World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

War cannot resolve mounting US economic problems

பெருகிவரும் அமெரிக்கப் பொருளாதாரப் பிரச்சனைகளை போர் தீர்த்துவைக்க முடியாது
By Nick Beams
8 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

புஷ் நிர்வாகத்தின் முன்னணித் தலைவர்களும், செய்தி ஊடகங்களில் பணியாற்றும் அவர்களது அடிவருடிகளும் மிகப்பெரும் அளவில் பலவீனமாக உள்ள ஈராக் படைகளைத் தகர்த்த ''வெற்றியை'' பாராட்டிக் கொண்டிருக்கிற நேரத்தில், அமெரிக்காவை ஆழமான பொருளாதாரப் பிரச்சனைகள் எதிர்நோக்கியுள்ளன. அவற்றிற்கு எந்தவிதமான தீர்வும் அவர்களிடம் இல்லை.

பங்கு மார்க்கெட்டுகளில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வீழ்ச்சி, தொடர்ச்சியான பொருளாதார தேக்க நிலைக்கு அமெரிக்கப் பொருளாதாரம் வந்துவிட்டது என்பதைக் கோடிட்டுக்காட்டும் பல அடையாளங்கள் தென்படுகின்றன. எடுத்துக்காட்டாக வேலை வாய்ப்பு நிலவரம் பற்றிய புள்ளி விபரங்கள் மார்ச் நிலவரப்படி 108.000 பேர் வேலை இழந்திருக்கிறார்கள். நீண்ட காலமாக கூறப்பட்டுவரும் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படவில்லை. சென்ற நவம்பர் முதல் குறைந்தபட்சம் 600.000 பேர் வேலை வாய்ப்பை இழந்திருக்கின்றனர். 2001ல் புஷ் பதவியேற்றபின் 2 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.

இந்த புள்ளி விபரங்களை பார்க்கும்போது, இந்த வேலைவாய்ப்பு இழப்புக்கள், தொழிற் கட்டமைப்பு அடிப்படையில் அமைந்திருக்கின்றன. இவை பொருளாதார வளர்ச்சி சுழற்சிகளால் ஏற்படுவதல்ல என்பதை தெளிவுபடுத்துகின்றன.

மன்த்லி ரிவீயூ (Monthly Review) என்னும் பத்திரிகை கடைசியாக வெளியிட்டிருக்கும் தனது பதிப்பின் தலையங்கத்தில், 1990 கள் தொடக்கத்திற்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை போக்குகள் நான்கின் தன்மைகள் குறித்து விளக்கியுள்ளது. நிரந்தரமாக வேலை வாய்ப்பை இழந்தவர்கள் தற்காலிகமாக வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு சரிசமமாகயிருப்பதாக அந்த தலையங்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 1990களின் தொடக்கத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக வேலைவாய்ப்பை இழந்தவர்கள் தொகையில் 70 வீதமானவர்கள் நிரந்தரமாக வேலை இழந்தவர்களாவர். 2000ம் ஆண்டில் தொடங்கிய பொருளாதார மந்தநிலையில் நிரந்தரமாக வேலை வாய்ப்பை இழந்தவர்கள் 87 வீதமாக உயர்ந்துவிட்டனர்.

அமெரிக்கப் பொருளாதாரம் மிகக்கடுமையான பொருளாதார மந்தநிலை கட்டத்தை அடையாமல் இருப்பதற்கு காரணம், நுகர்வோர் மிகப்பெருமளவில் பணம் செலவிடுகின்றனர் மற்றும் கடன்களின் அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதாகும். கடன்கள் வாங்கி செலவிடுவது பொருளாதாரத்தில் தற்காலிக பூரிப்பை ஏற்படுத்தும். ஆனால், முதலாளித்துவ பொருளாதாரத்தின் உந்து சக்தி இதயம் போன்றது. அதில் முதலீடு என்கிற இரத்தம் பாய்ந்தால்தான் முதலாளித்துவ பொருளாதாரம் உயிர் துடிப்போடு இயங்க முடியும். இங்கேதான் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ந்துவரும் பிரச்சனைகள் தெளிவாகத் தெரிகின்றன.

