World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்

WSWS international conference: Resolutions on war and the US social crisis, development of the World Socialist Web Site

உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு: போர் மற்றும் அமெரிக்க சமூக நெருக்கடி தொடர்பான தீர்மானங்கள், உலக சோசலிச வலைத் தள அபிவிருத்தி பற்றிய தீர்மானங்கள்

4 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் இணைந்து மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் மார்ச் 29, 30 ஆகிய நாட்களில் நடத்திய சர்வதேச மாநாட்டில், "சோசலிசம் மற்றும் ஏகாதிபத்தியத்தியம் மற்றும் போருக்கு எதிரான போராட்டம்: புதிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்திற்கான வேலைத் திட்டங்களும் மூலோபாயமும்" என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. ஏப்ரல் 1தேதி உலக சோசலிச வலைத் தளமானது மாநாட்டின் சுருக்கத்தை பிரசுரித்தது. [காண்க: சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் நடாத்திய சர்வதேச மாநாடு] மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும் மற்றும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த்தின் தொடக்க உரை பிரசுரிக்கப்பட்டது. [காண்க: கட்டுக்கடங்கா குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்]

ஏப்ரல் 2ல் மாநாட்டு பிரதிநிதிகளால் ஒருமனதாக ஏற்கப்பட்ட 6 தீர்மானங்களில் 2 தீர்மானங்கள் ஏப்ரல் 2ம் தேதி பிரசுரிக்கப்பட்டன. [காண்க: உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு: தீர்மானங்கள் ஈராக் போரை கண்டிப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு அழைப்பு] ஏப்ரல்-3-ந்தேதி மூன்றாவது மட்டும் நான்காவது தீர்மானங்களை வெளியிட்டோம். [காண்க: உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு: தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் கோரும் தீர்மானங்கள், ஜனநாயக உரிமைளை பறிப்பதற்கு எதிர்ப்பு] இன்றைய தினம் இறுதி இரண்டு தீர்மானங்களை பிரசுரிக்கின்றோம்.

மாநாட்டுத் தீர்மானம்: போர் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் சமூக நெருக்கடி

வாஷிங்டனின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை, பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு நுழைய முடியாத, தடை எதுவும் இல்லை. கட்டுப்பாடு எதுவுமில்லாத இராணுவமயத்தில், புஷ் நிர்வாகம் இறங்கியிருப்பது, அமெரிக்க சமுகத்தில் ஆழமாக வேரூன்றி சென்று கொண்டிருக்கும் உள்நாட்டு நெருக்கடியின் வெளிப்பாடுதான். 1920-களுக்கு பின்னர், அமெரிக்கா இதுவரை காணாத சமுதாய ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதன் மிகத்தீவிரமான வெளிப்பாடுதான் இந்த நெருக்கடி. இது சாதாரணமாக அமெரிக்காவின் நெருக்கடி மட்டுமல்ல, இது சர்வதேச இயல்நிகழ்ச்சி ஆகும். ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்களால் சமூக கொந்தளிப்புக்கள் பெருகி, ஆளும் வர்க்கங்கள் உள்நாட்டில் ஒடுக்குமுறைகளை நோக்கியும் வெளிநாடுகளில் ஏகாதிபத்திய போரில் ஈடுபடுவதையும் உந்தும் சமூகப்பதட்டங்களைத்தூண்டும் இயல் நிகழ்ச்சி ஆகும்.

இராணுவமயம், இரண்டு நெருக்கடியான பணிகளை நிறைவேற்றுகிறது. முதலாவதாக, படையெடுத்து சூறையாடுவதன் மூலம் குறைந்தபட்சம், குறுகிய காலத்தில், பொருளாதார பிரச்சனைகளை சீர்படுத்துகின்ற கூடுதல் நிதி ஆதாரங்களை பெறமுடியும். இரண்டாவது நெருக்கடியான பணி என்னவென்றால், போரானது உள்நாட்டு சமூக நிர்பந்தங்களை வெளிநோக்கி திருப்பிவிடுகின்றது.

