World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Parliamentary probe exposes lies on Iraqi weapons

பிரிட்டன்: பாராளுமன்ற விசாரணை
ஈராக்கிய ஆயுதங்கள் பற்றிய பொய்யுரையை அம்பலப்படுத்துகிறது

றிணீக்ஷீt 2கிஸீபீக்ஷீமீஷ் கீவீறீளீவீமீ ணீஸீபீ ஞிக்ஷீ மிதீக்ஷீணீலீவீனீ ணீறீ-விணீக்ஷீணீsலீவீ

இரண்டாம் பகுதி: ஆன்ட்ரூ வில்கி, டாக்டர் இப்ராஹிம் அல்-மராஷி

By Robert Stevens
4 July 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஆன்ட்ரூ வில்கி

ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய உளவுத்துறை மூத்த ஆய்வாளரான ஆன்ட்ரூ வில்கி என்பவருடைய வாக்குமூல சாட்சியத்தை ஜூன் 19ம் தேதி பாராளுமன்ற வெளிவிவகார தெரிவுக்குழு (FASC) கேட்டறிந்தது. ஆஸ்திரேலிய அரசாங்கம் `விரும்புவோர் கூட்டணியில்` ஈராக்கியருக்கு எதிராக அமெரிக்கத் தலைமையில் நிகழ்ந்த போரில் பங்குபெற இசைந்ததையொட்டிய வேறுபாடுகளின் காரணமாகத் தன்னுடைய Office of National Assessments -ONA ல் செய்துவந்த வேலையை வில்கி மார்ச் 11ம் தேதி ராஜிநாமா செய்தார்.

பிரதம மந்திரி, மற்றைய மூத்த மந்திரிகள், அமைச்சரவையில் உள்ள தேசியப் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களுக்கு ONA தான் முதன்மையான உளவுத்துறை அமைப்பாகச் செயல்படுவதோடு மற்றைய உளவுத்துறை அமைப்புக்களுக்கும் அரசிற்குமிடையேயான இணைப்பாக செயல்படுகிறது.

குழுவில் விசாரணையில் சாட்சியம் கொடுப்பதற்கு முன்பாக ஜூன் 4ம் தேதி BBC அன்றைய Today நிகழ்ச்சியில் வில்கியைப் பேட்டி கண்டது. அவர் ''ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பது பற்றி மற்ற அரசாங்கங்கள் மிகைப்பட்ட கருத்துக்களையே கூறின என்பது என்னுடைய நம்பிக்கை. ஈராக்கிற்கும் அல்கொய்தாவிற்குமான தொடர்பை மூன்று தலைநகரங்களும் (பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா) மிகைப்படுத்தியுள்ளன. மூன்று தலைநகரங்களிலும் இருக்கும் அரசாங்கங்கள் பொதுவான பேரழிவு ஆயுதங்களின் பயங்கரவாதம் பற்றியும், குறிப்பாக அல்கொய்தாவிற்கு ஈராக் அத்தகைய பேரழிவு ஆயுதங்களைக் கொடுக்கிறது என்ற கருத்துக்களையும் மிகைப்பட்டுத்தின. அந்த நாடுகளின் உளவுத்துறை அமைப்புக்கள் கூறியவற்றையும் அந்த அரசாங்கங்கள் மிகைப்படுத்தியுள்ளன.'' என கூறினார்.

ONA இருந்து வில்கி வெளியேறிய பின்னரும்கூட, பிரதம மந்திரி ஜோன் ஹோவார்ட் இதைப் பற்றிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

பாராளுமன்ற வெளியுறவு தெரிவுக்குழுவின் தலைவர் டொனால்ட் ஆன்டர்சன் வில்கியிடம் ''ஈராக்கைப் பொறுத்தவரையில் கருத்துக்கூற உங்களுடைய தகுதி முதலியவற்றைத் தெரிவிக்க முடியுமா?'' என கேட்டார்:

