World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரித்தானியா
Britain: Hutton Inquiry hears damning evidence against government பிரிட்டன்: அரசாங்கத்திற்கு எதிராக கண்டனத்திற்கு ஆளாக்கும் சாட்சியங்களை ஹட்டன் விசாரணை கேட்கின்றது By Julie Hyland ஈராக்கியப் போரில் தன் திட்டத்தை நியாயப்படுத்துவதற்காக அரசாங்கம் உளவுத்துறை அறிக்கையைத் திரித்துக் கூறியதற்கான ஆதாரம், அரசாங்க விஞ்ஞானியான Dr. கெல்லிதான் என அவர் ``வெளிப்படுத்தப்பட்ட`` சில தினங்களில் மரணம் அடைந்து கிடந்தது பற்றிய விசாரணையில் ஹட்டன் பிரபு தலைமையிலான விசாரணையில் முதல் வாரத்தில் யதார்த்த மிகைவாதச் சூழ்நிலை நிலவியது. விசாரணைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள சான்றுகளுக்கும், அதைப் பற்றிய விவரங்களை அளிக்கும் அரசாங்கமும், பிபிசி நிருபர் சூசான் தன்னுடைய நிறுவனத்தையும் மற்றவர்களையும் பற்றித் தாக்கிப் பேசியதை வேறு விதமாக வெளியிடும் செய்தி ஊடகமும் மிக மோசமான அளவு, அரசாங்கத்திற்கெதிரான சாட்சியங்கள் வெளிப்படுத்தும் உண்மையைப் புதைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆன்ட்ரு ஜில்லிகனும், வாட்சும் மற்றவர்களும் தொடக்கத்தில் அளித்த சாட்சியங்கள், உளவுத் துறையினரிடையே பரந்த அளவு கவலை, போருக்குமுன் தாங்கள் அளித்த சான்றுகளை மோசடி வகையில் அரசாங்கம் அளித்தது பற்றி, இருந்ததைத் தெளிவாக்கியிருந்தன. பிபிசியைக் கண்டனம் செய்ய மற்ற செய்தி ஊடகம் காட்டும் பரபரப்பும், பிளேயரை நியாயப்படுத்த அவை கொள்ளும் முயற்சிகளும் மிகப்பெரிய அளவில் விசாரணை அரசியல் தன்மை கொண்டுள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; ஆனால் பிரிட்டனின் ஆளும் செல்வந்த தட்டுக்கும் அரசு இயந்திரத்திற்கும் இடையே எழுந்த கொழுந்துவிட்டு எரிந்த பூசலின் விளைவாகத்தான் விளைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்குழுவின் இறுதி முடிவுகள் இந்தப் பூசலுக்கு ஓர் இடைக்கால முடிவைத் தரும் அளவில் அமையுமேயொழிய, சான்றுகள் அளிப்பின் நிலைபற்றிக் குறைவான தன்மையைக் கொண்டிருக்கக்கூடும். ஆளும் செல்வந்த தட்டுக்குமிடையே உள்ள கேள்வி, எந்த அளவிற்கு அவர்கள் கொண்டுள்ள தீமைக் கட்டுப்பாட்டு முயற்சிகள், பிளேயர் அரசாங்கத்தையே மூடிமறைக்கும் வகையில் உள்ளடக்கி நிற்கும் என்பவைதான். எல்லாவற்றிற்கும் மேலாக செய்தி ஊடகத்தின் விசாரணை பற்றிய திரித்துக்கூறும் அறிவிப்புக்கள், முதலில் இத்தகைய விசாரணை எழக் காரணம் என்ன என்பதையே தெளிவாக்காத நோக்கத்தைக் கொண்டுள்ளன: அஃதாவது ஈராக் மீது தவிர்க்க இயலாத தாக்குதல், சட்ட விரோதமான தாக்குதல் பரந்த அளவு மக்கள் எதிர்ப்பிற்கு உட்பட்ட தாக்குதலை நியாயப்படுத்த மிகக்கொடுமையான பொய்யுரைகளின் தொடர்ச்சியைக் கையாண்டதில் அது பிடிபட்டதா என்பது. இதை மறைக்கப் பரபரப்புடன் செயல்பட்ட அரசாங்கம் சூனிய வேட்டையில் இறங்கியது இன்னும் விளக்கப்படாத கெல்லியின் இறப்பில் கொண்டு விட்டுள்ளது. இதுவரை அளிக்கப்பட்ட சாட்சியம் கெல்லி, ``நடுத்தர அலுவலர்,`` ``ஒரு வால்டர் மிட்டி போன்ற கற்பனைவாதி`` என்று பிரதம மந்திரி டோனி பிளேயரின் செய்தி அதிகாரி விஞ்ஞானியின் இறுதிச் சடங்குகளுக்கு ஒருநாள் முன்பு தெரிவித்த கூற்றுக்கள் முதல் நிலைகளில் வந்துள்ள சாட்சியங்கள் தகர்த்துள்ளன.பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உளவுத்துறையின் உறுப்பினர்கள் அளித்த சான்றின்படி, கெல்லி சர்வதேச அளவில் புகழ்பெற்ற இங்கிலாந்தின் சதாம் ஹுசேனின் உயிரியல், இரசாயன ஆயுதங்கள் பற்றிய வல்லுநர் என்பதும், அந்த அளவில் MI6 உடனும் பாதுகாப்பு உளவுத் துறைப்பணி (DIS), CIA மற்றும் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் (MoD), அயல்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் தொடர்ந்து உரையாடல்கள் மேற்கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.ஈராக்கிய உயிரியல் ஆயுதத்திறனைப் பொறுத்தவரையில் ``மனித அளவிலான பதிவுக் கிடங்கு`` என்று விவரிக்கப்பட்ட கெல்லியின் அனுபவம் 1991 முதல் வளைகுடா போருக்குப்பின் ஐ.நா. தீர்மானம் 687ஐ ஒட்டி தலைமை ஆயுத ஆய்வாளராக அவர் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து நிறைந்துள்ளது. ஈராக்கிய விஞ்ஞானிகளிடம் அந்நாட்டின் ஆயுதத்திறன் பற்றி ``குறிப்பிடத்தக்க அளவு`` கேள்விக் கணைகள் தொடுப்பதில் சிறந்தவர் என்று பெயரெடுத்த கெல்லி, செயின்ட். மைக்கேல் கிராஸ், செயின்ட். ஜோர்ஜ் கிராஸ் ஆகியவற்றைத்தான் பணிகளுக்காகப் பெற்றிருந்தார்; இது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அதே ஆண்டு, 1996ல், ``பிரிட்டிஷ் MoDயால், இறுதியில் ஈராக் மீது படையெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு அனைத்து ஆதரவும் அளித்த TELEC செயல்பாடு என்ற பெயரைக்கொண்டிருந்த பகுதியில்`` கெல்லி இருந்தார் என்று MoDயின் பணியாளர் இயக்குநரான ரிச்சார்ட் ஹாட்பீல்டு தெரிவித்தார். ``மிக அதிக அளவு பாதுகாப்புப் பத்திரங்களைக்`` காணும் உரிமை அவருக்கு அளிக்கப்பட்டிருந்ததாகவும் செய்தி ஊடகத்தோடு திறம்பட தொடர்பு கொண்டிருந்தவராக கெல்லி விளங்கினார் என்றும் விசாரணைக் குழுவிற்குக் கூறப்பட்டது. ஒரு ஆவணப்படி, செய்தி ஊடகத்தோடு நேர்த்தியுடன் செயல்பட்ட டாக்டர் கெல்லியினால் ``மாட்சிமை தங்கிய அரசியாரின் அரசாங்கத்திற்கு`` எப்பொழுதுமே சங்கடங்கள் நிகழ்ந்ததில்லை என்றும் கூறப்பட்டது. அயலுறவு அலுவலகத்தோடும், பலமற்ற அமைப்புக்களோடும் நெருக்கமான முறையில் பெப்ரவரி 2002லிருந்து ஈராக்கின் ஆயுதத்திறன் பற்றிய கோப்புத் தொகுப்பு தயாரிக்கும் பணியில் முதலில் ஈடுபட்டார் கெல்லி என்பதும் விசாரணைக் குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. பல ஆதாரங்களின்படி, கோப்புத் தொகுப்பிலுள்ள வரலாற்றுப் பிரிவிற்குக் கெல்லியின் பங்கு, ஈராக்கின் ஆயுதத்திறன் பற்றிய பின்னணி, சதாம் ஹுசேனின் கீழ் பொது வாழ்க்கை, ஈராக்கிய உயிரியல் ஆயுதத்திட்டம் பற்றிய அறிக்கை ஆகியவற்றில், நிறையவே இருந்தது. இறுதி நகல் அறிக்கையும் இவருடைய ஆய்விற்கு உட்பட்டு இருந்தது. சர்வதேச சட்டத்தின் வரம்பு கடந்து தடுக்க முடியாத தாக்குதலை நடத்திய அமெரிக்காவுடன் சேர்ந்து செயலாற்ற பிளேயரின் நியாயப்படுத்தும் முயற்சியில், இக்கோப்புத் தொகுப்பு மையமாக விளங்கியது. போர் முயற்சிகள் இறுதிக் கட்டங்களை அடைந்த போது, சதாம் ஹுசேன் தேசியப் பாதுகாப்பிற்கு உடனடி அச்சுறுத்தலாக இருந்தார் என்ற காரணத்தைப் புனைவதற்குத் தக்க கருவியாக இவ் ஆவணம் இருந்தது. விசாரணைக்கு அளிக்கப்பட்ட சாட்சியம் கெல்லியை ஆதாரமாக கொண்டு, மே 29ல் BBC நிருபர் ஆன்ட்ரு ஜில்லிகன் முதன்முதலில் கூறியதுபோல், உண்மையிலேயே, கோப்புத்தொகுப்பு ``மாற்றம் அடைந்தது`` இறுதி வடிவம் பெறுமுன்னர் என்பது தெரியப்படுத்துகிறது. தன்னுடைய அரசாங்கம் ஈராக்கியப் பேரழிவு ஆயுதம் பற்றிய விவரங்கள் கொண்ட ஆவணம் ஒன்றை வெளியிடும் என்று செப்டம்பர் 3, 2002ல் பிளேயரின் அறிவிப்பிற்குப்பின், கோப்புத்தொகுப்பு ``சீரமைக்கப்பட்டது.