World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: the political issues underlying the Hutton Inquiry

பிரிட்டன்: ஹட்டன் விசாரணையின் அடிப்படையிலமைந்த அரசியல் பிரச்சனைகள்

By Julie Hyland
11 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

விஞ்ஞானி டாக்டர் டேவிட் கெல்லி இறந்த சூழ்நிலை குறித்த நீதி விசாரணையை ஹட்டன் பிரபு ஆகஸ்ட் 11 அன்று துவக்கியுள்ளார். இந்த நீதி விசாரணை பிரிட்டனின் ஆளும் தட்டுக்குள்ளும் அரசாங்க நிர்வாகத்திலும் நிலவிய ஆழமான மோதல்களின் விளைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட நெடுங்காலமாக ஒரு பகுதி பிரிட்டனின் அரசியல் நிர்வாகத்தின் குரலாகவும், பிரிட்டனின் பெரிய நிறுவனங்களின் ஊது குழலாகவும் செயல்பட்டு வருகின்ற பிரிட்டிஷ் ஒலிபரப்பு கார்ப்பரேஷனுக்கும் (BBC), டோனி பிளேயரின் அரசாங்கத்திற்கும் இடையே டாக்டர் கெல்லியின் மரணம் தொடர்பாக பகிரங்க மோதல்கள் நடைபெற்றன. இந்த மோதல்கள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் சென்றுவிட்டது.

ஈராக்கில் மக்களை கொன்று தள்ளும் பயங்கர ஆயுதங்கள் எதுவும் இல்லை, (weapons of mass destruction - WMD) அப்படிப்பட்ட கூற்றுக்கள் மிதமிஞ்சியவை என்று BBC தொடர்ந்தும் செய்திகளை தந்து கொண்டிருந்தது. இதனால் பகிரங்கமாக BBC மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நேரடியாக ஆளும் குழுவினர் தொடுத்து வந்தனர். இப்படிப்பட்ட கொந்தளிப்பான நிலை ஆளும் குழுக்களுக்குள்ளேயே உருவாகி வந்தது.

2002 செப்டம்பர் மாதம் பிளேயர் அரசாங்கம் ஈராக் கைவசம் உள்ள பயங்கர ஆயுதங்கள் தொடர்பாக வெளியிட்ட ஆவணங்களில் குளறுபடி செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல்களை BBC வெளியிட்டதற்கு, அரசாங்க நிற்வாகத்திற்குள்ளேயே செல்வாக்கு மிக்க அதிகாரியான டாக்டர் கெல்லிதான் காரணம் என்ற விபரம் அம்பலத்திற்கு வந்த சில நாட்களில், ஜூலை 18 அன்று காடுகள் நிறைந்த பகுதியில் டாக்டர் கெல்லியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரிட்டனின் பாதுகாப்புத் துறையில் உயிர் மரபியல் ஆயுதங்கள் தொடர்பான மூத்த ஆலோசகரான டாக்டர் கெல்லி, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈராக்கிற்கு ஆத்திரம் ஊட்டும் வகையில் பிரிட்டன் நடவடிக்கைகளில் முக்கியவராக இருந்துள்ளார். இவர் ஐ.நா வின் முன்னாள் ஆயுதங்கள் ஆய்வாளர் குழுவின் தலைவர் என்ற முறையில் (UNSCOM) ஈராக்கிற்கு 36 முறை விஜயம் செய்திருக்கிறார். ஈராக் விஞ்ஞானிகளை விசாரிப்பதில் முன்னணி பங்கு வகித்திருக்கிறார். மிகக் கடுமையானவர், அஞ்சாதவர் என்ற பெயரையும் சம்பாதித்துள்ளார். (T.மங்கோல்ட் மற்றும், J.கோல்ட்பர்க் எழுதிய பிளேக் வார்ஸ் (Plague Wars) என்ற நூலில் அவரைப்பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்கள்)

பிரிட்டனின் அதிகாரத்திலுள்ளவர்கள் மிகப் பெருமளவிற்கு கெல்லி மீது நம்பிக்கை வைத்திருந்தனர். செப்டம்பர் மாத ஆவணத்தின் வரலாற்றுப் பகுதியை எழுதுகின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு இரகசிய புலனாய்வுத் தகவல்கள் அனைத்துமே கிடைப்பதற்கு வாய்ப்பு வசதிகள் இருந்ததினால், அவரால் பத்திரிகையாளர்களுடன் சுதந்திரமாக கலந்துரையாட முடிந்தது. அத்தகைய உயர் அதிகாரத்திலுள்ள ஒரு மனிதர் மர்மமான சூழ்நிலையில் மாண்டு கிடந்தது மிகுந்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அவர் இறப்பதற்கு முன்னர் நியூயோர்க் டைம்ஸ் நிருபர் ஜீடித் மில்லருக்கு எலெக்ட்ரானிக் மெயிலில் ஓர் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில் ''கருப்பு நடிகர்கள் அரசியல் சித்து விளையாட்டுக்களில் இறங்கியிருப்பதாக'' அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அம்சம் சில சாட்சிகளினால் வலியுறுத்தப்பட்டிருப்பதால், அவர்கள் விசாரணையில் சாட்சியம் அளிக்கவிருக்கின்றனர்.

