World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியாBlair's press conference and the crisis of political legitimacy பிளேயரின் செய்தியாளர் கூட்டமும் அரசியல் முறைமையின் நெருக்கடியும் By Julie Hyland பிரிட்டிஷ் பிரதம மந்திரி, விடுமுறையில் செல்வதற்கு முன் நடத்திய ஜூலை 30 கடைசிச் செய்தியாளர் கூட்டம், தற்காலத்திய அரசியல் புகைப்படத்தை சித்தரித்துக் காட்டியதாக அமைந்தது. பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிக அதிக காலம் ஆட்சி புரிந்த தொழிற்கட்சி அரசாங்கம் என்ற நிலையில் பிளேயர் அரசாங்கம் அடையப்போகும் பெருமைக்கும், அவர் மக்களிடையே கொண்டுள்ள ஆதரவிற்கும் தொடர்பின்றிப் போய்விட்டது. ஆழ்ந்த அரசியல் நெருக்கடியிலும், பெரும்பாலான மக்களால் விரும்பத்தகாததாகவும், நம்பிக்கையற்றதாகவும் இருப்பதுதான் அவரது அரசாங்கம். பிளேயர் அரசாங்கம், அமெரிக்கத் தலைமையிலான ஈராக் மீதான தாக்குதலில் சேர்வதற்கு வரலாற்றின் மிகப்பெரிய எதிர்ப்புப் போராட்டங்கள் உட்பட பொதுமக்களின் எதிர்ப்புக்களுக்கிடையே, பலமுறை பொய்யுரைகள் கூறியுள்ளது என்பதை சமீபகாலத்து நிகழ்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஈராக்கிய பேரழிவு ஆயுதங்களை பற்றி விவரங்களை விரிவாகக் கூறிய அவருடைய உளவுத்துறை தகவல்கள் நம்பிக்கையற்றவை என்று உறுதிப்படுத்தப்பட்ட அளவில், முன்கூட்டிய சட்டவிரோதப் போரை தொடங்குவதை நியாயப்படுத்துவதற்காக சதாம் ஹூசேன் ஆட்சியினால் முன்வைக்கப்பட்ட அச்சுறுத்தல் பற்றி வேண்டுமென்றே பொய்யுரைகள் மலிந்த ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன என்ற குற்றச்சாட்டையும் அரசாங்கத்தின் பால் சுமத்த அவை இடம் கொடுத்துள்ளன. வெளிவிவகாரக் குழு (FAC) மற்றும் உளவுத்துறைப் பாதுகாப்புக்குழு என்ற இரண்டு பாராளுமன்றக் குழுக்களும் இக்குற்றச்சாட்டுக்கள் மீது விசாரணை நடத்தி, எதிர்பார்த்தது போலவே, அரசாங்கத்தை கெளரவமாக குற்றமற்றது என தீர்ப்புக்கூறிவிட்டபோதிலும் பிரச்சினையின் தன்மையிலிருந்த பூசல்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை. தன்னுடைய நிர்வாகத்திற்கெதிரான குற்றச்சாட்டுக்களைத் திசைதிருப்பும் வகையில், பிபிசி, அதன் செய்தியாளர் ஆன்ட்ரூ ஜில்லிகன் இரண்டுமே, செப்டம்பர் 2002 உளவுக் கோப்பு தொகுப்பை, போருக்கான நியாயப்படுத்தலுக்கு அரசாங்கம் அவலப்படுத்தி இருந்திருந்தது என்ற குற்றச்சாட்டுக்களை கொண்டுவந்ததற்கு, அவற்றின் ஆதாரத்தின் மீது அரசாங்கத் தாக்குதல் ஒன்றை பிளேயர் நடத்தினார். அதனுடைய பழிவாங்கும் முறையிலான வேட்டையின் முடிவில், தற்கொலையென்று பரந்த