World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Citigroup, Morgan Chase fined for Enron deals: corruption at the heights of American finance

என்ரோன் விவகாரங்களில் சிட்டி குரூப், மோர்கன் சேஷ்ஸ் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு: அமெரிக்க நிதியமைப்புக்களில் உயர்மட்ட ஊழல்

By Joseph Kay
5 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்காவின் முதலாம், இரண்டாம் மிகப்பெரிய வங்கிகளான Chitigroup Inc. மற்றும் JP Morgan Chase & Co ஆகியன, என்ரோன் மோசடியில் அவர்கள் கொண்டிருந்த பங்கையொட்டி கூட்டாக $255 மில்லியன் அபராதத் தொகையை செலுத்துவதாக ஜூலை 28 அன்று Securities and Exchange Commission (SEC-பாதுகாப்பிற்கும் மாற்றீடுக்குமான குழு) உடன் ஓர் உடன்பாட்டிற்கு வந்தன.

ஜேபி மோர்கன் $135 மில்லியனும், சிட்டி குரூப் $120 மில்லியனும் SEC இற்கு செலுத்தும். இதைத் தவிர, இரு வங்கிகளும் தலா $12.5 மில்லியன் நியூயோர்க் நகர மன்றத்திற்கும், நியூயோர்க் மாநிலத்திற்கும் கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டு மான்ஹட்டன் மாநில வழக்குரைஞரிடம் ஓர் உடன்பாட்டிற்கு வந்தனர்.

முதலீட்டாளர்களை ஏமாற்றும் பொருட்டு, திவாலாகிவிட்ட பாரிய மின்சக்தி வர்த்தக நிறுவனமான என்ரோனுக்கு கடன்களை பணவரவாக காட்டிய மோசடியில், இந்த இரு நிறுவனங்களும் உதவியாக இருந்தன என்ற குற்றச்சாட்டை SEC முன்வைத்தது. 2001 டிசம்பரில், அக்கால கட்டத்தில் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நிறுவனத்தின் திவாலாகிவிட்டதாக என்ரோன் அதிகாரிகள் அறிவித்தனர். மோசடி கணக்கு முறைகளையும், சட்ட விரோதமான நிதிநடவடிக்கைகளையும் கையாண்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்த என்ரோன், ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷுடனும் மற்ற அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததோடு, பெருவர்த்தக நிறுவனங்களின் மோசடி என்ற சொற்றொடருக்கு மறுபெயராகவும் விளங்கியது. இந்த நிறுவனத்தின் மோசடி பற்றிய வெளியீடுகள் பல கணக்குமுறை ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்ட அலையை ஏற்படுத்தியதுடன் WorldCom, Tyco, மற்றைய நிறுவனங்களின் மோசடிகளும் வெளிப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்துள்ள இந்த மோசடிகளில் வங்கிகளுக்கு உள்ள தொடர்பு, ஊழல்கள் ஏதோ ஒரு சில ''அழுகிய ஆப்பிள்களால்' '(தவறான மனிதர்களால்) ஏற்பட்டதல்ல, மாறாக பெருவர்த்தக நிறுவனங்கள், நிதித்துறைப்பிரிவினர் ஆகியோர் இதில் முழுமையாக தொடர்புபட்டுள்ளன.

கடன்களை பணவரவாக காட்டப்படல்

SEC இனால் கொண்டுவரப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் எவ்வாறு என்ரோன் தன்னுடைய பண வரவை பெரிய அளவில் உயர்த்திக்காட்டும் நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன. SEC ஆய்வு செய்த காலகட்டம் முழுவதிலுமே என்ரோன் தனது வருமானக் குவிப்புக்களை மோசடியான முறையில் மிகைப்படுத்தும் செயலிலேயே ஈடுபட்டிருந்தது. அதே நேரம் கூடுதலான அளவு பண வரவுத் தொகைகளை உயர்த்திக்காட்டவும், அது முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. ஏனெனில் அந்தக் குறிப்பு பல முதலீட்டாளர்களால் நிறுவனத்தின் உழைப்பைவிட அதன் காத்திரமான நிலைமையை காட்டும் நம்பகரமான அளவீடு என கருதப்பட்டது. ஏனெனில் மற்றைய கணக்குகளைவிட இக்கணக்குளை தவறாக்குவது கடினமாகும்.

