World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பா : ஜேர்மனிGerman Greens conference supports eastward expansion of European Union ஜேர்மன் பசுமைக்கட்சி மாநாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை ஆதரிக்கிறதுBy Ute Reissner கடந்த வாரம் டிரேஸ்டன் நகரில் கூடிய ஜேர்மன் பசுமை (Bündnis 90/Die Grünen) கட்சி மாநாடு தேர்தல் பிரகடனத்தை நிறைவேற்றியதோடு, அடுத்த ஜூன் மாதம் நடக்கவிருக்கும் ஐரோப்பியத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களையும் முடிவு செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்று அதிகாரப்பிரிவான ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஐரோப்பிய பாராளுமன்றம் குறைவான அதிகாரங்களைத்தான் கொண்டுள்ளது. இருந்தாலும் கூட, 2004 தேர்தல்கள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. மே 1-ம் தேதி 10 புதிய உறுப்பினர்கள் இணையத்திட்டமிடப்பட்டுள்ள சில வாரங்களுக்குள் 25 ஐரோப்பிய நாடுகளில் நடக்கவுள்ள இந்த தேர்தல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகமற்ற கொள்கைகளுக்கு ஜனநாயக தோற்றம் அளிக்கவும், மிகுந்த வண்ணப் பூச்சுப் பொது உறவு பிரச்சாரத்தின் பின்னல் இவ்விரிவாக்கலுடன் மோசமான சமூகத் தாக்குதல்கள் இணைந்துள்ளது. இந்தக் காரியத்தைத் துல்லியமாகச் செய்து முடிக்கத்தான் பசுமைக்கட்சி மாநாடு கூட்டப்பட்டது. மாநாட்டின் "ஐரோப்பாவை மேலும் பரந்ததாகச் செய்வோம்" (Make Europe Wider") என மாநாட்டின் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது போல், பல்கேரியா, ருமேனியா நாடுகளை மட்டும் இலக்குக் கொள்ளாமல் பால்கன் பகுதி முழுவதையுமே 2007 இல் இணைப்பதை இலக்காகக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்குப்புற விரிவடைதலுக்கு பசுமைக்கட்சி முழுமையாக ஆதரவு அளிக்கின்றது. 1990-களில் கிழக்கு ஜேர்மனியர்கள் மேற்கு ஜேர்மனியுடன் இணைவதால் "செழிப்பான அபிவிருத்தி'' கிடைக்கும் என்று உறுதியளித்த அதிபர் ஹெல்மூட் கோலுடைய சொற்கள் தான் பசுமைகளுடைய தேர்தல் அறிக்கையைப் படிக்கும்பொழுது நினைவிற்கு வருகிறது. அந்த நேரத்தில், Bündnis 90 என்ற (கிழக்கு ஜேர்மனியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பசுமைகளின் அமைப்பு), முதலாளித்துவம் சமூக நீதிக்கும் முன்னேற்றத்திற்கும் உறுதியளிக்கும் என்ற அடித்தளத்தில் மறு இணைப்பை ஆதரித்திருந்தது. இன்று அதன் அப்பட்டமான தோல்வியின் மத்தியிலும் அதே மூலோபாயம் தான் கிழக்கு ஐரோப்பாவிற்கும் மாற்றப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்படவுள்ள 10 நாடுகளில், எட்டு நாடுகள் முன்னாள் ஸ்ராலினிச பகுதியைச் சேர்ந்தவை: அவை, செக் குடியரசும், ஸ்லோவாக்கியாவும், போலந்து, ஹங்கேரி, சுலோவேனியா, எஸ்டோனியா, லத்வியா மற்றும் லித்துவேனியா ஆகும் (மால்டாவும், சைப்ரசும் மற்ற இரு நாடுகளாகும்.) "கிழக்கை" (கிழக்கு ஜேர்மனி, செக்) பிறப்படமாக கொண்ட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க மிகவும் கஸ்டப்பட்ட பசுமைக்கட்சி இப்பொழுது, ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தால் "இன்னும் கூடுதலான சகிப்பு தன்மை, சமூக, சுற்றுப்புறச் சூழல், ஜனநாயக" பாதுகாப்பு பற்றிய புதிய பாட்டுக்களை இசைத்து வருகின்றனர். நவம்பர் 8ம் தேதி, லுக்சம்பேர்க்கில் கூடிய ஐரோப்பிய பசுமை கட்சிகளின் கூட்டமைப்பில் (European Federation of Green