தன்னுடைய வேலையின்போது ஈராக்கைப் பற்றிய நிலையையும், குறிப்பாக பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய நிகழ்வுகளையும் அவதானிக்கும் கடமை தனக்கிருந்ததாக வில்கி குறிப்பிட்டார். ஈராக்கிய பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய வில்கியின் அனுபவ அறிவின் தொகுப்பை மதிப்புக் குறைப்புச் செய்வதற்காக பாராளுமன்ற வெளியுறவுச் தெரிவுக்குழு இவர் பதவியிலிருந்து விலகிய பின்பு வெளியிட்ட கடிதத்தில் ''ஈராக்கைப் பற்றிய கோப்புக்கள் அவதானிக்கும் அலுவலக பட்டியலில் உள்ள அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. திரு.வில்கியும் அவதானிக்கும் அலுவலக பட்டியலில் இருக்கவில்லை'' என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அவர் அக்கடிதத்திற்குப் பதில் கூறுகையில், ''நான் இராணுவ மூலோபாய ஆய்வாளராக மூலோபாய ஆய்வுப்பிரிவில் வேலை செய்து வந்தேன். எல்லைகடந்த விடயங்களுக்கான பிரிவில் அல்ல. அதனால் நான் ஈராக் தொடர்பாக பணியில் அமர்த்தக்கூடிய நிலையில் இருந்தேன். பேரழிவு ஆயுதங்களைப் பற்றிக் குறிப்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தேன். அக்கடிதத்தில் இந்த முக்கியமான தகவல் விடுபட்டுள்ளது'' என்றார்.

அவர் தொடர்ந்தும் ''குறிப்பாக, 1998ல் அரசாங்கத்திற்காக பயங்கரவாதத்தில் பேரழிவு ஆயுதம் தொடர்பான ONA இன் மதிப்பீட்டைத் தயாரித்துக் கொடுத்தேன். மேலும் பிரிட்டனின் Cheltenham இல் உள்ள உளவுத்துறைத் தலைமை அலுவலகமான GCHQ இல் நான்கு நாடுகளின் பேரழிவு ஆயுத ஆய்வுக்குழுக் கூட்டத்திலும் பங்குகொண்டிருந்தேன். சமீபத்தில், ஆஸ்திரேலிய உளவுத்துறையின் பேரழிவு ஆயுதம் பற்றிய ஆய்வுக்குழு ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் ஆஸ்திரேலிய இரகசிய உளவுத்துறை பயிற்சி முகாமிலும் ONA இன் சார்பில் பங்குகொண்டேன். மேலும் எல்லைகடந்த விடயங்கள் தொடர்பான முக்கிய ஆய்வாளர் என்ற முறையில் ஈராக்கைப் பற்றிய தகவல் குறிப்புக்கள் அனைத்தையும் காண எனக்கு எப்பொழுதும் வாய்ப்பு இருந்தது. ஏனெனில் என்னுடைய பணி உலகளாவிய பயங்கரவாதத்தைப் பற்றியதும் ஈராக்குடன் தொடர்புடையவர்களைப் பற்றி ஆய்வும் நடத்தவேண்டும் என்பதால். நான் எழுதிய ஒரு அறிக்கைகூட தரக்குறைவு என்ற மதிப்பீட்டிற்கு உட்பட்டுவிடக்கூடாது என்பதில் நான் எப்பொழுதும் உறுதியாக உள்ளவன். ஈராக்கில் போர் நடந்தால் பின்னர் மனிதாபிமான அடிப்படையில் என்ன செய்யப்பட வேண்டும் என்ற முக்கிய அறிக்கையையும் நான் தயார் செய்யவேண்டியிருந்தால், சதாமின் ஆட்சியைப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்தும், பேரழிவு ஆயுதங்களின் திறன் உட்பட சதாமின் அனைத்துத் திறன்களையும் ஆராய்ந்திருக்கிறேன். அகதிகள் வெளியேறுதல் பற்றிய பேச்சுக்கள் மட்டுமல்ல, எப்படிப் போர் நடத்தப்பெறலாம் என்பது பற்றியும் அறிக்கை கூறவேண்டும் என்பதால் போர் முடிந்தபின் மேற்கொள்ளவேண்டிய மனிதாபிமானச் செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிடவேண்டும்.'' என அவ்வறிக்கை கூறியிருந்தது.

கேள்விகளின்போது முதலில் சார் ஜோன் ஸ்டான்லி, வில்கியை பிளேயர் அரசாங்கத்தின் முதல் செப்டம்பர் கோப்பை பார்வையிடுமாறு கூறினார். அந்தக் கட்டத்தில் வில்கி வெறும் ''கோப்புக்களிலுள்ள'' விஷயங்கள் மட்டுமே தெளிவாக்கப்படுவது போதாது என்று தெளிவுறுத்த விரும்புவதாகக் கூறினார். ''நம் அனைவருக்குமே ஞாபகப்படுத்திக்கொள்ள நான் கூறுவது என்னவென்றால் இந்தக் கோப்புக்களில் உள்ளவற்றைத் தவிர, போரை ஏற்படுத்துவதற்காக மூன்று அரசாங்கங்களும் கூடுதலான பலவற்றைக் கொண்டிருந்தன. சொல்லப்போனால் மிக அதிக உணர்வுப்பெருக்கு மிகுந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் பேச்சு மூலமாக வெளிப்படுத்தப்பட்டன. அவையில் பலரும் எழுந்து என்ன பேச முடியுமோ, அவற்றையெல்லாம் பேசினர்கள்'' என்றார்.

