WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
European Social Forum: French LCR seeks to channel popular opposition to
official left parties
ஐரோப்பிய சமுதாய அரங்கம் : பிரெஞ்சு எல்சிஆர் உத்தியோகபூர்வ இடது கட்சிகளுக்குள்
வெகுஜன எதிர்ப்புக்களை வடிகால் கட்ட விரும்புகிறது
By Chris Marsden and Peter Schwarz
17 November 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
இரண்டாம் ஐரோப்பிய சமுதாய அரங்கிற்காக [European
Social Forum (ESF)], பாரிஸ் நகரில் நவம்பர் 12லிருந்து
15 வரை, 40,000 பிரதிநிதிகளுக்கு மேல் கூடினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக
இருந்தபோதிலும், மற்றவர்கள் 1960களிலும் 1970களிலும் பல எதிர்ப்பு இயக்கங்களில் கலந்து கொண்ட முதியவர்கள்
ஆவர்.
நவீன-தாராண்மை முதலாளித்துவ செயல்பட்டியலுக்கு
(Agenda) எதிர்ப்புத்
தெரிவிக்கும் நான்கு நாட்கள் கூட்டத்திற்கு இந்த அளவு கூட்டம் சேர்ந்தமை ஐரோப்பா முழுவதும் ஏற்பட்டுள்ள பெரிய
அரசியல் மாற்றங்களுக்கு அடயாளமாக உள்ளது. முதல் ஐரோப்பிய சமுதாய அரங்கம், சென்ற ஆண்டு புளோரன்சில்
(Florence)
நடைபெற்றது, போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினால் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், பழைய சமூக ஜனநாயகக் கட்சிகள், முன்னாள் ஸ்ராலினிசக் கட்சிகளினால் ஈராக் போர் பற்றி எடுக்கப்பட்ட,
பார்ப்பதற்குத் தெளிவற்ற நிலையானது பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியது. டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம்,
புஷ் நிர்வாகத்தின் முதல்தர நட்புநாடு போல் நடந்துகொண்டாலும், பெரும்பாலான அதிகாரபூர்வமான இடதுசாரிக்கட்சிகள்
மற்றும் ஜேர்மனியின் ஹெகார்ட் ஷ்ரோடர், போன்றவர்களுடய அரசாங்கங்களும், அமெரிக்க இராணுவ வாதத்துக்கு
எதிர்ப்பு காட்டுவன போல் தோற்றமளித்தன.
இப்பொழுதோ, நிகழ்வுகள் வியத்தகு முறையில் மாறிவிட்டன. ஐரோப்பாவின் அதிகாரபூர்வமான
இடதுகள் ஐ.நா.விற்குள்ளேயே ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுப்பது உட்பட, வாஷிங்டனுடன் உறவை சீரமைத்துக்
கொள்வதில் ஈடுபாடு கொண்டுள்ளன. எங்கெல்லாம் அவர்கள் ஆட்சியில் உள்ளனரோ, அங்கெல்லாம் உழைக்கும் மக்களுடய
சமுக நலன்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியும், எங்கு பழமைவாத அரசாங்கங்கள் அவ்வாறு செய்கின்றனவோ, அங்கு
இத்தாக்குதலுக்கான எதிர்ப்பை, மூச்சுத் திணறலுக்கு உட்படுத்திக்கொண்டு அந்த ஆதரவைக் கொடுக்கின்றனர்.
"இதன் விளைவாக, பழைய சீர்திருத்தக் கட்சிகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கையும், தேர்தல்
ஆதரவும், பெரிதும் சரிந்துவிட்டன. பிரான்சில் ஜோன் பியர் ரஃப்ரனின் வலதுசாரி கோலிச அரசாங்கத்திற்கு ஆதரவு
குறைந்து விட்டபோதிலும், சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதனுடைய "பன்மை இடதுகளின்" கூட்டாளிகளுக்கும் தேர்தல்
நல்வாய்ப்புக்களில் நல்ல பெறுபேறுகள் இல்லை.
