World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP public meeting

The political crisis in Sri Lanka: the way forward for the working class

சோ.ச.க. பொதுக் கூட்டம்

இலங்கையில் அரசியல் நெருக்கடி: தொழிலாள வர்க்கத்துக்கான முன்னேற்றப் பாதை

16 December 2003

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), இலங்கையில் முதலாளித்துவ ஆட்சியின் தற்போதைய நெருக்கடிக்கான மூல வேர்களை ஆராயவும், தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு பதிலீடு சோசலிச முன்னோக்கை அபிவிருத்தி செய்யவும் கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடாத்துகிறது. ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஆறு வாரகால அரசியல் விட்டுக்கொடுப்பற்ற நிலை, ஆளும் வர்க்கத்திற்கிடையிலான இலகுவில் கையாள முடியாத உக்கிரமான முரண்பாடுகளின் உற்பத்தியாகும். தீவை ஒரு மலிவு உழைப்பு மேடையாக மாற்றுவதன் பேரில் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபடும் கும்பலானாலும் சரி, அல்லது நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்துக்குள் தள்ள முனையும் அதன் எதிரிகளானாலும் சரி தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக எதனையும் செய்யப் போவதில்லை.

இந்த விரிவுரை, பிராந்தியத்திலும் அனைத்துலகிலுமான விளைபயனுள்ள பொருளாதார மூலோபாய மாற்றங்கள் எவ்வாறு இலங்கை ஆளும் கும்பலை தனது அடிப்படை தகவமைவில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தத் தள்ளுகின்றன என்பதை சுருக்கமாக ஆராயும். இந்தியத் துணைக் கண்டத்தில் அமெரிக்காவின் உக்கிரமான தலையீட்டின் தாக்கம் பற்றி இந்த விரிவுரையில் விசேடமாக ஆராயப்படும். வாஷிங்டன் பல தசாப்தங்களாக புறக்கணித்து வந்த பிராந்தியத்தின் நீண்ட கால முரண்பாடுகள், இப்போது அதன் பூகோள அரசியல் மற்றும் பொருளாதார குறிக்கோள்களுக்கு தடையாக மாறியுள்ளன. அமெரிக்காவும் ஏனைய பெரு வல்லரசுகளும், யுத்தத்திற்கு முடிவு கட்டவும் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் ஆளும் கும்பல்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை உக்கிரமாக்குவதை அனுமதிக்கவும் ஒரு அதிகாரப் பகிர்வு தீர்வுக்கு செல்லுமாறு கொழும்பை நெருக்குகின்றன.

எவ்வாறெனினும், "சமாதான முன்னெடுப்புகள்", 1948 சுதந்திரத்திலிருந்து இலங்கை ஆளும் வர்க்கத்துக்கு கருத்தியல் அடிப்படையை வழங்கிய சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரானதாக உள்ளது. இந்த விரிவுரையில், விசேடமாக 1964 லங்கா சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க) காட்டிக்கொடுப்பு போன்ற பிரதான வரலாற்றுத் திருப்புமுனைகள் பற்றி ஆராயப்படும். இந்தக் காட்டிக் கொடுப்பினால் உருவாக்கப்பட்ட அரசியல் வெற்றிடம் இனவாத அரசியல் விஷத்தால் நிரப்பப்பட்டதோடு, 1983ல் உள்நாட்டு யுத்தத்தின் வெடிப்புக்கு தூபமிட்டது. இந்த யுத்தம் கடந்த 20 வருடங்களாக குறைந்த பட்சம் 60,000 உயிர்களைப் பலிகொண்டுள்ளது. தொழிலாள வர்க்கக் கட்சிகள் என சொல்லிக்கொள்ளும் ல.ச.ச.க, ந.ச.ச.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட சகல பெரும் கட்சிகளும் பிற்போக்கு இனவாதத்தில் மூழ்கிப்போயுள்ளன. இவை தொழிலாளர்களைப் பிரிக்கவும் தீர்க்கப்படாத ஆழமான சமூகப் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தைத் திருப்பவும் ஒவ்வொரு முறையும் இனவாதத்தை சுரண்டிக்கொண்டன.

சோசலிச சமத்துவக் கட்சி மாத்திரமே ஆரம்பத்திலிருந்தே யுத்தத்தை எதிர்த்து வந்ததோடு தொழிலாள வர்க்கத்துக்கான ஒரு சுயாதீனமான சோசலிச தீர்விற்காக பிரச்சாரம் செய்துவருகின்றது. நாம் தொழிலாளர்களின் பொது வர்க்க நலன்களின் அடிப்படையில் அவர்களை மதம், இனம் அல்லது மொழிக்கும் அப்பால் ஐக்கியப்படுத்துவதன் பேரில், சிங்களப் பேரினவாதம், தமிழ் பிரிவினைவாதம் மற்றும் எல்லாவிதமான தேசியவாதங்களுக்கும் எதிராக உறுதியான அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். சோ.ச.க. தீவின் வடக்குக் கிழக்கில் இருந்து இலங்கைத் துருப்புக்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்ற அழைப்பு விடுக்கிறது. நாம் இந்தியத் துணைக் கண்டத்திலும் அனைத்துலகிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா ஈழம் சோசலிசக் குடியரசு ஒன்றியத்தை ஸ்தாபிப்பதற்காக தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுகிறோம்.

நாம் இலங்கையில் உள்ள எல்லா உலக சோசலிச வலைத் தள வாசகர்களையும் கொழும்பில் சோ.ச.க. கூட்டத்துக்கு வருகை தருமாறும் தவிர்க்கமுடியாத அரசியல் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலிலும் பங்குகொள்ளுமாறும் அழைக்கின்றோம்.

பேச்சாளர்: சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ்

காலம்: டிசம்பர் 18, பி.ப. 4 மணி

இடம்: சாரணர் சங்க மண்டபம்

(மக்கள் வங்கி தலைமையகத்தின் பின்னால்)

கொழும்பு-2


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved