World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக் Iraqis demand end to American occupation அமெரிக்க ஆக்கிரமிப்பை கைவிட ஈராக் மக்கள் கோரிக்கை By James Conachy சென்ற வெள்ளிக்கிழமையன்று பாக்தாத் நகரில் வழிபாடுகள் முடிந்ததும், பொதுமக்கள் பெருந்திரளாக, அமெரிக்க படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். பாக்தாத் நகரின் பிரதான மசூதியான அபுஹனிபா அல்நுமான் மசூதியிலிருந்து, வழிபாடு முடித்துவிட்டு வெளியில் வந்த 20,000-பேர், பாக்தாத் நகரத் தெருக்களில் குரானை கையில் கொண்டு அரபு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த பதாகைகளில், "எங்கள் நாட்டை விட்டு வெளியேறு, நாங்கள் அமைதியை விரும்புகிறோம்" என்ற வாசகங்கள் அடங்கியிருந்தன. இந்தக் கண்டன பேரணி தொடங்குவதற்கு முன்னர், முன்னணி சன்னி பிரிவு, மத குருவான, அஹமத்-அல்-குவாய்சி (Ahmed Al-Kubaisi), இஸ்ரேல் சார்பில் அமெரிக்கா- ஈராக்கை நசுக்கி வருவதாக குற்றம் சாட்டினார். அமெரிக்கா இராணுவம் ஈராக்கை பிடித்துக்கொண்டது, சட்ட விரோதமான நடவடிக்கை என்று வர்ணித்தார். அமெரிக்க துருப்புக்களை வெளியேற்றுகின்ற பொதுவான கிளர்ச்சியில், ஷியா மற்றம் சன்னி பிரிவுகள், ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட கேட்டுக்கொண்டார். இந்த நாட்டை காப்பாற்ற தவறியதன் மூலம் சதாம் உசேன் ஈராக் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். அல்-குபாய்ஷி இஸ்லாமிய அரசை நிறுவக் கோரினார். ஆர்ப்பட்டக்காரர்கள் ஏந்திச் சென்ற பாதாகைகளில் ஒன்று, "அமெரிக்கா வேண்டாம்! மதச்சார்பற்ற அரசு வேண்டாம்! இஸ்லாமிய அரசுதான் வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆவேசம் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நெருக்கிக்கொண்டு வந்ததால் ஊர்வல பாதையிலிருந்து அமெரிக்க துருப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்களிலும் வடக்கு நகரான மோசூலில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈராக் சிவிலியன்களை சுட்டுவீழ்த்தியதால் நாடு முழுவதும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக கோபாவேசத்தை கிளப்பியுள்ளது. மோசூல் நகரில் கலவரம் ஏற்பட்டதற்கு காரணம், நகரசபை அலுவலகங்களிலும் இராணுவ வாகனங்களிலும் அமெரிக்க கொடிகள் ஏற்றப்பட்டதேயாகும். அதுமட்டுமல்லாமல் ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஈராக்கிலிருந்து தப்பியோடிய அமெரிக்காவிற்கு ஆதரவான, முன்னாள் குடியரசுப் படையைச் சார்ந்த தளபதி, நிசன்-அல்ஜிபாரி நகர கவர்னராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டதாலும் இந்தக் கலவரம் ஏற்பட்டது. அமெரிக்க மத்திய இராணுவ மைய கட்டளைப்பிரிவு அதிகாரி ஜெனரல் வின்ஸ் புரூக்ஸ் இது பற்றி தகவல் தரும்போது நகரசபை அலுவலகங்களுக்கு வெளியில் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. செவ்வாய்கிழமையன்று அந்தக்கூட்டம் "வன்முறைக்கு திரும்பி போர் வீரர்கள் மீது கற்களை வீசியது. தங்களது முஸ்டிகளால் போர் வீரர்களை தாக்கியது மற்றும் போர் வீரர்கள் மீது காறிதுப்பியது. நேரடியாக கட்டளையிடப்பட்டோ அல்லது பீதி அடைந்தோ போர் வீரர்கள் சுட்டார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களில் 10 பேர் மடிந்தனர், மற்றும் 16 பேர் காயம் அடைந்தனர். ஒரு அமெரிக்க இராணுவ வீரர் நியூயோர்க் டைம்ஸ் நிருபரிடம் மோசூல் மக்கள் "நன்றியில்லாதவர்கள்" என்று புகார் கூறினார். புதன்கிழமையன்று, ஈராக் மக்கள், சிலர் நேரில் பார்த்ததாக கூறிய தகவலின்படி அமெரிக்க போர் வீரர்கள், இரண்டாவது முறையாக சிவிலியன்களை சுட்டுக்கொன்றார்கள், மற்றொரு கண்டனப் பேரணிக்காக, திரண்டு