இந்த மாற்றம் பாரிஸ் விவாதங்களுக்கு தக்க பின்னணியைக் கொடுத்துள்ளன. பிரதிநிதிகள்
300 கூட்டங்களில் கலந்துகொண்டனர்; பலவற்றில் கூட்டம் நிரம்பி வழிந்தது, மூன்றுமணி நேரம் கூட இடைவெளியின்றி,
கவனத்துடன் உட்கார்ந்து கேட்டனர். பெரும்பாலான இளைஞர்கள், ஈராக்கியப் போருக்கெதிரான பெரும் ஆர்ப்பாட்டங்களில்
அல்லது ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் நாடுகடந்த பெருவர்த்தக நிறுவனங்களால் ஒடுக்கப்பட்ட நாடுகள் சுரண்டப்படுவதற்கு
எதிரான முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் தங்களுடய முதல் அனுபவங்களைப் பெற்றவர்கள் ஆவர். இந்த அனுபவங்களிலிருந்து
அவர்கள், "பூகோள மாற்று" ("Alternative
Globalisation") என்ற கருத்துடைய புதிய-தாராளக்
கொள்கை கொண்ட வலதிற்கு மட்டுமல்லாமல், "தடையற்ற சந்தை" யின் அரசியல் சிந்தனயாளர்களின் செயல்பட்டியலை
ஏற்றுள்ள சமூக ஜனநாயகக் கட்சிகளிடமும் கடுமையான, கசப்பான விரோதத்தைக் கொண்டுள்ளனர்.
இந்த அபிவிருத்தி, ESF
ஐ வழிநடத்திச் செல்லும் சில குழுக்களை குழப்பத்தில் தள்ளியுள்ளன.
பிரான்சின் ATTAC
குழு போன்றவை, இவ் அரங்கம் ஒரு இடது சிந்தனைக் குழுவுக்கும்
(Left think tank)
அழுத்தக் குழுவுக்கும் (Pressure Group)
இடையிலான ஒரு சேர்க்கையாக, ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகளை,
சந்தைமுறையின் மோசமான வரம்புகடந்த செயல்களை தடுக்கும் சில மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரக்
கட்டுப்பாடுகளை மீண்டும் ஏற்பதற்கு, நம்பவைக்கும் திறனுடைய அரங்கமாக இது அமையும் என்று கருதியிருந்தன.
Le Monde Diplomatique ன்
ஆதரவில் நிறுவப்பட்டுள்ள ATTAC,
பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதோடு, தொழிலாள வர்க்கத்தின் மீதான
பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்திற்கு எந்த அரசியல் சவாலும் வருவதை எதிர்க்கின்றது.
ESF ä
வசதியான அரசியல் கருவியாகத் தன்னுடய அரசியல் திட்டத்திற்குக்
கொள்ள நினைத்தது; ஏனென்றால், பிரேசிலின் தொழிலாளர் கட்சியின் ஆதரவில், ஜனவரி 2001ல் முதலில் கூடிய
World Socialist Forum (WSF)
ன் இணப்பாக அது ஏற்படுத்தப்பட்டிருந்தது.
தொழிலாளர் கட்சி தங்களை பேரம்பேசும் அலகீடாகக் கொள்வதற்கு,
ATTAC ம், மற்றும்
பல அரசாங்க சார்பு இல்லாத அமைப்புக்களும், பன்னாட்டு நாணய நிதியத்தின் மறு சீரமைப்புக் கொள்கைகள்
உலகத்தின் ஏழை நாடுகளின் மீதான தாக்கத்தின், எதிர்ப்பில் அபிவிருத்தி அடைந்து வந்த முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை
நடத்துவதால் பேரம்பேசும் சக்தியை விரும்புவதைப் பெறுவதற்கு தொழிலாளர் கட்சி உதவி செய்யும் நோக்கங்களைக்
கொண்டிருந்தது.
உலக வர்த்தக அமைப்பிற்கு எதிராக, முதலில், சியாட்டிலில்,1999ல் தொடங்கிய
எதிர்ப்புக்கள், மிகப்பரந்த முறையில் சமுதாய எதிர்ப்பாக உலகம் முழுவதும் முதலாளித்துவத்திற்கு எதிராக வளரும்
என்று எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், WSF, ESF
தலைவர்கள் இச்சமூக இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டைவிட்டு விலகி, பழைய கட்சிகளையும், அவர்கள் நல்லுறவு
கொள்ளவிரும்பிய அரசாங்கங்களையும் தாக்குதலுக்குட்படுத்தும் என்பதை கடைசியாகத்தான் விரும்பினர்.
