World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்காCandidate's statement of John Christopher Burton ஜோன் கிறிஸ்டோபர் பேர்டனுடைய வேட்பாளர் அறிக்கை 9 August 2003 ஜோன் கிறிஸ்டோபர் பேர்டனால், கலிபோர்னியா அரச செயலருக்கு அளிக்கப்பட்ட வேட்பாளர் அறிக்கையை உலக சோசலிச வலைத் தளம் கீழே வெளியிடுகின்றது. அக்டோபர் 7ம் தேதி வர இருக்கும் தேர்தல்களுக்காக அரசு செயலர் அலுவலகம் தொகுத்துள்ள விதிகளின்படி, வேட்பாளர்களின் அறிக்கைகள் தன்மையில் 250 சொற்களுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும். வேட்பாளர்கள் தங்களின் தகுதிகளைப் பற்றி முன்னுக்கு வைப்பதில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றனர் மேலும் குறிப்பாக தேர்தலில் போட்டியிடும் மற்றைய வேட்பாளர்களைப் பற்றிக் குறிப்பிட அனுமதி இல்லை. பாசடேனாவில் (Pasadena) குடியுரிமை வழக்குரைஞராக (Civil Rights Attorney) நான் உள்ளேன். கலிஃபோர்னியாவில் எனது 25 ஆண்டுகால செயல்பாடு போலீசாரின் தவறான நடத்தையால் மற்றும் வேறுபாடு காட்டுதலால் பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டு வந்திருக்கின்றது. நானும் கூட சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கைகளை ஆதரிக்கும் ஒரு அரசியல் செயல்பாட்டாளன். கலிஃபோர்னியாவில் உழைக்கும் மக்களை எதிர் நோக்கியுள்ள சமூகப் பொருளாதார பிரச்சினைகள் பற்றியும், அரசாகத்தின் வரவு செலவுத் திட்ட நெருக்கடியில் மனித விலைகள் கொடுக்கவேண்டியது பற்றியும் நன்கு அறிய என் அனுபவம் வாய்ப்பு பெற்றுத் தந்திருக்கிறது. இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் மீதும் சிறு வர்த்தகர்கள் மீதும் சுமத்தப்பெறும் அனைத்து சுமைகளையும் நான் எதிர்க்கிறேன். பெருஞ்செல்வந்தரையும் பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பெரு நிறுவனங்களையும் காப்பதற்காக கூட்டாட்சி மற்றும் மாநில அரசாங்கங்கள் கொண்டுள்ள முயற்சிகளின் விளைவே இந்த நெருக்கடியாகும். திரும்ப அழைக்கும் பிரச்சாரம் (Recall Campaign) வலதுசாரி சக்திகளால் ஜனநாயக உரிமைகள் கீழறுக்கப்படுவதற்கும் பெரு நிறுவன நிதிக் குவிப்பு மற்றும் பணக்காரரின் செல்வம் இவற்றைப் பெருக்குதற்கான முயற்சி ஆகையால், நான் அவற்றை எதிர்க்கிறேன். ஆனால் திரும்ப அழைத்தல் வெற்றி அடைந்தால், ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய வேட்பார்களின் பெரு வர்த்தக கொள்கைக்கு ஒரு மாற்றீடு கலிஃபோர்னிய உழைக்கும் மக்களுக்குத் தேவை. முழு வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சுகாதாரம் வழங்கல், கல்விவாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் ஏழ்மையை அழித்தல் இவற்றை உறுதி செய்ய, பெரு நிறுவனங்கள், வங்கிகள் இவை பொதுவில் உடைமை ஆனதாகவும் ஜனநாயகபூர்வமாய் கட்டுப்பாட்டில் உள்ளதுமான பயன்பாடுகளாய் மாறுவதை நான் ஆதரிக்கிறேன். மூல வளங்கள் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு நிதியூட்டப்படுவதற்கு திருப்பிவிடப்படல் நிறுத்தப்பட்டாக வேண்டும். பெரு நிறுவனங்களின் இலாபத்தைக் குவிப்பதற்கு அல்லாமல், மக்களுடைய தேவைகளை நிறைவு செய்வதுதான் கலிஃபோர்னிய பொருளாதாரத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும். வாக்காளர்கள் என்னுடைய திட்டத்தைப் பற்றி World Socialist Web Site [www.wsws.org] படித்து அதிகம் தெரிந்து கொள்ளலாம். |