`` அதற்கு அடுத்த சில வாரங்களில் கோப்புத் தொகுப்பிற்குள் ஈராக் ``45 நிமிடத்திற்குள்`` உயிரியல், இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் என்ற குறிப்பு உட்படச் சில தகவல்கள் சேர்க்கப்பட்டன. விசாரணைக் குழுவின் முன்பு, பாதுகாப்பு உளவுத்துறையின் துணைத்தலைவரான மார்ட்டின் ஹோவார்ட், இந்தக் கூற்று, மற்றும் சில கூற்றுக்கள் இறுதிப் படிவத்தில் இடம் பெற்றதற்கு மூத்த பாதுகாப்பு மட்டும் உளவுத்துறை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாக ஒப்புக்கொண்டார். இரண்டு அதிகாரிகள், பிரதம மந்திரி 45 நிமிடக் கூற்றுக்குத் தன் முன்னுரையில் கொடுத்துள்ள முக்கியத்துவம் பற்றியும், அதன் உண்மைத் தன்மை பற்றி "உறுதியிலாத்தன்மை இருப்பினும்" கோப்பின் நிர்வாகச் சுருக்கம் பற்றியும் எழுத்து மூலமாக எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இக்குற்றச்சாட்டு, ஆகஸ்ட் 30-ல் (ஒரு இராக்கியத் தளபதியின்) சான்றிற்குட்படாத ஆதாரத்தைக் கொண்டு செய்யப்பட்டிருந்தது. ஹுசேன் இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் கொள்வதை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதினார் என்று புலனாய்வு இவ்வாறு "குறிப்பாகக் காட்டுவதாக" கூறி இருக்க வேண்டும் என்று மட்டுமே தீர்மானித்த பொழுது, குறிப்பாக புலனாய்வு "காட்டுகிறது" என்ற கூற்றைக் குறித்து, கோப்பில் பயன்படுத்தியுள்ள "கடுமையான சொல்லாட்சி" பற்றியும் அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்பொழுது ஓய்வுபெற்றுள்ள DIS உறுப்பினர் ஒரு கடிதத்தில் குறைகூறியுள்ளபடி, "பேரழிவு ஆயுதங்கள் பற்றி உளவுத்துறையில் ஒருவேளை மிக மூத்த, மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரி என்ற முறையில், உளவுத்துறை பற்றிய மதிப்பீட்டில் எனக்கும் ஒரு பங்கு அதில் உண்டு, 24 செப்டம்பர் 2002 கோப்பில் அளிக்கப்பட்ட முறை பற்றி கவலைப்பட்ட நான் அதிகாரபூர்வமாக ஹோவார்டுக்கு முன்பு அப்பதவியில் இருந்த டோனி கிரேக்கிற்கு என்னுடைய எதிர்ப்புக்களைப் பதிவு செய்து, சிலவற்றோடு நான் உடன்படவில்லை என்றும் எழுதியிருந்தேன்`` எனத் தெரிவிக்கிறது. வேறு ஒரு ஆவணத்தின் மூலம் கெல்லியும் கூட சில மறுப்புக்களை எழுப்பியுள்ளதும் தெரிய வந்துள்ளது. ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் 20 டன் உயிரியல் வளர்ச்சிக்கான ஊக்கிகளுக்கு கணக்குக் கூற முடியவில்லை என வலியுறுத்தியுள்ளதைப் பற்றி DIS உறுப்பினர் ஒருவர், கெல்லியிடம் செப்டம்பர் 10 மின் அஞ்சல் மூலம் ஆலோசனை கேட்டதற்கு, எழுதப்பட்டுள்ள வாசகங்கள் சரியாக இருந்தபோதிலும் ``பல கதைச் செருகல்கள் அதில் புகுத்தப்பட்டுள்ளன`` என்று கெல்லி கூறியதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சர் அவை அலுவலகத் தலைமை மதிப்பீட்டு அதிகாரியான ஜூலியன் மில்லர், தன்னுடைய சாட்சியத்தில், திருத்தப்பட்ட நகல் படிவத்தைப் பற்றி DIS அதிகாரிகள் எழுப்பியுள்ள பிரச்சினைகள் சிலவற்றை எழுப்பும் செப்டம்பர் 19ம் தேதி