World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக் Report from the World Socialist Web Site /Socialist Equality Party conference: "Socialism and the Struggle Against Imperialism and War" Contradictions and lies in the US case for war against Iraq உலக சோசலிச வலைதளம்/சோசலிச சமத்துவக்கட்சி சோசலிசமும் ஏகாதிபத்தியம், போர் இவற்றிற்கு எதிரான போராட்டமும் ஈராக்கின் மீது அமெரிக்கா தொடுத்த போருக்கான அவர்கள் கூற்றிலுள்ள முரண்பட்ட கருத்துக்களும் பொய்களும் 22 April 2003உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவற்றால், "சோசலிசமும் ஏகாதிபத்தியம், போர் இவற்றிற்கெதிரான போராட்டமும்: ஒரு புதிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் வேலைத் திட்டமும் மூலோபாயமும்" என்ற தலைப்பில், அன் ஆர்பர், மிச்சிகனில் மார்ச் 29-30, 2003 நடத்தப்பட்ட மாநாட்டில் பட்ரிக் மார்ட்டின் ஆற்றிய உரையை கீழே வெளியிடுகிறோம். உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் உறுப்பினரான மார்ட்டின் மாநாட்டில் விவாதத்திற்குப்பின் ஏற்கப்பட்ட ஆறு தீர்மானங்களில் முதல் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்: "ஈராக் போரை நிறுத்து! அமெரிக்காவே, இங்கிலாந்தே மத்திய கிழக்கிலிருந்து வெளியேறு!" ஏப்ரல் முதல் தேதியன்று உலக சோசலிச வலைத் தளமானது மாநாட்டைப் பற்றிய சிறு தொகுப்பு ஒன்றினைப் பிரசுரம் செய்தது. ("உலக சோசலிச வலைதளம் சோசலிசம் மற்றும் போருக்கெதிரான போராட்டத்தைப் பற்றிய சர்வதேச மாநாட்டை நடத்துகிறது"). இதைத் தவிர உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த் தொடக்க உரையை ("கட்டுக்கடங்காத குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்") வழங்கினார். மாநாட்டில் ஒருமனதாக ஏற்கப்பட்ட ஆறு தீர்மானங்களின் வாசகங்களும் ஏப்ரல் 2லிருந்து ஏப்ரல் 4 வரை வெளியிடப்பட்டன. (ஈராக்கில் நிகழ்த்தப்பெறும் போரை வன்மையாகக் கண்டிக்கும்; தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு அறைகூவி அழைக்கும் தீர்மானங்கள்", "தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக அழைக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் தீர்மானங்கள்", "போர் மற்றும் அமெரிக்க சமுதாய நெருக்கடி மீதான தீர்மானம், உலக சோசலிச வலைதளத்தின் வளர்ச்சி பற்றிய தீர்மானம்") வரும் நாட்களில் மற்றைய தீர்மானங்களைக் கொண்டுவந்தவர்களின் கருத்துக்களையும் எஞ்சிய தீர்மானங்களையும் மாநாட்டிற்கு சர்வதேச பிரதிநிதிகள் கொண்டுவந்த வாழ்த்துக்களின் தொகுப்பையும் நாம் பிரசுரிக்க இருக்கிறோம். உலக அளவில் போருக்கு எதிரான இயக்கத்தின் கருத்தான இப்போர் "எண்ணெய்க்கான போர்" என்பதை மறுக்கும் முயற்சியில், ஈராக்கின் எண்ணெய்வளம் தொடர்பாக, புஷ் நிர்வாகமானது மீண்டும் மீண்டும் ஈராக்கின் எண்ணெய் வளம் ஈராக்கிய மக்களுக்கு உடமையாக்கப்படும் என்றும் ஈராக் மக்களின் நலனைப் பெருக்கவே