மில்லியன் கணக்கான குடிமக்கள், "சந்தைச் சீர்திருத்தங்களினால்" பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தோற்றுவிக்கப்பட்டிருந்த நிலைமைகளில் கொண்டிருந்த அதிருப்தியுற்ற நிலையின் உருக்குலைந்த தன்மையின் வெளிப்பாடாகத்தான் அமைந்தது. சமூக நலன்புரிகள் தொடர்ந்து தகர்ப்பிற்கு உட்படுதல் பற்றியும், வாழ்கைத்தரச் சரிவுகளினாலும் வளர்ந்து வரும் சமூக சமத்துவமற்ற நிலையினாலும், மக்களிடையே விரோதப்போக்கு பெருகி வருவதைத்தான் மக்கள் வாக்கெடுப்பு காட்டியது. அதேநேரத்தில், முன்னாள் ஸ்ராலினிஸ்டுகள் ஒழுங்கற்றவகையில் திரிக்கும் முறையிலும், குற்றஞ்சார்ந்த வர்த்தகர்களின் எழுச்சியும் உள்ள முறையில், வேறு எந்த மாற்றும் இல்லாத நிலையில்தான் மக்கள் உள்ளனர்.

"ஐக்கியப்பட்ட ரஷ்யா" என்னும் கொள்கையற்ற அரசாங்க அலுவலர்களையும், பெரு முதலாளிகளின் தலைவர்களையும், தங்கள் உடைமைகள் அனைத்திற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை நம்பியிருக்கும் கிரெம்ளின்-சார்புடைய கட்சிதான் இத்தேர்தல்களில் முக்கிய வெற்றியாளராக வெளிவந்துள்ளது.

இக்கட்சி மொத்தத்தில் 37 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, நாட்டின் டூமாவின் கீழ்மன்றத்தில் (மக்களவையில்) மொத்தம் 450 இடங்களில் 200 உறுப்பினர்களை பெறும் உத்திரவாதத்தைக் கொண்டுள்ளது. இது பாராளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தத் திறமையுடன் போதுமென்பதுடன், தேவையானால், தனக்கு பொருத்தமானால் ரஷ்ய அரசியலமைப்பையே சட்டபூர்வமாக மாற்றுவதற்கும் போதுமான ஆற்றல் கொண்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பின் மற்றொரு முக்கிய விளைவு, இரண்டு முக்கிய தாராளவாத கட்சிகளான, வலது சக்திகளின் ஒன்றியத்தினதும் (Union of Right Forces), யாப்லொகோவினதும் (Yabloko) சரிவு ஆகும். தலா 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளதால், வெவ்வேறு ஆட்சி குழுக்களால் மிகப்பெரிய அளவில் பண கொடுக்கல் நடத்தப்பட்டபோதிலும் மற்றும் செய்தி ஊடகத்தில் இவை தீவிரப் பிரச்சாரம் செய்திருந்தபோதிலும் இவை டூமாவிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டன. தேர்தல்களில் இக்கட்சிகள் நசுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது, Yegor Gaidar உடைய "அதிர்ச்சி வைத்தியத்தினால்" விளைந்த சமூக பேரழிவுடனும், Anatoly Chubais உடைய கொள்ளைமுறை தனியார்மயமாக்குதலுடனும் இவர்கள் அடையாளம் கொள்ளப்பட்டதாலும் விளக்கப்படமுடியும்.

டிசம்பர் 7ம் திகதி, தேசியவாதிகள் அடைந்த வெற்றி, தீவிர வலதுசாரி மக்களைக் கவரும் கொள்கைகளைக்கூறும் தேசியவெறிமிகுந்த V. Zhirinovsky யினால் வழிநடத்தப்பட்ட தாராள ஜனநாயக கட்சி பலமுற்றதை முதன்முதலாக காட்டியுள்ளது. "ரஷ்யர்கள், ஏழைகளுக்காக" என்ற கோஷத்தின் அடிப்படையில் பிரச்சாரம் நடத்திய தாராள ஜனநாயகவாதிகள், கிட்டத்தட்ட 12 சதவிகித வாக்குகள் அதிகமாகப் பெற்றனர். ஷிரினோவ்ஸ்கியின் வாக்கு அதிகரிப்பு அதிகாரிகளின் தீவிர ஆதரவினாலும், கடந்த சில வாரங்களாக அநேகமாகத் தினமும் இவருடைய கூத்துக்களை ஒளிபரப்பிய பெரும் தொலைக்காட்சி அமைப்புக்களினாலும் சாத்தியமாயிற்று.