கோப்பில் உள்ளவற்றைப் பற்றிப் பேசும்பொழுது, தன்னுடைய சாட்சியத்தில் வில்கி கூறியதாவது: ''உணவின் தன்மை ருசித்து அறிவதில் உண்டு என்று கூறுவது வழக்கம். இந்த முறைகள் அனைத்திலும் ஈராக்கைப் பற்றிய மதிப்பீட்டில் பேரழிவு ஆயுதங்களைப் பொறுத்தவரையில் சிலவற்றை சில அளவில் எதிர்பார்க்கக்கூடும் என்று எழுதப்பட்டுள்ளது. அந்த அளவில் நடக்கவில்லை. நாம் ஏராளமான அளவு அதைப் பற்றிப் பேசலாம். ஆனால் இறுதியில் காண்பது அத்தகையது அங்கு காணப்படவில்லை. பின்னோக்கிப் பார்க்கும்பொழுது இது ஒரு நல்ல ஆவணமா? இல்லை, இது ஒரு தரம்குறைந்த ஆவணம். ஏனெனில் இந்த ஆவணத்தின் கணிப்பின்படி நாம் நம்முடைய படைகள் ஈராக்கிற்குச் சென்றால் பேரழிவு ஆயுதங்களைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டது, பாரிய அளவிலான பேரழிவு ஆயுதங்கள் கண்டறியப்படும் எனவும் கூறப்பட்டது''.

பிரிட்டிஷ் உளவுத்துறையின் மதிப்பீட்டு முறையை அவர் சந்தேகிக்கிறார் என்ற முறையில் சில கேள்விகளுக்கு வில்கி உட்படுத்தப்பட்டார். வில்கி ''என்னுடைய குவிப்பு பிரிட்டிஷ் உளவுத்துறை, பாதுகாப்புத்துறைகளைப் பற்றியது அல்ல. நான் பிரிட்டிஷ் அரசாங்கத்தை, அமெரிக்க, ஆஸ்திரேலிய அரசாங்கங்களுடன் சேர்த்தும் குற்றஞ்சாட்டுகிறேன். ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்களின் அச்சுறுத்தல் பற்றி மிகைப்பட்ட தன்மையில் பேசியதற்காகவும் அதையொட்டிய பயங்கரவாதம் பற்றிய அச்சுறுத்தலையும் மிகைப்படுத்தியதற்காகவும்.'' குறிப்பிட்டார்.

பாராளுமன்ற வெளியுறவுச் தெரிவுக்குழுவின் ஆன்ட்ரூ மக்கின்லி ''அத்தகைய மிகையான கூற்று என்பதற்கு உங்கள் சான்றுகள் எவை?'' எனக் கேட்டார்.

வில்கி ''எது என்னுடைய சான்று? கண்டுபிடிக்கப்பட்டது எதிலிருந்தும் இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டதற்கு எந்தத் தொடர்பும் இல்லாமலிருப்பதே என்னுடைய சான்று ஆகும். இந்தக் குழுவிற்கு ஏதாவது தெளிவான சான்று கொடுக்க வேண்டுமென்றால் அதைத்தான் சுட்டிக்காட்ட முடியும்.'' என பதிலளித்தார்.

மக்கின்லி ''உங்களுக்கோ, எனக்கோ ஈராக்கில் எது கண்டுபிடிக்கப்பட்டது, எது கண்டுபிடிக்கவில்லை என்பது தெரியாது, நமக்குத் தெரியுமா?'' என பதிலளித்தார்.

வில்கியின் ''எனக்கு என்ன தெரியுமென்பது, ஈராக்கில் இதுவரை எது கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கு காலம் மிகவும் குறுகியது. என்னை சான்று வழங்குமாறு கேட்கிறீர்கள். அது என்னை நோக்கி எவரும் எளிதில் விடக்கூடிய சவாலாகும். யுத்தத்திற்கு அடிப்படையாக எங்களுக்கு வாக்களிக்கப்பட்டது பெரிய பேரழிவு ஆயுதங்கள்தான். ஆனால் அது அங்கு கண்டுபிடிக்கப்படாததுடன், எங்களின்மேல் விற்கப்பட்ட யுத்தத்திற்காக இன்னும் அங்கு கண்டறியக்கூடியவை நாம் எதிர்பார்த்ததைவிட பல மைல்கள் தள்ளியேதான் இருக்கும்.'' என்றார்.

