World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian elections reveal chasm between political elite and voters

அரசியல் மேல்தட்டிற்கும் வாக்காளர்களுக்கும் இடையிலான பிளவை திரைவிலக்கிக்காட்டும் இந்தியத் தேர்தல்கள்

By Sarath Kumara
1 December 2003

Use this version to print | Send this link by email | Email the author

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கார், தில்லி ஆகிய நான்கு வட இந்திய மாநிலங்களில் இன்று நடக்கும் தேர்தல்கள், அடுத்த செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் நடைபெறவிருக்கும் தேசிய தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளத் தயாரிப்பு செய்து வரும் பிரதான தேசிய கட்சிகளின் செல்வாக்கு எந்த அளவிற்கு நிலைநாட்டப்படும் என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாக அமையும். நவம்பர் 20-ந் தேதி வடகிழக்கு மாநிலமான மிசோராமில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

தேசிய கூட்டணியை தலைமை வகித்து நடத்தி வரும் இந்து பேரினவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) இந்த தேர்தல்களில், பெரும் அளவிற்கு வெற்றி பெற்று விடமுடியும் என நம்புகிறது. இந்த நான்கு மாநிலங்களில் சில மிகப்பெரியவை, இந்த 4 மாநிலங்களிலும் எதிர்க் கட்சியான காங்கிரஸ்தான் ஆட்சி செய்து வருகிறது. வாக்காளர்களிடையே நிலவும், பரவலான உணர்வு என்னவென்றால், தேசிய அளவிலும், மாநில அளவிலும் இரு கட்சிகளும் கடைப்பிடித்து வரும் கொள்ளைகள் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகக் காணப்படுகிறது.

பிரிட்டனைத் தளமாக்க் கொண்ட எகனாமிஸ்ட் வார இதழ் நவம்பர் 20-ந் தேதி, பின்வருமாறு குறிப்பிட்டது: ''இந்தியத் தேர்தல்களில் மிகவும் பிரதானமாக நிலைப்பெற்றுள்ள அம்சம் ஆட்சிபுரிபவருக்கு எதிராக நிலவும் உணர்வுதான். இந்திய அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் வாக்காளர்களுக்கு ஏமாற்றத்தையே தந்து கொண்டிருக்கின்றன. அதனால், தேர்தலில் சில விளைவுகளைச் சந்திக்கின்றன." இந்த மாநிலத்தேர்தல்களில் "ஆள்பவருக்கு எதிரான போக்கு" மிகவும் சிக்கலாக இருந்ததாகக் குறிப்பிட்டது. காங்கிரஸிற்கு மாநிலங்களுக்கு உள்ளேயும், பிஜேபிக்கும் தேசிய அளவிலும் ஆளும் கட்சிக்கு எதிரான போக்கு நிலவி வருகிறது.

மக்களிடமிருந்து, அரசியல் கட்சிகளும் தலைவர்களும் மிகப் பெருமளவில் அரசியல் ரீதியாய் அந்நியமாகி நிற்பதால், பொது மக்களுக்கே, பணம் கொடுத்து, தேர்தல் பிரச்சாரத்தை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ராம்லால், எனும் தெழிலாளி சிபி. கொம் வலைத் தளத்திற்கு அளித்த பேட்டியில் ''கட்சிக்கு ஆதரவாக முழக்கம் எழுப்புவதற்காக எனக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 50 முதல் 60 வரை தருகிறார்கள். எந்தக் கட்சி எனக்குப் பணம் தந்தாலும் அதற்கு ஆதரவாக முழக்கம் எழுப்புவேன். அதிகமாகப் பணம் தந்தால் அக்கட்சியை ஆதரித்து முழக்கமிடுவேன்.'' என்று குறிப்பிட்டார். தேர்தலுக்கு ஊழியர்களைத் திரட்டுவது வளரும் தொழிலாக உள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு ஊழியர்களைத்திரட்டும் லாலா, இது தேர்தல் பிரச்சார தினசரி கட்டணங்களை விவரித்தார். ''ஆரவாரம் இல்லாமல், தேர்தல் முழக்கம் எழுப்புவதற்கு தினக்கூலி ரூபாய் 100, ஊக்கத்துடன் முழக்கமிட்டு பணியாற்ற ரூபாய் 150 மற்றும் வாக்குப்பதிவு நாளில் ரூபாய் 200க்கும் குறைவில்லாத் தினக்கூலி'' என்று விளக்கினார்.