ஆனால், இந்த குறுகிய கால "பயன்கள்", அமெரிக்காவை பீடித்துள்ள பொருளாதார மற்றும் சமூக நோய்களை தீர்த்துவைக்கும் மருந்தாகாது. ஈராக்கில், அமெரிக்கா மிக விரைவான வெற்றியை பெற்றாலும், அமெரிக்காவின் புரையோடிக்கொண்டிருக்கும் சமுதாய மற்றும் பொருளாதார நெருக்கடி மேலும் வளரவே செய்யும். அமெரிக்காவின் பொதுவான நெருக்கடியை போக்குகின்ற எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுப்பதற்கு அமெரிக்காவின் எந்த ஒரு அமைப்பும் பொருளாதார, சமுதாய மற்றும் அரசியல் அமைப்பும்- அத்தகைய வல்லமையோ வாய்ப்பு வசதிகளோ பெற்றவை அல்ல.

அமெரிக்க ஜனநாயகத்தின் பேரழிவுகரமான தோல்வியை எடுத்துக்காட்டுவதாகத்தான் இந்தப் போர் அமைந்திருக்கிறது. ஒரு சிறிய அரசியல் சதிகாரர்களின் சிறு சதிக் கூட்டம் ஒன்று, மறைமுக திட்டத்துடன் மோசடி மூலம் பதவிக்கு வந்து, அமெரிக்க மக்களை போருக்கு இட்டுச்சென்றுவிட்டது. அந்தப் போரை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்ளவும் இல்லை விரும்பவும் இல்லை. முதலாளித்துவ ஜனநாயகத்தின் எந்த இயங்குமுறையும் -பாரம்பரியமாக கூறப்பட்டுவரும் அரசாங்கத்தின் கட்டுப்பாடு மற்றும் சமன்படுத்தும் ஏற்பாடு, ஒரு எதிர் கட்சி, தொழிற்சங்கங்கள், விமர்சனக் கண்ணோட்டத்தில் செயல்படுத்தப்படும் ஊடகங்கள்- இவை எதுவும் ஆளும் குழுவின் செயல்பாடுகளையும் அபிலாஷைகளையும் இனி கட்டுப்படுத்தவே முடியாது என்கிற நிலைக்கு சென்றுவிட்டது.

அமெரிக்க ஜனநாயகத்தின் சிதைவு அமெரிக்காவின் மிகப்பெரும்பாலான மக்களுக்கும், கபளீகரம் செய்துவருகின்ற நிதி ஆதிக்க குழுக்களுக்கும், மற்றும் செல்வந்தர்களுக்கும் இடையில் ஆழமாய் வளர்ந்துகொண்டிருக்கின்ற சமூக இடைவெளியில் ஆழமாக வேரூன்றி உள்ளது. உச்சாணியில் அமர்ந்துகொண்டிருக்கும் ஒரு சிறிய மற்றும் மிக அதிக அளவில் செல்வம் படைத்த ஒரு குழுவிற்கும் வாழ்க்கைத்தரம் படிப்படியாக குறைந்துகொண்டே வரும் உழைக்கும் மக்கள் மிகப் பரவலாக உள்ள பெரும்பான்மை மக்களுக்கும் இடையில் கடந்த 30-ஆண்டுகளில் மிகப் பிரம்மாண்டமான சமுதாய பிரிவினைகள் தோன்றியுள்ளன. இன்றைய அமெரிக்காவில் 14,000-மிகப்பெரும் பணக்காரக் குடும்பங்களின் ஆண்டு வருவாய், 20,000,000 மிக ஏழ்மையான குடும்பங்களின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானத்தைவிட அதிகமாக உள்ளது.