உதாரணமாக ஒரு நிறுவனத்தின் செலவீனங்களை நீண்டகாலப்போக்கில், ஒரேதாக கணக்கு காட்டப்படாமல் செய்வதின் மூலம் சாதாரண செலவுகளை மூலதன முதலீடுகள் போல் கணக்கில் காட்டி வருமானத்தொகையை செயற்கையாக அதிகப்படுத்திக்காட்ட முடியும். சந்தை இலக்கு குறியீடு (mark-to-market) என்ற வேறொரு வகையையும் என்ரோன் கையாண்டது. இதன்படி தற்பொழுது கையிருப்பிலுள்ள சொத்துக்களின் மதிப்பை வருங்காலத்தில் அது எவ்வாறு கூடுதல் மதிப்புப் பெறலாம் என்பதை ஊகமாக மதிப்பிட்டு உயர்த்திக்காட்டலாம் (நீண்டகால ஒப்பந்தங்களை மின்சக்தியை விற்பனைக்கு பெற்றுக்கொள்ளல்). மின்சக்தி வர்த்தகத்தை என்ரோன் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதிலிருந்து, அதன் சந்தை இலக்கு குறியீடு தன்நோக்கம் கொண்டிருந்துடன், எந்த அளவு வருமானம் காட்டவேண்டுமென்று அது விரும்பியதோ அதற்கேற்ப என்ரோனால் தீர்மானிக்கப்பட்டது. இந்த விதமான திருகுதாளமுறைகள் அறிவிக்கப்பட்ட பண வரவை அதிகரிக்காதது. ஏனெனில் நிறுவனத்திற்கு உண்மையாக பணவருமானம் வருவதாக காட்டப்படவில்லை.

ஒரு நிறுவனம் அதிக வருமானம் வருவதாகக் கூறுகின்றபோது, அதன் இருப்பில் பணம் இல்லை என்றால், ஏதோ நடக்கக்கூடாதது நடந்துகொண்டிருக்கிறது என்று பொருளாகும். ஒரு காத்திரமான வர்த்தக நிறுவனம் பொருட்களை விற்பதன் மூலம் இலாபம் ஈட்டும்போது, அதுதான் பணவருமானத்தைத் தரும். என்ரோனில் உண்மையான சிக்கலே இதுதான்.

1990களின் பல ''வெற்றிக்கதைகள்'' போலவே, இந்நிறுவனத்தின் வெற்றி, பொருட்கள் உற்பத்தியாலோ அல்லது சாதாரணமான மூலதன திரட்சிப்போக்கினலோ ஏற்படாமல், அதன் உள்நிர்வாக பிரிவுகளிலும் மின்சக்தியிலும் செய்த நிதிமுறை ஏமாற்றுவித்தைகளை அடிப்படையாக கொண்டிருந்தது. என்ரோனுடைய முக்கிய நடவடிக்கையே மின்சக்தி ஒப்பந்தங்களை வாங்கி, விற்பதில் இருந்ததுடன், 1990களின் கடைசிப் பகுதியில் அதன் பாரிய இலாபத்திற்கு ஊகச் சந்தை பெருக்கத்தில் மூலதனத்தை பெற்றுக்கொள்ள அனுமதித்த சந்தை இலக்குக் குறியீடு முறையை அடிப்படையே காரணமாக இருந்தது.

என்ரோன்தான் SEC ஆல் சந்தை இலக்குக் குறியீட்டைக் கணக்கு முறையைக் கொள்ள அனுமதிக்கப்பட்ட முதல் வங்கியல்லாத நிதி நிறுவனமாகும்.