இரண்டு கட்சிகளுக்கும் இடையில் தங்களது எதிர்காலம் தொடர்பாக மிகப்பெரிய சோதனைக்களமாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. மாநிலத் தேர்தல்களோடு சேர்த்து, திடீர் பொதுத்தேர்தல்களை நடத்தலாம் என்று நான்கு மாதங்களுக்கு முன்னர் துணைப்பிரதமர் எல்.கே. அத்வானி ஆலோசனை கூறினார். மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் ஏற்படும் தோல்வி "(பிஜேபி) கட்சியின் அடிநிலைத்தொண்டர்களின் உற்சாகத்தை குன்றச் செய்துவிடும்" என்று அப்போது அத்வானி எச்சரிக்கை செய்திருந்தார். 1999-ம் ஆண்டு நடைபெற்ற மாநிலத்தேர்தல்கள் எல்லாவற்றிலும் இரண்டு சிறிய மாநிலங்களைத்தவிர, பிஜேபி தோல்வியை சந்தித்தது. சிறிய மாநிலமான கோவாவிலும், குஜராத்திலும், பிஜேபி வெற்றி பெற்றது. சென்ற ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளால் உருவாக்கப்பட்ட வகுப்புவாத பதட்டங்களை அந்தத் தேர்தல்களில் பிஜேபி வெளிப்படையாக பயன்படுத்திக்கொண்டது. இழந்த அடிப்படையை மீண்டும் பெறுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு உற்சாக மூட்டும் வகையில் நடப்பு தேர்தல் அமையவேண்டுமெனக் கருதுகிறது. மண்டல குறுகிய நோக்கங்கள், மற்றும் சாதிகள் அடிப்படையில் தோன்றியுள்ள மாநிலக்கட்சிகளைப் பயன்படுத்தி அவற்றின் ஆதரவைப் பெற காங்கிரஸ் முயன்று வருகிறது.

பிரதான கட்சிகள் மீது இந்திய மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குரோதத்திற்குப் பின்னால், மக்களில் மிகப்பெரும்பாலோரின் சமூகத்தேவைகளை தீர்த்துவைப்பதற்கு அவர்களின் இயலாமைதான் இருக்கின்றது. இரண்டு பிரதான தேசிய கட்சிகளுமே, பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டதால், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாள வர்க்கம், சிறு விவசாயிகள் மற்றும் சிறு வர்த்தகர்கள் மீது அழிவுகரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன் விளைவாக ஏழைகள் பணக்காரர்கள் இடையில் இடைவெளி பெருகிவிட்டது. வறுமைக்கோட்டிற்குக் கிழே வாடுகின்ற ஏழைகள் எண்ணிக்கை பெருகிவிட்டது. பிஜேபியும் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவர்மீது மற்றொருவர் சேற்றை வாரி இறைத்துக் கொண்டு, தேர்தல் இயக்க வித்தைகளைக் காட்டுகின்றனர் மற்றும் தேர்தல் லஞ்சம் கொடுக்கின்றனர். தங்களது மக்கள் ஆதரவு அடித்தளத்தை விரிவாக்குவதற்காக, சாதி, வகுப்புவாத உணர்வுகளை உசுப்பி விட வேண்டிய ஆற்றொணா முயற்சியில் உள்ளன.

நான்கு மாநிலங்களிலும் இதே அடிப்படை நிகழ்ச்சிப் போக்குகள் தெளிவாகத் தெரிகின்றன.