இப்ராஹிம் அல்மராஷி

இலாபநோக்கமற்ற கல்விக்கான நிலையமான சர்வதேச ஆய்வுகளுக்கான நாணய நிலையத்தில் இப்ராஹிம் அல்-மராஷி ஆராய்ச்சியாளராக உள்ளார். ஒரு மாணவராக இருந்தபொழுது இவர் கலாநிதி பட்டத்திற்காக (PHD) எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை ஈராக்கிய பாதுகாப்புப் பணிகளின் வரலாறு பற்றியது. இது அனைவருக்கும் ஆதாரங்காக கொள்ளக்கூடிய விவரங்களாகும். ஈராக்கின் பாதுகாப்பும் உளவுத்துறை வலைப்பின்னலும்: ஒரு கைநூலும் ஆய்வும் (Iraq's Security and Intelligence Network: A Guide and Analysis) என்ற இவருடைய கட்டுரை, என்பது Midle East Review of International Affairs இல் வெளியிடப்பட்டு, வலைத்தளத்திலும் பார்க்க வசதியுடையதாக வெளியிடப்பட்டது. இதைத்தான் புகழ்பெற்ற அளவில் மாற்றி, திரித்து, வேறு விதமாகப் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரதிபண்ணி ஆசிரியரின் அனுமதியின்றி போர் முரசை உரக்க அடிப்பதற்குப் பயன்படுத்தியது.

இந்த ''போலி கோப்பு'' தான் அல்மஹாஷியின் கட்டுரையை நெறியற்ற வகையில் மாற்றப்பட்ட பதிப்பின் கோப்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பெப்ரவரி 3ம் தேதி "ஈராக்: அதன் மறைப்பினதும், திரிபாக்கத்தினதும், அச்சுறுத்தலினது கட்டுமானம்'' (Iraq: Its Infrastructure of Concealment, Deception and Intimidation) என்ற தலைப்பில் வெளியிட்டது.

''அரசாங்கம் உங்களுடைய கட்டுரையை மாற்றி கையாண்டது பற்றி வருத்தமோ, மன்னிப்போ தெரிவித்துள்ளதா'' என்று கேட்கப்பட்டதற்கு அல்மராஷி ''நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தொலைபேசி மூலமோ, எழுத்து வடிவிலோ, பெப்ரவரி 2003 இருந்து இன்றுவரை நான் தொடர்புகொள்ளப்படவில்லை.'' என பதிலளித்தார்.

அவருடைய நூலில் ஏற்படுத்தப்பட்ட முக்கிய மாற்றங்களைப் பற்றி அவரை வினவினார்கள். அதற்குப் பதில் கூறுகையில், ''முக்கியமான மாறுதல் இரண்டாம் பகுதியான ''அதனுடைய வெளிநடவடிக்கைகளில் சேர்ந்துள்ளவை.... விரோத ஆட்சியுள்ள நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவுதல்'' என்று குறிப்பிட்டுள்ளது. நான் ''விரோத ஆட்சியுள்ள நாடுகளில் உள்ள எதிர்ப்புக் குழுக்களுக்கு உதவுதல் என்று எழுதியுள்ளேன் என்று நினைக்கிறன். 'எதிர்ப்புக் குழுக்கள்' என்பதற்கும் 'தீவிரவாதிகளின் அமைப்புக்கள்' என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஈராக்கிய உளவுத்துறைக்கும், தீவிரவாத அமைப்புக்களுக்குமிடையே முன்பு தொடர்புகள் அதிகமாக இருந்திருக்கக்கூடும் என்று எப்பொழுதுமே நான் நினைத்தது உண்டு. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அப்படிப்பட்ட பலமான ஒத்துழைப்பு இருந்ததற்கான சான்றுகள் ஏதுமில்லை, ஈராக் அல்கொய்தாவுடன் ஒத்துழைத்தற்கான சான்றுகளும் இல்லை.'' என குறிப்பிட்டார்.

இந்தச் சொல்லை மாற்றியதன் மூலம் கருத்து திரிக்கப்பட்ட தன்மை தோன்றியுள்ளது. ''விரோத நாடுகளிலுள்ள தீவிரவாத அமைப்புக்களுக்கு ஆதரவளித்தல் என்பது தீவிரவாத அமைப்புக்கள், உதாரணமாக அல்கொய்தாவிற்கு ஆதரவு என்ற பொருளில் எடுக்கப்படலாம்.'' என்றார்.