Pipe Dreams (பகற்கனவுகள்) என்ற தன்னுடைய புத்தகத்தில் Robert Bryce, 1997TM Jeff Skilling தலைமை நிர்வாக அதிகாரியாக என்ரோனில் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு வருமானம் அதிகம் காட்டுவது போன்ற -பண இருப்பு இல்லாத நிலையில்- முயற்சிகளின் உச்சகட்ட நிலையை அடைந்தது என்பது பற்றி எழுதியுள்ளார். Jeff Skilling நிர்வாகத்தை அதனுடைய நடவடிக்கைகளை விரிவாக்கும் முயற்சியில் அதிக செலவு செய்ய ஈடுபடுத்தியதோடு, மிகப்பெரிய அளவில் கூடுதலான கடன்கள் வாங்கவும் ஈடுபடுத்தினார்.

1997களில் என்ரோனில் பண உள்பாய்ச்சல் நூற்றுக்கணக்கான மில்லியன்கள் டொலரில் எதிர்மறையாக (Negative) இருந்தது. 1990களின் கடைசிப் பகுதியில் அதனுடைய உயர்ந்து கொண்டேயிருந்த பங்கு விலைக்கு எதிர்மாறாக அதனுடைய பொருளாதார நிலைமை மிக மோசமாகப் போய்விட்டிருந்தது. இந்த அளவில்தான் வெளிநாடுகளில் உள்ள அதன் கிளைகள் உள்ளடங்கலாக தொடர்ச்சியாக கணக்குகளை மாற்றி எழுத மேற்பட்டது. இவையனைத்துமே திவாலான பிறகுதான் வெளிவந்ததன.

மின்சக்தி தொடர்பான சந்தைகளில் இதன் மாபெரும் முதலீடுகளைத் பாதுகாக்க, என்ரோன் பில்லியன் டொலர் கணக்கில் கடன் வாங்க ஆரம்பித்தது. உதாரணமாக 2000 ஆண்டின் முதல் அரைப்பகுதியில் $3.4 பில்லியன் அது கடன் வாங்கியது. இவற்றின் வட்டி ரொக்கமாகக் கொடுக்கப்படவேண்டும். இதையொட்டி நிறுவனத்தின் பணவரத்து $547 மில்லியன் எதிர்மறையாயிற்று. பிரைசின் (Bryce) மதிப்பீட்டின்படி ஜூன் 2000த்தில் என்ரோன் நாள் ஒன்றுக்கு $2 மில்லியன் வட்டியாக மட்டுமே செலுத்தியது.

வங்கிகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளின்படி இந்த நிதிநெருக்கடியைச் ''சமாளிக்கும்'' வகையில் வடிவமைக்கப்பட்டது. தொலைத்தொடர்பு பங்குகள் குமிழிகளின் சரிவை அடுத்து இந்நெருக்கடி இன்னமும் கூடுதலாயிற்று. முதலீட்டாளர்கள் உயர்ந்த மதிப்பு, பொது ஊகச் சந்தைகளில் புழக்கத்திலிருந்த நிறுவனங்களின் நலத்தரத்தைப் பற்றியும் மற்றும் பணபாய்ச்சல் நடவடிக்கைகள் பற்றியும் அக்கறை காட்ட ஆரம்பித்தனர்.

கூடுதலான கடன்கள் வாங்கினால், கூடுதலான பண வரவை காட்ட முடியும். ஆனால் கடன்கள் வாங்குவது நிறுவனத்தில் நலத்தரத்தைப் பற்றி நம்பிக்கையூட்டுவதாக இருக்காததால், அவற்றால் என்ரோனுக்குப் பயன் கிடையாது. எனவே JP Morgan, Citigroup இவற்றிடமிருந்து வாங்கப்பட்ட கடன்களை, கடன் என்பதற்குப் பதிலாக பொருட்கள் பரிமாற்றம் மூலம் வந்த ரொக்கம் போல் கணக்கில் காட்டும் தந்திரம் மேற்கொள்ளப்பட்டது.