"தாய்நாடு (Motherland)", என்ற வாக்குகள் தொகுப்பு குறிப்பிடத்தக்க வகையில் 9 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. இந்தத்தொகுப்பு, பொருளாதார நிபுணரும், கைடரின் (Gaidar) மந்திரிசபையில், பழைய மந்திரியுமான எஸ் கிளேஷிவ்ஷி (Glaziev) தேசியவாத-மக்கள் ஈர்க்கும் கட்சியின், 1996 ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் ஏ.லெபட்டின் பங்காளியுமான, டி.ரோகோஜின், ஆகியோரால் வழிநடத்தப்பட்டு, தேர்தலுக்குச் சில வாரங்கள் முன் தான் நாட்டின் இயற்கை வளங்களை தேசியமயமாக்குவது உட்பட ஒரு திட்டத்தை அறிவித்திருந்தது.

"தாய்நாடு" கூட்டிற்கு, கம்யூனிஸ்ட் கட்சியை வலுவிழக்கச் செய்யும் என்ற கருத்துடனும், புட்டின் நிர்வாகம் சில "சுயநலக்குழுக்களின்" (oligarchs) மீது தாக்குவதற்குப் போர்வைபோலச் செயல்பட வழிவகைசெய்யும் என்பதாலும், கிரெம்ளின் இதற்குத் தன்னுடைய ஆதரவைக் கொடுத்தது.

இறுதியாக, இந்தத் தேர்தல்கள், G. Zyuganov வின் ரஷ்யக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPRF) செல்வாக்கில் கணிசமான சரிவைக் காட்டியது. இதுகாறும் இல்லாத அளவு குறைந்த (13 சதவீதம்) வாக்குகளையே இதனால் சேகரிக்கமுடிந்தது. 1990கள் முழுவதும் ரஷ்யக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சி சமூக அதிருப்திகளை, அபாயமில்லாத வழிகளில் திருப்பிவிடும் அரசியல் கருவியாகச் செயல்பட்டுவந்தது.

இக்கட்சி, அநேகமாக எல்லா முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்சினைகளிலும் அரசாங்கத்தோடுதான் சேர்ந்திருந்தது: சோவியத் ஒன்றியத்தைக் கலைத்தல், தனியார்மயமாக்கும் திட்டங்கள், செச்சனியா போர்கள், ஈராக்கியப்போரில் அமெரிக்க ஆக்கிரமிப்பு பற்றிய கிரெம்ளினுடைய வளைவுகள் நிறைந்த பாதை என்று அனைத்தும் இதில் அடங்கும். தன்னுடைய "பெரிய ராஜந்திரியின் பொறுப்பையும்" புதிய ஆளும் செல்வந்த தட்டினரிடம் முறிக்கமுடியாத பிணைப்புக்களையும் பலமுறை நிரூபித்துள்ளது. ரஷ்யக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியுடைய அரசியலின் உண்மை இயல்பு, இப்பொழுது பெரிய வசதிபடைத்த தட்டினருடன் கொண்டுள்ள நேரடி கூட்டுகளின் வழியாக உறுதியான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சமீபத்திய தேர்தலில், தன்னுடைய கூட்டமைப்புப் பிரதிநிதிகள் பட்டியலில் நிறைய பெருவர்த்தக பிரதிநிதிகளை கொண்டிருந்தது.

பொதுவிவாதங்கள் இல்லை

எந்த முக்கியப் பிரச்சினையும் விவாதத்திலுருந்து ஒதுக்கிவிட்டதுதான் இந்தத் தேர்தல் பிரச்சினையில் குறிப்பிடத்தக்கது ஆகும். வெற்றிபெற்றுவிட்ட "ஐக்கியப்பட்ட ரஷ்யா" கூட்டு தொலைக்காட்சி விவாதங்களில்கூட பங்கு பெறுவதற்கு இறுமாப்புடன் மறுத்துவிட்டது. Nezavisimaia Gazeta என்ற நாளிதழின் பார்வையாளர், டிசம்பர் 5ம் தேதி "இந்தக் காலகட்டத்தில், தேர்தலுக்கு முந்தைய அறிக்கைகள், அரசியலில் ஒருமித்த கருத்தைத் தெரிவிக்கின்றன. முக்கிய கட்சிகள் அனைத்தும், இன்றைய நிலை பற்றிய மதிப்பீட்டில் தொடங்கி, அவசரமாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளில் முடியும் வரை, அநேகமாக ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒன்றோடொன்று உடன்பட்டிருக்கும் வகையில்தான் தங்கள் கருத்துக்களைக் கூறியிருக்கின்றன." என எழுதினார்.