இதை மனத்தில் கொண்டு,
WSF தலைவர்கள், அரசியல்கட்சிகளும் இராணுவ அமைப்புக்களும்
இந்த அரங்கில் கலந்துகொள்ளுவதைத் தடைசெய்யும் "கோட்பாடுகளின் தொகுப்பு" ஒன்றை திணித்திருந்தனர். பழைய
கட்சிகளின்மீது, வெறுப்பும், விரோதமும் பலராலும் உணரப்பட்டதைப் பயன்படுத்தி,
WSF, ESF இரண்டும்
"அரசியலுக்கு அப்பால்" என்ற நிலை கொள்ளுதலை, அரசியல் அதன் இயல்பிலேயே ஊழல்மிகுந்தது என்ற கருத்தில்,
நியாயப்படுத்தினர். இந்தத் தடை, அரங்கத்தின் உள் அதிகாரம், சமூக செயல்பாட்டாளர்கள் கைகளில் மட்டும்
இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு வழிமுறையாக நியாயப்படுத்தப்பட்டது.
இது தேர்ந்தெடுக்கப்படாத, பொறுப்புக்கூறக் கடமையில்லாத,
WSF, ESF இவற்றின்
தலைமையை, அரசியலளவில் இயக்கத்தின்மீது ஆதிக்கம் செலுத்தி, அதை அமைதியான அரசியல் வழியில் நடத்திச் செல்ல
அனுமதிக்கும், வசதியான கட்டுக்கதையாயிற்று.
தன்னை ட்ரொட்ஸ்கிசக் கட்சியென சொல்லிக்கொள்ளும்,
Ligue Communiste Revolutionnaire (LCR)
என்ற பிரான்சில் உள்ள அமைப்பு, பிரிட்டனில் உள்ள
Socialist Workers Pasrty,
போன்ற தீவிர இடசாரிக் குழுக்கள் பலவற்றிற்கு ESF
ஈர்ப்புமுனையாக ஆயிற்று. மேற்கூறிய இருகட்சிகளுமே,
ESFன் "அரசியல்
இல்லை" என்ற பாசாங்கை, மகிழ்ச்சியுடன் ஏற்று செயல்பட்டன. ஏனெனில், வரலாற்று அளவில் தாங்கள் பழகியிருந்த
தொழிலாளர் இயக்கங்களின் அதிகாரத்துவத் தலைமையோடு மோதலைத் தவிர்த்து, பல முன்னணிக் குழுக்களுடனும்
ESFல் கலந்துகொண்டு,
தங்கள் ஆதரவையும் இவ்வகையில் பெருக்கிக் கொள்ளமுடியும் என பார்த்தன.
உழைக்கும் மக்களிடையேயும்,
ESF ல் தீவிரமாக இருப்பவரிடமும், பழைய, சீரழிந்த
தொழிலாளர் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு தலைமையை அமைக்க வேண்டும் என்ற அங்கீகாரம் வளர்ந்துவருவதன் காரணமாக,
பாரீஸ் மாநாட்டில், இந்த வசதி மிகுந்த அரசியல் ஏற்பாடு, அவதிக்குள்ளாயிற்று.
இவ்வரங்கு தொடங்கப்படுவதற்கு முன்பு
LCR, Lutte Ouvriere (LO)
உடன், அடுத்த ஆண்டின் ஐரோப்பியத் தேர்தல்களிலும், பிரெஞ்சுப் பொதுத் தேர்தல்களிலும் நிற்பதற்கு ஓர் உடன்படிக்கையை
செய்து கொண்டது. அவர்கள்
சோசலிஸ்ட் கட்சி,
பசுமைக் கட்சி, பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக, தங்கள் வேட்பாளர்களை நிறுத்துவர்.
இதேபோன்ற முறையில், SWP
உம், "தொழிற் கட்சிக்கு எதிராக, Socialist
Alliance என்ற பெயரில் மற்றய தீவிரவாத குழுக்களுடன்
இணைந்து, "வேட்பாளர்களை நிறுத்தியதுடன், இப்பொழுது ""போரெதிர்ப்புக் கட்சி" என்ற பெயரில், சமீபத்தில்
தொழிற் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் கோல்லோவே தலைமையில்,
ஒரு கட்சியை உருவாக்கியுள்ளது.