வங்கிகளுடன் ஒரு கூட்டுதொடர்புகள் மூலம் என்ரோனுக்கும், வங்கிகளுக்கும் வெளிநாடுகளில் உள்ள அதன் பெயரளவிலான சுயாதீனமான துணை நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு சுற்று வர்த்தகத்தை உருவாக்குவதற்கு முற்பணம் வழங்குதல் எனப்படும் ஒரு ஒழுங்கை ஏற்படுத்திக்கொண்டது. மொத்தத்தில் என்ரோன், ஜெ.பி மோர்கனுடன் $2.6 பில்லியன் தொகையான 7 முற்பணம் வழங்கும் கட்டுமானத்தையும், சிட்டிகுரூப்புடன் $3.8 பில்லியன் மதிப்பு ஒப்பந்தங்களையும் செய்துகொண்டது.

இந்த முற்பணம் வழங்கும் தன்மையை ஓர் உதாரணத்தின் மூலம் நன்கு விளக்கலாம். ஜேபி மோர்கனுடன் ஒரு நடவடிக்கையில், என்ரோன் மஹோனியா (Mahonia) என்ற நிறுவனத்திற்கு எரிவாயு அளிக்கும் நீண்டகால ஒப்பந்தத்தை விற்றது. மஹோனியாவின் சந்தை மூதலீடு $15 ஆகும். இது மஹோனியாவின் நடவடிக்கைகளுக்கு பணம் வழங்கிய ஜேபி மோர்கனுக்கு அது முகமூடியாகும்.

இதற்கு ஈடாக என்ரோன் மற்றொரு மோர்கன் துணை நிறுவனமான Stoneville Aegean க்கு எரிவாயுவை மாதாந்திர தவணையில் மஹோனியா கொடுக்கும் விலையில் வட்டியையும் சேர்த்து திருப்பியளிக்கும். எனவே $400 மில்லியன் மோர்கனிடமிருந்து என்ரோனுக்கும், மீண்டும் என்ரோனிலிருந்து மோர்க்கனுக்கும் பண பரிமாற்றம் நடக்கும். என்ரோன் ரொக்கமாக ஒரு தொகையை பெற்று, அதை அவ்வப்பொழுது மோர்கனுக்கு வட்டியுடன் திருப்பி செலுத்தும். இது சாதாரணமாக கடனென்று கூறப்படும். ஆனால் என்ரோனாலோ, வங்கியாலோ இது அத்தகையது எனக் கூறப்படவில்லை.

சிட்டிகுரூப்புடன் ஒரு நடவடிக்கை தொடர்பாக என்ரோன் தனது சொத்துக்களை உண்மையில் என்ரோனால் கட்டுப்படுத்தப்படும் ஒரு போலி இணை முதலீட்டு நிறுவனமான பிஷ்டெயிலுக்கு (Fishtail) விற்றது. இச்சொத்துக்கள் பின்னர் என்ரோனின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள special purpose entity (SPE) இனால் வாங்கப்பட்டது. இதற்கு சிட்டிகுரூப் $200 மில்லியன் கடனாக வழங்கியது. என்ரோன் இந்த சிட்டிகுரூப்பின் முதலீட்டிற்கு உத்தரவாதமளித்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு சிட்டிகுரூப்பிற்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டது. விற்பனையினால் வரும் பணம் என்ரோனின் 2000 வருமான அறிக்கையில் காண்பிக்கப்படும். உண்மையில் என்ரோன் இந்த ஒப்பந்தத்திற்கு உத்தரவாமளித்தமை அது உண்மையிலேயே முதலீடு அல்ல என்பதே உண்மை. ஏனெனில் இதனால் வங்கிக்கு இழப்பு அபாயம் ஏதும் கிடையாது.