Parties EFGP), இயற்றப்பட்ட "ஐரோப்பியத் தேர்தல்கள் அறிக்கையின் பொது முன்னுரை"யில் இதே மெட்டுத்தான் முழுமையாக நிறைந்து காணப்படுகிறது. ஐரோப்பாவிலுள்ள 24 பசுமை கட்சிகளின் தேசிய அறிவிப்புக்களில் உள்ள இந்த முன்னுரை, கூட்டமைப்பின் மிகப் பெரிய, மிகச் செல்வாக்குடையதான ஜேர்மன் பசுமைகளுடைய கைவண்ணத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. பசுமை கட்சியின் தனித்தன்மையான வடிவமாக, இப்பிரகடனம் ஐரோப்பிய மூலதனத்தின் அடிப்படை மூலோபாயத்திற்கான ஆதரவை சாதாரண முறையில் சில அற்பமான முற்போக்கான கோரிக்கைகளுடன் தொகுத்துக் கொடுத்துள்ளது, இப்பொழுதுள்ள அரசியல் நிலைமைகளில் இவை ஒருக்காலும் நிறைவேற்றப்படவே முடியாததுடன், பசுமைக்கட்சிகள் தங்களது முத்திரையான யதார்த்த அரசியலை (realpolitik) முழு உறுதித்தன்மையுடன் பலிகொடுக்க வேண்டிய நிலையும் உண்டு. இதுதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜேர்மனியின் சமூக ஜனநாயக கட்சியுடன் (SPD) கூட்டணி அரசு அமைத்துப் பங்கு கொண்டிருப்பதன் அவர்களுடைய வழமையான செயல்பாட்டு வடிவமைப்பாகும். 1960 களிலும், 1970 களிலும் பசுமை இயக்கம் முதலில் தோற்றுவிக்கப்பட்ட போது உறுதியளிக்கப்பட்டவை எதுவுமே இப்பொழுது காணப்படுவதற்கில்லை. கூடுதலான சமூக நீதிக்கான கோரிக்கை, பசுமைகள் தீவிரமாக சமூக சேவையை மிருகத்தனமாகத் தகர்ப்பதற்கு வழியைக் கொடுத்து விட்டது. அமைதிக்கும், வன்முறையின்மைக்குமான கோரிக்கை இரண்டாம் உலகப் போருக்குப்பிறகு, ஜேர்மன் இராணுவப்படைகள் முதன் முதலாக வெளியே சென்று போரிடும் நிலையை அடைவதில்தான் முடிந்திருக்கிறது. சுற்றச்சூழலைக் பாதுகாத்தல் சில அடையாள நடவடிக்கைகளுடன் முடிந்துவிடுகிறது. இப்பொழுது பசுமைகள் அதே மோசடியை ஐரோப்பிய அளவிற்குத் திருப்பிச் செய்யத் தயார் செய்து வருகின்றனர். பசுமை கட்சிகளின் ஐரோப்பியக் கூட்டமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் விரிவாக்குதலையும் முற்றிலும் ஆதரித்து, இப்பொழுது இந்த வழிவகைக்கு ஒரு மனிதத்தன்மை வாய்ந்த, சமூக, ஜனநாயக முகம் வழங்குவதாக கூறிக்கொள்கின்றனர். "ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு பலமான பசுமைகளின் பிரதிநிதித்துவம் பூகோளமயமாக்கலை சிறப்பாக கட்டுப்படுதுவதற்கான ஐரோப்பிய கடமைப்பாட்டிற்கான ஒரு உத்திரவாதம் ஆகும். பொருளாதார, வர்த்தக விதிகள் சுற்றுச்சூழல், சமூக புறநிலைகளின் சேவைக்கு இருத்தல் வேண்டும்... அடிப்படைக் கொள்கைகளான சமத்துவம், ஒற்றுமை, முழுகண்டத்தின் தொடர்ந்து இருக்கக் கூடிய சுற்றுச்சூழல் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஐரோப்பிய ஒன்றியத்தை நிர்மாணிப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்." என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த ஆவணத்தின் முக்கிய வரைவாளர்களாகத் தோன்றும், ஜேர்மன் பசுமைக்கட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நோக்கங்களுக்கு முற்றிலும் எதிரான திசையில்தான் நடந்து கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட மிக வெளிப்படையாக செயல்களுக்கும், சொற்களுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளை, 20 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட போது, அடிப்படை வர்க்கப் பிரச்சினைகளை நிராகரித்ததின் தன்மையைத்தான் சுட்டிக்காட்டுகிறது. சமூகநீதியும், சமத்துவமும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான போராட்டத்தினால் தான் அடையமுடியும். ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய வங்கிகளினதும் பெரு நிறுவனங்களினதும் திட்டம் மட்டுமல்லாது பூகோளச் சந்தைகள், செல்வாக்கு மண்டலங்கள் இவற்றிற்குப் போராடும் ஐரோப்பிய மூலதனத்திற்கு வலிமை தருவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் என்ற பெயரில் இணையும் நாடுகளில் பாரிய அளவில் வேலைத்தலங்கள் தகர்த்தலும், சிறுவர்த்தகங்களைத் தகர்த்தலும், அதை ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்தி பழைய, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்ததைப் தாக்குவதே அதன் மூலோபாயம் ஆகும். இத்தகைய திட்டங்களை எதிர்ப்பதற்கு ஒரே வழி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக, சமூக, ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கும், ஐரோப்பா முழுவதிலும் முள்ள உழைக்கும் மக்களின் பரந்த தட்டுகளை அணிதிரட்டி ஒன்றுபடுத்துவதேயாகும். அத்தகைய சமூக அணிதிரட்டலுக்கு பசுமைக்கட்சியினர் எதிரானவர்கள். அவர்கள் சலுகைமிக்க செல்வந்த தட்டின் நலன்களைச் சார்ந்திருப்பதால், அடிமட்டத்திலிருந்து வரும் எந்த எதிர்ப்பிற்கும் பயப்படக் காரணமுள்ளது. நவம்பர் முற்பகுதியில் 100,000 மக்கள், பேர்லினில் சமூகசெலவுகளைக் குறைப்பதற்கு எதிராக ஷ்ரோடர் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, அஞ்சலாபீசர், எதிர்ப்பாளர்களை "அரசியலளவில் திறமையற்றவர்கள்", "சிந்தனை வளம் அற்றவர்கள்" என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார். உண்மையில், இது குறிப்பாக பசுமைகளின் அரசியல் கருத்துக்களை ஒத்த கருத்தை கொண்ட அட்டாக் இயக்கத்திற்கெதிராக (Attac movement) அமைந்தது. ஆயினும் கூட, பசுமைகள் அட்டாக் "தெருக்களுக்கு" எதிர்ப்புக்களை கொண்டு வந்து விடும்போது, அட்டாக்கிலிருந்து கணிசமான தூரம் ஒதுங்கியே உள்ளனர். சமீபத்தில், போலந்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான போராட்டங்கள், அதிலும் குறிப்பாக முழு அழிவையும் எதிர்நோக்கும் சிறு விவசாயிகள் நடத்திய பொழுது, அவை பசுமைக் கட்சியினரால் கவனியாது விடப்பட்டதோடு, அவர்களுடைய மாநாட்டில் இதைப்பற்றிக் குறிப்பிடக்கூடவும் இல்லை. பசுமைகள், ஆளும் செல்வந்த தட்டின் பக்கத்தில் இருக்கும் அவர்களது அடிப்படை நிலைப்பாடு, அவர்கள் கூறும் அமைதி, நீதி நிரம்பிய ஐரோப்பா என்பதை பொருளற்றதாக ஆக்குவதோடு, அவர்கள் பிரகடனத்தின் பெரும்பகுதி, ஜேர்மன் பழமொழியான "காகிதம் பொறுமையானது" என்பதைத்தான் சித்தரிக்கிறது. ஆயினும்கூட, பாதுகாப்பு, தொழிலாளர் சந்தைக் கொள்கை ஆகிய துறைகளில், அவர்களுடைய உண்மையான நிலைப்பாடு நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. "ஐரோப்பாவிற்கு பரந்தமுறையில் பாதுகாப்புத் திட்டம்" தேவை என்ற அழைப்பைத் தேர்தல் அறிக்கை கொடுக்கிறது. "பூகோள சட்ட நெறி வலுப்படுத்தப்பட வேண்டும்", "மனித உரிமைகள் நன்கு அடையப்படவேண்டும்", ''மோதலை செயலூக்கத்துடன் தடுக்கப்படவேண்டும்'' "அமைதி நன்கு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்" என்று நீண்ட பத்திகள் எழுதப்பட்ட பின்னர், அவர்கள் முடிவாகக் கூறுவதாவது:"இருந்த போதிலும், Bündnis 90/Die Grünen யின், தேசிய, சர்வதேசிய சட்டத்தினால் வன்முறையை பிரயோகிப்பது நெறிப்படுத்தப்படும் பொழுதும், எல்லா பிரச்சினைகளிலும் விலக்கி வைக்க இயலாது. விரைந்து தாக்கும் படை (Rapid Reaction