மத்தியப்பிரதேசத்தில் பிஜேபி வெற்றி பெறலாம் என்று பெரிதும் நம்பப்படுகிறது. இந்த மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செலுத்துகிறது. மக்கள் அதன் கொள்கைகள் தொடர்பாக அதிருப்தியுடன் உள்ளனர். மத்தியபிரதேசத்தின் சமுதாய நிலைப்பாடு உயர்ந்துவிட்டதாக முதலமைச்சர் திக்விஜய் சிங், பெருமையடித்துக்கொண்டாலும், மத்தியப்பிரதேசம், இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாகவே நீடித்துக்கொண்டிருக்கிறது. 1997ல் செய்யப்பட்ட மதிப்பீடுகளின் படி, மத்தியப்பிரதேசத்தில் மக்களது சராசரி வாழும் வயது 55 தான். கல்வியறிவு இன்னும் 64 சதவீதமாகவே நீடிக்கிறது- இதில் 32 இந்திய மாநிலங்களில் 23 வது இடத்தில் மத்தியபிரதேசம் உள்ளது. பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 97 குழந்தைகள் இறந்து விடுகின்றன. இந்த வகையில் படுமோசமான மாநிலங்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

மாநிலத்தின் மின்சாரம் வழங்கும் நடைமுறைகள் சீர்குலைந்துகிடக்கின்றன. அண்மையில் நகரங்களில் ஒரு நாளைக்கு 5 மணி நேரமும் கிராமங்களில் 15 மணி நேரமும், மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. மின்சார வாரியத்தின் நிதிநிலைச் சீர்குலைவைத் தடுக்கவும் மின்வாரியச் செயல்பாட்டை மேம்படுத்தவும், அண்மையில் திக் விஜய்சிங் அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் 7.2 மில்லியன் ரூபாய் (157 மில்லியன் அமெரிக்கா டாலர்) கடன் பெற்றார். ஆனால் கடன் நிபந்தனைகள் அடிப்படையில் பரம ஏழைகள் உட்பட அனைவருக்கும் மின்சாரக்கட்டணம் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான மின்சாரக் கட்டணம் 300 முதல் 600 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. புதிய மின் இணைப்புக்களுக்குக் கட்டணம் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவாக விவசாயிகளுக்கான மின்சார இணைப்புக்களில் சரிபாதி துண்டிக்கப்பட்டுவிட்டது.

சாலைகள் நிலை மோசமாக உள்ளது. கல்கத்தாவிலிருந்து வெளிவரும் டெலிகிராப் நாளேடு, சாலைகள் "முதுகு வலிக்கும் அளவு குண்டு குழிகளும் நிரம்பியவை" என அண்மையில் செய்தி வெளியிட்டது. ஊடகங்களில் வழக்கமாகப் புகார் கூறப்பட்டு வந்தாலும், குறிப்பிடத்தக்க அளவிற்கு பழுதுபார்ப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. "முன்பு நடைபெற்ற தேர்தலின் போது, வெண்காயங்கள் பற்றாக்குறையால் பிஜேபி கட்சி ஆட்சியை இழந்ததைப்போல், இந்த முறை மத்தியப்பிரதேசத்தில் மோசமான சாலைகள், மின்சாரப் பற்றாக்குறை காரணமாக காங்கிரஸ் ஆட்சியை இழக்கப் போகிறது" என ஒரு ஆசிரியர் கருத்துத் தெரிவித்துள்ளார். 1993ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெண்காய விலை கிலோ ரூபாய்40 அளவிற்கு விற்றதால், பிஜேபி மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியை இழந்தது.

காங்கிரஸ் ஆட்சியின் கீழ் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளால், பரவலாக வேலை இல்லாத் திண்டாட்டம் உருவாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மாநில நிர்வாகம் 12,000 சிறு தொழில்களை மூடிவிட்டது. மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள தொழில்துறைப்பகுதிகளில், 25 சதவீதத் தொழிற்சாலைகள்தான் திறந்திருக்கின்றன. பெரிய தொழிற்சாலைகளில் 1991முதல் 2001 வரை 76,000 வேலை இழப்புக்கள் ஏற்பட்டன. அதிகாரபூர்வமான மதிப்பீடுகளின்படி, மாநில மக்களில் 37.43 சதவீதம் பேர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாடிக்கொண்டிருக்கின்றனர்.