பெருநிறுவன ஊழல்களில் வங்கிகளின் பங்கு

இந்நடவடிக்கைகளில் வங்கிகள் நிரபராதியான அமைப்புக்களோ, அல்லது ஏமாற்றப்பட்ட அமைப்புக்களாகவோ இல்லை. இந்த மோசடிகளில் அவை நேரடிப் பங்கினைக் கொண்டிருந்தன. வங்கிகளினால் அமைக்கப்பட்ட நிறுவனங்கள் சட்ட விரோதமானவை என குற்றம் சாட்டப்படாவிட்டாலும் வங்கிகள் என்ரோன் தனது முதலீட்டாளர்களை ஏமாற்றுவதற்காக முற்பணத்தை பாவித்ததை வங்கிகள் நன்கு அறிந்திருந்தன.

சென்ட் துணைக்குழு ஒன்று என்ரோனுடன் வங்கிகள் கொண்ட தொடர்பு பற்றி வெளியிட்ட ஜனவரி 2003 அறிக்கையில் ''பிஷ்டெயில், சன்டான்ஸ், ஸ்லாப்ஸ்டிக், பாக்கஸ் (Fishtail, Sundance, Slapstick, Bacchus) ஆகிய நான்கு நடவடிக்கைகளின் பற்றிய சாட்சியங்கள், அவை ஏமாற்றுமுறை அல்லது வரி நோக்கங்களுக்காக என்று அறிந்தும்கூட கணிசமான கட்டணத்திற்கு, வேறு வர்த்தக நடவடிக்கைகளுக்கு சாதகமாகவோ சிட்டிகுரூப்பும் சேஸும், என்ரோன் அவற்றை நடாத்துவதற்கு உதவியளித்தை நன்கு உணர்ந்திருந்தன என்பதைத் தெளிவாக்குகின்றன.

பிஷ்டெயில் தொடர்புடைய மேற்கூறிய நடவடிக்கை பற்றி செனட் குழு, சிட்டிகுரூப்பின் மூத்த அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை பற்றி குறிப்பிடுகிறது: ''GAAP கணக்குமுறை ஆக்கிரமிப்பு முறையிலானது வெளிப்படையாக வந்துவிட்டால் தனியே விற்கும் உரிமை அபாயத்தை கொண்டுள்ளது.'' என்ரோனுடைய கணக்குமுறை மோசடியானது என்பதை வங்கி அறிந்துள்ளது என்பதற்கு அது பயன்படுத்திய ''ஆக்கிரமிப்பு முறையிலானது'' என்ற சொற்றொடரை பாவித்ததன் மூலம் ஏற்றுக்கொள்கின்றது. மற்றொரு நடவடிக்கையில் ஜேபி மோர்கன் என்ரோனுடைய கணக்குகள் சிறப்பாக இருக்கின்றன என கணக்காய்வாளரை நம்பிக்கை கொள்ள செய்ததற்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றின் மூலம் புலனாகிறது.

முற்பணம் வழங்கல் நிறுவனங்கள், வங்கிகள், கணக்காய்வாளர்கள், மோசடி நடவடிக்கைகளை ஊக்குவித்து, வசதியும் அளிக்கின்ற கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கிடையேயுள்ள ஒரு வலைப்பின்னலின் ஒரு பகுதியாகும். தாங்கள் செய்யும் பணிகளுக்காக முதலீட்டு வங்கிகள் பெருந்தொகையை என்ரோன் போன்ற நிறுவனங்களிடமிருந்து கட்டணமாகப் பெறகின்றன. 500 சொத்துடைய நிறுவனங்களிலேயே அதிக கட்டணம் கொடுத்த நிறுவனம் என்ரோன்தான்.

நிறுவனங்களின் நிதி நலத்தரம் நன்றில்லை என்பதை நன்கு அறிந்தும்கூட அத்தகைய வங்கிகளின் ஆய்வாளர்கள் சலுகையுடைய நிறுவனங்களின் பங்கு பற்றி சந்தை நன்மைக்காக பங்குகளைப் பற்றி உயர்வாகக் கூறுகின்றனர். ஆலோசனைக் கட்டணத்தை அனுசரித்து கணக்காய்வாளர்களும் பல மோசடிக் கணக்கு முறைகளை ஏற்று ஒப்புதல் அளிக்கின்றனர். அரசாங்கமோ முழு நடவடிக்கையையும் கண்மூடித்தனமாக இருப்பதுடன், கட்டுப்பாட்டுத் தளர்த்தலும், பங்குச் சந்தை ஊகங்களும் மூலம் இதனை ஊக்குவிக்கின்றது.

