World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US occupation authority suppresses study of Iraqi civilian casualties

அமெரிக்க ஆக்கிரமிப்பு நிர்வாகம், ஈராக்கியச் சாதாரண மக்கள் இறப்புக்கள் பற்றிய ஆய்வை மூடிமறைக்கிறது

By Peter Symonds
15 December 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கில் தான் நடத்தும் குற்றங்களின் பரந்த தன்மையை மூடிமறைக்கும் வகையில், அமெரிக்க ஆக்கிரமிப்பு நிர்வாகம் ஒழுங்கற்றமுறையில், மார்ச் மாதம் ஆரம்பமாகிய அமெரிக்கத் தலைமையிலான படையைடுப்பின்போதும், அதற்குப் பின்னரும் குடிமக்கள் இறந்ததும், காயமுற்றதும் ஆன கணக்கெடுப்பை நிறுத்துமாறு நாட்டின் சுகாதார அமைச்சரக அலுவலர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

அமைச்சரகத்தின் புள்ளியியல் துறைத்தலைவர் டாக்டர் நகம் மோசென் (Dr Nagham Mohsen) கடந்த புதனன்று செய்தி ஊடகத்திற்கு, திட்ட இயக்குனர் டாக்டர் நாஜர் ஷாபண்டர் (Dr Nazar Shabandar)) கடந்த மாதம் தன்னை அழைத்து குடிமக்கள் இறப்புக்கள் பற்றி விவரம் தொடர்பான ஒப்பீடு செய்வதற்கு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்துவதை நிறுத்துமாறு கூறிவிட்டதாகத் தெரிவித்தார். அன்று வரை சேகரிக்கப்பட்ட ஓரளவு பகுதி தகவலையும் வெளியிடக்கூடாது என்று அவருக்கு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா திணித்துள்ள கைப்பாவை நிர்வாகமான ஈராக்கிய ஆளுகின்ற சபையிலுள்ள சுகாதார அமைச்சர் டாக்டர் கோடீர் அப்பாஸ் (Dr Khodeir Abbas) சார்பில் ஷாபண்டர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என மோசென் கூறினார். "எங்கள் அமைச்சருக்கு இதில் உடன்பாடு இல்லாததால், நாங்கள் இத்தகவல் சேகரிப்பை நிறுத்திவிட்டோம்" என்று இந்த அம்மையார் தெரிவித்தார். "CPA உம் [அமெரிக்கத் தலைமையிலான கூட்டணியின் இடைக்கால ஆணையமான] இச்சேகரிப்பை விரும்பவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.

அப்பாஸ் இப்போழுது ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்து சென்றுள்ளாலும், CPA இன் தூண்டுதலின்படி இதை மறுத்து அவரோ அல்லது அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகளோ இந்த உத்தரவைப் பொறுத்தவரையில் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். "போரினால் குடிமக்கள் இறப்பு ஆய்வு நிறுத்தப்படுவது ஒருபுறமிருக்க அப்படி சுகாதாரத்துறை அமைச்சரகத்தால் ஓர் ஆய்வு ஆரம்பிக்கப்பட்டதே எனக்குத் தெரியாது" என்றும் CPA அத்தகைய ஆய்வை நிறுத்துமாறு எனக்கு எந்த உத்தரவையும் கொடுக்கவில்லை" என மேலும் தெரிவித்தார்.

அப்பாஸின் கருத்துக்கள் சிறிதளவேனும் நம்பத்தகுந்தவையாக இல்லை. ஜூலை மாதம், அமைச்சரகம் ஈராக்கிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும், சிறப்பு மருத்துவமனைகளுக்கும், குடிமக்கள் போரில் கொல்லப்பட்டது அல்லது காயமுற்றது பற்றி முழுவிவரங்களையும் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்த ஆய்வு தொடங்கியது. ஆகஸ்ட் மாதத்திலிருந்தே இக்கருத்தாய்வு செய்தி ஊடகங்களில் ஆரம்ப எண்ணிக்கையாக 1,764 என்பது பொதுவாக வெளியிடப்பட்டது. செய்தி ஊடகத்தினாலும், மனித உரிமைகள் அமைப்புக்களினாலும் இறுதி அறிக்கை எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில் அப்பாஸோ அல்லது CPA வோ மீண்டும் ஆய்வைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை.

ஆரம்பத்திலிருந்தே, ஈராக்கிய இறப்புக்களைப்பற்றித் தான் ஒரு பட்டியலைத் தயாரித்துக்கொள்ள பென்டகன் மறுத்துவிட்டது. அமெரிக்க இராணுவச் செய்தியாளர்கள் குடிமக்கள் இறப்பு, காயம் பற்றிய செய்திகளை வருந்தத்தக்கதும் மற்றும் போரில் தவிர்க்கமுடியாத விளைவு என்றும், அமெரிக்க, கூட்டணிப்படைகள் குடிமக்களை இலக்காக கொள்வதை தவிர்த்துள்ளனர் என்றும் இகழ்வுடன் உதறித் தள்ளியிருக்கின்றனர். ஆனால் பலபுறங்களிலிருந்தும் வரும் செய்திகள் வேறுவிதமான கதையைத்தான் கூறுகின்றன: ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பது மட்டுமின்றிப் பலரும் பொறுப்பற்ற விமானக் குண்டுவீச்சினாலும், பரந்த அளவு பயன்படுத்தப்பட்ட தொடர்குண்டுக்களிலும் (Cluster Bombs) மடிந்தனர்.