ஆனால், மிகுந்த தயக்கத்துடன், சமூக ஜனநாயகவாதிகளுக்கு தாங்கள் முன்பு கொடுத்திருந்த
ஒப்புதலிலிருந்து ஒதுங்கிப் போக தயக்கத்துடன் நிர்பந்திக்கப்பட்டிருந்தாலும்,
LCR, SWP, மற்றும்
அவற்றின் கூட்டாளிகள், பழைய கட்சிகளுக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின்கீழ் தொழிலாளர்களை ஒர்
அரசியல் அடிப்படையில் அணிதிரட்டி செல்லும் நோக்கத்தைக் கொள்ளவில்ல. அவர்களுடைய இலக்கு, சமூக ஜனநாயகவாதிகளும்,
ஸ்ராலினிஸ்டுகளும் வலதுபுறம் பாய்ந்து சென்றுவிட்டதால் ஏற்பட்டுள்ள, அரசியல் வெற்றிடத்தை, அனைத்தும் தழுவிய
எதிர்ப்புக் கட்சி ஒன்றை தோற்றுவித்து குறைந்த அளவு சீர்திருத்தங்களுக்கு மட்டும் உறுதியளித்து, "இடது ஒற்றுமை"
என்ற பெயரில் பழைய அமைப்புக்களுடனும் இயைந்து நடந்து கொள்வதேயாகும். தொழிலாள வர்க்கத்திற்குள் எதிர்ப்புக்களை
தொடர்ந்து நசுக்கவும் கட்டுப்படுத்தவும் இந்த முறை தொடர்ந்து செயல்படுத்த உதவும் என்பதோடு, தங்களது
கரங்களை இப்பொழுது பழைய தொழிலாளர்கள் அதிகாரத்துவத்துடன் நடந்துகொண்டிருக்கும் அரசியல் குதிரைவியாபாரத்திலும்,
எல்லாவற்றயும்விட தொழிற்சங்கங்களில், வலுப்படுத்திக்கொள்ளவும் இது உதவும் என்பது அவர்களது நம்பிக்கை ஆகும்.
சோசலிஸ்ட் கட்சியும் ஸ்ராலினிஸ்டுகளும்கூட
ESF க்குள்ளே, அமைப்பாக
இருந்த ATTAC
மற்றும் பிற அரசாங்கம் சாரா அமைப்புக்களுடன் சேர்ந்து கொண்டு, முற்றிலும்
நிறுவன அமைப்பு முறையிலான சுதந்திரத்திற்குக்கூட விரோதப் போக்கைக் காட்டி வருகின்றன. அரசியலில் தடை
என்பது போய்விடும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும்,
ESF சமூக ஜனநாயக வாதிகளுக்காகவாயினும், அவை வெளிப்படையான
வலசாரித்தன்மை கொண்டிருந்தாலும் கூட, மற்ற அரசாங்கங்களுக்காகவாயினும், பொதுவாக எதிர்ப்பைப் பிரகடனப்படுத்துவதை,
கடுமையாக எதிர்க்கிறார்கள்.
ATTAC- இன் நிறுவனர், பேர்னார்ட்
காசென், தான் சமீபத்தில் வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்றில், அரங்கிற்குள்ளேயே இயக்கத்தை "தீவிர இடபுறத்தில்,
மரபுவழிக் கட்சிகளுடைய, அல்லது அரசாங்கங்களுடைய வரம்பிற்கு அப்பால், அதாவது நிறுவன அமைப்பு அரசியலுக்கு
அப்பால்," எடுத்துச் செல்ல விரும்பும் பிரிவுகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இதன் விளைவான அரசியல் சூழ்ச்சிகள், பாரிசில், சமுதாய மற்றும் குடிமக்களின் இயக்கங்கள்
மற்றும் அரசியல் கட்சிகளுக்கிடையேயான உறவுகள் பற்றிய விவாதத்தில் குவிமையப்படுத்திய இரண்டு கூட்டங்களில் வெளிப்படையாக
செய்யப்பட்டன.