கட்டுரையாளர் தொடர்ந்து "...ரஷ்ய வாக்காளர்கள் மிக மிகக் கடினமான தேர்வை எடுக்கவேண்டியிருந்தது. வருந்தத்தக்க வகையில், இது ஒன்றும் வேலைதிட்டங்கள், சித்தாந்தங்கள், அரசியல் மூலோபாயம் பற்றி இல்லை; வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிப்பதா அல்லது வீட்டிலேயே இருந்துவிடுவதா என்பதுதான் அது. அல்லது, போய் "எல்லாருக்கும் எதிராக" வாக்களிக்கலாமா என்ற விருப்பமும் இருந்தது. ஏனெனில், மற்ற கட்சிகளிலிருந்து வேலைத்திட்டங்களை ஒவ்வொரு கட்சியும் பிரதிபண்ணியது, வாக்களார்களை அவமதிப்பதின் அடையாளமாகும். அவை, வாக்காளர்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுவார்கள் என்று நினைக்கின்றன. பல கட்சிகளும் ஒரே வேலைதிட்டத்தை உறுதியளித்து, தனித்தனிவழியில் சென்று, அதேநேரத்தில் ஒன்றுக்கொன்று ஒருகாலும் ஒன்றுசேராத விரோதிகள்போல் இருக்கமுடியும் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்ளமுடியம்." என எழுதினார்.

இதன் விளைவாக, 1996, 1999 தேர்தல்களைவிட வாக்குகள் இடப்பட்ட சதவிகிதம் குறைவாகப் போயிற்று. பலவிதமான கணக்குத் தந்திரங்களைப் பயன்படுத்திதான், மத்திய தேர்தல் ஆணையம் வாக்குப் போடும் உரிமையுள்ளவர்களில் 60 சதவீதம் வாக்களித்தனர் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பை ஏற்றாலும், வெற்றிபெற்ற புட்டின் சார்புடைய கட்சிக்கு சாத்தியமான மொத்த வாக்குகளில் 20% தான் கிடைத்தது.

பெரும்பாலான ரஷ்ய உழைக்கும் மக்கள், எந்த அக்கறையும் காண்பிக்காதது தேர்தலின் மற்றொரு அம்சமாகும். போட்டியிட்ட எல்லா கட்சிகளும், அமைப்புக்களும், பெருவர்த்தகத்தையும், அரசாங்க அதிகாரத்துவம் சார்பாகக் கொண்டிருந்தவையாகும். அவை வேறுபாடு கொண்டிருந்த அளவின் ஒரே தன்மை, எந்த அளவிற்கு அவர்கள் "சந்தை" அல்லது "அரசு" பக்கம் விசுவாசமாக இருக்கின்றனர் என்பதையும், சமூகத்தில் அரசியல் கவர்ச்சியைக்காட்டும் தன்மை இருந்த கட்சியையும் பொறுத்து இருந்தது. ஆட்சிக்கு மிகப்பெரியமுறையில், விசுவாசமாக இருப்பவர்கள்கூட கீழ்க்கண்டதை ஏற்கும் கட்டாயத்திலிருந்தனர்: Nezavisimaia Gazeta என்ற பத்திரிகையின் பழைய முதன்மை ஆசிரியரான Vladimir Tretiakov இப்பொழுது அரசாங்கச் சார்புடைய Rossiiskaia Gazeta உடைய கட்டுரையாளர், நவம்பர் 20 அன்று "சாதாரண மனிதனுடைய அறவழி, கலைநயம் உடைய வாழ்க்கைத் தரங்கள் பற்றியோ அல்லது குறைந்த அளவு அக்கறைகளைப்பற்றியாவது கவலைகொள்ளும் ஒரு அரசியல் கட்சிகூட இல்லை." என எழுதினார்.

அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை

இந்தத் தேர்தல்கள், ஜோர்ஜியா, மோல்டோவா சம்பவங்கள் தொடர்பாக வாஷிங்டனுடனான உறவுகள் சீர்குலைந்த நிலைமையிலும், செச்சன்னியாவில் உள்ள தொடர்ந்த போரினினால் காணப்படும் உறுதியற்ற பின்னணியிலும் நடைபெற்றன. டிசம்பர் 5ம் தேதி, வாக்குப்பதிவிற்குச் சற்று முன்னராக, தெற்கில் யெச்சென்டுகி (Yessentuki) என்ற இடத்தில் உள்ளுர் இரயில் ஒன்றில் ஒரு வெடிகுண்டுச் சேதத்தினால் 41 பேர் கொல்லப்பட்டதுடன், 150 பேர்வரை காயமுற்றனர். டிசம்பர் 9ம் தேதி வாக்குப்பதிவிற்குப்பிறகு, மற்றொரு தகர்ப்பு இம்முறை மாஸ்கோவில் ஹோட்டல் நாஷனலுக்கு அருகில் ஏற்பட்டது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் காயமுற்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பெரும்பாலான மக்களுக்கும் சமூகத்தில் பிரிந்து நிற்கும் சிறிய "புதிய ரஷியன்" தட்டு வர்த்தகர்களுக்கும் உள்ள பெரிய பிளவுதான் ரஷ்யாவின் உறுதியற்ற தன்மைக்கு தீனி போடுகிறது. கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள், இந்த சமூக வாழ்வின் இன்றியமையாத உண்மையை விளக்கிக் காட்டுகின்றன.

*2002 கணக்கெடுப்பின்படி, ரஷ்யாவில் 1 மில்லியன் வேலைகொடுப்போரும், கிட்டத்தட்ட 2 மில்லியன் வர்த்தகர்களும், தங்கள் சொத்துக்களையோ, வசிக்கும் வீடுகளையோ வாடகைக்கு விட்டு வாழும் 600,000 நிலப்பிரபுக்களும் இருக்கிறார்கள். மொத்தமாக எடுத்துக் கொண்டால், இது, "இழப்பதற்கு ஏதேனும் உள்ளவர்கள்" என்ற 3.6 மில்லியன் மக்கள் தொகுப்பாக ஆகிறது. மற்றொரு புறத்தில் 140 மில்லியன் மக்கள் ஊதியத்திலும், ஓய்வூதியத்திலும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்; அதிகாரபூர்வமான புள்ளவிவரங்களின் மதிப்புப்படியே இவர்களுடைய சராசரி மாத வருமானம் 150 டாலருக்கும் குறைவாகும்.

*அரசாங்க ஆதாரங்களே, 1991ல் ரஷ்யக் கூட்டமைப்பிற்குள், மக்கட்தொகையில் மிகவும் செல்வம் கொழித்திருந்த 10 சதவிகிதத்தினரின் வருமானம், மிக வறுமையில் வாடும் ஏழைகளுடையதை விட 4.5 மடங்கு அதிகமானது என்று தெரிவிக்கின்றன. 2000ம் ஆண்டின்போது, இந்த விகிதம் 14.3 என்று போயிற்று. சில கருத்தாய்வுகளின்படி, செல்வம் கொழிக்கும் 2 சதவிகிதத்தினர், நாட்டின் மொத்த வருமானத்தில் 33.5 சதவிகதத்தைக் கொண்டுள்ளனர்; மிக வறுமையிலுள்ள 10 சதவிகிதம் இந்த வருமானத்தில் 2.4 சதவிகிதத்தைத்தான் பெற்றிருக்கின்றனர்.

* 2001ம் ஆண்டின் முடிவில், ரஷ்ய Goskomstat (அரசாங்கப் புள்ளவிவர நிறுவனம்) தகவல்படி, வாழ்வதற்கு மிகக்குறைந்த தேவை 1600 ரூபிள்கள் என (கிட்டத்தட்ட 55 டொலர்) மாதத்திற்கு என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் தொகையான கிட்டத்தட்ட 50 மில்லியன் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர், இந்த மிகக் குறைவான தொகைக்கும் கீழேதான் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

*UBS Brunswick Warburg மூலதன வங்கியின் மாஸ்கோ அலுவலகத்திற்காக 2002 அறிக்கை ஒன்று ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்டது; இதன்படி, ரஷ்யாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனங்களின் மூலதனத்தில் 85 சதவீதம், 8 பங்குதாரர்கள் குழுவினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

* அமெரிக்க இதழான Forbes, 2003 பெப்பிரவரி மாதம், உலகத்தின் செல்வம் கொழிப்பவர்களுடைய சமீபத்திய பட்டியல் என ஒன்றை வெளியிட்டது; இதல் 17 ரஷ்யர்கள் 1 பில்லியன் டொலரை நிகர சொத்து உடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகையச் சமூக துருவப்படுத்தலும் இத்தகைய மாபெரும் செல்வக்குவிப்பு ஒரு மிகக்குறைந்த சிறுபான்மையிடம் இருப்பதின் அரசியல் விளைவுகளும், ரஷ்யாவில் ஜனநாயக ஆட்சி இருப்பதை ஏற்றுச் செயல்படுத்தமுடியாததாகச் செய்துவிட்டன.