அல்மஹாஷியின் கருத்துக்களைச் சுருக்கிக்கூறும் வகையில் பாராளுமன்ற வெளியுறவு தெரிவுக்குழுவின் கிரெக் போப் ''ஒரு சுருக்கமாக, வலைத்தளத்திலிருந்து உங்களுடைய ஆராய்ச்சிக் கருத்தைத் திருடி, உங்களைக் கேட்காது, உங்களிடத்திலிருந்து அனுமதி பெறாமலும், அவற்றின் அர்த்தத்தை மாற்றுவதற்காக சில பகுதிகளை மாற்றியமைத்ததுடன், மிகத் திறமையற்ற முறையில் முற்றாக தவறாகச் செய்துள்ளனர்'' என்றார்.

பிளேயரின் சிறு குழு ஈராக்கின் மீது போர் தொடுத்தலை நியாயப்படுத்துவதற்காக கூறிய பல போலிக் கூற்றுக்களில் ஒன்று மேலை நாடுகளில் உள்ள மக்கள் மீது பயன்படுத்த சதாம் ஹூசேன் தீவிரவாத அமைப்புக்களுக்குப் பேரழிவு ஆயுதங்கள் கொடுக்க தயாராகவிருந்தார் என்பது ஆகும்.

இந்தக் கருத்தைப் பற்றி பில் ஓல்நர் (Bill Olner) என்ற பாராளுமன்ற வெளியுறவுச் தெரிவுக்குழுவின் உறுப்பினர் அல்மராஷியிடம் வினவினார்.

இத்தகைய கூற்றுக்கு மதிப்பே கிடையாது என்று அல்மஹாஷி பதிலளித்தார். ''இல்லை, இது ஒரு சரியான வாதம் என்று நான் கருதவில்லை. விவாத அமைப்பு ஒருபுறமிருக்க தன்னுடைய இராணுவத்திற்கே சதாம் ஹுசேன் அதைக் கொடுக்கமாட்டார். இந்த ஆயுதங்களை கட்டுப்படுத்துவது விஷேட பாதுகாப்பு அமைப்பு எனப்படும் அவருடைய அரசியல் உளவுத்துறைப் பாதுகாப்பு அமைப்பிற்குத்தான் கொடுக்கப்படும். அது இராணுவப் பிரிவு அல்ல'' என்றார்.

''இந்த அமைப்பு ஒன்றுதான் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும். வழமையான இராணுவம் அதைப் பயன்படுத்துவதற்கான அதிகாரமோ இயலாததுடன் முடியாது. இந்த ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடும் அதிகாரமும் மிகக்கட்டுப்பாடானது. தன்னுடைய இராணுவத்தையே நம்பாத சதாம் ஹுசைன் தன் கட்டுப்பாட்டிற்கு உட்படாத வேறு ஓர் அமைப்பிடம் அத்தகைய ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு, அதனால் வரக்கூடிய விளைவுகளை சந்திப்பாரா என்பது பெரிதும் சந்தேகத்திற்கு உரியது. ஈராக் இத்தகைய போர்க்கருவிகளை தீவிரவாத அமைப்புக்களுக்குக் கொடுத்திருப்பார் என்பதை நிரூபிப்பது மிகக்கடினம் என்றே நான் நம்புகிறேன்'' என கூறினார்.

அல்-மஹாஷி மேலும் கூறியதாவது: ''ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கின் எல்லை தாண்டி உபயோகிக்கப் பயன்படுத்தப்படவில்லை என்பது தான் உண்மையாகும். வெகுசில சந்தர்ப்பங்களில் அத்தகைய ஆயுதங்கள் எல்லை தாண்டி பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் கூடியளவான ஆயுதங்கள் ஈராக்கிய மக்களை அச்சுறுத்துவதற்காகவே வைக்கப்பட்டுள்ளன. அவை குர்திஸ்தான் மக்களை அச்சுறுத்தவும், ஈராக்கின் ஷியாக்களை அச்சுறுத்தவும், ஒரு முறை ஈரானியர்கள் எல்லை தாண்டி வந்தபோது பயமுறுத்தப் பயன்பட்டன. ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கிய மக்களுக்கும் மற்றும் அப்பிராந்தியத்திற்கும் ஒரு அச்சுறுத்தலாகும் என்பது உறுதியானது. அது ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும், உலகில் மற்ற பகுதிகளுக்கும் ஒரு அச்சுறுத்தலா என்பது வேறு பிரச்சினையாகும்''.

See Also :

பிரிட்டன்: பாராளுமன்ற விசாரணை ஈராக்கிய ஆயுதங்களைப் பற்றிய பொய்யுரைகளை வெளிப்படுத்துகிறது. பகுதி1

பகுதி3:வெளிநாட்டு அமைச்சர் ஜக் ஸ்ரோ

Top of page