அதிகாரிகளால் அனுப்பப்பட்ட கடித்த்தில், கெல்லியின் பங்கும் இருந்திருக்கூடும் எனத் தெரிவித்தார். இந்தக் கணிசமான எதிர்ப்பிற்குப் பிறகும் கூட, கூட்டு உளவுத்துறைக்குழு (JIC), கோப்புத் தொகுப்பை 5 நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 24ம் தேதி வெளியிட இசைந்தது. ``45 நிமிடக்கூற்று`` சட்டவிரோதமான போருக்கு முனைப்புக் காரணமாக ஆயிற்று. செய்தியாளரின் சாட்சியம் MoD யின் அலுவலர் இயக்குநரான ஹாட்பீல்டு, ``தொழில்நுட்ப விஷயங்களில்`` செய்தியாளரிடம் பேசக் கெல்லிக்கு அனுமதியளித்திருந்த போதிலும், ``அரசியல் ரீதியாய் சர்ச்சை கொண்ட விடயங்களைப் பற்றிப்`` பேசுவதற்கு அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்றும், அதிலும் குறிப்பாகச் செப்டம்பர் கோப்புத் தொகுப்பைப் பற்றிப் பேச அனுமதி இல்லை என்றும், வலியுறுத்திக் கூறினார். அவ்வாறு அவர் செய்யக்கூடுமேயாயின், ``அரசாங்க வேலை பார்ப்பதால், அத்தகைய எஜமானருக்கெதிரான போக்கைக் கொண்டதாகவும், அடிப்படை நம்பிக்கைத்தன்மை இழப்பதற்குக் காரணமாகவும்`` அது அமைந்துவிடும் என ஹாட்பீல்டு தெரிவித்தார்.அரசாங்கம் தொழில்நுட்ப விடயங்களை உண்மைக்குப் புறம்பாகத் தன் அரசியல் நோக்கங்களுக்காகப் பேசும்பொழுது தான் அதைப் பற்றிப் பேசுவது நியாயமாகும் என்று கெல்லி உணர்ந்திருக்கக்கூடும். எனவே அவர் பேசவே செய்தார். பிளேயரின் தொடர்பு இயக்குனர் அலாஸ்டெய்ர் காம்பெல், செப்டம்பர் கோப்பைப் ``பாலியல் அளவில் அவலப்படுத்திவிட்டார்`` என்று ஒரு மூத்த ஆதாரம் தெரிவித்ததாக Radio 4ன் Today நிகழ்ச்சியில் மே 29 அறிக்கையில் கூறியதை ஜில்லிகன் விசாரணைக் குழுவிடம் உறுதிப்படுத்தினார். இந்தக் குற்றச்சாட்டுக்களின் விளைவாக இரு பாராளுமன்ற விசாரணைக் குழுக்கள், ஒன்று அயலுறவுக்குழு (FAC) வினாலும், மற்றொன்று உளவு மற்றும் பாதுகாப்புத் துறைக்குழு (ISC) வினாலும் மேற்கொள்ளப்பட்டு, இரண்டும் அரசாங்கச் செயல்களுக்கு வெள்ளையடித்துச் சுண்ணாம்பு பூசிவிட்டன. கெல்லியுடன் மே 22ம் தேதி சந்தித்தபோது நடந்த பேச்சுக்களின், தன்னுடைய சொந்தக் குறிப்புக்களை, அடிப்படையாகக் கொண்டு, விஞ்ஞானி கோப்புத் தொகுப்பு ``வெளியிடப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு அது பாலியல் தன்மைக்கு (குழப்புதற்கு) உட்படுத்தப்பட்டது`` என்று தன்னிடம் கூறியதாக ஜில்லிகன் தெரிவித்தார். இதில் சீரிய அளவில் இடம்பெற்றது 45 நிமிடக்கூற்று ஆகும். கோப்புத்தொகுப்பில் பெரும்பாலானவை இரு வேறு ஆதாரங்களைக் கொண்ட அளவில், இது ஒன்று மட்டும் ஒற்றை ஆதாரத்துடன் நின்றது. ஒரு ஆதாரம் ஏவுகணைப் பகுதிகள் சேர்க்கப்பட 45 நிமிடங்கள் ஆகும் என்று கூறியது தவறாகப் பயன்படுத்தப்பட்டது. உளவுத்துறையில் பலரும் அதைப் பற்றி திருப்திகொள்ளாததற்குக் காரணம் அவர்கள் கொண்டிருந்த கருத்தை அது பிரதிபலிக்கவில்லை என்பதனால்தான்.`` கோப்புத்தொகுப்பு கவர்ச்சிகரமாக இருக்கவேண்டுமென்பதற்காக அவ்வாறு மாற்றப்பட்டது என்று விஞ்ஞானி விளக்கினார். ``பாலின முறையில் கவர்ச்சியாகவா`` என்று ஜில்லிகன் கேட்டார். ``ஆம், அதைப் பாலியல் முறையில் கவர்ச்சியாக்கத்தான்`` என்று கெல்லி கூறினார். எப்படி இவ்வாறு மாறுதல் நடந்திருக்கக்கூடும் என்ற ஜில்லிகனின் வினாவிற்குக் கிடைத்த பதில், ``காம்ப்பெல்.