கொண்டிருந்த கூட்டத்தை நோக்கி சுட்டார்கள். மோசூலின் அவசரச் சிகிச்சை மருத்துவமனையில், மூன்று உடல்கள் குண்டு காயம்பட்டு கொண்டுவரப்பட்டதாகவும், காயம் அடைந்தவர்கள் 12-பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் இருவர் குழந்தைகள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அருகாமையில் உள்ள கட்டிடங்களிலிருந்து, தங்களை நோக்கி, சுட்டவர்களை நோக்கியே நகரசபை அலுகலகங்களிலிருந்த துருப்புக்கள் திருப்பிச் சுட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியது. வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, இதர முன்னணி முஸ்லீம் மதத்தலைவர்கள் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உரையாற்றினார்கள். பாக்தாத்திற்கு தென்மேற்கில் உள்ள கர்பலாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்களிடேயே, முன்னணி சியா மதத்தலைவர் அமெரிக்கப் படையெடுப்பை கண்டித்து உரையாற்றினார். கர்பலா சியா பிரிவினருக்கு மிகவும் புனிதம் நிறைந்த வழிபாட்டு மையம் முகம்மது நபியின் பேரன் ஹூசேன் கல்லறை அங்கு உள்ளது. அங்கு சேக்-காசிம் அல்-அபகாடி அல்-நசாரி (Sheikh Kaazem al-Abahadi al-Nasari), வழிபாடு நடத்தியவர்களிடையே உரையாற்றும்போது: "நாங்கள் இந்த வெளிநாட்டு படையெடுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை புறக்கணிக்கிறோம். இது ஒரு புதிய ஏகாதிபத்தியம். இது எங்களுக்கு இனி வேண்டாம். அமெரிக்கர்கள் எங்களுக்கு தேவையில்லை. அவர்கள் இங்கேயிருப்பது எங்களது எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் இறை நம்பிக்கையில்லாதவர்கள், ஆனால் எங்களைப் பொறுத்தவரை அந்த நம்பிக்கையின் வலிமை எங்களுக்கு உள்ளது" என்று குறிப்பிட்டார். பிரதானமாக சியா முஸ்லீம்கள் வாழுகின்ற பாக்தாத்தின் வடக்கு புறநகரான இது, முன்னர் சதாம் நகர் என்று அழைக்கப்பட்டது. ஆனால், தற்போது சதர் நகர் என்ற மறுபெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் 50,000 வழிபாட்டாளர்கள், அல்-ஹிக்மா மசூதியை சுற்றியுள்ள தெருக்களில் திரண்டு நின்று முன்னணி சியா மதத்தலைவர் சேக்-முஹம்மது பத்தூசி Sheikh (Mohammed Fartusi), உரையை கேட்பதற்காக திரண்டனர். அவர் ஈராக்கில், பொம்மை ஆட்சியை உருவாக்கும் அமெரிக்க முயற்சியை கண்டித்தார். அந்த அரசாங்கம் "ஈராக் மக்கள் தாங்கள் விரும்புவதை கேட்க அனுமதிக்கிறது. ஆனால் தங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்க எந்தவிதமான உரிமையும் வழங்கவில்லை. அது சதாம் ஹூசேன் ஆட்சியைவிட மோசமானது" என்று குறிப்பிட்டார். குட், நாசிரியா மற்றும் பாஸ்ரா நகரங்களிலும் இந்த வாரம் அமெரிக்காவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வந்திருக்கின்றன. குட் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க துருப்புகள் மீது காரிதுப்பினார்கள். "சலாபியை ஏற்றுக்கொள்ளமாட்டோம்" என்ற முழக்கம் எழுப்பினார்கள். அஹம்மது சலாபி, அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள, நிதி உதவி வழங்கி இருக்கும் ஈராக் தேசிய காங்கிரஸ் தலைவர், அமெரிக்கா உருவாக்கும் பொம்மை அரசாங்கத்தில் புஷ் நிர்வாகம் அவரை முன்னணித் தலைவராக நியமிக்கலாம். ஈராக்கில், அமெரிக்க துருப்புக்களுக்கு எதிரான உணர்வு மிகப்பெரும் அளவில் வளர்ந்துகொண்டு வருவதை ஊடகங்கள்கூட புறக்கணிக்க முடியவில்லை. இதே ஊடகங்கள் அமெரிக்கப் படைகளை விடுதலைப் பெற்று தந்தவர்கள் என்று ஈராக் மக்கள் வரவேற்பதாக கூறிவந்தன. அமெரிக்க இராணுவமயத்திற்கு ஆதரவான மிகவும் வெட்கக்கேடான ஆதரவாளராக விளங்கும் பொக்ஸ் நியூஸ் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை அமெரிக்கா