2002 முதல் மூன்று காலாண்டுகளில் நிரந்தர முதலீட்டு வீதம் ஆண்டிற்கு 3 என்ற அளவில் குறைந்தது. பங்கு மார்க்கெட்டுகளில் மிகப்பெரிய பூரிப்பு ஏற்பட்ட காலத்தில், அளவிற்கு அதிகமாக முதலீடு செய்யப்பட்டதால் உபரி முதலீடுகள் பயனற்று சுற்றிக்கொண்டிருந்தன. எனவே, தற்போது மூலதனத்தின் அளவு குறைந்துகொண்டு வருகின்றது. மார்க்கெட் நிலவரங்கள் இறுக்கமாகி, பொதுவாக மந்தநிலை போக்கு தென்பட்டதும் கடந்த 20 ஆண்டுகளில் கண்டிராத அளவிற்கு இயந்திர சாதனங்களின் உற்பத்தித் திறன் மிக அதிகளவில் உயர்ந்து காணப்பட்டது. பூர்வாங்க மதிப்பீடுகளின்படி, உற்பத்தித் திறன் பயன்பாட்டு அளவு 73.8 வீதமாகும். இது 1982-83ல் ஏற்பட்ட ஆழமான பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் உருவான மிகக்குறைந்த அளவிற்கான உற்பத்தித்திறன் பயன்பாடு ஆகும்.

மிகவும் குறிப்பிடத்தக்க அமெரிக்க அரசியல் பொருளாதாரத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, அதன் அளப்பரிய இராணுவ வலிமை மற்றும் அதன் நிதிக்கட்டமைப்புக்களில் உருவாகிக்கொண்டுள்ள ஆழமான வெடிப்புகள் ஆகும்.

முதலீட்டு ஆய்வாளர் ஜேம்ஸ் கிராண்ட் என்பவர் நியூயோர்க் டைம்ஸ் மார்ச் 24ந் தேதி வெளியீட்டில், ''அமெரிக்கா இந்த புத்தாயிரம் ஆண்டில், வரலாற்று அடிப்படையில் ஒரு வியப்பான நாடாகக் காணப்படுகிறது. மிகப்பெரிய வல்லரசு மட்டுமல்ல, மிகப்பெரிய கடன்கார நாடாகவும் உள்ளது. அது உற்பத்தி செய்வதைவிட அதிகமான பொருட்களைப் பயன்படுத்தி வருகிறது. அதன் இறக்குமதிகள் ஏற்றுமதிகளைவிட அதிகமாக உள்ளன'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வெளிநாட்டுக் கடன் 2002ம் ஆண்டு இறுதியில் 2.8 ட்ரில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. வெளி வர்த்தகப் பற்றாக்குறை 500 பில்லியன் டொலர்களாக இருக்கின்றது. இது பாதுகாப்புக்கான பட்ஜெட்டை விட 35 சதவீதம் அதிகமாகும். அமெரிக்காவிற்கு ஒவ்வொரு நாளும் 1.5 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு மூலதனம் தேவைப்படுகிறது.