வங்கிகளைப் பொறுத்தவரையில் மறுபணம் வழங்குங்குவதைவிட கூடுதலான முறையில் தொடர்பைக் கொண்டுள்ளன. சிட்டிக்ரூப்பின் உதவியுடன், Dynegy என்ற மற்றொரு மின்சக்தி நிறுவனமும் தன்னுடைய வர்த்தக மொத்த அளவை தொடர்ச்சியான ஒன்றை ஒன்று இரத்துச்செய்யும் பணப் பரிமாற்றத்தால் உயர்த்திக்காட்டியது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் கூடியளவு வங்கிகள், சிட்டிகுரூப், மோர்கன் உட்பட SEC இடம் தாங்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டன. பங்குகளுக்கு அதிக ஆரம்ப பகிரங்க கொடுப்பனவை வழங்குதலுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும், மூலதன வங்கி வர்த்தகத்தில் அத்தகைய நிறுவன நிர்வாக அதிகாரிகளுக்குப் பங்குகள் வழங்குவதாகவும் தெரிவித்தன.

டெலிகொாம் பங்கு குமிழி வெடிப்பிற்கு பிறகு பல நிறுவனங்களும் தங்களுடைய இலாபம் அறிவித்ததைவிடக் குறைந்தவையே என்று தெரிவித்த அளவில் ஊழலின் வலைப்பின்னல் செயற்பாடுகள் நன்கு வெளிப்பட்டன. சில நிர்வாகிகள் மீது குற்ற விசாரணை, பெருநிறுவனச் சீர்திருத்தச் சட்டம் என்ற பெயரில் ஒரு பலவீனமான நடவடிக்கை, பெரிய வங்கிகளுடன் பண உடன்பாடு போன்வற்றால் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் இந்தச் சரிவைக் குறைக்க முயன்றுள்ளன. இந்தப் பார்வையில் சிட்டிகுரூப், ஜேபி மோர்கன் ஆகியவற்றுடன் ஜூலை 28 செய்துகொண்ட உடன்பாடு மனிக்கட்டில் ஒரு தட்டு தட்டுவதைப் போன்றவதாகும்.

வங்கிகள் கொடுத்த பணம் மோசடியில் ஏமாந்தவர்களுக்குக் கொடுக்கப்படும். மோசடியின் பரந்த தன்மையைப் பார்க்கும்போது என்ரோனில் மட்டும் பல பில்லியனின் மடங்கு டொலர்கள் மோசடிக்குட்பட்டன. ஆனால் கொடுக்கப்படும் பணம் மிக மிகக்குறைவு ஆகும். இதனால் வங்கிகளின் நிதியில் ஒரு தாழ்வுகூட ஏற்படாது. சொல்லப்போனால், என்ரோனிற்கு பெரும் கடன் கொடுத்தவர்கள் என்பதால் பணத்தின் பெரும்பங்கு வங்கிகளுக்கே திரும்பி வந்துவிடும். அவைதான் மேலும் மோசடி அலையின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட பத்திரப் பாதுகாப்புச் சட்டங்களின்படி, அரசாங்கம் அளிக்கும் உடன்பாட்டுப் பணம் முதலீட்டாளர் பிரிவின் நடவடிக்கை கடன்கள் வழக்குகளுக்காக அபராத தொகையிலிருந்து கழிக்கப்படலாம். இரண்டு வங்கிகளுமே என்ரோன் தொடர்பான வழக்குகளில் அத்தகைய வழக்குகளைச் சந்திக்கவுள்ளன.