`` (செப்டம்பர் 9ம் தேதி JIC மதிப்பீட்டுக் கூட்டத்தில் முதன்முதலாக இந்த 45 நிமிடக்கூற்று தோன்றியது என விசாரணையில் முந்தைய சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. இக்கூட்டத்திற்கு காம்பெல் தலைமை தாங்கினார், அந்தச் செயலை FAC தன்னுடைய முடிவுகளில் கண்டனத்திற்கு உட்படுத்தியுள்ளது). இந்தத் தகவல் "நம்பத்தகுந்தது அல்ல", "எங்களுடைய விருப்பங்களுக்கு எதிராக அது கோப்புத் தொகுப்பில் இடம்பெற்றது`` என்று விஞ்ஞானி ஜில்லிகனிடம் கூறினார். ஈராக்கின் ஆயுதத்திட்டங்கள் "சிறியவை" என்று விஞ்ஞானி கூறினார். ஈராக்கின் ஆயுத ``பொருளாதாரத் தடைகள் சக்திமிக்கதாக இருந்தன. அவை திட்டத்தை மட்டுப்படுத்தின. பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களைத் தயாரிக்க முடியாது`` என்ற கெல்லி, தொடர்ந்தார். ``அவரைப் பொறுத்தவரை (சதாம்) எல்லாம் சரியாகச் சென்றிருந்தாலும் பலரைக் கொல்ல முடிந்திருக்காது. பேரழிவு ஆயுதங்கள் என்பது பொருத்தமில்லாமல் போயிருக்கும்.`` விசாரணையின்போது அரசு வழக்குரைஞரான (Queen's Counsel), ஜேம்ஸ் டிங்கமென்ஸ் ஆக்ரோஷத்துடனும் விரோதப்போக்குடனும் கேட்ட கேள்விகளை எதிர்கொள்கையில், ஒரு அறிக்கையில் தன்னுடைய சொல்லாட்சி ``முழுச் சிறப்புடன் இல்லை`` என்பதை ஜில்லிகன் ஒப்புக்கொண்டார். அவரது முதாலாவது, BBC யின் இன்று நிகழ்ச்சியில், மே 29, காலை 6 மணிக்கு குறிப்பின்றி பேசுகையில், அரசாங்கம் 45 நிமிடக்கூற்று தவறென்று அறிந்தும் கூட கோப்புத் தொகுப்புக்களில் சேர்த்துள்ளது என்ற கருத்தைத் தெரிவித்திருக்கக் கூடும் என்றார். ஆனால், அவருடைய ஆதாரத்தின் உயர்ந்த அந்தஸ்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், பெப்ரவரி 2003ல் அரசாங்கம் வெளியிட்ட கோப்புத்தொகுப்பின் உண்மை, ஒரு கலாநிதி பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கட்டுரை எழுத்துத் திருடித் திருத்தப்பட்டது என்பதை நிரூபித்திருந்தது -தன்னுடைய கருத்தை வெளியிட்டது பொருத்தமானதேயாகும் என்று ஜில்லிகன் உரைத்தார்.தன்னுடைய சக ஊழியரிடமிருந்து தான் விலகி நிற்கும் தன்மையைப் புலப்படுத்தியபோதும், விசாரணைக் குழுவில் சூசான் வாட்சால் முன்வைக்கப்பட்ட சாட்சியம், கெல்லியுடனான ஜில்லிகனின் பேச்சு விவரங்களை உறுதிப்படுத்தியது. பிபிசியின் நியூஸ் நைட் என்ற நிகழ்ச்சிக்கு கெல்லியை ஆதாரமாகக் கொண்டு, கோப்புத்தொகுப்பில் உளவுத்துறை அதிகாரிகளிடையே பிரிவுகள் உண்டு என்ற கருத்தை சூசானும் கூறியிருக்கிறார். ஆயினும், விசாரணையின்போது தன்னுடைய அறிக்கைக்கும், ஜில்லிகனுடைய அறிக்கைக்குமிடையே "குறிப்பிடத்தக்க வேறுபாடுகள்" இருந்ததாக இவர் கூறியுள்ளார். காம்பெல் தான் கோப்புத் தொகுப்பை மாற்றக் காரணம் என்று கெல்லி கூறவில்லை என வலியுறுத்திய சூசான், தன்னைப் பாதுகாத்துக்ாெகள்வதற்காக பிபிசி தன் ஆதாரத்தை சாட்சியம் அளிக்கும்போது பயன்படும் வகையில் "வடிவமைக்க" முயற்சித்ததாக பிபிசி மீது கடுமையாகச் சாடினார். இந்த அம்மையாருடைய கருத்துக்களைப் பிடித்துக்கொண்ட செய்தி ஊடகங்களில், பல வாட்சின் சாட்சியம் அரசாங்கத்தின் நிலை குற்றமற்றது என மெய்ப்பித்துக் காட்டுகிறது என்றன. ஆனால் மே மாதம் மூன்று முறை கெல்லியுடன் நிகழ்த்திய பேட்டிகளின் குறிப்புக்கள், ஒலி நாடாப்பதிவு செய்யப்பட்ட இறுதியாய் அவர் விஞ்ஞானியுடன் நடத்திய கலந்துரையாடல் உள்பட, விசாரணையில் அவர் பேசியதைத் திட்டவட்டமாக