அளவில் அறிவிக்கப்பட்ட முக்கிய அரசாங்க விஞ்ஞானி டாக்டர். டேவிட் கெல்லியின் மரணம் நேர்ந்தது; பிபிசி இவர்தான் தங்களின் செப்டம்பர் ஆவணத் தொகுப்பு பற்றிய செய்திக்கு ஆதாரம் என பின்னர் கூறியது. கெல்லியின் மரணத்திற்குமுன், அமெரிக்கா ஈராக்கின் மீது தொடுத்த போரில், பிரிட்டன் சேரவேண்டும் என்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முடிவு எடுக்கப்பட்ட சூழ்நிலையை ஆராய சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும் என்ற அழைப்புக்களை பிளேயர் நிராகரித்திருந்தார். ஆனால் இப்பொழுதோ ஹட்டன் பிரபு தலைமையிலான நீதி விசாரணை, கெல்லியின் மரணத்தைச் சுற்றி நிலவிய சூழ்நிலைகள் பற்றியதை ஆராய்வதற்கு ஏற்பாடு செய்வதைத் தவிர்க்க முடியாமல் போனதுடன், பிளேயரும் இந்த விசாரணையில் சாட்சியம் கொடுக்க கட்டாயப்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது. இந்த சூழ்நிலையில், மக்களில் மூன்றில் இரு பகுதியினர் இவரை பொய்யர் என நினைக்கும் கருத்துக்கணிப்பு உள்ள நிலையில், ஜூலை 30 செய்தியாளர் கூட்டத்தில் எச்சரிக்கையுடனும், அடக்கத்துடனும் பிரதம மந்திரி நடந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக அரசாங்கத்தின் தத்தளிக்கும் நிலைபற்றி சிறிதும் சட்டை செய்யாத அளவில்தான் பிளேயர் இருந்தார். ஆணவத்துடனும் துடுக்குத்தனத்துடனும் சில சமயம் பேசிய அவர், தன் அரசாங்கம் பணியிலிருக்கும்போது புரிந்த ``வியத்தகு சாதனைகளைப் பற்றி`` தற்புகழ்ச்சி பாராட்டுரையைக் கொடுத்துக்கொண்டது மட்டுமின்றி, இங்கிலிஷ் கிரிக்கெட் அணித் தலைவருடைய வேலை பிரதம மந்திரியுடையதைவிடக் கடினமானது என்றும் வெற்றுரை பேசினார். தன்னுடைய கேள்வியை அடுத்தாற்போல் அவர் எடுத்துக்கொள்வாரா என ஒரு பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு, ``எப்பொழுதும் உன்னை எடுத்துக்கொள்வேன்`` என்று நகைச்சுவையாகக் கூறினார். கெல்லியுடைய மரணம் பற்றிய கேள்விகளுக்கு, அது விசாரணைப் பொருளாக இருப்பதால் அதைப் பற்றிய கேள்விகளுக்கு விடையிறுக்க இயலாது என்று தெரிவித்துவிட்டதோடு, சமீபத்திய நிகழ்ச்சிகளில் தன்னுடைய பங்கைப் பற்றி, எந்த "வருத்தங்களும் கிடையாது" என்றும் கூறிவிட்டார். மக்களிடையே நம்பிக்கையை மீண்டும் வளர்க்க என்ன நடவடிக்கையை அவருடைய அரசாங்கம் மேற்கொள்ளும் என்ற கேள்விக்கு, கேள்வியைத் தலைகீழாக்கி, ``நாங்கள் ஈராக்கில் செய்தது சரியானதும் நியாயமானதும் ஆகும் என்பதை மக்கள்தான் நன்கு புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்`` என்று விடையிறுத்தார். உண்மைகளை அறவே மதிக்காத நிலைமையில் ``உளவுத்துறைச் செய்தி