ஜோன் காஃபி ஜூனியர் (John Coffee Jr) என்னும் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர், நியூயார்க் டைம்ஸிற்குக் ''வழக்கில் எதிர்மனுதாரர் கண்ணோட்டத்தில் வழமைக்குமாறானது. இப்பணம் இரு விதமான கடமைகளைச் செய்யும். அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் இது முடிவுகட்டிவிடும். பின்னர் அது தனியார் பிரிவு நடவடிக்கைக்கு எதிராக ஒரு கடனாக போகப்போகின்றது'' என்றார். SEC வழக்கில் இரு வங்கிகளுமே குற்றத்தை ஏற்குமாறு வற்புறுத்தப்படவில்லை. அவ்வாறு செய்திருந்தால் முதலீட்டார் பிரிவு வழக்குகளில் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.

அரசாங்கமோ இந்த உடன்பாட்டைப் பெரிய வெற்றியாகப் புகழ்ந்து வரவேற்றுள்ளது. ''இந்த இரு வழக்குகளுமே, நம்முடைய நடவடிக்கைகளின் விளைவு பற்றிப் பார்வையற்ற முறையில் நடந்துகொண்டுவிட முடியாது என்பதை நினைவுறுத்துகின்றன'' என்று SECன் செயலாக்க இயக்குனர் ஸ்டீபன் கட்லர் (Stephen Cutler) தெரிவித்துள்ளார். ''ஒரு நிறுவனம் முதலீட்டாளரை ஏமாற்றுகிறது என்று உங்களுக்குத் தெரிந்திருந்தாலோ, அல்லது தெரிந்திருக்கக்கூடிய வாய்ப்பு இருந்தாலோ அது கூட்டமைப்புப் பத்திரப் பாதுகாப்புச் சட்டங்கள் படி மீறுதல்களாகும்'' என்றார். மான்ஹட்டன் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞர் ரொபேர்ட் மோர்கன்தாவ் (Robert Morgenthau), ''விளங்கிக்கொள்ளமுடியாத கடல்கடந்த போலியான விஷேட தேவை நிறுவனங்கள் இனி இருக்காது'' என உடன்பாடு ஒரு குறிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.

ஆனால் இந்த உடன்பாட்டைப் பொறுத்தவரை வங்கி நடைமுறைகளில் உண்மையான விளைவுகளை அதிகம் ஏற்படப்போவதில்லை. தங்களுடன் உறவுடைய நிறுவனங்கள் முழு உண்மைகளையும் தெரிவித்தால் வருங்காலத்தில் இத்தகைய முற்பணம் வழங்கும் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளன. சிட்டிகுரூப், ஜேபி மோர்கன் இரண்டுமே உள்ளமைப்பை பொறுத்தவரையில் நெருக்கமான இழப்பு பற்றிய நிர்வாகக் கட்டுப்பாட்டை தகுந்த முறையில் செய்வதாக கூறியுள்ளன. ஆனால் இந்தப் புதிய கட்டுப்பாடுகளின்படி மத்திய வங்கியின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டியவை பற்றி மூத்த நிர்வாகிகள் கூடுதலான அளவு மேற்பார்வையைச் சிக்கல் வாய்ந்த நிதி நடடிவக்கைகளில் செலுத்தவேண்டும். வங்கிகள் இதனை நிறைவேற்றாவிட்டால், அரசாங்கம் வங்கிகளின் நடவடிக்கைகள் மீது மேற்பார்வையிட விதிகள் இல்லை என்பதுடன், வங்கிகள் ஏற்காவிட்டால் அதனை வற்புறுத்தும் அமைப்புக்களோ, விளைவுகளோ இல்லை.

இந்த உடன்பாட்டை வங்கிகளுக்கு வெற்றி என்று முதலீட்டாளர்கள் கருதியதன் சமிக்கையாக இவ்வுடன்பாடு அறிவிக்கப்பட்ட அன்றே, சிட்டிகுரூப், ஜேபி மோர்கன் இவற்றின் பங்கு விலைகள் உயர்ந்தன.

Top of page