மக்கள் செய்தி ஊடகம் கூட, இந்தச்சிக்கலின் கடுமையான நெருக்கடியை ஒப்புக்கொள்ள நேரிட்டுள்ளது. Rossiskaia Gazeta தன்னுடைய டிசம்பர் 2 இதழில், "இரண்டு ரஷ்யாக்கள்" என்ற மாதிரித் தலைப்பில், ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதை எழுதிய, Leonid Radzikhovsky கூறுகிறார்:

"ஏராளமான வறிய நிலையிலுள்ள வாக்காளர்கள், மில்லியனர் வேட்பாளர்கள் (50 சதவீதம் மேற்பட்ட வேட்பாளர்கள் டொலர்கணக்கு மில்லியனர்கள், அரசாங்கம் குறைத்து மதிப்பிட்ட பின்னரும்கூட), ... இவர்களுக்கிடையே பொதுவான அக்கறைகள் என்பது இருக்கமுடியாது என்பது வெளிப்படை; வேட்பாளர்கள், வாக்காளர்களோடு கொள்ளும் தொடர்பு நூலிழையிலுள்ள அரசியல் சாமர்த்தியப் பேச்சினால்தான்; இதையும்கூட அவர்கள் வாக்குப்பதிவு தினத்தன்றே கிழித்து எறிந்துவிடுகின்றனர். இந்த "முரண்பாடான தேர்தல்கள்" சமூக சரிவிற்கோ, ஒரு புரட்சிக்கோ வழிவகுக்காது; ஏனென்றால் மக்களிடையே புரட்சிக்கு தேவையான சூதுவாதற்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் இத்தகைய தேர்தல்கள் அரசியலிலிருந்து "அடி மட்டங்களை" அந்நியப்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட "உயர்மட்டங்களை" தீவிரமான அரசியல் ஆத்திரமூட்டலுக்கு உட்படுத்திவிடும் அச்சத்தைக் கொண்டுள்ளன."

"ஏதேச்சாதிகார வழிவகைகளினால்'' தீர்க்கப்படும் பிரச்சினைகள்

பரந்த அளவில் மக்களிலிருந்து அந்நியப்படுதலுக்கு ஆளும் செல்வந்த தட்டு சில கடுமையான ஜனநாயக நடவடிக்கைகளையும் எடுப்பதன் மூலம் பிரதிபலிக்கின்றது. இந்தப் போக்கு, புட்டினின் காலத்தில், யெல்ட்சின் காலத்தை விட அதிக தரங்களைக் கடந்துவிட்டது; இப்பொழுது அரசியல் வல்லுனர்களாலும், செய்தி ஊடகங்களாலும், "நிர்வகிக்கப்படும் ஜனநாயகம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த இடக்கரடக்கலின் பொருள், இந்தப்போக்கின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராகிய எஸ்.மர்கோவினால் (S. Markov) டிசம்பர் 2ம் திகதி ஜேர்மனின் Sueddeutche Zeitung பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியின் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இப்பேட்டியிலிருந்த ருசிகரமான தொகுப்பு பின்வருமாறு;

"கேள்வி: இந்த 'நிர்வகிக்கப்படும் ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது?"

"பதில்: இந்தக் கருத்து வெகு எளிமையானது. "நிர்வகிக்கப்படும் ஜனநாயகம்" என்பது ஒரு முறை. இதன் அடிப்படையில், ஜனநாயகமுறையால் தீர்வுகாணப்படக்கூடிய எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஜனநாயகத் தீர்வு காணமுடியும். ஜனநாயகத்தால் தீர்த்து வைக்கப்படமுடியாத பிரச்சினைகள், மற்ற வழிவகைகளால் தீர்த்துவைக்கப்படும்.

கேள்வி: எத்தகைய மற்ற வழிவகைகள்?

"பதில்: சர்வாதிகார முறையினால்.

"கேள்வி: எப்பொழுது ஜனநாயகமுறை, எப்பொழுது சர்வாதிகாரம் என்பதை யார் தீர்மானிப்பது?

"பதில்: ஜனாதிபதியும் அவருடைய நிர்வாகமும் அதை முடிவு செய்யும்."