Los Angeles Times 27 மருத்தவமனைகளில் நடத்திய ஆய்வு ஒன்றின்படி, ஈராக்கியத் தலைநகரில் மட்டும் அமெரிக்கப் படையெடுப்பு ஆரம்பித்த மார்ச் 20 லிருந்து ஐந்து வாரங்களுக்குள் குறைந்தது 1700 சாதாரணக் குடிமக்களாவது கொல்லப்பட்டனர் என்று கண்டறிந்தது. மார்ச் 20லிருந்து ஒரு மாத காலத்திற்குள், சுமார் பாதி அளவு ஈராக்கிய மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட விரிவான தகவல்களின் அடிப்படையில் Associated Press, குடிமக்கள் இறப்புத்தொகை 3240 என்று கணக்கிட்டிருந்தது.

அக்டோபர் கடைசியில், அமெரிக்க சிந்தனைக்குழு ஒன்றான Project on Defence Alternatives, மருத்துவமனைகளிலுள்ள குறிப்புக்கள் அதிகாரபூர்வமான அமெரிக்க இராணுவப் புள்ளி விவரங்கள் மற்றும் செய்தி அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், மார்ச் 20ல் இருந்து மே 1வரை பெரிய இராணுவ நடவடிக்கைகள் முடிந்துவிட்டன என்று புஷ் அறிவித்த தேதி வரை, 3,200லிருந்து 4,300 வரையிலான போரில் நேரடியாக ஈடுபடாத குடிமக்கள் சண்டையினால் கொல்லப்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஈராக்கிய உடல் எண்ணிக்கை (The Iraq Body Count) என்னும் அமைப்பு செய்தி ஊடகங்களில் வந்த தகவல்களைக் கவனத்துடன் ஒருங்கிணைத்து, இந்த எண்ணிக்கையை அதிகமாகவே கொள்ளுகிறது. மார்ச் 20லிருந்து, மே 1 வரை, 5,708 இருந்து 7,356 வரை ஈராக்கிய சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர் என்றும், இந்த எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கிறது. அதன் வலைத் தளத்தின் படி [www.iraqbodycount.net] கடைசியாக வந்த எண்ணிக்கையின்படி, இறப்பு எண்ணிக்கை 7,935லிருந்து 9,766க்குள் இருக்கலாம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், அமெரிக்காவில் உள்ள Human Rights Watch (HRW) என்னும் அமைப்பு மருத்துவமனைகளிலிருந்து கிடைக்கும் எண்ணிக்கைகூட முழுக்கதையையும் சொல்லாது என்று சுட்டிக்காட்டியுள்ளது. "மருத்துவ மனைகளிலுள்ள ஆவணங்களில் போர் இறப்புக்கள் பற்றி சில தகவல்கள் மட்டும் இருந்தாலும், குறிப்பிட்ட சதவிகிதம் மட்டும் சமய வழக்கங்களையொட்டி மரணச் சான்றிதழ் பெறக்கூட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை. இறுதியாக, எந்தப் போரிலும் உள்ளதைப் போலவே, சிலசந்தர்ப்பங்களில் இறந்தவரை அடையாளம் கண்டுகொள்ள மிகக்குறைவான தடையங்களே எஞ்சியிருந்தன.

Human Rights Watch கண்டறிந்தபடி, அமெரிக்க இராணுவமும் அதன் கூட்டாளிகளும் நேரடியாக உயர்ந்த இறப்பு எண்ணிக்கைக்குக் காரணமாயிருந்திருக்கின்றனர். "அமெரிக்க, பிரிட்டன் தரைப்படைகளால் மிகஅதிக அளவு பயன்படுத்தப்பட்ட தொடர்குண்டுகள் குறைந்தது நூற்றுக்கணக்கான குடிமக்கள் இறப்புக்களுக்காவது காரணமாகியுள்ளன.... அதிக மக்கட்தொகை நிறைந்த பகுதிகளில், தொடர்குண்டுகள் வீச்சு மிக ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும், அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் பலமுறை இவற்றை ஈராக்கிய நிலையிலும், மக்கள் வாழும் பகுதிகளிலும் பயன்படுத்தினர்." 12,000 இற்கும் மேலான தொடர்குண்டுக்கள் வீச்சின் வெடிப்பினால் 1.9 மில்லியன் சிறுகுண்டுகள் வெடிக்காமல் குடியிருப்புப் பகுதிகளிலும் பரவிக் கிடக்கின்றன.