மறுதலித்துள்ளன. மே 7ம் தேதி, 45 நிமிடக்கூற்று பற்றிக் கெல்லியுடன் நிகழ்த்திய உரையாடலின் குறிப்புக்கள், ``அது உள்ளே சேர்க்கப்பட்டது தவறாகும். அலாஸ்டர் காம்பல், அதில் ஏதோ இருக்கின்றது என நினைக்கிறார். வேறு ஆதாரமில்லாத ஒற்றை ஆதாரம். கேட்பதற்கு நன்றாகயிருக்கிறது`` என்று கெல்லி கூறியதாக வெளிப்படுத்துகின்றன. இந்தக் கருத்தைப் பேட்டியுடன் தொடர்பில்லாத ``அரட்டை`` எனத் தான் நினைத்ததாகவும் அதனால்தான் அதை அறிக்கையில் சேர்க்கவில்லை என்றும் சூசான் கூறினார். 45 நிமிடக்கூற்றுதான் ஒற்றை ஆதாரமுடையது என்பது பின்னர் உறுதியாக்கப்பட்ட அளவில்தான் அந்தக் கருத்தின் முக்கியத்துவத்தை தான் உணர்ந்ததாகக் கூறினார். ``பின்நோக்கில், அவர் (கெல்லி) பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே தனக்கு அச்செய்தியைக் கெல்லி கூறிவிட்டார் என்பது தெரியவந்தது; நான் ஒரு "தந்திர வகையை இழந்துவிட்டேன்`` என்றார் சூசான். மே 30ம் தேதி கெல்லியுடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு விசாரணை மன்றத்தில் போடப்பட்டது, ஜில்லிகனின் முதல் அறிக்கையைவிடக் கூடுதலான விவகாரங்களைக் கொண்டிருந்தது. 45 நிமிடக்கூற்றைப் பற்றியும், அது தொடர்பான அரசாங்கக் போக்கு பற்றியும் கெல்லி பேசுவதை நீதிமன்றம் கேட்கையில், ``இந்த அறிக்கையைப் பற்றி சற்று கவலை இருந்ததென்று நான் அறிவேன்... அது வரம்பை மீறிய முறையில் சென்றுகொண்டு இருக்கிறது... தகவல் வேண்டுமென அவர்கள் தவிக்கிறார்கள், வெளியிடத் துடித்துக்கொண்டு அதற்கேற்ப தகவலை நாடுகிறார்கள்- ஒன்று திடீரெனக் கிடைத்தவுடன், அதைப் பிடித்துத் தக்கவைத்துள்ளனர்`` என்றார். ``அவ்வாறு செய்தது வருந்தத்தக்கது, எனவேதான் உளவுத்துறைக்கும், அமைச்சர் அவை அலுவலகம், பத்தாம் எண்ணில் தொடர்புடைய நபர்கள் அனைவரிடையேயும் விவாதங்கள் ஏற்பட்டுள்ளன; ஏனெனில் ஒருமுறை வெளிவந்தபின் அதைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட முடியாது, அதுதான் சிக்கல்`` என்றார் கெல்லி. ஈராக்கில் இனி வர இருக்கும் ஆயுதக்குவிப்பு பற்றிய ஆய்வுகள் கடினமாக இருக்கும், ``ஏனெனில் ஐ.நா.விற்கும் அமெரிக்காவிற்கும் இடையே, நிறுவனங்கள் என்ற அளவில் விரோத உணர்வும், அதில் தொடர்புடையவர்களிடையேயும் அவ்வாறு விரோதப்போக்கு இருக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட கமிட்டி (Unscom), யில் கூட மிக மிகப் பெரிய அளவு அமெரிக்க எதிர்ப்பு உணர்வு இருக்கும்`` என்றார் அவர். 45 நிமிடக்கூற்றை அதில் செருகக்கூடாது என்ற கருத்துடைய "பலர் இருந்தனர்". பிரச்சனை ஈராக்குடைய தற்போதைய திறன்களைப் பற்றியதல்ல, எவ்வாறு அவை இனி இருக்கக் கூடும் என்பதாகும். அது கோப்புத் தொகுப்பில் பிரச்சனையாகக் கொள்ளப்படவில்லை; "ஏனெனில் போருக்கான வாதம் அதையொட்டி எடுக்கப்பட்டுவிடும்." அலாஸ்டர் காம்பெல்தான் பொறுப்பா என்ற கேள்விக்கு விஞ்ஞானி தான் அவ்வாறு கூற முடியாது என்றார். "நான் கூறக் கூடியதெல்லாம் எண் 10 செய்தி அலுவலகம் என்பதுதான். நான் அலாஸ்டர் காம்பெலைச் சந்தித்ததில்லை, எனவே நான் (சரியாக கேட்கவில்லை) ... ஆனால் அலாஸ்டர் காம்பெல் என்றாலே செய்தி அலுவலகம் என்று பொருள், ஏனெனில் அவர்தான் அதற்குப் பொறுப்பு." பிபிசியின் சிறப்புச் செய்தி நிருபர் கெவின் ஹெவிட் தன்னுடைய சாட்சியத்தில், மே 29-ம் தேதி