இத்தகைய சர்வாதிகாரப் போக்குகளை வலுப்படுத்தும் கூறுபாடுகள், அடக்குமுறைக் கருவிகள் கூர்மையாக வைத்திருப்பதின் மூலம் தொடர்கின்றன. இவை சிறப்புப் படைகளை வைத்திருத்தல் ஜனநாயக, குடியுரிமைகள் மீதான பொதுத்தாக்குதல்கள், செல்வந்தர்களுக்காக ஆக்கிரோஷமான கொள்கைகளை மேற்கொள்ளுதல், என்பவற்றை அடக்கியதாகும். புட்டினின் மூன்றாண்டு காலம் இந்தத்துறையில் நல்ல தேர்ச்சியை அடைந்துள்ளது; 13% வருமானவரி புகுத்தப்பட்டது; மொத்த சமுதாய நலன்களுக்கான வரி 5% குறைக்கப்பட்டது; ஓய்வூதியச் சீர்திருத்தம் ஆரம்பமாகியது (இவை அனைத்து ஓய்வூதியங்களையும் தனியாரிடமுள்ள மூலதன நிதியங்களுக்கு மாற்றும் நோக்கத்தைக் கொண்டன.). ஏற்கனவே நலிந்துவிட்ட சமுதாயநலன்களுக்கான திட்டங்களையும், நலன்களையும் இன்னும் அழிப்பது அதிகமாகிவிட்டன; மின்சார திட்டங்கள் தொடர்பான சீர்திருத்தம் நீண்ட நாளாகத் திட்டமிடப்பட்டது, பொதுமக்கள் பணிசெய்ய வேண்டிய கட்டாயங்கள், போன்றவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அரசியல் முடிவுகள் திரைக்குப் பின் எடுக்கப்படுகின்றன, பாராளுமன்றத்தின் பணி வெறும் அலங்காரத்திற்கென்று ஆகிக்கொண்டு வருகிறது.

ரஷியாவில் தாராள-முதலாளித்துவப் பாராளுமன்றமுறை மிக இழிவான வரலாற்றையே கொண்டுள்ளது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜார் மன்னர் டுமாவை கூட்டுவதையும் கலைப்பதையும் தனது விருப்பப்படி செய்துகொண்டிருந்தார். 1917 பெப்ருவரிக்கும் அக்டோபருக்கிடையேயான ஒரு குறுகிய காலத்தில் பாராளுமன்றம் சுதந்திரம் பெற்றபொழுது, தொழிலாள வர்க்கத்தினதும் இராணுவ வீரர்களின் பிரதிநிதிகளுடைய ஆதிக்கத்தின் கீழ் வந்ததுடன், சமரசக் கொள்கைகளுடைய சோசலிச புரட்சியாளர்களின் (SR) மென்ஷிவிக் தலைமையில் ஒரளவு அதிகாரம் கொண்டது போல் தோற்றமளித்தது.

இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான, அலெக்சாந்தர் கெரென்ஸ்கி அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்கையில் இவரால் தீவிர வலதுசாரி மற்றும் சர்வாதிகாரியான ஜெனரல் கோர்னிலோவ் இன் ஆதரவைத்தான் தளமாகக் கொள்ளமுடிந்தது.

1918 ஜனவரியில், மக்களுடைய விருப்பத்தினை அடித்தளமாக கொண்ட புரட்சிக்கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி அதனை வெளிப்படுத்தியதின் மூலம், முதலாளித்துவமுறை பாராளுமன்றமுறையுடன் ஒப்பிடுகையில் அதிலிருந்து ஒரு உயர்வான வடிவத்தில் சோவியத்துக்களில் உள்ளடங்கியிருந்த ஜனநாயகமுறை மூலம் போல்ஷிவிக்குகள் மிகச்சிறிய அளவில் மக்களிடையே ஆதரவு பெற்றிருந்த அரசியலமைப்பு நிர்ணய சபையைக் கலைத்துவிட்டனர்.