ஈராக்கிற்கு கொண்டுவந்திருக்கும், "ஜனநாயகத்தின்" ஆக்கபூர்வமான வெளிப்பாடு என்று வர்ணித்திருக்கிறது. பொக்சைவிட தனது நம்பகத்தன்மை குறைந்துவிடும் என்று கவலைப்பட்ட சிஎன்என் தனது வெள்ளிக்கிழமை செய்தி அறிக்கைகள் முழுவதிலும் "சில ஈராக்கியர்கள் கண்ணுக்கு அமெரிக்கப் படைகள் வீரர்களாக தோன்றி பின்னர் ஆக்கிரமிப்பாளர்களாக மாறிவிட்டனர்" என்று ஒவ்வொரு செய்தி அறிக்கையிலும் தகவல்களை வெளியிட்டது. அசோசியேட்ட் பிரஸ், AFP மற்றும் ராய்டர் போன்ற செய்த நிறுவனங்கள் ஆர்ப்பாட்டங்களை ஆய்வு செய்து தகவல் தரும்போது, சூறையாடல்களை தவிர்க்கவும் மற்றும் அத்தியாவசியமான சேவைகளை மீட்டுத்தரவும் அமெரிக்கப் படைகள் தவறிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக தெரிவித்துள்ளன. ஏப்ரல் 9ந் தேதி பாக்தாத் வீழ்ச்சியடைந்து ஈராக் அரசாங்கம் நிலைகுலைந்தவுடன், அமெரிக்காவில் சூறையாடலும் குழப்பமும் நடைபெற்றதற்கு ஈராக் மக்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கா மீது பழிபோடுகிறார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஈராக் தெருக்களில், சரியான காரணங்களுக்காக ஈராக்கை மேலும் பலவீனப்படுத்தவும், ஈராக் மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள முடியாது என்று கூறி நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தவும் இவ்வாறு செயல்பட்டார்கள் என்று பொதுமக்கள் சாலை, சதுக்கங்களில் பேசுகின்றார்கள். மிகவும் அடிப்படையான மற்றொரு அம்சம் என்னவென்றால், தங்கள் நாடு அடியோடு நாசம் செய்யப்பட்டு, உலகின் மிகப்பெரிய வல்லரசு தனது இராணுவ வலிமையை நிலைநாட்டிவிட்டது என்பதால், மக்களிடையே எழுந்துள்ள கசப்பு உணர்வு கோபம் மற்றும் தாங்கள் இழிவுபடுத்தப்பட்டுவிட்டோம் என்ற உணர்வு இந்த ஆர்ப்பாட்டங்களில் வெளிப்படுகிறது. பன்னிரெண்டு ஆண்டுகளாக, அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்பு காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி, ஈராக் மண்டியிடவேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது. அருங்காட்சியகங்கள், நூலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசாங்க கட்டிடங்களில் கடந்த ஒன்பது நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் சூறையாடல் மற்றும் நாசவேலைகள் சிதைந்துவிட்ட ஒரு சமுதாயத்தில் தான் நடக்கும். போரின் அதிர்ச்சி நீங்கியதும், பல்வேறு இன, மற்றும் மதக்குழுக்கள் தங்களது சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தவே செய்வார்கள் அது தவிர்க்க முடியாதது. பிரிட்டனும், பிரான்சும் பாலைவனத்தில் எல்லை வகுத்து இந்த நாட்டை உருவாக்கியதற்கு பின்னர் விடை காணப்படாமல் விடப்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு கோரிக்கைகள் எழத்தான் செய்யும். ஈராக் மக்களை ஒன்று சேர்த்து வெளிநாட்டுப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கத்தான் செய்வார்கள். தங்களது தலைவிதியை தாங்களே நிர்ணயித்துக்கொள்ளும், உரிமை வேண்டும். சலாபி மற்றும், அல்ஜுபாரி போன்ற ஊழல் தலைவர்கள் அரசியல் தார்மீக உரிமையோ அல்லது ஆதரவோ இல்லாதவர்கள், தலைமையில் நடைபெறும் ஆட்சி நிர்வாகத்திற்கு கட்டுப்படமாட்டோம் என்று அவர்கள் கோருவார்கள். வரும் மாதங்களில், மற்றும் வாரங்களில் நாடு முழுவதிலும், என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்க்கும் வகையில் மோசூல் நகரில் அமெரிக்கா படுகொலைகளை புரிந்திருக்கிறது. புஷ் நிர்வாகம், அதன் ஆளும் மேல்தட்டின் சூறையாடும் நோக்கங்களுக்கு ஈடுகட்டும் வகையில் ஈராக் மக்களை கொடுமையாக ஒடுக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிர்ப்பந்தம் உருவாகும். |