சீரான மின்சாரம், சாலைகள் சீரமைப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வெற்று உறுதிமொழிகளையும், இந்து வகுப்புவாத முழக்கங்களையும் கலந்து வாக்காளர்களின் ஆதரவைப்பெற்று, மாநிலத்தைக் கைப்பற்ற பிஜேபி முயல்கிறது. பிஜேபி-ன் மாநிலத் தலைவர் உமாபாரதி கட்சியின் கடுங்கோட்பாட்டாளர்களில் ஒருவர் என்பது நன்கு அறிந்த்தே. 1992ம் ஆண்டு அயோத்தி மசூதி இடிக்கப்பட்டதில் முடிவடைந்த, வகுப்புவாத பிரச்சாரத்தில் நடுநாயகமாக அவர் சம்பந்தப்பட்டிருந்தார். மாநில மக்கள் தொகையில் 52 சதவீதம் மக்கள் இதர பின்தங்கிய வகுப்பினர்(OBC) என்று பாகுபாடு செய்யப்பட்டுள்ளனர், அவர்களது வாக்குகளைப் பெறுவதில் குறிப்பாக அவர் செயல்பட்டு வருவதற்கு அவர் சாதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

மக்களின் நலன்களை விடவும், கண்டிப்பாக இந்து சம்பிரதாயங்களைப் பின்பற்றுபவர்கள் புனிதம் நிறைந்ததாகக் கருதும் பசுக்களின் நலன் பிரதான தேர்தல் பிரச்சினையாக ஆக்கப்பட்டு வருகின்றது. பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில் பசுவதைத் தடைச்சட்டம் இயற்ற வலியுறுத்துகிறது. இது, திட்டமிட்டு வகுப்பு வாத உணர்வுகளைத் தூண்டிவிடும் ஒரு முயற்சி ஆகும். காங்கிரஸ் தலைவர் சிங், தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பசுக்கள் பராமரிப்பு இல்லங்களை அமைப்பதாக உறுதி இதற்கு பதில் அளித்துள்ளார்.

FTML, இந்தியாவின் தலைநகர் காங்கிரஸ் ஆட்சியிலேயே நீடிக்கும் எனத் தோன்றுகிறது. முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஏழைகளின் காவலர் என்ற கீர்த்தியை நிலைநாட்ட முயன்று வருகிறார். புல்டோசர் முன்னர் பகட்டாக நின்று, சேரிப்பகுதியைக் காலி செய்வதை எதிர்த்து நிற்பவராக காட்சி தருகிறார். குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் மீது தனது கவலைகளைப் பகிரங்கமாக வெளியிட்டு வருகிறார். சுமார் ஐந்து இல்ட்சம் மக்கள் தில்லி குடிசைப் பகுதிகளில் படுமோசமான நிலையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். 1000 வீடுகளுக்கு 7 முதல் 10 தண்ணீர் குழாய்கள்தான் உள்ளன. காசநோய் விஷக்காய்ச்சல், தில்லியில் பரவலாக உள்ளது, அதே போல் குடிப் பழக்கமும் போதைப்பொருட்கள் பயன்பாடும் பரவலாக உள்ளது.

1998ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, தில்லி மக்கள்தொகை இரண்டு லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பக்கத்து மாநிலங்களில் இருந்த வந்து குடியேறிய ஏழைகள் ஆவர். காங்கிரஸ் கட்சியோ, பிஜேபியோ இவர்களைப் பதிவு செய்வதில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. 1.4 மில்லியன் பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று மதிப்பிடப்படுவதுடன் ஒப்பிடுகையில், புதிதாகக் குடியேறியவர்களுள் 27,000 வாக்காளர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஏழைமக்களது வாக்குகளைப் பெறவேண்டும் என்பது முதலமைச்சர் ஷீலாதீட்சித்தின் பிரதான கவலை இல்லை. ஆனால் கடந்த காலத்தில் பிஜேபி-ன் பக்கம் தங்களது ஆதரவைத் தந்துவிட்ட நடுத்தர வர்க்கத்தினரை மீண்டும் காங்கிரசின் பக்கம் ஈர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு அவர் செயல்பட்டு வருகிறார். ஏழ்மை வேலையில்லாத் திண்டாட்டம் விளைவாக குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவதற்குப் பதிலளிக்கும் விதமாக, நிலைநாட்டுவதற்கு காவல் துறையினருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கக் கோரும் சட்டம் ஒழுங்கு பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். தலைநகரிலிருந்து வங்க தேசத்திலிருந்து வந்த சட்ட விரோத குடிமக்கள் என்ற அழைக்கப்படுபவர்களை வெளியேற்றுதற்கு குடிமக்கள் பதிவேடு ஒன்றை உருவாக்க அழைப்பு விடுத்து, பிஜேபி மேலும் கடுமையான குற்றங்களைச் செய்ய முயற்சிப்பதாகத் தெரிகிறது.