70 ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்ராலினிசத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் ரஷியாவில் பலரும் பாராளுமன்றமுறை மீண்டும் இறுதியாக இந்த வரலாற்றுத்தன்மை பொருந்திய வாய்ப்பைப் பற்றி எடுத்துக்கொள்ளும் என்று நினைத்தனர். இந்த நம்பிக்கைகள் நீடிக்கவில்லை. 1993ம் ஆண்டு அக்டோபர் மாதம், யெல்ட்சினுடைய பீரங்கிகள் பாராளமன்றத்தைத் தாக்கியபொழுது, ரோமனோவ் மன்னர்களின் வரிசையில் கடைசியானவர் டுமாவிற்குக் கொடுத்த பங்கைப் போல் நாடு உட்படுத்தப்படும் அரசியலமைப்பு தோன்றியது. வரலாறு முற்றுமுழுதான ஒரு வட்டமாக திரும்பியது. பாராளுமன்றமுறை, 100 ஆண்டுகளுக்கு முன் தோன்றியபோது எத்தகைய விளைவுகளைக் கண்டதோ அதையேதான் இப்பொழுதும் கண்டது.

இந்தச் சமீபத்திய தேர்தல்களின் முடிவுகள், பாராளுமன்றமுறையின் முழுச்சரிவைத்தான் உறுதிசெய்துள்ளன. ரஷியாவில் இப்பொழுது "ஒன்றரைக் கட்சிமுறை", (அதிகாரத்தில் இருக்கும் கட்சி, மற்றும் பலபிரிவுகளின் தொகுப்பைச் சேர்த்தால் அதிகாரத்தின் பாதிப்பங்கை வைத்திருக்கும்) உள்ளது. பாராளுமன்றம் மக்கள்மீது எந்த அதிகாரத்தையும் கொண்டிராததுடன், தலைமை நிர்வாகி (ஜனாதிபதி), அதை தன்னுடைய நிர்வாகத்தால் வடிவமைக்கப்பட்ட சட்டங்களுக்கு ஒரு மெல்லிய ஜனநாயக உறையைக் கொடுக்கும் ரப்பர்-ஸ்டாம்ப் குத்தும் கருவியாகத்தான் பார்க்கிறார்.

இந்தத்தோற்றத்தில் அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ள புட்டினின் ஆட்சிக்கும் உறுதியான வரம்புகள் இருக்கின்றன. அது ஒரு குறிப்பிட்ட ஆளும்குழுவின் உறுப்பினரை அகற்றலாம் அல்லது ஒரு கவர்னரைத் தேர்ந்து எடுக்கலாம்; ஆனால், அது நம்பிக்கையுடன் கூடிய அரசாங்க இயந்திரத்தை அமைக்கவோ, சட்டங்களைச் செயல்படுத்தவோ, ஊழலுக்கெதிராகப் போரிடவோ, பிராந்தியவாத பிரிவினைவாதத்தை எதிர்த்தோ செயல்படமுடியாது.

உண்மையில், இந்த ஜனாதிபதியின் தோற்ற வலிமை, ஆட்சியின் பொதுவான செயலற்ற தன்மையின் மறுபக்கம்தான். கீழ்ப்பணிந்துள்ள பாராளுமன்றம், எவ்விதத்திலும் உறுதித்தன்மையையோ, "ஜனநாயகத்தையோ" காப்பாற்றும் பங்கைக் கொள்ளமுடியாது. இது அதிகாரிகள் மீது அயல்நாட்டிலிருந்தோ, உள்நாட்டிலிருந்தோ வரும் எந்த அதிர்ச்சியையும் அதிகமாக்கும். இதுதான் போனப்பார்ட்டிச ஆட்சியின் தர்க்கம்; "எல்லாவர்க்கங்களுக்கும் மேலாக" நிற்பதாக காட்டிக் கொள்ளும் முயற்சிகளில் இது அதிகமாக ஈடுபட முயற்சிக்கும்போது, சமுதாயத்தில் தோன்றும் உணர்வு உந்துதல்களுக்கு விடைகூறமுடியாது என்பது மட்டுமின்றி, எந்த உண்மையான சமுதாயப் பிரச்சினைகளுக்கும் எதிராக வலுவிழந்தே நிற்கும்.

ரஷ்ய பாராளுமன்றத்திற்கு எதிர்காலம் இல்லை

1921ம் ஆண்டிலிருந்து நிகழ்ச்சிகள், முதலாளித்துவ-தாராளக்கொள்கை பாராளுமன்ற முறை, ரஷ்யாவில் தனித்த, முன்னேற்றமான பங்கைக் கொள்ள முடியாது என்பதை முழுமையாக நிரூபித்துள்ளன. இந்த உண்மை, முதலாளித்தவ ஆட்சியல் காணப்படும் தொழில்நுட்ப, பொருளாதாரப் பின்தங்கிய கூறுபாடுகளின் ஒரு வெளிப்பாடுதான்.