எண்ணெய் வளம் பயன்படுத்தப்படும் என்பதே அதன் குறிக்கோள் எனக் கூறுகிறது. ஏன் இந்த இலக்கின் அடிப்படையில் அமெரிக்காவிலேயே அமெரிக்க மக்களின் நலனுக்காக அதன் பெரும் எண்ணெய் வளம் பயன்படுத்தப்படவில்லை? என்று ஒருவர் கேட்க முடியும். உலகிலேயே மிக அதிகமான எண்ணெய் வளம் நிறைந்த நாடாக, இப்போரில் அமெரிக்க நாட்டின் முக்கிய நட்பு நாடான சவுதி அரேபியாதான் விளங்குகிறது. சவுதி அரேபிய நாட்டின் எண்ணெய் வளங்கள் முழுவதும் சவுதி அரேபிய மக்களின் உடைமையாக அமைந்திருக்கவில்லை; மேலும் அது அம்மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படவுமில்லை. சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள் முடியாட்சிக்கு சொந்தமானது, சவுதி அரேபிய நாட்டின் எண்ணெய் வருவாய் அரசர் இபின் செளட் (Ibn Saud) 6000 வம்சாவளியினரின் தனிச்சொத்துடைமை ஆகும். அரசாங்க வருவாயை மன்னரின் தனிப்பட்ட வருமானத்திலிருந்தும் அவரது வம்சாவளியினரின் வருமானங்களிலிருந்தும் பிரித்து, தனித்துக்காட்டுவதற்கான நாட்டின் ஆண்டு வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படவேண்டும் என்ற முயற்சிகள்கூட சவுதி அரேபியாவில் வெற்றிபெறவில்லை. எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தும் அமெரிக்க வணிகக் கூட்டமைப்பான அராம்கோ (Aramco) நிறுவனம் அளிக்கும் அனைத்து எண்ணெய் வருமானமும் ஒரு அரசு என்ற வகையில் சவுதி அரேபியா நாட்டிற்குச் சேரவில்லை, அங்கு வாழும் 20 மில்லியன் மக்களையும் சென்றடையவில்லை. சவுதி முடியாட்சியின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே இப்பணம் செல்கிறது. மன்னர் சவுதின் மகன்களான இரண்டாம் தலைமுறை வாரிசுகளே அதை அனுபவிக்கின்றனர். நாம் அனைவரும் சதாம் ஹூசேனின் கொடூரமான செயல்களைப் பற்றிய கதைகளைக் கேட்டிருக்கிறோம், அவருடைய ஆட்சிக்கு நியாயம் கூறவோ, அரசின் நடைமுறைகளை சரியென்று கூறவோ, இங்கு ஒருவரும் கூடவில்லை. ஆனால் சவுதி முடியாட்சியின் நடத்தை சான்றுகளைச் சற்று கவனிப்போம். இபின் செளத் அரசர் அரேபியத் தீபகற்பத்தில் 1920களின் முற்பகுதியில் நடந்த உள்நாட்டுப் போரின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்தார். அரசர் செளத்தின் குடும்பம் மற்றும் அவரைப் பற்றி கூறியுள்ள சமீபத்திய விமர்சன வரலாற்று நூலில் "நாட்டை முழுமையாக தங்கள் பிடிக்குள் கொண்டுவந்த காலத்திற்குள் இக்குடும்பம் 40,000 பேரைப் பொது இடத்தில் தூக்கிலிட்டதோடு 3,50,000 பேரை அங்கவீனமும் ஆக்கியிருந்தனர். இதுமுறையே மக்கட் தொகையான 40 லட்சத்தில், 1 மற்றும் 7 சதவீதமாகும். மொத்த மக்கட்தொகையில் ஏழு சதவீதமும், அதிலும் கூடுதலான சதவீதத்தில் வயது நிறைந்த ஆடவரும் கைகால் இழப்பிற்கு அரசர் செளதினால் உட்படுத்தப்பட்டனர். இதே போன்ற நிலைதான் அனைத்து வளைகுடா ஷேக் அரசுகளிலும் காணப்படுகிறது. நவீன அர்த்தத்தில் தேசிய-அரசுகள் என்ற கணக்கில் இவற்றைச் சேர்க்க இயலாது. பழங்குடித்தன்மை அடிப்படையிலான அரசர்களின் உடைமைகளாகவே