இத்தாலிய Rifondazione
Communista (RC) யின் தலவரான
Fausto Bertinotti,
முதல் கூட்டத்தில் அதிக பெருமைக்குரிய பேச்சாளராக கருதப்பட்டு, அவருடய கட்சி பிரிட்டிஷ்
SWP யின்
Alex Callinicos
ஆல், எல்லா இடத்திலும் இத்தகைய கட்சி "தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று
மேற்கோளிடப்பட்டது. எந்த அளவிற்கு தீவிரக் குழுக்களான
LCR, SWP போன்றவை
ESF-க்குள், அரசியல்
கொள்கையற்றதன்மையை கையாள்கிறார்கள் என்பது பற்றி, மிகப்பெரிய முறையில் எடுத்துரைக்கிறது.
RC ஐப் பொறுத்தவரை அதன்பாலான
ஈர்ப்பு, இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சி உடைந்ததிலிருந்து வெளிவந்தது ஆகும். முற்றிலும் சீர்திருத்த திட்டத்தைக்
கொண்டுவர வேண்டும் என்று அது கூறினாலும், தன்னிடம் நம்பகத்தன்மை பிறருக்கு வளரவேண்டுமானால், அது தனது ஸ்ராலினிசப்
பாரம்பரியத்திலிருந்து தன்னை தொலைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்துள்ளது. இதற்காக, அது
தம்மை ட்ரொட்ஸ்கிஸ்ட் என சொல்லிக்கொள்ளும், பல இடசாரி குழுக்களுக்கும் தன் கதவுகளத் திறந்து வைத்துள்ளது.
LCR உடைய,
ஓர் இத்தாலிய இணை சிந்தனயாளரான லிவியோ மைட்டன்,
RC யின் மத்தியக் குழுவில் பல ஆண்டுகளாக செயல்பட்டு,
பெர்டினோட்டிக்கு ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.
இடதுபிரிவுகள் எனக்கருதப்படும், பழைய தொழிலாளர் அதிகாரத்துவம், இன்னும் கூட
வலசாரிக்கு ஒரு அரசியல் மாற்றை வழங்க முடியும் என்பதற்கு
RC ஐத் தீவிரவாதிகள்
உதாரணம் காட்டி உள்ளனர். ஆனால் இடசாரிக் கூச்சலிட்டாலும்,
RC பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இத்தாலிய சமூக ஜனநாயகவாதிகளுக்கு
பிரதான அரசியல் முட்டுக் கொடுப்பாளராக உள்ளனர். 1990 களில் பலமுறை, மைய-இடது "சமாதான மரம்"
("Olive Tree")
அரசாங்கம், RC
யின், பாராளுமன்ற ஆதரவால், தப்பிப்பிழைத்தது. மைய-இடதினால் சுமத்தப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் மீதான
தாக்குதல்கள் தாம், சில்வியா பெர்லுஸ்கோனியின் வலசாரி அணி,
Forza Italia
-ன் வெற்றிக்கு வழிவகுத்தது.
பிரெஞ்சு PS
னுடய Kader Arif
ம், பசுமைக் கட்சியினுடய Noël Mamère
-ம், பாரீஸ் கூட்டத்தில் அழைக்கப்பட்ட பேச்சாளர்கள் ஆவர். அரசியல் கட்சிகளை எவ்விதத்திலும் ஏற்பது, ஒரு
பொதுமன்னிப்புக்கு ஒப்பாகும் என்ற கருத்தை அவர்கள் வலியுறுத்த முற்பட்டனர். இடது குடும்பத்தின் ஒரு பகுதியாக
இருந்து, ESF
ன் தொடர்ந்த ஆதரவு பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக வேண்டி சில தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம்
பற்றி அவர்கள் பேசினர்.
மறுநாள் மாலை நடைபெற்ற இதன் தொடர்ச்சிக் கூட்டத்தில், விஷயங்கள் இன்னும் கூடுதலாகத்
தெளிவாக்கப்பட்டன; சமூக ஜனநாயக வாதிகள், பசுமைக் கட்சியினர், ஸ்ராலினிஸ்டுகள் ஆகியோருக்கு அறைகூவல் விடுவதற்குப்
பதில், அவர்களை மறுசீரமைக்கும் கருத்தைத்தான், தீவிரப்போக்கினர்
(Radicals)
கொண்டிருந்தனர் என்பது நிரூபிக்கப்பட்டது.