பல கோடி டாலர் வருமானங்கள், மற்றும் வாரிசு உரிமை சொத்துக்கள் ஆகியவற்றிற்கு ஏறத்தாழ வரியையே நீக்கிவிட்டார்கள். இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுத்ததன் மூலம், புஷ் நிர்வாகம் அமெரிக்காவின் சமூக உள்ளமைப்பை, சிதைவதற்கு அனுமதித்துவிட்டது. அமெரிக்காவின் 50-மாகாணங்களில், மிகப்பெரும்பாலான மாகாணங்கள் திவாலாகும் தறுவாயில் உள்ளன. சமூக நல, அத்தியாவசிய அமைப்புக்கள் சிதைந்துகொண்டு வருகின்றன. பள்ளிக்கூட கல்வி முறைகள், சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டன. சுகாதாரத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை மற்றும் சேவைகள் கணிசமாக வெட்டப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் முழுவதும் சீர்குலைவு நிலைக்கு வந்துவிட்டன. இன்னும் ஓராண்டிற்குள் அமெரிக்க விமான நிறுவனத் தொழிலில் பெரும் பகுதி இருக்காது. அமெரிக்காவில் மிகப்பெரும் பணக்கார பிரிவுகளுக்கு, வரி வெட்டப்பட்டிருப்பதை ஈடுகட்டுவதற்கு நிதி ஆதாரங்கள் மிகப்பெரிய அளவில் திருப்பிவிடப்பட்டிருப்பது தேசிய அளவிலான திவால் நிலையை அச்சுறுத்துகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் குறிப்பாக 1990-களில் ஊகவாணிக நிதிக் குமிழிகளின் பொழுது முன்னணிக்கு வந்த அமெரிக்க ஆளும் மேல்தட்டின் அரசியல் மறு உருவம் தான் புஷ் நிர்வாகம். அவர்கள் தனிப்பட்ட முறையில் மோசடிகள் பெரும் கொள்ளைகள், மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் வாய்ப்பு வசதிகளைப் பெருக்கிக் கொண்டவர்கள். அவை கம்பெனிகள் சீரமைப்பு மற்றும் ஆட்குறைப்பு செய்யப்பட்டதன் மூலம் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் தங்களது வேலை வாய்ப்புக்களை இழந்ததில், சமூக நலன்களை இழந்ததில், வேலைகளை இழந்ததில், நேரடியாய் அடையப்பட்டது.

இதே வகையான நடவடிக்கைகள், வெளிநாட்டு, மற்றும் உள்நாட்டு கொள்கைகளில், இரண்டிலும் கடைபிடிக்கப்பட்டன. இந்த சிறிய மேல்தட்டினர் செல்வத்தை குவிப்பதற்கு இடையூறாக எதுவும் அனுமதிக்கப்படக்கூடாது என்று, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வெளிநாடுகள், இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வருவது உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் சமூக சேவைகள் வாழ்க்கைத்தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் பறிப்பு நடவடிக்கைகளோடு இணைக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இராணுவ மயத்திற்கு எதிரான போராட்டம் பிரிக்க முடியாத அளவிற்கு உழைக்கும் மக்களின் சமுதாய நிலை மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து நிற்கும் இயக்கத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது. அந்தக் கிளர்ச்சி ஒரு சிறிய மற்றும் யாருக்கும் பொறுப்பில்லாத மேல்தட்டு செல்வத்தை ஏகபோகமாக வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். இந்தக் குழு ஆதிக்கம், ஜனநாயக சமுதாயத்தை நிலைநாட்டுவதற்கு முற்றிலும் ஏற்புடையவை அல்ல. போருக்கு எதிரான போராட்டத்தில் மையமாக, நியாயமான சமூக சமத்துவத்திற்கான போராட்டம் இடம்பெறவேண்டும். மற்றும் மிக விரிவான சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக்கட்டும் வகையிலும், மற்றும் வேலை வாய்ப்பிற்கான உழைக்கும் மக்களின் தேவைகளை உத்திரவாதம் செய்து தருவதற்கும், வாழும் வகைக்கான ஊதியம் தருவதற்கும், ஓய்வு பெறும்போது பாதுகாப்பான நிலை உருவாவதற்கும், தரமான கல்விக்கும், சுகாதார வசதிகளுக்கும், வீட்டு வசதிகளுக்கும், உத்திரவாதம் செய்துதரும் வகையில் அந்த போராட்டம் அந்த திசை வழியில் செலுத்தப்படவேண்டும்.