இந்த சாட்சிகளில் பிரதமர் டோனி பிளேயரும் இடம் பெறுகிறார். நீதி விசாரணைக் கமிஷன் முன் சாட்சியம் அளிக்கும் இரண்டாவது பிரதமர் டோனி பிளேயர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தகவல் தொடர்புத்துறை இயக்குநர் எ.கேம்பல், பாதுகாப்பு அமைச்சர் ஜியோப் ஹுன், பாதுகாப்புத்துறை முன்னணி அதிகாரிகள், புலனாய்வு சேவைகளை சார்ந்த முன்னணி அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள், பல்வேறு பத்திரிகையாளர்கள், BBC நிர்வாக குழுத்தலைவர் காவின் டேவிஸ் உட்பட ஒலி, ஒளிபரப்பாளர்கள் ஆகியோர் சாட்சியம் அளிக்க இருக்கிறார்கள்.

விசாரணைக் கமிஷன் நடுநிலையானது பகிரங்கமாக நடக்கும் என்று ஹட்டன் பிரபு வலியுறுத்திக் கூறிவந்தாலும், பொதுமக்களுக்கு கெல்லியின் மரணம் தொடர்பாகவும் அதற்கு முந்தைய சம்பவங்கள் குறித்தும் உண்மையான, தணிக்கை செய்யப்படாத தகவல்கள் கிடைக்குமா என்று நம்பமுடியாது.

டாக்டர் கெல்லி மரணத்திற்கு முந்தைய சம்பவங்களைப்பற்றி மட்டுமேதான் விசாரிக்கப் போவதாக ஹட்டன் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். ஆதலால், BBC யும் இதர ஊடகங்களும் செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்ட ஆவணங்கள் தொடர்பான ரகசியங்களை அம்பலப்படுத்துவதற்கு ஒரே செய்தி மூல ஆதாரமாக டாக்டர் கெல்லி செயல்பட்டாரா? அப்படி அம்பலப்படுத்திவிட்டு அதனால் ஏற்பட்ட நிர்பந்தங்களை தாக்குபிடித்து சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டாரா? என்ற ஓர் அம்சத்தைப்பற்றி மட்டுமே நீதிபதி ஹட்டன் விசாரிப்பார்.

நீதிமன்றத்தின் முன், முதலில் ஆஜராகும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய முடியாது. யாரை மிகத்தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஹட்டன் முடிவு செய்கிறாரோ, அவரைத்தான் இரண்டாவது கட்டத்தில் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். அத்தகைய சாட்சிகளைப்பற்றி ஏற்கெனவே நடுவர் மன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கண்டனங்கள்பற்றி தகவல்கள் தந்துவிடவேண்டும். அப்போது கூட மறு விசாரணையும், குறுக்கு விசாரணையும் ''எந்த அளவிற்கு விசாரணைக்கு உதவுவதாக அமைந்திருக்கிறது.என்று நான் நினைக்கிறேனோ, அந்தளவிற்குத்தான் குறுக்கு விசாரணைகளை அறிவிக்க முடியும்'' என்று நீதிபதி ஹட்டன் அறிவித்திருக்கிறார்.

இந்த நெருக்கடிக்கு உயிர் நாடியான முக்கியத்துவம் வாய்ந்த ஈராக்கின் மக்களைக் கொன்று தள்ளும் பயங்கர ஆயுதங்கள் (WMD) குறித்து நீதிபதி விசாரிக்க மாட்டார். ஈராக் தொடர்பாக பிளேயர் அரசாங்கம் தவறான மோசடியான பொய்க் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, ஜனநாயக நெறி முறைகளுக்கு புறம்பாக அமெரிக்காவுடன் சட்டவிரோதமாக இணைந்து கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு முயன்றது தொடர்பாகவும், இந்த விசாரணைக் கமிஷன் விசாரிக்காது. பெரும் பகுதி பிரிட்டன் மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பையும் மீறி டோனி பிளேயர் நாட்டை போரில் ஈடுபடுத்தியதின் மூலம் ஜனநாயக உரிமைகள் மீது அவர் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.