LCR ன் 2002 ஜனாதிபதி
வேட்பாளரான, Olivier Besancenot,
பெல்ஜிய சோசலிஸ்ட் கட்சியின் Elio Di Rupo,
பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான Marie
George Buffet, மற்றவர்களுடனும் ஒரே மேடையில் தோன்றினார்.
Buffet, PS
அரசாங்கத்திற்குப் பல ஆண்டுகள் முட்டுக்கொடுத்ததால் மிகப் பெரிய அளவு
இழிவிற்கு உட்படுத்தப்பட்டுள்ள கட்சியின் தலைவர்தான் இவர்; மொத்த வாக்குகளில் அது பெற்ற வாக்கு வரலாறு
காணாத 5 சதவீதத்திற்கும் குறைவுதான், இது LCR, LO,
Parti des travaillerus (PT) என்று, 2002 மே
மாதம் ஜனாதிபதித் தேர்தல்களில், "அதி இடது" எனக்கூறிக்கொண்ட கட்சிகள் மொத்தத்தில் பெற்ற 10சதவீதத்தில்
பாதிக்கும் குறைவானதேயாகும்.
அந்தத் தேர்தலின் இரண்டாம் சுற்றில், சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக்
கட்சிகள் என்று எல்லா அதிகாரபூர்வமான இடதுசாரிக் கட்சிகளும், பழமைவாத முகாமின் தலைவரும் மற்றும் பிரான்சின்
முதலாளித்துவ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்த, ஒருமித்த கருத்துடைய வேட்பாளர் பின்னால், முண்டியடித்து ஓடி,
ஜாக் சிராக்கிற்கு வாக்குப்போட, Besancenot
அழைப்பு விடுத்திருந்தார். சிராக்கிற்காக, இந்த "இடது" பிரச்சாரம், இரண்டாம் சுற்றில் அவருடைய எதிர்ப்பாளர்,
பாசிச தேசிய முன்னணியின் தலவரான Jean-Marie Le
Pen, என்பதனால், நியாயப்படுத்தப்பட்டது.
பாரிஸ் கூட்டத்தில்
Besancenot தேர்தல் உரைபோல் ஒலியெழுப்பி மக்களைத்திருப்திப்படுத்தும்
பேச்சு ஒன்றை அளித்தாலும், ரஃபரனுக்கு முன்பிருந்த பன்மை இடது அரசாங்கத்தைப்பற்றி அதிகம் கூறாமலும்
PCF பற்றி
ஏதும் கூறாமலும் இருந்துவிட்டார். Di Rupo, Buffet
இருவரும் தங்களுடய உரைகளில் கடந்தகாலத் "தவறுகள்" நிகழ்ந்தது
பற்றியும், "இடது ஒற்றுமையின்" தேவையைப் பற்றியும் மீண்டும் வலியுறுத்தினர். இருவரும், கைதட்டி ஆர்ப்பரிக்கும்
தங்கள் ஆதரவாளர்களை அழைத்து வந்திருந்தாலும், கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் கொண்டிருந்த விரோதப் பாங்கு
நன்கு உணரக்கூடியதாக இருந்தது. கேலிக் கூச்சல் மிகுந்திருந்ததோடு, பல பேச்சாளர்கள் முன்வந்து எந்த விதமான
தொடர்பும் சமூக ஜனநாயக வாதிகளுடனும், PCF
உடனும் கூடாதென்றனர். பார்வையாளரின் எதிர்விளைவைப் புறக்கணித்த, தன்னுடய முடிவுரையில் மீண்டும் ஒற்றுமையை
வலியுறுத்திப் பேசியதுதான் பெசன்சநோவின் விடையாக அமைந்தது.