அந்நாடுகள் விளங்குகின்றன. இந்நாடுகளில் எண்ணெய் வளங்கள் ஆட்சியாளர்களை செல்வந்தராக்குமேயொழிய பாமர மக்களுக்குப் பயன்படாதவையாகும். இந்த ஆட்சிகளெல்லாம் வீழ்த்தப்பட வேண்டும் என்ற அறைகூவலை -இதுவரை- புஷ் நிர்வாகம் கூறவில்லை, ஏனெனில் தங்கள் நாடுகளை விமானத்தளமாகவும் கடற்படைத் தளங்களாகவும் ஈராக்கைத் தாக்க அவர்கள் அனுமதித்திருப்பதே ஒரு காரணம் போலும். இதனையடுத்து, மற்றுமுள்ள இறுதிக் கூற்று: "புஷ் நிர்வாகம் ஈராக்கிய மக்களுக்காக ஈராக்கை மீள நிர்மாணிக்க விரும்புகிறது." ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்புக்குழு ஒரு தீர்மானத்தின் மூலமோ வேறு விதத்திலோ போருக்கு முன்னர் நடைமுறையிலிருந்த "உணவிற்காக எண்ணெய்" திட்டத்திற்கு இணக்கம் தெரிவிக்கவேண்டும்; அவ்வாறு செய்துவிட்டால் அப்பணம் இப்பொழுது ஈராக்கை வென்றதற்காக அமெரிக்காவிற்குத் திருப்பிக்கொடுப்பதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும். அமெரிக்க நிறுவனங்கள் ஈராக்கிற்கு வந்து சில இடங்களை மீள கட்டி எழுப்ப தொடங்கும்: எண்ணெய் வயல்கள், எண்ணெய் சேமிப்புக்கள் போன்ற இடங்கள் இதில் அடங்கும். பழைய "உணவிற்காக எண்ணெய்" அடிப்படையிலான நிதியிலிருந்து புதுப்பிப்பதற்காக ஆகும் அமெரிக்கச் செலவுகள் ஈடுசெய்யப்படும். இதைத் தவிர அமெரிக்கர்கள் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றைச் கட்டி அமைப்பதற்காக ஒப்பந்தங்களையும் கூட பெறுவர்! இந்த புஷ் நிர்வாகம் மேலும் ஈராக் மக்கட்தொகை முழுவதற்குமான உடல்நலத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை மீளக் கட்டும் பணிகளிலும் ஈடுபடும் என அறிவித்துள்ளது. ஏன் இத்தகைய திட்டங்களை உலகம் முழுதுமோ அல்லது அவர்களுடைய நாட்டிலேயோ செயல்படுத்த இயலவில்லை? இப்போரின் சர்வதேச பரிமாணத்தைப் பற்றி அறிந்துகொள்வது மிக முக்கியமாகும், ஏனெனில் அதையொட்டியே சர்வதேச எதிர்ப்பின் விளைவை அறிந்துகொள்ள இயலும். துருக்கி வடபுலத்தில் ஓரணி அமைத்தல் கூடாது எனத் தடைவிதித்ததின் மிகப்பெரிய முக்கியத்துவம் இப்பொழுது அனைவருக்கும் புலப்படுகிறது. மிகப்பெரிய அளவிலான தாக்குதல் படைப் பிரிவை வடக்கிலிருந்து அமெரிக்கா வரச்செய்ய முடியாததால் தெற்குப்புறத்தில் மிகக் கடினமான சூழ்நிலைகளைத் தோற்றுவித்தது. இரண்டாவதாக ஈராக்கிய மக்களிடமும் இராணுவத்தினரிடமும் உலகம் முழுவதும் ஏனைய மக்கள் அவர்களுக்குப் பெரும் ஆதரவு அளிக்கிறார்கள் என்ற உணர்வின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது; அமெரிக்க தலையீட்டை உலகில் பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதும் அவர்களுக்குப் பெரிய உணர்வேயாகும். வியட்நாம் போரின் பொழுது தக்க வயதை அடைந்துள்ள அமெரிக்க மக்களுக்கு இது ஒரு மாறுபட்ட, வித்தியாசமான கண்ணோட்டம் ஆகும். ஏனெனில் அமெரிக்கா இழைத்த பல குற்றங்கட்கு மறுபெயராக வியட்நாம் என்ற சொல் அமைந்துவிட்டது என்பதை உணரவே பல ஆண்டுகள் ஆயின. இது ஈராக்கில் போர் தொடர்பானதில் ஏற்கனவே இந்தநிலை ஏற்பட்டுவிட்டது. அழுத்தமான