ஹட்டன் விசாரணையின் வரம்பு மிக குறுகலானது. இதனுடைய நோக்கம் பிரிட்டனின் ஆட்சி நிர்வாகத்திற்குள் நடைபெற்று வருகின்ற கோஷ்டி மோதல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் டாக்டர் கெல்லியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டு சில மணி நேரத்திற்குள் விசாரணை கமிஷன் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வருவதற்கு முன்னர் இந்த விசாரணையை ரகசியமாகவும், குறிப்பாக ஈராக் மீதான ஆக்கிரமிப்பை மூடிமறைக்கின்ற வகையிலும் நடத்த வேண்டும் என்று ஆளும் தட்டின் உயர் தலைவர்களுக்கிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தது. அதற்குப் பின்னர்தான் திரைமறைவிற்குபின் நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.

ஈராக்குடன் போர் துவங்குவது தொடர்பாக முடிவுசெய்யப்பட்டதில் புலனாய்வு சேவைகளுக்கும் பிளேயர் அரசாங்கத்திற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவியிருக்கின்றன. போருக்குப் பின்னர் ஈராக்கில் மக்களைக் கொன்று தள்ளும் பயங்கர ஆயுதங்கள் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஈராக் மக்கள் தற்போது பிரிட்டனுக்கும், அமெரிக்காவிற்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த எதிர்ப்பு தற்போது வலுவடைந்தும் வருகின்றது. இந்த மோதல்கள் நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதுடன், தற்போது வெடித்து சிதறுகின்ற அளவிற்கு முற்றிவிட்டது.

அடிப்படையிலேயே இந்தக் கவலைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மூலோபாய தந்திரங்கள் தொடர்பானவை ஆகும். அமெரிக்காவின் விசுவாச நண்பனாக தொடர்ந்து பணியாற்றுவதா? அல்லது ஐரோப்பாவை நோக்கி மிக உறுதியாக தனது கவனத்தை திருப்புவதா? என்பதில் நீண்ட காலமாக பிரிட்டனின் ஆளும் வர்க்கம் குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றது. இதன் மூலம் அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. இப்படிப்பட்ட மோதல்கள் பகிரங்கமாக வெடித்து சிதறி அம்பலத்திற்கு வருமானால் அதனால் மகத்தான சமூக அரசியல் மாற்றங்கள் உருவாகிவிடக்கூடும்.

1980 களில் தட்சரின் பழமைவாத (Conservative) அரசாங்கத்தின்போது வரலாறு காணாத அளவிற்கு சமூக துருவப்படுத்தல்கள் தலைகாட்டத் துவங்கின. இந்தப் பிளவுகள் பிளேயர் ஆட்சியில் ஆழமாக சென்று கொண்டிருக்கின்றன. சமுதாயத்தின் ஒரு ஓரத்தில் இருக்கின்ற இந்த சிறிய குழுவினர் மிகப்பெரிய அளவிற்கு செல்வந்தர்களாக இருக்கிறார்கள். சமுதாயத்தின் மிகப்பெரும்பாலான மக்களது வாழ்க்கைத்தரம் முடங்கிக் கிடக்கிறது. அல்லது சரிந்து கொண்டிருக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்நாட்டில் அதிகமாக வளர்ந்து கொண்டிருப்பதினால், வெளிநாடுகள் மீதான ஆக்கிரமிப்பு இராணுவவாதம் பெருகி வருகிறது. இது பிளேயர் ஆட்சியில் இன்னமும் அதிகமாகி விட்டது. பிளேயர் தனது ஏழு ஆண்டு ஆட்சிக் காலத்தின்போது, பால்கனில் துவங்கி ஆப்கனிஸ்தான் மற்றும் ஈராக் வரையில் ஒன்றன்பின் ஒன்றாக பல போர்களில் பிரிட்டனை ஈடுபடுத்தியுள்ளார்.

பாரம்பரிய ஜனநாயக நெறிமுறைகள் சிதைக்கப்பட்டு விட்டன. மிகப்பெரும்பாலான பொது மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விட்ட பழைய முதலாளித்துவக் கட்சிகள், அரச அதிகாரத்துவத்தின் தொங்கு சதைகளாக முடங்கிச் சாய்ந்துவிட்டன. பழமைவாத கன்சர்வேட்டிவ் கட்சி உயிரற்றுக் கிடக்கும் சடலம் போன்றிருக்கிறது. தொழிற்கட்சி தொழிலாளர் நலன்களோடு எந்த வகையிலும் தொடர்பு இல்லாமல் செயல்படுகிறது. இதனால் அந்தக் கட்சிக்கு இருந்த பழைய தொழிலாள வர்க்கத்தின் செல்வாக்கு சரிந்து கொண்டு வருகின்றது.