இந்த அறிக்கை, பொறுப்பற்ற முறையில் விமானத் தாக்குதல்கள் நடத்தியதற்காக பென்டகனையும் குறை கூறியுள்ளது. "முக்கிய ஈராக்கியத் தலைவர்களை இலக்கு கொண்டு அமெரிக்கா நடாத்திய ஆகாயப்போரின் விளைவினால் பல குடிமக்கள் இறக்க நேர்ந்தது. செயற்கைக் கோள் தொலைபேசி தடுப்பு (Satellite phone) மற்றும் உறுதிசெய்யப்படாத உளவுமுறையின் ஆதாரம் போன்றவற்றை கொண்ட திறனற்ற இலக்கை எய்தும் வழிமுறையை அமெரிக்கா கடைப்பிடித்தது. செயற்கைக் கோள் தொலைபேசி சமிக்ஞைகள் 100 மீட்டர்தூரத்திற்குத்தான் துல்லியமான குண்டுவீச்சு இணைத் தகவலைக் கொடுக்கமுடியம். இத்தகைய துல்லியமற்ற தகவலின் அடிப்படையில், நகரப்புறத்தில் விமானத்தாக்குதல் நடத்துவது நூற்றுக் கணக்கில், ஏன் ஆயிரக் கணக்கில் குற்றமற்ற மக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

"இந்த தவறுமிக்க இலக்கெய்தும் உத்தி, தாக்குதல்களுக்கு முன்பு குடிமக்கள் பாதிப்பு பற்றிய முன்னாய்வு மதிப்பீடு திறமையற்ற நிலையிலுருந்ததையும், தாக்குதல்களுக்குப் பிறகு அவற்றினால் ஏற்படும் வெற்றிகளையும், பயன்பாட்டையும் கருத்திற்கொள்ளாமலும் இருந்தது. ஈராக்கியத் தலைமையைக் குறிவைத்து நடத்தப்பட்ட 50 தாக்குதல்களும் தோல்வியைத்தான் கண்டன. ஓர் இலக்குவைத்த தலைவர்கூட அவற்றினால் கொல்லப்படவில்லை என்பதோடன்றி, இத்தாக்குதல்கள் டசின் கணக்கில் குடிமக்களைக் கொன்றதுடன், தாக்கியும் அழித்தன. தாக்குதல்களைப் பற்றி விசாரித்திருந்த மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் தமது கருத்தை தெரிவித்த ஈராக்கியர்கள், இலக்கு கொள்ளப்பட்ட நபர்கள் அந்த இடத்தில்கூட தாக்குதல்கள் நடந்தபோது இல்லை என்று பலமுறை கூறியுள்ளனர்." என்று HRW அறிவித்துள்ளது.

இந்த அறிக்கைகளும், மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கைகளும் ஈராக்கில் புஷ் நிர்வாகத்தால் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மனிதத் துயரத்தின் ஆழமான பிரதிபலிப்பல்ல. அமெரிக்க இராணுவத்தால் எவ்வளவு நிரபராதிகளான ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது உறுப்புக்களையிழந்து விட்டனர் என்பது பற்றிய விளக்கமான ஆய்வுகள் ஈராக்கிய மருத்துவமனை அளவீட்டினால் வெளிப்பட்டு விடக்கூடாது என பென்டகனும், கூட்டணியின் இடைக்கால ஆணையமும் ஏன் நினைக்கின்றன என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது.

முதலில், அத்தகைய கருத்தாய்வு, அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு ஈராக்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் மற்றும் அமெரிக்காவிலும் கூடக் கூடுதலான எதிர்ப்பிற்கு மேலும் எரியூட்டும். இரண்டாவதாக, புஷ் நிர்வாகம் நேரடியாகப் பொறுப்புக் கொண்டுள்ள, அமெரிக்க இராணுவத்தின் ஈராக்கிய ஆக்கிரமிப்பால் போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான சான்றுகள் கூடுதலாகக் கிடைத்துவிடும்.

HRW அறிக்கை எச்சரிக்கையுடன் குறிப்பிட்டுள்ளது போல, ஜெனிவா ஒப்பந்தம் குடிமக்கள் மீது நேரடித் தாக்குதல்கள் நடத்துவதை மட்டுமன்றி பொறுப்பற்ற தாக்குதல்களையும் தடைசெய்திருக்கிறது. "இராணுவ, குடிமக்கள், இராணுவ இலக்குகள், குடியிருப்பு இலக்குகள் என்பவை வேறுபடுத்தப்படாமல் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடாது என்றும், நேரடியான தெளிவாகத் தெரியக்கூடிய இராணுவ நலன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டால் ஒழிய சாதாரணமக்கள் இறப்பு அதை ஒட்டியில்லாமல் அதிக அளவில் இருப்பதற்கும் தாக்குதல்கள் காரணமாகக் கூடாது என்று" விதிமுறைகள் கூறியுள்ளன.

பரந்த முறையில் தொடர்குண்டுகள் குடியிருப்புப்பகுதிகளிலும், வான்வழித்தாக்குதல்கள் தெளிவற்ற இலக்குகள் மீது கொள்ளப்பட்டதும், தன்நடவடிக்கையினால் ஈராக்கிய மக்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றிய இரக்கமற்ற அசட்டையும் மற்றும் சர்வதேசச் சட்டத்தின் மீதான பென்டகனுடைய இகழ்வும் தெளிவாகின்றன.

Top of page