நியாயமான, முற்போக்கான வரிக்கொள்கையை உருவாக்கி அதன் மூலம் செல்வத்தையும் மற்றும் வருமானத்தையும், ஜனநாயக அடிப்படையில் பகிர்ந்தளிக்க இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது. மற்றும் உழைக்கும் மக்களது, உழைப்பால், உருவாக்கப்படும், பொருளாதார வளங்கள் அவர்களது சமூகத் தேவைகளை நிறைவேற்றுகிற வகையில், மறு ஒதுக்கீடு செய்யப்பட மாநாடு கேட்டுக்கொள்கிறது.

ஒட்டுமொத்த, ஆயுத தொழிலையும், பொதுமக்களுக்கு சொந்தமான தொழில்களாக மாற்றி, அதை சமுதாயத்திற்கு பயன்படும் பொருட்களை தயாரிக்கும் தொழிற்கூடங்களாக மாற்றப்படவேண்டுமென்று, இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது. அதேபோன்று, மிகப் பிரம்மாண்டமான கார்ப்பரேஷன்களை, எண்ணெய் எரிவாயு மற்றும், எரிபொருள் உற்பத்தி கூட்டு நிறுவனங்கள் உட்பட அனைத்தையும் அரசுடைமையாக்கவும் அந்த நிறுவனங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டிற்கு கீழ்ப்படுத்தவும் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மாநாட்டுத் தீர்மானம்: அமெரிக்க ஊடகங்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தள அபிவிருத்தி

"மஞ்சள் பத்திரிகை" மற்றும் "சாக்கடை பத்திரிக்கை" என்ற சொற்றொடர்கள், முந்திய தலைமுறை பத்திரிகை அதிபர்களோடு சம்மந்தப்படுத்தப்பட்டவை. அதே வார்த்தைகள் இன்றைய அமெரிக்க ஊடகங்கள், ஈராக் போரில் மற்றும் பொதுவாக நடப்பு அமெரிக்க சமுதாய வாழ்வில் நடந்துகொள்ளுகிற விதத்தை விமர்சிப்பதற்கு போதுமானவை அல்ல.

இன்றைக்கு பத்திரிகைகளையும் தொலைக்காட்சியையும் இதுபோன்ற ஊடகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற போக்கிரிகள், ஒவ்வொரு நாளும் மக்களை ஏமாற்றவும் அரசியல்வாதத்தை அநாகரீகப்படுத்தவும்; சமுதாய மற்றும் தார்மீக சூழ்நிலையை மாசுபடுத்தவும், தினசரி பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

பென்டகனும், வெள்ளை மாளிகையும் வழங்குகின்ற மிக மடைத்தனமான பொய்களை நேரடியாக ஒளிபரப்பாளர்களும், பத்திரிகை எழுத்தாளர்களும் நேருக்கு நேர் மக்களுக்கு சொல்லுகிறார்கள் இது தனிப்பட்ட முறையில் தனி மனித ஊழல் மட்டுமல்ல, அடிப்படையிலேயே அமெரிக்க ஆளும் மேல்தட்டின் அறிவுச்சிதைவையும் அரசியல் வழிவிலகலையும் எடுத்துக்காட்டுகின்றன.

அமெரிக்க ஊடகங்கள் ஈராக்கில் பேரழிவை தயாரிப்பதில் முக்கியமான பங்கு வகித்தன. விமர்சனக் குரல்களுக்கு தடைவிதித்துவிட்டு, சாத்தானின் அவதாரமான சதாம் ஹூசேனுக்கு எதிராக, தேசிய ஒற்றுமை என்ற கட்டுக்கதையை, பரப்பியதன் மூலம் பத்திரிகையாளர்கள் புஷ், டிரம்ஸ்பீல்ட் செனி அன்ட் கோவினரது ஆக்கிரமிப்பிற்கு உதவியிருக்கிறார்கள்.