எனவேதான் ஆட்சியாளர்களால் தங்களது கொள்கைகளுக்கு மக்களது ஆதரவை பெறமுடியவில்லை. அது மட்டுமல்ல தங்களது ஆட்சி முடிவுகளை கருத்துக் கணிப்பிற்கு விடுவதற்கும் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பிளேயரைப் பொறுத்தவரையில் சக்தி மிக்க கம்பெனிக் குழுக்களும் அவர்களது ஊடக ஊதுகுழல்களும் தருகின்ற ஆலோசனைகளைத்தான் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றார். அத்தகைய தரப்பினர்தான் பிளேயரை பதவியில் அமர்த்துவற்கு பாடுபட்டார்கள். தங்களது கட்டளை நிறைவேற்றுவதற்காக அவரை பதவியில் இன்னும் வைத்திருக்கிறார்கள்.

பல தலைமுறைகளாக பிரிட்டன் முதலாளித்துவத்தை தாங்கி நின்ற பழைய உறவுகளும் கட்டுகோப்புகளும் சிதைந்துவிட்டன. தற்போது அதிகாரப்பூர்வமான அரசியல் என்பது மக்களுக்கு தொடர்பு இல்லாமல் மிக அபூர்வமாக காணப்படுகின்ற ஒரு பொருளாக சுருங்கிவிட்டது. அது மட்டுமல்ல, வெளி நிர்பந்தங்களால் கொந்தளிக்கிற தன்மையும், வெறுப்பு அடைகின்ற குணமும் வளர்ந்திருக்கின்றது. இத்துடன் ஜனாதிபதி புஷ் நிர்வாகத்தின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' என்பது உலகம் எங்கும் வளர்ந்து வருகின்ற பொருளாதார நெருக்கடியை பறை சாற்றுவதாக அமைந்திருக்கின்றது. இதனுடைய நேரடித் தாக்கம் பிரிட்டனையும் பாதிக்கின்றது. கம்பெனி செல்வந்தர்களுக்கு மிக நம்பகமானவர் பிளேயர் என்ற அவரது செல்வாக்கும் சிதைந்துவிட்டது.

ஹட்டன் விசாரணைக் கமிஷன் பல்வேறு விசாரணைக் குழுக்களில் ஒன்றாகும். இதற்கு முன்னர் 1981 ம் ஆண்டு நகரங்களுக்கிடையே நடைபெற்ற கலவரங்கள் குறித்து நடத்தப்பட்ட ஸ்கார்மன் (Scarman) விசாரணையும், 1993 ம் ஆண்டு ஈராக்கிற்கு ஆயுதங்கள் மறைமுகமாக விற்கப்பட்டது தொடர்பாக நடைபெற்ற ஸ்கொட் விசாரணையும், உண்மையைக் கண்டுபிடிக்கிறோம் என்ற சாக்குபோக்கில் அதனை மூடி மறைப்பதற்குத்தான் பயன்பட்டிருக்கிறது.

இப்படிச் சொல்வதால் ஹட்டன் விசாரணைக் குழு உண்மைகளை மூடி மறைத்து அரசாங்கத்தையும், பிரதமரையும் காப்பாற்றும் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. ஆனால் இவை யாவற்றிலும் இருந்து பிளேயர் பயனடைவாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எப்போதுமே ஆளும் தட்டுக்குள் ஒரு ஆபத்து தலைக்குமேல் இருக்கும். இது போன்ற நெருக்கடிகள் சமூக முரண்பாடுகளை வெளியே கொண்டு வருகின்ற ஊக்கிகளாக இருந்துவிடக்கூடும். அப்படிப்பட்ட ஊக்கிகள் செயல்படும் போது அரசியல் கொந்தளிப்புக்கள் உருவாகும். இதுபோன்ற கொந்தளிப்புகளில் அரசின் ஒட்டுமொத்த நலன்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கத்தை தியாகம் செய்ய வேண்டிவரும்.

1970 களில் அமெரிக்காவில் வாட்டர் கேட் ஊழல் மோசடிகள் அம்பலத்திற்கு வந்தன. நிக்சன் நிர்வாகம் ஆட்சி அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்தியது அம்பலத்திற்கு வந்த உண்மைகளால், ஒட்டுமொத்த அமெரிக்க ஆளும் செல்வந்த நலன்களை பாதுகாப்பதற்காக நிக்சன் ஜனாதிபதி பதவியை துறந்துவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஆகவே, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் சம்மந்தப்பட்டுள்ள மிகவும் முக்கியமான பிரச்சனைகள் பிளேயர் ஆட்சி மீது உருவாகுகின்ற உடனடித் தாக்கங்களுக்கு அப்பாற்பட்டவை ஆகும். மிகப்பெரும்பாலான மக்களது வாக்களிக்கும் அரசியல் உரிமைகள் உண்மையிலேயே துச்சமாக மதிக்கப்படுவதுடன், உழைக்கும் மக்களது ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தல் வந்திருக்கின்றன. இவை தற்போது நடைமுறையில் உள்ள ஒட்டுமொத்தமான பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகளால் உருவானவை ஆகும்.

Top of page