சரியானதுதான்`` என்று கூறி, ``சதாமிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லாதது பற்றிய கருத்து விந்தையானது`` என்றும் தெரிவித்தார். ஈராக்கில் என்ன நிகழ்கிறது என்பதை ``பொறுத்திருந்து பார்க்குமாறு`` மக்களைக் கேட்டுக்கொண்டார். மக்கள் நம்பிக்கையை இழந்தபின்னர், ஈராக் விஷயத்தில் மக்களிடம் தவறாகக் கூறிவிட்டோமா இல்லையா என்ற பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும், வேலையை ராஜிநாமா செய்வது பற்றித் தான் நினைத்தும் பார்க்கப்போவதில்லை என்று அவர் அறிவித்தார். ``இங்கு ஒரு பெரும் பணி இன்னமும் செய்யவேண்டியுள்ளது, எனக்கு அந்த வேலை செய்வதில் ஆக்கம் சற்றும் குறைவின்றி உள்ளது`` என அவர் கூறினார். பெருமளவு மக்கள் ஆதரவை இழந்துவிட்ட ஒர் அரசாங்கம் கிட்டத்தட்ட அசைய முடியாத வினோதமான நிகழ்வு எப்படி நடைபெற்றுள்ளது? வளர்ந்து வரும் சமுதாய துருவமுனைப்படலின் கீழே, ஜனநாயக நடைமுறையின் அம்சங்கள் எந்த அளவிற்குச் செயலற்றதாகிப் போய்விட்டன என்பதின் தன்மையைத்தான் இது உணர்த்துகிறது. அரசாங்கங்களும் அரசியலும் சிறு மேற்தட்டிலும் அதிகாரத்துவங்களிலும்தான் தங்கி இருக்கின்றன. செய்தி ஊடகம் படைக்கும் நபர்களாகவே அரசாங்கத் தலைவர்கள் பெரும்பாலும் விளங்குகிறார்கள் என்றும், செய்தி ஊடகத்தின் செல்வாக்கினால் உந்தப்பெற்றுப் புகழடைகிறார்கள் என்பதும், அவற்றின் சூழ்ச்சிகளினாலும் பெரு வர்த்தக நலன்களாலும் ஆட்டிவைக்கப்படுகிறார்கள் என்பதும் மிகப்பெரிய அளவிலான அடக்குமுறையின் மூலம் தங்களைப் பதவியில் தக்கவைத்துக் கொண்டுள்ளார்கள் என்பதும் தெரியவருகிறது. இந்த நிலைமை இங்கிலாந்தில் மட்டும் தனித்துக் காணப்படுவதில்லை. ஒவ்வொரு நாட்டிலும் சற்றேறக்குறைய, அமெரிக்க புஷ் நிர்வாகத்திலிருந்து, ஸ்பெயின், இத்தாலியில் முறையே அஸ்நர், பெர்லுஸ்கோனி அரசாங்கங்கள் வரை இதே சூழ்நிலைதான் நிலவி வருகிறது. பொதுமக்களுடைய ஆதரவு இல்லாமல் ஓர் அரசாங்கம் செயல்படுகிறது என்பது மட்டுமல்லாமல், அத்தகைய ஆதரவு இனி தேவையும் இல்லை, விரும்பத்தக்கதும் இல்லை என்ற கருத்தும் தோன்றிவிட்டது. பெரும்பான்மை மக்களுடைய ஆதரவு தேவை என்பதே ஒரு சிக்கல் நிறைந்த தன்மையுடையது என்ற நினைப்பும் வந்துவிட்டது. உயர் சிறுகுழுவினரின் கட்டளைகளின் படி ஆட்சியை நடத்த, மக்கள் விருப்பிற்கேற்ப அரசாங்கம் நடத்தப்பட்டால் அது திறமை குன்றித்தான் செயல்படும் என்ற அளவிற்கு வாதப்போக்குகூட வந்துவிட்டது. ஈராக்கில் போரை நடத்த, பிளேயருக்கு பொதுமக்கள் ஆதரவு அதிகம் தேவைப்படவில்லை. பெரும் மக்கள் எதிர்ப்பிற்கிடையே அவர் தன்னுடைய திட்டத்தை மேலும் செயல்படுத்த