உலகம் முழுவதிலும் நகரங்களில் சாலை சதுக்கங்களில், 10-மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் போருக்கு எதிராக ஒரே நாளில், சர்வதேச அளவில் வரலாறு காணாத கண்டன பேரணியை நடத்தினர். அந்த நிகழ்ச்சியை அமெரிக்க தொலைக்காட்சிகள் தொடவே இல்லை.

500 அமெரிக்க பத்திகையாளர்கள், இராணுவ யூனிட்டுகளோடு "சூழ்ந்தணைத்து" பணியாற்றி வருகிறார்கள், இது ஊடகங்களுக்கும் பென்டகனுக்கும் இடையேயுள்ள உறவை வெளிப்படுத்துகிறது. இந்த ஏற்பாடு போர் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் வெளிவருவதை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், பத்திரிகையாளர்கள் தங்களை முழுமையாக போர் முயற்சியோடு இணைத்துகொள்ள செய்யப்பட்ட ஏற்பாடாகும்.

ஹிட்லரது பிரச்சார அமைச்சராக ஜோசப் கோயபல்ஸ் பணியாற்றியதற்கு பின்னர் இந்த அளவிற்கு ஊடகங்கள் சேர்ந்து இசை வாசித்ததில்லை. இந்த காலனி ஆதிக்கப் போரை, "ஈராக்கின் விடுதலைக்கான நடவடிக்கை" என்று வர்ணிப்பதற்கு ஒரு கோயபல்ஸ்கள் தேவைப்படுவர். தொலைக்காட்சி அலைவரிசைகளும், மற்றும் செய்திப் பத்திரிகைகளும், நாஜிக்கள் ஆதிக்கத்திலிருந்த ஜேர்மன் பத்திரிகைகளைப்போல இன்றைய தினம் செயல்பட்டு வருகின்றன.

தொலைக்காட்சி அலைவரிசைகளில், அரசியல் விளக்கங்களின் வீச்சு எந்த அளவிற்கு இருக்கிறது என்றால், ஏ இலிருந்து பி வரைக்கும், பழமைவாதத்திலிருந்து பாசிசம் வரை சென்று கொண்டிருக்கிறது. அதே குழுவைச் சார்ந்த பேசும் தலைகள் ஒவ்வொரு இரவிலும் தோன்றி தங்களது விமர்சனங்களை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த விமர்சனங்கள் தவிர்க்க முடியாத அளவிற்கு, கம்பெனிகள் மற்றும் அரசியல் நிர்வாக அமைப்பின் நலன்களை ஒட்டியதாக உள்ளன.

போர் தொடங்கியதும், ஓர் புதிய "நிபுணர்கள்" மற்றும் "ஆலோசகர்கள்" குழு தோன்றியுள்ளது. இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற இராணுவ தளபதிகள் மற்றும் சிஐஏ அதிகாரிகள் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்கள் ஈராக் இராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்படுவார்கள் என்றும், தற்காப்பு எதுவும் இல்லாத அந்த நாடு அழிக்கப்படும் என்றும் ஆரவாரமாய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

சிஎன்என்-கேபிள் செய்தி வலைப்பின்னல் லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை அலவலகத்திற்கு எதிரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த தொலைக்காட்சி வலைப்பின்னலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தமை, அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பிரச்சார அங்கமாக, மாற்றப்பட்டுவிட்ட ஊடகங்களின் போக்கு குறித்து வெறுப்பு அடைந்துள்ள கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. ஆத்திரம் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் CNN, A.B.C, CBS, NBC, -மற்றும் குறிப்பாக, ரூபர்ட் மூர்டோக்கின் சொத்துக்களில் ஒன்றான முடைநாற்றம் வீசும் பொர்க்ஸ் நியூஸ் ஆகியவற்றின்மீது திடுமென்த் தாக்கியது முற்றிலும் சரியான நடவடிக்கைதான்.