PCF ä,
LCR எத்தனையோ
ஆண்டுகள் ஈர்க்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது, மற்றும் அந்த ஸ்ராலினிசக் கட்சியில், இத்தாலிய
Rifondazione
வழியில் இரண்டு பிரிவுகளும் இணைக்க வேண்டும் என்று கருதும் ஓர் உட்பிரிவும் இருக்கிறது. மிகச் சமீபத்தில்,
அக்டோபர் 15ம் தேதி கூடிய, LCR,
PCF
இவற்றின் கூட்டுக் கூட்டமொன்றில், ஐரோப்பிய அரசியலமைப்பிற்கெதிரான பொதுவாக்கெடுப்பில் இணைந்து பிரச்சாரம்
மேற்கொள்ள வழிகாண, விவாதிக்கப்பட்டது. LCR,
"எங்கள் விருப்பம் எல்லா மட்டங்களிலும் இரு அமைப்புக்களிடையே பொதுவிவாதம் தொடரவேண்டும்" என்பதை வலியுறுத்தி
ஓர்அறிக்கையை வெளியிட்டது.
ESF ன் சந்தர்ப்பவாதம், மாநாட்டின்
நடவடிக்கைகள் மூலமாகவும், PS
மட்டுமில்லாமல், கோலிச பிரான்சின் தலைவர், சிராக்கும்
ESF ஐத் திருப்திப்படுத்த மேற்கொண்ட தொடர்ந்த செயல்முறைகளினாலும்
நன்கு வெளிப்படுத்தப்பட்டது.
இசைக்கருவியை ஒலிப்பவனுக்கு எவன் பணம் தருகிறானோ, அவன்தான் எந்தப் பாட்டு
பாடப்படவேண்டும் என்று நிர்ணயிக்கிறான் என்று ஒரு பழமொழி உண்டு; இதையொட்டியே, திரைக்குப்பின்னால் உண்மை
அரசியல் (realpolitik)
நடந்து கொண்டிருந்தது. பாரிஸ் நகர நிர்வாகம்
ESF ற்கு பல இலவச
வசதிகளை செய்து கொடுத்தது; PS
மேயரான Bertrand Delanoë,
நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தபோது பிரதிநிதிகளுக்கு நட்புமுறையில் ஓர் எச்சரிக்கை விடுத்தார்; "ஆம், நாம்
ஸ்தூலமான முடிவுகளை எடுப்பதற்காக கற்பனாவாதிகளாக இருப்போம். ஆனால், நம்முடைய விரோதிகள் யார்
என்பதில் தெளிவாக இருப்போம். நாம் ஒன்றாக இணந்து வர முடியவில்லை என்றால், தாராள [முதலாளித்துவ
"சுதந்திர சந்தைக்காரர்கள்" -ஆசிரியர்] பூகோளமயமாக்கல் காரர்கள் ஒளிமிகுந்த வருங்காலத்தை அடைவார்கள்.
ESF தொடக்க நாளன்று முன்னாள்
PS இன்
பொருளாதார மந்திரியும், 2007 ஜனாதிபதித் தேர்தலில்,
வேட்பாளராக வரக்கூடியவருமான, Laurent Fabius,
விவசாயிகள் தலவரான José Bové
-உடன் காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டார்.
எல்லாவற்றயும் விட வெளிப்படையானது எதுவன்றால், சிராக் 500,000 யூரோக்களை
ESF
நிதிக்குக் கிடைக்குமாறு அளித்தார். மாற்று உலகளாவிய இயக்கத்திற்கு பாலம் போடும் முறையில், தன்னுடய சிறப்புத்தூதர்
Jérôme Bonnafont -ஐ
கூட்ட நடவடிக்கைகளில் கலந்கொள்வதற்காக அனுப்பினார்.
இவ் இயக்கத்துடன் சிராக்கின் தொடர்புகள் நீண்ட காலமானவை. இக்கோடை விடுமுறையின்போது,
ஜி-8 ன் பெரும் தொழில்வளர்ச்சியுற்ற நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு எதிராக
Evian "எதிர்-உச்சி"
மாநாட்டின் பணிகளைப் புகழ்ந்ததுடன், அதற்கு ஏற்பாடு செய்திருந்த அரசு-சாரா அமைப்புக்களை ஜனாதிபதி
மாளிகைக்கும் அழைத்திருந்தார். அமெரிக்காவிற்கெதிரான பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு ஒரு சிந்தனைப் போர்வையாக,
அதிலும் குறிப்பாக ஆபிரிக்காவில் பிரான்சின் நலன்களைக் கருத்திற்கொண்டு, இந்த அமைப்புக்களைப் பயன்படுத்தினார்.
Top of page
|