முடிந்தது. தன்னுடைய கட்சியிலேயே அமைதியின்மை நிலவியபோதும், தொழிற் கட்சி முன்பு உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டிருந்த மக்கள் பரப்பில் அது பெற்றிருந்த செல்வாக்கையொட்டித்தான், அதன் நலன்களையும், விழைவுகளையும் அது வெளிப்படுத்துகிறது என்ற உணர்வின் அடிப்படையில்தான் ஆளும் முறைமை அதற்குக் கிட்டியது. தன்னுடைய கட்சியின் ஆதரவின்றியே பிளேயர் இப்பொழுது ஆட்சியை நடத்த முடிகிறது என்றால், தொழிற் கட்சி அந்த அளவுக்கு ஒரு வெகு ஜனக் கட்சி என்பதனால் அல்ல, மாறாக அரச அதிகாரத்துவத்தின் இன்னொரு அம்சமாக, சாகும் தறுவாயிலுள்ள தன்மையைக் கொண்டு அது விளங்குகிறது என்பதினால்தான். எனவேதான், தனது சொந்த பொதுமக்களுடைய ஆதரவு தனக்கு குறைந்துவிட்டபோதிலும், ஆட்சியைச் செலுத்தும் சக்தி இருப்பதாக பிளேயர் கருதுகிறார். ஆளும் மேல்தட்டின் முக்கிய பகுதிகளின் நம்பிக்கையை தாம் பெற்றிருக்கும் வரையில், தொழிலாள வர்க்கத்தின் பழைய வெகுஜன அமைப்புக்களின் பொறிவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் தான் வேர் ஊன்றி நின்று, செயலாற்ற முடியும் என்ற நம்பிக்கை பிளேயருக்கு இருக்கிறது. இவருடைய ஆதரவு மக்களிடையே ஒரு சதவிகிதம்தான் என்றாலும், அந்த ஒரு சதவிகிதம் சரியான ஒரு சதவிகிதமாக (அதாவது செய்தி ஊடகப்பெருந்தலை ரூபெர்ட் மர்டோக் மற்றும் பெரு நிறுவனத்திற்குள்ளே உள்ள அத்தகைய நபர்கள் தம்மை ஆதரித்தால்) இருந்தால்போதும் என பிளேயர் நினைக்கிறார். இந்த ஒரு பகுதி அவருக்கு எதிராக மாறிவிட்டால் 24 மணி நேரத்திற்குள் அவர் பதவியை இழக்க நேரிடும். ஆனால், பார்ப்பதற்கு முதலில் பிளேயரின் வலிமை எனத் தோற்றமளிப்பது -உண்மையான ஜனநாயக ரீதியான ஒருமித்த கருத்தின் சிதைவு- அதே நேரத்தில் பெரும் உறுதியற்ற தன்மை மற்றும் பலவீனத்தின் மூலமாக இருக்கும். ஆளும் மேல்தட்டின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள, அரசாங்கம் மிகவும் வெளிப்படையாக தொழிலாளர்களின் நலன்களிடமிருந்து தனியே நிற்கவேண்டியதாகியுள்ளது. இறுதியில், இது அதற்கும் பரந்த மக்கட் திரளுக்கும் இடையேயுள்ள பிளவைப் பெரிதாக்க மட்டுமே செய்யும், அரசியல் முறைமையை ஆழ்ந்த நெருக்கடிக்கு ஆளாக்கும். அத்தகைய ஆட்சிகளுக்கு எதிரான சமூக மற்றும் அரசியல் இயக்க நிலைமைகளின் கீழே தோன்றும் எதிர்ப்புக்கள், தவிர்க்க முடியாத வகையில் ஈராக் போருக்கு எதிரான எதிர்ப்பில் வெளிப்பட்டமை மற்றும் ஏற்கனவே மிகப்பெரும் அளவிலான பரந்த மக்கள் எதிர்ப்பாய் என்ற பெரும் முன் நிழலாகத் தோன்றியது, முழு அரசாங்க கட்டமைப்பின் திவாலும் மிகவிரைவில் அம்பலப் படுத்தப்படும். |