ராஜஸ்தான், மேற்கிந்தியாவில் உள்ள ஒரு மாநிலம். இது கடந்த நான்காண்டுகளாக தொடர்ந்து வறட்சியில் வாடுகிறது, விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், இதற்கு யார் பொறுப்பு என இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள 42 பக்க தேர்தல் அறிக்கையில் 10 பக்கங்கள் இந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை மதிப்பீடு செய்கிறது. நான்காண்டு கால வறட்சியின்போது பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி ஒருமுறைகூட இராஜஸ்தானுக்கு வரவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. பிஜேபி இதற்குப் பதிலளிக்கிற வகையில் காங்கிரஸ் அரசாங்கம் தேசிய நிவாரண நிதியை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறி விட்டது என்று குற்றம்சாட்டி வருகின்றது. இரண்டு கட்சிகளுமே விவசாயிகளுக்கு பெரும் அளவில் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வருகின்றன, அவற்றை நிறைவேற்றுவது இயலாத காரியம்.

வேலை இல்லா திண்டாட்டமும் கூட மிகப் பெரிய பிரச்சினை ஆக உருவாகி உள்ளது. 1998ம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கம் பதவியேற்ற பிறகு, முந்தைய பிஜேபி அரசாங்கம் மேற்கொண்ட வேலை நியமன முடக்கம் திட்டத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. அதனால் 6000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன மற்றும் சிறுதொழில்கள் நெருக்கடியில் உள்ளன. இரண்டு கட்சிகளும் மக்களது அதிருப்தியை திசைதிருப்பும் வகையில் தங்களது தேர்தல் அடித்தளங்களில் தங்களது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் வகையில் சாதி அடிப்படையைத் தூண்டி வருகின்றன. அவ்வாறு செய்வதில், தங்களது சமூகத் தட்டின் குறுகிய நலன்களைப் பாதுகாக்க அல்லது ம்ேம்படுத்த விழையும், ஏனைய சாதி அடிப்படையிலான கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டி இருக்கின்றனர்.

சட்டிஸ்கார் மாநிலம் மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட சிறிய மாநிலம் ஆகும். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் இருந்த பகுதிகளைப் பிரித்து பெரும்பாலும் காங்கிரசிற்கு ஆதரவு இருக்கிற வகையில் அமைக்கப்பட்டது. இப்புதிய மாநிலத்தை காங்கிரஸ் மூன்று ஆண்டுகளாக ஆண்டு வருகிறது. 60 பொதுத்துறை நிறுவனங்களில் 52 மூடப்பட்டு விட்டன. அரசாங்கத் துறைகள் 54 லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டு விட்டன. அரசாங்கச்செலவு 70 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாகக் குறைக்கப்பட்டுவிட்டது, இது பெருமளவில் ஆட்குறைப்புக்கு வழிவகுத்து வருகின்றது.

இன்றைய தேர்தலில யார் வெற்றிபெற்றாலும் தேர்தல் உறுதிமொழிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிடுவார்கள் மற்றும் பொருளாதார பகுத்தறிவு ரீதியான சீரமைப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை தொடர்ந்துகொண்டே இருப்பார்கள். மலிவான விலையில் உழைப்பை வழங்குவதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஒவ்வொரு மாநிலமும் ஆளை ஆள் குரல்வளையைப் பிடிக்கும் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிரதான கட்சிகளும் சரி இரு போட்டியாளர்களில் எவராயினும் சரி, சாதாரண உழைக்கும் மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் செவிமடுப்பதற்கு ஒரு வேலைத் திட்டமும் இல்லாதிருக்கின்றன.

Top of page