பழைய லிபரல் ஊடகங்கள் இந்த போருக்கு, குறிப்பாக தங்கள் பங்கை செலுத்தியிருக்கின்றன. வாஷிங்டன் போஸ்ட், மத்திய கிழக்கில் ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் பகிரங்க தண்டோராவாக, மாறிவிட்டது. தங்களை "விடுவிக்க வந்தவர்களை" ஈராக் மக்கள் மகிழ்ச்சி பெருக்கோடு அணிவகுத்து நின்று வரவேற்பார்கள் என்று அந்த பத்திரிகை எழுதியிருந்தது. நியூயோர்க்-டைம்ஸ் - புஷ் வெளியிட்ட பொய்களுக்கு நம்பகத்தன்மை கொடுத்தது மற்றும் "பெரிய ராஜ்ஜியவாதி தலைவரை போன்று" தனது அணுகுமுறையை அமைத்துக்கொண்டிருப்பதாக அவரைப் பாராட்டியது. இன்றைய தினம் போர் பற்றி தனது தயக்கங்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு வருகிறது என்றால், அதற்குக் காரணம் புஷ் போரை நடத்துகின்ற முறையின் பாதிப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால நலன்களுக்கு பாதிப்பாக, அமைந்துவிடும் என்ற கவலையினால்தான்.

ஊடகங்களின் இன்றைய நிலை, அமெரிக்காவின் சமூக துருவமுனைப்படல் வளர்ச்சியோடு இணைந்து மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தின் சிதைவோடு இணைந்து, பல தசாப்தகாலங்களாக நடைபெற்று வந்த நிகழ்ச்சிப்போக்குகளின் விளைவுதான். அரசாங்க கொள்கைகளுக்கு எதிர்ப்பு மற்றும் விமர்சனத்திற்கு எதிரான குரோத போக்கு, வளர்ந்து வருகிற நேரத்திலேயே ஒரு சில பெரிய நிறுவனங்களின் கையில் தொலைக்காட்சி, வானொலி, மற்றும் செய்தி பத்திரிகைகள் சிக்கிக்கொண்டன மற்றும் வளர்ந்து வந்திருக்கின்றன.

நான்காவது அகிலத்தின் அனைத்துலகக் குழு 1998-பெப்ரவரியில் உலக சோசலிச வலைத் தளத்தை ஆரம்பித்தது. சர்வதேச சோசலிச முன்நோக்கு அடிப்படையில், உலக நிகழ்ச்சிகள் பற்றி தினசரி ஆய்வுகள் மற்றும் விமர்சனங்களை படிக்கின்ற சர்வதேச வாசகர்களுக்கு உதவுவதற்காக, இந்த வலைத் தளம் அமைக்கப்பட்டது. பல்வேறு முதலாளித்துவ அரசுகளின் வலதுசாரி நிகழ்ச்சி நிரல்களுக்கு மாற்றாக ஒரு அரசியல் மாற்றுத்திட்டத்தை உலக சோசலிச வலைத் தளம் வழங்கி வருவதுடன் மட்டும் இல்லாமல், நடப்பு அரசியல் சமுதாயம் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் குறித்து தீவிரமான மதிப்பீடுகளை தந்து வருகிறது.

ஐந்தாண்டுகளில், ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் மற்றும் பல்வேறு மொழிகளில் உலக சோசலிச வலைத் தளம் இடைவிடாது, சோசலிச மற்றும் சர்வதேச வேலைத் திட்டங்களை முன்னெடுத்து செல்கிறது. அதனுடைய கொள்கை அடிப்படையிலான அணுகுமுறையின் விளைவாக சர்வதேச அளவில் கணிசமான அளவிற்கு வாசகர்களைப் பெற்றிருக்கிறது. பொதுமக்களுக்கு அறிவு புகட்டி, அவர்களை கிளர்ந்து எழச்செய்யும் போராட்டத்தில், உலக சோசலிச வலைத் தளமானது வாசகர்களின் இயல்பான அறிவு நீதி மற்றும் நியாய உணர்வு, உண்மையை தெரிந்துகொள்வதில் அக்கறை, தியாகமனப்பான்மை, மற்றும் மனித இன ஒற்றுமை ஆகிய இயல்பான குணங்களுக்கு வேண்டுகோள் விடுகின்றது.