இராணுவ விவகாரங்களில் ''ஒருதலைப்பட்சமான'' போக்கு என்பது ஒன்று. ஆனால் ''கடன்பட்ட நாடு என்ற முறையில் கடன் கொடுத்த நாடுகளுடன் நிலவும் உறவு அவசியமாக ''பன்னாடுகள்'' சம்பந்தப்பட்டது என ஜேம்ஸ் கிராண்ட் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 26 ல் வெளிவந்த கார்டியன் பத்திரிகையில் அதன் வர்த்தகப் பகுதி ஆசிரியர் மார்க் டிரான் என்பவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், கம்பெனி முதலீட்டாளர்களுக்கான நிதி ஆய்வு நிறுவனமான சுதந்திரமான மூலோபாயம் (Independent Strategy) வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையின் ஒரு இடத்தில், ''அமெரிக்கப் பொருளாதாரமானது, நொருங்கும் நிலைக்கு உச்சாணிக் கொம்பிற்குச் சென்றுவிட்ட சாம்ராஜ்யத்தின் பல சமிக்கைகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா ஒருதலைப்பட்சமான இராணுவ நடவடிக்கை எடுத்திருப்பதால் பயங்கரவாதம் மேலும் அதிகரிக்குமென அந்த அறிக்கை தொலைநோக்கோடு மதிப்பீடு செய்திருக்கிறது. இராணுவச் செலவுகள் பெருகிவரும் பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. சுதந்திர சந்தைப் பொருளாதாரம் மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கைகள் சிதைந்து கொண்டு வருகின்றன என்ற வாஷிங்டனின் பொதுக் கருத்தை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதர சாம்ராஜ்யங்கள் சிதைந்து வெடிப்பு விட்டதைப் போல் பலவீனமடைந்து வரும் டொலர் அமெரிக்க சாம்ராஜ்யம் சிதைவதற்கும் வெடிப்பு அடையாளமாகத் தோன்றக்கூடும். உயிர்நாடிக்கு முட்டுக்கொடுக்க பக்கவாட்டிலிருந்து செல்வம் திரண்டு வரவேண்டும். ''இந்த முதலீடுகளைத் தொடர்ந்து நிலைநாட்டும் அளவிற்கு அமெரிக்கா தொடர்ந்து இலாபம் சம்பாதிக்கவில்லை. போருக்காகும் செலவு, தன்னிச்சை நடவடிக்கைகளால் முலதனத்திற்கான தாகம் அதிகரிக்கும். ஆனால் அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் இலாபம் குறையும்'' என இந்த ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

டிரான் சுட்டிக்காட்டியுள்ளபடி, இதன் பொருள் என்னவென்றால் வெளிநாட்டு மூலதனத்தை அமெரிக்கா சார்ந்திருக்கும் நிலை அதிகரித்து வருகிறது என்பதுடன், முதலீட்டாளர்கள் அமெரிக்கப் பொருளாதாரம் பலவீனமாகத் தோன்றுகிறது என்று முடிவு செய்து தங்களது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்பதாகும்.

லெவி பொருளாதார ஆய்வுக்கழகம் (Levy Economics Institute) காட்லி என்பவர் நடத்திய ஆய்வு அறிக்கை ஒன்றை பெப்ரவரி 15ந் தேதி பிரசுரித்தது. அதில் பொருளாதார வளர்ச்சி, நாடு பட்டுள்ள கடன் மற்றும் வெளிவர்த்தக நிலுவை ஆகியவற்றிற்குள்ள தொடர்புகள் ஆராயப்பட்டுள்ளன. அசாதாரணமான முறையில் மிகவும் பெருகிவரும் வெளிவர்த்தகப் பற்றாக்குறையை அமெரிக்கா சந்தித்து வருவதால், அமெரிக்காவிற்கு பொருளாதார ''கேந்திர நெருக்கடி'' தோன்றியுள்ளதாக காட்லி கூறுகிறார்.

அடுத்த 6 ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் ஓரளவு வேலை இல்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கும் அளவிற்கு வேகமாக வளருமானால், அப்போது வெளிவர்த்தகப் பற்றாக்குறை, மொத்தப் பொருள் உற்பத்தி அளவில் (GDP) 8.5 வீதம் அளவிற்கு வளரும். மற்றும் வெளிநாட்டுக் கடன் 8 ட்ரில்லியன் டொலர் அளவிற்கு அல்லது GDP யில் 60 வீதமாக உயரும். பட்ஜெட் பற்றாக்குறை 2003ம் ஆண்டிற்கு GDP யில் 3 வீதம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது 2007-2008ல் 9 முதல் 10 வீதம் அளவிற்கு உயர்ந்துவிடும் என்று காட்லி வாதிடுகிறார்.

''பல்வேறு காரணங்களால் இது நம்பகத்தன்மை கொண்ட காட்சியாக அமையாது. அத்தகைய நிலை ஸ்திரத்தன்மை கொண்டதாக இருக்காது என்பதன் காரணமாக மட்டுமே. வெளிநாட்டுக் கடன்கள் அதிகரிக்கும் வீதம், நாட்டை விட்டு ஒஎளியே போவதை மேலும் விரைவுபடுத்தும். செலுத்த வேண்டிய வட்டியின் அளவு அதிக வேகமாகப் பெருகும். இதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் பெரிய அளவிலான பட்ஜெட் பற்றாக்குறைகள் கூட மேலும் அதிக அளவில் தேவைப்படும்.''