Forces) பற்றிய வரையறைகள், பணிகள், செயலாற்றவேண்டிய துறைகள் உள்ளடங்கலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னுடைய மூலோபாயக் கருத்தை ஆகியவற்றில் விரிவாக்கிக் கூற வேண்டும்..." பசுமையினர், அமெரிக்காவோடு போட்டியிடக்கூடிய உலக சக்தியாக (வல்லரசாக) ஐரோப்பாவை வளர்க்கும் மூலோபாயத்தில் தங்கள் தேர்ந்த ஈடுபாட்டை வலியுறுத்திக் கூறியுள்ளனர்: "சர்வதேச அளவில், சுய நனவுடன், சுய பாதுகாப்பு பங்கைத் தீர்மானிக்கும் திறன் ஐரோப்பாவிடம் உள்ளது. ஆனால், உண்மையில் மதிப்பு நிறைந்த பொது ஐரோப்பிய அயல்நாட்டுக் கொள்கை நமக்குத் தேவை." என குறிப்பிடுகின்றனர். ஜேர்மனியில் அரசாங்கம் தகர்த்துவிட்ட பொதுநலச் சார்புடைய பணிகளில் பசுமைகளின் சந்தேகத்திற்கிடமில்லாத பங்கின் தன்மை இருக்கும்போது ''சமூக பாதுகாப்பிற்கு உறுதியளித்தலும், புதுப்பித்தலும்" என்ற தலைப்பிலான பிரகடனம் பல திரித்தல்களிலும், திருப்பங்களிலும் பிணைந்துள்ளது. (இந்த இடத்தில் அதன் இலக்கணம் கூடக் குழம்பிவிடுகிறது.) "ஐரோப்பிய பாரம்பரியத்தின் நலன்புரி அரசாங்கத்தை நிறுவதில் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒற்றுமையுடன் இருக்கின்றன. நாம் இந்த பாரம்பரியத்தை பாதுகாத்து, நவீனப்படுத்தி நடைமுறையில் தொடர்ந்து இருக்கும் நிலையைத்தான் விரும்புகிறோம்." ஆனால், "நமக்கு ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான தரத்தை உடைய சமூகக் கொள்கைகள் வேண்டும் என்றோ, மிகக்குறைந்த தரமுடைய சமூகத்தரங்களுக்கான போட்டிகளோ தேவையில்லை. நமக்குத் தேவையானது ஐரோப்பிய ஒன்றியத்தில் தீவிரமாகச் சமூகக் கொள்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதாகும். இருந்தபோதிலும் கூட, ஐரோப்பாவில் மிகத்தாழ்ந்த சமூகத்தரங்களுக்குப் போட்டி இருக்கக் கூடாது." "நாம் நலன்புரி அரசை, அதைக் காப்பாற்றும் பொருட்டு நவீனப்படுத்துதல் வேண்டும்" என்ற பொதுவான கோரிக்கையின் கீழ் அவர்கள் சமூக சொத்துக்கள் கீழிருந்து மேல்நோக்கி மறுபங்கீடு செய்யப்படுவதுடன் இணைந்து கொள்கின்றனர். இந்த இரட்டைத்தன்மையான பேச்சுத்தான் முழு பசுமை அரசியல் அறிக்கையில் இழையாக ஓடியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின், எல்லைகள் மூடப்படும் நேரத்தில், ஐரோப்பா புலம்பெயர்ந்தோருக்கு எதிராக உண்மையில் ஒரு கோட்டையாக மாறியுள்ளபோது, -- இக்கொள்கை பசுமையின் அயலுறவு மந்திரியான ஜோஷ்கா பிஷரால் தீவிரமாக வளர்க்கப்படும்போது, பசுமைக் கட்சியினர் "ஐரோப்பிய ஒன்றியத்தைப் பெரிதாக்கும் போது, அச்செயல் எல்லைகளுக்கு அப்பால் புதிய எல்லைகளை ஏற்படுத்திவிடக் கூடாது" என பிரகடனப்படுத்துகிறார்கள்: ஜேர்மனியில் பள்ளிகளும் பல்கலைக் கழகங்களும் பணம், ஆசிரியர் இல்லாமல் உள்ளபோதும், அடிப்படை நடவடிக்கைகளை செய்யமுடியாமல் இருக்கும்போது, இவற்றுக்கான காரணத்தில் பங்கு கொண்டுள்ள பசுமை கட்சி, "கல்வியியல், ஆராய்ச்சி, கலாச்சாரம் இவற்றில் முதலீடு," என்றெல்லாம் கற்பலையுலகில் மகிழ்ச்சியடன் மிதக்கிறார்கள். ஜேர்மனிய, ஐரோப்பிய பசுமைக் கட்சியினரின் போலித்தனமான தேர்தல் பிரச்சாரமானது, வரலாற்றின் படிப்பினைகளை அடிப்படைகளாகக் கொண்ட ஒரு புதிய சமூக இயக்கம் எதிரெதிரான வர்க்க நலன்களின் தன்மையை இனம் கண்டுகொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாற்றாக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக, சமூக ஐரோப்பாவை உருவாக்குவதின் தேவையை எடுத்துக்காட்டுகிறது. |