தானும் கெல்லியுடன் பேசியிருந்ததாகத் தெரிவித்தார். இவ்வுரையாடலின் குறிப்புக்களிலிருந்து பேசிய அவர், அச்சிடுவதற்கு முதல் இறுதி வாரம் "அதிக முனைப்புடையதாக" இருந்த கோப்புத் தொகுப்பில் "செருகல் உறுதியாக வந்தது", மற்றும் கோப்புத் தொகுப்பு கணிசமான அளவு மாறுபட்டிருந்ததாகக் கெல்லி கூறியதாகத் தெரிவித்தார். அரசாங்கம் கெல்லியை வேட்டையாடல் ஆகஸ்ட் 14 வியாழனன்று, அரசாங்கம் எவ்வாறு நேரடியாகத் தலையிட்டு விஞ்ஞானியை வெளிக் கொண்டு வந்தது என்றும் அதன் பின்னர் அவரை வேட்டையாடியது என்பது பற்றியும் விசாரணைக்குழு கண்டனத்திற்கு ஆளாக்கும் சாட்சியத்தைக் கேட்டது. MOD யில் கெல்லியின் அதிகாரி, ஏற்கனவே ஜூன் 15-ல் Observerல் வந்த அறிக்கை உட்பட பல கசிவுகளுக்குக் காரணமோ என்ற சந்தேகத்தில் விசாரணைக்குட்பட்டிருந்தார் என்பதை வெளிப்படுத்தினார். பெப்ரவரியில் ஜில்லிகன் அறிக்கையை ஒட்டி உயர் இரகசிய ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த ஈராக்கிற்கும் அல்கொய்தாவிற்கும் உள்ள தொடர்பு பற்றிய அரசாங்கத்தின் கூற்றுக்களை, மதிப்புக் குறைவாக ஜில்லிகன் அறிக்கை வெளியிட்டதற்கு இவர்தான் ஆதாரமோ என்பதைக் கண்டறியவும், ஒரு போலீஸ் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.FAC, ISC என்ற இரு பாராளுமன்ற விசாரணைகளும் தொடங்கி நடந்த அளவிலேயே அழுத்தம் உணரப் பெறலாயிற்று. ஜூலை 1ம் தேதி, வெல்ஸிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஜில்லிகனுடனான தொடர்புகள் தம்முடையதுதான் என்று தெரிவித்த கெல்லி, டுடே அறிக்கைக்கு தான் முக்கிய ஆதாரமாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்தினார். ஈராக்கின் மீதான போருக்குத் தான் 'பரிவுணர்வு' காட்டியதாகவும் "அரசாங்கக் கொள்கைகளை மதிப்புக் குறைவாக்க எப்பொழுதும் முயற்சிக்கவில்லை" என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.ஜூலை 4-ம் தேதி, விஞ்ஞானி, வெல்ஸ், ஹாட்பீல்டு ஆகியோரிடையே நடந்த கூட்டம் ஒன்றில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் இனி இதுபோன்ற பிழைகள் நடந்தால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கெல்லியின் அடையாளம் வெளிப்பட்ட அளவிலேயே, அரசின் மிக உயர்ந்த அடுக்கில் அவருடைய விதி நிர்ணயிக்கப்படலாயிற்று. விசாரணை மன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள சாட்சியத்தின்படி, பிளேயர் தலையிட்டு மீண்டும் ஒருமுறை கெல்லி கேள்விகளுக்குட்படுத்தப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். அமைச்சரவை அலுவலக நிரந்தரச் செயலாளர் சேர் டேவிட் ஒமன்ட் அனுப்பிய குறிப்பு ஒன்று, பிரதம மந்திரி "நாம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, கொஞ்சம் கூடுதலான அளவு டாக்டர் கெல்லி என்ன கூறினார், ஜில்லிகன் அவர் என்ன கூறியதாகத் தெரிவிக்கிறார் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியது தெரியவருகிறது. ஜூலை 7-ம் தேதி இன்னுமொரு கூட்டத்திற்குக் கெல்லி அழைக்கப்பட்டார். அதே தினம் JIC யின் தலைவர் ஜோன் ஸ்கார்லெட், சேர். டேவிட் ஓமண்டிற்கு ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அதில், "கெல்லி, ஒரு சரியான பாதுகாப்பு கூடுதலான முறையில் ஒரு பேட்டிக்கு உட்படுத்தப்பட்டு, மாறுபட்ட கருத்துக்களுக்கு விளக்குமாறு கோரப்பட வேண்டும்" என்று எழுதினார். (BBC விசாரணைக்குக் கொடுத்திருந்த மின்னஞ்சலில், செப்டம்பர் கோப்புத் தொகுப்பைப் பற்றி ஸ்கார்லெட்டிற்கே சந்தேகங்கள் இருந்தன என்பது வெளிப்படுகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். BBC World ன் Nik Gowing உரைக்குறிப்பு ஒன்றில், ஜனவரி மாதம் ஒரு உரையாடலுக்கு ஸ்கார்லெட்டைப் பார்த்த பொழுது, JIC தலைவர் "ஈராக்கைப் பற்றிய உளவுத் துறைத் தகவல் அவருக்கே நிச்சயமான நம்பிக்கையற்ற தன்மையைத்தான் கொடுத்திருந்தது" என்று எழுதியுள்ளார்.) ஜூலை 7-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஈராக் பயணத்தை ஒத்தி வைக்குமாறு கெல்லிக்கு கூறப்பட்டது. ஜூலை 8-ம் தேதி செய்தியாளருக்குக் கொடுக்கப்பட்ட அறிக்கையொன்றில் அதிகாரி ஒருவர் ஜில்லிகனுடன் பேசியது பற்றி ஒப்புக் கொள்ள முன்வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த சில தினங்களில் அரசாங்கம் விஞ்ஞானியின் பெயரை வெளியிட்டுவிட்டது. இதுவரை முன்னோடி இல்லாத முறையில் கெல்லி FAC முன் பொதுவிசாரணையில் தோன்ற வேண்டும் எனக் கூறப்பட்டது; இது தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பப்படும். தனியான ISC விசாரணையிலும் அவர் பங்கு பெற உத்தரவு பிறந்தது. ஜூலை 10-ம் தேதி MOD நிரந்தரச் செயலர் கெவின் டெபிட் அனுப்பிய குறிப்பொன்றின்படி, அவர் FAC முன் கெல்லி தோன்ற வேண்டும் என்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாதுகாப்பு அமைச்சர் ஜியோப் ஹூனுக்கு "நபரைப் பற்றியும் கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள்; தானே அவர் முன்வந்துள்ளார்; பொதுப் பார்வையில் திணிக்கப்பட்ட வகை இருந்ததில்லை; அவர் ஒன்றும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை" என்று எழுதியிருந்தார். ஆனால் ஹூன் எதிர்ப்பை மறுதலித்து, "அளிப்பு முறைப் பிரச்சனைகள்" ஒட்டி ஜில்லிகனின் கூற்றுக்கள் FAC க்கு முன்பு கண்டிப்பாக மதிப்புக் குறைப்பிற்கு உட்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்து விட்டார். ஜூலை 15-ம் தேதி இரு குழுக்கள் முன்பும் தோன்ற கெல்லிக்கு உத்தரவிடப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தில் இதற்காக சாட்சியம் பற்றி முன்கூட்டியே பயிற்சி வகுப்பும் நடைபெற்றது. தன்னுடைய சொந்தக் கருத்து - கோப்புத் தொகுப்பு பற்றி அவர் தவிர்த்துப் பேச வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கப்பட்டது. FAC க்குத் தோன்றுவதற்கு சற்று முன்பு அவருக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தில், முடிவுரையாக "(ஜில்லிகனுடன்) ஏதேனும் தொடர்பு பற்றி மறைத்து வைத்திருந்தால், அவர் பெரிய சிக்கலில் வந்து சேரலாம்" எனத் தெரிவிக்கப் பட்டதும், விசாரணை மன்றம் முன் வந்துள்ளது.MoD யின் இரகசியக் குறிப்பு ஒன்று "கெல்லி அழுத்தத்தை உணர ஆரம்பித்துவிட்டார் என்றும் நல்ல முறையில் தோன்ற மாட்டார்" என்றும் கூறுகிறது. ஜூலை 16-ம் தேதி ISC முன் விஞ்ஞானி தன்னுடைய சாட்சியத்தை அளித்தார். பின்னர் அவர் செய்தியாளருடன் உரையாடல்கள் பற்றி மீண்டும் 18-ம் தேதி தொடர்பு கொள்ளப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஜூலை 17-ம் தேதி ஒரு நடைப் பயணம் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு அவர் புறப்பட்டார். அவருடைய சடலம் மறுநாள் காலை கண்டுபிடிக்கப்பட்டது. |