பாராளுமன்றத்தின் அதிகாரம் முறையாகக் குறைக்கப்பட்டுவிட்டதால், அந்தப் போக்கு திரும்ப மாற்றப்படும் என்று எதிர்பார்ப்பதற்கு இடமில்லை. இருந்தபோதிலும்கூட, அதிகாரிகளும் அவர்களுடைய மேலைநாட்டுப் புரவலர்களும், இந்தத் தேர்தலுக்கு அப்படி ஒரு விளக்கம் கொடுத்துள்ளனர். வாக்குகள் முடிந்தபின், புட்டின் விளைவுகள் "ஜனநாயகப் பாதையை நோக்கச் சென்று கொண்டிருக்கின்றன" என்ற அடையாளத்தைக் காட்டுவதாகப் பிரகடனம் செய்தார். அதேநேரத்தில், புதிய சொத்துடையவர்களுக்கும் சர்வதேச நிறுவனுங்களுக்கும் ஆதரவான "சீர்திருத்தங்கள்" தொடர்ச்சியுடையவையாக இருக்கும் என்றும் இயல்பாகக் குறிப்பிட்டார்.

மேலைநாடுகளில், தேர்தல்களின் முடிவுகள், உறுதியான ஆனால் அளவோடு கூடிய விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் விளைவுகள் பெரும்பாலும் இரண்டாம் தரமானதாக்கப்பட்டன. இதற்குத் தக்க மாதிரியான எதிர்பார்ப்பு New York Times பத்திரிகை டிசம்பர் 8ம் தேதி ஒரு கட்டுரைக்கு கொடுத்த தலைப்பின்மூலம் காண இயலும்: "ரஷ்யா மிகச்சிறிய அளவு ஜனநாயகத்திற்கு அருகில் நகருகிறது."

தற்கால தாராளக்கொள்கைப் புராணப்படி, முதலாளித்துவ மேற்கு நாடுகள் ரஷ்யாவில் ஜனநாயக வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிப்பவை ஒன்றும் அல்ல. சர்வதேச மூலதனத்திற்கு இன்றியமையாத தேவை என்னவென்றால், தொடர்ந்து முதலாளித்துவமுறைச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த இலக்கு "தற்காலிகமாக", மேலை நாடுகளின், ஜனநாயகப் "புனித அடித்தளங்கள்" மீது கொண்டுள்ள பக்தியையும் கடந்து நிற்கின்றன. ஐரோப்பிய, அமெரிக்க அரசாங்கங்களின் பார்வையில், புட்டினின் சர்வாதிகாரம் "குறைந்த கெடுதல்" என்பதால் ஏற்கப்பட்டு தேவையானால் பயன்படுத்திக்கொள்ளப்படவும் வேண்டும் என்பதாகும்.

இந்தத் தேர்தல்கள், ரஷ்ய தொழிலாள வர்க்கத்திற்கு எதையும் கொடுக்கவில்லை. சோவியத் ஒன்றியம் விட்டுச்சென்றுள்ள சமுதாய, பொருளாதார மேன்மைகளை அழிக்கும் தாக்குதல்கள் கொண்ட கொள்கைகள் தொடரும். இயற்கை வளங்களை தேசியப்படுத்துதல் போன்ற சில நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டாலும், இவை உலக முதலாளித்துவமுறையின் நன்மைக்காக, அதிகாரத்துவத்தின் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் வளரும் சமுதாய நெருக்கடிகளை நெரித்து விடும் இலக்கோடுதான் செயல்படுத்தப்படும்.

டுமாவில் "ஜனாதிபதி சார்புடைய பெரும்பான்மை" அமைத்திடல் என்பது புதிய சமுதாயப் பிரிவுகளுடைய எல்லைகளை வரையறுக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். ஒழுங்குபடுத்தப்பட்ட உயர் சிறுகுழு ஆட்சியாளர்கள் பெரும்பாலான மக்களுக்கு எதிர்த்திசையில்தான் நிற்கின்றனர். நாட்டின் பிரச்சினைகளை முதலாளித்துவ சீர்திருத்தங்களின் அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட முடியாது என்பதைத்தான் இந்த நிலை தெளிவுபடுத்தும். இந்தச் சமூக, அரசியல் நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு, 1917 அக்டோபர் 17 ரஷ்யப் புரட்சியின் மிகச்சிறந்த சோசலிச, சர்வதேச போல்ஷிவிசத்தின் மரபுகளின் வழியில் நிலைகொள்ளும் புதிய தொழிலாள வர்க்கத்தின் கட்சியை அமைப்பதுதான் வழியாகும்.

Top of page