ஆழமான புறநிலை நிகழ்ச்சிப்போக்குகளின் விளைவாக அதற்கு சமமாகவே வெகுஜனங்களது அறிவாற்றலையும் பண்பாட்டையும் நோக்கு நிலைப்படுத்தலின் விளைவாகவும், நீண்ட தொலைநோக்கான சமுதாய மாற்றங்களை உருவாக்கிவிட முடியும் என்று மார்க்சிஸ்ட்டுகள் கருதுகிறார்கள். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களது பாதையில், ஒரு குறிப்பிடத்தக்க தடைக்கல் உள்ளது. இன்றைய சமூக சமத்துவமின்மை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு, பொதுவாக வரலாற்று அறிவு மற்றும் வர்க்க நனவு மிகக்குறைவாக உள்ளது.

19ம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்களில், உருவான அசாதாரணமான, சோசலிச அரசியல் கலாச்சாரத்தை ஸ்ராலினிசம் மிகக்கடுமையாக சேதப்படுத்தியது. இந்த அசாதாரணமான சோசலிச அரசியல் கலாச்சாரத்தை திரும்ப வளர்த்தெடுப்பதில் உலக சோசலிச வலைத் தளம் முன்னணி பங்குவகிக்கவேண்டும். மார்க்சிசத்தின் மிகப்பெரிய சித்தாந்தவாதிகள் தந்துள்ள விளக்கங்களின்படி, அது ஒரு அரசியல் வேலைத்திட்டம் மட்டுமல்ல, முதலாளித்துவ சமுதாயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும், இணையில்லாதவகையில் விமர்சனத்திற்குக் கீழ்ப்படுத்தும் அறிவு மின்சாரம் ஆகும்.

நிறைய பணிகள் இன்னும் நிறைவேற்றப்படவேண்டும். உலக சோசலிச வலைத் தளத்திற்கு புதிய வாசகர்களும் புதிய எழுத்தாளர்களும் தேவை. புதிய கருத்துக்களை மற்றும் புதிய பாடங்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையில் இன்னும் அதிக அளவில் கலந்துரையாடல்கள் நடக்கவேண்டும். பரவலாக உலக சோசலிச வலைத் தளத்தின் செல்வாக்கு வளர்வது புதிய சர்வதேச புரட்சிகர எழுச்சிக்கு அத்தியாவசியமான அடிப்படை அம்சமாகும்.

தகவல் பெறுவது மற்றும் தகவல் தொடர்புகள் கொள்வது, பெரிய ராட்சத கார்ப்பரேஷன்களுக்கு சொந்தமாகயிருப்பதால், அவை லாபநோக்கில் இயங்கும்போது, நேர்மையான தகவல் மற்றும் முற்போக்கு சிந்தனையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கட்டத்திலும் நேரடியாக மோதுகின்ற நிலை ஏற்படுவதால், அவற்றை தனியார் ஏகபோகத்திலிருந்து ஒரு முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது. பொதுமக்கள் பயன்படுத்துகிற ஊடகங்களான, தொலைக்காட்சி, வானொலி, மற்றும் பெரிய பத்திரிகைகளை பொதுச் சொத்து உடைமை ஆக்கவேண்டுமென்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் அவை இயங்கவேண்டும்.

முதலாளித்துவத்திற்கு அரசியல், கலாச்சார மற்றும் தார்மீக எதிர்ப்பு தெரிவிக்கும் மிக முக்கியமான கருவியாக, உலக சோசலிச வலைத் தளத்தை வளர்க்க இந்த மாநாடு மேலும் உறுதி எடுத்துக்கொள்கிறது மற்றும் உலகம் முழுவதிலும் அதன் செல்வாக்கை விரிவாக்கவும் உறுதி எடுத்துக்கொள்கிறது.

See Also :

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் நடாத்திய சர்வதேச மாநாடு

கட்டுக்கடங்காத குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போர்: வரலாற்று பிரச்சனைகள்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

Top of page