இடைக்காலத்தில் அமெரிக்கா முறையாகப் பொருளாதார மறுமலர்ச்சி காணமுடியாத கட்டத்தில் உள்ளது. அது நீண்டகால வளர்ச்சித் தேக்கநிலைக் கட்டத்திற்கு வந்துவிடும். இதற்கு ஒரே நிரந்தரத் தீர்வு அமெரிக்காவின் ஏற்றுமதிகள், இறக்குமதிகளைவிட மிக வேகமாகப் பெருகவேண்டும். ஆனால், இது நடப்பதற்கு உலகப் பொருளாதாரம் அமெரிக்காவைவிட வேகமாக வளரவேண்டும் என்று காட்லி முடிவு கூறுகிறார்.

ஆயினும், இன்றைய சூழ்நிலையில், அத்தகைய விரிவாக்கத்தின் மூலம் "அமெரிக்கா பொருளாதாரத் தேக்கநிலையிலிருந்து வலிந்து வெட்டி இழுக்கப்பட்டு விடும் என்ற கருதுகோளின் மீது அதன் பொருளாதார மூலோபாயத்தை அடிப்படையாக வைத்திருப்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை பைத்தியக்காரத்தனமாக" அமைந்துவிடும். தற்போது உலகின் இதர பகுதிகள் பொருளாதார தேக்க நிலைக்குள் சிக்கிக் கொண்டு உள்ளதன் காரணமாக, அது அமெரிக்கப் பொருளாதாரம் அதன் சொந்த வளர்ச்சியைத் தூண்டிவிடும் உந்துசக்தியாக இருக்குமென எதிர்பார்க்கின்றது."

இதையே வேறுவார்த்தையில் சொல்வதென்றால், உலகப் பொருளாதாரத்தின் இதயம் போன்ற பகுதியில் முரண்பாடுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரம், அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதங்களைச் சார்ந்திருக்கிறது. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் நிலைநாட்ட முடியாத அளவிற்கு பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படும் மற்றும் வெளிநாட்டுக் கடன்களும் அதிகரிக்கும்.

அமெரிக்க முதலாளித்துவம் தனது பொருளாதார மேலாதிக்க நிலையை நிலைநாட்டுவதற்கு, இராணுவ மயமாக்கலின் திடீர் நடவடிக்கைகள் உதவும் என்ற நம்பிக்கையில் அதன் ஆளும் தட்டுக்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இராணுவ முனையில் பெறும் வெற்றி மூலம் குறுகிய காலப் பொருளாதாரப் பூரிப்பு ஏற்படலாம். ஆனால், வெள்ளை மாளிகையிலும், பென்டகனிலும் அமர்ந்துள்ளவர்களின் மனப்பிராந்திகள் எதுவாக இருந்தாலும் பெருகிவரும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் பிரச்சனைகள் போரினால் தீர்த்துவைக்க முடியாதவை.

இதற்குக் காரணம் என்னவென்றால் முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படையிலிருந்தே இந்தப் பிரச்சனைகள் எழுகின்றன. குறிப்பாக, இலாப வீதத்தில் ஏற்படும் வீழ்ச்சியானது நிதி பேரங்கள், ஊகவாணிபங்கள் அதிகரித்து உலகச் சந்தையில் நிதி ஆதாரங்களுக்காகவும், பொருளாதார வளங்களுக்காகவும் இலாபத்திற்காகவும் போட்டிகள் தீவிரமடைகின்றன.

இந்த முதலாளித்துவ நடைமுறைகளின் விளைவாக 20 ஆண்டுகளுக்கும் சற்று குறைந்த காலத்திற்கு முன்னர் உலகிற்கே கடன்களை வழங்கிக்கொண்டிருந்த அமெரிக்கா, இன்று உலகிலேயே மிகப்பெரும் கடனாளி நாடாக மாறிவிட்டது. இதை குரூஸ் ஏவுகணைகள், துல்லியமான குண்டுகள் மற்றும் டாங்கிகளால் மாற்றியமைத்துவிட முடியாது.

Top of page