நிலை, கருணைகாட்ட முடியாது என்ற உத்வேகம், இலக்குகளை இரக்கமற்ற கொடூரமான முறையில்கூட அடைவோம் என்ற வெறியுடன் அமெரிக்காவை ஆளும் மேல்தட்டு தனது நலன்களைப் பின்பற்றும் என்பதை குறைத்து மதிப்பிடல் துன்பகரமான தவறாக இருக்கும் என்று துவக்க அறிக்கையில் கூறிய எச்சரிக்கையை ஒருவர் மிக கவனமாக எடுக்கவேண்டி இருக்கிறது. இப்பொழுதே அமெரிக்க வலதுசாரி செய்தித்துறையில் தொடர்ச்சியான வர்ணனைகளைக் காணமுடிகிறது - Fox TV, New York Post, Wall Street Journal Axis ஆகியவற்றில் அமெரிக்க இராணுவ முயற்சியின் தேக்கத்திற்கு முக்கியமாகக் கருதப்படும் கூறுபாடுகள் எவையெனின் இராணுவம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயலாற்றுதல், குடிமக்கள் மீதான தாக்குதலையும் மரணத்தையும் தவிர்ப்பதற்காக நடந்துகொள்ளும் முறையில் கூடுதலான இரக்க எண்ணத்தால் இராணுவக் குறிக்கோளில் தடை தோன்றிய நிலை -எனவே கையுறைகளைக் களைந்து ஈடுபடவேண்டிய தருணம் வந்து விட்டது என்று கூறுவதைக் காணமுடிகிறது. இதுதான் மக் ஆர்தர் (MacArthur), லு மே (LeMay), கோல்ட்வாட்டர் (Goldwater) தொகுப்பின் பதிப்பாக உள்ள அமெரிக்க ஆளும் மேல்தட்டு "கற்கால நெறிகளைக் கடைப்பிடித்து அவர்கள் மீது குண்டு மழைபொழி" என்ற விரட்டல் ஆகும். கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கையில் தலையிட்டு இயக்க முடியாதவராகவும், செல்வாக்கிற்குப் புறத்தே நிறுத்தப்பட்டவராகவும் இருந்தவர்கள் இவர்களே. தற்பொழுதோ வெள்ளை மாளிகையிலும் பென்டகனிலும் செல்வாக்குடன் திகழ்பவர்கள் இவர்களே. வெள்ளிக் கிழமை, வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலில் பின்வரும் வரியுடன் அண்மையில் ஒரு தலையங்கம் வந்திருந்தது, "கூட்டுப்படைகள் இதுகாறும் மேற்கொண்டுள்ள உள உறுத்தலின் காரணமாக குடிமக்கட் பகுதிக்கு தீங்கோ சாதாரண மனிதரின் உயிருக்கு ஆபத்தோ கூடாது என்ற நிலை மாற்றப்படவேண்டும்." தலையங்கம் மேலும் அறிவிக்கிறது: "முதலும் பெருமளவினதுமான அமெரிக்க அரசியல் இலக்கு வெற்றியாகும். இதையே சிறப்பிக்கக் கூறகிறோம். ஈராக்கை மீளக் கட்டியமைப்பதில் கவலைப்படுவதைவிடுத்து முதலில் இராணுவ அளவில், ஐயத்திற்கிடமின்றி, அது வெற்றிபெறவேண்டும்." தலையங்கம் தொடர்கிறது: "ஈராக்கியரும் மத்திய கிழக்கிலுள்ள அனைத்து நாடுகளும் அனைத்துத் திறனையும் காட்டி அமெரிக்கா போர் நடவடிக்கைகளை வலுப்படுத்தினால்தான் நன்மதிப்பு அளிக்கும். இராணுவ இலக்குகளின் முன்னால் நிறுத்தப்படுவதால் குடிமக்கள் இறக்க நேரிடுமெனின், அத்தகைய நிலைக்கு தார்மீகப் பொறுப்பு அவர்களை அங்கு வைத்திருப்போரையே சாரும்." நீங்கள் அமெரிக்காவில் எந்த நகரத்திற்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். இராணுவ இலக்கு சுற்றியுள்ள சாதாரணக் குடிமக்களிடமிருந்து சார்பற்று தனித்து உள்ளனவா என்பதைப் பாருங்கள். வாஷிங்டனில் இராணுவ இலக்கு என்பது யாது? குடிமக்கள் பகுதியிலிருந்து பென்டகன் எவ்வளவு தொலைவில் உள்ளது? தெருவிற்கு ஒரு புறத்திலிருந்து மற்றொரு பக்கத்தில்தான். ஈராக் அரசாங்கம் வேண்டுமென்றே இராணுவ இலக்குகளைக் குடிமக்கள்வாழ் பகுதிகளில் இயைந்து நிறுத்திச் செயல்படுகிறார்கள் என்ற வாதத்தை வற்புறுத்துபவர்கள் ஒரு பகுத்தறிவிலான குடிமக்களைக் கொன்று குவிக்கும் திட்டத்திற்கு மன்னிப்புக் கேட்கும் தொடக்க நிலையைத்தான் வற்புறுத்துகிறார்கள் என்பது தெளிவாவதுடன் அதனால்தான் அமெரிக்கப் படைகளின் முன்னேற்றத்தில் தடை என்பதைச் சுட்டிக்காட்ட முற்படுவதும் தெளிவாகும். அதே நேரத்தில் சில திட்டவட்டமான வரலாற்று வரம்புகளும் உள்ளன. அமெரிக்கா இராணுவ தொழில்நுட்பத்துறையில் உயர்ந்த நிலையில் வீற்றுள்ளது. ஆனால் உலகை வெல்வதற்கு அத்தகைய உயர்ந்த இராணுவத் தொழில்நுட்பத்தை 5 அல்லது 10 மில்லியன் வீரர்களுக்கு அளிக்கவேண்டும்; இப்பொழுது சில நூறாயிரம் வீரர்களுக்கே அது அளிக்கப்படுகிறது. இதை அதிகரிப்பது அமெரிக்க பொருளாதாரத்தின் சக்திக்கு அப்பாற்பட்ட நிலையாகும். அமெரிக்க சமுதாயத்தில் காணப்படும் மற்றொரு பிளவையும் இந்த மாறுபாடு தெளிவாக்குகிறது. நீங்கள் ரிச்சர்ட் பேர்ல் (Richard Perle) என்பவரைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் பாதுகாப்புக் கொள்கைக் குழுவின் தலைவர் ஆவார். ஒரு முக்கியமான போர்ப்பருந்து. இவர் வெள்ளியன்று தன்னுடைய குழுத்தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். ஏனெனில் குளோபல் கிராஸிஸ் என்ற தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு பென்டகனில் அவர் ஆதரவு திரட்ட முயன்றார், அது ஏற்கப்பட்டால் ஏறத்தாழ 80,000 அமெரிக்க டாலர்கள் அவருக்கு இலாபம் கிடைத்திருக்கும் என்று செய்திக் குறிப்புக்கள் வந்த பின்னர் ராஜினாமா செய்தார். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கார்ப்பொரேட் நிறுவனங்களில் நிகழ்ந்த ஊழல்களில் அந்நிறுவனத்திற்குப் பெரும்பங்கு உண்டு. மற்றொரு புறத்திலோ பெரும் சமுதாயப் பிளவின் சான்றாக அமெரிக்காவின் சாதாரண முதல் வகுப்பு வீராங்கனையான ஜெஸ்ஸிகா ப்ளின் (Jessica Flynn) இப்பொழுது நசிரியா அருகில் அவளைக் காண்பதற்கில்லை. எவ்வாறு அவள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டாள் என்பது பற்றி நீண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வர்ஜீனிய மாநிலத்திலுள்ள பாலஸ்தீனம் என்று அழைக்கப்படும் சிறுநகரில் வாழ்ந்தவள். 17-வயதில் இராணுவப் பணியில் சேரக் கையெழுத்து இட்டவள். இந்தக் குறிப்பின்படி இராணுவத்தில் சேருவதற்கு முன்பு அவளுடைய தலைநகரான சார்ல்ஸ்டனை கூடப் பார்த்திராதவள். பாலஸ்தீனிலிருந்து 90 மைல்கள் தொலைவில் அது உள்ளது. ஏதேனும் பொருட்கள் வாங்கவேண்டுமென்றால் 30 மைல் தொலைவு கடந்தால்தான் இயலும். அதுதான், அப்படிப்பட்டவர்களைத்தான் இராணுவம் சேர்ப்பதற்கு குறிவைத்துள்ளது. அமெரிக்க சமுதாயத்திலேயே பலவீனமான நிலையிலுள்ளவரை ஏகாதிபத்திய போரில் தீனியாகப் பயன்படுத்தும் முயற்சி இது. இறுதியில் அத்தகைய நிலைகள் நாட்டிற்குள் ஒரு சமூக வெடிப்பை உருவாக்கும். |